
பிறந்த குழந்தையை அத்தை வாங்கிச் செல்கிறாள்.இது என்ன மரபு?நாம் பிறந்து வளர்ந்து சிவனடி சேரும்வரை,நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்.அத்தனைக்கும் சிறப்பு இருக்கிறது.நாம் அறிந்தோ அறியாமலோ,வழிவழியாக, வாழையடிவாழையாகநாம் நமது மரபுகளைப் பின்பற்றி வருகிறோம்.அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வணக்கம்.தலைப்பிரசவம்.மகள் பிறந்திருந்தாள்.மகளைத் தூக்கிக் கொண்டு மனைவியை அழைத்துவர வேண்டும்.வீட்டில் எல்லோரும் ஒன்றுகூடி உட்கார்ந்து இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.எனது தாய்தந்தையர் நல்லநாள் பார்த்து முடிவு செய்வோம் என்றனர்.நானும் எனக்கு வசதியான ஒரு நாளைச் சொன்னேன்.எனதருகில் நின்று கொண்டிருந்த என் தங்கையும் அவளுக்கு வசதியான நாள் ஒன்றைச் சொன்னாள்.என் சொல் சபையேறவில்லை.என் தங்கை சொல்லே சபையேறியது.
<2receiving baby.jpg>
(படம் - நன்றி koodal.com)எனது மகளைத் தூக்கிவர நாங்கள் சென்றிருந்தோம்.எனது அத்தை என் மகளைத் தூக்கிவந்து, என் மகளின் அத்தை (எனது தங்கை)யின் கைகளில் கொடுத்தார்கள்.என்பிள்ளையை என்னிடம் கொடுப்பார்கள் என்று இறுமாந்திருந்த எனக்கு ஏமாற்றமே.நான் இதுபற்றி அப்போது ஏதும் அதிகமாகக் கருத்தில் கொள்ளவில்லை.இப்போது, என்மகள் தலைப்பிரசவத்திற்காக எங்களது இல்லத்திற்கு வந்திருந்தாள்.பிறந்திருந்த பேரனைத் தூக்கிச் செல்ல என்மகளின் நாத்தனார் (எனது மருமகன் கூடப் பிறந்தவள் - எனது பேரனுக்கு அத்தை) வந்திருந்தாள்.எங்களது பேரனை எனது மனைவி தூக்கிக் கொடுக்க, பேரனின் அத்தை வாங்கிச் சென்றாள்.பிறந்த குழந்தையை அத்தை வாங்கிச் செல்கிறாள்.இது என்ன மரபு?நாம் பிறந்து வளர்ந்து சிவனடி சேரும்வரை,நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்.அத்தனைக்கும் சிறப்பு இருக்கிறது.நாம் அறிந்தோ அறியாமலோ,வழிவழியாக, வாழையடிவாழையாகநாம் நமது மரபுகளைப் பின்பற்றி வருகிறோம்.அன்பன்கி.காளைராசன்
ஒரு சின்ன திருத்தம்.அத்தை மடி மெத்தை அடி - இது வாலி எழுதிய பாட்டு. கண்ணதாசன் எழுதியது அல்ல.
கீதா (+ கண்ணதாசன்) சொன்னதுபோல் "அத்தை மடி மெத்தையடி."அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-) அத்தை-னா பிற்காலத்துலெ மாமியார் ஆகக்கூடிய தகுதி. அதுனாலெ தன் மருமகப் புள்ளெயெ அவங்க சரியாத் தூக்கிப் பிடிப்பாங்க.
அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-)
மாமா அத்தை இரு உறவு முறைகள் தான் முதன் முதலில் பெண்ணெடுத்து பெண்கொடுக்க தகுந்த உறவாக இருந்ததுஅதனால் மாமனுக்கும் அத்தைக்கும் முதல் மரியாதை
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 2013.0.2793 / Virus Database: 2629/5904 - Release Date: 11/18/12
பாவம் பெண்கள். ஒரு உயிரை முன்னூறு நாள் வயித்தில சுமந்து முக்கி முனகிப் பெறுதல்
மிகப்பெரிய செயல்தான்.நாம் முப்பதுமூணு பெர்சண்ட் இடம் குடுக்க முக்கறது தப்புனுதான் தோன்றுகிறது.
----- Original Message -----From: செல்வன்Sent: Monday, November 19, 2012 6:54 PMSubject: Re: [MinTamil] உறவில் உள்ள மரபுகள் (அத்தை)
எங்க அக்கா பிரசவத்திற்கு (மதுரை பொதுமருத்துவமனை) உதவிக்குப்போன என்
சித்திக்கு அக்காவிற்கு குளுகோஸ் ஏத்த குத்தின ஊசியிலே துளி ரத்தத்தைப்
பார்த்துட்டு மயக்கம் வந்துவிட்டது. நர்சுக்கு அக்காவைக் கவனிப்பதா,
சித்தியைக் கவனிப்பதா என்று தெரியவில்லை.
அ.முத்துலிங்கம், எல்லே சுவாமிநாதன் இருவருக்கும் நகைச்சுவை எழுத்து
என்பது கூடவே பொறந்தது போலும்!
நா.கண்ணன்
2012/11/20 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>:
ஒரு பர்சண்ட் கூட கொடுக்க கூடாது.2012/11/19 Narayan Swaminathan <nswami...@socal.rr.com>பாவம் பெண்கள். ஒரு உயிரை முன்னூறு நாள் வயித்தில சுமந்து முக்கி முனகிப் பெறுதல்
மிகப்பெரிய செயல்தான்.நாம் முப்பதுமூணு பெர்சண்ட் இடம் குடுக்க முக்கறது தப்புனுதான் தோன்றுகிறது.
காரணம் கொடுக்கும் நிலையில் நாம் (ஆண்கள்?) இல்லை. வாங்கும் நிலையில் பெண்களும் இல்லை. திறமை உள்ளவர்கள் 100% பதவிகளையும் அடையவேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
எம்பி, எமெலே பதவிகளில் இட ஒதுகீடு என்பது பெண்களை முன்னேற்றாது. போட்டி போட்டு மேலே வரவேன்டும். அப்படி வந்த ஜெயலலிதா, இந்திரா, மம்தா போன்றோர் ஜொலித்தார்கள். பெண் என்பதற்காக ஜனாதிபதியாக ஒருவர் ஆக்கபட்டார். அவர் பெயராவது யாருக்காவது நினைவு இருக்கா?
பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது.
நாகராசன்
2012/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
திறமை என்று எதைச் சொல்லுகிறீர்கள்
இப்ப இருக்கிற அரசியல் திருமயிலாடுதுறை பேருந்து நிலையம்போ
சீர்காழி பஸ்ஸுக்கு ஜனங்க காத்திட்டு இருக்கும். பெண்கள் ஒரு வரிசையில நிக்கும். ஆண்கள் கூட்டம் கூட்டமா பிரிஞ்சு பீடி குடிச்சிட்டு இருக்கும்.பஸ் வந்தவுடனே ஆண்கள் கூட்டம் பாய்ஞ்சு வந்து ஏறிடும். பெண்கள்பாவமா “நாங்க வரிசல நிக்கிறோமில்ல”னு ஓலமிடும்.“முடிஞ்சா நீயும் மோதி ஏறிக்க”னு கத்திட்டு இவனுக உள்ளே போயிடுவானுக.
அதுபோன்றே ஐ க்யூ பெண்களைப் பொருத்தமட்டில் 160 என்ற அளவுக்கு மிகாமல்
நிலைப்பதாகவும் அதனால் ஆண்களுக்கே உரிய ஜீனிய்ஸ் நிலை என்ற மாறுபடும்
சிந்தனை வேகம் பெண்களுக்கு இல்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது
மேலாண்மையில் பீட்டர் விதி என்ற ஒரு நியதி ஒரு பதவியில் நீடிக்கும்போது
அப்பதவிக்கான செயல்களை மேற்கொள்ளும் சக்தியை இழக்கும்போது அவன் அடுத்த
உயர்பதவிக்குச் செல்கிறான் என்று விளக்கும். பெண்கள் தாங்கள்
எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும் திறனை ஒரு போதும் இழக்காமல் இருப்பதால்
அவர்கள் பதவி உயர்வு அதிகம் பெறுவதில்லை
இதுவே ஏன் அதிகமாக ஆண்கள் மேலாண்மைப் பதவிகளில் இருப்பதை விளக்குவதாகவும்
குறிப்பிடப்படுகிறது
மேலாண்மையில் பீட்டர் விதி என்ற ஒரு நியதி ஒரு பதவியில் நீடிக்கும்போது
அப்பதவிக்கான செயல்களை மேற்கொள்ளும் சக்தியை இழக்கும்போது அவன் அடுத்த
உயர்பதவிக்குச் செல்கிறான் என்று விளக்கும். பெண்கள் தாங்கள்
எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும் திறனை ஒரு போதும் இழக்காமல் இருப்பதால்
அவர்கள் பதவி உயர்வு அதிகம் பெறுவதில்லை
முதல் உலகயுத்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்தில் பெண்களில் சமுதாய பங்கு அதிகரிக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள்கழிந்த பின் இன்று பெண்கள் பிஷப்களாக ஆகமுடியாது என்று ஆண்கள் ஆங்கிளிக்கன் கிருத்துவத்துறை தீர்மானித்து இருக்கிறது. இந்திய நிலைமை நீங்க்ளே ஊகித்துக்கொள்ளலாம்.
பாயிண்ட் மேட்.~ தட் ஈஸ் தெ ரப்.~ வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?~ இல்லையென்றால், பெண்கள் சமூகம் ஏன் முன்னேறவில்லை?~ ஆம் என்றால், உதவியது என்ன?
பெண்கள் சமூகம் முன்னேறவில்லை என யார் சொன்னது? ஆசியநாடுகளில் நாடுகளில் முன்னேறலை, மேற்கு நாடுகளில் முன்னேறிவிட்டார்கள்.
முதல் உலகயுத்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்தில் பெண்களில் சமுதாய பங்கு அதிகரிக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள்கழிந்த பின் இன்று பெண்கள் பிஷப்களாக ஆகமுடியாது என்று ஆண்கள் ஆங்கிளிக்கன் கிருத்துவத்துறை தீர்மானித்து இருக்கிறது. இந்திய நிலைமை நீங்க்ளே ஊகித்துக்கொள்ளலாம்.
வாய்ப்பு மறுக்கபடாமல் இருந்தால் பெண்கள் இயல்பாக முன்னேறுவதை யாரும்
தடுக்க முடியாது//
மூளையைக் கடவுள் படைத்தார் அது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை என்று
வாதிடும்போது நான் ஒதுங்கிக்க் கொள்ளத்தான் வேண்டும். பெண்களுக்காக
வாதிடுவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை
அலசு மறுக்கும்போது நான் என்ன செய்ய முடியும்
ஆணும் பெண்ணும் சமம் ஈக்வல் என்பது திசை திருப்பும் வாதம் அவர் அவர்
திறமைக்கேற்ப வளர்வதைத் தடை செய்தும் சக்திகளைத் தடுத்து நிறுத்துவது
ஈக்விடி. இதைச் செய்ய ஒரு புதிய சமுதாஉஅம் படைக்கப்படவேண்டும் என்று
வாதிடுவது வியுப்புக்குரியது
தனக்கு என்ன வேண்டும் என்று முடிவெடுக்கும் திறன் எம்பவர்மென்ட்
தன்னால்தான் முடியும் என்று எண்ணிச் செயலில் இறங்கும் பண்பு லோகஸ் ஆஃப்
டெசிசன் மேகிங்
இதையெல்லாம் தாரளமாக பெற்றவர்கள் ஆணுக்கு நிகராக என்று சொல்லக் கூடாது
ஆணை விஞ்சி முன்னேற முடியும்
ஏதோ தாய்க்குலங்களைத் தாங்கிப்பிடிப்பதாக நினைத்து என்னைத் தாக்க
வேண்டாம். சமுதாஉஅம் என்றால் குழுக்களின் உரசல் இல்லாமல் இருக்காது.
ஒரு குழுவை அதாவது ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதும் பெண்கள்
வளர்ந்து விடுவார்கள் என்று நினைப்பது சரியல்ல
இந்தியா போன்று சீனாவும் 50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணியம் பற்றிய சிந்தனை
இல்லாமல் அத்ன் சரிபாதி மனித வளத்தைப் பயன்படுத்தாமல் பழமை வாதம்
பேசிக்கொண்டிருந்த நாடுதான்
இன்று சங்காயில் 65% விழுக்காடு விமான நிலையக் காரோட்டிகள் பெண்கள்
பெண்களை அவர்கள் கட்டியுள்ள கண்ணாடிக்கூட்டிலிருந்து வெளிவரச்
சொல்லுங்கள் வளர்ச்சி கண்முன்
மனிதனின் வளர்ச்சி மனிதனால் மட்டுமே முடியும். Who can develop man Man
himself - Julius Nyerere, President of Tanzania
பெண்களின் முன்னெற்றம் பெண்களால் மட்டுமே முடியும்
அவர்கள் ஆண்களை நம்புவது அவர்களின் முன்னேற்றதுக்கு தடை ஆடு கசாப்புக்
கடைக்காரனை நம்புவது போன்றது
ஏற்கனவே வீட்டில் பெண்களின் கொடுங்கோல் இங்கே இணையத்திலுமா
வேண்டாமடா சாமி
நாகராசன்.
2012/11/21 செல்வன் <hol...@gmail.com>:
மேலாண்மைத் துறையில் உயர் பதவியில் ஏன் பெண்கள் அதிகம் இல்லை என்பது
தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு இது ஒரு விளக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது
நாகராசன்
2012/11/20 Innamburan Innamburan <innam...@gmail.com>:
பிறந்த குழந்தைகளில் உணவில் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து பெண்
குழந்தைக்குச் சரிவர் உணவு கொடுக்காத சராசரி தமிழ்த் தாயை நீங்கள்
பாராட்டுவீர்களா
பிறந்த மறு வினாடியே பெண் குழந்தை என்றால் கொண்ரழிக்கும் செயலில்
ஈடுபவுவது பெண்கள் அதில் தாய் எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் அமையியாக
வருந்தினால் போற்றுவிர்களா
குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் குழந்தைகளில் அதிகம் பெண்
குழந்தைகளா அல்லது ஆண் குழந்தைகளா? அவ்வாறு விசி எறியும் தாயைப்
பாராட்டுவீர்களா
வெளிச்சந்தையில் விறமை ஆகும் குழந்தைகளில் அதிகம் ஆண் குழந்தைகளா பெண்
குழந்தைகளா பெற்ற குழந்தையை விற்கும் தாய் பெண்ணியத்தின் சின்னம் என்று
பாராட்டுவீர்களா
நாகராசன்
2012/11/21 Innamburan Innamburan <innam...@gmail.com>:
ஏதோ தாய்க்குலங்களைத் தாங்கிப்பிடிப்பதாக நினைத்து என்னைத் தாக்க
வேண்டாம். சமுதாஉஅம் என்றால் குழுக்களின் உரசல் இல்லாமல் இருக்காது.
ஒரு குழுவை அதாவது ஆண்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதும் பெண்கள்
வளர்ந்து விடுவார்கள் என்று நினைப்பது சரியல்ல
ஐயா,
இங்கே இந்த இழையில் நீங்கள் உட்பட யாரும் பெண்களுக்கு எதிராக பேசவில்லை. அதனால் நீங்கள் எடுத்து போட்ட ஒரு விதியை நான் நம்பவில்லை என சொல்வதால் உங்களை நான் தாக்குகிறேன் என பொருள் அல்ல.
அறிவியல் ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும், நாளை மற்றொன்றை சொல்லும். அதனால் ஒரு அனுமானம் நிருபிக்கபட்ட உண்மையாக ஆகாதவரை அதை உறுதியாக நம்பி முடிவுகள் எடுப்பதில் பயனில்லை என்பது என் கருத்து. அதனால் இந்த விதியை நான் நம்பவில்லை. நீங்கள் அதை பயன்படுத்தி இந்த இழையில் உங்கள் கோணத்தில் தீர்வுகள் சொல்வதை நான் தடுக்க போவது இல்லை.
ஒரு பிரச்சனைக்கு பலவித அணுகுமுறைகள், கருத்துக்கள் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே.
--
செல்வன்
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
ரமணியம்மாள் குறித்து மேதை நரஸய்யாவின் பகிர்வு னெ நெஞ்சைத் தொட்டடு.
செல்வன் விதிவிலக்கு:-)2012/11/15 rajam <ra...@earthlink.net>அதாவது, தம்பீ, தமிழ்நாட்டு ஆண்களுக்குக் குழந்தையை எடுத்துக்கொள்ளும் மென்மை/பக்குவம் இல்லை. பிறந்த குழந்தையின் கழுத்து நிற்கவே பல மாதங்கள் ஆகும். அந்தக் குழந்தையைத் தலைசேர்த்துத் தூக்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பது அரிது. பெற்ற தாய்க்குக் கூட அது பழக்கம் ஆகணும். சும்மாச்சுக்கும் வீம்புக்கு நாந்தேன் அப்பன்-னு குழந்தையைப் பிடிச்சா ... கழுத்துச் சுளுக்கிக்கும்! ;-) ;-) ;-)
பிரசவ அறையில் முதல் முதலாக குழந்தையை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவம். மனைவி கர்ப்பமாக இருக்கையில் கணவன் என்னென்ன செய்யவேண்டும் என்பதுக்கு பயிர்சி வகுப்பு எடுத்தார்கள். தம்பியோ, தங்கையோ பிறந்தால் எப்படி கவனிக்க வேன்டும் என்பதுக்கு முதல் குழந்தைக்கு பயிர்சி வகுப்புகள் எடுத்தார்கள். அதனால் குழந்தையை நான் தாராளமா கையில் எடுத்தேன். நம் ஊரிலும் இதுபோல வரவேண்டும்.
--
செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


பெண்கள் விக்டிம் மனபான்மைக்கு ஆளாககூடாது. ஆண்கள் நம்மை வஞ்சித்து விட்டார்கள், பதவிகளை அடித்து பிடிங்கு விட்டார்கள், அவர்களை கிழே தள்ளி நாம் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர கூடாது, ஆண்களுக்கும் வர கூடாது.
அரசியல் என்பது ரவுடித்தனம், மொல்லமாரிதனம், கேப்மாரிதனம் செய்துதான் ஜெயிக்கும் விஷயம். அப்படி செய்துதான் ஆண்கள் ஜெயிக்கிரார்கள். அப்படி ஜெயிப்பவர்களால் தான் சர்வதேச அரங்கில் பெர்வேஸ் முஷாரப்புடனும், அல்கொய்தாவுடனும் போட்டி போட்டு அரசியல் செய்ய முடியும். Women should beat men in that game.Many successful women have done that.