சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.
கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!
http://www.dinamani.com/Images/article/2010/12/4/sm18.jpg
பாரதிதாசன்
நன்றி:- சிறுவர்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அந்த அரிய வெண்கலக் குரலின் ஒலிப்பேழை கிடைக்குமா?
இணையத்தில் பானுமதி அவர்களின் குரலில் தான் "தலைவாரிப் பூச்சூடி" பாடல்
பெரும்பாலும் உள்ளது.