SMS EMDEN 22-09-1914 by Dhivakar

29 views
Skip to first unread message

V, Dhivakar

unread,
Dec 26, 2008, 7:20:48 AM12/26/08
to minT...@googlegroups.com

எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

 

அடியேன் எழுதிய தமிழ் நாவல் எஸ். எம். எஸ். எம்டன் நமது பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழா பின்னர் வைத்துக் கொள்வதாக திட்டம் உள்ளது.

 

எஸ். எம். எஸ். எம்டன் நாவலுக்கு அணிந்துரை அருளியவர் பெரியவர் திரு நரசய்யா அவர்கள். அந்த அணிந்துரையை இணைத்துள்ளேன்.

 www.vamsadhara.blogspot.com


SMS எம்டன் 22-09-1914

சரித்திர புதினம் - எழுதியவர் - திவாகர்

பதிப்பாளர்: பழனியப்பா பிரதர்ஸ்,

           25, ராயப்பேட்டை நெடுஞ்சாலை

           சென்னை - 600 014

        

 

அணிந்துரை: நரசய்யா (கடலோடி, மதராசப்பட்டினம் ஆசிரியர்)

          

திவாகரின் சரித்திரத் தேடல்:

 

சரித்தரப் புதினங்களில் ஆசிரியர்கள், சான்றாக, ஒரு சிறு சரித்திர இழையைப் பிடித்துக் கொண்டு, முடிந்தமட்டில் பெரும் வடங்களைத் தயாரித்து விடுகிறார்கள். சரித்திரப் பின்னணி, காலத்தால் பின் செல்லச் செல்ல, ஆசிரியர்களுக்குச் சாதகமாகவேப் புனையும் முயற்சி அமைந்துவிடுகிறது. எந்த சரித்திரப் புதின ஆசிரியரும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல; அவரவர்கள் திறமைக்கேற்ப அவரவர் தமது கதைகளைப் புனைகின்றனர். அவ்வாறு பிறந்த கதைகளின் வெற்றியோ தோல்வியோ ஆசிரியர்களின் கைவண்ணத்தால் மட்டுமே அல்லாது சரித்திரத்தின் திருப்புமுனைகளால் அல்ல.

 

திவாகர், சரித்திரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அதே மாத்திரத்தில் சரித்திரத்தினின்றும் சிறிதும் பிரியாது, உண்மையே மையமாகக் கொண்டு சிறந்த புதினங்களை ஏற்கனவே படைத்து வெற்றியும் கண்டவர். அவ்வாறு அவர் படைத்த புதினங்களில் எழுதுகையில் தாம் கண்ட சில அரிய விஷயங்களை அப்போதே வைப்பு நிதி போல வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு தக்க சமயம் வரும்போதில் அவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கலாம்.

 

சோழ மாமன்னனும், எஸ். எம். எஸ். எம்டனும் அவ்வாறு கலக்கக்கூடிய வாய்ப்பு எப்போதோ அவருள் துளிர்த்திருக்கவேண்டும். காலத்தால் இந்நிகழ்வுகள் 900 ஆண்டுகள் பிரிந்திருப்பவை; இந்நிகழ்வுகளை மிகவும் ஜாக்கிரதையாக அவர் சேர்க்க எடுத்திருக்கும் துணிவும் முயற்சியும் சாதாரணமானவையல்ல; தெரிந்தே புதைமணலில் இறங்குவது போன்றது.

 

சரித்திரத்தின் சுவைநலம் நிறைந்த அழகுணர்ச்சியும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் குறைத்திடாமல் ஒரு புதினத்தைப் புனைகையில் இரண்டு விரிவாக்கங்கள் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று - சரித்திரப் பின்னணிக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்வுகளை அடக்கியாள்வது; இது 19ஆம் நூற்றாண்டின் ஆங்கில ஆசிரியர்களான டிக்கன்ஸ் போன்றவர்கள் கையாண்ட முறை. அடுத்த முறை - சரித்திரம் அளிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு, அந்தந்த மொழிக்கேற்ப, சமுதாய விதிகளின்படி தமது திறமையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விருந்து படைப்பது. தமிழில் மிக சாமர்த்தியமாக இம்முறையைக் கையாண்டு அமோக வெற்றியைக் கண்ட கல்கி, பல சரித்திர ஆசிரியர்களுக்கு முன்னோடியாக அமைந்துவிட்டார்.

 

கல்கியில் தளத்தைப் பின்பற்றி சோழர்கள் சரித்திரப் பின்னணியில் தாமிருக்கும் இடமான கலிங்கத்து அருகாமை தமக்குக் கைகொடுத்திட 'வம்சதாரா' என்ற புதினத்தை எழுதியபோதே தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக் கொண்டுவிட்டார் திவாகர்.

 

'திருமலைத் திருடனும்' 'விசித்திர சித்தனும்' வெளிவந்தபோது சரித்திரம் அவர் கைகளில் மெருகுடன் கலையுரு பெற்றன.

 

ஆனால், எஸ். எம். எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை. இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட்டிருக்கும் பெருமை திவாகரையே சாரும். ஆங்கிலத்தில் 'க்ளோக் அண்ட் டேகர் மிஸ்டரி' என்ற வகையாக, படிப்பவரை நாற்காலியில் விளிம்பில் அமர்த்திவிடும் தன்மை கொண்டதாக கதை உள்ளது. கதையைப் படித்துத்த்தான் அதன் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் அதன் பரிமாணத்தை விட்டகன்று, நான் அதிசயப்பட்ட பின்னணியை மட்டும் பற்றிக் கூற விரும்புகிறேன்.

 

எனது நூலான 'மதராசபட்டின'த்தில் (பக்கம் 120) - 'மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பலில் ஒரு இந்தியரும் பணியாற்றியிருக்கிறார், அவர் டாக்டர் சம்பகராமன்பிள்ளை என்பவர், இந்தியாவிலிருந்து மருத்துவப் படிப்புக்கு ஜெர்மனி சென்ற இந்த மனிதர் அதில் சேவை புரிந்ததாகத் தெரிகிறது'  என்று எழுதியுள்ளேன். இந்த விவரம் சரியானதா இல்லையா என்று தெரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை. ஆனால் எம்டன் 'க்ரூ மேனிஃபெஸ்ட்'டில் அவ்வாறு ஒரு பெயரும் இருக்கவில்லை என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். ஆனால் அவ்வாறு அளிக்கப்பட்ட பட்டியல் எவ்வளவு தூரத்திற்கு நம்பத்தகுந்தது என்று என்னால் கூற இயலவில்லை. ஆகையால் இக்கதை எவ்வாறு  உண்டானது என்பதை என்னால் ஆராய்ந்து கூறவும் முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சென்னை வந்திருந்த எம்டனைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மானியரும் (ஜோஷிம் பாட்ஸ்) இந்தியர் பெயர் ஒன்றும் பட்டியலில் இருக்கவில்லை என்றுதான் சொன்னார்.

 

ஆகையால் நாம் அறிந்துகொள்ளக்கூடியவை:

 

1.        எம்டன் மதராசை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது

2.        சுலபமாக மதராசை அது அழித்திருக்கமுடியும். ஆனாலும் அவ்வாறு செய்யாது ஏதோ ஒரு காரணத்தால், 130 குண்டுகளை மட்டும் துறைமுகத்து எண்ணெய் டேங்குகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது

3.        இந்தப் பின்வாங்கலுக்கு சரியான காரணம் ஏதும் கூறப்படவில்லை

4.        சம்பகராமன் பிள்ளை என்ற ஒரு டாக்டர் அக்கப்பலில் இருந்ததாகக் கூறப்பட்டாலும் அம்மாதிரி பெயர் ஒன்றும் பட்டியலில் காணப்படவில்லை.

 

இந்த முக்கிய நான்கு விவரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் திவாகர்.

 

பின்வாங்கலுக்குக் காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஒரு ஐயத்தை உண்டாக்குகையில் நாமும் அதை நம்புமாறு ஒரு பிரமையும் உண்டாக்கிவிடுகிறார். அவர் வார்த்தைகளில் கூறவில்லை என்றாலும், ஒரு போர்க்கப்பலில் மற்றொரு தேசத்தினர் இருப்பதை தஸ்தாவேஜுகளில் காப்டன் காண்பிக்காமலிருக்கலாம் என்று நம்மை நம்ப வைத்துவிடுகிறார். இது இந்தப் புதினத்திற்கு ஒரு மிக்க வலிமையான பின்புலத்தை அளித்துவிடுகிறது

 

ஆங்கிலப் போர்க்கப்பல் 'யார்மவுத்' போல நான்காவது புகைப்போக்கியை வைத்துக் கொண்டு ஏமாற்றி இந்துமகா சமுத்திரத்தில் வலம் வந்த போதும் கோகோ தீவுகள் அருகே எம்டன் ஆஸ்திரேலியக் கப்பல் 'சிட்னி'யால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, தரை தட்டி நின்றதும் 131 மரணங்களும் 65 வீரர்கள் காயமடைந்து இருந்ததும் சரித்திர உண்மைகள். திவாகரின் கதை இவற்றில் சற்றும் பிறழாது முன்செல்கிறது.

 

சரித்திரப் பின்னணி தவிர இந்து ஆகம விதிமுறைகளும் சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்றன. மகுடாகமத்தினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளுமாறு எழுதியுள்ளார். புதினத்தில் வரும் பாத்திரங்களான சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர், நூலைப் படித்து முடித்த பின்னரும் நம் மனத்தை விட்டு அகல மறுக்கிறார்கள்.

 

இதுதான் திவாகரின் வெற்றி!

 

நரசய்யா

சென்னை-20

nara...@yahoo.com

 

 

 

 

Geetha Sambasivam

unread,
Dec 26, 2008, 7:25:39 AM12/26/08
to minT...@googlegroups.com
அமர்க்களமான அறிமுகம். வாய்ப்புக் கிடைக்கும்போது படிச்சுடறேன்.

2008/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>

Chandra sekaran

unread,
Dec 26, 2008, 7:38:30 AM12/26/08
to minT...@googlegroups.com, kra narasiah
Dhiwakar is no doubt a great writer, Narasaiah's intro adds feather to his cap.!
Kudos and I amproud of knowing both these great writers of our time.
Chandrasekaran J
--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Tirumurti Vasudevan

unread,
Dec 26, 2008, 8:37:44 AM12/26/08
to minT...@googlegroups.com
புத்தகம் புக் பண்ணலாமா? எப்படி?
திவா

2008/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>

எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

 



--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Dec 26, 2008, 8:49:26 AM12/26/08
to minT...@googlegroups.com
வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி போன்று
திவாகர் எழுதிய

SMS எம்டன் 22-09-1914

சரித்திர புதினம் புத்தகத்துக்கு

 அணிந்துரை: நரசய்யா (கடலோடி, மதராசப்பட்டினம் ஆசிரியர்)

ஆஹா படித்துவிடவேண்டியதுதான் காத்திருக்கிறோம்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

          

 



 

Narayanan Kannan

unread,
Dec 26, 2008, 8:57:20 AM12/26/08
to minT...@googlegroups.com
ஆகா!

நீண்ட நாட்களாகக் காத்திருந்து திரைக்கு வந்திருக்கும் வாடா மலரோ?

வாசிக்கக் காத்திருக்கும்
கண்ணன்

2008/12/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

kamaladevi aravind

unread,
Dec 26, 2008, 9:31:17 AM12/26/08
to minT...@googlegroups.com
அன்பார்ந்த திரு திவாகர்,
என்டெ ஹ்ருதயம்  நிறைந்த வாழ்த்துக்கள்.
சரித்திர நாவல், வரலாற்று நாவல் எழுதுவது  என்பது, மிகுந்த உழைப்புக்குண்டான பணி.
இவ்வளவு பெரிய ஆளா தாங்கள்.  எவ்வளவு பெருமிதமாக உள்ளது. அதிலும் திருமிகு. நரசையா அவர்களின் முன்னுரை
தான் எவ்வளவு பாந்தம் . முன்னுரையைப்  படிக்கும்போதே  நாவலைப் படிக்க ஆவலாயுள்ளது.
கமலம்







From: "V, Dhivakar" <venkdh...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, December 26, 2008 8:20:48 PM
Subject: [MinTamil] SMS EMDEN 22-09-1914 by Dhivakar

vj kumar

unread,
Dec 26, 2008, 10:09:43 AM12/26/08
to minT...@googlegroups.com
திரு நரசய்யா அவர்கள் ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டார்.

எச்சரிக்கை, எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஒரு வாரம் தூக்கம் போகும்.

நன்றி
விஜய்

--
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

Tthamizth Tthenee

unread,
Dec 26, 2008, 10:15:58 AM12/26/08
to minT...@googlegroups.com
திரு நரசையா அவர்கள் இதமானவர் பயமுறுத்த மாட்டார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Kumaran Malli

unread,
Dec 26, 2008, 1:02:03 PM12/26/08
to minT...@googlegroups.com

வாழ்த்துகள் ஐயா. வணக்கங்களும். சென்னை செல்லும் போது வாங்க வேண்டிய பொத்தகங்களில் இதுவும் ஒன்று என்று குறித்துக் கொள்கிறேன். நன்றி.

NATARAJAN SRINIVASAN

unread,
Dec 26, 2008, 9:04:31 PM12/26/08
to minT...@googlegroups.com
மற்ற இரண்டு புத்தகங்கலின் பதிப்பகங்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். கண்காட்சியில் அவற்றையும் வாங்கிவிடலாம்.
நடராஜன்.
2008/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>

எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

vj kumar

unread,
Dec 27, 2008, 1:05:50 AM12/27/08
to minT...@googlegroups.com
திவாகர் ஐயாவின் மற்ற மூன்று புதினங்கள் மற்றும் அவரது பதிவு

http://www.poetryinstone.in/lang/ta/2008/09/26/sculpture-from-an-authors-perspective.html

நன்றி
விஜய்

2008/12/26 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>:

--

V, Dhivakar

unread,
Dec 27, 2008, 5:14:34 AM12/27/08
to minT...@googlegroups.com
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என்னுடைய கோத்திரம் 'விசுவாமித்திர கோத்திரம்' தான். ஆனால் அவர் வாழ்க்கைக்கும் நமக்கும் ஸ்நானப் பிராப்தி' கூட இல்லை(:-

2008/12/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

naa.g...@gmail.com

unread,
Dec 27, 2008, 7:15:59 AM12/27/08
to மின்தமிழ்

On Dec 26, 9:09 am, "vj kumar" <vj.epist...@gmail.com> wrote:
>  திரு நரசய்யா அவர்கள் ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டார்.
>
> எச்சரிக்கை, எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஒரு வாரம் தூக்கம் போகும்.
>

நல்லது விஜய். படித்துப் பார்ப்பேன்.

உண்மையைச் சொல்லணும்னா எனக்கு சினிமா, கதைகளில் விஷயஞானம் ஒன்றும்
தெரியாது.
பொன்னியின் செல்வன், சுஜாதா, ... கதைகள் படித்ததில்லை (அதனாலதான் இப்படி
ஆயிட்டனோ :-) )

நரசையா, திவாகர் fiction சில மாதங்களில் படிக்க ஒரு திட்டம், பின்னர்
எழுதறேன்.

நா. கணேசன்


> நன்றி
> விஜய்
>
> --http://www.poetryinstone.in

V, Dhivakar

unread,
Dec 31, 2008, 1:02:57 AM12/31/08
to minT...@googlegroups.com
கண்ணன்,
நன்றிகள் உரித்தாகுக.

இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று சிறப்பாக இந்தக் கதையின் மென் - நகலினை தங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகளுடன்
திவாகர்

2008/12/26 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 31, 2008, 1:25:22 AM12/31/08
to minT...@googlegroups.com
2008/12/31 V, Dhivakar <venkdh...@gmail.com>:

> கண்ணன்,
> நன்றிகள் உரித்தாகுக.
>
> இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று சிறப்பாக இந்தக் கதையின் மென் - நகலினை
> தங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
>

வாவ்....எதிர்நோக்குகிறேன்.

உற்சாகமான 2009 மலரட்டும்!

கண்ணன்

vj kumar

unread,
Jan 12, 2009, 3:17:13 AM1/12/09
to minT...@googlegroups.com
திரு திவாகர் அவர்களின் SMS எம்டன் 22-09-1914, வரலாற்றுப் புதினத்தின் ஒரு மாதிரி  அத்தியாயம் - இணையத்தில் வாசகர்களுடன் அவர் பகிர்கிறார்.

 இங்கே சென்று பதிவு செய்யுங்கள் -

http://vamsadhara.blogspot.com/2009/01/blog-post.html

உடனடி  முதல் அத்தியாயம் -  நீங்கள் படித்து மகிழ , உங்களிடத்தில்

நன்றி
விஜய்



2008/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>



--

meena muthu

unread,
Jan 12, 2009, 10:53:50 AM1/12/09
to minT...@googlegroups.com
இப்பவே படிக்கணுமே..!

(என்னுடைய மருமாள் சமீபத்தில் இந்தியா வந்துவர இருக்கிறாள். அவசியம் வாங்கிவரச்சொல்லப்போறேன்!)


வாழ்த்துகளுடன்
மீனா

2008 டிசம்பர் 26 04:20 அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:




meena muthu

unread,
Jan 12, 2009, 10:57:50 AM1/12/09
to minT...@googlegroups.com

(என்னுடைய மருமாள் அண்ணன் மகள் சமீபத்தில் இந்தியா வந்துவர இருக்கிறாள். அவசியம் வாங்கிவரச்சொல்லப்போறேன்!)

Satheesh kumar R

unread,
Jan 12, 2009, 11:30:27 AM1/12/09
to minT...@googlegroups.com
நான் இந்த நூலை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே நண்பர் திரு. விஜய் எச்சரிக்கை செய்தார் "நண்பரே, புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் அதை கீழே வைப்பது மிகக் கடினம் என்று". ஹா! அப்படி என்ன பெரியதாய் இருந்து விடப்போகிறது என்று அலட்சியாமாய் படிக்க ஆரம்பித்தேன், அவ்வளவுதான்! என்னால் புத்தகத்தை கீழே வைக்க மட்டும் அல்ல, என்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல் படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு 100 பக்கங்கள் தான் பாக்கி, ஆனால் இன்று காலை முதல் புத்தகத்தை நான் தொடவேயில்லை, இல்லையென்றால் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் போயிருந்திருக்கும்.

எப்படி சமீப காலத்தையும், ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தையும் இணைக்க முடிந்தது இவரால்!! பொன்னியின் செல்வனின் பிரியர்களில் ஒருவனான எனக்கு, இந்த நூலில் உள்ள செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சற்று பொறுங்கள், முழுதாக படித்துவிட்டு வருகிறேன்...

என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்

2009 ஜனவரி 12 21:23 அன்று, meena muthu <ranga...@gmail.com> எழுதியது:

chitha...@yahoo.co.in

unread,
Jan 12, 2009, 11:46:47 PM1/12/09
to மின்தமிழ்
வணக்கம் மீனா முத்து
வாங்கி வரச் செய்து வாசித்தால் மட்டும் போதாது. உங்கள் வாசித்த
அனுபவத்தை ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். அதற்காக சில பக்கங்களை
யுகமாயினியில், ஒதுக்குகிறேன்.நீங்களும் யுகமாயினியில் இடம் பெற்று ஆறு
மாதங்களாகிவிட்டன அல்லவா?
சித்தன்
meena muthu 작성:

> > *
> > *
> > >
> >

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2009, 7:49:46 PM1/13/09
to minT...@googlegroups.com
திவாகருக்கு பாராட்டுகள்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Tthamizth Tthenee

unread,
Jan 14, 2009, 5:39:16 AM1/14/09
to minT...@googlegroups.com
இத்துணை அறிஞர்கள் பாராட்டிய நூலை நானும் என் நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்வதில் எனக்கும் பெருமைதானே ,நிச்சயமாக மகிழ்ச்சியுடன் செய்வேன்
நாளை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாமா
 
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ

 

Subashini Tremmel

unread,
Jan 14, 2009, 6:08:53 AM1/14/09
to minT...@googlegroups.com
வாழ்த்துக்கள் திரு.திவாகர் அவர்களே.
 
உங்களது பல நாள் உழைப்பு இப்போது நூல் வடிவில் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. நூல் அணிந்துரையை வாசிக்க வழங்கியமைக்கும் நன்றி. உங்களது பிற சரித்திர நாவல்கள் போல இதுவும் நிச்சயம் சிறந்த நூலாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
 
அன்புடன்
சுபா

2008/12/26 V, Dhivakar <venkdh...@gmail.com>

O தோழன்:-}

unread,
Jan 14, 2009, 6:56:05 AM1/14/09
to minT...@googlegroups.com
வாழ்த்துக்கள் திரு.திவாகர் அவர்களே.

திவாகரன் என்றால் ஆதவன்

இந்த ஆதவனின் தவத்தில் உருவான இந்நூலின் அணிந்துரையிலேயே
புரிந்துவிட்டது இந்நூல்  தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்த ம்ற்றொரு வரப்பிரசாதம் .ஆதவனைத்தொழும் நாளான் தைத்திங்கள் திருநாளில்
இதுபோன்று இன்னும் பற்பல படைப்புகளை தந்தருள எல்லாம் வல்ல
இறைவன் பத்ம் பணிகிறேன்

திவாகரன்

2009/1/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

annamalai sugumaran

unread,
Jan 15, 2009, 7:48:02 AM1/15/09
to minT...@googlegroups.com
வாழ்த்துக்கள்
பாராட்டுகள்
மேல் மேலும்  இத்தகு படைப்புகள் வரவேண்டும் ,
அன்பன் ,
ஏ. சுகுமாரன்

2009/1/14 O தோழன்:-} <guru...@gmail.com>
வாழ்த்துக்கள் திரு.திவாகர் அவர்களே.

திவாகரன் என்றால் ஆதவன்

,




--
A.Sugumaran ,
AMIRTHAM INTL .....Source globally......
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Tthamizth Tthenee

unread,
Jan 15, 2009, 11:41:28 AM1/15/09
to minT...@googlegroups.com
இன்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் 16/01/2009 
திரு திவாகர் புத்தகக் கண்காட்சிக்கு இன்று மாலை மூன்று மணிக்கு வருவதாக சொன்னார், அவரை சந்திக்கும் நோக்கமும் நிறைவேறும் ,புத்தகக் கண்காட்சியையும் கண்டு களிக்கலாம் என்று, திரு திவாகரை சந்தித்தேன் அவர் எழுதிய  எஸ். எம். எஸ்  எம்டன் 22-09-1914 புத்தகத்தையும் வாங்கினேன்
அங்கு மற்றும் பல நண்பர்களை சந்தித்தேன்
 
திரு ஆன் டோ பீட்டர் அவர்களையும் சந்தித்தேன்
 
மும்பை சரவணன் அவர்களும் வந்திருந்தார், நானும் என் துணைவியாரும்  அப்படியே ஒவ்வொரு பதிப்பக பகுதிக்கும் சென்று கண்டு மகிழ்ந்தோம்
 
மும்பை சரவணன் அவர்கள் எழுதிய "அமர்நாத் யாத்திரை"
என்னும் புத்தகத்தை   "தவம்" வெளியீட்டார் வெளியிட்டிருக்கிறார்கள்
 
 
 
அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வாசலில் திரு கிருக்கல் மணி  என்று சொல்லப்படும் திரு கே ஆர் மணி அவர்களை சந்தித்தேன் .அப்படியே பேசிக்கொண்டே இருக்கையில் திரு மும்பை சரவணன் யுகமாயினி புத்தகம் பார்த்தீர்களா என்று கேட்டுவிட்டு அந்தப் புத்தகத்தை கொடுத்தார்
பிரித்து படித்தேன்
 
யுகமாயினி புத்தகத்தில்  நா. கண்ணன்  அவர்களின்
 
 "தூரத்து மணியோசை-4'
கலாச்சாரப் புரட்சியும் காணாமல் போன இசையும் படித்தேன்  
தமிழா! கிணற்றைவிட்டு வெளியே வா! 
திரு கண்ணன் அவர்களின் எழுத்து நடை ,அப்படியே அவர் எடுத்துக்கொண்ட செய்தியை விட்டு விலகாமல் எழுதுகிற பாணி மிகவும் அருமை,அதை ரசித்துக் கொண்டே வருகையில்
 
 
இனிய அதிர்ச்சி!
 
அந்தக் கட்டுரையின் கீழே
 
மரபு அணில் தமிழ்த்தேனியின் 
 "எவன் ப்ராமணன் "  என்கிற கேள்வியும் கேட்டு அதற்கு நான் அளித்த பதிலும் இருந்தது
 
 
அப்படியே  சற்று தூரத்தில் திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இருந்த பகுதிக்கு சென்ரு சற்று நேரம் அவருடன் உரையாடிவிட்டு வந்தேன்
 
வெளியே வந்து சற்று நேரம் பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி சொல்வது என்று சுகிசிவம் அவர்கள் அவருக்கே உரித்தான இயல்பான பாணியில் நயமாக  பேசுவதை சிறிது நேரம் கேட்டுவிட்டு
வீடுவந்து சேர்ந்தேன்
 
 32 ஆவது புத்தகக் கண்காட்சி  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது  , மக்களும் நல்ல புத்தகங்களை தேடி தேடி வாங்குகிறார்கள்  ,
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 
 

Narayanan Kannan

unread,
Jan 15, 2009, 7:32:01 PM1/15/09
to minT...@googlegroups.com
2009/1/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>
> யுகமாயினி புத்தகத்தில் நா. கண்ணன் அவர்களின்
>
> "தூரத்து மணியோசை-4'
> கலாச்சாரப் புரட்சியும் காணாமல் போன இசையும் படித்தேன்
> தமிழா! கிணற்றைவிட்டு வெளியே வா!
> திரு கண்ணன் அவர்களின் எழுத்து நடை ,அப்படியே அவர் எடுத்துக்கொண்ட செய்தியை
> விட்டு விலகாமல் எழுதுகிற பாணி மிகவும் அருமை,அதை ரசித்துக் கொண்டே வருகையில்
>

நன்றி தேனீயாரே!

ஒரு புத்தக அறிமுகம் என்பது பதிப்பகத்தாரை நம்பி உள்ளது.

உதிர் இலை காலம்
நிழல்வெளி மாந்தர்
விலை போகும் நினைவுகள்

இந்த என் புத்தகங்களை தமிழகம் அறியுமா என்றே தெரியவில்லை.

ஆர்வமுள்ள பதிப்பகத்தார் இருந்தால் மீள்பிரசுரம் செய்யலாம்!

என் கட்டுரைகளை வெளியிடுவதாகச் சொன்ன பழனியப்பா பதிப்பகம் இன்னும்
யோசித்துக் கொண்டு இருக்கிறது போலும்!

கவிதைகள்?

ஒரு புறம் பதிப்பகத்தாருக்கு நல்ல நூல்களின் தேவை இருக்கிறது!
மறுபுறம் ஆசிரியனுக்கு நல்ல பதிப்பகத்தின் தேவை இருக்கிறது.
இரண்டும் சேர்வது தெய்வச்செயல் போலும்!

க.>

Tthamizth Tthenee

unread,
Jan 17, 2009, 1:16:40 AM1/17/09
to minT...@googlegroups.com
ஒரு புறம் பதிப்பகத்தாருக்கு நல்ல நூல்களின் தேவை இருக்கிறது!
மறுபுறம் ஆசிரியனுக்கு நல்ல பதிப்பகத்தின் தேவை இருக்கிறது.
இரண்டும் சேர்வது தெய்வச்செயல் போலும்!
 
 
உண்மைதான் திரு கண்ணன் அவர்களே
 
இவர்கள் இருவரையும் தரம் தெரிந்து தேர்ந்தெடுத்து
தரமான படைப்புகளையும், தரமான எழுத்தாளர்களையும்
 
தரமான பதிப்பகத்தாரையும் இணைக்கும் தரமான தளம் ஒன்று அமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்
 
அது தரைத் தளமாகவோ, அல்லது கணிணித் தளமாகவோ எப்படி அமைத்தாலும்
 
தரத் தளமாக அமைக்கவேண்டும் என்பது என் அவா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2009/1/16 Narayanan Kannan <nka...@gmail.com>

meena muthu

unread,
Jan 23, 2009, 9:56:27 AM1/23/09
to minT...@googlegroups.com
நன்றி சித்தன்,

\\ வாங்கி வரச் செய்து  வாசித்தால் மட்டும் போதாது. உங்கள் வாசித்த
அனுபவத்தை ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். \\

பிரமாதமாகவெல்லாம் எழுதத்தெரியாதே எனக்கு

\\ யுகமாயினியில் இடம் பெற்று ஆறு மாதங்களாகிவிட்டன அல்லவா?\\

கடந்த அக்டோபரில் கடைக்குட்டி வந்தது என்று நினைக்கிறேன் அதன் பிறகு  ஏதும் இடம்பெறவில்லை.

மீனா

2009 ஜனவரி 12 20:46 அன்று, <chitha...@yahoo.co.in> 





meena muthu

unread,
Jan 23, 2009, 9:59:00 AM1/23/09
to minT...@googlegroups.com
எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

இந்நாவல் கோவையில்  கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? தயவுசெய்து விபரம் தாருங்கள்  நன்றி.

Satheesh kumar Rajamanickam

unread,
Jan 23, 2009, 10:23:38 AM1/23/09
to minT...@googlegroups.com
The book will be available in coimbatore in Palaniappa bros
shop. Coimbatore Palaniappa Bros , 683 Opposite Post Office Raja Street.

Rgds,
Satheesh kumar R

2009/1/23 meena muthu <ranga...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 24, 2009, 4:57:46 AM1/24/09
to minT...@googlegroups.com

பிரமாதமாக எழுதுவது (ஏன்? எந்த செய்கையும்) என்றால் என்ன?

இன்னம்பூரான்

2009/1/23 Satheesh kumar Rajamanickam <svprsk...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2009, 9:11:36 AM1/24/09
to minT...@googlegroups.com


2009/1/23 meena muthu <ranga...@gmail.com>

எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

இந்நாவல் கோவையில்  கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? தயவுசெய்து விபரம் தாருங்கள்  நன்றி.


மீனா
நீங்க கோவைக்கு எப்போது பெயர்ந்தீர்கள்?

meena muthu

unread,
Jan 29, 2009, 7:31:15 AM1/29/09
to minT...@googlegroups.com
\\ நீங்க கோவைக்கு எப்போது பெயர்ந்தீர்கள்? \\

நான் இங்கு(மலேசியாவில்)தான் இருக்கிறேன் :)

அக்கா குடும்பம் அங்கு இருக்கிறார்கள் (அம்மாவீடுபோல). எப்போது ஊர் வந்தாலும் நேராக (எங்களுக்கும் எல்லாமும்)கோவைதான்.

அவர்களிடம் சொல்லிவிட்டால் சுலபமாக புத்தகத்தை அங்கிருந்தே வாங்கி கொடுத்தனுப்பி விடுவார்கள் அல்லவா :)


2009 ஜனவரி 24 06:11 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

vj kumar

unread,
Feb 6, 2009, 2:20:47 AM2/6/09
to ponniyi...@yahoogroups.com, mintamil


TAMIL KALAI MANDRAM

VISAKHAPATNAM

 

CORDIALLY INVITE YOU AND YOUR FAMILY MEMBERS

FOR THE BOOK RELEASE FUNCTION

 

SMS EMDEN 22-09-1914 By  V. Dhivakar

 

&

 

STONES & PLASTER By Dr. Suja Ramana

 

CHIEF GUEST:

Thiru M. PONNUSWAMY, I.R.S.,

Commissioner, Customs, Vizag

 

Guests of Honour

Prof. R. Raghavendra, Bhimili

Thiru Prabhakara Sharma, Chief of Bureau, The Hindu, Vizag

Prof. Nilamangai Dhuraiswamy, Chennai .

 

DATE AND VENUE

 

SUNDAY 8TH FEBRAURY 2009, 6 PM

AT

TAMIL KALAI MANDRAM A/c Hall

Abhaya Anjaneyar Kovil Street

Maruthi Nagar, Sitammadhara NE

VISAKHAPATNAM 530 013

 

8 PM: Dinner

 

ALL ARE WELCOME

 

SMS EMDEN 22-09-1914: A TAMIL (historical) NOVEL on German Cruise War Ship which bombarded Chennai Harbour during First World War, authored

by V. Dhivakar.

 

STONES & PLASTER: An English Novel on experience of being a student and Practicing Dental care, authored by Dr. Suja Ramana.

 


வேந்தன் அரசு

unread,
Feb 6, 2009, 9:02:02 AM2/6/09
to minT...@googlegroups.com
திவாகருக்கு வாழ்த்துகள்


On Fri, Feb 6, 2009 at 2:20 AM, vj kumar <vj.ep...@gmail.com> wrote:


TAMIL KALAI MANDRAM

VISAKHAPATNAM

 

CORDIALLY INVITE YOU AND YOUR FAMILY MEMBERS

FOR THE BOOK RELEASE FUNCTION

 

SMS EMDEN 22-09-1914 By  V. Dhivakar

 

&

 

STONES & PLASTER By Dr. Suja Ramana

 


Kannan Natarajan

unread,
Feb 6, 2009, 5:16:48 PM2/6/09
to minT...@googlegroups.com
"எம்டன்" திவாகருக்கு வாழ்த்துக்கள்.

V, Dhivakar

unread,
Feb 7, 2009, 12:54:51 AM2/7/09
to minT...@googlegroups.com
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
 
அடியேன்
திவாகர்

Subashini Tremmel

unread,
Feb 7, 2009, 3:42:29 AM2/7/09
to minT...@googlegroups.com
திரு:திவாகர்;
 
இவ்விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:
 
அன்புடன்
சுபா

2009/2/7 V, Dhivakar <venkdh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages