இங்கிலாந்தில் ஒரு பள்ளி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கி உள்ளது!

22 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Nov 29, 2009, 7:53:20 AM11/29/09
to மின்தமிழ்
இங்கிலாந்தில் ஒரு பள்ளி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கி உள்ளது!
British School Makes Sanskrit Compulsory

Mar 7, 2008

In the heart of London, a British school has made Sanskrit compulsory
subject for its junior division because it helps students grasp math,
science and other languages better.

"This is the most perfect and logical language in the world, the
only one that is not named after the people who speak it. Indeed the
word itself means 'perfected language." --Warwick Jessup, Head, Head,
Sanskrit department

"The Devnagri script and spoken Sanskrit are two of the best ways
for a child to overcome stiffness of fingers and the tongue," says
Moss. "Today's European languages do not use many parts of the tongue
and mouth while speaking or many finger movements while writing,
whereas Sanskrit helps immensely to develop cerebral dexterity through
its phonetics."


Full article in British Newspaper

http://www.charityfocus.org/blog/upload/2008/Sanskrit.pdf or
http://www.scribd.com/doc/23287355/A-British-School-Makes-Sanskrit-Compulsory

N. Ganesan

unread,
Nov 29, 2009, 8:12:03 AM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 6:53 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> இங்கிலாந்தில் ஒரு பள்ளி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கி உள்ளது!
> British School Makes Sanskrit Compulsory
>

மகரிஷி மகேஷ் யோகி என்னும் $ சாமியாரின் சீடர் போல.
சொந்தப் பள்ளிக்கூடம்.

நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். பிரின்சிபால்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாய் என்று சொல்கிறார்.
இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பேராசிரியர்களிடம் சொன்னால்
நகைப்பதைக் காணலாம். 19-ஆம் நூற். வால்ட்டேர், ... காலமெல்லாம்
மலையேறிவிட்டது.

நா. கணேசன்


மு இளங்கோவன்

unread,
Nov 29, 2009, 9:08:41 AM11/29/09
to மின்தமிழ்
மொழிஞாயிறு பாவாணர் போன்றவர்கள் வடமொழி வரலாறு எழுதிய பின்பும் தமிழ்
திராவிடத்திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம் என்று வரைந்த பிறகும்
சமற்கிருத ஆதிக்கம் உலகம் முழுவதும் படர்ந்து கிடப்பதை இது
காட்டுகிறது.உலகப்பல்கலைக்கழகங்களில் பலவற்றில் சமற்கிருதத்திற்கு
ஆக்கப்பூர்வமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது தமிழ் செம்மொழி
என்று அறிவித்துக் கரகாட்டம் நம்மவர்கள்
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.ஆக்கப்பூர்வ ஆய்வுகளுக்கு
வழிவகுப்போம்.பிறமொழிக்காரர்களுக்குத் தமிழின் சிறப்பை அவர்கள் மொழியில்
விளக்குவோம்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 9:40:38 AM11/29/09
to மின்தமிழ்
On Nov 29, 2:08 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> மொழிஞாயிறு பாவாணர் போன்றவர்கள் வடமொழி வரலாறு எழுதிய பின்பும் தமிழ்
> திராவிடத்திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம் என்று வரைந்த பிறகும்
> சமற்கிருத ஆதிக்கம் உலகம் முழுவதும் படர்ந்து கிடப்பதை இது
> காட்டுகிறது.


இளங்கோவன் அவர்களே

தமிழ்நாட்டிற்க்கு வெளியே, யாரும் பாவாணரை விமர்சித்துக் கூட நேரம்
வியரம் செய்வதில்லை.

சமஸ்கிருத ஆதிக்கம் என ஒன்றும் இல்லை. நீங்கள் பீதி அடைய வேண்டாம். மேலை
நாடுகளில் பலகலைக்கழகங்களில் உலகின் பல மொழிகளை படிக்கின்றனர். அதில்
ஒன்று சமஸ்கிருதம்.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 9:42:20 AM11/29/09
to மின்தமிழ்
On Nov 29, 2:40 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> தமிழ்நாட்டிற்க்கு வெளியே, யாரும் பாவாணரை விமர்சித்துக் கூட நேரம்
> வியரம் செய்வதில்லை.

திருத்தம்: வியரம் >> விரயம்


விஜயராகவன்

devoo

unread,
Nov 29, 2009, 9:53:07 AM11/29/09
to மின்தமிழ்
*சமற்கிருத ஆதிக்கம் *

ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியுள்ளது; ஆங்கில ஆதிக்கம் என்கிறோமா?
ஆங்கிலேயரின் ஆற்றல் ஒரு சாதாரண மொழிக்கு உலக அரங்கில் உயர்ந்த இடத்தைப்
பெற்றுத் தந்தது.நம்மிடம் பன்முகத்தன்மையும்,ஆற்றலும் இருந்தால் தமிழ்
பரவலாகும்.
நம்மிடம் உள்ளது வெறும் மேடைப்பேச்சு மட்டும்தானே .அரசின்
வலைத்தளங்கள்கூட விஜயராகவன் சுட்டியபடி ஆங்கிலத்தில்தானே உள்ளன.

செத்த மொழி ஒன்றைப்பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ன பயன்?

தேவ்

Tthamizth Tthenee

unread,
Nov 29, 2009, 10:07:26 AM11/29/09
to mint...@googlegroups.com
பிறமொழிக்காரர்களுக்குத் தமிழின் சிறப்பை அவர்கள் மொழியில்
> விளக்குவோம்.
 
 
அன்புள்ள  மு இளங்கோவன் அவர்களே  வணக்கம்
 
பிற மொழிக்காரர்களுக்கு  கூட பிறகு விளக்கலாம்
 
முதலில்,  தமிழ் மொழியாளருக்கே  நம் மொழியைப் பற்றி விளக்கவேண்டிய நிலையில் உள்ளது
நம்மவர்கள் கரகாட்டம்   ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
 
சூரிய  தொலைக்காட்சியிலே   தமிழைக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
29-11-09 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:

Vedaprakash

unread,
Nov 29, 2009, 7:46:19 PM11/29/09
to மின்தமிழ்
திருவாளர் கணேசனுக்கு,

1. மகரிஷி மகேஷ் யோகி என்னும் $ சாமியாரின் சீடர் போல.சொந்தப்
பள்ளிக்கூடம்.

* "$ சாமியாரின் சீடர்" என்று குறிப்பிட்டு, "டாலர் சாமியார்"
என்கிறீர்களா, மற்ற ரூபாய், ரிங்கட், இயூரோ, சாமியார்கள், குறிப்பக
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரெலியா நாடுகளிலிருந்து வரும் சாமியார்களை
எப்படி விளிப்பீர்?

2. நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.
* என்னய்யா கதை சொல்லியிருக்கிறார்கள்?

3. பிரின்சிபால் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாய் என்று சொல்கிறார்.
* என்ன அதற்கு?

4. இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பேராசிரியர்களிடம் சொன்னால் நகைப்பதைக்
காணலாம்.
* எந்த "இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பேராசிரியர்கள்"? சமஸ்கிருதம்
தெரிந்தவர்களுக்கா அல்லது சமஸ்கிருதம் தெரியாமலேயே உள்ள
பேராசியர்களுக்கா?

5. 19-ஆம் நூற். வால்ட்டேர், ... காலமெல்லாம் மலையேறிவிட்டது.
* என்ன மலையேறி விட்டது?

மு இளங்கோவன்

unread,
Nov 29, 2009, 8:58:30 PM11/29/09
to மின்தமிழ்
வணக்கம் ஐயா
இந்திய நடுவண் அரசு ஆண்டுக்குச் சமற்கிருத மொழி வளர்ச்சிக்குச் செலவிடும்
தொகை பற்றி தாங்கள் அறிந்தால் அறிவிக்கவும்.
அதுபோல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி,வங்காளம்,மராத்தி
மொழிக்குச்செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?
இதனைத் தெரிந்து எழுதுங்கள்.செலவீட்டுத் தொகையே காட்டும் அதன்
ஆதிக்கத்தை.
அனைத்து மொழிகளும் இந்திய மொழிகள்தானே?
ஏன் ஒரு மொழிக்கு மட்டும் பல நூறு கோடி செலவிடப்படுகிறது.
மற்ற மொழிகளுக்கும் அந்த அளவு வழங்கலாமே.அல்லது பத்தில் ஒரு பங்கு
வழங்கினால் கூட போதுமோ?
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது இதைத்தானா?.
வேறொரு அன்பர் குறிப்பிடுவது போல் செத்தவனுக்குக் கோடிகளை
இரைக்கும்பொழுது உயிரோடு உள்ளவனுக்கும் வழங்குவதுதானே முறை.

உலகப்பல்கலைக்கழகங்களில் சமற்கிருதத்தைஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற பல
பேராசிரியர்கள் தமிழின் சிறப்புணர்ந்து இப்பொழுது சங்க
இலக்கியப்பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனரே அது ஏன்?

பாவாணரைப் பிறநாட்டார் அறியாமல் உள்ளது அவர்களின் பிழையே தவிர,பாவாணர்
பிழை இல்லை.
பாவாணர் நூல்கள் மறுபதிப்புகள் வெளியானபொழுது
சிங்கப்பூர்,மலேசியா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல நூறு தொகுதிகள்
விற்றுத்தீர்ந்தன எப்படி?பாவாணரை அறியாமலா அவர் நூல்களை வாங்கினார்கள்.

devoo

unread,
Nov 29, 2009, 9:35:34 PM11/29/09
to மின்தமிழ்
Nov 30, 6:58 am, மு இளங்கோவன்

//அனைத்து மொழிகளும் இந்திய மொழிகள்தானே?


ஏன் ஒரு மொழிக்கு மட்டும் பல நூறு கோடி செலவிடப்படுகிறது.
மற்ற மொழிகளுக்கும் அந்த அளவு வழங்கலாமே.அல்லது பத்தில் ஒரு பங்கு
வழங்கினால் கூட போதுமோ?
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது இதைத்தானா?.
வேறொரு அன்பர் குறிப்பிடுவது போல் செத்தவனுக்குக் கோடிகளை

இரைக்கும்பொழுது உயிரோடு உள்ளவனுக்கும் வழங்குவதுதானே முறை//

இக்கேள்வியை மைய அரசில் பங்கு வகித்துக்கொண்டு் தமிழில் மட்டுமே
மூச்சுவிடும் திராவிடக் கட்சியிடம் கேட்க வேண்டும்; மின்னரங்கில் கேட்டு
என்ன பயன் ?
வாய்க்கால் வெட்டு்வதற்குக்கூட நம்மிடம் வல்லமை இல்லை.

தேவ்

Vedaprakash

unread,
Nov 29, 2009, 10:07:33 PM11/29/09
to மின்தமிழ்
ஐயா இளங்கோ அவர்களே,

வணக்கம் / நம்ஸ்காரம்!

1. சங்கத்தமிழில் ஆராய்ச்சிசெய்ய தமிழர்களுக்கு எங்கே ஆர்வம் உள்ளது?
[சங்கம் உண்டா இல்லையா என்ற பிரச்சினை வேறு]

2. சரித்திரப்புரம்பான ஆரிய-திராவிட கட்டுக்கதைகளில் கட்டுண்டு குறுகிய
வட்டத்தைச் சதுரமாக்கக் கூட அவர்களால் முடியவில்லையே?

3. செத்தபாடையானப்பிறகு அப்பாடையில் செல்வதற்கும், அப்பாடையை அவதூறு
பேசுவதற்குத் தானே, தாங்களும் இருக்கிறீர்கள்.

4. தமிழ்பாடை தெரிந்தவர்கள் இன்று ஏதோ தமிழ் எங்களுக்குத்தான் தெரியும்.
நாங்கள்தான் தமிழில் வல்லவர்கள், நாங்கள் சொல்வத்தைத்தான் கேட்கவேண்டும்
என்ற நிலையில்தானே இருக்கிறார்கள்?

5. உண்மையான / உண்மையாகத் தமிழ்தெரிந்தவர்களுக்கு தமிழகத்தில்,
தமிழ்நாட்டில், தமிழ்கூறும் நல்லுலகத்தில் [வடவேங்கடத்துத் தென்குமரிகத்
தமிழ்கூறும் நல்லுலத்து], மதிப்பில்லை, மரியாதை இல்லை. ஆனால், முகஸ்துதி
பாடி, காலில் வீழ்ந்து, தமிழே, முத்தமிழே, தமிழின் உயிரே, உயிரின்
நிலையே, நிலையின் எழிலே, எழிலின்
தமிழ்.............................என்றெல்லாம் சொன்னாதால், முத்தமிழ்
ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு
கட்டத்தில் அடைப்பட்டு விட்டது! அந்த செம்மொழிக் கூட்டத்தைப்
பாருங்களேன், அவர்கள்தாமா தமிழ் வளர்க்கப் போகிறார்கள்?

5. திருக்குறளை அவமதிப்புச் செய்தபோது, இன்னும் செய்யும்போது, ஏன்ன
செய்துகொண்டிருந்தான் / கொண்டிருக்கிறான் தமிழன்?

6. தமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தமிழ் என்று பேசுபவரும்,
திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள்,
மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள்,
கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ்,
திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது,
கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட
விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-
முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள்,
மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை
மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட
அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய
பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.

7. மற்றவர்களுக்குத் தமிழ் தெரியாது என நினைப்பது தவறாகக் கருத்து ஆகும்.
அவ்வாறு தெரிந்திருந்தும் நாங்கள் மதிக்கமாட்டொம் என்றால் அதைவிடத்
தவறாகும். அதைத் தவறைத்தான், தமிழ்வெறிபிடித்தவர்கள் [தமிழ்ப் பற்று,
தமிழ்ப் புலமை, தமிழ் சொல்லாடல் என்பது வேறு] செய்துகொண்டிருக்கிறார்கள்.

8. சமீபத்தில் நிகழும் "சிந்துசமவெளி குறியீட்டு"ப் படிப்புகளை,
தீர்வுகளை, விளக்கங்களைப் பாருங்களேன். இதைபற்றி நான் நிறையவே
எழுதியுள்ளதால் இங்கே திரும்ப சொல்வதில் பயனில்லை. எனது விரல்கள்தாம்
வலிக்கும். அதிலும் உள்ளபாடை செத்தப் பாடையா, சாகாத பாடையா என்றுதானே
சண்டைப் போட்டுக் கொண்டுவருகின்றனர்! முடிவாகப் படிக்கவே இல்லை,
அத்ற்கும் அடித்திக் கொண்டு சாகின்றனர், பாடையை அடையாளம் காணும்
விஷயத்தில்!

9. இதனால்தான், ஆஸ்கோ பார்போலவும், மைக்கேல் விட்ஸெலும், ஸ்டீவ்
ஃபார்மரும், பிரியான் வெல்ஸும் [இப்பொழுது புதியதாக வந்துள்ளார், அவரும்
ராமின் நண்பர்போல, மவுண்டு ரோடு மஹாவிஷ்ணு அதிகமாகவே செல்லம்
கொடுக்கிறது] தமிழரை, இந்தியரை ஆட்டிப் படைக்கிப்ன்றனர். சுப்பராயலு
இருந்தென்ன, செப்பானியர்கள் சப்பவைத்துவிட்டனரே? கண்டிகைப்பேரூரும் பொய்
என்றபோது, எந்த தமிழனுக்கும் ரோஷம் வரவில்லையே?

10. தாங்களும் அதே மாயையில் கட்டுண்டுள்ளீர். அறிஞகள், ஆராய்சியாளர்கள்
எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும் "குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது",
"அரைத்த மாவையே அரைப்பது".........................முதலியனவெல்லாம்
எடுபடாது.

உம்............................................அலுவகத்திற்கு
நேரமாகிவிட்டது!

தொடருவோமாக!

Kumaran Malli

unread,
Nov 29, 2009, 10:08:50 PM11/29/09
to mint...@googlegroups.com
//என்னய்யா கதை சொல்லியிருக்கிறார்கள்?//
 
??
 
இது மரியாதை விளியா? எரிச்சலில் ஏற்பட்ட மரியாதைக்குறைவான விளியா? புரியவில்லை வேதபிரகாஷ் ஐயா.
 
மரியாதை விளியாக எனக்குத் தோன்றாததால் இதோ என் எதிர்வினைகள்; எதிரிவினைகள் இல்லை!
 
'மின் தமிழ்' என்ற பெயர் கொண்டுள்ள இந்த குழுமத்தில் பாவாணரை ஒருமையிலும் தமிழைப் போற்றுவாரை தாலிபான் என்றும் பல முறை சொல்லும் அன்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களை யாரேனும் இங்கே ஒருமையிலோ மரியாதைக்குறைவாகவோ விளித்தார்களா? இப்போது கணேசன் ஐயா சொன்ன கருத்திற்கு இந்த எரிச்சல் மிகுந்த மரியாதைக் குறைவான எதிர்வினை ஏன்? இது 'மின் தமிழ்' குழுமமா 'மின் சமஸ்கிருதம்' குழுமமா? சமஸ்கிருதம் தமிழ்மரபின் ஒரு பகுதி என்பதில் எனக்கு எதிர் கருத்தில்லை. அதனால் செங்கிருதத்தைப் போற்றி இந்த 'மின் தமிழ்' அரங்கத்தில் பேச்சு வந்தால் படித்து விட்டுச் செல்கிறேன். நானே செங்கிருதப் பனுவல்களின் வரிகளை இந்த அரங்கத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் செங்கிருதத்தைப் பற்றி ஒரு கருத்தினை இந்த 'மின் தமிழ்' அரங்கத்தில் ஒருவர் கூற, அதுவும் மரியாதைக்குரிய ஒருவர் கூற, இன்னொரு மரியாதைக்குரிய அன்பர் மரியாதையின்றி எதிர்வினை செய்வதைக் காண பொறுக்கவில்லை. என்னை மன்னிக்கவும்.
 
இதனை, மரியாதை விளியாகத் தான் எழுதினீர்கள் என்றால் இந்த மடையனை மன்னித்துக் கொள்ளுங்கள்.
 
அன்பன்,
குமரன் (என்னும் சௌராஷ்ட்ர மொழி பேசும் தமிழன்).
 

 

Vedaprakash

unread,
Nov 29, 2009, 10:21:32 PM11/29/09
to மின்தமிழ்
1. உண்மையில் எனக்கு சந்தோஷம்தான், ஏனெனில் எனக்கு நிறைய விஷயங்களைத்
தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை.

2. இதற்கு விளக்கம் வேண்டுமானால் மாலையில் தருகிறேன்.

3. பிரச்சினை சமஸ்கிருதம்-தமிழ் என்றால் ஆராய்ச்சி செய்யமுடியாது.

4. திரு. கணேசனைப் பொறுத்தவரைக்கும் மற்ற காஞ்சிபுரம், முதலிய மற்ற
பிரச்சினைகளை எழுப்பியுள்ளதால் அதனையும் விவாதிக்க வேண்டியுள்ளது [மற்ற
இழைகளைப் பார்க்கவும். சில இன்டோ- யுரேஸியாவிலும் உள்ளது, முன்னமே
குறிப்பிட்டதுபோல].

devoo

unread,
Nov 29, 2009, 11:06:50 PM11/29/09
to மின்தமிழ்
Nov 30, 6:58 am, மு இளங்கோவன்
//உலகப் பல்கலைக்கழகங்களில் சமற்கிருதத்தை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற

பல
பேராசிரியர்கள் தமிழின் சிறப்புணர்ந்து இப்பொழுது சங்க
இலக்கியப்பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனரே அது ஏன்?//

இது வரவேற்கத்தக்க முன்னேற்றம்தானே ! தமிழ் ஆதிக்கம் செலுத்துகிறது என்று
எந்த மொழியினரும் கூக்குரல் எழுப்பவில்லையே.யாரோ செய்யும் வடமொழி ஆய்வு
ஒரு சிலரை மட்டும் ஏன் புண்படுத்த வேண்டும்?
இதற்கான உளவியல் காரணம் என்ன என்பதுதான் புரியவில்லை.

தேவ்

N. Kannan

unread,
Nov 30, 2009, 1:48:39 AM11/30/09
to mint...@googlegroups.com
குமரன்:

ஒரு முக்கியமான விளக்கம் இங்கு தேவை.

//இது 'மின் தமிழ்' குழுமமா 'மின் சமஸ்கிருதம்' குழுமமா? //

என்று கேட்டு விட்டதால் சொல்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளை பிரக்ஞை பூர்வமாக தமிழுக்காக உருவான அறக்கட்டளை.
சமிஸ்கிருதத்திற்கு மத்திய அரசு ஆதரவு உண்டு என்று தெரியும். தமிழ்,
தமிழ் என்று பேசுவோரும் சமயம் கிடைக்கும் போது தமிழை அம்போ என்று ஆற்றில்
விட்டுவிடுவர் என அறிவோம். தமிழ் சோணிப்பிள்ளையாக இருக்கிறதே என்றுதான்
அப்படி பெயர் சூட்டினோம். உண்மையில் தென்னாசிய பண்பாட்டு அறக்கட்டளை
என்று மாற்றினால் சர்வதேச, இந்திய நிதி உதவி எளிதில் கிடைக்கும் என்று
எங்களுக்கு பல வெளிநாட்டுக் கல்வியாளர்கள் அறிவுறுத்தினர். ஆயினும்
தமிழின் பால் ஆசையால் பெயரை மாற்றவில்லை.

மின்தமிழ் உரையாடல்கள் தமிழனின் மன அழுக்கை போக்கி அவனை ஆரோக்கியமாக
வைத்திருக்க உதவ வேண்டும் என்பதும் ஒரு முக்கிய நோக்கு. எனவே இங்கு இன
வெறி, மொழி வெறி, தேசிய வெறி வெறுக்கப்படுகிறது. எந்த வெறியாக
இருந்தாலும் அது வளர்ச்சிக்கு குந்தகமே விளைவிக்கும் என்று உணர வேண்டும்.

இங்கு வந்துள்ள பல புதியவர்களுக்கு நமது நோக்கங்கள், நாம் யார்
என்றெல்லாம் தெரியாமல் சாதாரண மடலாடல் குழுமம் போல் வந்து கும்மி
அடிக்கிறார்கள். பல நேரங்களில் திசை மாற்றி கடத்திக் கொண்டு
போகப்பார்க்கிறார்கள். இவர்களை இனம் கண்டு மட்டுறுத்த நாம் எப்போதும்
தயாராக உள்ளோம்.

எனவே உமது ஆரோக்கியமான 'இணைய நளினம்' பற்றிய குறிப்பு இங்கு பாராட்டப்படுகிறது!

கண்ணன்

2009/11/30 Kumaran Malli <kumara...@gmail.com>:

மு இளங்கோவன்

unread,
Nov 30, 2009, 2:59:30 AM11/30/09
to மின்தமிழ்
வடமொழி வல்லாண்மை பற்றியும்,தமிழின் சிறப்பு,பாவாணரின் ஆய்வுகள்
பற்றியும் எழுதிய என் கருத்துகளை விட்டுவிட்டு இழைக்குத் தொடர்பில்லா
செய்திகளை எழுதுவதுடன் பாடையில் போவது பற்றி ஆர்வப்படும் உம்முடன்
உரையாடுவதில் ஆய்வு நாகரிகமுடையவர்கள்
ஈடுபடுவது வீண்வேலை என அறிகிறேன்.(இரட்டுற மொழிதல்,சிலேடை பற்றி யானும்
அறிவேன்)
தக்க இடங்களில் இது பற்றி எழுதுவேன்.

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 3:09:32 AM11/30/09
to மின்தமிழ்
On 30 Nov, 03:08, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
> 'மின் தமிழ்' என்ற பெயர் கொண்டுள்ள இந்த குழுமத்தில் பாவாணரை ஒருமையிலும்
> தமிழைப் போற்றுவாரை தாலிபான் என்றும் பல

திரு முகரன் மல்லி

யாரை நான் தாலிபான் என்றழைக்கிறேன் என்பதை , சற்றி நிதானாமாக படித்து,
யோசித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் புரிதல் சரி இல்லை.


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Nov 30, 2009, 3:33:00 AM11/30/09
to mint...@googlegroups.com
விஜயராகவன் அவர்களின் எழுத்துக்கள் இங்கு மட்டுறுத்தப்பட வேண்டும் அல்லது தடை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
சிறீதரன்

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 4:02:03 AM11/30/09
to மின்தமிழ்
Correction: It must be Kumar Malli in Tamil. Writing in a hurry, K and
M got transposed

Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 4:11:26 AM11/30/09
to மின்தமிழ்
On 30 Nov, 03:08, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> மரியாதைக் குறைவான எதிர்வினை ஏன்? இது 'மின் தமிழ்' குழுமமா 'மின் சமஸ்கிருதம்'
> குழுமமா? சமஸ்கிருதம் தமிழ்மரபின் ஒரு பகுதி என்பதில் எனக்கு எதிர்
> கருத்தில்லை.

Thiru Kumaran

My understanding is that this is forum for all Marabu of Tamils. Close
connection with Sanskrit (that some people decry it is another matter)
is one of the marabus of Tamils. Therfeore occasionally talking about
Sanskrit would not be out of palce here.

In fact, as a Sowrastrian Tamil , we (I in any case) would be
interested about Sowrastrian lore and legends in Tamilnadu. What about
the language and scripts used by the sowrastrian community?


Vijayaraghavan

devoo

unread,
Nov 30, 2009, 6:00:38 AM11/30/09
to மின்தமிழ்
திரு குமரன் அவர்களே,

"சமஸ்கிருதம் தமிழ்மரபின் ஒரு பகுதி என்பதில் எனக்கு எதிர் கருத்தில்லை"

என்று திறந்த மனத்துடன் ஒப்புக்கொள்ளும் தாங்கள் "இது 'மின் தமிழ்'


குழுமமா 'மின் சமஸ்கிருதம்'

குழுமமா?"என்றும் வினவுகிறீர்கள். மரபின் பகுதியான வடமொழி பற்றி இங்கு
எழுதக் கூடாதா?

சுந்தரனார் தாம் இயற்றிய அழகிய காப்பியத்திற்கு ‘மனோன்மணீயம்’ எனும்
அழகிய
வடமொழித்தலைப்புக் கொடுத்தார்.அவர்தம் மனத்தைக் கவர்ந்த கோடகநல்லூர்
சுந்தர சுவாமிகளையும் சுந்தர முனிவர் என்னும் பாத்திரமாக
அமைத்தார்.கிரந்த எழுத்தையும் ஒதுக்கினாரில்லை.அவர்தம் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடல் மேடைகளில் முதலில் முழங்குவது.

மனோன்மணீயத்தின் ஒரு சிறு பகுதி இங்கு -

[ஜீவகன் வர]
யாவரும்: (தொழுது)
ஜய! ஜய! விஜயீபவ! ராஜேந்திரா!!

[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவ ராஜேந்திரா!!

ஜீவகன்:வருக! வருக! குரு கிருபாநிதே!!

சுந்தர:இந்நகருளாரும் யாவரும் க்ஷேமம்?

*****************

ஆரியம்,ஆன்மிகம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்பது நீங்கள் அறியாததா ?
தமிழிலிருந்து இவற்றைக் கழற்றி எறிந்து விட்டால் என்ன எஞ்சும் ?


தேவ்

N. Kannan

unread,
Nov 30, 2009, 6:14:03 AM11/30/09
to mint...@googlegroups.com
அன்பின் விஜயராகவன்:

இனிமேல் தயவுசெய்து இந்த `தாலிபான்` வசனம் வேண்டாம்.

நமக்கு யாரும் பகையில்லை. எல்லோரும் திருந்தி நல்லிணக்கம் கொள்ள வேண்டும்
என்பதே நமது குறிக்கோள். எந்த இயக்கமெனினும் அதில் தீவிர, மிதவாதிகள்
இருப்பது இயல்பு. தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக அப்படி இருக்கலாம்.
காலம் எல்லோரையும் மாற்றும். மாங்காயை அரிசிப் பானையில் வைத்தால்
கனிந்துவிடும். அடித்துக் கனிய வைக்க முடியுமா?

இந்தக் கிரந்தக் குழப்பத்தை இத்தோடு விடுவோம். இன்னும் ஆரோக்கியமாக பேச
நிறைய உள்ளது.

தமிழ் விக்கிபீடியா வளர வேண்டிய ஒரு முயற்சி. மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்கும் என்று வாழ்த்தி அமைதி அடையுங்கள்.

சாத்வீகி குமரனே கிளம்பிவிட்டார் எனில், எங்கோ பிழை இருக்க வாய்ப்புண்டு ;-)

கண்ணன்

2009/11/30 விஜயராகவன் <vij...@gmail.com>:


>
> யாரை நான்  தாலிபான் என்றழைக்கிறேன் என்பதை , சற்றி நிதானாமாக படித்து,
> யோசித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் புரிதல் சரி இல்லை.
>
>
> விஜயராகவன்

விஜயராகவன் அவர்களின் எழுத்துக்கள் இங்கு மட்டுறுத்தப்பட வேண்டும் அல்லது

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 7:06:56 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 devoo <rde...@gmail.com>
 திரு குமரன் அவர்களே,


ஆரியம்,ஆன்மிகம் ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்பது நீங்கள் அறியாததா ?
தமிழிலிருந்து இவற்றைக் கழற்றி எறிந்து விட்டால் என்ன எஞ்சும் ?


மனோன்மணீயம் நான் பிஏ படிக்கும் காலத்தில் ஒரு தனி பேப்பராகவே இருந்தது.  பாதிக்கு மேல் மனப்பாடம்.  இதோ இன்னொரு இடம்

புரு:(தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்று கண்டது போல்.
எத்தனை முகத்திடைத் தத்தறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
[குடிலன் எதிர்வர]
(குடிலனை நோக்கி)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தக்க்ஷணம்!

 தமிழ சூப்பரா இருககில்ல?  அத்தனை செங்கிருத வெறுப்புக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்களில் இவரும் ஒருவர்.  ம்ம்?


--
அன்புடன்,
ஹரிகி.

Kumaran Malli

unread,
Nov 30, 2009, 7:13:49 AM11/30/09
to mint...@googlegroups.com

திரு.விஜயராகவன் ஐயா,

என் பெயரைச் சிதைத்துத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறீர்களா? இது தட்டச்சுப் பிழை என்றே எண்ண விரும்புகிறேன். இல்லை வேண்டுமென்றே செய்தீர்கள் என்றால் என் மேல் எந்த வெறுப்பும் வேண்டாம்; நீங்கள் எதிரி என்று எண்ணிக் கொள்பவர்களில் இந்த எளியவன் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்வேன்.

என் புரிதல் தவறாகவே இருக்கட்டும். என்னையும் நீங்கள் தாலிபான் என்று குறித்தாலும் என் பெயரினைச் சிதைத்து என்னை விளித்தாலும் உங்களை மரியாதைக் குறைவாக விளிக்க மாட்டேன்.

அன்பன்,
குமரன்.

2009/11/30 விஜயராகவன் <vij...@gmail.com>
On 30 Nov, 03:08, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:

Kumaran Malli

unread,
Nov 30, 2009, 7:14:56 AM11/30/09
to mint...@googlegroups.com
Thanks for the clarification Sri. Vijayaraghavan.

2009/11/30 விஜயராகவன் <vij...@gmail.com>
Correction: It must be Kumar Malli in Tamil. Writing in a hurry, K and

Kumaran Malli

unread,
Nov 30, 2009, 7:23:51 AM11/30/09
to mint...@googlegroups.com

ஐயா.

வடமொழி தமிழ் மரபின் ஒரு பகுதி என்பதும் தமிழ் வடமொழி மரபின் ஒரு பகுதி என்பதும் இவ்விரு மொழிகளும் மற்ற மொழிகளும் இந்திய மரபின் பிரியா பகுதிகள் என்பதும் எனக்கு ஏற்புடைய கருத்துகளே; அவற்றுக்கிடையே சில வேற்றுமைகளும் உண்டு. அவற்றை எல்லாம் இங்கே பேசுவதைப் படித்து நிறைய தெரிந்து கொள்ளும் ஆவலும் உண்டு. அதுவே இங்கு சில நேரங்களில் நடக்கும் கும்மிகளையும் பொறுத்துக் கொண்டு செல்ல வைக்கிறது. என் எதிர்வினை மரியாதைக் குறைவிற்கும் மாற்றுக் குழுவினரைத் தாழ்த்திச் சாடுவதற்கும் அவர்கள் மதிப்பவரை ஒருமையில் விளிப்பதற்கும் எதிரானவையே அன்றி அவர்கள் கருத்திற்கு எதிரான கருத்துப் போரைப் பற்றி இல்லை. கருத்திற்கு எதிரான கருத்துப் போரே நம் முன்னோர் செய்த வாதப்போர்கள். ஆட்களுக்கு எதிராக எதிர் அணியினர் பேசினாலும் செய்தாலும் நம் முன்னோர் மரபு உணர்ந்தவர்கள் அதனைச் செய்யாமல் இருக்க வேண்டும். இல்லையேல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் மரபு என்று சொல்லிக்கொள்வது வெறும் பீற்றிக்கொள்ளுதலாகவே வெளியாருக்குத் தெரியும்!
 
சௌராட்டிரத்தைப் பற்றி மின் வெளியில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. மின் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. கூகிளாண்டவர் துணை.  :-)
 

அன்பன்,
குமரன்.

2009/11/30 விஜயராகவன் <vij...@gmail.com>
On 30 Nov, 03:08, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:

Kumaran Malli

unread,
Nov 30, 2009, 7:25:20 AM11/30/09
to mint...@googlegroups.com

திரு. தேவ் ஐயா.

அடியேனின் எதிர்வினை எதைப் பற்றியது என்பதை மேலே திரு.விஜயராகவன் ஐயாவிற்கு எழுதிய மறுமொழியில் சொல்லியிருக்கிறேன்.

அன்பன்,
குமரன்.

2009/11/30 devoo <rde...@gmail.com>

Kumaran Malli

unread,
Nov 30, 2009, 7:26:32 AM11/30/09
to mint...@googlegroups.com
நன்றி கண்ணன் ஐயா.

2009/11/30 N. Kannan <navan...@gmail.com>

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 12:38:21 PM11/30/09
to மின்தமிழ்
On 30 Nov, 12:23, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
என் எதிர்வினை மரியாதைக் குறைவிற்கும் மாற்றுக் குழுவினரைத்
> தாழ்த்திச் சாடுவதற்கும் அவர்கள் மதிப்பவரை ஒருமையில் விளிப்பதற்கும்
> எதிரானவையே அன்றி அவர்கள் கருத்திற்கு எதிரான கருத்துப் போரைப் பற்றி இல்லை.

திரு குமரன்

நீங்கள் சுத்தி வளைத்து சொல்கின்றீர். எனக்கு தெரிந்து இங்கு யாரும்,


மாற்றுக் குழுவினரைத்

தாழ்த்திச் சாடுவது அவர்கள் மதிப்பவரை ஒருமையில் விளிப்பது என்பதை
செய்யவில்லை. உதாரணங்கள் கூட உடனே எழுதினால், நீங்கள் சொல்வது புரியும்.
உதாரணமில்லாமல், நீங்கள் இல்லாத பிரச்சினையை கற்பனை செய்வது போல் உள்ளது


விஜயராகவன்


> கருத்திற்கு எதிரான கருத்துப் போரே நம் முன்னோர் செய்த வாதப்போர்கள்.
> ஆட்களுக்கு எதிராக எதிர் அணியினர் பேசினாலும் செய்தாலும் நம் முன்னோர் மரபு
> உணர்ந்தவர்கள் அதனைச் செய்யாமல் இருக்க வேண்டும். இல்லையேல் வேற்றுமையில்
> ஒற்றுமை காண்பதே நம் மரபு என்று சொல்லிக்கொள்வது வெறும் பீற்றிக்கொள்ளுதலாகவே
> வெளியாருக்குத் தெரியும்!
>
> சௌராட்டிரத்தைப் பற்றி மின் வெளியில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. மின்
> தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. கூகிளாண்டவர் துணை.  :-)
>
> அன்பன்,
> குமரன்.
>

> 2009/11/30 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
> > On 30 Nov, 03:08, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> > > மரியாதைக் குறைவான எதிர்வினை ஏன்? இது 'மின் தமிழ்' குழுமமா 'மின்
> > சமஸ்கிருதம்'
> > > குழுமமா? சமஸ்கிருதம் தமிழ்மரபின் ஒரு பகுதி என்பதில் எனக்கு எதிர்
> > > கருத்தில்லை.
>
> > Thiru Kumaran
>
> > My understanding is that this is forum for all Marabu of Tamils. Close
> > connection with Sanskrit (that some people decry it is another matter)
> > is one of the marabus of Tamils. Therfeore occasionally talking about
> > Sanskrit would not be out of palce here.
>
> > In fact, as a Sowrastrian Tamil , we (I in any case) would be
> > interested about Sowrastrian lore and legends in Tamilnadu. What about
> > the language and scripts used by the sowrastrian community?
>

> > Vijayaraghavan- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 1:00:05 PM11/30/09
to மின்தமிழ்
On 30 Nov, 01:58, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
>
> உலகப்பல்கலைக்கழகங்களில் சமற்கிருதத்தைஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற பல
> பேராசிரியர்கள் தமிழின் சிறப்புணர்ந்து இப்பொழுது சங்க
> இலக்கியப்பதிப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ளனரே அது ஏன்?


இதை விளக்குவது சுலபம். சம்ஸ்கிருதத்தை 200 அண்டுகள் மேலாக
நூத்துக்கணக்கானா மொழி ஆய்வாளர்கள் புரட்டி போட்டு விட்டார்கள். அந்த
துறையில் கூட்டம் அதிகம், புது ஆயவு தலைப்புகளும் குறைந்து வருகின்றனர்.
அதனால் ஆய்வாளர்களுக்கு புது ஆய்வுகள் செய்ய, மற்றவர்கள் பெரும் அளவில்
படிக்காததை எடுத்து ஆய்வுகள் செய்ய வேண்டும் . இதைத்தான் ஆங்கிலத்தில்
Business Diversification Strategy என்பர். அதனால்தான் இன்னும் மேலை
ஆய்வாளர்கள் தமிழ் படிக்கின்றனர்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தியா உலக பொருளாதார ஏணியில் ஏற, ஏற
உலக பல்கலை கழகங்கள் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் பணம்
செலவிடுகின்றன. அதனால்தான் அதிக தமிழ் ஆய்வாளர்கள். தமிழ்நாடு பொருளாதார
யானையாகி விட்டால், இன்னும் பலர் தமிழை படிப்பர்.


உலகம் தமிழில் ஆர்வம் எடுக்கும் அளவு, தமிழ்நாடின் பொருளாதார
வளர்ச்சியில் உள்ளது.


விஜயராகவன்

> பாவாணரைப் பிறநாட்டார் அறியாமல் உள்ளது அவர்களின் பிழையே தவிர,பாவாணர்
> பிழை இல்லை.


வெளி உலகம் பாவாணரைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூட கவலைப்படுவதில்லை, அது
அவர்கள் `பிழை` அல்ல.

> பாவாணர் நூல்கள் மறுபதிப்புகள் வெளியானபொழுது
> சிங்கப்பூர்,மலேசியா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல நூறு தொகுதிகள்
> விற்றுத்தீர்ந்தன எப்படி?பாவாணரை அறியாமலா அவர் நூல்களை வாங்கினார்கள்.
> மு.இளங்கோவன்
> புதுச்சேரி


அதை யார் வாங்கினார்கள்? அங்குள்ள தமிழர்களா? அங்குள்ள பலகலைக் கழகங்களா?
அல்லது தமிழ் தெரியாத வெளீநாட்டவரா?


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Nov 30, 2009, 4:41:57 PM11/30/09
to மின்தமிழ்
அன்பின் கண்ணன்

இது உங்கள் தளம், அதனால் உங்களுக்கு பாதகம் வரக்கூடாது. அதனால் நீங்கள்
`தாலிபான்` வசனம் வேண்டாமென்றால் சரி . ஆனால் நீங்கள் சொல்வது “தமிழ்


விக்கிபீடியா வளர வேண்டிய ஒரு முயற்சி. மாற்றான் தோட்டத்து மல்லிகையும்

மணக்கும் ....” என்பது தவறு. தமிழ்விக்கி யாருடைய சொந்த தோட்டமும் இல்லை.
அது திறந்த வெளி. ஊர் மைதானம் போல். மைதானங்களாவது நகர அதிகாரிகள்
ஆதிக்கத்தில் உள்ளன, எல்லோம் பங்களிக்க உரிமை உள்ள இடத்தில் சிலர் அடாவடி
பிடிப்பதை தான் சுட்டிக்காட்டினேன். உங்கள் எழுத்து உரிமைகளை விட்டு
விடாதீர்கள்

`கிரந்த குழப்பம்`. என்பது என்றைக்கும் இல்லை. சாத்வீகி குமார் நான்
யாரை, ஏன் தலிபான் என அழைத்தேன் என படிப்பார், சிந்திப்பார் என
நம்புகிறேன். சா.கு. உதவிக்கு இன்னொரு லிங்கையும் தருகிறேன்

http://groups.google.co.uk/group/tamilmanram/browse_thread/thread/8bbceac848e8383e/d0e45ccf2376ef46?hl=en&lnk=gst&q=vijayaraghavan#d0e45ccf2376ef46


மதிப்புடன்

விஜயராகவன்

On 30 Nov, 11:14, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் விஜயராகவன்:
>
> இனிமேல் தயவுசெய்து இந்த `தாலிபான்` வசனம் வேண்டாம்.
>
> நமக்கு யாரும் பகையில்லை. எல்லோரும் திருந்தி நல்லிணக்கம் கொள்ள வேண்டும்
> என்பதே நமது குறிக்கோள். எந்த இயக்கமெனினும் அதில் தீவிர, மிதவாதிகள்
> இருப்பது இயல்பு. தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக அப்படி இருக்கலாம்.
> காலம் எல்லோரையும் மாற்றும். மாங்காயை அரிசிப் பானையில் வைத்தால்
> கனிந்துவிடும். அடித்துக் கனிய வைக்க முடியுமா?
>
> இந்தக் கிரந்தக் குழப்பத்தை இத்தோடு விடுவோம். இன்னும் ஆரோக்கியமாக பேச
> நிறைய உள்ளது.
>
> தமிழ் விக்கிபீடியா வளர வேண்டிய ஒரு முயற்சி. மாற்றான் தோட்டத்து
> மல்லிகையும் மணக்கும் என்று வாழ்த்தி அமைதி அடையுங்கள்.
>
> சாத்வீகி குமரனே கிளம்பிவிட்டார் எனில், எங்கோ பிழை இருக்க வாய்ப்புண்டு ;-)
>
> கண்ணன்
>

> 2009/11/30 விஜயராகவன் <viji...@gmail.com>:

Vedaprakash

unread,
Nov 30, 2009, 8:33:12 PM11/30/09
to மின்தமிழ்
1. “இங்கிலாந்தில் ஒரு பள்ளி சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கி உள்ளது!”
என்று ஒருவரியைத்தான் நான் தமிழில் போட்டேன். ஆனால், இவ்வளவு விவாதம்
ஏற்பட்டது கண்டு வருந்துகிறேன்.

2. உடனே திரு/ஸ்ரீமான் கணேசன்,
i. “நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.
ii. பிரின்சிபால் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்
தாய் என்று சொல்கிறார்.
iii. இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்


பேராசிரியர்களிடம் சொன்னால் நகைப்பதைக் காணலாம்.

iv. 19-ஆம் நூற். வால்ட்டேர், ...
காலமெல்லாம் மலையேறிவிட்டது.” என்றதால்தான், நான் கேள்விகள்
கேட்கவேண்டியதாகிவிட்டது.

“Aryans and British India” by Thomas Trumann – 2004 போன்ற புத்தகங்கள்
வெளிவருவது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்! விட்ஸெல்
முதலியோருடைய புத்தகங்கள் வேறு 2009, 2010ல் வரப்போகின்றன! எல்லாமே அதே
“நிறையக் கதைகள்” பற்றிதான்!

3. முனைவர் இளங்கோ குறிப்பிட்டது, “வேறொரு அன்பர் குறிப்பிடுவது போல்


செத்தவனுக்குக் கோடிகளை இரைக்கும்பொழுது உயிரோடு உள்ளவனுக்கும்

வழங்குவதுதானே முறை”. என்று குறிப்பிட்டதில் “செத்தவன்”, உயிரோடு
உள்ளவன்” என்று ஏகவசனத்தில் குறிப்பிட்டது, அரேபிய மொழியோ, பாரசீக மொழியோ
இல்லையே? “செத்தவன்” – சம்ஸ்கிருதம் மற்றும் “உயிரோடு உள்ளவன்” தமிழ்
என்று நான் புரிந்துகொண்டது தவறு என்றால், நான் தாராளமாக எனது தவறைத்
திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

4. “பாஷை” என்ற சொல்லை “பாடை” என்று சொல்ல / எழுத வேண்டும் என்று
எனக்குத் தெரிந்ததே “திராவிட சித்தாந்திகள்” மூலம்தான். ஆகையால்
“செத்தவன்”, உயிரோடு உள்ளவன்” என்றதும், அந்த வார்த்தையை பிரயோகித்தேன்!

5. உடனே, “குமரன் மல்லி” எட்ன்பவர், இவ்வாறு கேட்டார்:

Kumaran Malli View profile

More options Nov 30, 8:08 am
From: Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
Date: Sun, 29 Nov 2009 21:08:50 -0600
Local: Mon, Nov 30 2009 8:08 am
Subject: Re: [MinTamil] Re: இங்கிலாந்தில் ஒரு பள்ளி சமஸ்கிருதத்தை
கட்டாயப் பாடமாக்கி உள்ளது!
Reply | Reply to author | Forward | Print | Individual message | Show
original | Report this message | Find messages by this author


//என்னய்யா கதை சொல்லியிருக்கிறார்கள்?//
??
இது மரியாதை விளியா? எரிச்சலில் ஏற்பட்ட மரியாதைக்குறைவான விளியா?
புரியவில்லை
வேதபிரகாஷ் ஐயா.
மரியாதை விளியாக எனக்குத் தோன்றாததால் இதோ என் எதிர்வினைகள்;
எதிரிவினைகள்
இல்லை!

“அவர் வேதபிரகாஷ் ஐயா” என்று விளித்துள்ளதால், நான் பதில் சொல்லியாக
வேண்டும். அவசரத்தில் ஒரு சிறிய பதிலையிட்டுவிட்டேன் உடனடியாக,
“உண்மையில் எனக்கு சந்தோஷம்தான், ஏனெனில் எனக்கு நிறைய விஷயங்களைத்
தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை”. அதாவது, ஆராய்ச்சியில் எனக்கு
எரிச்சலும் இல்லை, மரியாதைக்குறைவான விளியும் இல்லை. ஆனால், கணேசன்தான்
முன்மாதிரியே மௌனம் காக்கிறார். அதனால் விஷயங்களை அறிந்து
கொள்ளமுஇடியவில்லை.

6. அதற்குள், “இழைக்குத் தொடர்பில்லா செய்திகளை எழுதுவதுடன் பாடையில்


போவது பற்றி ஆர்வப்படும் உம்முடன் உரையாடுவதில் ஆய்வு நாகரிகமுடையவர்கள்

ஈடுபடுவது வீண்வேலை என அறிகிறேன். (இரட்டுற மொழிதல்,சிலேடை பற்றி யானும்
அறிவேன்) தக்க இடங்களில் இது பற்றி எழுதுவேன். மு.இளங்கோவன்,
புதுச்சேரி”, என்று மேலும் ஒரு பதில்.

முன்பே அளவிற்கு அதிகமாக, “………செத்தவனுக்குக் கோடிகளை இரைக்கும்பொழுது
உயிரோடு உள்ளவனுக்கும் வழங்குவதுதானே முறை”, என்று கேட்டுவிட்டு [மேலே 3,
4 பார்க்கவும்],

1. தொடர்பில்லா செய்திகளை எழுதுவதுடன்
2. பாடையில் போவது பற்றி ஆர்வப்படும்
3. உம்முடன் உரையாடுவதில்
4. ஆய்வு நாகரிகமுடையவர்கள் ஈடுபடுவது
5. வீண்வேலை என அறிகிறேன்.
6. இரட்டுற மொழிதல்,சிலேடை பற்றி யானும்
அறிவேன்)
7. தக்க இடங்களில் இது பற்றி எழுதுவேன்

இதெல்லாம் என்ன?

இதற்கு யாராவது வந்து எனக்குப் புரியவைக்கவேண்டுமா?

போதாகுறைக்கு, "செங்கிருதம்", "கிராந்தம்" என்றெல்லாம் வேற [இது எனக்கு
சத்தியமாகப் புரியவில்லை].

என்னாலும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பதில்
அளிக்கமுடியும்.

இருந்தாலும் அமைதி காக்கவே விரும்புகிறேன்.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

7. தமிழ்-சமஸ்கிருதம் என்ற வேறுபாடு, சமஸ்கிருத எதிர்ப்பு, அவதூறு,
தூஷணம் என்று ஒரு பண்டிதர், ஆராய்ச்சியாளர், மொழியியல் வல்லுனர் ரீதியில்
எண்ணங்களைக் கொட்டினால், அதனை மற்றவர் அறிவது எளிதேயாகும்.
திருநாவுக்கரசர், சிவனை “ஆரியன்” என்று சொன்னபோது, திராவிட-இன வெறியோடு
சொன்னாரா?
"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்……………………… அண்ணாமலையுறையெம் மண்ணல்
கண்டாய்" (தேவாரம்.6 ப. 23 பா.5);
"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (தேவா. 844 : 5)
தமிழோடு ஆரியனை அப்வ்வாறு இணைத்தபோது “இனவெறி” கொண்டாரா?
"செந்தமிழோ டாரியனைச் சீரி யானை" (திருமுறை.6 ப.46 பா.10)
இல்லை ஐயா, இல்லை.
i. அதனால்தான் ஆரியந்திராவிடன், ஆரியம்-
திராவிடம் என்று வேறுபடுத்து இனவெறி-மொழிவெறி ஊட்டுவது, காப்பது,
மக்களைப் பிரிப்பது மாபெரும் மனிதத் தவறாகும், குற்றமாகும்.
ii. சரித்திர ஆசிரியர்களே அத்தகையவற்றை
“கட்டுக் கதைகள்” என்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டபிறகு ஏன் அதை
ஆராய்ச்சியாளர்கள் பிடித்துக் கொண்டு வாதிடவேண்டும், சண்டையிடவேண்டும்?
iii. ஆய்வாளர், ஆராய்சியாளர், பேராளர்,
முனைவர், பண்டிதர் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர் அவ்வாறு தொடர்ந்து
அவதூறு, தூஷணம், முதலியவற்றைச் செய்ய்ம் போது, நிச்சயம் எடுத்துக் காட்ட
வேண்டியதுள்ளது. கண்டிக்கவும் வேண்டியுள்ளது.

ஆதாரங்களுடன் வாதிடலாம், அப்பொழுது ஒருவர் சொன்னது தவறு என்று
தெரியும்போதுத் திருத்திக் கொள்ளலாம், அறியாததை மற்றவரிடத்திலிருந்து
தெரிந்து கொள்ளலாம். இவ்வாறுதான் ஆராய்ச்சி செல்லும் என்று எனது
தாழ்மையான அனுபவம்.

வேதபிரகாஷ்
01-11-2009.


N. Ganesan

unread,
Nov 30, 2009, 11:32:59 PM11/30/09
to மின்தமிழ்
On Nov 29, 6:46 pm, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
NG> 5. 19-ஆம் நூற். வால்ட்டேர், ... காலமெல்லாம் மலையேறிவிட்டது.

> * என்ன மலையேறி விட்டது?

வால்ட்டேர் காலத்தில் இருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய
அறிவு வேறு. இன்றைய அறிவு வேறு. அப்பொழுது கங்கைக்
கரை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாய்பீடம் என்று கருதப்பட்டது.
பல பத்தாண்டுகளாய் இக்கருத்து மாறிவிட்டது. இன்று
இந்தோ-ஐரோப்பிய மொழியறிஞர் யாரும் சம்ஸ்கிருதம் அம்மொழிகளின்
தாய் என்று கூறுவதில்லை.

$ சாமியார் நடுநிலைப் பள்ளியில் வேண்டுமானால் ஒரு ஆசிரியர்
சொல்லலாம்.

Maurice Olender
The Languages of Paradise: Race, Religion, and Philology in the
Nineteenth Century
Translated from French by Arthur Goldhammer (French-American
Translation Prize in 1990)
- நினைவுக்கு வந்ததால் கூறினேன். படித்துப் பாருங்கள்.

நா. கணேசன்

devoo

unread,
Nov 30, 2009, 11:35:34 PM11/30/09
to மின்தமிழ்
Nov 29, 7:53 pm, devoo
//நம்மிடம் பன்முகத்தன்மையும்,ஆற்றலும் இருந்தால் தமிழ் பரவலாகும். //

Nov 30, 11:00 pm, விஜயராகவன்

//இந்தியா உலக பொருளாதார ஏணியில் ஏற, ஏற உலக பல்கலை கழகங்கள் இந்தியாவை


பற்றி தெரிந்து கொள்ள இன்னும் பணம் செலவிடுகின்றன. அதனால்தான் அதிக தமிழ்

ஆய்வாளர்கள். தமிழ்நாடு பொருளாதார யானையாகி விட்டால்,இன்னும் பலர் தமிழை
படிப்பர். //

தமிழ் ஆர்வலர்கள் இதை உணர்தல் வேண்டும்.

’அயல்நாட்டுப் பள்ளி ஒன்றில் வடமொழி பயில்கின்றனர்’என்பது செய்தி; அதை
அப்படியே விட்டுவிட்டிருக்கலாம்.கணேசர்
“மகரிஷி மகேஷ் யோகி என்னும் $ சாமியாரின் சீடர் போல. சொந்தப்
பள்ளிக்கூடம்.நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். பிரின்சிபால் இந்தோ-
ஐரோப்பிய மொழிகளின் தாய் என்று சொல்கிறார்.இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்
பேராசிரியர்களிடம் சொன்னால் நகைப்பதைக் காணலாம். 19-ஆம் நூற்.
வால்ட்டேர், ... காலமெல்லாம் மலையேறிவிட்டது” என்று எழுதினார்.

இங்கிருந்து அங்குபோய்க் கொடிகட்டிப் பறக்கும்/பறந்த சாமியார்கள்
எல்லோருமே $ சாமியார்கள்தானே, சுவாமி சச்சிதானந்தா உட்பட .

‘வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது’ என்னும் எதிர்வினையும் கிளம்பியது;
அதனால் இழை சூடேறுகிறது.

தமிழ் விக்கி மாற்றான் தோட்டமாகாது; தமிழர் அனைவருக்கும் சொந்தமானது.
அதில் பங்களிக்க விருப்பமற்றவர் வேறு தொகுப்புகளில் பங்களிக்கத்
தொடங்கினால் பிளவு ஏற்படும்; பிறகு தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்னும்
புலம்பல் தொடரும்.

’தமிழ்விக்கி யாருடைய சொந்த தோட்டமும் இல்லை.அது திறந்த வெளி; ஊர்
மைதானம் போல்.அதில் பங்களிக்க அனைவருக்கும் உரிமை உண்டு’என்று விஜயராகவன்
அடாவடித்தனத்தைச் சுட்டுவதில் என்ன தவறு?

மேலும் பல எழுதலாம்; முனைவர் கண்ணன் அவர்களுக்குத் தலைவலியாகும். அதில்
விருப்பமில்லை

தேவ்

N. Ganesan

unread,
Dec 1, 2009, 12:03:25 AM12/1/09
to மின்தமிழ்

On Nov 30, 10:35 pm, devoo <rde...@gmail.com> wrote:
> ‘வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது’ என்னும் எதிர்வினையும் கிளம்பியது;
> அதனால் இழை சூடேறுகிறது.
>

வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது தொன்மையான
கிரேக்கம், இலத்தீனம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபோல்.

ஐரோப்பிய மொழிகளுக்கு ஆரிய மொழிகளான
சம்ஸ்கிருதம், வேதம் போலவே உள்ள பழைய
பாரசீகம் இரண்டும் உறவுடைய மொழிகள் என்றதும்
200 ஆண்டுகளாய் 100-க் கணக்கான ஆசிரியர்கள்,
பல 100 மாணவர்களுடன் மேலை நாடுகளில் படிக்கின்றனர், ஆராய்கின்றனர்.

இப்பொழுது பிறமொழிகளின் கொடையும் இந்திய நாகரிகத்தை
அறியப் பயன்படும் என்பதால் - அவற்றில் உள்ளதிலேயே
பழைய இலக்கியங்கள் உள்ள தமிழையும் தொட்டுப்பார்க்கச்
சிலர். சென்ற ஆண்டு இயற்கை எய்திய கமில் சுவலெபில்
காலத்தில் இருந்து என்று சொல்லலாம். ஆனால், வாழ்க்கை
முழுக்க தமிழை ஆராய்வோர் மேலை நாடுகளில் விரல்விட்டு
எண்ணலாம். நல்ல நிதிநிலை தமிழ் ஆய்வுக்கு இல்லை
- மு. இளங்கோவன் கூறுவதுபோல் கரகாட்டங்களுக்கு
தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கும் ஆர்வம் உயர் ஆய்வில் இல்லை.

இசுலாமிய ஆய்வைப் பாருங்கள். பெட்றோ-டாலரினால்
சவூதிகள், ஆகா கான் நினைவு, ... எத்தனை இசுலாமிய
ஆய்வுப்பீடங்கள் எத்தனை பெரிய பல்கலைகளில்
- பதிப்பகங்களில். நல்ல ஆய்வுகளை ஊக்குவிக்கவும்,
வெளியிடவும், செம்மொழி நிதி நல்கை பயன்படட்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 1, 2009, 12:11:50 AM12/1/09
to மின்தமிழ்

On Nov 30, 10:35 pm, devoo <rde...@gmail.com> wrote:

> மேலும் பல எழுதலாம்;

திரு. தேவ்,

கணிமையை (கம்ப்யூட்டிங்) தமிழ் ஆய்வில் எதிர்வரும் காலத்தில்
எப்படிப் பயனாக்கலாம் என்பது பற்றிய சில எண்ணங்கள்:
பேரா. எம். வி. இராமன் தமிழ்நாட்டு நிலையை
என் மடலுக்கு மறுமொழி எழுதினார்.

அன்புடன்,
நா. கணேசன்

பேரா. எம். வி. இராமனின் மடல் இணைக்கிறேன்.

அன்புடையீர்
தங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது.

இங்கு எனது சில கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் விற்கும் பல நோக்கியா கைபேசிகளில் தமிழ் உள்ளது
மட்டுமின்றி
பலரும் அதை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அது ஒருங்குறியில் அமைந்திருக்கவில்லை.

தட்டச்சு முறையைப் பொறுத்தவரை ஏராளமான குறியீட்டு முறைகளும், வகைகளும்
கிடைக்கின்றன. ஆனாலும் ஒவ்வொன்றும் ஒரு வகை.

தமிழ் தட்டச்சுப்பொறி தட்டச்சு முறை கற்பிக்கும் நிலையங்கள், ஏறத்தாழ
அனைத்தும்
மூடப்பட்டுவிட்டன. இன்னும் செயல்படும் ஒரு சில நிலையங்களும் இறுதி
மூச்சைக் கையில்
பிடித்துக்கொண்டு உள்ளன. எனவே வரும் தலைமுறை தமிழ் தட்டச்சுப்பொறி
தட்டச்சு முறையை
கற்பது என்பது சிரமமே. அதுதவிர தமிழகம் தவிர உலகமெங்குள்ளோர் இதைக்
கற்பதற்கு நிலையங்கள் இல்லை என்பதே உண்மை.

தமிழ்99 தட்டச்சு முறை பலருக்கும் விளங்கவே இல்லை மேலும் ஒலிக்கூறின்
அடிப்படையில் அதை கற்பதற்கும், கற்பிப்பதற்கும் தகுந்த ஆட்கள் இல்லை.

எனவே அஞ்சல் முறை எனப்படும் transliterate முறை மட்டுமே சில மணி
நேரத்தில்
கற்பதற்கும், கற்பிப்பதற்கும் ஏற்றதாகத் திகழ்கிறது.

ஆனால் அரசு அலுவலகங்களில் உள்ள தட்டச்சுப் பணியாளர்கள்
தமிழ் தட்டச்சுப்பொறி தட்டச்சு முறையை
மட்டுமே பயன்படுத்துவதால் அதையும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம்
உள்ளது.

பல்கலை ஆய்வேடுகளைப் பொறுத்தவரை தனிப்பட்ட நபர்கள் வெளியில் உள்ள
நிலையங்களில் அவற்றை தட்டச்சு செய்து அச்சிடுவது மட்டுமின்றி அவற்றின்
கணினிப்பிரதியைக் கூட வாங்குவதில்லை.
ஆய்வேடுகளில் பல பல்கலைகளில் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கூட
சந்தேகமே.
எனவே பிற்கால சந்ததிக்கு ஓலைச்சுவடி கிடைத்த அளவு கூட இருபதாம், மற்றும்
தற்போதைய
தமிழ் ஆய்வுகள், நூல்கள் கிடைக்க வழியின்றிப் போகலாம்.
அவற்றையும் பாதுகாக்க நாம் முறையான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
Tamil OCR மென்பொருளை மேம்படுத்தி ஒருங்குறியில் தரவுகளைப் பாதுகாக்கும்
வழிமுறைக்கு
முயற்சி எடுப்பது மிக மிக அவசரமான, அவசியமான ஒன்று.

செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. செய்து முடிக்க ஏராளமான
உதவிக்கரங்களும் தேவை.
காலம் வழி நடத்தும் என்று நம்புவோம்.

அன்புடன்
வெ.இராமன்.

N. Ganesan wrote:
> Tamil KaNi 2.0:
> (a) Tamil working in Mobiles (iPhones, Blackberry, Nokia, ...)
> & mandatory requirement for cell phones sold in Tamil Nadu
> (b) Tamil woking in Publishing software (Quark, Corel, Adobe, ...)
> (c) Text-to-Speech & Speech-to-Text systems
> (d) Tamil keyboards manufactured & available
> - Tamil99, Thunaivan, Typewriter, SL 2007, Murasu Anjal
> for purchase in shops ...
> (e) Linguistic siftwares - Spellcheck, Morphology & Stem analysers ...

> Tamil KaNimai 2.0:
> (a) Government subsidy for Internet browsing kiosks
> in Tamil Nadu villages, towns @ libraries, schools, Panchayat offices
> (b) Good academic journals such as Centamiz, Centamiz Celvi,
> Tamizp Pozil (Karanthai Tamil Sangam), Tamil Culture (X. S.
> Thaninayagam, SJ),
> Jl. of Tamil Studies, J. of Inst. of Asian Studies (Chennai)
> in the web - initially as PDF, they typed plain-text HTMLs.
> A peer-reviewed journal in many fields - Tamil IT, Dravidology
> (linguistics, art history, literary critique,...) History of Sci.
> Technology
> & local adaptation to Tamil and Indian needs (who did what? type jl.)
> (c) M. A. & Ph. D. theses of all the past, and future in all branches
> should be submitted as PDF documents and be made available
> for purchase at a nominal cost in Tamil Nadu & Sri Lanka
> universities - say, 1000 Re/- for M.A., Re/- 2000 for PhD
> disseratation.
> etc. etc.,


> N. Ganesan


Kumaran Malli

unread,
Dec 1, 2009, 10:23:17 AM12/1/09
to mint...@googlegroups.com


ஐயன்மீர்,

இந்தக் குமரன் மல்லி என்பவன் உங்கள் கருத்துக்களுடன் மாறுபட்டு போரிடவில்லை. அப்படியொரு எண்ணமிருப்பின் மாற்றிக் கொள்ளுங்கள். மின் தமிழில் வரும் அனைத்தையும் நான் இன்னும் படித்துவிடவில்லை. என் கண்ணில் பட்டவற்றை மட்டுமே கொண்டு என் எதிர்வினையைச் செய்தேன். அப்போதும் 'என்னய்யா' என்பதற்கான கேள்வி மட்டுமே நேரடியாக ஒருவரை நோக்கி எழுப்பப்பட்டது; வேறு கருத்துகளான ஒருமையில் விளித்தல், தாழ்த்தி பழித்தல் போன்றவற்றை யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகவே சொன்னேன். எடுத்துக்காட்டுகள் கேட்டால் தேடி எடுத்துக் கொடுக்கலாம். என் கண்களில் அவை பட்டன என்பதால் அவை கற்பனை இல்லை என்பது உறுதி. இரட்டுற மொழிதலுக்கு மேலே சில எடுத்துக்காட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கூடுதலாக உடனே என் நினைவிற்கு வருவது (தேடிப் பார்க்காமல்) 'தேவநேயனின் உளரல்கள்' என்ற தலைப்பில் வந்த கட்டுரை. இப்படி எல்லா தரப்பிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் காட்டலாம். என் எதிர்வினை விஜயராகவன் ஐயா, வேதபிரகாஷ் ஐயா இவர்கள் இருவரை மட்டும் நோக்கி இல்லை; இங்கிருக்கும் எல்லோரையும் நோக்கியதே! அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவர் செயல்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

மற்றபடி ஆரியமும் செந்தமிழும் எதிரி மொழிகளில்லை; தமிழ் விக்கிபீடியா அனைவருக்கும் உரியது; தமிழ் மரபில் தமிழுடன் உறவாடிய அனைத்தும் அடக்கம் போன்ற கருத்துகளில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. இங்கிருக்கும் பெரும்பான்மையானோருக்கும் அப்படியே என்பது என் புரிதல்.

சாதியும் மொழியும் சமயமும் சூடான விவாதங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அறிவேன்; ஆனால் அந்த சூடான விவாதங்கள் கருத்துகளுடன் இருக்க வேண்டும்; தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் செல்ல வேண்டாம் என்பதே 'அனைவரிடமும்' இச்சிறுவன் வைக்கும் வேண்டுகோள்.
 
சிலருடைய கருத்துகளோ எழுத்துகளோ இங்கே மட்டுறுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கண்ணன் ஐயாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். என்னைப் போன்ற சிறுவர்கள் மட்டுமே இருக்கும் இடமென்றால் மட்டுறுத்தல் வேண்டப்படலாம்; ஆனால் இங்கிருப்போர் பலரும் பெரியவர்கள் - வயதிலும் அறிவிலும். அதனால் தான் இந்த வேண்டுகோள்கள்!
 
அன்பன்,
குமரன்.

விஜயராகவன்

unread,
Dec 1, 2009, 1:27:19 PM12/1/09
to மின்தமிழ்
On 1 Dec, 15:23, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> உடனே என் நினைவிற்கு வருவது (தேடிப் பார்க்காமல்) 'தேவநேயனின் உளரல்கள்' என்ற
> தலைப்பில் வந்த கட்டுரை. இப்படி எல்லா தரப்பிலிருந்தும் எடுத்துக்காட்டுகள்
> காட்டலாம்.

திரு குமரன் மல்லி

நான்தான் அந்த உள்தலைப்பில் (தலைப்பில் அல்ல) எழுதினேன். அதற்கான
காரணங்களையும் நீண்ட கட்டுரையில் விளக்கினேன்.

இதுதான் `மற்றவர்கள் மதிப்பவரை ஒருமைப்படுத்தி பேசுவது` என்பதற்க்கு
உதாரணமா? நான் எல்லாரையும் மனிதர்களாக மதிப்பவன். ஆனால் ஒருவரை அவர்கள்
பட்டத்துடன் கூடத்தான் மற்றவர்கள் எழுதவேண்டும் என்பது மிகையான
எதிர்பார்ப்பு. ஞானமெத்து தேவநேயனே, அவர் சுயவாழ்க்கை குறிப்பில்
ஞா.தேவநேயன் என்றுதான் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் எழுதும் போது
`தேவநேயர்` அல்லது `பாவாணர்` என எழுதாவிட்டால் மரியாதை குறைவு என சொல்ல
வருகின்றீர்களா?


இதும் பேர் தான் துதிபாடல். ஒருவரை துதிபாடாவிட்டால், அவருக்கு அவமரியாதை
என்பது தமிழ்நாட்டில்தான் நடக்கும்.

பழைய ஜனாதிபதி ராதாகிருஷ்னனை யாரும் ராதாகிருஷ்ணர் என எழுதுவதில்லை
சி.வி.ராமனை யாரும் சி.வி.ராமர் என எழுதவில்லை.

மேலும் `மொழியியல் விஞ்ஞானி` என சொல்லப்படுபவர் தமிழ்தான் உலகில் மூத்த
மொழி, லெமூரியா கண்டம் என்பதையே மையப்படுத்துகின்றார் என்றால், அதை உளரல்
என்று சொல்வதில் தவறில்லை.


நல்ல வேளை, தமிழ் நாட்டிற்க்கு வெளியே அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது.
தெரிந்தால் தமிழர்களைப் பார்த்து சிரிப்பார்கள்

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Dec 1, 2009, 1:49:16 PM12/1/09
to மின்தமிழ்
On 1 Dec, 05:03, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 30, 10:35 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
> > ‘வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது’ என்னும் எதிர்வினையும் கிளம்பியது;
> > அதனால் இழை சூடேறுகிறது.
>
> வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது தொன்மையான
> கிரேக்கம், இலத்தீனம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபோல்.

திரு கணேசன்

இந்த விவாதம் , தமிழில் துல்லியமாக வார்த்தைகளை பயன் படுத்தாததால்,
அல்லது தமிழில் துல்லிய சிந்தனைகளுக்கு வார்த்தை இல்லாத்தால் எழுகின்றது.


`ஆதிக்கம்` என்றால் என்ன ? ”ஆதிக்க வர்க்கம்”, ”ஆதிக்க ஜாதிகள்” , ஆதிக்க
நாடுகள் போன்றவர்ற்றில் ஆதிக்கம் என்பது Power Relationship ஐ
காட்டுகிறது.

உண்மையில், சமுதாயத்தில் மனிதர்களுக்குதான் ஆதிக்கம் இருக்கே தவிர,
மொழிகளுக்கு இல்லை. சிலர் தமிழோ, ஸ்வாஹிலியோ அல்லது மற்ற மொழிகளிலோ
ஆர்வம் எடுத்தால், அது அம்மொழிகளின் ‘ஆதிக்கம்’ அகாது.

19ம் நூத்தாண்டில் சம்ஸ்கிருத ஆய்வுகள் முழு மூச்சில் நடைபெற்றுக்
கொண்டிருந்த போதும், ஆதிக்கம் ஆங்கிலேய்ர்கள் கைகளில் தான் இருந்தது
என்பதை மறக்கக் கூடாது.


ஆங்கிலேயர்கள் சமஸ்கிருத, தமிழ் படிப்புகளை ஊக்கமுற்று செய்ததின்
நோக்கம், இந்திய காலனியயை இன்னும் சரியாக ஆதிக்கம் செய்வதான் - அதாவது
இன்னும் சரியாக சுரண்டதான்.

அதனால் எழுதும் வார்த்தைகளை யோசித்து எழுதுங்கள் தொன்மையான கிரேக்கம்,
லத்தீன் முதலியவை ஆதிக்கம் செய்ய முடியாது, ஏனெனில் அவை மனிதர்கள்
இல்லை.

எல்லாவற்றையுமே மொழி மையத்துடன் பார்த்தல் இப்படி குழப்பம்தான் வரும்.

மொழி சமுதாயத்தின் ஒரு அமசம் தான் - அதுவும் சிறிய அம்சம்


விஜயராகவன்

Kumaran Malli

unread,
Dec 1, 2009, 1:59:19 PM12/1/09
to mint...@googlegroups.com


ஐயா.

சில வழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்றி எழுதினால் அவை மரியாதைக்குறைவாகவே தொனிக்கும். அதனால் மன வருத்தங்களும் ஏற்படும். வேதாந்த தேசிகன் என்றே எழுதுவது மரபு. அப்படியே எழுதினால் யாரும் அதில் குறை காண மாட்டார்கள். முருகன் என்றும் சிவன் என்றும் கண்ணன் என்றும் இராமன் என்றும் அரங்கன் என்றும் எழுதுவதுண்டு திருப்பெயர்களை; அங்கும் குறை காண மாட்டார்கள்.

ஆனால் அதே நேரத்தில் யாரேனும் விநாயகர் என்று எழுதாமல் விநாயகன் என்றாலோ இராமானுஜர் என்னாமல் இராமானுஜன் என்றாலோ (வைணவப் பனுவல்களில் இராமானுசன் என்று எழுதும் மரபு உண்டு; அதனைச் சொல்லவில்லை) ஜெயேந்திரர் என்னாமல் ஜெயேந்திரன் என்றாலோ சந்திரசேகரர் என்னாமல் சந்திரசேகரன் என்றாலோ ஜீயர் என்னாமல் ஜீயன் என்றாலோ ராஜகோபாலாச்சாரியர் என்னாமல் இராஜகோபாலாச்சாரி என்றாலோ (இராஜாஜியார் அப்படியே தன் கையொப்பத்தை இட்டிருந்தாலும்) அதில் அவர்கள் எழுத்தின் பின் இருக்கும் வெறுப்பும் அதனால் எழும் மரியாதைக்குறைவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே. அதே வகையில் தான் தேவநேயனின் உளறல்கள் என்பதையும் நான் எடுத்துக் கொள்கிறேன்.

அந்த தொனியில் அச்சொற்கள் ஒலிக்கவில்லை என்று நீங்கள் மறுத்தால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாம் மதிப்பவர்களை மரியாதைக் குறைவாக மற்றவர்கள் எழுதும் போது 'ஆகா அவர்கள் துதி பாடவில்லை. நம்மைப் போன்றே அவர்களும் மிக்க மரியாதையுடனே எழுதுகிறார்கள். அவர்களுக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. உள்ளதை உள்ளபடி எழுதும் நேர்மையாளர்கள் அவர்கள். தமிழ்நாட்டின் துதிபாடல் மரபு மறைந்து கொண்டே வருகிறது' என்று சொல்லி மகிழ்த்து கொள்வோம். யாருக்குத் தெரியும் என் ஆழ்மனத்தில் என் மதிப்பிற்குரியவரை இன்னொருவர் மரியாதைக்குறைவின்றி பேசுகிறார் என்பது புரிகிறது; அதனால் வலிக்கிறது; என்பதை வெளியே சொல்லாமல் விட்டால்?! எல்லோரும் தமிழ் நாட்டு மரபான துதிபாடலைக் கிழித்துத் தொங்கிவிட்டு மகிழ்வோம்.

விஜயராகவன்

unread,
Dec 1, 2009, 2:52:02 PM12/1/09
to மின்தமிழ்
On 1 Dec, 18:59, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> ஐயா.
>
> சில வழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்றி எழுதினால் அவை மரியாதைக்குறைவாகவே
> தொனிக்கும்.


அதனால் மன வருத்தங்களும் ஏற்படும். வேதாந்த தேசிகன் என்றே எழுதுவது
> மரபு. அப்படியே எழுதினால் யாரும் அதில் குறை காண மாட்டார்கள். முருகன் என்றும்
> சிவன் என்றும் கண்ணன் என்றும் இராமன் என்றும் அரங்கன் என்றும் எழுதுவதுண்டு
> திருப்பெயர்களை; அங்கும் குறை காண மாட்டார்கள்.
>
> ஆனால் அதே நேரத்தில் யாரேனும் விநாயகர் என்று எழுதாமல் விநாயகன் என்றாலோ
> இராமானுஜர் என்னாமல் இராமானுஜன் என்றாலோ (வைணவப் பனுவல்களில் இராமானுசன் என்று
> எழுதும் மரபு உண்டு; அதனைச் சொல்லவில்லை) ஜெயேந்திரர் என்னாமல் ஜெயேந்திரன்
> என்றாலோ சந்திரசேகரர் என்னாமல் சந்திரசேகரன் என்றாலோ ஜீயர் என்னாமல் ஜீயன்
> என்றாலோ ராஜகோபாலாச்சாரியர் என்னாமல் இராஜகோபாலாச்சாரி என்றாலோ (இராஜாஜியார்
> அப்படியே தன் கையொப்பத்தை இட்டிருந்தாலும்) அதில் அவர்கள் எழுத்தின் பின்
> இருக்கும் வெறுப்பும் அதனால் எழும் மரியாதைக்குறைவும் தெள்ளத் தெளிவாகத்
> தெரிகிறதே. அதே வகையில் தான் தேவநேயனின் உளறல்கள் என்பதையும் நான் எடுத்துக்
> கொள்கிறேன்.


குமரன் மல்லி

நீங்கள் “மொழி ஆய்வாளர்கள்” அரசியல்வாதிகள் , மேடைப் பேச்சாளர்கள், இதர
சொச்ச குழப்பவாதிகள் இவர்களையும் ஒரு மதப் புள்ளிகளுக்கு வேண்டிய
மரியாதையுடன் பேச வேண்டும் என்கின்றீர். அவர்களுக்கு கடைசியில் ர்
மட்டுமல்ல (எ.கா. தேவநேயர்) , அவர்களுடைய பட்டங்களையும் (பாவாணர்,
புரவலர், கலைஞர், நாவலர்) போட்டால் ஒழிய மரியாதை குறைவு என்று
நினைக்கின்றீர்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.


நான் நிச்சயம் தேவநேயனின் கருத்துகளை வெறுக்கிறேன். ஆனால் ஞா.தேவநேயனை
அல்ல. எனக்கு தெரிந்து ஞாதே , யாருக்கும் தீங்கு இழக்கவில்லை, எளிதான
வாழ்க்கையை வாழ்ந்தார் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஒரு
சாதாரண மனிதர். எல்லோருக்கும் இருப்பதைப்போல் , அவருக்கும் சில
கருத்துகள் இருந்தன. நான் அவரை வெறுப்பதற்க்கு ஒரு காரணமும் இல்லை.
தேய்நேயனின் பாப்புலாரிடிக்கு அவர் காரணம் இல்லை, தமிழ் சமுதாயத்தின் ஒரு
மனப்பான்மைதான். அவர் கருத்துகள் “இயக்கத்திற்க்கு” ஒத்தாக இருந்தன.
அதனால் அவர் கருத்துகளை முழுமையாக பிற்போக்குவாதம் என நிராகரிக்கிறேன்.


மற்றபடி நீங்கள் யாருக்கும் தேவையற்ற மரியாதையை கொடுக்க வேண்டாம்.
ராஜகோபாலாசாரி போதும், ‘சாரியார்’ வேண்டாம். ராஜகோபாலாசாரி என்று அவரைப்
பற்றி எழுதுவது வெறுப்பே இல்லை. எழுதும் போது சாஸ்திரி போதும்,
சாஸ்திரிகள் வேண்டாம். ஆனால் ஒருவரிடம் தனியாக பேசும் போது, நீங்கள்
பெயர்களை இழுத்தால் அது உங்கள் இஷ்டம். கடந்த நூற்றாண்டில் தமிழ்
சமுதாயத்தில் உண்டான அற்பத்தனம், பெயர்களை அனாவசியமாக இழுப்பது , அடி >
அடிகள் > அடிகளார். அனாவசியமாக இழுத்தால்தான் மரியாதை எனும் நினைப்பு.

விஜயராகவன்

N. Kannan

unread,
Dec 2, 2009, 4:05:19 AM12/2/09
to mint...@googlegroups.com
அன்பின் விஜயராகவன்:

இந்தப் பிரச்சனையை அலசியதின் பெரும் பலன், தமிழரிடையே மண்டிக்கிடக்கும்
discrimination மனத்தை ஒளிபாய்ச்சிக் காட்டியது. இது பலருக்கு கசப்பான
விஷயம். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். என்ன செய்ய! சில பேர் சரித்திரத்தைத்
திருத்துவதாகச் சொல்லி positive discrimination எனும் புதுச் சொல்லாடல்
செய்கின்றனர். பாஸிசிட்வ்/நெகடிவ் எதுவானாலும் discrimination is
discrimination. காலத்தை மாற்றிப் போட்டு சமன் செய்து விடமுடியாது.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு பலாபலன். அதை எல்லோரும் அனுபவித்தே
ஆகவேண்டும் (2012-ல் உலகம் அழியப்போகிறதாம்! ஜாக்கிரதை!!).

விக்கிபீடியாவின் மீது எப்படி ஒரு குழுவினரால் ஆதிக்கம்
செலுத்தமுடிகிறது? எதிர்க்குரல் கொடுப்பது பொது நலத்திற்கு நல்லதே!

மின் தமிழைப் பொருத்தவரை போராட்டமே வாழ்வாகிவிடக் கூடாது என்பதில் கவனம்!

வாழ்வின் இனிமையான பக்கங்கள் ஆயிரமுள்ளன. அவைகளைச் சுட்டும் போது மனது
நிர்மலமாகிறது. மனதும் வீடும் ஒன்று. இரண்டிலும் தூசு படியும். தினம்
சுத்தி, பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன செய்ய!

மற்றப்படி இவை பொதுவான அலசல்களே. எப்படிச் சொன்னாலும் தனிமனித விரோதம்
என்பது மனிதனுடன் ஒட்டிப்பிறந்திருக்கிறது. இவ்வுரையாடல் பகைவர்களை
உருவாக்கும். நாம் அப்படி எண்ணவில்லையெனினும் அவர்கள் அப்படி
எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுக்கும் ஞானம்
ஒரு போது ஒளி வீசும். மனது மாறும்!

கண்ணன்

2009/12/1 விஜயராகவன் <vij...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages