1. மாட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்?2. ஆட்டிறைச்சி தின்னவர்கள் யார் யார்?3. இறைச்சி தின்னவர் “தீண்டத்தகாதவர்களாக”க் கருதப்பட்டார்களா? [இது மிக முக்கியம்.]





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் அம்மா.சங்கப்பாடல்களில் இறைச்சி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்ததாக தெரிகிறது. பலவகை மிருகங்கள் பன்றி, மான், ஆடு உட்பட மக்களால் உண்ணபட்டுள்ளன .
அவ்வையார் போன்ற தமிழ்புலவர்கள் புலால் உணவு உண்டுள்ளதை சங்கபாடல்கள் சுட்டுகின்றன.
புலவர்களுக்கு மன்னர்கள் புலால் உனவை வயிராற உண்ணகொடுத்துள்லார்கள். அவ்வைக்கு அதியமான் புலால் உணவளித்தார். கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியை வயிராற பரிமாறினார்இழுதினன்ன வானினக் கொழுங்குறைஅமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி (புறநானூறு 150)புலால் உணவை பிராமணர்களும் உண்டார்கள் என ஒரு சங்கபாடல் கூறுகிறதுகள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்பார்ப்பாரும் தின்பர் உடும்பு.
இறைச்சிகளில் சுவையுள்ள இறைச்சியான உடும்பின்கறியை அதன் உயர்வைப்பொருட்டு அதை நாய்கவ்வியிருந்தாலும் அதைப்பொருட்படுத்தாது பார்ப்பனரும் உடும்பு உண்பார்கள் என்கிறது இப்பாடல்அதுபோக சங்ககால தமிழகத்தில் யாகங்கள், வேள்விகள் நடந்தன.
வேள்விகளில் பசுவைப்பலியிடுதலும், அப்பசுவின் இறைச்சியை யாகங்கள் நடத்தும் பிராமனர்கள் உண்பது மரபு.
சங்க இலக்கியங்களில் அப்படி அவர்கள் உண்டார்கள் எனக்குறிப்பு இல்லை.
ஆனால் வேள்விகளை நடத்தும் மரபு அதுவே. பசுவை வேள்விகளில் பலியிடம் நின்றது எக்காலம், சங்ககாலம் என்பது எக்காலம் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் பலனில்லை.
பாணர், மழவர் போன்றோர் பீஃப் உண்டதை காட்டும் பாடல்களைக்கண்டோம்.
அது தவிர்த்து ஏறுதழுவுதலில் இறங்கின மாடுகளும் கொல்லபட்டு அவற்றின் தோல் முரசடிக்க பயன்பட்டதை புறநானூறு சுட்டிகாட்டுகிறதுமண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,வென்றதன் பச்சை சீவாது போர்த்ததிண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,அருகுகை .. .. .. .. .. .. மன்றகுருதியொடு துயல்வரும் மார்பின்முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (288)
ஆக பண்டைய தமிழகத்தில் புலால் உணவு பிரதான உனவாக இருந்தது, புலவர்கள், மன்னர்களும், பிராமணர்கள், பாணர்கள், மழவர்கள், பொதுமக்கள் என அனைவரும் விரும்பி உன்ட உணவாக புலால் இருந்தது.
பசுவின் இறைச்சியும் யாகங்களிலும், பொதுவாக (ஆனால் அரிதாக) உண்னபட்டது.
தெய்வங்களுக்கு மழவர்களால் பசு பலியிடபட்டது.
முரசடிக்க, தோலுக்கு என பசுக்கள் கொல்லபட்டுகொண்டுதான் இருந்தன. அப்பசுக்களின் இறைச்சியை பாணர்கள் உண்பதும் வழக்கம்.
இறைச்சி உன்ட புலவர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் தீன்டதகாதவர்களாக எப்படி கருதபட்டிருக்க முடியும்?
பொதுவான சமூகமே இறைச்சியை விரும்பி உண்டது. ஆக இரைச்சி அன்று தீன்டாமையை தீர்மானிக்கவில்லை
இது நான் படித்தவரை புரிந்துகொன்டது. என் தமிழறிவு மிக குறைவு என்பதால் இதில் தவறிருந்தால் சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்
--
ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் “தீண்டத்தகாதவர்கள்” என்று யார் எப்போது குறிப்பிடத் தொடங்கினார்கள் என்று தெளிவாகத் தெரிவிப்பது இளைய தலைமுறைக்கு உதவும்!
ராஜம் அம்மா வந்து விட்டேன். சங்கஇலக்கியத்தில் எருமை எனத்
தேடினால் கிடைக்காது.மேதி எனத் தான் குறிப்புகள் கிடைக்கும்.இப்போது திருப்பரங்குன்றத்தில் திருமணவீட்டில் இருக்கிறேன்.
செம்மொழி கருத்தரங்கம் ஒன்றிற்காகத் தயார் செய்த கட்டுரையில் குறிப்பு உள்ளது .
பின்னர் அனுப்பிகிறேன்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நான் கேட்பது யாதெனில் மானுடவியல் அடிப்படையில் மக்களின் உணவுப்பழக்கத்துக்கு இறைச்சி உணவாகக் கொள்ளும்போது எருமையின் நிலை என்ன? பசுவைமட்டும் உயர்த்திப் பேசுவது ஒரு நடுநிலை நோக்கைத் தொலைத்துவிடுகிறதேபசு பாலுக்காக வளர்க்கப்படதல்ல அது கன்றுகளுக்குப் பால்கொடுக்கவும் காளைகளை ஈனுவதற்கு மட்டுமே வளர்க்கப்பட்டது எனக் கருதலாமா?
எருமையின் நிலை பழந்தமிழகத்தின் எவ்வாறு இருந்தது. தோடர்கள் எருமையைப் போற்றிப்பாதுகாத்தனர். எருமையே மாடு அல்லது செல்வம் என்றும் திருமணங்களில் எருமைகள் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் மரணமடைந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் எருமைச் சின்னம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதில் வைத்து எரியூட்டும் வழக்கும் இருந்ததாகக் குறிப்புள்ளதேபசு மட்டும் கொன்றால் பாவம் எருமையைக் கொன்றால் பாவம் இல்லை என்று சான்றுள்ளதா?எருமைகள்பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்புக்ளே இல்லையா?
>>சங்கஇலக்கியத்தில் எருமை எனத்
தேடினால் கிடைக்காது>>
திரு.பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி.சங்கஇலக்கியத்தில் மருதநிலத்தலைவன் பற்றிய உள்ளுறைப் பாடல்களின் நினைவில் அவ்வாறு கூறிவிட்டேன்.தங்களின் தரவுகள் அபாரம்.
இளைய தலைமுறையினருக்கு இந்த வார்த்தையின் பொருள் புரியாமலி ருப்பது தான் நல்லது பழைய குப்பையை கிளறி கிளறி என்ன கிடைக்கப்போகிறது . ஒன்று புரிய வையுங்கள் இந்த கால இளைய தலைமுறையினர் ஜாதி மதம் இவைகளை பற்றி கவலைப்படுவதில்லை . அவர்களுடை ய நோக்கம் குறிக்கோள் எல்லாம் வாழ்க்கையில் எப்படி சீக்கிர ம் முன்னேறுவது அவ்வளவு தான் . அவர்கள் ஜாதியை யோ யோ மதத்தையோ பார்த்து காதலிப்பதில்லை நண்பர்களின் ஜாதியை / மதத்தைப்பற்றி கூட கவலைப்படுவதில்லை . அந்த நல்ல மனத்தை விவாதம் என்ற பேரில் குழ ப்பிவிடாதீர்கள் .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனக்கு 3 நண்பர்கள். A, B, C என்று வைத்துக்கொள்ளவும்.
என்ன அம்மையாரே! ஒரு நீள் பெருந்தேரில் தூக்கி நிறுத்தி (மின்தமிழ்), கழுத்து நிறைய மாலைகளைப் போட்டு (இனிய எளியவர் என்ற புகழுரைகள்), இவருக்குத் தண்டோரா போடத்தெரியாது என்று மைக் வைத்துச் (உங்கள் இழை) சாற்றியிருக்கிறீர்கள். இனிப்புத் தின்றும் மனம் கூசுகிறது. இது தங்கள் பெருந்தன்மை. அதற்குத் தகுதியுடைவனாக்கிக்கொள்ள முயல்வேன்.
ஏதோ சந்தடி சாக்கில் என்னுடைய sangamconcordance.in பற்றி இன்னுமொரு செய்தி வந்ததற்கு நன்றி. இதனால் தமிழ் கூறு நல்லுலகத்தின் ஆய்வுப்பணிகள் எளிமையாக்கப்பட்டுச் சிறப்படைவதே எனக்குப் பிறவிப் பெரும்பயன்.
தங்களுக்கு மீண்டும் நன்றி,
ப.பாண்டியராஜா
ஒரு காளையை அடித்து ஊர்முழுக்கக் கூடிக் கூட்டாஞ்சோறாக்கி உண்ட கதையைப் பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.
வாள் குடியில் பிறந்த ஒரு மறவர் குடியிருப்பில், பகைவன் நாட்டு மன்னனின் ஆநிரை கவர்ந்து, அவற்றில் வலிமையான ஒரு காளையை மன்றத்தில் அடித்துத் துண்டாக்கி கூட்டுணவு ஆக்கி உண்ட செய்தி இது.
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
135 நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலிக் கூட்டுணவின் வாள் குடிப் பிறந்த
புலிப் போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
140 கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
145 சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
இதன் பொருள்:
யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும், 135
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத மறத்தைப் பூண்ட வாழ்க்கையினையும்,
(தமது)வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த,
புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்,
வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, 140
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்ற
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க,
வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைத்து, 145
பகலில் மகிழ்ச்சியுடனே ஆடுகின்ற தூங்காத குடியிருப்பினையுடைய
இது மட்டுமல்ல, அன்றைய மக்கள் துருவை என்ற செம்மறியாடு, மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, வீட்டில் வளர்த்த பன்றி, உடும்பு, மனை வாழ் கோழி, நண்டு, இறால், ஆமை, வாளைமீன், விரால் மீன் ஆகியவற்றின் இறைச்சியையும் விரும்பி உண்டார்கள். அரசன் தந்த உணவில் சோற்றைத் தொட்டுக்கொண்டு, இறைச்சியாக எடுத்தெடுத்துத் தின்று பல்லே மழுங்கிப்போய்விட்டதாகப் பாணன் ஒருவன் கூறுகிறான்.
சங்க கால மக்கள் மாட்டிறைச்சி உண்டதைப் பற்றிய மற்றுமொரு செய்தி. அவ்வளவுதான்.
262
| நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று | |
| 5 | நிரையொடு வரூஉ மென்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே. |
(பி - ம்.) 2 ‘பைங்கால்’
திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.
............................மதுரைப் பேராலவாயார் பாடியது.
தலைத்தோற்றமாவது:-
‘’உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று” (பு. வெ.12)
(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடையையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்து (பி - ம். கழித்து) க் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.
சாயல் - விடாயாலுண்டான மென்மை.
என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.
(கு - ரை.) 1. "மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை” (முருகு. 232) ; "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி” (பெரும்பாண். 143) ,
| விடை 7 | viṭai n. <vrṣa. 1. Bull; எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2). 2. Taurus of the zodiac; 3. Buffalo bull; 4. Male of the bison; 5. Ram; 6. Tom-cat; 7. Horse; |
| விடை 7 | viṭai n. <vrṣa. 1. Bull; எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2). 2. Taurus of the zodiac; 3. Buffalo bull; 4. Male of the bison; 5. Ram; 6. Tom-cat; 7. Horse; |
262
| நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் |
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி (பெரும்பாண்.)
ஊர் முழுதும் கூடி உண்ணும் திருவிழாவில் ஆட்டுக்கிடாய் பற்றிப் பாடிச் செல்கிறார் புலவர்.
பெரும்பாணாற்றுப்படை சங்க இலக்கியத்தில் பிற்காலம். கி.பி. 300-400 வாக்கில்.
அப்போது பசுவதை செய்ய ஊரார் வேளாளர்களும், சமண சமயத்தவர்களும்
வேளாண்மைக்கான காரணங்களால் ஊர்த் திருவிழாக்களில் இல்லாது ஒழிந்துவிட்ட காலம் அது.
திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அவற்றின் பின் உருவான பெரும்பாணாற்றுப்படை
போன்றவற்றில் ஊர் மன்றங்களில், அரச சபைகளில் விடை வீழ்த்துதல், இறைவர்களுக்குப்
பொலி (> பலி என்னும் வடசொல்) கொடுத்தல் எல்லாம் ஆட்டுக் கிடாய். இன்றும் பார்க்கலாம்.
நா. கணேசன்
கணேசன் ஐயா அவர்களே!தாங்கள் கூறியவற்றையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறீர்கள். அதனால் அது உண்மையாகிவிடாது.முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விடை ஆடுதான் என்பதற்கு அகச் சான்றுகள் உள்ளனவா? ஆம்/இல்லை - பதில் தேவை.ஆம் எனில் அகச்சான்று தேவை.இல்லை எனில் தயைகூர்ந்து இதுபற்றி மேலும் பேசவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.பண்டைய மக்கள் காளையைக் கொன்று தின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள இத்தனை சிரமப்படுகிறீர்களே, அவர்கள் பசுமாடுகளையே அடித்துத் தின்றிருக்கிறார்கள்.(1)கலங்கு முனைச் சீறூர் கை தலைவைப்பகொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர் - அகம் 129:11,12கழக உரை: சீறூரிலுள்ளோர் கையைத் தலைமீது வைத்து அலற, அவர்களுடைய கொழுத்த ஆக்களைக் கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளையுடைய மழவர்கள்.(2) பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்--------------------------------தெய்வம் சேர்ந்த பராரை வேம்பிற்கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்புலவுப் புழுக்கு உண்ட வன்கண் அகலறை - அகம் 309/2-6கழக உரை: பாலினையுடைய பசுவினத்தைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், .............., தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில் கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய்,இப்பொழுது உங்கள் வாதம் ஆ என்றால் பசுவே அல்ல, இந்த மழவர் தமிழரே அல்ல என்று பக்கவாட்டில் பிய்த்துக்கொண்டு போகாமல் இருந்தால் சரி.
மதிப்புக்குரிய ஐயா!தயவுசெய்து நான் கேட்ட முதல் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.அடுத்து நான் குறிப்பிட்டுள்ள இரண்டு எடுத்துக்காட்டுகளுக்கும் உங்கள் பொருள் என்ன என்று சொல்லுங்கள். இப்போது மூன்றாவதாக இன்னொன்றும் தருகிறேன்.நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற - அகம் 249: 13கழக உரை: இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற ---இந்த மூன்றுக்கும் உங்கள் விளக்கம் என்ன? தயவுசெய்து வேறுவகையில் திசை திருப்பவேண்டாம்.அன்புடன்,ப.பாண்டியராஜா