இந்த நிலையில் தமிழ் எழுத்துச் சீர்மை அவசியமா?
ஆண்டி முதல் ஆட்சியள்ர்வரை தமிழ் பேசவேண்டும்.
தமிழைத் தாய் மொழியாக் கொண்டவர்கள் அனைவரும்
தமிழில்தான் பேசுவோம் என்று சபதம் கொள்ளவேண்டும்.
தமிழ் பேசு, தங்கக்காசு என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
நாள் முழுவதும் நடக்க வேண்டும்.
தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற நிலை மாறி
தமிழ் இனி மெல் அச்சாகும் (Soft Print, Computer Print) என்கிற
நிலை வரவேண்டும்.
தமிழை வாழ வைப்போம். பின்னர் அவளை அழகு படுத்தி
ஆன்ந்திக்கலாம்.
On Aug 21, 10:48 am, ramagopal <ramagopal.1...@gmail.com> wrote:
> தமிழே வழக்கொழிந்து போகிறது.
> தமிழ் தமில் ஆகிறது. பேச்சுத்தமிழ்
> அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து
> போகிறது.
> ஆட்சியாளர்களோ தமிழை சில தமிழ் பித்தர்களிடம்
> (மின்தமிழில் பங்கேற்கும் அன்பர்களைப்போல) விட்டு
> விட்டு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு
> இருக்கிறார்கள்.
>
> இந்த நிலையில் தமிழ் எழுத்துச் சீர்மை அவசியமா?
>
> ஆண்டி முதல் ஆட்சியள்ர்வரை தமிழ் பேசவேண்டும்.
> தமிழைத் தாய் மொழியாக் கொண்டவர்கள் அனைவரும்
> தமிழில்தான் பேசுவோம் என்று சபதம் கொள்ளவேண்டும்.
>
ஆம்.
> தமிழ் பேசு, தங்கக்காசு என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
> நாள் முழுவதும் நடக்க வேண்டும்.
>
> தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற நிலை மாறி
> தமிழ் இனி மெல் அச்சாகும் (Soft Print, Computer Print) என்கிற
> நிலை வரவேண்டும்.
>
அருமை! மலேசியாவில் கரு. திருவரசு என்ற நல்ல கவிஞர்
இருக்கிறார். அவர் தந்த வாசகம் “வெல்லத் தமிழ் இனி வெல்லும்”.
மெல்-அச்சு = மெல்லச்சு கணிப்பதிப்புகளுக்குப் பொருத்தம்தான்.
எல்லாத் தமிழும் இனி மெல்-அச்சாகும்!
வெல்லத் தமிழ் இனி வெல்லும்!
நீங்கள் நியூ ஃசீலாந்தில் வசிக்கிறீர்களா?
----------
தமிழர்கள் கீழ்விலங்கு மாட்டிய றா,னா,ணா, ...
வாத்துக்கொக்கி பூட்டிய லை, ளை,ணை, ...
விலக்கி விட்டார்கள் அல்லவா? வாத்துக் கொக்கியும்,
கீழ்விலங்கும் பூட்டிய தளையோடு படிக்கலாம்தான்
என்றாலும், அதை *விலக்கியும்* படிக்கும் முறை
முதலில் மெல்-அச்சில் ஏற்படணும். காலம்
செல்லச் செல்ல ட்விட்டரில், மெல்-அச்சில்,
செல் பேசியில், எழுத்துரு, ஓசிஆர் அமைப்பதில்
இதன் உபயோகம் விளங்கும். கீழ்விலங்கை
உடைத்தும் படிப்பது சுலபம்:
http://nganesan.blogspot.com/2009/08/ezhuttu-korppu.html
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html
அன்புடன்,
நா. கணேசன்
> தமிழை வாழ வைப்போம். பின்னர் அவளை அழகு படுத்தி
> ஆன்ந்திக்கலாம்.
தமிழ் நெடுங்கணக்கில் உ/ஊ ஏறும் உயிர்மெய்
வரிசையை அவதானிக்கவும்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:
ஃ அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க் க கா கி கீ கృ கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙృ ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சృ சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞృ ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டృ டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணృ ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ தృ தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நృ நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பృ பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மృ மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யృ யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரృ ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லృ லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வృ வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழృ ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளృ ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ றృ றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னృ னூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹ ஹா ஹி ஹி ஹృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ
[you need Chrome or Firefox modern browsers.]
On Aug 22, 7:46 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
"மெல்லத் தமிழ் இனி வெல்லும்"
எனப்துதான் அவர் தந்த வாசகம்.
ரெ.கா.
On Aug 23, 4:20 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> On Aug 22, 7:46 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> "மெல்லத் தமிழ் இனி வெல்லும்"
> எனப்துதான் அவர் தந்த வாசகம்.
>
அந்த மஹாவாக்யம் உள்ள முழுப் பாட்டு உள்ளதா?
ஒரு பாட்டின் இடையே அமைந்த வாசகமா?
இல்லை. தனி வாக்கியமா இது?
கவிஞர் கரு. திருவரசு எப்படி இருக்கிறார்?
ஒரு சில மடல்களே எழுதினார். அவர் எழுதி
அச்சானவை உண்டா? முத்து நெடுமாறனின்
தந்தை தொகுத்த களஞ்சியத்தில் சில
பார்த்ததாக நினைவு, மீண்டும் பார்க்கணும்.
நா. கணேசன்
எல்லாத் தமிழும் மெல்-அச்சாகுது! - அதனால்
மெல்லத் தமிழ்இனி வெல்லப்போகுது!
திருவரசு மிக நல்ல கவிஞர். ஆனால் மரபு மட்டுமே
கவிதை என்ற பிடிவாதம் உள்ளவர்.
கொஞ்சம் உடல் நலிந்திருந்தாலும் நன்றாகவே
இருக்கிறார். அதிகம் எழுதுவதில்லை. அதிகம் வெளியில்
காண முடிவதும் இல்லை. அவ்வப்போது சந்திப்பதுணடு.
ரெ.கா.
On Aug 23, 6:45 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற பாரதியின்
> வரிகளை (சரி, சரி! பாரதி மேற்கோள் காட்டிய
> வரிகளை) பலர் எடுத்து மானாவாரியாகப் பயன்
> படுத்துவதற்கு antidoteஆக இந்த வாசகத்தை அவர்
> கொடுத்தார். தவிர இது ஒரு பாடலுக்கிடையில்
> வருவதல்ல.
>
> திருவரசு மிக நல்ல கவிஞர். ஆனால் மரபு மட்டுமே
> கவிதை என்ற பிடிவாதம் உள்ளவர்.
> கொஞ்சம் உடல் நலிந்திருந்தாலும் நன்றாகவே
> இருக்கிறார். அதிகம் எழுதுவதில்லை. அதிகம் வெளியில்
> காண முடிவதும் இல்லை. அவ்வப்போது சந்திப்பதுணடு.
>
அகத்தியரில் சில முறை பேசியுள்ளோம்.
நான் கேட்டதாக, உடல்நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.
அவர் எழுதியவை இணையவலம் வரணும்.
இன்னும் எனக்கும் 20-ஆம் நூற்றாண்டு புதுக்கவிதை, கதை,
நாவல் ஒன்றும் தெரியாது. படித்ததில்லை, பார்ப்போம்.
ஆம். கிரந்தம் - தமிழ், சித்திரை - தை தமிழ்ப்புத்தாண்டுகள்,
வேட்டி - கால்சட்டை, சேலை - சூடிதார், ... போல
உயிர்மெய் எழுத்துக்கள் விலங்கிட்டு எழுதுதல்,
விலங்குடைத்து எழுதுதல் இரண்டும் வரணும்.
உ/ஊ உயிர்மெய் புதிதாய் எதுவும் சேர்ப்பதில்லை.
ஊ உயிர்மெய் ஏற்கெனவே கிரந்த எழுத்துக்கு உள்ளதுதான்.
எழுத்தமைதி, அழகு, வரிநீள அளவு கருதி
உகர உயிர்மெய் 90 பாகை திருப்பலாம்.
அவ்வாறே பிரமி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்
வைத்துள்ளது என்பதும் முக்கியமானது.
> Traditionalists of Thamizh language can be grouped as "ChemmozhiyaaLar"
> Reformists of Thamizh language can be grouped as "CheermozhiyaaLar".
>
இப்பெயர் பொருந்துமா? என்னும் ஐயப்பாடு.
செம்மொழிக்கு என்ன நிபந்தனைகள்? என்று
வரையறுத்த அறிஞர் வா. செ. குழந்தைசாமி.
அதையே மத்திய அரசு அறிவித்தது. அதனைப்
பொருத்தினால் அரசியலுக்காக பிற்காலத்தில்
மத்ய சர்க்கார் அறிவித்தமை விளங்கும்.
மேலும், மொழி என்பது முழங்கு- ஓசை
அடிப்படையாகக் கொண்டது. வரிவடிவ
மாற்றம் இதன்பால் வராது. காலப் போக்கில்
தமிழ் வரிவடிவம் மாறும்.
வரிவடிவத்தில்.
விலங்குத் தளையிடுவோர், விலங்குத் தளையுடைப்போர்
என்பது பொருந்தும். எல்லாச் செம்மொழி இலக்கியமும்
உ/ஊ உயிர்மெய் விலங்குடைத்து சீர்வடிவில்
எழுத முடிகிறது.
> Like the Chinese language State Commission, Thamizh language character
> reformists can lobby for support with the Tamilnadu State Government and
> encourage for a similar committee for evaluation.
ஆம். ஜெயபாஸ்கரன்: செயபாசுகரன் விவாதத்தில் பார்த்தால்
இந்தி போன்றவற்றில் ஒரு எழுத்துக்கு ஒரு ஒலி என்னும்
இலக்கணத்தைத் தமிழில் பொருத்துவதால் ஏற்படும் பிழை
என்று எளிதில் உணரலாம். தமிழின் வல்லின எழுத்துக்களுக்கு
ஒரு ஒலியல்ல, வறையறுத்த பல ஒலிகள் உள்ளன.
க - k, h, g
ச - c, s, j ....
எனவே, செயபாசுகரன் என்பதை ஜெயபாஸ்கரன் என்று
படிக்கலாம், அதில் என்ன பிரச்சினை?
கணேசன் என்றெழுதி gaணேசன் எறு படிப்பதில்லையா?
நா. கணேசன்
> எனவே, செயபாசுகரன் என்பதை ஜெயபாஸ்கரன் என்று
> படிக்கலாம், அதில் என்ன பிரச்சினை?
அப்படிடீன்னா செம்மொழி என்பதை ஜெம்மொழி என படிக்கலாமா?
> கணேசன் என்றெழுதி gaணேசன் எறு படிப்பதில்லையா?
சிலர் அப்படி படிப்பதில்லை., ஏனெனில் சிலர் ஆங்கிலத்தில எழுதும் போது
Kanesan என எழுதுகின்றனர். தேடிப்பாருங்கள் , நிரைய Kanesan கள்
இருக்கின்றனர். அது அவர்கள் அதிகாரபூர்வமான பெயர்கள் - செயபாசுகரன் போல்
திணிப்பு பெயர்கள் இல்லை.
ஆங்கிலத்திலும் ஒரு எழுத்து எல்லா இடங்களிலும் ஒரே சத்தம் கொடுப்பதில்லை.
எ.கா. put, but.
ஆங்கிலத்தை சரியாக பேசுவது அவ்வளவு எளிமை அல்ல.
ஆனால் ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரே சீராக எழுதுகின்றனர் - தமிழ்
எழுத்துலகை போலல்லாது, நீங்கள் பரவாலாக அறியப்படும் சொற்களை எழுதினால்,
யாரும் குறை சொல்ல மாட்டார்கள், மேலும் ஆங்கிலத்தில் ஒருவரின் சொந்த
பெயரை அவர் வேண்டியபடி அல்லது ஆவனங்கள் படி எழுதுவதுதான் கண்ணியம்
காட்டுவது. ஆங்கிலத்தில் நல்ல வேளையாக `செம் ஆங்கிலம்` இல்லை.
இதுவொருவகையான இனவாதம் என்று சொன்னால் பலருக்குப் புரிவதில்லை;-)
எங்கெல்லாம் புனிதத்துவம் ஏற்றப்படுகிறதோ அங்கு ஆரியவாதம்
வந்துவிடுகிறது. இவர்கள் ஆரியத்தை எதிர்கிறேன் பேர்வழி என்று
விடாப்பிடியாக ஹிட்லர் வழியில் போவதை அறிவதில்லை ;-)
தூய்மை என்பது செயற்கையானது. இயற்கையில் தூய்மை என்பது ஒரு நிலை. அதுவே
சாஸ்வதம் என்று இயற்கை சொல்வதில்லை. ஆற்றுநீர் ஒரு நாள்
கலங்கியிருக்கும். அடுத்த நாள் தெளிந்திருக்கும்.
எதுவெல்லாம் உயிருள்ளதோ அதுவெல்லாம் கலக்கும். மொழி முக்கியமாக! தமிழ்
உயிருள்ள மொழி என்றால் அதில் கலப்பிருக்கும். அதுவே அதன் உயிர்ப்பிற்கு
சாட்சி.
ஆனால் தூய்மைவாதி ஆஸ்பத்திரி வார்டு போல் டெட்டால் போட்டு மொழியைத்
துவைத்து வெளுத்து காயப்போடும் போது மொழி `செய்யப்பட்ட`
மொழியாகிவிடுகிறது. (சமிஸ்கிருதத்தை இதை வைத்துதான் இவர்கள் கேலி
செய்வது;-)
தமிழனால் இதை உச்சரிக்க முடியாது, அதை உச்சரிக்கமுடியாது அதனால் இது
இங்கு வரக்கூடாது அது அங்கு வரக்கூடாது என்போர் தமிழன் இன்று உலகெலாம்
பரந்து உலகமொழிகளை அனைத்தும் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை
மறந்துவிடுகின்றனர்.
கணினி யுகமும் தமிழில் உண்டு. கர்நாடகமும் தமிழில் உண்டு. இது பற்றி
நிறையப் பேசியாகிவிட்டது.
என்று தமிழன் தன்னை முழுமையாக தரிசிக்கிறானோ அன்றுதான் அவனுக்கு கட்டற்ற விடுதலை!
க.>
On Aug 24, 6:30 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Aug 24, 12:16 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > எனவே, செயபாசுகரன் என்பதை ஜெயபாஸ்கரன் என்று
> > படிக்கலாம், அதில் என்ன பிரச்சினை?
>
> அப்படிடீன்னா செம்மொழி என்பதை ஜெம்மொழி என படிக்கலாமா?
>
இந்த மாதிரி வாதங்களைத் தமிழ் எத்தனையோ முறை கண்டிருக்கிறது.
செம்-மொழியில் உள்ள செம்- தமிழ்ச்சொல். FYI.
> > கணேசன் என்றெழுதி gaணேசன் எறு படிப்பதில்லையா?
>
> சிலர் அப்படி படிப்பதில்லை., ஏனெனில் சிலர் ஆங்கிலத்தில எழுதும் போது
> Kanesan என எழுதுகின்றனர். தேடிப்பாருங்கள் , நிரைய Kanesan கள்
> இருக்கின்றனர். அது அவர்கள் அதிகாரபூர்வமான பெயர்கள் - செயபாசுகரன் போல்
> திணிப்பு பெயர்கள் இல்லை.
செயபாசுகரன் என்று நல்ல தமிழில் எழுதலாம்.
நா. கணேசன்
> எனவே, செயபாசுகரன் என்பதை ஜெயபாஸ்கரன் என்று
> படிக்கலாம், அதில் என்ன பிரச்சினை?
அப்படிடீன்னா செம்மொழி என்பதை ஜெம்மொழி என படிக்கலாமா?
> கணேசன் என்றெழுதி gaணேசன் எறு படிப்பதில்லையா?
>
> செயபாசுகரன் என்று நல்ல தமிழில் எழுதலாம்.
>
> நா. கணேசன்
நல்ல தமிழோ இல்லையோ, நிச்சயம் நீங்கள் எழுதலாம். உங்கள் மகன்,
பேரப்பசங்களுக்கு அப்படி பெயரை கொடுக்கலாம். ஆங்கில ஆவணங்களில்
Seyapaasukaran என கொடுக்கலாம், தப்பே இல்லை.
இஷ்யூ எது `நல்ல தமிழ்` என்பது அல்ல. இஷ்யூ ஒருவர் பெயரை மற்றவர்கள்
மாற்றவேண்டும்.
On Aug 24, 6:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/24 விஜயராகவன் <viji...@gmail.com>
>
>
>
> > > எனவே, செயபாசுகரன் என்பதை ஜெயபாஸ்கரன் என்று
> > > படிக்கலாம், அதில் என்ன பிரச்சினை?
>
> > அப்படிடீன்னா செம்மொழி என்பதை ஜெம்மொழி என படிக்கலாமா?
>
> > > கணேசன் என்றெழுதி gaணேசன் எறு படிப்பதில்லையா?
>
> metRaas என்று உச்சரிப்பவர்கள், poobadhi என்று உச்சரிப்பவர்கள்.... என்று
> யாரையுமே கணேசன் சந்தித்ததில்லை என்று தெரியவருகிறது. வாஅழ்க.
> --
:)
மெட்ராஸ், பூபதி - இவற்றில் வாய்சிங் ஒலிப்பு வேண்டுவோர்
ட், பூ தடிப்பெழுத்தாய் எழுதிக் காட்டலாமே.
ஈழத்து நண்பர் கருணாகரமூர்த்தி, முன்பு கருணாஹரமூர்த்தி என்று
எழுதிக்கொண்டிருந்தார். எது சரி?
க.>
2009/8/24 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Aug 24, 7:23 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இந்த பூபதி, மெட்ராஸ் பேச்சு வரும் போதே ஒரு சந்தேகத்தைக்
> கேட்டுத்தெளிந்து கொள்ளலாம்.
>
> ஈழத்து நண்பர் கருணாகரமூர்த்தி, முன்பு கருணாஹரமூர்த்தி என்று
> எழுதிக்கொண்டிருந்தார். எது சரி?
>
திருவரங்கத்து மோஹனரங்கன், மோகனரங்கன் என்று எழுதுகிறார்.
எதுசரி? ஆலந்தூர் மோகனரங்கன் என்ற சந்தக் கவிஞரும் இருக்கிறார்.
நா. கணேசன்
> க.>
>
> 2009/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>:
> செயபாசுகரன் என்று நல்ல தமிழில் எழுதலாம்.
>
> நா. கணேசன்
நா.கணேசன்
Jeyabaskaran, jeyabaskar என கூகிளில் போட்டு தேடினால் பல பெயர்கள்
வருகின்ரன. ஆனால் seyabaskar, seyabasukaran , என போட்டால் ஒரு பக்கமும்
இல்லை. இதிலிருந்து என்ன தெரிகின்றது, எந்த தமிழரும் தங்கள்
மனதுக்குள்ளெயே செயபாசுகரன் என சொல்லுவதில்லை, அதனால்தான் ஆங்கிலத்தில்
அப்படி எழுதுவதில்லை. போதுமா `தமிழர்கள்` எப்படி உச்சரிக்கின்றனர் என்பது?
On Aug 24, 7:29 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> Jeyabaskaran, jeyabaskar என கூகிளில் போட்டு தேடினால் பல பெயர்கள்
> வருகின்ரன. ஆனால் seyabaskar, seyabasukaran , என போட்டால் ஒரு பக்கமும்
> இல்லை. இதிலிருந்து என்ன தெரிகின்றது, எந்த தமிழரும் தங்கள்
> மனதுக்குள்ளெயே செயபாசுகரன் என சொல்லுவதில்லை, அதனால்தான் ஆங்கிலத்தில்
> அப்படி எழுதுவதில்லை. போதுமா `தமிழர்கள்` எப்படி உச்சரிக்கின்றனர் என்பது?
செயபாசுகரன் நல்ல தமிழ்.
*கருணாகரமூர்த்தி* *கருணாஹரமூர்த்தி*
கரன் - செய்பவன்
ஹரன் - கவர்பவன்
எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளலாம்.
தேவ்
எந்த அடிப்படையில் இப்படி சர்டிஃபிகேட் கொடுக்கின்றீர்கள்? யாருக்காக
இந்த சர்டிஃபிகேட்?
விஜயராகவன்
தமிழ் இலக்கண அடிப்படையில்.
On Aug 24, 7:49 am, "Maravanpulavu K. Sachithananthan"
<tamiln...@gmail.com> wrote:
> வணக்கம்.தமிழ் வரிவடிவங்களுக்குள் எந்த மொழியின் ஒலியையும் எழுதும் வல்லமையைச்
> செய்து காட்டிய எடுத்துக்காட்டுகள், சீவக சிந்தாமணி முதலாக ஏன்? அதற்கும்
> முன்பாக இருந்த நம் முன்னோர்களான இலக்கியப் படைப்பாளிகள். தொல்காப்பியர்
> முதலாக, நன்னூலார் ஊடாக வீரசோழியத்தார் வரையான இலக்கண வரைவாளர்கள்.
>
> இவர்களையும் ஒத்த மற்றவர்களையும் உளத்திருத்திச் சக்கரத்தை மீளக் கண்டுபிடிக்க
> முயலும் பணியில் காலத்தை வீணாக்கலாமா? காலம் பொன்னானது.
>
> வால்மீகியின் பெயர்ச் சொற்களை இயல்பாகத் தமிழ் வரிவடிவுக்குள் ஆண்டதால்,
> ஒலிபெயர்ப்புச் சீர்மைக்கும் சொல்லாட்சிக்கும் கம்பன் எடுத்துக் காட்டு.
> பின்னர் வந்த மாபெரும் புலமையாளர் பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாளம்,
> காலத்தைக் கடந்து நிலைகொள்ளவில்லைக் கம்பனைப்போல.
>
> சுஜாதாவின் தமிங்கிலமும் பெரியவாச்சான் பிள்ளையின் தொடர்ச்சியே.
>
> கல்வெட்டுத் தமிழில் கிரந்த வரிவடிவு விரவியதால் இன்றும் இடக்கு முடக்காக
> இருக்கிறது.
>
> மணிப்பிரவாளம், தமிங்கிலம் யாவும் வற்றுக்கால ஆற்றுமணல் புற்களாவன.
> செந்தமிழ் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவன.
>
நன்றாகச் சொன்னீர்கள். செயங்கொண்டார் என்று எழுதுவது தமிழில்
வழக்கமல்லவா? ஆழ்வார்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள்?
இப்பொழுது வல்லின எழுத்தை தடிப்பெழுத்தில் போடும் முறையும்
வசதியும் வேறு வந்துவிட்டது.
பலருக்கும் தமிழ் இலக்கணம், இலக்கிய மரபு தெரியாததால் நேரும் பிழை.
ஒரு தமிழ் எழுத்துக்கு பல பலுக்கல் ஒலிகள் என்னும் செய்தி
பரவலாக தெரிவதில்லை. மு. இளங்கோவன் போன்றோர்
நல்ல தமிழை எழுதிக் காட்டுவார்கள் என்று எண்ணுகிறேன்.
நா. கணேசன்
> காலம் பொன்னானது.
> நன்றி
>
> 2009/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
தொல்காப்பியர்ம் நன்னூல் முதலியவை கண்டுபிடித்த சக்கரம் மாட்டுவண்டிக்கு
பொருந்தும், ஆனால் அதே சக்கரம் ரயில்வண்டிக்கும் , விமானத்தும்
பொருந்தும் என நினைக்க முடியாது. அதனால் தற்கால ஊர்திகளின் சக்கரத்தை
செய்வது அவசியம்.
> சுஜாதாவின் தமிங்கிலமும் பெரியவாச்சான் பிள்ளையின் தொடர்ச்சியே.
சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜயமோகன் , ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற
பிரபல ஆசிரியர்களே அப்படிப்பார்த்தால் ஒரே வண்டியில் பயணம்
செய்கின்றவர்கள்.
> கல்வெட்டுத் தமிழில் கிரந்த வரிவடிவு விரவியதால் இன்றும் இடக்கு முடக்காக
> இருக்கிறது.
>
> மணிப்பிரவாளம், தமிங்கிலம் யாவும் வற்றுக்கால ஆற்றுமணல் புற்களாவன.
> செந்தமிழ் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவன.
செந்தமிழை எப்பொழுதோ காலம் அடித்துக் கொண்டு விட்டது, செந்தமிழில்
பேசுபவர்கள் 0.0001% கூட இருக்க மாட்டார்கள்
> நன்றி
நன்றி
On Aug 24, 8:16 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> செந்தமிழை எப்பொழுதோ காலம் அடித்துக் கொண்டு விட்டது,
தமிழ் படிப்பவர்களுக்கு இது உண்மை அல்ல என்பது தெரியும்.
செந்தமிழ் இலக்கியங்கள் இன்றும், என்றும் உருவாகிக் கொண்டுதான்
உள்ளன.
நா. கணேசன்
தடிப்பெழுத்து போட்டு இன்னும் ஒரு குழப்பப் பரிமாணத்தை
நுழைக்கின்றீர்கள்.
தமிழர்கள் பேச்சில் வேறுபாடுகள் இருக்கத்தான் போகின்றன. அதை ஓரளவு
சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்
கம்பநாட்டாழ்வானையும், அதே விண்ணெறியில் வரும் பெரியவாச்சான்
பிள்ளையையும் போட்டா போட்டிக்கு இழுக்க முடியாது.
கம்பன் கவிஞன்.
பெரியவாச்சான் பிள்ளை ஆச்சார்யன்.
இருவரும் சுத்தமிழர்கள். இருவருக்கும் வடமொழிப்புலமையுண்டு.
ஒருவர் தமிழில் காவியம் ஆக்குகிறார்.
மற்றவர் மதாச்சாரியர். அவருக்கு அத்துறை சார்ந்த ஆழ்ந்த விளக்கங்கள்
தரும் கடமையுண்டு. இன்றுவரை வேதாந்தம் பேச சங்கதம் (Sanskrit) தேவையாய்
இருக்கிறது. அம்மொழியில்தான் தமிழர்களே தங்கள் தத்துவ நூல்களைச்
செய்துள்ளனர். எனவே மணிப்பிரவாளமே இதற்கு ஏற்ற மொழி. இங்கு மொழி
முக்கியமல்ல. தத்துவ விளக்கம் முக்கியம். புரிதல் முக்கியம்.
சைவச்செல்வரான தாங்கள் முன்பும் இதுபோல் சடகோபனையும், ஆதிசங்கரரையும்
இணைத்து எழுதியிருந்தீர்கள். உங்கள் துறை சாராத மறை நிலங்களுக்குள்
புகும் போது கவனம் தேவை.
மணிப்பிரவாளம் என்பது பொதுமொழி அல்ல. அதைத்தமிழ் மொழி என்று யாரும்
இதுவரை யார் மீதும் திணித்தில்லை. ஒரு காலத்தில் பிரெஞ்சும், ஆங்கிலமும்
கலந்தொரு மொழியாடலுண்டு. அது புலவோர் மொழி. ஆங்கிலக்கவி சாசரின் பாடல்கள்
அப்படியே ஜெர்மன் மொழி. அதுவொரு காலத்தின் மொழி. வைணவ ஆச்சார்யர்களின்
மணிப்பிரவாளம் அம்மட்டே!
கம்பநாட்டாழ்வானையும், பெரியவாச்சான் பிள்ளையையும் இப்படி நோக்கக்கூடாது.
ஆச்சார்ய சீலரான மணவாளமாமுனிகள் தமிழ்க் கவிதை செய்யும் போது அதன்
இலக்கணப்படி சுத்த தமிழ்க்கவிதையே யாத்துள்ளார். ஆனால் அவரது பிரவச்சனம்,
மணிப்பிரவாளத்தில் அமையும்.
புரியும் என்று நம்புகிறேன்.
கண்ணன்
2009/8/24 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
நல்ல
தமிழ்ப் பெயர்களை மாற்றிவிட்டு எழுத முடியவில்லை என்று பேசலாமா? பஞ்சின்மெல்லடியாளை மிருதுபாத நாயகியாக மாற்றி அங்கயல்கண்ணியை மீனாக்ஷியாக மாற்றி விட்டு எப்படிச்சொல்வது என்று கேட்டால் ?இத்தனை
ஆண்டுகள் வாழும் வெல்லத்தமிழ் குழும இழைகளில் அருமையாக எழுதும் அனைத்து நண்பர்களையும் படிக்கும்போது என்றும் வெல்லும் என்பது மேலும் உறுதிப் படுகிறது..தமிழில்
ஒரு த,ப,ச,ட இருப்பதால் ஒரு வசதி ! அழகி பயன்படுத்துவது எளிது !வணக்கம்
சொ
.வினைதீர்த்தான்நா.கணேசன்
நீங்களே ”மெட்ராஸ், பூபதி - இவற்றில் வாய்சிங் ஒலிப்பு வேண்டுவோர்
ட், பூ தடிப்பெழுத்தாய் எழுதிக் காட்டலாமே. ” என எழுதுகிறீகள்;
அதில் தொல்காப்பியர் எங்கே, செந்தமிழ் எங்கே? உங்கள் நடைமுறையிலேயெ அது
இல்லை. அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் நாம் செய்யமுடியாதவற்றை,
செய்யாதவற்றை விரும்புவது சாதுர்யம் இல்லை.
விஜயராகவன்
கணேசனாரே!
ஒருபுறம் conservative வாகவும்
மறுபுறம் reformistஆகவும் இருப்பது கடினம்.
காலத்தைப் பின்தள்ள முயலுதல் மிகக்கடினம் ;-)
எல்லாம் தமிழுக்கு வளம் சேர்த்தால் நலம்தான். நான் பிடித்த முயலுக்கு
மூன்றுகால் என்று சொல்லாதவரை!
க.>
சொந்த பெயர் எழுதுவதற்கு , எதற்கு `இலக்கண அடிப்படை`. ஒருவர் தன் பெயரை
சியபாசுரன் அல்லது சேயபசுரன் என்றெழுதினாலும் சரிதான். ஒரு சொல், அது
ஒருவர் பெயரை குறிப்பிடும் போது, ஒரு இலக்கணமும் தேவை இல்லை.
On Aug 24, 8:51 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> கணேசனாரே!
>
> ஒருபுறம் conservative வாகவும்
> மறுபுறம் reformistஆகவும் இருப்பது கடினம்.
>
சீர்திருத்தம் என்பது தமிழ் இலக்கணத்துக்குத்
தடை போடுவதல்ல. இலக்கண முறைப்படி
எழுதிக் காட்டவும் தமிழ்ச் சமுதாயத்தில்
ஒரு குழாம் எப்பொழுதும் இருக்கவேண்டும்
என்பது எம் அவா.
மறவன்புலவார் சொல்வதுபோல், திசைச்சொற்கள்
பல திசைகளில் இருந்து தமிழை வந்தடையும்.
நல்ல தமிழ் ஆகும்போது கம்பன், ஆழ்வார்கள்,
ஆறுமுக நாவலர், எழுதினாற்போலாகும்
என்று எடுத்துச் சொல்லவும் பேராசிரியர்கள் வேண்டும்.
voicing காட்ட தடிப்பெழுத்து போன்றவையும்
கொடுக்கலாம்.
நா. கணேசன்
> காலத்தைப் பின்தள்ள முயலுதல் மிகக்கடினம் ;-)
இலக்கணம் என்பது எந்த சமயத்திலும், எல்லோருக்கும் (ஒரு மொழியை
பேசுபவர்கள்) அவசியம். அது எதோ ஒழு ஸ்பெஷல் குழாத்தின் கைப்பாவை என வீணாக
mystify செய்கின்றீரக்ள். தமிழ் இலக்கணம் எல்லா தமிழ் பேசுபவர்களுக்கும்,
எந்த துறையில் எழுதுபவர்களுக்கும் இன்றியமையாதது.
NG
How do you know?
Tamil grammar.
திரு கணேசன், ஜெயபாஸ்கரின் எண்ணத்தை கேட்டால் , நீங்கள் வேறொருவரின்
எண்ணத்தை சுட்டிக் காட்டுகிறீர்கள். நீங்கள் he (ஜெயபாஸ்கர்) agrees.,
என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லாமல் சொல்கிறீர்கள்.
நான் நா.கணேசன் என்ன நினைக்கிறார் என தெரிய வேண்டுமானால்,
நா.கணெசனைத்தான் கேட்பனே தவிற, மற்றவர்களை கேட்கமாட்டேன் . ஒருவர்
இப்படித்தான் தன்னைப் பற்றி சிந்திக்கிறார் என அஸ்யூம் செய்வது, ரொம்ப
discourteous ஆகும்.
விஜயராகவன்
ஆகா, என்ன நல்ல தொல்காப்பிய, செந்தமிழ்.
எவ்வளவோ பக்கப் படைப்பை காண்பிக்கலாம் - என்னை சரியாக விளித்தால். அது
கஷ்டம் ஒன்றுமில்லை, உங்கள் கீபோர்டில் J மாட்டிக்கொண்டு
செயலற்றுவிட்டால், என் கையொப்பத்தை காபி-பேஸ்ட் செய்யணும் அவ்வளவுதான்
விஜயராகவன்
::நச்::
On Aug 25, 6:56 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Aug 25, 2:30 pm, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
>
> > திரு.விசயராகவன் அவர்கள் தமிழில் எழுதிய ஒரு பக்க படைப்பைப் படிக்க
> > விரும்புகிறேன்.
> > மு.இளங்கோவன்
> > புதுச்சேரி
>
>
> விஜயராகவன்