பெண்கள் வேலைக்குப் போவது சமூக அக்கறையற்ற செயல்: சங்கராச்சாரியார்

156 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 28, 2016, 4:01:23 PM3/28/16
to மின்தமிழ்

நன்றி:  https://dheivathinkural.wordpress.com/பெண்கள்-உத்தியோகம்-பார்/

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது

POSTED ON 

அப்புறம், கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது. முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு, அவளே சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாக விடுவது தகப்பனாருக்கு ரொம்ப அவமானம் என்ற உணர்ச்சியோடு வேலைக்கு அனுப்பினார்கள். நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக என்ன ஆகியிருக்கிறது என்றால் ‘குளிர்’ விட்டு விட்டது. ஜனகர் மாதிரியான ராஜ ரிஷிகளே கன்யாப் பெண்ணைக் கல்யாணமாகாமல் வைத்துக் கொண்டிருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி என்று பயந்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். அந்த விவஸ்தை இப்போது கெட்டுவிட்டது; கட்டுவிட்டுப் போச்சு! அவமானமாக முதலில் நினைத்தே இப்போது நாகரிக முன்னேற்றத்துக்கு அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன ஸ்திதி அடைந்திருக்கிறது. உத்யோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் ப்ரமோஷன் ஆவதற்கு அநுக்கிரஹம் கேட்கிறதும், நானும் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக்கொள்வதாகவும் ஆகியிருக்கிறது!

சீர்திருத்தக்காரர்கள், ‘ஸ்திரீகள் காலேஜில் படித்து உத்தியோகம் பண்ணுவது பெரிய முன்னேற்றம்; இதனால் முன்னே பண்ணின அநீதி போய்விட்டது’ என்கிறார்கள். முன்னே ஸ்திரீகளுக்கு அநீதி பண்ணவேயில்லை என்பது என் கட்சி. அப்படிப் பண்ணியிருந்தால், புருஷனுக்குத்தான் பண்ணியிருந்தது என்றுகூட வேடிக்கையாகச் சொல்வேன். ஏன்? ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது. இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது. பதியின் இஷ்டத்தை அநுஸரிப்பதால் இவளுக்குத் தன்னிஷ்டம், மானாவமானம் எல்லாம் போய் அஹங்காரம் கரைந்து, மனோநாசத்துக்கு ரொம்பவும் கிட்டே போய் விடுகிறாள். மனஸை எங்கேயோ பூர்ணமாக அர்ப்பணம் பண்ணி, சரணாகதி என்று இருந்துவிட்டால் அப்புறம் மனோநாசம் பக்கத்திலேயே தானே? இன்றைக்கு உத்தியோகம் பார்க்கிற பெண்கள் பெறுகிற ப்ரமோஷனுக்கெல்லாம் மேலான ப்ரமோஷன் இப்படி அவளை ஆத்மபரிசுத்தி பண்ணி உச்சத்துக்குத் தூக்குவதுதான். இப்படி பதியிடம் மனஸை அர்ப்பணம் பண்ணியே தான் மஹா பெரிய ரிஷிகளை விட அதிகமான சக்திகளை நம் தேசத்து பதிவிரதா ஸ்திரீகள் பெற்றிருக்கிறார்கள். அவள் பெய் என்றால் மழை பெய்கிறது என்று திருவள்ளுவர் சொல்கிறார். ஸூரியனை உதிக்காதே என்று அவள் சொன்னால் உதிப்பதில்லை! செத்த புருஷனை யமதர்ம ராஜாவிடமிருந்து அவளால் திரும்பவும் வாங்கிக் கொண்டு வர முடிகிறது. எந்த ரிஷிக்கும், தெய்வத்துக்குமே கூட கொடுக்காத உசந்த ஸ்தானத்தை இப்பேர்ப்பட்ட பதிவிரதைகளுக்குத்தான் நம் சாஸ்திரமும் சம்பிரதாயமும் தருகிறது. அவள் தெய்வங்களின் மேலேயே தண்ணியைத் தெளித்து தன் குழந்தைகளாக்கிக் கொண்டு விடுகிறாள் என்று புராணத்தில் பார்க்கிறோம். ஆகையால் பெண் எப்படியிருந்தால்நிஜமான உயர்வைப் பெறுவாளோ, அதைச் சொல்லி அப்படிப்பட்டவளைக் கோவில் எடுத்துக் கும்பிடுகிற நம் சாஸ்திரம் ஒரு நாளும் ஸ்திரீயை மட்டம் தட்டவில்லை. சீர்திருத்தவாதிகள்தான் அவளை அப்படி வளர முடியாதபடி மட்டப்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆக விவாஹம் என்பது புருஷனை சுத்தப்படுத்துகிற அநேக ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரீயையோ அத்தனை ஸம்ஸ்காரங்களும் இல்லாமலே அவற்றின் முடிந்த பயனான பூர்ணத்துவத்தைப் பெறப் பண்ணுவதாகும். இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்தின் ஸாரத்தை விட்டுச் சக்கையாக ஒப்புக்கு ஏதோ இப்போது நடக்கிறது. விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் கிருஹஸ்தாச்ரமும் லாவண்யம், வீர்யம், இந்திரிய ஸெளக்யம் இவற்றை மட்டும் குறித்த விஷயமல்ல என்பதையும், ஜன்மா கடைத்தேற வழியாகவே அது வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் சாஸ்திரம் சொல்லியிருப்பதே சரி என்ற அறிவு உண்டாகும்.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி ‘கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்; இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதக்ஷிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும், அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக [இழுக்காக] நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை [குழந்தை வளர்ப்பு] முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எகனாமிக் [பொருளாதார] ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா? ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார் மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது. ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.

வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. அவற்றிலே ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல் ஜன்மா முழுதும் படித்துக் கொண்டு ஸந்தோஷமாக இருக்கலாம். பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம். கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது. ஆத்ம ஸ்வதந்திரத்துக்கு வழியாக ஆனந்தமாகவே இருக்கும். ஸ்திரீத்வத்தயும் இழந்து கொண்டு துராசைகளைப் பெருக்கிக் கொண்டு உத்யோகத்திற்குப் போவதைவிட இதுதான் சிரேயஸ். ஸ்வாபாவிகமாகவும் [இயல்பாகவும்] பெண்களுக்கு எடுத்தது இதுவே. வீட்டில் அடைபட்டில்லை என்று ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?

சொல்லி என்ன பிரயோஜனம்? அவரவர்க்கும் ஸ்வயநலம் என்று அவரவரும் நினைத்துக் கொண்டிருக்கிற ஒன்று தான் முக்கியமாக இருக்கிறதே தவிர சமூகத்தில் பிறத்தியார் கஷ்டப்பட நாம் காரணமாய் இருக்கக் கூடாது என்ற நியாய உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லை. புருஷன் பெண்டாட்டி என்று சில குடும்பங்களில் இரட்டை சம்பாத்தியமும், வேறு சில குடும்பங்களிலோ இரண்டு பேரில் ஒருத்தருக்கும் உத்தியோகம் இல்லாமல் பரிதாபமாகவும் இருக்கிற நிலையில் கல்யாணமான பிறகாவது பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டால், அத்யாவசியமாக வேலை பார்த்தே ஜீவிக்க வேண்டிய ஒரு புருஷனுக்கு அந்த வேலை கிடைத்து அந்தக் குடும்பம் உருப்படுமே என்ற பிரக்ஞை வரவேண்டும். பெண்களை சரி-சமம் பண்ணுகிறோம் என்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

சரி நிகர் சமம் என்கிற வாதம் எதில் வரலாம், எதில் வரக்கூடாது என்ற வியவஸ்தையே இக்காலத்தில் தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்க வேண்டும். அப்படித்தான் பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் ஒரே விதமாக ஆகவேண்டும்; அதுதான் சரி சமம்’ என்ற வாதமே அடியோடு தப்பு. அப்படி ஆக்கினால் இயற்கையான வாழ்க்கைமுறையே பாழாகிவிடும். ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கு நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஓடுவதில் individual ஆகவும் [தனி நபரளவிலும்] நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை; குடும்பம், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.

இயற்கைப்படி பெண்கள்தானே பிள்ளை பெற வேண்டும் என்று வைத்திருக்கிறது? நாம் எவ்வளவு ஸமத்வச் சண்டை போட்டாலும் அதை மாற்றமுடியாதல்லவா? பிள்ளையைப் பெற்றவளே அதை சவரக்ஷணை பண்ணுவது, அதற்காக கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை.

இறையடியான்

unread,
Mar 30, 2016, 1:38:10 AM3/30/16
to mintamil
//கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது//

இந்த காலத்தில் இது பொருந்தாது ஏனெனில் இருவரும் வேலைக்கு சென்றால்தால் கொஞ்சமாவது கடனில்லாமல் வாழமுடியும் என்று நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல - அடித்தட்டு வர்க்கமும் கூறுகிறது ஏனெனில்

முன்பெல்லாம் பள்ளி கூடத்தை சர்க்கார் நடத்தினார்கள் அதில் பாடமும் ஓரளவு சொல்லி கொடுத்தார்கள் தற்போதெல்லாம் தனியார் பள்ளிகள் வளர்ந்து அவற்றில் மட்டுமே ஓரளவு பாடங்களை சரியாக சொல்லி கொடுக்கிறார்கள் அரசு பள்ளிகளில் பல பள்ளிகள் விதிவிளக்காக நல்லா சொல்லி கொடுக்கிறாங்க இருந்தாலும் இந்நிலை பொதுவா மோசமானதாக இருக்கிறது

அதனால் படிப்பு செலவே 50% போகிறது இதை ஈடுகட்ட பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்

யேசுராஜன்

truth is pathless land

2

தேமொழி

unread,
Mar 30, 2016, 2:01:50 AM3/30/16
to மின்தமிழ்
தான் வாழும் வாழ்கை சூழ்நிலைக்கேற்ப ....

ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், தனது  இலக்கு எது என்பதை எல்லாம் ஒரு பெண்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.

குறிப்பாக இதிலிருந்து நிறுவன அமைப்பு முறைகள் (அரசும், மதமும்) பெண்களை மூளைச் சலவை செய்வதையோ, அல்லது மாறுபட்ட முடிவு எடுப்பதை இழித்துரைப்பதையோ செய்யாமல் விலகி நிற்க வேண்டும். 

சட்டத்திற்குட்பட்டு பெண்கள் எடுக்கும் அவர்களது முடிவை செயல்படுத்த உதவி செய்வதை மட்டுமே செய்ய வேண்டும்  

 ..... தேமொழி

இறையடியான்

unread,
Mar 30, 2016, 2:33:05 AM3/30/16
to mintamil
//குறிப்பாக இதிலிருந்து நிறுவன அமைப்பு முறைகள் (அரசும், மதமும்) பெண்களை மூளைச் சலவை செய்வதையோ, அல்லது மாறுபட்ட முடிவு எடுப்பதை இழித்துரைப்பதையோ செய்யாமல் விலகி நிற்க வேண்டும். //
அரசு மதத்திற்கு சப்போர்ட் செய்வதும் மதம் அரசிற்கு சப்போர்ட் செய்வதும்தான் காலம் காலமா செய்து வருகிறார்கள் - பெண்களுக்கான ஓட்டுரிமைக்கே பெண்கள் போராட வேண்டி இருந்தது

எல்லா நிறுவன அமைப்புகளும் பெண்களை ஒடுக்க நினைப்பது ஏன் ?

ஏனெனில் பெண்களை ஒடுக்கி அதன் மூலம் மொத்த சமூக அமைப்பையும் கட்டு கோப்பில் கொண்டு வருவது

சர்ச்சுக்கு வந்தால் இப்படி சாமி கும்பிடனும் என்பது முதல் அனைத்தையும் பெண் தான் குழந்தைக்கு கற்று கொடுக்கிறாள் எனவே தாங்கள் எதையெல்லாம் புனிதம் என நினைக்கிறார்களோ அதை பெண்களிடம் சொல்லிடுறாங்க

யேசுராஜன்

truth is pathless land

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 30, 2016, 4:33:38 AM3/30/16
to மின்தமிழ்

On Tuesday, March 29, 2016 at 11:33:05 PM UTC-7, இறையடியான் wrote:
//குறிப்பாக இதிலிருந்து நிறுவன அமைப்பு முறைகள் (அரசும், மதமும்) பெண்களை மூளைச் சலவை செய்வதையோ, அல்லது மாறுபட்ட முடிவு எடுப்பதை இழித்துரைப்பதையோ செய்யாமல் விலகி நிற்க வேண்டும். //
அரசு மதத்திற்கு சப்போர்ட் செய்வதும் மதம் அரசிற்கு சப்போர்ட் செய்வதும்தான் காலம் காலமா செய்து வருகிறார்கள் - பெண்களுக்கான ஓட்டுரிமைக்கே பெண்கள் போராட வேண்டி இருந்தது

எல்லா நிறுவன அமைப்புகளும் பெண்களை ஒடுக்க நினைப்பது ஏன் ?

ஏனெனில் பெண்களை ஒடுக்கி அதன் மூலம் மொத்த சமூக அமைப்பையும் கட்டு கோப்பில் கொண்டு வருவது

சர்ச்சுக்கு வந்தால் இப்படி சாமி கும்பிடனும் என்பது முதல் அனைத்தையும் பெண் தான் குழந்தைக்கு கற்று கொடுக்கிறாள் எனவே தாங்கள் எதையெல்லாம் புனிதம் என நினைக்கிறார்களோ அதை பெண்களிடம் சொல்லிடுறாங்க

ஒரு சிலர் வாழ மற்றவரை அடக்கி வைப்பது சமூக வாழ்க்கை முறையின் அடிப்படை...

அதை அதிகாரம் மூலமாகவும், ஏமாற்றுவதன் மூலமாகவும்  நிலை நிறுத்திக் கொள்வார்கள். 

சோம்பேறிகளான ராஜா ராணி தேனீக்களுக்கும் சுகமாக வாழ வேலைக்கரத் தேனீக்கள் தேவை.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலின் முதல் அத்தியாயத்தில்  அவர் பெண்ணின் நிலைமைக்கு காரணங்களை  விளக்குவார். 

இந்த இழையில் பெரியவா பதிவைத் தொடர்ந்து 

அடுத்து பெரியாரின் கோணங்களையும் போட்டால் வேறுபாடு நன்கு  தெரியும்.

..... தேமொழி

யேசுராஜன்

truth is pathless land

2016-03-30 11:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, March 29, 2016 at 10:38:10 PM UTC-7, இறையடியான் wrote:
//கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது//

இந்த காலத்தில் இது பொருந்தாது ஏனெனில் இருவரும் வேலைக்கு சென்றால்தால் கொஞ்சமாவது கடனில்லாமல் வாழமுடியும் என்று நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல - அடித்தட்டு வர்க்கமும் கூறுகிறது ஏனெனில்

முன்பெல்லாம் பள்ளி கூடத்தை சர்க்கார் நடத்தினார்கள் அதில் பாடமும் ஓரளவு சொல்லி கொடுத்தார்கள் தற்போதெல்லாம் தனியார் பள்ளிகள் வளர்ந்து அவற்றில் மட்டுமே ஓரளவு பாடங்களை சரியாக சொல்லி கொடுக்கிறார்கள் அரசு பள்ளிகளில் பல பள்ளிகள் விதிவிளக்காக நல்லா சொல்லி கொடுக்கிறாங்க இருந்தாலும் இந்நிலை பொதுவா மோசமானதாக இருக்கிறது

அதனால் படிப்பு செலவே 50% போகிறது இதை ஈடுகட்ட பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்

தான் வாழும் வாழ்கை சூழ்நிலைக்கேற்ப ....

ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், தனது  இலக்கு எது என்பதை எல்லாம் ஒரு பெண்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.

குறிப்பாக இதிலிருந்து நிறுவன அமைப்பு முறைகள் (அரசும், மதமும்) பெண்களை மூளைச் சலவை செய்வதையோ, அல்லது மாறுபட்ட முடிவு எடுப்பதை இழித்துரைப்பதையோ செய்யாமல் விலகி நிற்க வேண்டும். 

சட்டத்திற்குட்பட்டு பெண்கள் எடுக்கும் அவர்களது முடிவை செயல்படுத்த உதவி செய்வதை மட்டுமே செய்ய வேண்டும்  

 ..... தேமொழி

யேசுராஜன்

truth is pathless land

2

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 30, 2016, 4:35:41 AM3/30/16
to மின்தமிழ்

முதல் அத்தியாயம்

கற்பு

கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி - படிப்பு என்பதுபோல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும். "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" என்கிற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை, அதாவது நாணயம், சத்தியம். ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் என்கின்றதான கருத்துகள் கொண்டதாக இருக்கிறது.

அதைப் பகாப்பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருளைப்பார்த்தால் அறிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும், அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்களே காணக் கிடைக்கின்றன.

அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு, கிரமமான கருத்துப் பார்க்கும்போது, இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும், கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. அதாவது சேஸ்டிடி (Chastity) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி வர்ஜினிட்டி (Virginity) என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே - எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கிறது என்பதைக்காணலாம். 

ஆகவே, கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல என்பதும்; அதுவும் ஆணோ, பெண்ணோ  ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்புப் போய்விடுகிறது என்கின்ற கருத்துக் கொள்ளக்கூடியதாயும் இருக்கின்றது. ஆனால், ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம். அதாவது பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய்  இருப்பதையே விரதமாகக் கொண்டவள், பதியைத் தவிர வேறு யாரையும் கருதாதவள் எனப்பொருள் கொடுத்திருப்பதுடன்; பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அடிமைத்தன்மையை இவ்வார்த்தை புலப்படுத்துகின்றது. 

ஆனால், தலைவி என்ற பதத்திற்கும், நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்று பொருள் குறிக்கப்பட்டிருப்பதாலும், அது அன்புகொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும், பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய, வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை,  அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் - நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும், கதைகளிலும், புராணங்களிலும் ஆண் - பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே, காமத்தையும், அன்பையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த இடத்தில் நமது திருவள்ளுவரின் நிலைமையும் எனக்குச் சற்று மயக்கத்தையே தருகிறது. அதாவது, குறளில் வாழ்க்கைத் துணை நலத்தைப்பற்றிச் சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும், பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றிச் சொல்லவந்த 9-ஆவது அத்தியாயத்திலும், மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும், தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக் கிடக்கின்றன. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும்; தன்னைக் கொண்டவன் என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துகள் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இவ்விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறளையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப் பார்த்த பிறகு, இந்த இரண்டு அதிகாரங்களும் அதாவது, "வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரமும், "பெண் வழிச் சேரல்" அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும், கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பானால் இம்மாதிரிக் கருத்துகளைக் காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். அதுபோல, பெண்களைப்பற்றிய தர்மசாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப்பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என்கின்ற வார்த்தைக்குப் பெண்களால்வியாக்கியானம் எழுத எற்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு "பதிவிரதம்" என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும் பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.

தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.  

இந்த விஷயத்தில் உலகத்தில் ரஷ்யா தவிர, வேறு நாடோ, வேறு மதமோ, வேறு சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. உதாரணமாக அய்ரோப்பிய தேசத்தில் பெண்களுக்குப் பலவித சுதந்திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும்புருஷன் பெண் சாதி என்பதற்காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வுக் கருத்துகள் நுழைக்கப்பட்டிருப்பதுடன், சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்கவேண்டியதாகவே ஏற்பட்டிருக்கின்றன.

மற்றும் சில சமூகங்களில் பர்தா என்றும், கோஷா என்றும், திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்கவேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போகவேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும், புருஷன் பல பெண்களை மணக்கலாம்; பெண்கள் ஏககாலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக்கொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும் நம் நாட்டில் ஒரு தடவை புருஷன் பெண்சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அந்தப் பெண்ணுக்கு சாகும்வரைக்கும் வேறு எந்தவித சுதந்திரமும் இல்லையென்றும், புருஷன் அப்பெண்ணின் முன்பாகவே பலபெண்களைக் கட்டிக்கொண்டு கூடி வாழலாம் என்றும், புருஷன் தன் மனைவியை தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு அவளுடன் ஒன்றித்து வாழாமலிருந்தும்கூட மனைவி புருஷனைச் சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமேயொழிய, இன்பத்திற்கோ, இச்சையைத் தீர்ப்பதற்கோ அவனைக் கட்டுப்படுத்த உரிமை இல்லை என்று கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று  சொல்வதற்கில்லாமல்  பெண் சமூகமும் ஒப்புக்கொண்டது இந்நிலைக்குக் காரணம் என்று   சொல்லவேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலகவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே, பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும். அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள்.  உண்மையாக, பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து,  இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழியவேண்டும்.

கற்புக்காகபுருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றகொடுமையான மதங்கள், சட்டங்கள் மாயவேண்டும்.

கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழியவேண்டும்.

எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும், நிர்ப்பந்தக் கற்பையும்தான் காணலாம். அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது.

------

இறையடியான்

unread,
Mar 30, 2016, 5:41:12 AM3/30/16
to mintamil
// ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது. இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது.//

இருவரின் கோணமும் வேறு வேறு பெரியார் பகுத்தறிவு வாதி பெரியவர் ஆன்மீகவாதி

இந்த உலகம் ஒரு நிழல் குடை நமது பேருந்து வந்ததும் சென்றுவிடும் ஒரு சின்ன இடம்

அதாவது பூமி என்பது கர்மாதீர்த்த இடம் இது பெரியவர் கருத்து

இந்த உலகம்தான் நிரந்தரம் இதுக்கு மேலே ஏதும் இல்லை இங்கே வாழுகிற வாழ்வில் எல்லாருக்கும் சமமா எல்லாம் கிடைக்கனும் என்பது பெரியாரின் கருத்து அதனால

கோணங்கள் மாறுது

யேசுராஜன்

truth is pathless land

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Mar 30, 2016, 7:44:30 AM3/30/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-28 22:01 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

நன்றி:  https://dheivathinkural.wordpress.com/பெண்கள்-உத்தியோகம்-பார்/

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது

POSTED ON JULY 25, 2014

ஒரே வரியில் சொல்வதென்றால் பெண்ணடிமைத்தனத்தை ஒரு வகையில் ஆலோசனை என்ற பெயரில் பிரச்சாரம் செய்ததற்கான சான்று இந்தப் பதிவு. 

தமிழகத்தில் பல சீர்திருத்தவாதிகள் மட்டும் சென்ற நூற்றாண்டில் இல்லாமல் இருந்திருந்தால் இத்தகையோரின் பிரச்சாரங்களால் ஏற்பட்டிருந்திருக்கும் பெண் சமூகங்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே மனம் சகிக்கவில்லை.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Oru Arizonan

unread,
Mar 30, 2016, 3:57:24 PM3/30/16
to mintamil
ஈ.வே.ரா அவர்களின் கருத்தைப் பதியத் தனி இழை துவங்கலாமே?   இங்கு அதை எழுதத்  தங்களுக்கு உரிமை இருக்கும்பட்சத்தில், இது பொருந்தாத உவமை, இவ்விழைக்குத் தேவையில்லாது என்றெழுத எனக்கும் உரிமையிருக்கிறது.
 ஆயினும், தலைப்பில் "சங்கராச்சாரியார்" என்று போட்டு, இழையைக்குழப்பவேண்டாமே, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடவேண்டாமே!  

சங்கராச்சாரியரும், ஈ.வே.ரா அவர்களும் எதிர்த் துருவங்கள்'  ஒருவர் சமயப் பெரியவர், இன்னொருவர் சமயத்தை எதிர்ப்பவர்.  தாங்கள் செய்வது, முதலாளித்துவத்தையும், கம்யூனிசத்தையும் ஒரே இழையில் எடுத்துபோட்டு உங்கள் நிலைப்பாட்டை நிறுவுவதைப்போல உள்ளது.

சிவப்பு மையில் ,பெரிய எழுத்தில் திரும்பத்திரும்ப எழுதவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  அப்படிச் செய்தால், எனக்கும் அவ்வாறு செய்யத்தெரியும்.
ஒரு அரிசோனன் 

Suba

unread,
Mar 30, 2016, 5:07:03 PM3/30/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-28 22:01 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

நன்றி:  https://dheivathinkural.wordpress.com/பெண்கள்-உத்தியோகம்-பார்/

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது

POSTED ON JULY 25, 2014

அப்புறம், கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது. முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு, அவளே சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாக விடுவது தகப்பனாருக்கு ரொம்ப அவமானம் என்ற உணர்ச்சியோடு வேலைக்கு அனுப்பினார்கள். நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக

​v​
என்ன ஆகியிருக்கிறது என்றால்
​​
‘குளிர்’ விட்டு விட்டது.

 ‘குளிர்’ விட்டு விட்டது என்பதை வாசிக்கும் போதே சிரிப்பு வந்து விட்டது.​:-))

ஜனகர் மாதிரியான ராஜ ரிஷிகளே கன்யாப் பெண்ணைக் கல்யாணமாகாமல் வைத்துக் கொண்டிருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி என்று பயந்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். அந்த விவஸ்தை இப்போது கெட்டுவிட்டது; கட்டுவிட்டுப் போச்சு! அவமானமாக முதலில் நினைத்தே இப்போது நாகரிக முன்னேற்றத்துக்கு அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன ஸ்திதி அடைந்திருக்கிறது.

​ஆக மிகத்தெளிவாக பெண்கள் வீட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று பெரியவர் சங்கராச்சாரியார் அவர்கள் ​கருத்து இருந்திருக்கின்றது.  

உத்யோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் ப்ரமோஷன் ஆவதற்கு அநுக்கிரஹம் கேட்கிறதும், நானும் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக்கொள்வதாகவும் ஆகியிருக்கிறது!

​ஏன் இப்படி செய்தார்? தான் கொண்ட கொள்கைப்பிடிப்பில் அத்தகைய பெண்கள் தம்மிடம் ஆசி வாங்க வரும்​
 
​போது தன் கருத்துப்படி அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கலாம்.

சீர்திருத்தக்காரர்கள், ‘ஸ்திரீகள் காலேஜில் படித்து உத்தியோகம் பண்ணுவது பெரிய முன்னேற்றம்; இதனால் முன்னே பண்ணின அநீதி போய்விட்டது’ என்கிறார்கள்.

​உண்மைதானே.​
 
முன்னே ஸ்திரீகளுக்கு அநீதி பண்ணவேயில்லை என்பது என் கட்சி. அப்படிப் பண்ணியிருந்தால், புருஷனுக்குத்தான் பண்ணியிருந்தது என்றுகூட வேடிக்கையாகச் சொல்வேன். ஏன்? ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது.

​அழகான கற்பனைச் சிந்தனை. இப்படியே நம்பிக்கொண்டிருக்கலாம்.

இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது.

​இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கும் அந்த தர்மசாத்திரத்தை எழுதியவர் அல்லது எழுதியவர்களைப் பற்றி அறிந்தோர் கூறினால் நன்று. இப்படி அறிவுக்கு சிறிதும் ஒத்துவராத கருத்துக்கள் எப்படி பல ஆண்டுகளாக தொடர்ந்து சாத்திர நூற்களாக வைக்கப்பட்டு அதனை கடைபிடிக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று ஆராய வேண்டியது சமூகவியலாளர்கலின் பெரும் பணி என்பது உறுதி.

 அவள் பெய் என்றால் மழை பெய்கிறது என்று திருவள்ளுவர் சொல்கிறார். ஸூரியனை உதிக்காதே என்று அவள் சொன்னால் உதிப்பதில்லை! செத்த புருஷனை யமதர்ம ராஜாவிடமிருந்து அவளால் திரும்பவும் வாங்கிக் கொண்டு வர முடிகிறது.

​கதைகளையே திருப்பி திருப்பிச் சொல்வதும் அதனை மக்கள் தொடர்ந்து கேட்பதும் .. அதுதான் உண்மை என நம்பிக் கொள்வதும் மூளைச் சலவை உத்திகள். இவை தொடர்ச்சியாக நம் சமூகத்தில் நிகழ்ந்திருப்பதால் தான் இத்தகைய உண்மையற்ற கதைகளை கேட்கும் போது அதனை நோக்கி எதிர் கேள்வி கேட்கவே அச்சப்படும் ​
 
​சமூகமாக பெரும்பாலானோர் உருவாகி இருக்கின்றோம். ​

எந்த ரிஷிக்கும், தெய்வத்துக்குமே கூட கொடுக்காத உசந்த ஸ்தானத்தை இப்பேர்ப்பட்ட பதிவிரதைகளுக்குத்தான் நம் சாஸ்திரமும் சம்பிரதாயமும் தருகிறது. அவள் தெய்வங்களின் மேலேயே தண்ணியைத் தெளித்து தன் குழந்தைகளாக்கிக் கொண்டு விடுகிறாள் என்று புராணத்தில் பார்க்கிறோம். ஆகையால் பெண் எப்படியிருந்தால்நிஜமான உயர்வைப் பெறுவாளோ, அதைச் சொல்லி அப்படிப்பட்டவளைக்

​​
கோவில் எடுத்துக் கும்பிடுகிற நம் சாஸ்திரம் ஒரு நாளும் ஸ்திரீயை மட்டம் தட்டவில்லை.

​இப்படிச் சொல்லும் உபதேசங்களைக் கேட்கும் போது அவற்றைக்  கேட்கும் பெண்கள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வர். ஒரு வித மாயையில், தனக்கு  மன திருப்தி இல்லையென்றாலும் இருப்பதாக நினைத்துக் கொள்வர். உள்ளே இருக்கும் மனம் தன் முயற்சியை நாடினாலும் ​தன் உள்மனதின்  விருப்பங்களை சாதிக்க நினைக்கும் விசயங்களை மனதிற்குள் புதைத்து வைத்துக் கொள்வர், கொண்டனர்.

சீர்திருத்தவாதிகள்தான் அவளை அப்படி வளர முடியாதபடி மட்டப்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

​முற்றிலும் எதிர்மறையான விளக்கம்.​

ஆக விவாஹம் என்பது புருஷனை சுத்தப்படுத்துகிற அநேக ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரீயையோ அத்தனை ஸம்ஸ்காரங்களும் இல்லாமலே அவற்றின் முடிந்த பயனான பூர்ணத்துவத்தைப் பெறப் பண்ணுவதாகும். இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்தின் ஸாரத்தை விட்டுச் சக்கையாக ஒப்புக்கு ஏதோ இப்போது நடக்கிறது. விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் கிருஹஸ்தாச்ரமும் லாவண்யம், வீர்யம், இந்திரிய ஸெளக்யம் இவற்றை மட்டும் குறித்த விஷயமல்ல என்பதையும், ஜன்மா கடைத்தேற வழியாகவே அது வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் சாஸ்திரம் சொல்லியிருப்பதே சரி என்ற அறிவு உண்டாகும்.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி ‘கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்; இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதக்ஷிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும், அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக [இழுக்காக] நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை [குழந்தை வளர்ப்பு] முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எகனாமிக் [பொருளாதார] ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா? ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார் மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது. ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.

​தாயார் தகப்பனார்  மானமில்லாமல் பெண்களை வேலைக்கு அனுப்புகின்றார்கள், புருஷனும் அதனையே செகின்றான்  என இவர் சொல்வது மிகக்கடுமையான ஒரு வாக்கியம். 
புருஷன் தட்டிக் கேட்க வேண்டும் .. என்று ஒரு வகையில் ஆலோசனையும் சொல்கின்றார். 
​நான் ​
 நிச்சயமாக இப்படியெல்லாம் கூட இவர் நினைத்துப் பேசியிருப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருக்கின்றது.

​சுபா

தேமொழி

unread,
Mar 30, 2016, 5:48:52 PM3/30/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
அதற்குத்தான்  "get it straight from the horse's mouth" என்கிறார்கள்...இடையில் இருப்பவர்கள் திரித்து மறைத்து 'ஜிகினாவேலை' செய்வார்கள்.

இதையேதான் நீங்களும் ...
இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கும் அந்த தர்மசாத்திரத்தை எழுதியவர் அல்லது எழுதியவர்களைப் பற்றி அறிந்தோர் கூறினால் நன்று. இப்படி அறிவுக்கு சிறிதும் ஒத்துவராத கருத்துக்கள் எப்படி பல ஆண்டுகளாக தொடர்ந்து சாத்திர நூற்களாக வைக்கப்பட்டு அதனை கடைபிடிக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று ஆராய வேண்டியது சமூகவியலாளர்கலின் பெரும் பணி என்பது உறுதி.

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

by the way... அதையெல்லாம் (சாஸ்திரம்?) பெண்கள் படிக்கக்கூடாது என்று தடை போட்டு வைத்திருக்கிறார்கள் 

அதைக்குறித்து இராஜம் கிருஷ்ணனும் கடுப்படித்துள்ளார்கள்.

பிறகு தேடிப் போடுகிறேன்.

..... தேமொழி

​சுபா

தேமொழி

unread,
Mar 30, 2016, 7:19:21 PM3/30/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Wednesday, March 30, 2016 at 2:48:52 PM UTC-7, தேமொழி wrote:

On Wednesday, March 30, 2016 at 2:07:03 PM UTC-7, Suba.T. wrote:

2016-03-28 22:01 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

நன்றி:  https://dheivathinkural.wordpress.com/பெண்கள்-உத்தியோகம்-பார்/

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது 

​தாயார் தகப்பனார்  மானமில்லாமல் பெண்களை வேலைக்கு அனுப்புகின்றார்கள், புருஷனும் அதனையே செகின்றான்  என இவர் சொல்வது மிகக்கடுமையான ஒரு வாக்கியம். 
புருஷன் தட்டிக் கேட்க வேண்டும் .. என்று ஒரு வகையில் ஆலோசனையும் சொல்கின்றார். 
​நான் ​
 நிச்சயமாக இப்படியெல்லாம் கூட இவர் நினைத்துப் பேசியிருப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருக்கின்றது.

அதற்குத்தான்  "get it straight from the horse's mouth" என்கிறார்கள்...இடையில் இருப்பவர்கள் திரித்து மறைத்து 'ஜிகினாவேலை' செய்வார்கள்.

இதையேதான் நீங்களும் ...
இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கும் அந்த தர்மசாத்திரத்தை எழுதியவர் அல்லது எழுதியவர்களைப் பற்றி அறிந்தோர் கூறினால் நன்று. இப்படி அறிவுக்கு சிறிதும் ஒத்துவராத கருத்துக்கள் எப்படி பல ஆண்டுகளாக தொடர்ந்து சாத்திர நூற்களாக வைக்கப்பட்டு அதனை கடைபிடிக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று ஆராய வேண்டியது சமூகவியலாளர்கலின் பெரும் பணி என்பது உறுதி.

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

by the way... அதையெல்லாம் (சாஸ்திரம்?) பெண்கள் படிக்கக்கூடாது என்று தடை போட்டு வைத்திருக்கிறார்கள் 

அதைக்குறித்து இராஜம் கிருஷ்ணனும் கடுப்படித்துள்ளார்கள்.

பிறகு தேடிப் போடுகிறேன்.

இதோ கிடைத்துவிட்டது  இங்கே....
காலம்தோறும் பெண்
இராஜம் கிருஷ்ணன் 
...பக்கம் 35

முழுத் தகவலையும் கொடுக்காமால் ....
அங்கும் இங்கும் தணிக்கை செய்து, கொடுக்கத் தொடங்கினால் மூலநூல் என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டியது படிப்பவர் பொறுப்பு.

..... தேமொழி

இறையடியான்

unread,
Mar 31, 2016, 4:43:49 AM3/31/16
to mintamil
என்ன சொல்வது எந்த காலகட்டத்தில் எந்த சூழலில் பெண்களையும் தாழ்த்தபட்ட சனங்களையும் ஒடுக்கினார்களோ அந்த காலகட்டத்துக்கு பொருந்தாத போதும் அதை நியாயப்படுத்துவது சரியானதல்ல

பெண்களின் மீதான் ஒடுக்கு முறைக்கு வேதங்களை சாக்காக சொல்ல இயலாது ஏனெனில் பெண்கள் எல்லாம் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள்

ஆகவே எந்த அரசு மதம் அமைப்பாக இருந்தாலும் ஒரு ஜனநாயக பண்போடு இயங்க வேண்டிய காலகட்டம் இது

யேசுராஜன்

truth is pathless land

--

Pasupathi Selvam

unread,
Mar 31, 2016, 4:45:09 AM3/31/16
to மின்தமிழ்
"ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், தனது இலக்கு எது என்பதை எல்லாம் ஒரு பெண்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து"

இப்படி சொல்லிட்டு தமிழ் வாழ பெண்கள் 5 பிள்ளைகள் பெறனுன்னும் சொல்றாங்களே !
ஒண்ணுமே புரியலை !

Reply all
Reply to author
Forward
0 new messages