தாகூரின் பூஞ்சோலை காவலன் - விபுலாநந்தரின் மொழிபெயர்ப்பு - 1

31 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Jan 10, 2009, 1:11:52 AM1/10/09
to Minthamil
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர்.

ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றை விபுலாநந்த அடிகளார் "பூஞ்சோலைக் காவலன்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அதன் முதற் பகுதியைக் கீழே தந்துள்ளேன்.

புள்ளினங்க ளார்க்கும் புலரிப் பொழுதினிலே
பள்ளியறைத் தீபம் பதிந்தனைய - மெள்ள
அமளி துறந்தெழுந்தே னன்றலர்ந்து வாசங்
கமழுமலர் மாலையொன்று கைக்கொண் - டமிழ்தனையாய்
சோர்குழன்மேற் சூட்டினேன் சோர்விலா லான்வளிசேர்
சாளரத்தி னண்டை தனித்திருந்தேன் - கோளில்
இளங்கதிர்ச் செம்மை யியைந்த விடியல்
வளங்கெழு நீள்வழியே வந்தா - னுளங்கவரும்
நீர்மையான் றோள்சிரத்தி னித்திலத்தின் கோவைவெயில்
சாரவொளி வீசுந் தனிமகுடஞ் - சேரவே
பொங்குகின்ற வார்வத்தான் போந்தெங்கண் முன்றினின்றான்
எங்கே யவளென் றியம்பினான் - அங்கவன்றான்
சொன்னமொழி கேட்டேன் சுடரிழாய் நாணத்தால்
இன்னாமை யுற்றங் கிருந்தேனால் - அன்னாள்
இவளே வழிச்செல் லிளையோய் நீதேடும்
அவளிவளே யென்றே னலேன்.

(இன்னும் வரும்)

விபுலாநந்த அடிகள் வாழ்க்கைக் குறிப்பு:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

அன்புடன்
சிறீதரன்

naa.g...@gmail.com

unread,
Jan 10, 2009, 9:10:21 AM1/10/09
to மின்தமிழ், ravi....@gmail.com

சிறீதரன்,

பொள்ளாச்சிக் காரர்களுக்கு நண்பராய் விளங்கின
விபுலானந்த சாமியின் பழைய நூல் இது. நல்ல படைப்பு.
அவர், சித்பவானந்தர், சி. வி. வாசுதேவன்,
ஆனந்த குமாரசாமி, .... தொடர்பில் இர. தாகூர் இருந்தார்.
மலாயாவில் பல தமிழர்களைச் சென்று சந்தித்தார்.
தாகூர் - தமிழர் தொடர்புகள் நிறையப் படங்களுடன்
ஆய்ந்து யாராவது எழுதிப் பிரசுரிக்கணும்.
நூல் ஒரு தோட்டக்காரனின் காதல் என்று நினைக்கிறேன்.
ஆங்கில மூலம் வலையில் கிட்டலாம்.

அவரது இயற்பெயர் மயில்வாகனன். சரியா?

மட்டிக்களப்பு பெயர்க் காரணம்:
>இந்த 'மட்டி' என்ற உயிரினம்தான்
>மட்டக்களப்பு என்ற ஈழ ஊரின் பெயர்
>ஆகியிருக்கிறது.
>மட்டிக்களப்பு > வட்டிகளப்பு > Batic

பீச்ல மீன் பிடிச்சிருக்கீங்களா ?
http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_29.html
மட்டி பற்றி நல்ல எழுத்தாளர் செந்தழல் இரவி பதிவு இது,


--------

சிங்கை கமலம் அம்மை குறிப்பிட்டாற்போல்,
மண்ணான் > வண்ணான். அதுபோல்,
மட்டிக்களப்பு > வட்டிக்களப்பு > Batticola ஆகிவிட்டது.
(கன்னடத்தில் வயவர் என்னும் தமிழ்ச் சொல் basavar(u)
ஆவதுபோல். வயம் என்பது மூலம், காளை போன்ற வீரர்.
சங்கத் தமிழ்ச் சொல் வயம், வயவரோடு இணை கன்னட basavaru.
vRsabha என்னும் சங்கதச் சொல்லைவிட வயவர்
என்ற தமிழ்ச் சொல்லோடு இணைத்தல் பொருத்தம்.
வயவி (basavi) கன்னடத்தில் தேவதாசி, கணிகையர்
வயவி - வயவரின் பெண்பால். கொற்றவை வழிபாட்டில்
வயவர் பரத்தை வயவியரும் விரசமாகப் பேசி
ஆடுவர். இது சிந்து சமவெளியில் இருந்திருக்கிறது.

வயவன் ஆன காளை (தமிழ் சங்க இலக்கிய ஆமா.
Halley's comet பற்றிக் குறிப்பிடும் பாட்டில் ஆமா வரும், வடக்கே
gaur bull. பசுக்களுடன் hybrid ஆமாவுடன் செய்தலும் உண்டு.).
ஒன்று, தன் கீழடியில்
வயவி ஒருத்தியுடன் சேரும் சிற்ப முத்திரை சிந்து சமவெளியில்
உள்ளது. பின்னாளில் குதிரை இந்தியா வந்த போது,
காளை குதிரையாக மாற்றப்படுகிறது,
இதுவே இருக்குவேதத்தில் அசுவமேத யாகம்,
குதிரைக் கடியில் பட்டமஹிஷியின் புணர்ச்சி.

சங்க இலக்கியக் துடிநிலை, கொற்றவைநிலை
இவற்றில் போராடு வயவரும், கூடவே வயவிகள் - பரத்தையரும்
கொண்டாடும் விழா மாவிரதியர் விழா.
கொற்றவையை வழிபடுவர். இது தைந்நீராடல்.

மகாவிரதியர் ஜாலியான பேர்வழிகள் ~
மாவிரத நோன்பு ஆபஸ்தம்ப ஸ்ரௌத்த சூத்திரத்தில்:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9602&L=INDOLOGY&P=R5529

மாவிரதிகள், தமிழ் தொடர்பு, கொற்றவை பற்றி அறிய:

Parpola, Asko, (2000), Vāc as a Goddess of Victory in the Veda and her
relation to Durgā,
Zinbun, Kyoto University, 34, 2, pp. 101-143. The pdf file can be
downloaded at
http://repository.kulib.kyoto-u.ac.jp/dspace/handle/2433/48782

பிடிஎப்பை இறக்குமதி செய்தபின்னர், முக்கியமாக பிடிஎப்பின்
பக். 20-30 படிக்கவும். தமிழின் முக்கியமான செய்திகள்
(பேரியாழ், மண்முழா, கொற்றவை, ...) உள்ளன.

(செந்தழல் இரவி, இதுவரை தூங்காமல் இருக்கீங்களா?)

------------------------------

A. Parpola, SAvitrI and resurrection, 1998
Section 39. Shattered heads, vidyAdharas and gandharvas.
p. 285,
"There must have been many victims whose heads were smashed
beneath the fig trees, and they became Vidyaadhara spirits
living in those trees. The Gandharvas and Apsarases are
generally known for their love affairs as well as for their
skill in music and dance. It was musicians (mAgadha, sUta)
and coutesans (puMzcalI) who (as substitute victims)
performed the leading parts in the 'sacred marriage' rites
of the Veda (mahAvrata, vrAtyastoma, lamented slaughterer
of the horse in azvamedha)."

வித்யாதரர் = விச்சாதரர், கந்தருவர் = கந்தற்பர்
என்றாகும் தமிழில். குலவிச்சை என்று கரிகாலன்
பாட்டில் ஏன் வருகிறது என்றார் அல்லவா கண்ணன்.
தமிழ் வளர்த்த சமணர் போன்றோர் தமிழுக்கு
இயைத்து எழுதிய செயல் அது.

---------------------------------------------

ஜாலியாக மாவிரதி போல இரு என்று
கிளவித்தலைவன் சொல்வதாக
கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்
மமடலேறுமுன் பாடுகிறார்.
தலைவி சேராவிட்டால் பனங்கருக்கால்
ஆன குதிரையில்/ கோ-ஏறு கழுதையில் ஏறி
நண்பர்கள் இழுக்க, தலைவி படம் எழுதிய
கொடிப் பிடித்து ஊரறிய மடல் ஊர்வேன்
என்கிறான். அதர்வண வேதத்தில்
மடலேறல் முதலில் சொல்லப்படுவதாய்
எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

எனக்குக் கிடைத்த ஆயிரம்
ஆண்டுப் பழமையான ஒரு நூல்,
தமிழின் அரிய கருவூலம்:
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

(திருமணம் ஆகாச் சிறுமியர் பாடிப் பரவுவதுதான்
பாவைப் பாட்டு. ஆண்டாளும், மணிவாசகரும்,
சமணரும் பாவைப் பாட்டைப் பாடியுள்ளனர்.
மிகப் பழைய விழா - கொற்றவையை மணலால்
செய்த பொம்மை தான் பாவை.)


நூலுக்கு வருவோம்:
------------

விபுலாநந்தரின் நேரிசைக் கலிவெண்பாவை
ஒவ்வொரு கண்ணிக்கும் ஓரடி இடைவெளி
விட்டு தட்டச்சுங்கள். இழை பூர்த்தியானதும்,
ஒரு வலைப்பக்கமாக, ஆங்கில மூலத்துடன்
(அதுவே வங்க மொழியில் இருந்து பெயர்ந்திரருக்கலாம்.)
நூலகம்.நெட் தளத்தில் வைத்து விடுங்கள்.

--------

இடைக்கால இலக்கியங்கள் (பிரபந்தங்கள், தலபுராண்ங்கள்,
பலரறியா 19, 20 நுண்வரலாறுகள், தொன்மங்கள்
ஒவ்வொன்றாய் பிடிஎப் ஆக்கினால்
இங்கே 4-5 பேர் சேர்ந்தால் தட்டச்சிவிடலாம்.

மடல் நீண்டது. மன்னித்தருள்க.

நா. கணேசன்

> விபுலாநந்த அடிகள் வாழ்க்கைக் குறிப்பு:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%...

naa.g...@gmail.com

unread,
Jan 15, 2009, 4:33:34 AM1/15/09
to மின்தமிழ்

சிறீதரன்,

பூஞ்சோலைக் காவலனின் மீதமிருப்பவை?

எதிர்பார்த்துள்ளேன்,
நா. கணேசன்


On Jan 10, 12:11 am, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:

> விபுலாநந்த அடிகள் வாழ்க்கைக் குறிப்பு:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%...

Reply all
Reply to author
Forward
0 new messages