அன்புள்ள தேமொழி ,
செண்டு கையில் ஏந்தும் ஓர் படை
இந்த செண்டு பற்றிய இடுகையை அப் போதே பார்த்தேன்
முன்பே பேசிய பொருள்தான் என விட்டுவிட்டேன்
நீங்கள் சொல்வது போல் இது செண்டு அல்ல அப்படித்தான் பலர் எழுதி வருகிறார்கள்
நச்சினார்க்கினியர் எனும் உரைகாரர் போர் படையிகளில் கையைவிட்டு நீங்குவன நீங்காதன
என வகைப்படுத்தினார்
வேல் நீங்கும் ஆ னால் ஈட்டி நீங்காதது திரிசூலம் நீங்காது அம்பு நீங்கும்
செண்டு சா ட்டை நீங்காத வகை த்தது
உவே சாமிநாதையர் எழுதிய தன்வரலாற்றிலும் கூட ஓர் கருத்துரை வைத்துள்ளார் அவருக்கு நீண்ட
நாளாக இதன் சரியான பெயர் என்ன என வினா இருந்ததாம் ஓர் கோயில் பூசாரித்தான் தீர்த்தா ர் என எழுதினர்
மறைந்த மலேசியாவில் வாழ்ந்த நல்ல அறிஞர் மருத்துவர் JB அகத்தியர் என மடலிழை நடத்தியவர் ஓர் மடலிழையில் இது பற்றி எழுதியபோதும் நான் அதனில் எழுதியுள்ளேன்
திருவிளையாடலில் மேருவை செண்டால் அடித்த படலம் என ஓர் பகுதி உண்டு
இங்கு செண்டு என்பது கதை என்பதற்கு ஈடான ஓர் படையாகத்தான் படம் வரைந்திருப்பர்
செண்டு தமிழ் கதை திசைச்சொல்
அனுமன் கையிலும் திருமால் கையிலும் பல்லவர் கால குகைவாயில்காப்போரின் கையிலும்
உள்ளதுதான் செண்டு= கதை / கதையில் முனை நன்றாக உருண்டு திரண்டிருக்கும்
இந்த கதையின் முனையில் ஊமத்தங்காய் போல் முட் களுடன் இருந்தால் குமரி (%%%)என்று பெயர்
வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றிநுமருள் 5 புறநானூறு 295
இந்தவகை படை (ஆயுதம்) கிரேக்க நாகரீகத்திலும் உண்டு MACE
பூச் செண்டு எனும் சொல்லிலும் கூட செண்டு என்பது கைபிடியின் எதிர் முனையில் தடித்து மிகுத்த பொருளடைவுடன் இருப்பதால் தான் ஆயுதம் ஆகும் போது தடித்ததினால் ஓங்கி அடித்தா ல் அதிக திறன் கொண்டு தாக்கும் நாம் நாளு ம் பயன் கொள்ளும் சுத்தியல் முனையில் தடித்து மிகுத்த பொருண்மை (mass) உ டன் காணுதலை அறிவீர்கள்
சிவன் கையில் சண்டேசுரர்
கையில்
இருப்பது மழு எனப்படுவது ம் ஏறக்குறைய ஓன்றுதான் இதனுக்கு கூர்மையான வெட்டும் முகப்பும் உண்டு அவ்வளவே இதன் முனையில் அதிக பொருண்மை இருப்பதால் திறன் கூடுதலாகக் தாக்கும் என்பது அறிவியல் உண்மை
இப்போது
படத்தில் உள்ள அய்யனார் கையில் இருப்பது சா ட்டை சிற்பத்தில் சாட்டைக் கயிற்றினை உடைந்து போகாது வடிக்க முடியாதாகையால் அதனை நெளித்து நெளித்து காட்டுவர் திருமால் தேரோட்டியாக காட்டும் போதும்
மாடுமேய்க்கும் போதும் வலது கையில் இது இருக்கும் சா ட்டையைக் காணலாம் மன்னார்குடி (இராசகோபாலசாமி தெருவுலா திருமேனி-சான்று படம் காண்க-ஆமருவிய அப்பன்)
மேலும் அய்யனார் கையில் இருப்பது அங்குசம் என்பதும் உண்டு ஏனெனில் அவருக்கு ஊர்தி யானை
குதிரை,காளைமாட்டு வண்டியில் பயன் கொள்ளும் சாட்டை யானைக்கு பயன்படாது அதன் தடித்த தோலினால் அதனாலதான் கூர்மை யான அங்குசம் பயன்கொள்கின்றனர் பிள்ளையார் கையில் காணலாம்
பலநேரங்களில் ஒருவர் கொள்ளும் பொருள் தவறாகப்புரிந்து கொண்டு அல்லது தவறான சொல் பயன்கொண்டு பின் தவறானதே பழகி தவறு தொடர்வது உண்டு
சாத்தா என்று சொல்லி ஐயப்பன் என கேரளத்தில் வழங்குவது வேறெனக்கொள்வரும் உண்டு அவர்கையிலும் சிலநேரம் இந்தசாட்டைக்கண்டுள்ளேன் இவருக்கும் ஊர்தி யானை சிலநேரம் புலி யைக்கட்டுவர் மக்கள் மனம்போன போக்கில் கொள்ளுவதெல்லாம் நாள்காட்டிப்படங்களில் காட்டுவர் முழுமையான செய்தி மெய்யாகி விடாது
ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வம் எல்லாம் சாத்தான்கள்தான் அவையெல்லாம் மாறுபாடடைந்த நிலை கொண்டவை அவ்வளவே
சுந்தரமூர்த்தி நாயனார் கையிலும் செண்டு எனும் நெளிந்து
நெளிந்து
காணும்சாட்டை உண்டு
சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் சுந்தரருக்கு திருச்சுழியல் எனும் ஊரில் கனவில் தோன்றி யாம் இருப்பது கானப்பேர் (காளையார்கோயில்) என கையில் செண்டுடன் இதுவரை காணாத கோலம் காட்டினார் என எழுதியுள்ளார் (பாடல் எண் 3859) மேலும்
நிலைச் செண்டும் பரிசெண்டும்
(பாடல் எண் 3873)
பழகுதல் போர்பயிற்சியில் வருவதாக பாடியுள்ளார் நிலைச்செண்டு கதைக்கு ஈடானது பரிச்செண்டு சங்கிலியுடன் உள்ளது சுழற்றுவது
அதான்று பாடல் எண் 621 & 1164 ல் செண்டு அணையும் வெளி எனும் சொல்லால் போபர்க்கருவிகள் எறிந்து பயிலுமிடம் என பொருளாகின்றது
பாடல் எண் 330 ல் காளையின் முதுகில் உருன்டுதிரண்டிருக்கும் திமில் செண்டு எனக் காட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளையின் திமிலத்தானே பிடிப்பர்
அதான்று குலோத்துங்கசோழனுலகா கண்ணி 252 மகத நாட்டினை செண்டு கொண்ட படையினால் வென்றான் என்கின்றது
பெரியாழ்வார் திருமொழி 256 சுரிகையும் (இடுப்பில் சொருகு கத்தி) தெறிவில்லும் செண்டு கோலும் என ஓர் போர்ப்படையாகக் காட்டும் இங்கு செண்டு கோல் என்பது ஓர் கோலி ல் சங்கிலியால் தொங்கும் உருண்டு திரண்ட கோளகம் ஆ கு ம் (MACE )
திருமங்கையாழ்வார் 1923 பாசுரத்திலும் செண்டு சிலுப்பி எனவருதல் திருமால் தன் கையில் கொண்ட செண்டினை கதையை (இப்படியும் அப்படியும்) ஆட்டினார் என பொருள் காட்டும் வரிகள் காணலாம் திருமாலுக்கு கதை ஓர் ஆயுதம் அறிவீர்
அன்புள்ள தேமொழி எதற்கும் எடுத்துக்காட்டு கா ட்டலாம் எனவே அளவை முறையில்
LOGIC AND REASONING கொண்டு சிறப்பான பொருளே கொள்ளவேண்டும்
AS WE DO IN SCIENCE
true HYPOTHESIS WILL NOT CHANGE OVER TIME AND PLACE AND HAVE REPEATABILITY
இங்கு அய்யனார்கள் பலவிதமாகக் காணலாம்
எபோதும் சொல்லும் பொருளும் இயைந்து போகவேண்டும். சொல் ஒன்று சொல்லி பொருள் ஒன்று காட்டுதல்தான் பிழைபட்ட நிலை
1956 ல் என் (CALCULUS கணித) ஆசிரியர் இப்படி ஓர் எடுத்துக்காட்டு காட்டுவார்
பஞ்சபாண்டவர் (5) கட்டில்காலைப் போல் (4) (அப்போது கைவிரலில் காட்டுவது மூன்று -3) (வாய்ச்சொல்லில்) இரண்டுபேர் (2) கற்பலகையில் எழுதுவது ஒன்று (1)
------------------------------------------------------------------------
இவர் செண்டு கையில் ஏ ந்திய சாஸ்தா = அய்யனார் கற் சிற்பம் (அருங்கட்சியாகாமப்படம்)
-

-------------------------------------------------------------------------------