"பயணநேரம் என்னவோ மூன்று மணிநேரந்தான். ஆனால், வழியெங்கும் விரவிக் கிடந்த புத்தர் சிலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே சென்றதால்தான் அவ்வளவு நேரம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் புத்த மதம் தழைத்தோங்கியிருந்திருக்க வேண்டும். சைத்தியங்களும் விகாரைகளும் அங்கு இருந்திருக்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி என்ற பிக்குகளின் சரண கோஷங்கள் இரவு பகலாக அந்தப் பகுதிகளில் எதிரொலித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தெருவுக்கு ஒன்று வயலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அத்தனை புத்தர் சிலைகள் எப்படி வந்திருக்க முடியும்? அதிலும் அமர்ந்த நிலையிலிருந்த ஒரு சிற்பம் கிட்டத்தட்ட ஆறு அடிக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. இதில் வருத்தம் தரக்கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி என்னவெனில், 'இதை புத்தர் என்று யார் சொன்னது? இவர் கொங்குச் சாமியார்!' என்று அங்கே இருந்தவர்கள் கூறியதுதான்"
- ச. கமலக்கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு, தொடர்ந்து பல பெளத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட "தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம்" என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நூலில், தமிழகத்தில் காணப்பெறும் புத்தர் சிலைகளென 19 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடும் பெளத்த சிலைகள் ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், தொடர்ந்து தனது களஆய்வுகள் மூலம் மேலும் ஒரு 65 புத்தர் சிலைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளார்.கால்நூற்றாண்டிற்கும் முன்னர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தொடங்கி, வரலாறு கூறும் அக்கால சோழமண்டலத்தில் (அல்லது பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஜில்லா பகுதிகளில்) புத்தர் சிலைகளைத் தேடி ஆய்வு மேற்கொண்டு பற்பல புத்தர் சிலைகளை தமிழரின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரான முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள். சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரை பௌத்தம் செழித்திருந்தது என்பது ஆய்வுவழியாக இவர் கண்டறிந்த செய்தி. மேலும் இவர், சில சிலைகளை புத்தர் என்று அறிந்தோ அல்லது அறியாமலோ மக்கள் வணங்கி வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.இந்நாட்களில் மேற்சொன்ன திருச்சி தஞ்சை மாவட்டங்களும் தேவைக்கேற்பவும் காலமாறுதலுக்கேற்பவும் பற்பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் கிடைத்து வரும் புத்தர் சிலைகளில் பெரும்பான்மை அமர்ந்த கோலத்தில் தியானம் செய்யும் புத்தரின் உருவங்கள். புத்தரின் சிலையுருவத்தின் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர் வடிவில் முடி, நீண்டு தொங்கும் காதுகள், இதழ்களில் புன்னகையுடன் கண்களைச் சிறிதே மூடிய நிலையில் அமைதியான முகம், பரந்த மார்புடனும் திரண்ட தோள்களுடனும் மார்பில் மேலாடையும் இடையில் ஆடையும் அணிந்திருக்கும் நிலை, கையில் தர்மசக்கரக்குறியும் நெற்றியில் திலகக்குறியும் போன்ற அடையாளங்கள் என்ற பொதுக் கூறுகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புத்தர் சிலைகளே பெரும்பாலும் சோழமண்டலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பா.ஜம்புலிங்கம் வெளிக்கொணர்ந்த புத்தர் சிலைகளில் சற்றே மாறுபட்டு கவனத்தைக் கவர்வது "மீசை வைத்த புத்தர்" சிலை (பார்க்க: தமிழ்முரசு நாளிதழ் - ஜூலை 1999 செய்தி). திருச்சி மாவட்டத்தின் முசிறி வட்டத்தில் மங்கலம் என்ற சிற்றூரின் அரவாண்டியம்மன் கோவில் (அரவாயி அம்மன் கோவில் எனவும் அழைக்கப்படும் இக்கோயிலின் புவியிடக் குறியீடு: 11.050535, 78.480055) அருகே கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீசையுடன் காணப்படும் இதுபோன்ற புத்தர் சிலை இதுவரை தமிழகத்தில் வேறெங்கும் காணப்பெறவில்லை. முன்னாட்களில் இந்த முசிறி-ஆத்தூர்-பெரம்பலூர் பகுதி வணிகத்தலமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், பல புத்தர் சிலைகள் காணப்படும் இப்பகுதியில் பௌத்தம் அக்காலத்தில் செழித்திருந்திருக்கக்கூடும் என்பதும், அங்கு வணிக நோக்கில் வந்தவர் இந்தச் சிலையை உருவாக்கியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இச்சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்களும் காணப்படுகின்றது. இது சோழமண்டலத்தில் உள்ள பிற புத்தர் சிலைகளில் இருந்து வேறுபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.பாகிஸ்தான் பகுதியில், காந்தார கலைவடிவ புத்த சமய சிற்பங்களின் பாணியில் வடிக்கப்பட்டுள்ள, மீசையுடன் கூடிய 'போதிசத்துவ மைத்ரேயர்' (கிமு 3 - 4ம் நூற்றாண்டு) சிலையின் வடிவத்தைப் போல,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மிகுந்த பாராட்டுக்கள் தேமொழி.இக்கட்டுரைக்கு மூல காரணமாக இருக்கும் சில தகவல்களை மின் தமிழில் பகிர்ந்தபோது இது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையுடனேயே வெளியிட்டேன். தகுந்த தரவுகளையும் ஆதார நூல்களையும் உள்ளடக்கி சிறந்த கட்டுரையைப் படைத்திருக்கின்றீர்கள்.இதுதான் மின் தமிழின் நோக்கமாகவும் இனி வரும் காலத்தில் திகழ வேண்டும்.தனிப்பட்ட வகையில் பேரா.வானமாமலை, தொ.பா., ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோரது ஆய்வுகள் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் அவை “ இல்லாத ஒன்றை ஆராய்ந்து தேடுவதில் நேரம் செலவிடுவதை விட்டு” வாழும் மனிதர்களின் மானுடவியல் சமூக நிகழ்வுகளை ஆட்வுக்குட்படுத்தி அதில் மனிதகுலத்துக்கு ஆய்வுச்செய்திகளை வழங்குவர். இதே போல மிந்தமிழ் குழுமமும் வளரவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.
உங்கள் கட்டுரை எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wed, 10 Oct 2018 at 02:08, தேமொழி <jsthe...@gmail.com> wrote:தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு, தொடர்ந்து பல பெளத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட "தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம்" என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நூலில், தமிழகத்தில் காணப்பெறும் புத்தர் சிலைகளென 19 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடும் பெளத்த சிலைகள் ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், தொடர்ந்து தனது களஆய்வுகள் மூலம் மேலும் ஒரு 65 புத்தர் சிலைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளார்.கால்நூற்றாண்டிற்கும் முன்னர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தொடங்கி, வரலாறு கூறும் அக்கால சோழமண்டலத்தில் (அல்லது பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஜில்லா பகுதிகளில்) புத்தர் சிலைகளைத் தேடி ஆய்வு மேற்கொண்டு பற்பல புத்தர் சிலைகளை தமிழரின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரான முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள். சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரை பௌத்தம் செழித்திருந்தது என்பது ஆய்வுவழியாக இவர் கண்டறிந்த செய்தி. மேலும் இவர், சில சிலைகளை புத்தர் என்று அறிந்தோ அல்லது அறியாமலோ மக்கள் வணங்கி வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.இந்நாட்களில் மேற்சொன்ன திருச்சி தஞ்சை மாவட்டங்களும் தேவைக்கேற்பவும் காலமாறுதலுக்கேற்பவும் பற்பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் கிடைத்து வரும் புத்தர் சிலைகளில் பெரும்பான்மை அமர்ந்த கோலத்தில் தியானம் செய்யும் புத்தரின் உருவங்கள். புத்தரின் சிலையுருவத்தின் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர் வடிவில் முடி, நீண்டு தொங்கும் காதுகள், இதழ்களில் புன்னகையுடன் கண்களைச் சிறிதே மூடிய நிலையில் அமைதியான முகம், பரந்த மார்புடனும் திரண்ட தோள்களுடனும் மார்பில் மேலாடையும் இடையில் ஆடையும் அணிந்திருக்கும் நிலை, கையில் தர்மசக்கரக்குறியும் நெற்றியில் திலகக்குறியும் போன்ற அடையாளங்கள் என்ற பொதுக் கூறுகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புத்தர் சிலைகளே பெரும்பாலும் சோழமண்டலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பா.ஜம்புலிங்கம் வெளிக்கொணர்ந்த புத்தர் சிலைகளில் சற்றே மாறுபட்டு கவனத்தைக் கவர்வது "மீசை வைத்த புத்தர்" சிலை (பார்க்க: தமிழ்முரசு நாளிதழ் - ஜூலை 1999 செய்தி). திருச்சி மாவட்டத்தின் முசிறி வட்டத்தில் மங்கலம் என்ற சிற்றூரின் அரவாண்டியம்மன் கோவில் (அரவாயி அம்மன் கோவில் எனவும் அழைக்கப்படும் இக்கோயிலின் புவியிடக் குறியீடு: 11.050535, 78.480055) அருகே கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீசையுடன் காணப்படும் இதுபோன்ற புத்தர் சிலை இதுவரை தமிழகத்தில் வேறெங்கும் காணப்பெறவில்லை. முன்னாட்களில் இந்த முசிறி-ஆத்தூர்-பெரம்பலூர் பகுதி வணிகத்தலமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், பல புத்தர் சிலைகள் காணப்படும் இப்பகுதியில் பௌத்தம் அக்காலத்தில் செழித்திருந்திருக்கக்கூடும் என்பதும், அங்கு வணிக நோக்கில் வந்தவர் இந்தச் சிலையை உருவாக்கியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இச்சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்களும் காணப்படுகின்றது. இது சோழமண்டலத்தில் உள்ள பிற புத்தர் சிலைகளில் இருந்து வேறுபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.பாகிஸ்தான் பகுதியில், காந்தார கலைவடிவ புத்த சமய சிற்பங்களின் பாணியில் வடிக்கப்பட்டுள்ள, மீசையுடன் கூடிய 'போதிசத்துவ மைத்ரேயர்' (கிமு 3 - 4ம் நூற்றாண்டு) சிலையின் வடிவத்தைப் போல,
இந்த போதிசத்துவ மைத்ரேசயர் சிலையிலும் 'அருள்மிகு செட்டியப்பன் சுவாமி'க்கு உள்ளளது போன்று மீசை உள்ளதா?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
____________________
____________________
மேலும் அதே அமைப்புடன் மற்றொரு படம் விக்கிபீடியாபில் இருந்து -
இந்தியா பாட்னா அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தெரிகிறது
____________________
முசிறி-மங்கலம் 'செட்டியப்பன் சுவாமி' புத்தர் சிலை