சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் எல்லோரும் உமருப்புலவர் பற்றிய தலைப்பில் கருத்துக்களை பதிக்க
கூறியிருந்தீர்கள். நான் என் அருமைச் சகோதரரர் வஹ்ஹாபி அவர்களை அனுகி
அவரது ஆக்கத்தை பெற்று கீழே பதித்துள்ளேன்.
உமருப்புலவரும் சீறாப்புராணமும் ஓர் ஆய்வு
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19
பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து
கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து,
"வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக
அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான
அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப்
போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய்
முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந்
திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச்
செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர் ஆனிலோ ஹதீஸிலோ
இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது.
ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி
இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என
நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள். அல்லாஹ்வின்
கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்? சுவனத்திலுள்ள
'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு
ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும்
ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி,
திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி
லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச்
சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று
இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின்
பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா
மாட்டாரா? வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த
திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக
வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும்
ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச்
சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).
உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா
நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்! -தொடரும், இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 18
இஃதிவ்வாறிருக்க, மறுபுறம் பாத்திமா நாயகி அவர்கள் தம் தோழிப் பெண்களால்
சோடிக்கப் பட்டு மணமுரசு ஒலிக்க, மணப் பந்தலுக்குக் கொண்டு வரப்
பட்டார்களாம். "மணக்கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்" (பாடல்
179) எனப் போகிறது புராணக்கதை. இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக
வேண்டும். உமறுப் புலவர் 'ஒலி'யுல்லாஹ் அவர்களுடைய சீறாப் புராணத்தில்
மலிந்து கிடக்கும் இத்தகைய அசிங்கங்களை எடுத்தெழுதும்போது வெட்கம்
ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; வேதனையை விலக்க முடியவில்லை. சீறாப்
புராணத்தை ஒரு வேதநூல் போல இன்றுவரைப் போற்றிக் கொண்டாடும் முஸ்லிம்கள்
உண்மையை உணர்ந்து நேர்வழி பெற வேண்டும் என்ற கடமையுணர்வு, வெட்கத்தையும்
வேதனையையும் மிகைத்து நிற்பதால் அசிங்கங்களையும் எடுத்தெழுத வேண்டியது
கட்டாயமாகி விட்டது. குர்ஆன் ஹதீஸின் உண்மையான தாத்பரியங்கள் சென்று
எட்டாத, மிகவும் பின் தங்கிய முஸ்லிம் ஜமாஅத்தாருடைய சில ஊர்களில் மரணத்
தறுவாயில் கிடப்பவருடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னமும் இந்த
சீறாப் புராணம் பாடப் படுகின்றது. 'நேர்வழி நின்று நெறியாட்சி' புரிந்த
சிறப்புடையவர்களுள் ஒருவராகிய அலீ(ரலி) அவர்களுக்கும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் பாத்திமா (ரலி)
அவர்களுக்கும் நடந்த திருமணத்தை இவ்வாறாகவெல்லாம் கொச்சையாகவும்
பச்சையாகவும் வருணித்துப் போகிறார் உமறுப் புலவர். இவருடைய கனவில்தான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஹாளிர்' ஆகி இவரை
ஆசீர்வதித்தார்களாம். இந்தக் கர்ண பரம்பரைக் கதையைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டு இந்த 'ஒலி'யுல்லாஹ்வுக்கு உரூஸ் எடுத்துக் கொண்டிருப்பவர்களும்
இருக்கிறார்கள். படிப்பவர்களுடைய உள்ளங்களை மாசுபடுத்தக் கூடிய அழுக்குக்
கவிதைகளை வைத்துக் கொண்டு இதுதான் நமது ஆத்மக்கறை அகற்றும் சவுக்காரம்
எனத் தம்பட்டமடித்துக் கொள்கிறவர்களும் உள்ளனர். சல்மான் ரஷ்டியின் நூலை
எந்த அளவுக்கு வெறுக்கிறோமோ அந்த அளவுக்கு வெறுக்கப் படத்தக்கக் கவிதைகள்
இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழனியிலும் முற்றிய களைகளாய்ப் பெரிதும்
மண்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பொருத்தவரை நம்மில் பலர் இலக்கியக்
குருடுகளாகவே தட்டழிந்து திரிகின்றனர். ஆக, இத்தகைய விரசமான, மார்க்க
முரணான 'சாத்தானின் வரிகள்' சுட்டிக் கட்டப் படுவதன் நோக்கத்தையும்
தேவையும் நாம் மறந்து விடலாகாது. மணமுரசு எங்கணும் முழங்க, அழைத்து வரப்
பட்ட பாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அருகில்
இருத்தினராம். "வந்த பொன்மயிலை ... அலியிடத்து இருத்தினாரால்" என
அமைகிறது பாடல் (180). மணமகன் அலீ (ரலி) அவர்களுக்கு அருகில் மணமகள்
பாத்திமா (ரலி) அவர்களை மணப் பந்தலுக்குக் கொண்டு வந்து உட்கார
வைக்கிறார் உமருப் புலவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடும்
இஸ்லாமியத் திருமணத்தின் இலட்சணம் இதுதான் போலும். இரு சாட்சிகளின்
முன்னிலையில் மணமகளின் தந்தை மணமகனுக்குச் செய்து வைக்கும் வாழ்க்கை
ஒப்பந்தம்தான் 'நிக்காஹ்' எனும் இஸ்லாமியத் திருமணமாகும். 220 பாடல்களில்
அலீ-பாத்திமா (ரலி) திருமண நிகழ்ச்சிகளை நீட்டி, முழக்கிப் பாடும் உமறுப்
புலவருக்கு 'இஸ்லாமியத் திருமணம்' குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
எனவே, பிறமதச் சடங்குகளைப் பின்பற்றி மணமேடையில் மாப்பிள்ளையுடன்
பெண்ணையும் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் புலவர் ஆனந்தம் கொள்கிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறையான
சுன்னத்தின்படி நிக்காஹ் நடைபெறுகிறதோ இல்லையோ; அதுபற்றிக் கவலையில்லை.
ஆனால் ஃபாத்திஹா ஓதப் பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக
இருப்பார்கள் பலர். அதே போக்கை உமறுவிடமும் காண முடிகிறது. பாத்திமா
(ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு அடுத்தாற்போல் இருக்கச் செய்து,
உற்றார் உறவினர் எல்லோருமாகச் சூழ்ந்திருந்து வாழ்த்தி ஃபாத்திஹா
ஓதினார்கள் என்பதை மறவாமல் பாடிச் செல்கிறார் புலவர்:
மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல அலியிடத் திருத்தும் பாவை
யழகுகண் டுவந்து மேலோ ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவரெவருஞ் சூழ்ந்து
பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திஹா வோதுங் காலை (பாடல் 181).
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17
செக்கச் சிவந்த ஆடை அணிந்து, செஞ்சந்தனத்தை மேனியெங்கும் பூசியவர்களாக,
செம்மணியிலான ஆபரணங்களையும் சூடிக் கொண்டு, திரண்டு நின்ற பெண்கள் அலீ
(ரலி) அவர்களின் அழகைக் கண்ணாரப் பருகினர். அந்தப் பெண்களது உள்ளத்தின்
உள்ளே உள்ளக் காமத்தீயின் சிவப்புதான் இவ்வாறு வெளித் தோற்றத்திலும்
சிவப்பு மயமாகப் பிரதிபலிக்கிறதோ என வியந்து பாடுகிறார் புலவர் (பாடல்
139). "அலீயின் அழகைப் பார்ப்பதற்கு இமைகள் இல்லாத ஆயிரம் கண்கள்
வேண்டும்" (பாடல் 142). "பாத்திமா ஒருத்தி மட்டுமோ இந்தப் பேரழகையெல்லாம்
மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப் போகிறாள்" (பாடல் 146). என்றெல்லாம் அங்குத்
திரண்டிருந்த பெண்கள் பேசிக் கொண்டார்களாம். அவ்வாறு பேசிக் கொண்ட
பெண்களின் நிலை பற்றிப் புலவரப்பா பாடுவதைக் கேளுங்கள்:
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம
முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து
பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார்.-பாடல் (141
அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப்
பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச்
சொட்ட வருணித்துச் செல்கிறார். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஒவ்வொரு பருவப் பெண்ணின் அங்கங்களையும்
வருணிக்கும்போது புலவர் தீட்டுகின்ற சொல்லோவியங்களைப் படித்துப்
பார்த்தால், "இதுவும் ஓர் இஸ்லாமிய இலக்கியமா?" என அவை முகம் சுழிக்கச்
செய்கின்றன. ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் கற்புக்கும்
முன்மாதிரியாகத் திகழ்ந்த நபித்தோழியராம் ஸஹாபியப் பெண்டிரைப் பற்றி
இப்படி ஆபாசமாக, அவர்களின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கும்
விதமாகப் பாடத் துணிந்து விட்டது அவர்மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறன்றோ?
"இளமுலைப் பேதையும்" (பாடல் 148); "குரும்பையின் முலையுடைய
பொதும்பையும்" (பாடல் 151); "செம்பொன் குவிமுலை மங்கையும்" (பாடல் 153);
"வார் அறுத்து எழுந்து வீங்கும் வனமுலை மடந்தையும்" (பாடல் 155);
"கோங்கிள முலை அரிவையும்" (பாடல் 156); அலீ (ரலி) அவர்களைச் சுற்றி
நின்று மொய்த்தார்களாம். "குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப
வந்து" நின்ற பெண்களுள் ஒருத்தியாகிய பேரிளம்பெண் என்பவள், "அலீயினைச்
சேரா மாதர் அலி என இருத்தல் நன்று" என உரத்துக் கூறி நின்றாளாம் (பாடல்
159). இவ்வாறாகத் திருவுலா வந்த அலீ (ரலி) அவர்கள் கடைசியாகத் திருமணப்
பந்தலை அடைந்தார்கள். பந்தல் வாசலில், "... வேல் கண் நல்லார் ஆலத்தி
களித்து நிற்பக் குரவை எம்மருங்கும் சூழ்ந்து" கடலொலி போல் முழங்கிற்றாம்
(பாடல் 166). -தொடரும், இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 16
இன்னொரு சாராருடைய கேள்வி என்னவென்றால், "இலக்கியம் என்றாகும்போது
இத்தகைய வருணனைகளும் கற்பனைகளும் இடம் பெறத்தானே செய்யும்; இவை இல்லாமல்
எப்படி ஓர் இலக்கியம் உருப்பெறவியலும்?" என்பதாகும். இங்குத்தான்
இஸ்லாமிய இலக்கியத்துக்கும் ஏனைய இலக்கியங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த
வேறுபாட்டை விளக்கி உணர்த்த வேண்டும். உள்ளதை உள்ளவாறு பாடுவதுதான்
இஸ்லாமிய இலக்கியமாக இருக்க முடியும். "அங்ஙனம் எவ்வாறு பாடவியலும்?"
என்ற கேள்வி எழலாம். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருடைய 'நபிகள் நாயகம்
மான்மிய மஞ்சரி' என்னும் இலக்கியத்தைச் சான்றாக வைத்து இக்கேள்விக்குப்
பதிலுரைத்து விடலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில்
வாழ்ந்த ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸுஹைர் போன்றோர் இஸ்லாமிய
வரம்புக்குள்ளேயே நின்று கவிதைகள் இயற்றிய பெருங் கவிஞர்களாவர். எனவேதான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அக்கவிஞர்களை
அங்கீகரித்திருக்கின்றார்கள்; ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமியத் திருமண
முறைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இஸ்லாமிய வரம்பையும் மரபையும்
மீறிக் கொண்டு, தமிழ் மரபு என்னும் தடத்தில் கால் பதித்து நின்று உமறுப்
புலவர், அலி-பாத்திமா திருமண வைபவத்தைச் சீறாப்புராணத்தில்
எப்படியெல்லாம் வருணிக்கிறார் என்பதை ஈண்டுக் காண்போம். அலீ (ரலி)
அவர்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஊர்வலம் செல்வதற்காகக் குதிரைமேல்
ஏறினார்கள். அப்போது, 'மடவார் குரவைகள் இயம்ப'லாயினர் (பாத்திமா திருமணப்
படலம், பாடல் 121). பேரிகை, திமிலை, குடப்பறை, தடாரி, திண்டிமம், முரசு,
பாரிசைப் பதலை, பவணம், வாரணி, மொந்தை, பூரிகை, நவுரி, காகளம், சின்னம்,
கொம்பு, கைத்தாளம் முதலிய இசைக் கருவிகளெல்லாம் பேரிடியை மிஞ்சக் கூடிய
அளவுக்கு முழங்கின. (பாடல் 122). உமறுப் புலவர் 'ஒலி'யுல்லா அக்காலத்தில்
தமிழகத்தில் எத்தனை இசைக் கருவிகள் இருந்தனவோ அத்தனையையும் பட்டியல்
போட்டுப் பாடி விட்டார். இந்த 'ஒலி'யுல்லா பாடிய அளவுக்கு எக்கச் சக்கமான
இசைக் கருவிகளுக்கு ஏற்பாடு செய்ய இயலா விட்டாலும் ஒன்றிரண்டையாவது
வைத்துக் கலியாண இசை முழங்குவதுதான் 'ஒலி'யுல்லாவுக்குச் செய்கின்ற
மரியாதையாகும் என்று எண்ணிச் செயல் படுகின்றவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.
அலீ (ரலி) அவர்கள் ஊர்கோலம் வருகிற அழகைக் காண்பதற்காக அந்த ஊரில் உள்ள
பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து மொய்த்தார்களாம். பாதத்தில்
அணிந்திருந்தச் சிலம்புகளும் இடையில் அணிந்திருந்த மேகலைகளும் ஆரவாரம்
எழுப்ப, மதம் பிடித்த ஆண் யானையின் கொம்புகளைப் போலப் பெண்களின்
மார்பணிகள் மின்ன, புதுத் தேனைச் சொரியக் கூடிய பூமாலைகள் நெகிழ, கடலில்
நிலவுக் கூட்டம் பூத்தது போலப் பெண்கள் கூடி மொய்த்தனராம்.
பதச்சிலம் பலம்பச் சூழ்ந்த பைம்பொன்மே கலைக ளார்ப்பக் கதக்களிக் கரியின்
கோட்டுக் கதிர் முலைப் பணிகள் மின்னப் புதுக்கடி நறவஞ் சிந்தும்
பூங்குழன் மாலை சோர மதிக்குலங் கடல்பூத் தென்ன மங்கையர் திரண்டு
மொய்த்தார்.
(பாடல் 132). அலீ (ரலி) அவர்களோடு கூடப்பெற மாட்டோமா என்று ஏங்கிய
காரணத்தால் அந்தப் பெண்களின் மேனியில் காமத் தாபத்தால் ஏற்படக் கூடிய
'பசலை' என்னும் கொடிய நோய் படர்ந்ததாம். இத்தகைய எண்ணம் கொண்ட பெண்கள்
கூட்டம் வீதியில் சூழ்ந்து கொண்டதாம் (பாடல் 134). ஒரேயொரு மரத்தில்
ஏராளமான கொடிகள் படர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அலீ (ரலி) என்னும்
ஒரேயோர் ஆடவரைச் சுற்றிப் பல பெண்களும் பார்வையில் படர்ந்தனராம்:
குவிபெருந் தானை நார்ப்பண் கூண்டவை யலியென்றோதும் பவனியின் றருவை
நோக்கிப் பல கொடி படர்ந்த தொத்த (பாடல் 135).
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15
கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களுடைய வரலாற்று நாவல்களை நம்மில்
பலர் படித்திருக்கிறோம். வரலாற்று மாந்தர்களோடு தம் சொந்தக் கற்பனையையும்
வருணனைகளையும் கலந்து, படிப்பவர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய அளவுக்கு
இந்த நாவலாசிரியர்கள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்வர். அதிலும்
சாண்டில்யன் போன்றோருடைய படைப்புகளில் விரசமான வருணனைகள் விரிவாக இடம்
பெறுவதுண்டு. அதே சாண்டில்யன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறார் என்று
வைத்துக் கொள்வோம். அந்த வரலாற்று நாயகரின் புண்ணிய நாயகியரைப் பற்றி
அவருடைய 'மாமூலான பாணியில்' விரசமாக வருணிப்பாரானால் முஸ்லிம்கள் அதனைச்
சகித்துக் கொள்வார்களா? 'தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் இது' என அதனைத்
தலையில் வைத்துக் கொண்டாடுவார்களா? ஒருபோதும் மாட்டார்களன்றோ! காரணம்,
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத்
திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த்
திகழ்கின்றனர்..." [033:006].
என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதை
மனதில் ஏந்திக் கொண்டு இந்த 'இலக்கிய'ப் பிரச்சினையை அணுகுவோம்.
இன்றைக்கு நாவல் என்னும் இலக்கிய வடிவம் பெற்றிருக்கின்ற செல்வாக்கினை
பதினேழாம் நூற்றாண்டில் செய்யுள் வடிவம் பெற்றிருந்தது. உமறுப் புலவர்
இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் 'வரலாற்று நாவல்'தான் எழுதியிருப்பார்.
ஆனால், அவருடைய காலம் 17ஆம் நூற்றாண்டாக இருந்தமையால் அக்காலத்தில்
வழக்கிலிருந்த 'செய்யுள் வடிவத்தில்' அவர் இலக்கியச் சேவை(!) செய்ய
வேண்டியதாகி விட்டது. எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
புனித வரலாற்றை, செய்யுளில் காப்பியமாகப் பாடலானார். அவ்வாறு பாடிய உமறு,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றுக்குப் புறம்பான
பல கட்டுக்கதைகளைத் தம் காப்பியம் நெடுகக் கட்டவிழ்த்து விடுகின்றார்.
அதோடு மட்டுமின்றி, அன்னை கதீஜா முதலியவர்களைப் பற்றிப் புலவர்
பாடுமிடங்கள், நம் பார்வையைக் கூசச் செய்கின்றன. கதீஜா நாயகியைப் பற்றிய
உமறுவின் வருணனையை ஓரளவு பார்த்தோம். அந்நியப் பெண்களைத் திரையின்றிப்
பார்ப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கின்றது. ஆனால், உமறுப் புலவரின்
எழுத்தாணியோ நமது அன்னையர் திலகங்களைப் பற்றியே திரைக்கப்பால் சென்று
தரங் கெட்டு வருணிக்கிறது. இந்நிலையில், இத்தரங் கெட்ட வருணனைகளைத்
தன்னகத்தே கொண்ட சீறாப்புராணத்தைப் பாடியவர் 'உமறு' என்னும் பெயருடைய ஒரு
முஸ்லிம் புலவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய வரம்பு மீறிய வருணனைகளை
'இலக்கியங்கள்' என்று நியாயப் படுத்தி நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா
என்பதைச் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14
பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட
விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது
ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல்
55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க
வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி
ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார். (பாத்திமா
திருமணப் படலம் - பாடல் 62)
கொஞ்சமும் ஆதாரமற்ற புனைசுருட்டான சமாச்சாரங்கள் இவை. அல்லாஹ், ஜிப்ரீல்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா நாயகி ஆகியோரைப் பற்றி உமறுப்
புலவர் இவ்வாறு புனைவதற்கு எங்கிருந்துதான் ஆதாரங்களைப் பெற்றாரோ?
துணிச்சலைப் பெற்றாரோ? விண்ணுலக நிக்காஹ்வையும் இந்தப் பச்சைக் கடுதாசிச்
சங்கதிகளையும் தொடர்ந்து, பாத்திமா நாயகிக்கு மண்ணுலகின் மதினமா நகரில்
நிகழ்ந்த நடைமுறைத் திருமணத்தைப் பாடும் போது உமறுப் புலவரின் கற்பனை,
இன்னமும் 'பச்சை'யாகப் பரந்து செல்கிறது. அந்தப் பகுதிகளைக் காண்பதற்கு
முன் இத்தகைய இஸ்லாமிய(?) இலக்கியங்களைப் பற்றி வேறொரு கோணத்தில்
சிந்தித்துப் பார்ப்போம். தொடரும், இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 13
இதையடுத்து, "முழுமதி போன்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்
பெண்கள் திருஷ்டி கழித்தார்கள்" (பாடல் 109) எனவும் "பெண்களின் குரவை
ஒலியோடு பல்வேறு வாத்திய இசைகள் முழங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும் கதீஜா நாயகியும் மணவறை புகுந்தார்கள்" (பாடல் 115) எனவும்
பாடுகின்றார் புலவர். இஸ்லாம் என்னும் ஆற்றில் ஒருகாலையும் கொச்சை
வருணனைகள் என்னும் சேற்றில் ஒருகாலையும் பதித்துக் கொண்டு உமறுப் புலவர்
தன்னுடைய புராணம் நெடுகிலும் இவ்வாறு தடுமாறி நடந்துச் செல்கிறார்.
சீறாப் புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபதாவது படலம் 'பாத்திமா திருமணப்
படலம்' என்பதாகும். இதில் பாத்திமா நாயகி படைக்கப் பட்டமை பற்றி உமறுப்
புலவர் பின்வருமாறு பாடுகிறார்:
சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கும் இம்பர்ப் பூண்முலை யவர்க்கும்
ஏக நாயகி யென்னப் பூவில் காணுதற் கரியோன் செய்தானென்னிலிக் கவின் -
கொண்டோங்கு மாணிழை மடந்தை குற்ற பெற்றியார் வகுக்க வல்லார்? (பாத்திமா
திருமணப் படலம் - பாடல் 8)
வானவர்களில் ஆண்களோடு தேவலோகத்துப் பெண்களும் உள்ளனர். அவர்கள் கண்
இமைக்காத இயல்பினர் என்பது பிறமதப் புராணங்கள் கூறும் செய்தியாகும். "கண்
இமைக்காத தேவலோகத்துப் பெண்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் வாழும்
பெண்ணினத்தார் அனைவர்க்கும் ஏக நாயகியாக பாத்திமா நாயகியைப் படைத்தான்
பூவில் காணுதற்கு அரியோன்" என்கிறார் உமறுப் புலவர். புகைறா கண்ட
படலத்தின் இரண்டாவது பாடலில் இடம் பெற்றுள்ள 'வசனத்து இலகு செல்வி'
என்னும் தொடர் பிறமதப் பெண் கடவுளாகிய இலட்சுமியைக் குறித்து நின்றதை
முன்னர்க் கண்டோம். 'வசனத்து இலகு செல்வி' என்பது எவ்வாறு இலட்சுமியைக்
குறிப்பிடுகிறதோ அதுபோலப் 'பூவில் காணுதற்கு அரியோன்' என்னும் தொடர்
பிறமதக் கடவுளான பிரம்மதேவனைக் குறித்து வருவதாகும். சைவ, வைணவ
இலக்கியங்களில் இந்துக்களின் படைப்புக் கடவுளாகிய பிரம்மதேவனைச்
சுட்டுவதற்காக இதே சொல்லாட்சி பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது. ஆகவே,
படைத்தல் தொழிலைச் செய்பவனாகிய பிரம்மதேவன்தான் பாத்திமா நாயகியைப்
படைத்தான் எனவும் தேவலோகத்துப் பெண்களை விடவும் அவர்கள் சிறப்புற்றுத்
திகழ்ந்தார்கள் எனவும் பாடி அடுக்கடுக்காக முரண் படுகிறார் உமறுப்
புலவர். வானவர்கள் ஆணுமல்லர் பெண்ணுமல்லர் என இஸ்லாம் கூறுகிறது. ஆனால்,
உமறுப் புலவரோ தேவலோகத்தில் உள்ள "இமையா நாட்டத் தெரிவையர்" எனப்
பாடுகின்றார். இவ்வாறாகவெல்லாம் பிறசமய மரபுகள் என்னும் கோடாரியைக்
கொண்டு இஸ்லாமின் ஏகத்துவ வேரில் உமறுப் புலவர் ஓங்கிப் போடுகின்ற
இடங்களுள் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ், ஜிப்ரீல், நபிகள் நாயகம்
ஆகியோரைக் தொடர்பு படுத்தி, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான பல
புளுகுரைகளையும் உமறுப் புலவர் பாடிச் செல்கின்றார். அடுத்து வருவது
அதில் ஒரு பகுதி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன், வானவர்கோன்
ஜிப்ரீல் தோன்றிக் கூறுகிறாராம்: "முஹம்மதே! உமக்கு ஸலாம் உண்டாகட்டும்.
பாத்திமாவுக்காக இறைவன் வானுகையெல்லாம் அலங்கரிக்குமாறு மலக்குகளுக்குக்
கூறினான். அவர்கள் அவ்வாறு அலங்கரித்து முடித்ததும் பாத்திமா-அலீ
ஆகியோருக்கு இறைவனே மஹரை நிர்ணயித்து, என்னையும் இஸ்ராயீல், மீக்காயில்
ஆகியோரையும் சாட்சியாக வைத்து நிக்காஹ்வை முடித்து வைத்ததாகக் கூறினான்"
என்றார். "ஜிப்ரீல் இவ்வாறு கூறக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்" எனப் பாடுகிறார் உமறு. இதனை,
"புகழ் தர மஹரும் நாட்டி" பாத்திமாவை அலீக்கு அல்லாஹ் நிக்காஹ் செய்து
விட்டதாக 32ஆம் பாடலில் பாடுகிறார். ஆனால், தொடர்ந்து வரும் 49ஆம்
பாடலிலோ, "நும் புதல்வி உள்ளத்து உறைகின்ற மஹரைக் கேட்டு வருக" என்று
ஜிப்ரீலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி இறைவன்
கேட்பதாகப் பாடுகின்றார். அடுத்தடுத்த பாடல்களுக்குள்ளேயே ஒன்று கிடக்க
ஒன்றைப் பாடி வைக்கிறார் புலவர். இப்படியாக வந்த இறை கட்டளைக்கு இணங்க,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் பாத்திமாவை அணுகி மஹர்
குறித்து வினவினார்களாம் (பாடல்கள் 48-50). அதற்கு, "மறுமை நாளில்
பாவிகளான பெண்கள் அனைவருக்காகவும் நான் 'ஷஃபாஅத்' என்னும் பரிந்துரையைக்
கோர வேண்டும். இதையே எனக்கு மஹராக இறைவன் ஏற்றருள வேண்டும்" என பாத்திமா
நாயகி பதிலுரைத்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்களாம்:
இறுதியில் பவத்தின் மாதர் என்ஷஃபா அத் ஈடேற்றம் பெற மன்றாட்டு அருள
வேண்டிப் பேரருள் கபூல்செய்தேனேல் உறுதி நன் மஹர்பெற் றேன் என்று
உரைத்தார் (பாடல் 51).
அதை இறைவனும் ஏற்றுக் கொண்டு, பாத்திமாவின் விருப்பத்தை நிறைவேற்றி
வைப்பதாக ஒரு 'பச்சைக் கடுதாசி'யில் எழுதி ஜிப்ரீல் மூலமாக நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானாம். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவுக்கு அதைப் 'படித்து'க்
காட்டிவிட்டு, "மஹ்ஷர் நாளில் நீ இக்கடித்தை என் கைகளில் தரவேண்டுமாதலால்
இதனை யாரும் தொடாதவாறு பத்திரமாக வைப்பாயாக" எனக் கூறி பாத்திமாவிடம்
கொடுத்தார்களாம். அந்தப் 'பச்சைக் கடுதாசி'ப் பாடலை அடுத்து காண்போம்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி
அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட,
மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார்.
பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது
என்பதைக் காண்போம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா
நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள
பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல
நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு
அழைப்பு விடுத்தார்களாம்.
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள
மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு என,
பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல்
56).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக
கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, "சீதனப் பொருட்களும்
வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட
குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம்,
சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு
வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம்.
இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில்
வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.
மணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்'
என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை
வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச்
செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப்
புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர்.
அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச்
சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக்
கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:
பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித்
திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண்
மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித்
துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி
நுதலிடை திலதங்க ளணிவார் ... (மணம்புரி படலம், பாடல்கள் 24-25). இவ்வாறு
அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப்
பொட்டும் இடுகிறார் புலவர்.
இப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை,
முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு,
மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம்
(மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை,
பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர்
பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக்
கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப்
புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். "முஹம்மதின் வடிவை நோக்கித்
தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ..." என இதனைப் பாடுகிறார்
புலவர் (பாடல் 60). இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின்
அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம்
பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம்
இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):
கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட
செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது
என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்
மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின்
பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).
இங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப்
பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும்
நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு
அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க
மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாகப் புலவர் எழுதிச்
செல்கிறார் (பாடல் 103).
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 11
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தமனை நோக்கி அல்லாஹ்வின்
வீடாகிய கஃபா ஸஜ்தா செய்ததாகப் பாடி ஒரு வகையாக முரண்பட்ட உமறுப் புலவர்,
இன்னொரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்தமனையைப்
பற்றிப் பாடும்போது வேறொரு வகையாக முரண்படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தம் பெரிய தந்தையான அபூதாலிபின் வீட்டில் வளருகின்ற
காரணத்தால் அபூதாலிபுடைய வீட்டில் செல்வமெல்லாம் செழித்து வளர்கிறதாம்.
அதுமட்டுமல்ல! தாமரை மலரில் வாழும் சீதாதேவியாகிய செல்வி லட்சுமி என்பவள்
அபூதாலிபுடைய வீட்டு முற்றத்தில் நாள்தோறும் வந்து வீற்றிருந்தாளாம்.
அப்படி லட்சுமி கொலுவிருந்தமையால் அபூதாலிபிடம் வீரமும் கல்வியும்
வெற்றியும் குடிகொண்டன எனக் கற்பனை செய்கிறார் புலவர். அல்லாஹ்வுடைய
வீட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டுக்கு சிரம்
சாய்க்கச் செய்ததன் மூலம் இஸ்லாமிய வட்டத்துக்குள்ளே முரண்பட்டு நின்ற
உமறுப் புலவர், இந்துமதப் பெண் கடவுளைப் பெருமானார் வளர்ந்து வந்த வீட்டு
முற்றத்தில் கொண்டுபோய் குடியமர்த்தி வைத்ததன் மூலம் பிற சமயத்தாரின்
வழிபடு தெய்வங்களையெல்லாம் தாமும் வழிமொழிகின்றார். முன்னதை அகமுரண்
என்றால் பின்னதைப் புறமுரண் எனலாம். இத்தகைய இருவகை முரண்களும்
சீறாப்புராணத்தில் மலிந்து கிடக்கின்றன. 'புகைறா கண்ட படலம்' என்ற
படலத்தின் முதல் பாடலில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அபூதாலிபுடைய வீட்டில் வளர்ந்ததனால் அந்த வீட்டில் ஒன்றுக்குப் பத்தாகச்
செல்வம் கொழித்தது" எனப் பாடிய உமறுப் புலவர், அதைத் தொடர்ந்த இரண்டாம்
பாடலில் பாடுகிறார்:
சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற் குலவு வீரமுங் கல்வியும்
வெற்றியுங் குடியாய் நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத் திலகு
செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள் (சலத ரத்தைநேர்=கருமேகத்தை
ஒத்த) (வனசத் திலகு செல்வி=தாமரை மலரில் இலங்கும் லட்சுமி). இன்னொரு
படலமாகிய 'தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படல'ப் பகுதியில், நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தசைக்கட்டியிலிருந்து ஒரு பெண்ணை
உருவாக்கிக் காட்டியதாகப் பாடுகின்ற வேளையிலும் லட்சுமியை மறந்துவிட
வில்லை உமறு. "தாமரை மலரிலிருந்து தோன்றி நிற்கின்ற லட்சுமியைப் போன்று
தசைக் கட்டியில் உதித்த அந்தப் பெண் எழிலோடு திகழ்ந்தாள்" என
வர்ணிக்கிறார் புலவர் "விரிநறைக் கமல மென்மலரில் செய்யவள் இருப்பதென
எழில் சிறந்து ..." (பாடல் 25) எனப் போகிறது பாடல். புதிதாக இஸ்லாமை
ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள் 'லட்சுமி கடாட்ச'த்தின் மீது எந்த
அளவுக்கு மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை உமறுவின் புராணம்
பிரதிபலித்துக் காட்டுகிறது.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 10
கஃபத்துல்லாஹ் என்பது, கஅபா என்ற, 'புனிதமும் புகழும் பெற்றுச்
சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து
பிறந்ததாகும். புனித ஆலயமான கஃபத்துல்லாஹ்வை, 'கியாமன் லின்னாஸ்' -
மனிதர்களுக்கு ஆதார ஸ்தலமாக, அபயம் அளிக்கக் கூடியதாக அல்லாஹ்
ஆக்கியிருக்கிறான் [005:097]. ஆனால், கஃபாவோ தனக்கே அபயம் தேடக் கூடிய
இடமாக ஆமினாவின் வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீட்டை நோக்கி ஸுஜூது
செய்ததாகப் பாடுகிறார் உமறுப் புலவர். கஃபா என்றாலே புனிதத்தைத்
தன்னகத்தே கொண்டது எனப் பொருளிருக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா புனிதத்தையே அடைந்தது என்பதாக முரண்படக்
கவிதை எழுதியுள்ளார் புலவர். "அவர்கள் (நன்றி செலுத்துவதற்காக) இந்த
இல்லத்தின் இறைவனையே வணங்கட்டும்" [106:003] என இறைமறை இயம்புகிறது.
மனிதர்கள் வாழும் இல்லத்தை நோக்கி இறைவனின் இல்லமான கஃபத்துல்லாஹ் ஸுஜூது
செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம். இவ்வாறு அல்லாஹ்வின் இல்லம்,
அவனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட
இருப்பவருடைய தாயின் வீட்டுக்கு ஸுஜூது செய்து புனிதமடைந்ததாகப்
பாடியுள்ளதன் மூலம், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் வரம்பு
கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப் புலவர். பெருமானாரின் புகழை
நிமிர்த்திப் பாடுவதாக நினைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் இல்லமான
கஃபத்துல்லாஹ்வின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கின்ற உமறுடைய இந்த
அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்வான்? அவனுடைய அடியாரும்
தூதருமாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை எப்படி
அங்கீகரிப்பார்கள்?
"அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனைவிட அநியாயக்காரன் வேறு யார் இருக்க
முடியும்?" [003:094], [061:007]
என அடுக்கிக் கூறுவதோடு, "அப்பொய்யர்கள் (மறுமையில்) வெற்றியடைய
மாட்டார்கள்" [010:069], [016:116] என்றும் உறுதி செய்கிறது அருமறை
குர்ஆன்.
"என் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவர், தன் இருப்பிடத்தை நரகில்
தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்" (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக
எச்சரித்திருக்கின்றார்கள். அல்லாஹ்வின் எச்சரிக்கையும் அவன் தூதருடைய
எச்சரிக்கையும் இவ்வாறு இருக்க, இந்தச் சீறாப்புராணத்துக் காரருடைய
கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அவருடைய கற்பனை
வண்டவாளங்களைக் காப்பியத் தண்டவாள மேற்றுவதற்குப் பச்சைக்கொடி
காட்டினார்கள் எனக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9
இஸ்லாமுக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள்
ஒருபுறமாகவும் அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைப்
பின்னி உருவாக்கிய கதைகள் மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ்
இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக் கூடிய முரண்கள் ஏராளம் ...
ஏராளம். தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப் புலவருடைய கனவில் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றி, அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருந்தால்,
ஆசி வழங்கப்பட்ட கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும்
இடம்பெற்றிருக்காது. ஆனால், உமறுவின் சீறாப்புராணத்தில் இஸ்லாமுக்கு
முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன.
தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை
அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை
ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை விடுத்து,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய 'பதிவு செய்யப்பட்ட' வரலாற்றைக்
கூறும் பகுதிகளுக்கு வருவோம்; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட
புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பதைப்
பார்ப்போம். பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம்
நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப் புடைத்துக்
கொண்டு நிற்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை,
'நபியவதாரப் படலம்' என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப் புலவர். அன்னை
ஆமினா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்தபோது
என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது பின்வரும் பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள்
விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங்
ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுஜூதுசெய் தெழுந்தன வன்றே (நபியவதாரப் படலம், பாடல் 105) நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி
நானிலம் புகழும் கஃபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளும் ஒருசேர ஸுஜூது
செய்து எழுந்தனவாம். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சிரம் பதித்து ஸுஜூது
செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே
கஃபத்துல்லாஹ் [003:096]. இத்தகைய உயர் தனிச் சிறப்புடைய
கஃபத்துல்லாஹ்வானது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தவுடன்
ஆமினாவுடைய வீட்டை நோக்கி ஸுஜூது செய்து வணங்கியது எனப் புலவர்
பாடுகின்றார். சீறாப்புராணத்தைப் படித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இந்தக் கதையையும்
உண்மை நிகழ்வென்று கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றோடு நேரடியாக முரண்படுகின்ற
கவிதை வரிகள் சீறாவில் அநேகம் உள்ளன. உலக முஸ்லிம்கள் அனைவரும்
கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி ஸுஜூது செய்ய வேண்டியது கடமையாக
இருக்க, உமறுப் புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி
கஃபத்துல்லாஹ்வே ஸுஜூது செய்தது எனக் கற்பனை செய்கிறார். புலவருடைய
கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்கின்றன:
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித
மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே (நபியவதாரப் படலம், பாடல் 106)
பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி ஸுஜூது செய்த
கஃபத்துல்லாஹ், "இன்றுதான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்" என்று வாய்
திறந்து ஓதியதாம்.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8
தமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின்
மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால்
குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து
கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? பிற மதங்களில் இருப்பதுபோல்
புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர்
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள். அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில்
தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான
செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர்
முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச்
சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள்
இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய
மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த
புராணங்களைப் படைக்கலாயினர். படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக
அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில்
பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய
முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப்
பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி
அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.
உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம்
சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின்
அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே
உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர்
கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச்
சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை
வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம்.
அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம்.
பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட
இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும்
தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது. சதக்கத்துல்லா அப்பாவிடம்
உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப்
பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள
காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து
சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக்
கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து
விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது
நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும்
சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல்
விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே
தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய்,
பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி
கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை
திறந்த வெள்ளம்போல் பாடலானாராம். அதன் பின்னர் நெய்னா லெப்பையைச்
சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப்
புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால்
நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை
கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப்
படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில்
இடம் பெற்றுள்ளது.
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 7
இஸ்லாமுக்கு முரணான கவிதைகள் துர்நாற்றம் பிடித்த சீழைவிட அசிங்கமானவை;
அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட 'இஸ்லாமிய
இலக்கியம்' என்னும் பெயரால் இஸ்லாமுக்கு முரணானக் கருத்துகளைப் பாடுவது
பெருங்கேடு விளைவிப்பதாகும். அல்குர்ஆன், நபிமொழிகள் ஆகியவற்றின்
வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாமுக்கு முரணான
கருத்துகளைக் கொண்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்' எப்படித்தான்
தலையெடுத்தன? பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்ய
வேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வம் இதற்குக்
காரணமாகும். இன்றுங்கூட புதிதாக இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்கும் சகோதர-
சகோதரிகள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு-சம்பிரதாயங்களிலிருந்து எடுத்த
எடுப்பிலேயே முற்றிலும் விடுபட இயலாத நிலையில் இருப்பதை நாம் காணுகிறோம்.
இன்றைய நிலையே இதுவெனில், நானூறு-ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்? அக்காலத் தமிழ்
முஸ்லிம்கள் இஸ்லாமைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நினைவில்
இருத்தியே அவர்களுடைய நிலையை அணுக வேண்டியுள்ளது. அந்தப் புதிய
முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்க
வழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப் போயிருந்த நிலையில், அவற்றை
விட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில்
இருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிலிருந்து இன்னொரு புதிய பண்பாட்டுக்கு
மாறுகின்ற கட்டத்தில் (Transitional period) அவர்களுடைய நிலை இருந்தது
எனலாம். பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்;
கதா-காலட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேரோட்டம், ஆனை-
குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல், கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம்,
பாலாபிஷேகம் முதலிய பிறசமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதனைக் கண்ட
அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் 'அறிஞர்கள்' புதிய
முஸ்லிம்களின் தொடரும் பழமைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது
எப்படி? என யோசித்தனர். அதன் விளைவாக, பிறசமயச் சடங்குகளுக்கு ஒப்பாக
இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச்
சாயம் பூசினர். மூர்த்தி உற்சவங்கள் தர்ஹா உரூஸ்-கந்தூரிகள் ஆயின;
தேரோட்டம் என்பது சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது.
கொடியேற்றம், ஆனை-குதிரைடன் உண்டியல் ஊர்வலங்கள் அப்படியே இங்கேயும் இடம்
பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கபுறு(மண்ணறை)களுக்குப்
பூசும் சந்தன அபிஷேகமாக அட்ஜஸ்ட் செய்யப் பட்டது. இந்தப் 'போலச்
செய்தல்' (To imitate) என்னும் மனித இயல்பு, இஸ்லாமியத் தமிழ் மக்களின்
வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத் துறையிலும்
ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து
விதிவிலக்குப் பெறவில்லை. எனவே, புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட தமிழ்
முஸ்லிம்களின் புராண-இதிகாசத் தாகத்திற்கு அந்தச் சமகாலப் புலவர்களும்
கற்பனை நீர் வார்த்து, பிறமத இலக்கியங்களைப் போல 'இஸ்லாமிய இலக்கியங்களை'
இயற்றத் தொடங்கினர். இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். இஸ்லாமுக்கு ஆதாரங்களாக அமைந்த குர்ஆன்-ஹதீஸ்களின் பொருளைத்
தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய
கடமையைப் பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, குர்ஆனின்
மொழியாகிய அரபுமொழியின் மீது அக்காலத் தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு விதமான
தெய்வீக பக்தி ஊட்டப் பட்டது. தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால்
காணவியலாதோ அதுபோல அரபுமொழியில் அமைந்த குர் ஆன் ஹதீஸ்களின் பொருளையும்
தமிழில் மொழிபெயர்க்கவோ மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ
இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. வேற்றுமொழியில் குர்-ஆனையோ
ஹதீஸ்களையோ மொழிபெயர்ப்பது, அவற்றின் புனிதத்தைக் களங்கப் படுத்துவதாகும்
என்ற மடத்தனமான நம்பிக்கை நிலவிய காலம் அது. இவ்வாறாக, இஸ்லாமின்
அடிப்படைகளான குர்-ஆனையும் ஹதீஸையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து
கொள்வதற்கு, அவற்றைத் தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப்
பின்னுக்குத் தள்ளப் பட்டது. தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துகளை
எடுத்தெழுதுவதைத் தவறாகக் கருதிய அக்கால கட்டத்தில், அரபுமொழி வடிவத்தில்
எதை எழுதினாலும் அதை உச்சிமீது வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி
வளர்ந்திருந்தது. மக்களுடைய இந்த மனநிலையை நன்கு உணர்ந்து கொண்ட சிலர்,
(தங்களுடைய படைப்புகளுக்குப் புனிதப் பூச்சு வேண்டி) தமிழ்ச் சொற்களையும்
தொடர்களையும் அப்படியே அரபு எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடலாயினர்.
'அவன் வந்தான்' என்பதை avan vanthaan என (தற்கால யுனிகோடில்)
எழுதுவதுபோல் அரபு எழுத்து வடிவத்தில் தமிழை எழுதியமையால் 'அரபுத் தமிழ்'
என ஒரு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள்
எழுதப் பட்டன. ஆனால், இந்த அரபுத்தமிழ் வடிவத்தில்கூட குர்ஆன்-
ஹதீஸ்களுடைய பொருளை எழுதி யாரும் வெளியிடவில்லை. -தொடரும், இன்ஷா
அல்லாஹ்.
இந்த கட்டுரை கீழே உள்ள தளத்தில் உள்ளது பார்த்து உண்மையை உணருங்கள்
http://wahhabipage.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இஸ்லாம் தூய்மையானது! அதில் அழுக்கேற்ற இயலாது! உமருப்புலவர் முஸ்லிமாக
இருந்தாலும் சரியே! முஸ்லிம் செய்தாலும் குற்றம் குற்றமே!
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் (அல்ஹம்துலில்லாஹ்)
“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்” (அல்-குர்ஆன் 57:25)
On Oct 20, 5:52 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> தோழர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே
>
> நீங்கள் யாரை நல்லவர் யாரை கெட்டவர் என்று சொல்வீர்கள் என்று புரிபட மாட்டேன்
> என்கிறது.
>
> அதனால் ஒருவித பயத்துடன் அமைதி காக்கிறேன். மற்றவர்கள் எப்படி என்று தெரியாது.
>
> நாங்கள் பாடப்புத்தகங்களில் மட்டுமே உமறுப்புலவர் பப்றிப் படித்து இருக்கிறோம்.
> (நாங்கள் என்ன? நான்). அந்தக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் எங்களுக்கு மார்க்
> வாங்கி் கொடுத்த புலவர் அவர். காளமேகப் புலவர் போல, சேக்கிழார் போல.
>
> அவரைப் பற்றிய வேறு கோணத்தில் போட்டு கிழித்து எடுக்கிறீர்கள். அதனால் சற்றுப்
> பயமாக இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை.
>
> நீங்கள் சொல்வதை பவ்யத்துடன் கேட்டுக கொண்டு இருக்கிறோம்.
>
> அதனால் நீங்கள் மனவருத்தப் படவேண்டாம்.
>
> உங்கள் வகுப்பறையைத் தொடருங்கள்.
>
> பென்னேஸ்வரன்
>
http://groups.google.com/group/mintamil/msg/a0b81b16bb78c8a7
நாவலர் பெர்சீவல் பாதிரியிடம் வேலைபார்த்தவர்.
ஹிந்து சமயத்தில் வழங்கும் நல்ல தமிழ், வடமொழிச்
சொற்களைத் தக்க இடத்தில் வைத்து பைபிளைத்
தமிழ் ஆக்கித் தந்தார். இது எட்டையபுரத்தில்
கடிகை (நாழி) முத்துப்புலவர் மாணவர் ஆன உமறுப் புலவர்
இசுலாமை தமிழ்ப்படுத்தியதை ஒத்தது.
தமிழ்ச் சமயமாக இசுலாமைச் செய்த உமறு
பற்றிய விமரிசனம் இங்கே கண்டேன்:
இந்தியாவில் இருந்த பழைய சூபி சமயம்
இந்து சமயத்தோடு மிகத் தொடர்புடையது.
இன்று அந்த மத நல்லிணக்கம் அதிகம் ஆகிறதா?
குறைவுபடுகிறதா? என்ர கேள்வியை அறிந்தோர்
சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.
NG
> 2009/10/20 சிராஜ் அப்துல்லாஹ் <internationalparad...@gmail.com>
>
> > இறைவனின் திருப்பெயரால்
>
> > சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
>
> > சகோதரர்களே! தமிழ் அறிஞர் பெருமக்களே!
>
> > உமறுப்புலவர் பற்றி கேட்டிருந்தீர்கள் நானும் சகோதரர் வஹ்ஹாபி அவர்களை அணுகி
> > உமறுப்புலவர் பற்றிய உண்மையை உங்கள் முன் பகிர்ந்துக்கொண்டேன்! ஆனால் ஒரு வாரம்
> > ஆகியும் யாரும் இதற்கான பதிலை பதியவில்லையே! ஏன்?
>
> > இஸ்லாம் மார்க்கம் தூய்மையானது அந்த மார்க்கத்தை சேர்ந்த எங்களுக்கு ஆண் பெண்
> > என்ற வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் ஒழுக்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என
> > வலியுறுத்துகிறது.
>
> > * அல்லாஹ் கூறுகிறான்: ''(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது
> > தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள்,
> > அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம்
> > சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம்
> > பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்),
> > அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சையோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு
> > வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்
> > ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த
> > வேண்டாம்.'' (அல்குர்ஆன்: 24:31)
> > *
> > **
> > * ''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு
> > அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:53)*
> > எங்கள் மார்க்கம் எங்களுக்கு இவ்வாறு கட்டளையிட உமறுப் புலவர் என்ற தருலைப்
> > புலவரோ பெண்களின் உடல் அங்கங்களை ரசித்து பாடிய புருடா பாடல்களை தாங்கள்
> > விரும்புவீரோ? அவ்வாறு தாங்கள் உமறுப் புலவரையும் அவரின் ஈனத்தனமான தமிழ்
> > இலக்கியங்களையும் விரும்புவதாக இருந்தால் இஸ்லாத்தையும் நபிகளாரையும்
> > இகழ்கிறீர்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டிவரும்.
>
> > என் தமிழ் சான்றோர்களே!
>
> > கண்ணகி ஒரு காற்சிலம்பிற்காக மதுரையை எரித்தாள்!
>
> > மனுநீதி அரசன் பசுமாட்டிற்காக தன் மகனையே சக்கரத்தில் ஏற்றிக் கொன்றான்!
>
> > நக்கீரன் என்ற புலவர் இலக்கிய பிழை கொண்ட சிவனின் பாடலுக்கு சுதி கொடுக்காமல்
> > நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றார்
>
> > எனவே உமறுப்புலவர் எங்கள் மார்க்கத்தை எள்ளி நகையாடியிருக்கிறார் தமிழ்
> > சான்றோர்கள் அதை வரவேற்கிறீர்கள்! இதற்காக நாம் என்ன செய்ய இயலும்! இதோ இறைவன்
> > அல்லாஹ் எங்களுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனில் இவ்வாறு தான் கட்டளை
> > இடுகிறான் சற்று படியுங்கள்!
>
> > *“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை
> > செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி
> > நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்”
> > (அல்-குர்ஆன் 6:48)*
>
> > *“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும்,
> > மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்)
> > துலாக்கோலையும் இறக்கினோம்” (அல்-குர்ஆன் 57:25)*
> > சகோதரர்களே! தமிழ் சான்றோர்களே! நான் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் உங்களிடம்
> > கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்கள் இஸ்லாத்தில் உமறுப்புலவரால்
> > கரைபடிந்துள்ளது அதை நாமே வெறுக்கிறோம் நீங்களும் இந்த கரையை உங்கள் தமிழ்
> > அகராதியிலிருந்து நீக்கிவிடுங்கள். இந்த பாவத்திற்கு நீங்கள் ஆட்படாதீர்கள்!
> > இதை எடுத்துக் சொல்வதுதான் ஒரு முஸ்லிமாகிய என்மீது கடமையாகிறது மாறாக தங்களை
> > தவறாக சித்தரிக்கவோ? தங்களுக்கு தீங்கு விளைவிக்கவோ இல்லை! இதைத்தான் அல்லாஹ்
>
> ...
>
> read more »
நண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,
முரண்பாடுகள் இப்போது கண்டுபிடித்து விமரிசிக்கப்பட்டாலும் ,அது நம் முதுசொம்
சொத்து அல்லவா ?
நாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள் ,
வழிபாடுகளை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக்கொண்டால் என்ன நண்பரே ?
தங்கள் உணர்வுகளை பகிர்த்து கொள்ளுங்கள் ,ஆனால் குற்றம் சாட்டுதல் போல் வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை. அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது. தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.
ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.
ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். அல்குர்ஆன் 10:18.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை”" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3
குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104
நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்‘ என்று பெயர்.
இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக் கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.
தவ்ஹீதின் வகைகள்: -
தவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: -
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: -
இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.
அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: -
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங் கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப் படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர்.
அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என உறுதிகொள்வதாகும்.
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: -
அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
தவ்ஹீதின் முக்கியத்துவம்: -
மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.
இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப் பானாவும்).
உமறுப்புலவருக்கு இங்கே ஃபத்வா கொடுக்க வேண்டுமா ?
ஏதோ, புலவர் என்ற ரீதில் Poetic Licenseஐ கொஞ்சம் எடுத்துள்ளார் என்று
வைத்துகொள்ளுங்களேன். பொறுத்துக்கொள்ளுங்கள். இலக்கியம் தானே,
"deviation" இருக்கத்தான் செய்யும். அதற்காக என்ன செய்ய முடியும்.
//இந்த சர்ச்சை! இந்த சர்ச்சையால்//
நீங்களே சர்ச்சையை வேண்டுமென்றே உருவாக்க விரும்புவதாக தெரிகிறது.
சீறாப்புராணத்துக்கு பதிலாக குரானை பாடப்புத்தகத்தில் சேர்க்காத
வரைக்கும் ஓய மாட்டீர்கள் என்றும் தெரிகிறது.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக !!
V
On Oct 20, 5:52 pm, சிராஜ் அப்துல்லாஹ்
<internationalparad...@gmail.com> wrote:
> இறைவனின் திருப்பெயரால்,
>
> என் இனிய சகோதர, சகோதரிகளே
> *ஸலாம்*
> **
> நான் உங்களை சீண்டுவதாக எண்ணவேண்டாம்! நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான் முஸ்லிம்
> புலவர் தப்புத்தப்பாக இலக்கணம் கொடுத்து அந்த இலக்கணத்தில் இஸ்லாத்தை
> நுழைத்துள்ளார்.
>
> எங்கள் இஸ்லாம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரையும்
> கண்ணியப்படத்த கூறுகிறது. மேலும் பெண்களை மோகப் பொருளாக பார்க்காமல்
> கட்டிக்கொண்ட பெண்ணைத்தவிர மற்ற பெண்களை தாயகவும், சகோதரியாகவும் பாவிக்க
> அறிவுறுத்துகிறது.
>
> இந்துமதமும், கிருத்தவ மதமும் இவ்வாறுதான் சட்டம் வகுக்கிறது அப்படியிருக்க
> உமறுப்புலவர் இஸ்லாத்தை இவ்வாறு தவறாக சித்தறித்துள்ளாரே இதை தமிழர்கள்
> பாடநூல்களில் இடம்பெறச் செய்யலாமா?
>
> உமறுப்புலவர் ஏதோ இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியது போன்று இன்றைக்கு அந்த
> ஈனத்தனமான இலக்கண பாடலை தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம் பெறச் செய்வது தகுமா?
>
> நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதே உமறுப் புலவர் தமிழ் பெண்களை இவ்வாறு
> சித்தரித்து பாடியிருந்தல் நீங்கள் இந்த உமறுப்புலவரின் பாடல்களை தமிழ்நாட்டுப்
> பாடநூல்களில் இடம்பெறச் செய்து கண்ணியப்படுத்துவீர்களா?
>
> நாம் முஸ்லிம்கள் இந்த உமறுப்புலவரின் செயலால் வெட்கப்படுகிறோம்.
> அதன் வெளிப்பாடே இந்த சர்ச்சை! இந்த சர்ச்சையால் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே
> ஒன்றுதான்! இஸ்லாத்தை அறிந்துக்கொள்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்)
> அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்! திருக்குர்ஆன் தமிழ்
> மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை படித்துப் பாருங்கள்!
>
> 2009/10/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை.
மனைவியின் மீது உங்கள் கடமை
‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்அதற்காக கூலி வழங்கப்படுவீர்.
உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1Book:2, Verse:56)
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடையதாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச்சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே! நீ என்மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!)நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!
(இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)
அப்படிப் பாரத்தால் குணங்குடியாரையும் தக்கலை பீர் முகமது வாப்பாவையும் அவர்களின் தர்காவில் இருந்து எழுப்பி உடனே தூக்கில் போட்டாக வேண்டும்.
பொறுமை, சகிப்புத்தன்மை வேண்டும். அது தான் வாழ்க்கைக்கு முக்கியம்.
எல்லாமும் மறைநூல்களில் உள்ளது உள்ளபடியே வார்த்தை பிசகாமல் இருக்க
முடியாது.அது யதார்த்தமும் இல்லை. உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வதே
முறை.
சிறாப்புராணத்தின் மூலம் தமிழர்களுக்கு நபிகளின் வாழ்க்கை
அறிமுகப்படுத்தினார் என்ற ரீதியில், உமறுப்புலவரை கொண்டாடுங்களேன் !
V
On Oct 20, 6:19 pm, சிராஜ் அப்துல்லாஹ்
<internationalparad...@gmail.com> wrote:
> *மனைவியின் மீது உங்கள் கடமை*
> ‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்அதற்காக கூலி
> வழங்கப்படுவீர்.
>
> உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று
> இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி)
> அறிவித்தார். *(சஹீஹுல் புகாறி Volume:1Book:2, Verse:56)*
>
> *உங்கள் பெற்றொர் மீது உங்கள் கடமை*
> அவனையன்றி (வேறு எவரையும்)நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு
> நன்மைசெய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்.
> அவ்விருவறில்ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை
> அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் –
> அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும்
> அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக! *(உலகப் பொதுமறை
> திருக்குர்அன் 17:23)*
>
> **மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடையதாய்
> வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச்சுமப்பதும்
> அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன்
> வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே! நீ என்மீதும், என் பெற்றோர் மீதம்
> புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!)நன்றி செலுத்தவும், உன்னுடைய
> திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள்
> பாலிப்பாயாக!
>
> (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது
> செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே
> திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு
> முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். *(உலகப் பொதுமறை
> திருக்குர்அன் 46:15)
> *
> 2009/10/20 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
>
>
>
> > அப்படிப் பாரத்தால் குணங்குடியாரையும் தக்கலை பீர் முகமது வாப்பாவையும்
> > அவர்களின் தர்காவில் இருந்து எழுப்பி உடனே தூக்கில் போட்டாக வேண்டும்.
>
> > சுஃபி ஞானிகள் அனைவரையும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
>
> > நம்ம ஆட்களால் முடிந்தால் அதையும் செய்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
>
> > பென்னேஸ்வரன்
>
> > 2009/10/20 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> ...
>
> read more »
நண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,
//குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.//
இது நீங்கள் கூறியது .
இதைத் தெரிந்து தான் நான் நாகூர் முதலிய தர்காக்களைப் பற்றி குறிப்பிட்டேன் .
அவைகள் இஸ்லாம் நெறிக்கு புறம்பானவை என எனக்கு தெரியும் .
தர்காக்கள் ,அவைகளில் வழிபாடு பெருவாரி இஸ்லாமியர்களின் வாழ்வில் இணைந்து விட்டது
இதை இனி அவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாது .
மதம் எனும் போதே சில பொறுத்துக்கொள்ளும் தன்மை வந்து விடுகிறது . உமறுப் புலவர் எழுதிய சீறா புராணம் ஒன்றும் ஒரு மத வழிபாட்டு நூல் அல்ல
அதை அவ்வாறு கூறவே இல்லை .இது நபியின் வரலாற்றை தமிழில் கூறவந்த நூல் .
வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத புகுந்த கம்பர் அதில் சில மாறுதல்கள் வருணனைகள் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி மாற்றினார் .அவ்வாறே உமறு புலவர் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி நபியில் வரலாற்றில் சில வருணனைகளை சேர்த்துவிட்டார் .அப்போது அவற்றிக்கு எதிர்ப்பில்லை .ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்போது அதை எதிர்க்கிறார்கள் .நான் இதை முன்பே இணையத்தில் படித்திருக்கிறேன் .
எப்படி இப்போது நாகூர் முதலிய தர்காக்களில் வழிபாடும் ,திருவிழாக்களும் இஸ்லாமிய நியதிக்கு புறம்பனாலும், அதிகமாக அதற்க்கு எதிர்ப்பில்லையோ அவ்வரறே உமறு புலவர் விஷயத்தையும் விட்டுவிடலாமே என்றேன் .அது ஒரு காப்பியம் தானே .மத நூல் இல்லையே .
காப்பியத்தில் சிறிது கற்ப்பனைக்கு இடமுண்டு ..
இஸ்லாம் பற்றி நட்புடன் நல்ல விஷயங்களை கூறுங்கள் .கசப்பை தூண்டும் எந்த விஷயமும் வேண்டாமே .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
.
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
>> இந்தியாவில் இருந்த பழைய சூபி சமயம் இந்து சமயத்தோடு மிகத் தொடர்புடையது.இன்று அந்த மத நல்லிணக்கம் அதிகம் ஆகிறதா? குறைவுபடுகிறதா? <<
முஹம்மது நபியின் அடக்கம் முடிவதற்குள் அபுவைப் பின்பற்றுவோர் என்றும்,
அலியைப் பின்பற்றுவோர்
என்றும் இஸ்லாம் பிளவுபட்டு விட்டது.ஸூஃபி மூன்றாம் பிரிவு. அதைச்
சார்ந்த ‘அவ்லியா’ என்னும் கருத்து முஸ்லிம்கள் ஏற்காத ஒன்று.ஞானத்தால்
தெய்வத்தன்மை பெறுவது ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கை. அப்பிரிவினருக்கே
அங்கீகாரம் இல்லாதபோது இணக்கத்தை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் ?
முதலில் இஸ்லாமிய நாடுகளுக்குள் நல்லிணக்கம் இருந்தால் சரி.
தேவ்
இவ்விழையின் நோக்கம் சீராக இல்லை.
உமர் ஒரு தமிழன். தமிழ்ப்புலவன். தமிழ் இலக்கிய மாணவன். சங்கம் தொடங்கிய
ஒரு நீண்ட மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு தமிழனால், ஒரு இந்தியனால்
அவ்வாறுதான் காவியம் செய்யமுடியும்.
அவன் தன்னை ஒரு அரபு நாட்டுக்காரனின் ஒட்டகத்தொழிலாளியாக எண்ணிக்கொண்டு
காவியம் செய்யவில்லை. அவருடைய loyalty தமிழ்மண் சார்ந்ததாக உள்ளது. சூஃபி
பெருமக்கள் பலரின் நோக்கும் `இந்தியம்` சார்ந்ததாக இருந்திருக்கிறது.
நண்பர் தன்னை `வெறும்` இஸ்லாமியன் எனும் அடையாளத்திற்குள் வைத்துக்
கொண்டு இங்கு வாதிட வந்தால் மின்தமிழ் அல்ல அதற்கான தளம்.
அவருக்கு இவ்வளவு சொல்லியும் மின்தமிழின் மனவோட்டம் புரியவில்லை.
முதுசொம் என்பதன் பொருள் புரியவில்லை.
இவ்விழை சும்மா இருக்கும் சங்கை ஊதுகின்ற வெட்டி வேலை என்றால், அதாவது
வெறும் `கவன ஈர்ப்பு` என்றால் அது இங்கு தேவையில்லை. அவர் கவனம் கொள்ள
வேண்டிய பணிகள் பற்றி முன்பே சுட்டியுள்ளோம். அவர் இல்லாத பெண்ணிற்குக்
கல்யாணம் என்ற ரீதியில் இங்கு இல்லாத ஒரு `பிரச்சனையை` தானாக
உருவாக்கிக்க்கொண்டு பிரச்சனையைக் கிளப்பினால், அது மின்தமிழின் உயர்
நோக்கங்களை திசை திருப்புவதாக அமையும்.
இவ்விழை கடும் மட்டுறுத்தலுக்கு உள்ளாகும்.
நன்றி.
கண்ணன்
2009/10/21 Kamalam Devi <kamalam...@yahoo.com>
சூபி ஒரு தனி சமயமா ? முஸ்லிம்களில் ஒரு சிலரை சூபிகள் என்று அறிகிறேன்.
புத்தமதத்திலிருந்து சென் துறவிகள், இந்து மதத்திலிருந்து சித்தர்கள்
என்பது போல. இவர்களை ஒரு மதத்தினுள் அடைத்து விடுவது சரியில்லை என்று
நினைக்கிறேன்.
இலக்கணம் இல்லை, இலக்கியம்.
> நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதே உமறுப் புலவர் தமிழ் பெண்களை இவ்வாறு
> சித்தரித்து பாடியிருந்தல் நீங்கள் இந்த உமறுப்புலவரின் பாடல்களை தமிழ்நாட்டுப்
> பாடநூல்களில் இடம்பெறச் செய்து கண்ணியப்படுத்துவீர்களா?
தமிழ் பெண்கள், இஸ்லாமிய பெண்கள், தமிழ் தெரிந்த இஸ்லாமிய பெண்கள், தமிழ்
தெரியாத இஸ்லாமிய பெண்கள், தமிழ் தெரிந்த இஸ்லாமியர் அல்லாத பெண்கள்,
தமிழ் தெரியாத இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என யாரைப்பற்றி தவறாகச்
சொன்னாலும் பாட நூலில் இடம்பெற அனுமதிக்கக் கூடாது.
எனக்கு ஒரு சந்தேகம், சீறாப்புறாணத்தை விட சிறந்த அல்லது அதனுடன்
ஒப்பிடத்தக்க வகையில் இருக்கும் இஸ்லாமிய இலக்கியம் (குர்ஆனுக்கு
புறம்பாக இல்லாத) ஏதேனும் தமிழில் உள்ளதா ?
அன்புள்ள நண்பர் பென்னேஸ்வரன் ,
தாங்கள் கூறியது மிக சரியே .
மதம் என்பது ஒரு ஸ்தாபன அமைப்பு .ஆனால்
சித்தர்களும் சூஃபி ஞானிகளும் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் .
அவர்கள் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவர்கள் .சித்தத்தின் அந்தத்தை கண்டவர்கள் .
தற்ச்செயலாக தமது இச்சையில்லாமல் பிறந்த இந்தப் பிறப்பில் இருந்து தானே தங்களுக்குகாக தனிவழியை தன்னிச்சையாக கண்டவர்கள் ..
ஆனால் அந்த தனிவழியே முக்கிய பெருவழி எனக்காட்டியவர்கள்
தாங்கள் அவர்கள் இருப்பிடத்தில் பெறும் உணர்வு ,அனைவராலும் பெற முடிவதில்லை .அதிர்ஷ்டம் செய்தவர்களே அடையக்கூடும் .
சந்திரா உங்களிடம் எதோ பேசவேண்டும் என்றாரே. பேசினாரா ?
அன்புடன்
ஏ சுகுமாரன்