--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வயது ஏற, ஏற, பக்தி குன்றும் என்றும், சிந்தனை செய்ய மனம் முரண்டு பிடிக்கும் என்று சிலர் நினைக்கின்றனர். அது ஒரு புறம் இருக்க, ஶ்ரீமோஹனரங்கன் அருமையாக இழைத்த 21 இழைகளை மறுபடியும் ஒரு சேர படித்தேன் என்பது உள் புறம் இருக்க, என் நினைவில் வருவது லண்டனில் ஒரு அர்ச்சகர்.
சிவபுரம் நடராஜன் அற்புதமாக நடனமாடியபடி நிற்கிறான், கோர்ட்டார் முன்னால். சாக்ஷி கூற வரவழைக்கப்பட்ட அர்ச்சகர், அந்த அர்ச்சாவதாரத்தில் புதிதாக ஏற்பட்ட காயங்களையும், தழும்புகளையும் தடவி, தடவி, பார்த்து உதறலெடுத்து, விம்மி, விம்மி அழுகிறார். கோர்ட்டில் அசாதாரண அமைதி. கனம் கோர்ட்டார், இந்த அர்ச்சகர் இந்த சிலையுடன் கொண்டாடும் உறவு தெய்வீகமானது என்றும், திருடப்பட்ட அந்த சிலை இந்தியாவுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளிக்கிறார். நண்பர் வினை தீர்த்தான் அவர்களே! => இது கோயிலில் இருக்கும் கடவுள்; அர்ச்சகரின் அந்தர்யாமியும் அவரே.
நண்பர் காளைராஜனிடம் கேளுங்கள். ஒரு விக்ரஹம் அவருக்கு சென்னையில் கிடைத்தது. அதை போற்றி, பாதுகாத்து பாசத்துடன் பராமரிக்கிறார். நண்பர் வினை தீர்த்தான் அவர்களே! => அது பூஜை அறை கடவுள்; அறை மாறினாலும், மறை மாறவில்லை.
வாலி மோக்ஷம் பற்றி என்னுடைய கருத்துக்களுக்கு வேறிடம். ஆனால், வாலி, ராவணம், ஹிரண்யன் ஆகியோர் கடவுளால் வதம் செய்யப்பட்டு மோக்ஷம் எய்தியவர்கள். இந்த பின்னணியில். ஶ்ரீமோஹனரங்கனின் இழைகளில் கூறப்படாத ‘மோட்ச உலகு இருந்து அங்கு இருப்பதா?’ என்ற உங்கள் வினாவுக்கு விடை தேட =>தர்மபுத்திரன் கைலாச மலை ஏறியது உதவுமோ? என்று தோன்றுகிறது.
தோத்திரப் பாடல்களில் இருப்பதா என்ற கேள்விக்கு விடை காண, நண்பர் வினை தீர்த்தான் அவர்களே! => குணங்குடி மஸ்தான் கண்ணிகளை படித்தால் தெளிவு கிடைக்கும். அவர் ஹிந்து அல்ல.
நம் நல்ல குணங்களா? என்பது சிந்தனையை கிளரும் கேள்வி, நண்பர் வினை தீர்த்தான் அவர்களே! => விடை காண எர்னெஸ்ட் ஹைக்கல் எழுதிய ‘பிரபஞ்சம் ஒரு புதிர்’ என்ற நூலின் முன்னுரையை படிக்கவேண்டும். இந்த நூல் கிருத்துவ சமயம் சார்ந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. பேராசியர் ஹைக்கல் உதாசீனப்படுத்தப்பட்டார். முன்னுரை அளித்தவர், ‘நம்முள் உண்மையான கிருத்துவன் யாரெனில், அவர் பேராசியர் ஹைக்கல் என்றார். அவரது நல்ல குணங்கள் அத்தனை உன்னதம். அவரின் அந்தர்யாமி கடவுளே.
தொண்டா? இல்லை என்பேன். தொண்டு செய்வது மானிட பணி. தெய்வம் அதை பெரிது படுத்தாது. தெய்வீகப்பணி என்பதும் அதனுடைய உயர்நிலை. தெய்வம் தள்ளி நிற்கும்.
அனுட்டானங்களா! இல்லை எனினும் பெரிதும் உதவும். இன்று என்னுடைய யூத நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதும் தொன்மை வாய்ந்த மதம். அவர் ‘அனுட்டானங்களா! இல்லை எனினும் பெரிதும் உதவும்.’ என்று சொன்னது, சரியாகப்பட்டது.
ஹிந்து மத நோக்கம் கடவுளை அடைதல் என்பது போல, மற்ற எந்த மதத்தை சொல்ல இயலாது! எல்லா மதங்களின் சன்மார்க்கம், மனிதனின் அறிவுக்கு எட்டிய கடவுளை அடைதல், நண்பர் வினை தீர்த்தான் அவர்களே!
செல்வகுமரனின் விசாரவிலகல் புரிகிறது
இனி பேசினால், உதை விழும். விழட்டுமே. என்ன கெட்டுப்போச்சு?
நன்றி வணக்கம்.
இன்னம்பூரான்
15 06 2011
என்னுடைய எண்ணத்தை இங்கே பதிக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னுள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன.
ஆனால் என்னுடைய தீர்மானம் ஒன்றுதான்.
உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள் வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
வேறு விதத்தில் குழப்பம் நீங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
இதனாலேயே இந்த விசாரங்களை விட்டு நான் வெகு தூரம் நகர்ந்து விட்டேன்.
தொண்டா? இல்லை என்பேன். தொண்டு செய்வது மானிட பணி. தெய்வம் அதை பெரிது படுத்தாது. தெய்வீகப்பணி என்பதும் அதனுடைய உயர்நிலை. தெய்வம் தள்ளி நிற்கும்.
இனி பேசினால், உதை விழும். விழட்டுமே. என்ன கெட்டுப்போச்சு?
நன்றி வணக்கம்.
இன்னம்பூரான்
ஐயா,கண்ணனிடத்தில ஒருமுறை நீ எங்குள்ளாய் என நாரதன் வினாவியதற்கு.
உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள் வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
நண்பர் காளைராஜனிடம் கேளுங்கள். ஒரு விக்ரஹம் அவருக்கு சென்னையில் கிடைத்தது. அதை போற்றி, பாதுகாத்து பாசத்துடன் பராமரிக்கிறார். நண்பர் வினை தீர்த்தான் அவர்களே! => அது பூஜை அறை கடவுள்; அறை மாறினாலும், மறை மாறவில்லை.
இந்த இழை சுவாரசியமான இழை. சுதந்திரமாக அணுகமுடிகிறது. எல்லோரிடமும் ஒரு
பொறுப்பு இருப்பதைக் காண்கிறேன். பொறுப்பும், ஒழுங்கும், அக்கறையும்
இருக்கும் போதுதான் வார்த்தைகள் பொருள் கொள்கின்றன. இல்லையெனில் சங்கம்
தொட்டு பேசி அலுத்த வார்த்தைகளாக நாம் பேசுவது போய்விடும்.
ஒரு இழை, நம் மரபு காணும் வழியில் புரிந்து கொள்ள முற்படுவது.
இந்த இழை அவரவர் அனுபவத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முயலுவது.
இரண்டும் வேண்டும். நம்மாழ்வார் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அவன் நம்
அன்பிற்கும் அகப்படுகிறானா எனக்காண்பது அவரவர் பொறுப்பு.
‘கடவுளைக்கண்டவர் விண்டால்!’ என்று வருகிறது. அரங்கனாரின் எழுத்துக்களை
ஊன்றிக் கவனித்தால் இதை அவர் மறுதலிப்பது தெரியும். ‘காணுதல்’ என்பது
என்ன? கட்புலனால் காண்பதா? அகக்கண்ணால் காண்பதா? அகக்கண்ணால் கண்ட பொருளை
விள்ளமுடியுமா?
இம்மாதிரி விசாரங்களின் பெரிய பிரச்சனையே, விசாரிக்கப்படும் பொருள்
பற்றிய மயக்கமற்ற விளக்கத்தை முதலில் கொள்கிறோமா? என்பது! How do you
define God? அப்புறம்தானே காண்பது?
அரங்கனார் சொல்கிறார் வேதாந்தம் என்பதே இதற்காகத்தோன்றியதே என்று. எப்படி
ஒரு பிரச்சனையை அணுக வேண்டும். எம்மாதிரி நம் கேள்விகள் அமைய வேண்டும்.
இந்தக் கேள்வியை முன்னமே யாரெனும் கேட்டு உள்ளார்களா? இது போன்ற
மயக்கங்களைக்களைய மரபை அறிதல் அவசியம்! ஏனெனில் இந்த விசாரணை இன்று
நேற்றுத்தொடங்கியதல்ல!
எப்படியாயினும் நம்மாழ்வார் சொல்வது போல் அன்றிலிருந்து இன்றுவரை வேட்கை
எழுவிப்பவனாகவே அவன் உள்ளான் என்பதே அவன் சிறப்பு!
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. (இயற்பா)
நா.கண்ணன்
கட + உள்நம் உள்ளே ப்ரயாணம் செய்து அந்தப் ப்ரயாணத்தின் மூலமாக கடவுளை அறிவதுஉண்மையான கடவுளைக் காணும் வழி என்று ஆன்றோர் சொல்லுவர்
சந்தேகம் என்பதைக் களைந்து நம்புதல் என்னும் ஞானத்தை ஏற்படுத்திக்கொண்டாலும் இறையைக் காண முடியும் என்பர்.
நம் மனதில் கடவுள் என்பவரை எப்படிச் சித்தரித்திருக்கிறோமோ அப்படி உருவில் வந்தால்தான் நாமும் கடவுளை கடவுள் என்று நம்புவோம்.
நன்றி தமிழ்த் தேனீயாரே!
கற்பிக்க, கற்பிக்க, தள்ளி நின்று நகைப்பாரே, கடவுளார். இன்னம்பூரான்
விளக்கமாக எழுதுங்கள் இ.சார்.
ஞானமோ, தெளிவோ சொற்களினால், அதன் கோவையாக வரும் பேச்சால், சொற்பொழிவால், எழுத்தால், வராது.
நமக்கு உண்மை வேண்டுமா, இல்லை சொற்களினால் ஏற்படும் களிப்பு போதுமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
அருமை திரு செல்வ குமரன்.
--
ஒரு இழை, நம் மரபு காணும் வழியில் புரிந்து கொள்ள முற்படுவது.
இந்த இழை அவரவர் அனுபவத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முயலுவது.
இரண்டும் வேண்டும். நம்மாழ்வார் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அவன் நம்
அன்பிற்கும் அகப்படுகிறானா எனக்காண்பது அவரவர் பொறுப்பு.
பிரச்சனையே, விசாரிக்கப்படும் பொருள்
பற்றிய மயக்கமற்ற விளக்கத்தை முதலில் கொள்கிறோமா? என்பது! How do you
define God? அப்புறம்தானே காண்பது?
இது சரியான நோக்கு. ஆகக்கூடுதலாக இந்தியாவில்! சதா இது பற்றிய
பேச்சுதான். காற்றிலே கீதம் வந்தால் ரசிக்கமுடியும். ஒரே இரைச்சலாக
இருந்தால் மெல்லிய கீதத்தை எப்படி ரசிக்கமுடியும். இறைமையை எவ்வளவு
கொச்சைப் படுத்த முடியுமோ அவ்வளவு நடந்து கொண்டு இருக்கிறது அங்கு. நம்
கோயில்களை நாம் வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?
இதற்கு ஒரு வழியுண்டு. முதலில் குடத்தைக் கவிழ்த்துவிடுங்கள். நம்
மண்டையில் ஏறியிருக்கும் அதீத கற்பனைகள், பிரேமை, பயம்
இவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடுங்கள். அதைப் பற்றியே நினைக்காமல்
இருங்கள். அப்போதுவரும் தெளிவில் சில விஷயங்கள் பிடிபடக்கூடும். நாம்
பேசும் பல விஷயங்கள், a conditioned mind செய்யும் மாயா ஜாலங்கள்.
மலரோடு பேசிப்பாருங்கள் :-)
நா.கண்ணன்
> பிரஸ்தான த்ரயமாக உள்ள நூல்களில் ஒரு நூலில் உள்ள ஒரு வரியையாவது உண்மையில்
> புரிந்துக் கொள்ள முடிகிறதா என்பதே கேள்வி.
“பிரஸ்தான த்ரயம்’ புரிந்தால்தான் கடவுளை அறிய முடியும் என்று விதி
இல்லை. இந்துக்களுக்கு அங்கு வழி சொல்லப்பட்டுள்ளது. மேலும் நாம்
கேட்கின்ற பல கேள்விகளுக்கு ஏற்கனவே விடைகள் கண்டு சொல்லப்பட்டுள்ளன.
அவ்வளவுதான்.
இந்துக்கள் அல்லாதோருக்கு கடவுட்காட்சி கிடையாது என்றெல்லாம் சட்டமில்லை.
எனவே உலகில் காணும் எத்தனையோ மார்க்கங்களில் அதுவுமொன்று என்று
கொள்ளவும். Truth is a pathless land என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதையும்
கவனத்தில் கொள்ளலாம்.
> இருப்பினும் ஞான வழி எனும்போது, தெய்வம் எனும்போது அவருடைய சொற்களிலும்
> ஏகப்பட்ட வினாக்கள் எழுகின்றன.
>
அக்கேள்விகளை இங்கு எழுப்பலாம். ஆனால் ரங்கன்தான் பதில் சொல்ல வேண்டும்
என்றால் அவர் பதில் சொல்லும் வரை காத்திருக்க வேண்டியதுதான். . இல்லை நம்
சாஸ்திரங்களில் இதற்கான விடை என்னவென்று அறிய வேண்டும் என்று தோன்றினால்
சாஸ்திரம் அறிந்த வேறு சிலர் பதில் சொல்ல முயலலாம்.
என்னைப் பொறுத்தவரை, ‘கடவுளை அறிந்தோர் வந்து சொல்லும்வரை’ என்பதை
வேறுவிதமாகக் காண்கிறேன். கடவுளை அறியாதோர் யாரேனும் இருக்க முடியுமா
என்ன? என்பதே அது! எதைத்தொட்டாலும் அவன் கதைதான் கேட்கிறது. நாம் பேசுகிற
அத்தனை பேச்சும் சுகமான காலக்ஷேபம்! அவ்வளவுதான். அவனை அறிந்து
இருப்பதால்தான் முதலில் சுவையே தென்படுகிறது. இனிப்பு பற்றிய உள்ளறிவு
இல்லாமல் இனிப்பின் சுவையை ரசிக்கமுடியாது!
இருட்டுக்குள் இருந்தாலும் ‘நாம்’ காணாமல் போவதில்லை. எத்தனை
உறக்கத்திலும் தன்னுணர்வு இருக்கிறது!
போதாக்குறைக்கு மின்தமிழ் வேறு கண்ணாடி போட்டுக்காட்டுகிறது. அறியாதோர்
யாருளர்? நண்பா!!
நா.கண்ணன்
On Jun 15, 7:05 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> என்னுடைய எண்ணத்தை இங்கே பதிக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
>
> என்னுள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன.
>
> ஆனால் என்னுடைய தீர்மானம் ஒன்றுதான்.
>
> உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள்
> வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
>
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
- என்பார்கள்.
கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
நா. கணேசன்
On Jun 16, 7:25 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ஐயா
>
> கட என்பதற்கு அகன்று கொண்டே போதல், வரம்பின்றி முடிவில்லாது போதல் என கட+அல் =
> கடல் ஐ சுட்டுவார் பேரா. இரா. மதிவாணர். எனவே கடவுள் என்பதற்கு கங்குகரை
> வரம்பில்லாமல் இருக்கும் ஆற்றல் என்பதே அதன் பொருள். அது ஆண், பெண், அலி என
> எப்பாலிலும் சேர்க்க ஒண்ணாதது.
>
> சேசாத்திரி
>
கடவுள் = கட + உள் என்று பிரிக்க நன்றாயிருந்தாலும்
தொல்காலத்தில் அதுவா பொருள்? என்று அறிஞர்கள்
ஐயப்படுகின்றனர்.
செய்யுள், இயவுள், ... இவற்றுடன் ஒப்பிட்டால்
கடவுள் < கடவு-.
கடவு என்றசொல்லுக்கு கடன், கடமை என்ற பொருள்கள்
உள. கடவுள் போலவே ஒரு சொல் கடவன் = கடமைப்பட்டவன்,
யஜமானன். அவனு/ளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது
கடமை (உ-ம்: பலி). ”அடியேன் கடவது என்?” தேவாரம்,
செய்ய வேண்டியது என்ன? எனப் பொருள்.
நா. கணேசன்
> 2011/6/16 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
>
>
> > கட + உள்
>
> > நம் உள்ளே ப்ரயாணம் செய்து அந்தப் ப்ரயாணத்தின் மூலமாக கடவுளை அறிவது
> > உண்மையான கடவுளைக் காணும் வழி என்று ஆன்றோர் சொல்லுவர்
>
> > சந்தேகம் என்பதைக் களைந்து நம்புதல் என்னும் ஞானத்தை ஏற்படுத்திக்கொண்டாலும்
> > இறையைக் காண முடியும் என்பர்
>
> > நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில்
>
> > அந்த நாதன் கல்லில் இல்லை நம்முள் இருக்கிறான், அப்படி நம்முள்
> > இருந்தால்தான் நட்ட கல்லிலும் காணமுடியும் இறைவனை
>
> > இல்லையென்றால் கடவுளே எதிரில் வந்து நின்றாலும் நீங்கள் என் டீ ராமாராவ்
> > போல இல்லை அதனால் நீங்கள் கடவுள் இல்லையென்றே சொல்லும் மனப்பன்மை கொண்டோர்
> > நாம்
>
> > நம் மனதில் கடவுள் என்பவரை எப்படிச் சித்தரித்திருக்கிறோமோ அப்படி உருவில்
> > வந்தால்தான் நாமும் கடவுளை கடவுள் என்று நம்புவோம்
>
> > ஹனுமனுக்கு கிருஷ்ணன் சமந்தக மணி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கிருஷ்ணனே
> > ராமனாகக் காட்சி அளித்தான் அதன் பிறகுதான் ஹனுமனே அவனை ஒப்புக்கொண்டான்
> > எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்
>
> > ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடவுள்
>
> > ”அப்பிடி ஒண்ணும் இல்லே” ஒரு சுவையான கற்பனை படிக்கலாம் வல்லமை இதழில்
>
> >http://www.vallamai.com/?p=4006தேனீ
>
> > அன்புடன்
> > தமிழ்த்
>
> > 2011/6/15 karuannam annam <karuan...@gmail.com>
>
> >> நன்றி திரு சேசாத்திரி. கூட்டு வழிபாடு நேர்மறை எண்ணங்களின் சங்கமமாக
> >> இருப்பதால் திருவருள் அங்கு நிலவும் என்பது உறுதி. மேலும் எண்ணங்களைப்
> >> பகிர்ந்து கொள்ளுங்கள்.
> >> நன்றியுடன்
> >> சொ.வினைதீர்த்தான்.
>
> >> 2011/6/15 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> >>> ஐயா,
> >>> கண்ணனிடத்தில ஒருமுறை நீ எங்குள்ளாய் என நாரதன் வினாவியதற்கு.
> >>> நான் வைகுண்டத்திலும் இல்லை ஓகியரின் நெஞ்சத்திலும் இல்லை என் பத்தர்கள்
> >>> எனைப் புகழ்ந்து எங்கு பாடிக் கொண்டிருக்கிறார்களோ அங்கு என அணுக்கருவை
> >>> (nucleus) மாற்றிக் கொள்கிறேன்.
> >>> சேசாத்திரி
>
> >>> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
ஒரு பன்நெடுங்கால மரபும் அதன் நூல்களும் ஒரு திசை, ஒரு வழி, ஒரு வாழ்வு நெறி காட்ட வேண்டாமா? குருடன் தொட்டுப் பார்த்து யானை போல ஒவ்வொரு வழி, ஒவ்வொரு புரிதல் சரிதானா? அல்லது அந்தச் சுதந்திரம் தான் ஹிந்து மதப் பெருமையோ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Jun 17, 6:30 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> கடவுள் என்பது எதில், எங்குதான் இல்லை என்று அழககாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க
> நன்றி திரு கண்ணன்.
>
> ஒரு *பன்நெடுங்கால மரபும் அதன் நூல்களும்* ஒரு திசை, ஒரு வழி, ஒரு வாழ்வு நெறி
> காட்ட வேண்டாமா? குருடன் தொட்டுப் பார்த்து யானை போல ஒவ்வொரு வழி,
> ஒவ்வொரு புரிதல் சரிதானா? அல்லது அந்தச் சுதந்திரம் தான் ஹிந்து மதப் பெருமையோ?
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
அன்பின் நண்பரே,
முன்பெல்லாம் வணிகம், பணம் என்பதை
செட்டியார்கள் (உ-ம்: சிலம்பில் கோவலன்) கவனிக்க
சமூகம் விட்டிருந்தது. இப்போது ஹிந்து கார்ப்பரேட்
சாமியார்கள் (பாபா ராம்தேவ்) கைக்கல்லவா மாறி
வருகிறது? :-)
ஹிந்து மதம் பற்றிப் பலரும் விளக்கிவருகின்றனர்
காலங்கால்மாக. கடவுள், சமயம் பற்றி மரத்தடி
ஜோசியர், கோயில் பூசாரிகள், மடங்கள், இங்கர்சால்,
ஈரோட்டு நாயக்கர், பத்திரிகைகள், இணையம், விஞ்ஞானம்,
... எல்லாம் ஒளியூட்டி வருகின்றன. எனக்கு
மகாகவி பாரதியார் விளக்கங்கள் பிடிக்கும்.
(சந்தவசந்தத்தில் ஒருபாடல் (சோமதேவன் - சந்திரன்)
வேதப்பொருள் என்று ஒரு மடல் எழுதினேன்.
அங்கே உண்மையிலேயே பாரதி அறிஞர்கள், யாப்பறி
புலவோர் பலருண்டு. அங்கே பாராட்டும் கிடைத்தது
பெரும்பேறு.)
சுமார் 900 - 950 ஆண்டுகளுக்கு முன் கவிச்சக்கிரவர்த்தி
செயங்கொண்டார் உங்கள் முன் நிற்கும் கேள்விகளைத்
தன் போக்கில் ஆராய்ந்து விடை சொல்லியுள்ளார்.
லோகாயதக் கோட்பாட்டை விளக்க மடலூர்தல் என்னும்
கருப்பொருளைத் தேர்ந்து கடவுள், சமயங்கள், ...
அவற்றிலுள்ள சண்டைகள் எல்லாம் பேசியுள்ளார்.
வளமடல் ஆனதால் 550 அடியும் ஒரே எதுகை.
இப்போதுள்ள ஒருவர் வளமடல்கள் பாடமுடியுமா?
எனத் தெரியலை. முன்பெல்லாம் தமிழில் வளமடல்கள்
இரண்டே என்பர். எனக்குத் தெரிந்து 5: 2 - மங்கையாழ்வார்,
பின்னர் செயங்கொண்டார் (வே.ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர், சென்னை அரசு கீழ்த்திசைச் சுவடிக் காப்பகம்
இரு சுவடிகள்), பின்னர் தத்துவராயர், பின்னர்
சுப்பிரதீபக்கவிராயர் (கன்னிவாடி (திண்டுக்கல் அருகே)
நாரசிங்க நாய்க்கன் மீது பாடியது) இத்தோடு வளமடல்
பாடும் மரபு முற்றிவிட்டது.
ஒசைநயம் - போர் வர்ணனை, காதல் வர்ணனை -
இன்புறத்தக்கது.
காராணை விழுப்பரையன் வளமடல்:
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
உங்கள் கேள்விகளுக்கு என்ன விடை
வளமடல் தருகிறது என்று பாருங்கள்.
(வளமடலின் ஏதாவது வரிக்கு விளக்கம் வேண்டுமென்றால்
தனி இழையில் பேசலாம்.)
மடலூர்தல் பெண்ணைக் கருக்கிலே செய்த மா ஊர்தல்.
அது ஏன்? என்று குறித்துள்ளேன்:
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
நா. கணேசன்
-----------------------------
ஹிந்து மத நோக்கம் கடவுளை அடைதல் எனக் குறிக்கப்பட்டுள்ளது.. எனக்குக்
கடவுள் என்பதில் பல குழப்பம் இருக்கிறது. கோவிலில் இருப்பதா, பூஜை
அறையில்
இருப்பதா, மோட்ச உலகு இருந்து அங்கு இருப்பதா தோத்திரப் பாடல்களில்
இருப்பதா,
நம் நல்ல குணங்களா, தொண்டா, அனுட்டானங்களா என்று குழப்பம்.
(எதிர்கால எதிர்பார்ப்பிலும், பயத்திலும் கோவிலுக்குப் போவதுண்டு. தமிழ்
மீது
ஏற்பட்ட சுவையால் பக்திப் பனுவல் படிப்பதுண்டு. நல்லோர் கூட்டுறவால்
நல்ல
பழக்கங்கள் உண்டு. குழப்பமும் உண்டு)
கடவுள் பற்றிய் தெளிவு இல்லாதபோது கடவுளை அடைதல் என்பதைப் புரிந்து
கொள்வது
எவ்வாறு? அடைவது எவ்வாறு?
On Jun 17, 6:46 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> "கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
> என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
>
> நா. கணேசன்"
>
> ஏன் மாட்டார்கள்?
>
அவ்வாறாயின்,
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்?
> எத்தவத்தை புரிந்தாலும் ஏதவத்தை பட்டாலும் அவர் நிலை அதன்பிறகு மாறாது.
>
> அந்தக் காலத்தில் கடவுளை அடைந்தப் பிறகு பாட்டுக்கள் பாடியும், அதை பதிந்தும்
> இருக்கிறார்கள்.
>
> இப்போது ஈமெயில் அவ்வளவுதான்.
>
> பிற்காலத்தில் வேறு ஏதாவது வந்தால், அதன் வழியாகவும் எழுதுவார்கள்.
>
> 2011/6/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On Jun 15, 7:05 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> > > என்னுடைய எண்ணத்தை இங்கே பதிக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
>
> > > என்னுள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன.
>
> > > ஆனால் என்னுடைய தீர்மானம் ஒன்றுதான்.
>
> > > உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள்
> > > வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
>
> > கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
> > - என்பார்கள்.
>
> > கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
> > என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
>
> > நா. கணேசன்
>
> > > வேறு விதத்தில் குழப்பம் நீங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
>
> > > இதனாலேயே இந்த விசாரங்களை விட்டு நான் வெகு தூரம் நகர்ந்து விட்டேன்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
--
On Jun 17, 6:46 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> "கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
> என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
>
> நா. கணேசன்"
>
> ஏன் மாட்டார்கள்?
>
அவ்வாறாயின்,
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்?
> எத்தவத்தை புரிந்தாலும் ஏதவத்தை பட்டாலும் அவர் நிலை அதன்பிறகு மாறாது.
>
> அந்தக் காலத்தில் கடவுளை அடைந்தப் பிறகு பாட்டுக்கள் பாடியும், அதை பதிந்தும்
> இருக்கிறார்கள்.
>
> இப்போது ஈமெயில் அவ்வளவுதான்.
>
> பிற்காலத்தில் வேறு ஏதாவது வந்தால், அதன் வழியாகவும் எழுதுவார்கள்.
>
> 2011/6/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On Jun 15, 7:05 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> > > என்னுடைய எண்ணத்தை இங்கே பதிக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
>
> > > என்னுள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன.
>
> > > ஆனால் என்னுடைய தீர்மானம் ஒன்றுதான்.
>
> > > உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள்
> > > வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
>
> > கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
> > - என்பார்கள்.
>
> > கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
> > என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
>
> > நா. கணேசன்
>
> > > வேறு விதத்தில் குழப்பம் நீங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
>
> > > இதனாலேயே இந்த விசாரங்களை விட்டு நான் வெகு தூரம் நகர்ந்து விட்டேன்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
உண்மையில் அங்கு ‘கல்லுக்கு’ கைங்கர்யம் நடக்கவில்லை! பெருமாள் பெயரைச்
சொல்லிக்கொண்டு புளியோதரையை விழுங்குவது நாம் தான். எனவே மகேசன் தொண்டு
என்பது அடிப்படையில் மக்கள் தொண்டே!
கடவுள் பெயரைச் சொல்லாமல் சேவை செய்தாலும் இறுதியில் பலனளிக்கப் போகிறவன் அவனே!
அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது! கோயில்/சத் சங்கம் என்பவை சமூகச்
செயல்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவோருக்கு உவப்பளிப்பவை. தவம், தனிமை,
விரதம் என்பவை தனி மனிதச் செயல்கள். எல்லா வழியும் கொண்டு செல்லும் ஒரே
இடம் ‘அவன்’ தான்.
அன்புடன்
நா.கண்ணன்
ஏனிப்படிக் கேட்கிறீர்கள் என்பதை விளக்கினால் கடவுளுக்கு கிட்ட போகலாம்.
நா.கண்ணன்
மிக அழகாக விளக்கத்தெரிகிறதே!
//இந்த இழையில் இதுவே என் கடைசி மடல்//
பிறகென்ன? இது போன்ற அறிவிப்புகள்? :-)
5 குருடர்கள் சேர்ந்து யானையை விளக்கிய கதையாக இந்த இழை தோன்றினாலும்,
அப்படியே இருக்கட்டுமே! என்ன குறைச்சல்? குருடனால் முடிந்ததைச் செய்தான்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!
நா.கண்ணன்
"அவ்வாறாயின்,
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்?"
அந்தக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது அபரோக்ஷ அனுபூதி என்ப்படும் கைவல்ய நிலை. எச்சிற்படா நிலை என்பர். அதாவது வாயால் விளக்கவொண்ணாதது.
பிரம்ம அனுபவத்தையே வாயால் சொல்ல முடியாது. கைவல்ய அனுபவத்தை வாயால் சொல்ல முடியாது. ஆனால் அந்த நிலையின் முக்கியத்துவத்தை, அதுதான் தீர்வு என்பதை, உலகியல் நிரந்தரமற்றது என்பதை, புலனின்ப நாட்டத்தின் விளைவுகளை சொல்ல முடியும்.
5 குருடர்கள் சேர்ந்து யானையை விளக்கிய கதையாக இந்த இழை தோன்றினாலும்,
அப்படியே இருக்கட்டுமே! என்ன குறைச்சல்? குருடனால் முடிந்ததைச் செய்தான்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!
உண்மை திரு கண்ணன். உள் வாங்கச் சிரமமாக இருக்கிற மனதில் உருவகிக்கக் கடினமாக இருக்கிற கருத்துக்களை நண்பர்கள் மூலம் புரிந்து கொள்கிற முயற்சியே இந்த இழை.
--
5 குருடர்கள் சேர்ந்து யானையை விளக்கிய கதையாக இந்த இழை தோன்றினாலும்,
அப்படியே இருக்கட்டுமே! என்ன குறைச்சல்? குருடனால் முடிந்ததைச் செய்தான்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!
உண்மை திரு கண்ணன்.
5 குருடர்கள் சேர்ந்து யானையை விளக்கிய கதையாக இந்த இழை தோன்றினாலும்,
அப்படியே இருக்கட்டுமே! என்ன குறைச்சல்? குருடனால் முடிந்ததைச் செய்தான்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!
உண்மை திரு கண்ணன்.
உண்மையில் கடவுளைக் கண்டவர்களோ, அடைந்தவர்களோ யாராவது இருந்தால், அவர்கள்
வழியாக மட்டுமே நம் கேள்விகளுக்கு விடை அறிய முடியும் என்று தோன்றுகிறது.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்- என்பார்கள்.
கடவுளைக் கண்டவர் இ-மெயில்கள் எழுதுவார்களா?
என்பது என் உள்ளத்துள்ள கேள்வி.
நா. கணேசன்
கண்டவர் சொன்னதில்லை; சொன்னவர் கண்டதில்லை என்ற ஒன்றை அடைவது தான் ஒரு பன்நெடுங்கால மரபின் நோக்கமாகக் கொள்ளலாகுமா? ("ஹிந்து மதத்தில் சொல்லப்படும் க்ருஹஸ்தாஸ்ரமும் ப்ரஹ்ம சர்யமே ஆகும்.இல்லறம், துறவறம் எதுவானாலும் ஹிந்து மதத்தில் நோக்கம் கடவுளை அடைதல்தான் - என்பது ஆய்ந்து அறிந்த அன்பரின் கூற்று)
என்பது அடிப்படையில் மக்கள் தொண்டே!
கடவுள் பெயரைச் சொல்லாமல் சேவை செய்தாலும் இறுதியில் பலனளிக்கப் போகிறவன் அவனே!
அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது! கோயில்/சத் சங்கம் என்பவை சமூகச்
செயல்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவோருக்கு உவப்பளிப்பவை. தவம், தனிமை,
விரதம் என்பவை தனி மனிதச் செயல்கள். எல்லா வழியும் கொண்டு செல்லும் ஒரே
இடம் ‘அவன்’ தான்.

சிற்றின்பம் பற்றியதுதான் லோகாயதம்.
பேரின்பம் பற்றி எல்லோரும் எழுதுங்கள்.
அமைதியாகப் படிக்கிறேன். நன்றி.
அன்புடன்
நா. கணேசன்
மேலும் வரும் என்று வெயிட்டிங்:-)
மேலும் வரும் என்று வெயிட்டிங்:-)மேலும் தொடவேண்டும் என்று வெயிட்டிங்.
அன்பன்
கி.காளைராசன்
முதலில் இவரை இங்கு ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை 18
பட்டி பஞ்சாயத்தில் தீர்மானிக்க வேண்டும் :-))
நா.கண்ணன்
2011/6/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
உரைப்பதும் விச்வாசம். மதங்களின் அடிப்படை கடவுளை அடைய முன் தகுதி விச்வாசம். எனக்குள்ள குழப்பத்தில் அதுதான் வர மாட்டேங்குது. அல்லது வந்து வந்து போகுது. ஜப,தபம் என்றும் போற்றி போற்றியென்றும் அருள் நிறைந்தவரே வாழ்க என்றும் நேரத்தையும்,செயலையும் வீணடிக்கிறார்களே, மனித குலத்தின் மகத்தான இந்த மூலதனம் காலங்காலமாக வீணடிக்கப்படுகிறதே! இந்த முயற்சிகள் மனிதர் முன்னேற்றத்தில் செயலாகப் பரிணமித்திருந்தால் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
//தான் இந்த உடலன்று; இந்த மனமன்று; இந்த ப்ராணனோ, பொறி புலன்களோ எதுவும்
அன்று; தான் ஆத்மாவே என்ற அடிப்படை உணர்வின் தெளிவு என்பதற்கு மேல்தான்
தெய்விக வாழ்வு என்பதே எழுகிறது.
ஹிந்து மதத்தைப் புரிந்துகொள்ள ஏதாவது ஒரு கருத்தைத் தொடக்க முதலே நன்கு
தெளிவாக மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அது இந்தக்
கருத்துதான் என்பேன். //
இது இந்துமத இழையில் தாங்கள் சொன்னது.
கோடை காலத்தில் என் ரூமுக்கு ஓரிரு கொசுக்கள் வருவதுண்டு. என்னைக்
கடித்துவிட்டு அடிபட்டுச் சாகும். நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல்
போராட்டம். ஒற்றை அடி. எமலோகம் நேரே! ஒரு அடி. கொசு காலி. ஆனால் கொசுவின்
ஆன்மா எங்கோ போய்விட்டது என்று சொல்கிறது உங்கள் வாசகம். அது எங்கு
போனது? அதற்கான பரிசோதனை மாடல் எதாவது நம்மவர் யோசித்தார்களா? (பென்ஸீன்
மாலிகூல் மாடல் போல்).
யோசித்துப்பார்த்தேன். கிடைத்த விடை ஒன்றுதான். ஆன்மா இருந்தால். அது
ஒன்றே ஒன்றுதான். அதுதான் இங்கிட்டும், அங்கிட்டும் ஓடு வருகிறது.
உதாரணமாக ஒரு காற்றடைத்த தலையாணியில் தலை சாயும் போது மாறும் இடநிலை
போல். இப்படி யோசிப்போம். ஒவ்வொரு உயிரியும் இந்தப் பெரிய காற்றடைத்த
பையில் ஒரு அவுட்லெட். காற்று அங்கு போகும் போது அதற்கு ரூப, குண
லட்சணங்கள் வருகின்றன. காற்று அங்கிருந்து போய்விடும் போது அதற்கான ரூப
குண லட்சணங்கள் போய்விடுகின்றன. ஆனால் காற்று வெற்றிடமாக இருக்கும்
இன்னொரு அவுட்லெட்டுக்குப் போய்விடுகிறது என்று பொருள். ஒரு நாள் கொசு.
அடித்த பின் அடுத்து பிறக்கும் குழந்தை. அது போனால் பசுமாடு. இப்படி
மாற்றி, மாற்றி ஒரே ஆன்மா இங்கும் அங்கும் போய்வருகிறது.
ஆனால் போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே என்று எங்கள் வாதவூரார்
சொல்கிறார். அப்படியெனில் பரமாத்மா, ஜீவாத்மா என்ற இரண்டா? ஜீவாத்மாவின்
தோற்றுவாய் எது?
பழைய கேள்விதான் .கணக்கு இன்னும் புரியவில்லை. ‘கர்மா கீழே தள்ளியது
என்றால் கர்மா என்பது தனித்தியங்கும் சக்தியா?
இப்போது இரண்டும் கெட்டானாக கோமாவில் இருக்கும் என் நண்பனின் ஆன்மா எங்கு
தங்கியுள்ளது?
குளவிக்கூட்டைக் கலைத்துவிட்டேனோ?
நா.கண்ணன்
பகுத்தறிவு கொண்டு புலன் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் கற்பனை சாராத உலகப் பார்வை என்பது தத்துவ வாதத்திற்கே முதன் முன்னம் முக்கியமான ஒரு நுழைவாயில்.மதம் என்று ஒரு துறை இருப்பதற்கான நியாயம் இருக்கிறதா என்பதே புலன்களால் ஆய உலக அனுபவங்கள் கடந்து ஒரு நிலை நம் அனுபவத்திற்கு வரக்கூடியது இருக்க முடியுமா என்ற கேள்வியின் விடையில்தான் தெளிவாகக் கூடிய விஷயம்.சரி மதம் என்பதே தேவையில்லை என்று ஒழித்துக்கட்டிவிட்டால், பகுத்தறிவுக்கு மேல் எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை, புலன் அனுபவங்களின் அடிப்படையே போதும். பிறப்பில் ஆரம்பித்து, இறப்பில் எல்லாம் முடிந்தது என்று மூடிவைத்துவிட்டு, வேறு வெட்டிப் பேச்சு பேசாமல் உலகில் உபயோகமான காரியங்களைப் பார் என்ற எண்ணம் சிந்திப்பவர்களுக்கு ஒரோ சமயம் வருவது இயல்பு.இதில் என்ன தொந்தரவு என்றால் அப்படி ஓர் உலகத் தீர்மானம் போட்டு வெறும் கற்பனைகளையெல்லாம் துரத்திவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தோம் என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது பார்த்து உங்களுக்கே உள்ளிருந்து முற்றிலும் புதிய விதமான ஆன்மிக அனுபவம் ஒன்று ஏற்பட்டு விடாது என்று யார் காரண்டி தருவது?ஏனெனில் அப்படி ஓர் அனுபவம் அந்தச் சமயத்தில் எழுந்தது என்றால் உங்களைப் பொறுத்தவரையில் உண்மைக்காகத்தான் நீங்கள் போராடியாக வேண்டும். அப்பொழுது நீங்கள் அறியவரும் உண்மை என்பது இப்பொழுது நீங்கள் உற்சாகமாக இருக்கும் உண்மைக்கு வேறானதாக இருக்கும். அப்பொழுது நீங்களே அதீத வாதங்களை ஒழித்துக் கட்டும் சாக்கில் உண்மையின் பல நிலைகளைத் தெரியவிடாமல் அடித்துவிட்டீர்களே என்று குறை கூறுவீர்கள். நாங்கள் நீங்கள் சொல்லித்தானே ஐயா எல்லாவற்றையும் தூக்கி எரிந்தோம். இப்பொழுது இப்படிச் சொல்கிறீர்களே என்று உங்களைத்தான் குற்றம் சொல்வோம்.---- இவ்வளவும் கற்பனையாகத்தான் எழுதுகிறேன். ஏன் என்று உங்களுக்குப் புரியும்.காரணம் இப்படிக் கறாரான தீர்மான காலங்கள் மனித வரலாற்றில் இருந்திருக்கின்றன. அப்பொழுது மனிதனை அந்தச் சுயமாகப் பூட்டிக் கொண்ட சிந்தனைச் சிறையிலிருந்து வெளிவரத் தூண்டியதே இத்தகைய அதீத நிலைகள் சார்ந்த அனுபவங்களே.இல்லாவிட்டால் வெற்றுக் கற்பனைகளை நம்பி காலம் காலமாக மிக உயரிய பண்பாளர்களும், அறிஞர்களும் உயிர்விடத் துணிந்திருப்பார்களா?ஆனாலும் அந்த அதீத நிலைகள் பற்றிய நம்பிக்கைகளையே மட்டும் நம்பி மனிதன் ஏன் தன் பொழுதுகளையும், சக்தியையும் வீணடிக்க வேண்டும்?எனக்கென்னவோ உண்மைக்கான பாதை இந்த இரு கோடிகளுக்கும் இடையில்தான் எங்கோ போய்க் கொண்டிருக்கிறதாகப் படுகிறது.
நமக்குக் கிடைத்த கருவியே நம்ம அறிவுதான். அது எவ்வளவு அரைகுறையாக இருந்தாலும். (எனக்குப் பொறுத்த மட்டிலாவது அதுதான்). ஆன்மிகமோ உலக இயலோ எதுவானாலும் அறிவைக் கொண்டுதான் இங்கு அடுப்பூதியாக வேண்டும்.எனவே உங்கள் கருத்தின் கோணத்தைத் தாங்கள் தயங்காது தீவிரமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் விசாரத்திற்கு அதுதான் துணையாக இருக்கும்.
மிக்க நன்றி நண்பரே!
அன்புடன்
,
விச்வாசம் என்று எதைச் சொல்கிறீர்கள்? நம்பிக்கையையா?? நம்பிக்கை, அதாவது கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமலா இருக்கிறோம்? வந்து வந்து போகுது என்றால்?? புரியலை ஐயா!
--
ஆத்மா என்பதிலேயே குழப்பம் உள்ளபோது ஆன்மிக முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பது? உடம்பு அழிந்தால் உயிரும் அழிந்து விடுகிறது. உடம்பார் அழியின் உயிரார் அழிவர். ஆத்மா பரமாத்மா சொர்க்கம் நரகம் பரலோகம் தாமரைக்கண்ணான் உலகு மறுபிறப்பு அனைத்தும் கேள்விக்குரியவைதானே? அதில் பொழுதையும் முயற்சியையும் செலவிடுவது எவ்வளவு தூரம் பலனளிக்கும்?
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
தனியாக நின்றால் தேட்டம்கம்பெனி என்றால் அரசியல்:-)
நம்ம வலுவான கூட்டணி ஏற்பட்டு வெகு நாட்கள் ஆயிற்றே தலைவரே! நண்பர் திரு செல்வக்குமரன் புது நல்வரவு.
இறையின் இருப்பை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் தானே? பல்வேறுவிதமான இடர்ப்பாடுகளை ஏதோ ஒரு சக்தி ஒன்றுமே இல்லாமல் ஆக்குவதை உணர்கிறேன். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்???
ஒரு குருவி, காக்கையின் உருவில் கூட இறையின் உணர்வு புரிந்துகொள்ள முடிகிறது
ஆத்மா என்பதிலேயே குழப்பம் உள்ளபோது ஆன்மிக முன்னேற்றம் என்று எதனைக் குறிப்பது//
ஆத்மா என்பதைத் தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் எனப் புரியவில்லையே?? என்னைப் போல் ஆத்மாவை ஒரு நுண்ணிய உணர்வாய்ப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலக வாழ்க்கையின் ஓர் அங்கமாய்க் கொண்டீர்களா? இருக்காது என நம்புகிறேன். இறைத் தத்துவத்தோடு ஒன்றாய்க் கலந்துவிட்டால் ஆத்மா என்ற தனியான ஒன்று எவ்வாறு இருக்கும்??
இந்து மதத்தில் ஆத்மா பற்றி நண்பர் திரு மோகனரங்கன் எழுத ஆரம்பித்துள்ளார். அவ்இழை வளரும்போது புரிந்து கொள்ள முயல்வோம். நமது இழையில் திரு கண்ணன் குறிப்பிட்டுள்ளது.
--
நான் இதில் திரு.மோகனரங்கனாருக்கு நேர் எதிர்.
அடியேனுக்கு இந்த மாதிரி கம்பெனி வேண்டும் சாமீ.
திரு.வினைதீர்த்தானின் கேள்விகளும், ஆய்வும், தேடலும் சூப்பர்.
அடியேனுக்கும் அவரைப் போலவே ஏகப்பட்ட கேள்விகள் உண்டு.
"பாலிடிக்ஸ் பண்ணறவர் தனியா இருந்தாலும் பாலடிக்ஸ்தான் பண்ணுவார்.
பண்ணாதவர்கள் கம்பெனியிலும் பண்ண மாட்டார்"
அப்படீன்னு அவரு சொல்லி இருக்கார்.
இரண்டு பேர் ஒன்று சேர்ந்திருப்பதும் கம்பெனி. டி.வி.எஸ் ஸும் கம்பெனி. போதை மருந்து வி்ற்கும் நெட்வொர்க்கையும் கம்பெனி என்று சொல்லி ஒரு படத்தில் பார்த்திருக்கிறேன்.
என் கம்பெனியில் நோ விளம்பரம்.
சில சமயம் தனித்திருப்பதே பெரும் விளம்பரத்தை செய்துக் கொண்டிருக்கும்.
நான் காலேஜ் படிக்குமபோது, காதலிப்பவர்கள் ...பஸ் ஸ்டாண்டில் தனியாக, சற்றுத் தள்ளிப் போய் நிற்பார்கள். பளிச்சென்று தனியாகத் தெரிய.
கும்பலாக நிற்கும்போது கும்பல் தெரியுமே ஒழிய, தனிப்பட்ட ஆள் தெரிய மாட்டான். :))
க.>
2011/6/28 selva kumaran <selvaku...@gmail.com>:
இப்ப யாரு, யாரைக் காதலிக்கறா?
என்னைய்யா பதி பாதியா கதையைச் சொல்லிசுட்டுப்போறீர்? :-)))
க.>
2011/6/28 selva kumaran <selvakumaran.ma@gmail.com>:
> இரண்டு பேர் ஒன்று சேர்ந்திருப்பதும் கம்பெனி. டி.வி.எஸ் ஸும் கம்பெனி. போதை
> மருந்து வி்ற்கும் நெட்வொர்க்கையும் கம்பெனி என்று சொல்லி ஒரு படத்தில்
> பார்த்திருக்கிறேன்.
>
> என் கம்பெனியில் நோ விளம்பரம்.
>
> சில சமயம் தனித்திருப்பதே பெரும் விளம்பரத்தை செய்துக் கொண்டிருக்கும்.
>
>
> நான் காலேஜ் படிக்குமபோது, காதலிப்பவர்கள் ...பஸ் ஸ்டாண்டில் தனியாக, சற்றுத்
> தள்ளிப் போய் நிற்பார்கள். பளிச்சென்று தனியாகத் தெரிய.
>
> கும்பலாக நிற்கும்போது கும்பல் தெரியுமே ஒழிய, தனிப்பட்ட ஆள் தெரிய மாட்டான்.
> :))
>


இப்ப யாரு, யாரைக் காதலிக்கறா?
என்னைய்யா பதி பாதியா கதையைச் சொல்லிசுட்டுப்போறீர்? :-)))
க.>
"இப்ப யாரு, யாரைக் காதலிக்கறா?"காத லிக்கறா அப்படினா காதை நக்கறாங்கன்னு தானே அர்த்தம். எனக்கு புரியலையே.:)
பாவம், அவர் ரொம்ப நேரமாத் தவிக்கிறார். மிச்சத்தையும் சொல்லிடுங்க செல்வகுமரன்.![]()
2011/6/28 N. Kannan <navan...@gmail.com>இப்ப யாரு, யாரைக் காதலிக்கறா?
என்னைய்யா பதி பாதியா கதையைச் சொல்லிசுட்டுப்போறீர்? :-)))
க.>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
நீர் குழந்தையிலேயே முசுடோ? :-))))
க.>
>கும்பல் சேர்ந்தால் விசாரம் விஷாதம் என்பதற்கு நல்ல உதாரணம்



இதுவும் ஒன்று காணும்!
நீர் குழந்தையிலேயே முசுடோ? :-))))
க.>
>கும்பல் சேர்ந்தால் விசாரம் விஷாதம் என்பதற்கு நல்ல உதாரணம்
>கும்பேனி இஷ்ட்ராங்கா ஆவுது டோய் :-)))))
>
சரி..புரிஞ்சது :-))
இப்போதான் விசாரம் சூடு பிடிச்சுருக்கு! :-))
க.>
இதுக்குத்தான் முதல்லேயே சொன்னேன்.
இவரை ஆட்டத்துக்கு சேத்துகறதா? வேண்டாமான்னு :-))
க.>
நம்ம வலுவான கூட்டணி ஏற்பட்டு வெகு நாட்கள் ஆயிற்றே தலைவரே! நண்பர் திரு செல்வக்குமரன் புது நல்வரவு.
நாம் குழுவிலிருந்தாலும் எல்லோரும் தனி தானே1
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
ஹி ஹி நான் எந்தக் கூட்டணியும் கிடையாதுங்களே.
நான் புரிஞ்சுண்ட ஹிந்து மதம் இது என்று எழுதுகிறேன். அந்த வரைக்கும் சரி. ஆனால் நாம கூட்டணி என்று சொன்னால் முதல் வேலை count me out.பகுத்தறிவு, நாத்திகம், தத்துவ விசாரம் எல்லாம் ஓகே. ஆனால் கூட்டணியா 18 பட்டி முடிவு பண்ணாலும் தம்பி சேராது.அதுனால உங்கள் கருத்துகளில் பிழைகளை நான் கண்டாலும் உங்கள் அக்கறையான ஒரு விசாரத்தைத் தீவிரமாகக் கொண்டு போங்கன்னு மட்டுமே என் வேண்டுகோள்.:-))
கருத்துக்களில் உள்ள பிழைகளையும் அருள்கூர்ந்து எழுதுங்கள். சரியா தவறா என அறிந்து கொள்ளவே கருத்துக்களை எழுதியுள்ளேன்.
பாயிண்ட் மேட்நன்றி வணக்கம்:-)
நகைச்சுவை
”ஆத்மாவுக்கு அறிவியல் விளக்கம்! அரிய சாதனை!! அறிஞர் சவால்!!!” என்ற நாளிதழ் விளம்பரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வெங்ஙானம்மூடு வாசுதேவன்பிள்ளை தேடிவந்தார். குடை, காலருக்குப்பின்னால் செருகப்பட்ட கைக்குட்டை, முழுக்கை சட்டை வேட்டி, எப்போதும் லேசாக அமிர்தாஞ்சன் வாசனை.”பாத்தேளா, சொல்லிட்டே இருந்தேன்லா? எண்ணைக்காவது ஒருநாள் ஒரு ராட்சஸன் கெளம்பி இம்மாதிரி ஒரு குண்டைத்தூக்கிப் போடுவான்ன்னுட்டு? வே…பாரும்…பகிரங்கமா சவால் விட்டிருக்கான் ” என்றபடி காகிதத்தை என்னை நோக்கி வீசினார்.
நான் காகிதத்துண்டை எடுத்து படித்தேன். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் அதை வெளியிட்டிருந்தார். முதலில் பகவத்கீதை சுலோகம் ஒன்று. அதன் கீழே இருந்த விளம்பரத்தில் ”ஸ்ரீ பஹவதே நாறாயணாய நமஹா!” என்ற கட்டெறும்பு எழுத்துக்களுக்கு கிழே மேலே கண்ட கொட்டைவண்டு எழுத்துக்கள். தலைப்பையும் அதில் உள்ள ஆச்சரியக்குறிகளையும் மட்டும் நாளிதழின் ஆசிரியரே போட்டிருப்பார் போல.மிச்சமெல்லாம் பழைய நிலவிற்பனைப் பத்திரங்களின் மொழி. சாஸ்திரிகள் உபதொழிலாக பத்திரப்பதிவு ஏதாவது செய்கிறார் போலும்.
சாராம்சம் இதுதான். அவர் ஆத்மாவின் இருப்பை நிரூபித்துவிட்டிருக்கிறார். அவரிடம் சவால்விட்டு மோத தயாராக வருபவர்களுக்கு அதை வெளிப்படுத்த தயார். ஆனால் பந்தயமாக பணம் கட்டிவைக்க வேண்டும். பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனையும் நிரூபணமும் நடந்துள்ளது. பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் அவர்கள் ஹனும உபாசனையும் கடுமையான ‘வ்ருததபானுஷ்டானாதி’களும் கொண்டவராதலால் இது ஸாத்யமாயிற்று. அன்னாரை பார்ப்பதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தி காலை பத்துமணிமுதல் மதியம் ஒருமணிக்குள் செல்ல வேண்டும்.
”எதுக்கெடுத்தாலும் பைசா பைசாங்கியானே?”என்று தயங்கினேன்.”வே, அது அறிவுசார் சொத்துரிமையில்லா? சும்மாவா? பணம் மொடக்கி ஆராய்ச்சி செஞ்சிருப்பான்லவே?” நான் மேலும் தயங்கி,”இல்ல, இப்ப எப்டியும் சாஸ்திரிகள் ஆறுமாசத்திலே ராஜ்டிவி, இமையம் டிவி, தமிழன் டிவி எதிலயாவது வந்து எல்லாத்தையும் காட்டிருவார். அப்ப நாம சும்மா பாக்கலாமே?” ”வே அது டிவி…இது நாம நேரில பாக்கப்போறம். நீரு பைசா குடுக்க வேண்டாம். நான் குடுக்கேன். போருமா? பாத்திருக்கேன் பாத்திருக்கேன், நானும் எளுத்தாளர்களிலே இம்மாதிரி ஒரு கஞ்சனைப்பாத்ததில்லை”
நான் சினந்து, ”நீரு எம்பிடு எளுத்தாளனை வே பாத்திருக்கேரு?” ”ஏன், நம்ம தோப்பிலு சாயிப்பை எனக்கு தெரியுமே?” ”அவரு செலவாளியோ?”. ”செலவாளியா, நல்ல கதை. அவரு லோஹ மஹா கஞ்சன்லா? கஞ்சப்பிசுக்கிலே உம்மை எடுத்து மூக்குப்பொடி மாதிரி இளுக்கப்பட்ட மநுஷனாக்குமே…?” ‘பின்ன?” ”இல்ல, நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்….”. ” என்ன பேச்சு? சும்மா ஒருமாதிரி மனுஷனை கடுப்பேத்திட்டு” ”செரிவே,விடும்” ”செரி வாரும், செலவு எனக்கு”என்றேன். ”வேண்டாம்வே, பொறவு உம்ம போஸ்டுக்கார அம்மா வந்து எனக்க தலையில ரப்பர்ஸ்டாம்ப அடிக்கியதுக்கா? பணம் இருக்கு வாரும்” என்றார் பிள்ளைவாள்.
மார்த்தாண்டம் போய் அங்கிருந்து மஞ்சாலுமூடுக்குப் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்து சோற்றாலுமூடுக்குப் போனோம். அங்கே ஆலமரம் ஒன்றும் இல்லை. அந்தக்காலத்தில் கீழே அமர்ந்து சோற்றுப்பொட்டலத்தைப் பிரிப்பதற்கேற்ற ஆலமரம் ஏதோ நின்றிருக்கிறது. பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகளை விசாரித்தோம்.. ஊரில் அப்படி ஒரு அறிஞர் இருப்பதை ‘றாபின்ஸன்’ பலசறக்குக் கடை ‘றாபின்சன்’ அறிந்திருக்கவில்லை.பெயரைச் சொன்னபோது ‘றியல் எஸ்டேட்’ பிஸினஸ் செய்வாரே, அவரா என்றான். இல்லை என்றோம். அப்படி ஒரு அய்யர் மட்டும்தான் இங்கே உண்டு. சாஸ்தா கோயில் பூசாரி. தாடிக்காரர் என்றான்
அவராகத்தான் இருக்க வேண்டும், பார்த்துவிடுவோம் என்றார் பிள்ளைவாள். ”வே ரியல் எஸ்டேட்டு புரோக்கருங்கியானே?” ”அது பின்ன இந்நாட்டிலே ஜீவிக்க வேண்டாமா? வே, இந்த மாதிரி ஆளுகளுக்கு என்னவே ஆத்மாவும் பிராணனும் தெரியும்? எதுவா இருந்தாலும் பிளாஸ்டிக் கவர்லே பேக் பண்ணி வந்தாத்தான் இந்த ராபின்சன் கையால தொட்டு பாப்பான்… பிளாஸ்டிக் கவர்லே ஆத்மாவை அடைச்சுவைக்க முடியுமாவே?” நான் அது முடியாது என்று ஒத்துக்கொண்டேன்.
டீக்கடையில் ஒரு டீ குடித்துக்கொண்டிருந்தபோது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஒருவர் துருப்பிடித்த டிவிஎஸ் மொபெட்டில் வேகமாக வந்தார். பெரிய சந்தனக்கோடும் அதில் குங்குமத்தடமும் அணிந்திருந்தார். தூரத்திலேயே அதுதான் துலக்கமாக தெரிந்தது. நரை கலர்ந்த கறுப்புத்தாடி மார்புவரை கிடந்தது. முன் வழுக்க. பின்கூந்தலை குடுமியாக கட்டியிருந்தார். பச்சைநிற சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. வெண்ணிறம். உயரமான தளதள உடம்பு.
உள்ளே வந்து ”நானாக்கும் சாஸ்திரிகள்…ஆரு தேடிவந்தது?” நான் பேசாமலிருக்க, பிள்ளைவாள் ”…இந்த ஆத்மாவை நிரூபிச்சுக்காட்டினது?” ”நாந்தான்…வாருங்க” என்றார். போகும் வழியில் ”இங்க உள்ளவனுக முழுக்க நம்ம மேலே பொறாமை உள்ளவனுக…பலதும் சொல்லுவானுக…”என்றார்.
அவரது வீடு சாஸ்தா கோயிலை ஒட்டி இருந்தது. சாய்வான ஓட்டு வீடு. ஒரு பெண்குழந்தை தலையில் சிண்டு கட்டி அதி; செம்பருத்திப்பூ வைத்து படியில் உட்கார்ந்து சிலேட்டில் நாக்கை துருத்திக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தது. அவரைக் கண்டது ”அப்பா நீயா? உன்னைய பெருவட்டரு தேடினா”என்றது. ”போடி உள்ள போடி” என்று துரத்திவிட்டு உள்ளே எங்களை அழைத்து புல்பாய்போட்டு அமரச்செய்து விட்டு ··பேனை தட்டினார். ”ஒரு செக்கண்டு”என்று உள்ளே போனார்.
பாப்பா வந்து வாசலில் நின்று காலை ஆட்டியபடி எங்களை வேடிக்கை பார்த்தது. ஐஸ்வரியமான குட்டி. இங்கே வா என்று அழைத்தேன். போடா என்று தலையை அசைத்தது. வெளிறிப்போன ஒரு மாமி உம்மென்ற முகத்துடன் இரு டம்ளர்களில் லெமன் ஜூஸ் கொண்டுவந்து வைத்துவிட்டு தரதரவென குழந்தையை இழுத்துக்கொண்டு சென்றாள். ”அந்த தாத்தா மூக்கைப்பாத்தியா?”என்று அது சொல்வது கேட்டது. பிள்ளைவாள் முன்பு பொடி போடும் பழக்கம் கொண்டிருந்தார்.
அப்போது சாஸ்திரிகள் வந்தார். வேட்டியை பஞ்சக்கச்சமாகக் கட்டி இடுப்பில் சிவப்புப்பட்டால் கச்சம் கட்டியிருந்தார். வெற்றுமார்பில் பெரிய பூணூல். அதில் சிறிய சாவிக்கொத்து. குளித்து வந்த மெருகு தெரிந்த பளபள சருமம். தாடியில் இருந்து நீர்த்துளிகள் சொட்டின. உடம்பெங்கும் பலவகையான விபூதிசந்தனகளபகுங்குமசெந்தூரப் பூச்சுகள். பல வண்ணங்களில் தாயத்துக்கள். கையில் ஒரு சிறிய தாம்பாளம். அதில் பலவகையான பொருட்கள். அவற்றை மெல்ல எங்கள் முன் வைத்தார். சிறிய கிண்ணம் விளக்கு. பூஜைப்பொருட்கள். மாமி கிண்டியில் தண்ணீரைக் கொண்டு வைத்துவிட்டு உம்மென்று திரும்பிச் சென்றாள்.
பிள்ளைவாள் எழுந்து நின்று கும்பிட்டபோது நானும் கும்பிடவேண்டியதாயிற்று. அவர் அமரும்படி சைகை காட்டி தானும் அமர்ந்து கொண்டார். அமைதி. வெளியே நாய்கள் குரைத்தன. வேப்பமரத்தில் சில காக்காய்கள் சத்தம் போட்டன. எங்களை கூர்ந்து மிகக் கூர்ந்து மிகமிகக் கூர்ந்து பார்த்தார். சங்கடமாக பார்வையை விலக்கிக் கொண்டேன். அவரது முகம் உக்கிரமாக இருந்தது. அவர் ஒன்றும் பேசவில்லை. நாங்களும். கடிகாரம் உச் உச் உச் என்றது.
கொஞ்சநேரம் கழித்து பிள்ளைவாள் தொண்டையைக் கனைத்து, ”இப்ப இந்த ஆத்மாண்ணு சொன்னாக்க…”என்றார். தட்டைக் காட்டினார். நானும் பிள்ளைவாளும் அதை தொட்டு கும்பிட்டோம். அவர் மீண்டும் தட்டைக் காட்டினார். நான் தட்டை தூக்கப்போனேன். பிள்ளைவாள் லௌகீக புத்தி. சட்டென்று புரிந்துகொண்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை அந்த தட்டில் போட்டார்.
பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் முகம் மாற்றமில்லாமல் போஸ்டர்முகம் போலிருந்தது. இன்னொரு நூறு ரூபாயைப் போட்டார் பிள்ளைவாள். மேலும் ஒரு நூறு ரூபாய் போட்டதும் தலை மெல்ல அசைந்து என்னைப்பார்த்தது. நான் பிரமை பிடித்து அமர்ந்திருந்தேன். அவரது பார்வை என்னை மோசமான ஆயுர்வேத வைத்தியர் மாதிரி வழித்து தடவி பிசைந்தது. நானும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துப்போட்டேன். பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் புன்னகை செய்தார்.
”ஆத்மாவைப்பத்தியாக்குமே பேசினது…” என்றார் பிள்ளைவாள். பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் ”ஆமா”என்றார். ”நீங்க ஆத்மாவை அறிஞ்சுகிடணும் , அம்பிடுதானே?” ”ஆமா சாமி. ஆத்ம ஞானம்தான் ஞானங்களிலே உசந்ததுண்ணு சொல்லியிருக்கே. ஆத்மாவை அறிஞ்சவன் அனைத்தையும் அறிஞ்சவன். அண்டத்திலே உள்ளதாக்கும் பிண்டத்திலே. தன்னையறிஞ்சவனுக்கு தந்திரமேதுக்கடிண்ணுல்லா…உன்னையே நீ அறிவாய்ணு மத்தவரும் சொல்லியிருக்காரு…எதுக்குச் சொல்றேன்னா…”
பிள்ளைவாளுக்கு அப்படி ஆயிரத்துக்குப் பக்கத்தில் மேற்கோள் தெரியும். ஆகவே நான் திகில் அடைந்தேன். ஆனால் பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் ”ஆத்மாவை பாக்கணுமா?” என்றார். ”ஆமாம் சாமி”. அந்த பித்தளை டம்ளரைக் காட்டி ”உள்ள இருக்கு…” என்றார். ”என்னது?” ”ஆத்மா…என் முதல் சம்ஸாரத்துக்க ஆத்மாவாக்கும்” நான் திகில் மேலெழுந்து எழுந்து விலகப்பார்த்தேன்.
பிள்ளைவாள் உற்சாகமாகி ”எங்க காணல்லியெ?” என்றார். பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸ¥ர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் ”ஊனக்கண்ணாலே சும்மா பாக்கமுடியாது. கீதை சொல்லுத ஞானக்கண் வேணும். ஞானமார்க்கம் வழியாட்டு பாக்கணும்…”என்றார். ”ஆமா”என்று பிள்ளைவாள் ஒத்துக்கொண்டார்.
”இப்ப பாருங்க. ஆத்மாவை இல்லாம ஆக்கறதுக்கு எந்தக் கொம்பனாலேயும் முடியாது. ஐன்ஸ்டீனுக்க அப்பன் தேவேந்திரன் நெனைச்சாலும் முடியாது. இல்லாதது இருக்கப்பட்டதா ஆகாது. அதேமாதிரி இருக்கப்பட்டது இல்லாமலாவதும் கெடையாது.’ அதாக்கும் கீதையிலே பகவான் சொல்லியிருக்கது. ரண்டாம் அத்தியாயம் பதினாறாம் சுலோகம்.”பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள் உரத்த குரலில் சுலோகத்தைச் சொன்னார். பிள்ளைவாள் கைகூப்பினார்.
”ஆத்மாவுக்கு பிறப்பும் இறப்பும் கெடையாது. தோற்றமும் மறைவும் கெடையாது. ஆத்மா இருக்கான்னு கேக்கப்பட்டவன் மடையன். ஏன்னாக்க அது இல்லேன்னு சொல்ல முடியாதுல்ல. அப்ப இருக்குன்னும் சொல்ல முடியாதே. அதனாலே இதுக்குள்ள இருக்கான்னு கேக்காதீங்கோ.”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள்.
”இல்ல சாமி, ஆத்மான்னா அதுக்கொரு மனுஷன் வேணுமே” என்று கூப்பிய கரங்களுடன் பிள்ளைவாள் இழுத்தார். ”கீதையிலே என்ன ஓய் சொல்லியிருக்கு? ‘மனிதர்கள் எவ்வண்ணம் பழைய வஸ்த்ரங்களை களைந்து புது வஸ்த்ரங்கள் போடுகிறார்களோ அவ்வண்ணமே உடல் கொண்ட ஆத்மா மட்கிய உடல்களை உதறி புதியவற்றைக் கொள்கிறது’ண்ணாக்குமே. ரெண்டுலே இருபத்திரண்டாம் சுலோகம்லா. இப்ப எனக்க ·பார்யாள் கங்காலட்சுமி அவளோட பழைய வஸ்திரத்தை கழட்டிண்டாள். புதிசு மாத்தறதுக்கு உள்ளறைக்குள்ள போயிருக்காள். இன்னும் தீர்மானம் பண்ணல்லை. பொம்மனாட்டி பாருங்கோ….”
பிள்ளைவாள் சற்றே எட்டிப்பார்க்க ”சே, என்னோட பார்யாள் வஸ்த்ரம் மாத்துறதை நீரு எப்டிவே பாக்கலாம்…சிவசிவ”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள் . பிள்ளைவாள் பயந்து ”அய்யோ…இல்ல..தெரியாம” என்றார். புன்னகை செய்து ”பரவால்ல, நீங்கதானே ?”என்றார். ”மேக்கொண்டு புரூ·ப் பாத்திருவோமா?” பிள்ளைவாள் ”செரி”என்றார்.
பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள் உற்சாகமாக ”கீதையிலே என்ன சொல்லியிருக்கு? ஆயுதங்கள் அதை வெட்டுவதில்லை.இப்ப பாருங்கோ” ஒரு சிறிய கத்தியை எடுத்து டம்ளருக்குள் விட்டு ஆட்டினார். ”பாத்தேளா? ஒண்ணுமே ஆகல்லை” என்றார். சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி ”தண்ணீர் அதை நனைப்பதில்லை, தீ அதை எரிப்பதில்லை” என்றபடியே மாயாஜால நிபுணரின் கைவண்ணத்துடன் சோதனைகளைச் செய்தார். அதற்குள் கொஞ்சம் நீரைவிட்டு திருப்பிக் கொட்டி காலிடம்ம்ளரைக் காட்டினார். பின் ஒரு சிறு காகிதத்தை கொளுத்தி உள்ளே போட்டு எரியவிட்டு அதையும் கொட்டிவிட்டு காலி டம்ளரை காட்டினார். ஆச்சரியம்தான், அந்த காலி டம்ளருக்குள் எதுவுமே ஆகவில்லை.
‘அது பிளக்க முடியாதது”என்றபடி இன்னொரு டம்ளருக்குள் அதை கவிழ்த்துக்காட்டி பின் முதல் டம்ளரைக் காட்டினார். ”அது மட்காதது”என்று சொல்லிவிட்டு என்னிடம் ”பத்து வருஷமா இதுக்குள்ள இருக்கு…ஒண்ணுமே ஆகல்லை, வேணுமானா நீங்களே உங்க கண்ணாலே பாருங்கோ”என்றார்.
சற்றுநேரம் அமைதி. நான் மெல்ல ‘இல்லே…சொல்லுறேன்னு நெனைக்கப்பிடாது…எனக்கு ஒண்ணும் தெரியல்லியே” என்றேன். ‘அப்படிக்கேள்’ என்ற பாவனையில் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள் புன்னகை புரிந்தார். புன்னகையுடனேயே பிள்ளைவாளைப் பார்க்க பிள்ளைவாளும் புன்னகை செய்தார். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண சாஸ்திரிகள் தலையை அசைக்க பிள்ளைவாளும் தலையை அசைத்தார். அவர்கள் இருவரும் ஏதோ ரகசியத்தை பகிர்ந்துகொள்வது போல் இருந்தது.
”ஆத்மாவைப்பற்றி கீதை என்ன சொல்லுது?”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண ஸாஸ்த்ரிகள்.. ”என்ன சொல்லுது?”என்றேன் அஞ்சி. ”அது சிந்தனைக்கு எட்டாதது.ஆகவே உணரப்படமுடியாதது. அத்தகைய ஆத்மாவை அறிந்தபின் வருத்தம் கொள்ளலாகாது…” சுலோகத்தை கூவியபின் ”சிந்திச்சாலும் புரிஞ்சுகிடமுடியாது.சென்ஸ் பண்ணிப்பாக்கிறதும் நடக்காது…அதாக்கும் கீதா வாக்யம். நீரு என்னன்னா காங்கலேயேன்னு கேக்குகிறீரு…” பிள்ளைவாளிடம் ‘பார் இவனை’ என்று தலையசைத்து என்னைப்பற்றி பரிதாபமாக புன்னகைசெய்தார். பிள்ளைவாளும் என்னிடம் பரிதாபம் காட்டி சிரித்தார்.
”பின்ன எதுக்கு அதை அறியணும்னு சொல்லியிருக்கு?” என்றேன். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸ¥ரியநாறாயண ஸாஸ்த்ரிகள் சலிப்புடன் ”அதான் ஸ்வாமி, அதை அறிஞ்சுகிட முடியாதுன்னு அறிஞ்சுகிடறது. உணர்ந்துகொள்ள முடியாதுன்னு உணர்ந்துகிடுறது…அதைத்தான் பகவான் சொல்றான்…” நான் பெருமூச்சுவிட்ட்டேன் ”வருத்தப்படாதேள்.அதையுமே பகவான் சொல்லிடறார்”என்றார் சாஸ்திரிகள்.
”இனி ஏதாவது சம்ஸயம் உண்டுமா?”என்றார் சாஸ்திரிகள். பிள்ளைவாள் பவ்யமாக வணங்கி ”எனக்கு தெளிஞ்சுட்டுது ஸ்வாமி…”என்றார். நான் திருதிருவென விழித்தேன். ”முழிக்காதீங்கோ…இங்க ஒருத்தரும் உங்களுக்கு பரீ¨க்ஷ வைக்கல்லை.”என்று சாஸ்திரிகள் சொன்னார். ”கீதா மார்க்கத்திலே ஆத்மாவை இப்போ நிரூபிச்சுக் காட்டினேன் அவ்ளவுதான். இதுக்கே ப்ரமிச்சுப் போய்ட்டேளே கீதையிலே பகவான் என்ன சொல்றான் தெரியுமோ?”
”என்ன?”என்றேன் பயம் எகிற. ”நீங்க ரெண்டுபேரும் இங்க வாறதைப்பத்தியே சொல்லியிருக்கார்.” ”யாரு கிருஷ்ணபகவானா?” ”ஏன் நம்பிக்கை வரல்லியோ? அவர் மகா யோகி. அதனாலே அவனை யோகீஸ்வரன்னு கீதை சொல்லுது. முக்காலமும் அறிஞ்சவன் யோகி. நீரு என்னடான்னா நம்ப மாட்டேங்கிறீர்” என்று குற்றம்சாட்டும் பாவனையில் பார்த்தார். நான் ”நம்பாம இல்லே” என்று இழுத்தேன்
” ஒருவன் ஆத்மாவை விசித்ர வஸ்து என்று எண்ணுகிறான். பிறிதொருவனோ மகாவிசித்ரம் என்று கூறுகிறான். பிறிதும் ஒருவன் விசித்ரமோ என்று கேட்கிறான். யாருமே இதை அறிவதில்லை அப்டீன்னு கீதை. சம்சயம் இருந்தா சாங்கிய யோகம் எடுத்து இருபத்தொன்பது நம்பர் சுலோகத்தைப் பாருங்கோ. என்னமோ சொல்ல வாறேளே பெரிசா” என்றார் சாஸ்திரிகள் ”நம்ப மாட்டாராம் நம்ப…பேசாம போங்கோ”
”நான் இப்ப நம்பலைன்னு சொல்லலியே” என்றேன். சட்டென்று அருள்கொண்டு புன்னகைசெய்து, ”சரி…நீங்க நம்பாம இல்லை. நம்பிட்டீங்க. நேக்கு புரியறது. ” என்ற சாஸ்திரிகள் என்னைச்சுட்டிக்காட்டி பிள்ளைவாளிடம் ”அப்ப இவாளுக்கு ஆத்மா பத்தி சம்ஸயம் நிவர்த்தி ஆயிடுத்து, உங்க விஷயம் என்ன?” என்று கேட்டார். ”எனக்கு அப்பவே தெளிஞ்சுட்டுதே. எதுக்குச் சொல்றேன்னா ஆத்மா அக்னியிலே சூடு மாதிரியும் தண்ணியிலே குளுமை மாதிரியும் — ”
”சரி ,இதிலே ஒரு கையெழுத்து போடுங்கோ” என்றார் . ”எதுக்கு?” என்றேன். ”த்ருஷ்டாந்தமாத்தான். பாருங்கோ பெரிய பெரிய ஆளுகள்லாம் கையெழுத்து போட்டிருக்காங்க. கீதா மார்க்கத்திலே ஆத்மாவைப்பத்தின நிரூபணம் என் திருஷ்டி சாக்ஷ¢யாக நடந்ததுன்னு எழுதி ஒப்பு போடுங்கோ…பெரிய மனுஷா கையெழுத்தெல்ல்லாம் மேலே இருக்கு. பாருங்கோ. ஹைக்கோர்ட் லாயர் அனந்தகிருஷ்ணய்யர்கூட கையெழுத்து போட்டுட்டார்.”
”இவர்கூட பெரிய மனுஷர்தான்…பெரீய எழுத்துகாரன்…நாவல் கதையெல்லாம் எழுதுவார்” ”அப்டியா? சந்தோஷம்….இங்க நெறைய ரைட்டர்ஸ் வந்திருக்கா. பணகுடி கணபதி, நவல்காடு உமையொருபாகம், கிருஷ்ணப்பா, ராமலட்சுமி எல்லாருமே வந்திருக்காங்க…எழுதிட்டீங்களா?” என்றார் ”நமஸ்காரம் பண்ணுங்கோ. ஆஸீர்வாதம் பண்றேன்.சட்டுன்னு பண்ணிடுக்கோ நேரமாறதுல்லியா? ”
என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. நானும் பிள்ளைவாளும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்று விடைபெற்று கிளம்பினோம். நான் பிரமை பிடித்து நடந்தேன். பஸ் பிடித்து மெல்ல மார்தாண்டம் வந்தபோது ஒரு டீ குடிக்கலாமென்று கடைக்குள் நுழைந்தோம். அப்போது நான் மெல்ல ”எனக்கு என்னமோ நம்பிக்கை வரல்லை”என்றேன்.
பிள்ளைவாள் டீயை ஐயத்துடன் ஊதியபடி ”ஒருமாதிரி டவுட்டாத்தான் இருக்கு”என்றார். ”ஆனா அவரு சொன்னதெல்லாம் கீதையில சொல்லியிருக்கப்பட்டதுதான். நம்ம கண் முன்னாடி வச்சு நிரூபிச்சும் காட்டினாருல்ல?” ”அது உள்ளதுதான்.ஆனா–” பிள்ளைவாள் ”இப்ப என்ன? இன்னொரு வாட்டி போயி துல்லியமா பாத்திருவோம்”என்றார்.
அதற்குள் பல வேலைகள். பிள்ளைவாள் ஒரு வீடுகட்டினார். பையன் கூட ·பிலாயில் போய் ஒருமாசம் இருந்துவிட்டு வந்தார். அதன் பின் நாங்கள் போய்ப்பார்க்கலாமென விசாரித்தபோது சாஸ்திரிகள் மிகவும் பெரியவராக ஆகிவிட்டிருந்தார். நெடுமங்காட்டு மலையருகே நாநூறு ஏக்கரில் ஆசிரமம். ஆசிரம வேலைக்காக இருபது லெக்ஸஸ் கார்கள். சீடர்களாக மந்திரிகள், எம்.எல்.ஏக்கள். பத்திரிகை டிவியில் பேட்டிகள். தரிசனத்துக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும். இரண்டு வருடம் கழித்துத்தான் வாய்ப்பு கிடைக்கும், ஐந்து நிமிடங்கள். கட்டுப்படியாகாது என்று விட்டுவிட்டோம்.
ஆத்மா பற்றிய கருத்துக்களை நண்பர்களைப் பகிந்துகொள்ளும்படி கேட்டிருந்தேன். என்னுடைய எண்ணம் உடம்போடு உயிரும் அழிந்துவிடுகிறது. ஆத்மா சட்டையை மாற்றிக்கொள்வது போல புது உடல் எடுத்து பிறந்து வருதலும் பிறவிப்பிணி கடந்து கடவுள் என்பதின் அடி சேர்தலும் உள்வாங்க, புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. இயலாதவை. ஆனால் மாபெரும் மதத்தின் அடிப்படை ஆத்மாவைப் பற்றிய தெளிவு ஆத்ம ஞானம் பெறுதல் என்கி்றபோது நனவுனிலை கனவு நிலை இவற்றை வைத்துப் புரிந்துகொள்ள இயலாதபோது நண்பர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தேன். காத்திருக்கிறேன்.
On Jun 29, 1:47 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!
<http://www.jeyamohan.in/?p=785>...
>
> நகைச்சுவை > *”ஆத்மாவுக்கு அறிவியல் விளக்கம்! அரிய சாதனை!! அறிஞர் சவால்!!!”* என்ற நாளிதழ்
> விளம்பரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வெங்ஙானம்மூடு வாசுதேவன்பிள்ளை
> தேடிவந்தார்.
நகைச்சுவைக் கட்டுரையை ரசித்துப் படித்தேன்.
ஸூர்யநாறாயண சாத்திரிகள் பகவத்கீதை சுலோகங்களைப்
பயன்படுத்துவது செம்மொழி மந்திரங்களுக்கு கொச்சை
மொழி பேசும் கல்லா மாந்தர்களுக்கு உள்ள ஈர்ப்பை நன்கு
காட்டுகிறது. இறுதியில் சாத்திரிகளின் ஆசிரமம் பணத்தில்
புரளுவதில் வியப்பென்ன?
இக்கதை போல ஆண்டன் செக்கா ஒரு கடஹி எழுதினாராம் (1897)
முஃழிகி (Muzhiki, "peasant fellows") என்று பேர் என்று
இந்தியவியல் ஆசிரியர்கள் சொனனார்கள். ஒரு ஏழை விவசாயப்
பெண் (ஆல்கா, Olga) பழம் ஸ்லாவானிக் மொழியில்
பாதிரி சொல்லும் சாதாரண வார்த்தைக்கெல்லாம் மயிர்க்கூச்செறிந்து
சாமியாடுவதாக வருகிறதாம். அந்தம்மாள் ஒரு வார்த்தையும்
அந்தப் பழைய செம்மொழியில் அறியாத் தற்குறி. Muzhiki தமிழில்
வெளிவந்துள்ளதா? என்று தெரிந்துகொள்ள ஆசை. இல்லாவிடில்
யாராவது மொழிபெயர்க்கணும்.
இத்தாலியிலும் இதுபோல் உண்டாம். கத்தோலிக்க சர்ச்சுகளில்
முன்பெல்லாம் குருமார்கள் லத்தீனத்தில் பூசைகளை நடத்துவர்.
அவற்றில் இருந்த “மந்திரத் தன்மை” இப்போது இத்தாலிய மொழியில்
போய்விட்டதாக பல சாதாரண ஜனங்கள் நம்புகின்றனராம்.
சம்ஸ்க்ருத அர்ச்சனை, மந்திரங்கள், கர்நாடக இசையில்
புரியாத பாஷைப் பாடல்கள் - இந்த Muzhiki மயக்கைப்
பலருக்கும் தோற்றுவித்துக்கொண்டு உள்ள்ன.
அன்புடன்,
நா. கணேசன்
செக்காவின் இக் கதையை அழகாக தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்:
http://www.ibiblio.org/eldritch/ac/jr/185.htm
”Olga went to church, and took Marya with her. As they went down the
path towards the meadow both were in good spirits. Olga liked the wide
view, and Marya felt that in her sister-in-law she had someone near
and akin to her. The sun was rising. Low down over the meadow floated
a drowsy hawk. The river looked gloomy; there was a haze hovering over
it here and there, but on the further bank a streak of light already
stretched across the hill. The church was gleaming, and in the manor
garden the rooks were cawing furiously.
"The old man is all right," Marya told her, "but Granny is strict; she
is continually nagging. Our own grain lasted till Carnival. We buy
flour now at the tavern. She is angry about it; she says we eat too
much."
"Aye, aye, dearie! Bear it in patience, that is all. It is written:
'Come unto Me, all ye that labour and are heavy laden.' "
Olga spoke sedately, rhythmically, and she walked like a pilgrim
woman, with a rapid, anxious step. Every day she read the gospel, read
it aloud like a deacon; a great deal of it she did not understand, but
the words of the gospel moved her to tears, and words like "forasmuch
as" and "verily" she pronounced with a sweet flutter at her heart. She
believed in God, in the Holy Mother, in the Saints; she believed one
must not offend anyone in the world -- not simple folks, nor Germans,
nor gypsies, nor Jews -- and woe even to those who have no compassion
on the beasts. She believed this was written in the Holy Scriptures;
and so, when she pronounced phrases from Holy Writ, even though she
did not understand them, her face grew softened, compassionate, and
radiant.
"What part do you come from?" Marya asked her.
"I am from Vladimir. Only I was taken to Moscow long ago, when I was
eight years old." ”
--
* words like: the original has astche, dondezhe, words in Church
Slavonic, the liturgial language
நா. கணேசன்
On Jun 29, 1:47 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> ஆத்மா பற்றிய கருத்துக்களை நண்பர்களை பகிந்துகொள்ளும்படி கேட்டிருந்தேன்.
> என்னுடைய எண்ணம் உடம்போடு உயிரும் அழிந்துவிடுகிறது. ஆத்மா சட்டையை
> மாற்றிக்கொள்வது போல புது உடல் எடுத்து பிறந்து வருதலும் பிறவிப்பிணி கடந்து
> கடவுள் என்பதின் அடி சேர்தலும் உள்வாங்க, புரிந்துகொள்ள மிகக் கடினமானவை.
> இயலாதவை.
சித்தர் சிவவாக்கியர் பாடல்:
கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்து போன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ, உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே
> ஆனால் மாபெரும் மதத்தின் அடிப்படை ஆத்மாவைப் பற்றிய தெளிவு ஆத்ம ஞானம்
> பெறுதல் என்கி்றபோது நனவுனிலை கனவு நிலை இவற்றை வைத்துப் புரிந்துகொள்ள
> இயலாதபோது நண்பர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தேன். காத்திருக்கிறேன்.
> கூகுளில் தேடிப்பார்த்தபோது திரு ஜெயமோகனின் கீழ்க்கண்டபதிவு ஆர்வமூட்டுவதாக
> இருந்தது. நண்பர்கள் பார்வைக்குப் பகிந்துள்ளேன்’
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
> ஆத்மாவை நிரூபிக்க அரியவழி! <http://www.jeyamohan.in/?p=785>...
>
> நகைச்சுவை <http://jeyamohan.in/?cat=30>
கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணைய் மோர்புகா
சித்தர் சிவவாக்கியர் பாடல்:
உடைந்து போன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ, உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே
கீதை கருத்தைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
சிவவாக்கியர் பிற பாடல்களில் அவ்வாறு காணோம்.
இருந்தால் தாருங்கள்.
On Jun 29, 10:47 pm, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா வணக்கம்.
>
>
>
> > சித்தர் சிவவாக்கியர் பாடல்:
> > கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணைய் மோர்புகா
> > உடைந்து போன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
> > விரிந்தபூ, உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
> > இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே
>
> > ஐயா,
>
> இந்தச் சித்தர் பாடலில் எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உள்ளது.
> பால், மோர், வெண்ணைய், நெய், சங்கு, விரிந்த பூ, உதிர்ந்த காய்
> இவையெல்லாம் அஃறிணை.
>
> மனிதன் உயர்திணை. உயர்திணைக்கு உயர்திணையே ஒப்புநோக்கப்பட வேண்டும்.
> உயர்திணையின் செயல்பாடுகளுக்கு அஃறிணையை உதாரணமாகக் கொள்ள இயலாது என்பது
> என் கருத்து.
>
இந்திய சமயங்களில் நீங்கள் சொல்லும் பேதம் இல்லை.
மற்ற உயிர்களைக் கொல்லாமைக்கு முக்கியக் காரணம் அது.
அவ் வேறுபாடு காட்டினால் அஃறிணை உயிரிகளை என்ன
வேண்டுமானாலும் செய்யலாம் என்று இடம் கொடுத்ததாகிவிடும்.
புராண வல்லுநர் நீங்கள். அக்காலத்தில் அஃறிணைகளும் பேசின.
கழறிற்றறிவார் நாயனார்.
அன்புடன்,
நா. கணேசன்
> பூ காய் பழம் கொட்டை - மீண்டும் அதே மரம் வளரத்தானே செய்கிறது.
அக்காலத்தில் அஃறிணைகளும் பேசின.
கழறிற்றறிவார் நாயனார்.
On Jun 30, 7:11 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா நா.க, அவர்களுக்கு வணக்கம்.
>
> 2011/6/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அக்காலத்தில் அஃறிணைகளும் பேசின.
> > கழறிற்றறிவார் நாயனார்.
>
> > உண்மைதான் ஐயா.
>
> மரங்களும் பேசின, என்று எடுத்துக் கொண்டாலும், அவற்றின் பூவிலிருந் காய்,
> காயிலிருந்து கனி,
> கனியிலிருந்து விதை
> விதையிலிருந்து மீண்டும் மரம் தோன்றிவிடுகிறது.
>
> எனவே மரம் இறக்க வில்லை, மீண்டும் பல மரங்களாகப் பிறக்கவே செய்கிறது.
> எனவே இந்தச் சித்தர் பாடல் ஏற்புடையதாக அமையவில்லை என்றே கருதுகிறேன்.
>
மனிதர்களாகட்டும், மரங்களாகட்டும் - வம்ச விருத்தி ஏன்?
என்று விஞ்ஞானம் சார்லஸ் டார்வின் காலத்திலிருந்து
புதிய அறிவொளி பாய்ச்சிவருகிறது.
நா. கணேசன்
என்று விஞ்ஞானம் சார்லஸ் டார்வின் காலத்திலிருந்து
மனிதர்களாகட்டும், மரங்களாகட்டும் - வம்ச விருத்தி ஏன்?
புதிய அறிவொளி பாய்ச்சிவருகிறது.