மணிமேகலை ... யார் அவள்?
"மணிமேகலை" என்ற பெயரைக் கேட்டவுடன் நம் ஒவ்வொருவரின் மனதிலும்/கருத்திலும் என்ன மாதிரி வடிவம் தோன்றுகிறது? ஒரு பூங்கொடி போன்ற அழகிய இளம் பெண்ணா? தலைமுடியை மொட்டையடித்த துறவியா? தலைமுடியை மொட்டையடிக்காத தவப் பெண்ணா? ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரியும் எவளோ ஒருத்தியா? இல்லை வேறு யாருமா?
மணிமேகலைக் காப்பியத்தில் காப்பியத் தலைவி மணிமேகலை எத்தனை வடிவங்களை எதற்காக மேற்கொள்ளுகிறாள்? எத்தனை வகையான மக்களை/தெய்வங்களைச் சந்திக்கிறாள்? அவள் பார்க்கும் ஒவ்வொருவரும் அவளுடைய வாழ்க்கைப் பாதையை எப்படி மாற்றுகிறார்கள்? இதெல்லாம் பற்றி நாம் நினைத்துப் பார்க்கிறோமா?
இப்போதைக்கு உங்கள் கருத்துக்காக ...
1. மணிமேகலைக் காப்பியம் என்பது ஒரு துறவிப் பெண்ணின் கதையைச் சொல்வது அன்று.
2. காப்பியத்தின் கடைசி வரியில்தான் அந்தப் பெண் (மணிமேகலை) "பவத்திறம் அறுக" என்று நோற்றதாகப் படிக்கிறோம்.
கதை முழுவதிலும் அவள் துறவறம் ஏற்காத பெண்ணாகவே காட்டப்படுகிறாள்.
3. தெய்வங்களின் குறுக்கீடு இல்லாவிட்டால் மணிமேகலையின் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம்!
4. சுமார் ~30 பேர் (தனியாகவோ கூட்டாகவோ) அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர்!
5. அவள் வாழக்கையில் வந்து போகும் ஒவ்வொருவரும் அவளை அவளுடைய "தவ" நிலைக்கு எப்படிக் கொண்டு போகிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.
இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். முடிந்தபோது என் கருத்துக்களை விவரமாக எழுதுகிறேன்.
அன்புடன்,
ராஜம்