ஆனைமங் கலம் செப்பேடுகள்

371 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jun 24, 2014, 5:51:39 AM6/24/14
to தமிழ் மன்றம், thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, podhuvan sengai, adi...@shaivam.org, Raji M
நூதலோசு
மயிலை 
------------
இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் 16 ம் பக்கத்தில் 

லேய் டன் செப்பேடுகள் எனக்குறிக்கப்படும் ஆனைமங்கலம் செப் பேடுகள்
பற்றி ஓர் கட்டுரை வந்துள்ளது பார்க்க  (இணைப்பு காண்க) 

அச்செப்பேடு களில் காணும் நேரடி முழு விவரங்களுக்கு சென்று பார்க்க

(Leiden is a city and municipality in the Dutch province of South Holland 
Museum  இதனில் இப்போது வைக்கப்பட்டுள்ளது 
Inline image 1.)

இராஜ ராஜன் /  ராஜேந்திரன் / விக்கிரம  சோழன் எனும் சோழ மன்னர்கள்
ஓர் புத்த விகாகரத்திற்கு அளித்த தானங்ககளின்  விவரங்களைப்பேசுவது 
 இவ்விரு செப்பேடுகள் 

செப்பேடுகளில் என்னென்ன  இருக்கும் எப்படி எழுதப்பட்டிருக்கும்
முதலியவை பற்றி  வரலாற்று அறிவில்பால் ஈடுபாடுள்ளவர் ஓரளவிற்கு காணலாம் 

இவற்றிலிருந்து அக்கால மன்னராட்சிகள்  எவ்வாறெல்லாம் சிறப்புற நடந்துள்ளது
என்பதனை  அறிய ஓர் நல்ல எடுத்துக்காட்டு எத்தனை அதிகாரிகள் எவ்வளவு பின்னலான
அரசினரின் நடைமுறைகள் நீண்டகள் சமூதாய தொலை நோக்கு முதலியவற்றிற்கு
அவசியம் காண்க  

இச்செப்பேடுகளின் நகல்கள்
பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் 'பௌத்தமும் தமிழும்' (1957)
மூன்றாம் பதிப்பினில் புதிதாக சேர்ந்த பிற்சேர்க்கையாக காண்பன அறிஞரும்
Epigraphica Indica Volume XXII பக்கங்கள் 213 >> 266 மற்றும்
Epigraphica Indica Volume XXII பக்கங்கள் 267 >> 281 களினின்று படைத்துள்ளார்

(அந்த மதுரை திட்ட இணையப்பக்க பதிவாளன் நூதலோசு மயிலை) 


anaimangalam seppedukal.gif

N. Ganesan

unread,
Jun 24, 2014, 9:03:42 AM6/24/14
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com, vallamai


On Tuesday, June 24, 2014 2:51:39 AM UTC-7, selvi...@gmail.com wrote:
நூதலோசு
மயிலை 
------------
இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் 16 ம் பக்கத்தில் 

லேய் டன் செப்பேடுகள் எனக்குறிக்கப்படும் ஆனைமங்கலம் செப் பேடுகள்
பற்றி ஓர் கட்டுரை வந்துள்ளது பார்க்க  (இணைப்பு காண்க) 

நன்றி. சென்ற மாதம் ஃப்ரண்ட்லைன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.
வெள்ளுரையாக (plain-text) வடிவில்.

நா. கணேசன் 

மர்மமான அரச மானியம்!

ஒரு புத்த விஹாரத்தை நல்ல முறையில் பராமரிக்க, சோழ சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவர் மானியங்களையும் நிதி ஆதாரங்களையும் அளித்து ஆணையிட்டதை, நெதர்லாந்து (ஹாலந்து டச்சு) நாட்டின் லீடன் பல்கலைக்கழகம் பாதுகாத்து வரும் செப்பேடு அற்புதமாக விவரிக்கிறது.

மலாய் பகுதியைச் சேர்ந்த மன்னன் நிர்மாணித்த அந்த புத்த விஹாரம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.

மன்னர் பிறப்பித்த ஆணையின் சட்ட அம்சங்கள் என்ன, அதை நிறைவேற்றுவதற்கான நிதிப் பொறுப்புகள் எப்படிப்பட்டவை, அரசு நிர்வாகம் அதை எப்படி அமலுக்குக் கொண்டுவந்தது என்பதையெல்லாம் இந்தச் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது. 11-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆணையின்படியான ஒப்பந்தம் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பது நம்முடைய கவனத்தைக் கவருகிறது.

மன்னரின் ஆணைகளையும் கட்டளைகளையும் ஆலயங்களிலும் நினைவுச் சின்னங்களிலும் முதலில் கல்லில் செதுக்கினார்கள். பிறகு பனை ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்தார்கள். கி.பி. முதலாவது நூற்றாண்டிலிருந்து செப்புத் தகடுகளிலும் பொறிக்கும் வழக்கம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் பல்லவர் காலத்தில் கி.பி. 4-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட செப்பேடுகள்தான் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்த ஆரம்பகால ஆதாரங்களாகும். வட இந்தியாவிலும் செப்பேடுகள் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கிடைத்த செப்பேடுகள் வரலாற்றைக் கணிக்கவும் விளக்கவும் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இந்த மரபையொட்டி முதலாம் ராஜராஜ சோழன் இந்த மானியத்தை வழங்கியிருக்கிறார். 9-வது நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த தேவபாலா என்ற வங்க மன்னன், சைலேந்திரன் என்ற மன்னன் நாளந்தாவில் கட்டிய புத்த விஹாரத்தைப் பராமரிக்க 5 கிராமங்களிலிருந்து கிடைத்த வருவாயைச் சாசனமாக எழுதிவைத்து பரிபாலித்தார். நாகப்பட்டினத்திலும் ‘சூளாமணிவர்மன்' என்ற பட்டப் பெயரைக் கொண்ட மற்றொரு மன்னர் சைலேந்திரர், புத்த விஹாரத்தைக் கட்டியிருக்கிறார். அதனால் அதை சூளாமணி விஹாரம் என்றே அழைத்தனர்.

யுவான் சுவாங், யீஜிங் போன்ற சீன அறிஞர்களின் பயணக் குறிப்புகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் இடம் பெறும் சைலேந்திர மன்னர்கள் மலாயா, ஜாவா, சுமத்திரா மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அவர்களுடைய முன்னோர்கள் வெகு காலத்துக்கு முன்னரே இந்தியப் பகுதிகளிலிருந்து கடல்கடந்து படை நடத்திச் சென்றவர்கள். கடாரத்தின் மீது (தற்போதைய மலேசியாவின் கெடா) கி.பி. 8-வது நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்தியவர்கள். தூரக் கிழக்கு நாடுகளில் அவர்கள்தான் ஸ்ரீ விஜய அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள்.

இந்தோனேசியாவின் போராபுதூர் என்ற இடத்தில் உள்ள அற்புதமான கோயில் இந்த மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான். இந்துக் கோயில்களாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் இறுதியில் புத்த விஹாரங்களானது போல இந்த மன்னர்களும் தொடக்க காலத்தில் இந்துக்களாக இருந்து பிறகு பௌத்தத்தைத் தழுவினர். இவ்வாறாக ஸ்ரீ விஜய பௌத்தர்கள், நாளந்தா பிக்குகள், காஞ்சிபுர சித்தாந்திகள், நாகப்பட்டின சங்கத்தார் ஆகியோரால் பரஸ்பரம் புத்தமதக் கருத்துகளும் பழக்கவழக்கங்களும் மெருகேற்றம் பெற்றன.

லெய்டன் பல்கலைக்கழக செப்பேடுகளில் இவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.  விஜய மன்னர்களும் கடாரம் வென்றவர்களும் மகரம் என்ற விசித்திரமான பிராணியுடன் தொடர்புள்ளவர்கள். மீனின் உடலும் யானையின் தலையும் கொண்ட மகரம் இந்த மன்னர்களின் இலச்சினையாக இருக்கிறது. ஜாவாவின் கட்டிடங்கள் பலவற்றில் இச் சின்னத்தை இன்றும் காணலாம்.

செப்பேடுகள்:

லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள செப்பேடுகளில் 21 பெரியவை, 3 சிறியவை. பெரிய செப்பேடுகள் ராஜேந்திர சோழனால் எழுதப்பெற்றவை. அவற்றில் 5 சம்ஸ்கிருதத்திலும் 16 தமிழிலும் எழுதப்பட்டவை. ராஜராஜ சோழன் வாய்மொழியாக இட்ட உத்தரவுகளை ராஜேந்திர சோழன் நிறைவேற்றியது குறித்து அவற்றில் எழுதப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனால் எழுதப்பட்டவை தமிழ் செப்பேடுகள். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விஹாரத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்பட்டது குறித்து அதில் எழுதப்பட்டிருக்கிறது. சிறிய செப்பேடுகளில் ராஜராஜபெரும்பள்ளி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பௌத்தர்களும் ஜைனர்களும் கூடும் இடங்கள் பள்ளி என்று அழைக்கப்படும்.

சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட செப்பேடுகளில் மொத்தம் 111 வரிகள் உள்ளன. நல்ல கற்பனை வளத்துடனும் சந்தங்கள், யாப்பிலக்கணங்களுடன் எழுதப்பட்டுள்ள அவை சோழ மன்னர்களின் வம்சப் பெருமைகளையும் போரில் அவர்கள் பெற்ற வெற்றிகளையும், அவர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளையும் விவரிக்கின்றன.

அன்பில் என்ற இடத்தில் கிடைத்த சுந்தரசோழனின் வம்சம், திருவாலங்காட்டில் கிடைத்த உத்தம சோழன் வம்சம் குறித்த தகவல்களை வரலாற்று மாணவர்கள் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளனர். இந்தச் செப்பேடுகளும் கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரர் பற்றிய குறிப்புகளும், லெய்டன் பல்கலைக்கழகச் செப்பேடுகளும் தரும் தகவல்கள் சோழர்காலத்தைப் பற்றித் தெளிவாக அறிய உதவுகின்றன.

கலிங்கத்துப் பரணியும் சோழர்களின் வம்சம் குறித்துப் பேசுகிறது. கோயமுத்தூரைச் சேர்ந்த கே.வி. சுப்பிரமண்யா 1930-களின் மத்தியில் இந்தச் செப்பேடுகள் குறித்த தனது ஆராய்ச்சி முடிவுகளைப் பதிப்பித்திருக்கிறார். அவருடைய நூலிலிருந்து நாம் பல அரிய தகவல்களைப் பெற முடிகிறது.

21 செப்பேடுகளும் வட்டமான செப்பு வளையத்துக்குள் கோக்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது. சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சம்ஸ்கிருத உரை ஆகியவை அந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழில் 332 வரிகளில் அந்த மானியத்தின் முழு விளக்கமும் வியப்பூட்டும் வகையில் தரப்பட்டிருக்கிறது. 97 வேலி நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல்லில் 8,943 கலம், 2 துனி, 1 குருணி, 1 நலி இந்த மானியம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. ஆனைமங்கலத்தையொட்டிய 26 கிராமங்களின் பெயர்களையும், அவற்றைக் கணக்கெடுத்த அதிகாரிகளின் பெயர்களையும், மானியம் வழங்கப்பட்டதற்கு சாட்சியாகக் கையெழுத்திட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளையும் பற்றி செப்பேடு பேசுகிறது.

இந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் அரசருக்குத்தான் செல்ல வேண்டும் என்றாலும் அரசர் பிறப்பித்த சாசனம் காரணமாக இந்த விஹாரத்துக்கும் பௌத்த மடாலயத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

வரி இனங்கள் பற்றிய பட்டியல் மலைக்க வைக்கிறது. தண்ணீர் வரி, திருமணத்தின்போது செலுத்த வேண்டிய வரி, ஆட்டு மந்தைகளை வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி, தறிகளில் நெய்யப்படும் ஆடைகளுக்கு வரி, துணி வெளுப்போர் பயன்படுத்தும் துவைக்கும் கற்களைப் பயன்படுத்துவதற்கான வரி, மட்பாண்டங்களுக்கு வரி என்று பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு வரிக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் அப்படியே.

அரசனின் ஆணைகளைத் தொகுத்து வெளியிடும் அதிகாரிக்கு ‘திருமந்திரவோலை நாயகம்' என்று பெயர். வரிபத்தாயம் என்பது வரி விவரங்கள் எழுதப்பட்ட பதிவேடுகள். ஆனைமங்கலத்தைச் சுற்றி நிலங்களைக் கணக்கெடுக்க 2 ஆண்டுகள் 72 நாள்கள் ஆகியுள்ளன. விஹாரத்தைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆயின!

யாரெல்லாம் இந்த மானியத்தால் பயன்பெற வேண்டும் என்பதும் தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாசன வசதிகளைச் செய்து தருதல், வாய்க்கால்களைப் பராமரிப்பது, கிணறுகளை வெட்டுவது, மானியக் கிராமங்களிலிருந்து பிற கிராமங்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சுவது தொடர்பாகத் தெளிவாக வழிகாட்டல்கள் உள்ளன. மரங்களை நடுவது, தோப்புகளை வளர்ப்பது, எண்ணெய் செக்குகளை நாட்டுவது, சுட்ட செங்கற்களைக் கட்டடம் கட்ட பயன்படுத்துவது, கட்டுமானத்தில் தரத்தைப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன. மடாலயத்தின் பக்கத்தில் வாழும் மக்களால் ஏற்படும் ஓசைகளை மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுகூட கூறப்பட்டிருக்கிறது!

தஞ்சாவூரில் மிகப்பெரிய சிவாலயத்தைக் கட்டிய மன்னன் நாகப்பட்டினம் அருகில் இந்த புத்த விஹாரத்தைக் கட்ட உதவியிருக்கிறார். பிற்காலத்தில் புரவலர் இன்றி சூளாமணிவிஹாரம் பாழாகிவிட்டது.

19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த புத்த விஹாரம் முற்றாக அடையாளமின்றி அழிக்கப்பட்டது. இதை சர் டபிள்யூ. எலியட் பதிவு செய்திருக்கிறார்.

“நாகப்பட்டினத்துக்கு வடக்கில் ஒன்றாவது மைலிலிருந்து இரண்டாவது மைலுக்குள் உயரமான கோபுரம் இருக்கிறது. அது கடலில் செல்வோருக்கு அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏசு சபையினர் இந்த இடத்துக்கு அருகில் குடியேறினர். அந்த கோபுரம் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அதை இடித்துத் தள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மனுச் செய்தனர்.

சிலகால இழுத்தடிப்புக்குப் பிறகு 1867 ஆகஸ்ட் 28-ம் தேதி அந்த கோபுரத்தை இடித்துத்தள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனுமதி தந்தனர். அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்ட சில காலத்துக்குப் பிறகு வெண்கலத்தாலான புத்தர் சிலை அங்கே கிடைத்தது. அதை லார்டு நேப்பியருக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். இவ்வாறாக பௌத்த விஹாரத்தின் கடைசி அடையாளமும் தொலைந்தது.

லெய்டன் செப்பேடுகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. எங்கோ ஒரு நாட்டைச் சேர்ந்த சைலேந்திர மன்னனின் வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் புத்த விஹாரத்தை ஏன் சோழச் சக்ரவர்த்தி ஏற்படுத்தினார்? பிற மதங்களையும் மதிக்கவேண்டும் என்பதாலா? சைலேந்திரர்களுடன் நட்புறவு கொள்வதற்காகவா? அல்லது இரண்டும் சேர்ந்தா? அல்லது வேறு காரணம் இருக்குமா? வரலாற்று ஆய்வு மாணவர்கள் இந்தப் புதிர்களுக்கு விடை காண வேண்டும்.

தமிழில்: சாரி

History, Mystery of a Royal Grant, 30.5.14, The Frontline.

வேந்தன் அரசு

unread,
Jun 25, 2014, 7:39:17 AM6/25/14
to தமிழாயம், தமிழ் மன்றம், mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, podhuvan sengai, adi...@shaivam.org, Raji M
செப்பு ஏடுகள் டெய்டனில் இருப்பதே நல்லது. நம்ம ஆளூக பேரீச்சம் பழத்துக்கு வித்துறுவாங்க


24 ஜூன், 2014 5:51 முற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jun 25, 2014, 9:47:09 PM6/25/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai
ஆனைமங்கல செபேட்டு தமிழை விட இன்றைய தமிழ் தூய்மையாக இருக்கு. 

அந்த மதுரை திட்ட இணையப்பக்க பதிவாளன் நூதலோசு மயிலையாருக்கு நம் வாழ்த்துகள்


24 ஜூன், 2014 9:03 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Jun 25, 2014, 10:42:32 PM6/25/14
to mintamil
லெய்டன் செப்பேடுகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. எங்கோ ஒரு நாட்டைச் சேர்ந்த சைலேந்திர மன்னனின் வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் புத்த விஹாரத்தை ஏன் சோழச் சக்ரவர்த்தி ஏற்படுத்தினார்? பிற மதங்களையும் மதிக்கவேண்டும் என்பதாலா? சைலேந்திரர்களுடன் நட்புறவு கொள்வதற்காகவா? அல்லது இரண்டும் சேர்ந்தா? அல்லது வேறு காரணம் இருக்குமா? வரலாற்று ஆய்வு மாணவர்கள் இந்தப் புதிர்களுக்கு விடை காண வேண்டும். - தமிழில்: சாரி

சைலேந்திரர் பல்லவ சோழ பாண்டிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர் என்கிறார் பிரபாத் ரஞ்சன் சர்க்கார். கப்பம் பெறுவதால் நாகையில் சோழர் புத்த விகாரையை கட்டி இருக்கலாம்.

Some think that this phallic worship was brought to America from India during the Shriishaelendra Empire of Andhra under the Pahlava, Pandya, and Chol Dynasties of South India. The phallus worshippers of Central America belonged to the Mayan civilization; thus America is called Máyádviipa [Mayan Island] in Sanskrit. However, the fact is that those people followed this phallic worship from prehistoric times more as a social custom than as a spiritual or philosophic cult.    .
12 May 1982, Calcutta, Published in:  namah Shiváya Shántáya File name: Shiva Throughout the Ages Discourse 5

At one time, the ancient Mayan civilization of America was more advanced than many other civilizations, but because they lagged behind in the invention of the wheel, they were forced in subsequent times to acknowledge their defeat at the hands of other civilizations. The oldest existing artifacts of the Mayan civilization give evidence to advanced ways of life but no wheel. One should keep in mind that the Sanskrit name for America, Máyádviipa, came from the name of the Mayan civilization. During the Chola, Páńdya, and Pahlava dynasties of the Indian Middle Ages there was contact between America and India – this was before Columbus's discovery of America.

6 October 1985, Calcutta. 
Published in: 
Shabda Cayaniká Part 1, 
File name: Anka to Adhya Discourse 4

Suba.T.

unread,
Jun 26, 2014, 3:18:36 AM6/26/14
to மின்தமிழ், Subashini Tremmel

அச்செப்பேடு களில் காணும் நேரடி முழு விவரங்களுக்கு சென்று பார்க்க

​மதுரைத் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த முழு நூலையும் பார்த்தேன். மிகச் சிறப்பாக உள்ளது.
இது எந்த நூலிலிருந்து தட்டச்சு செய்து ​இங்கு இணைக்கப்பட்டது என்றும் இதனை முதலில் அதாவது செப்பேட்டிலிருந்து இக்காலத்தமிழ் வடிவில் அச்சுப் பதிப்பாக செய்தவர் யார் என்றும் அந்த நூலின் பெயரையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். அறிந்தோர் தகவல் தர இயலுமா?

சுபா


N D Logasundaram

unread,
Jun 26, 2014, 2:53:01 PM6/26/14
to mintamil
 அன்புநிறை சுபா அவர் களுக்கு 

மதுரைத் திட்ட அந்த இணையப் பக்கத்திலேயே நான் கடைசியில் காட்டியுள்ளேனே

அறிஞர் மயிலை சீனி வேனங் கடசாமி தன் "பௌத்தமும் தமிழும்"  எனும் நூலின்
3 ம் பதிப்பினில் பின் சேர்க்கையாக கொடுத்ததைத்தான் நான் பதிவு செய்தேன் என்றும்

அறிஞரும்
SOUTH INDIAN INSCRIPTIONS volume XXX  பக்கம் YYY  என எண்ணிட்டு காட்டியுள்ளார் என்றும்
எழுதியுள்ளேன் 

செப்பேட்டில் உள்ளது வடமொழி மற்றும் சோழர்கால எழுத் து 
இதன் ESTEMPAGES படம் காட்டப்படவில்லை 

இந்த ASI reports களில் இதைப் படித்த வெளியிட்ட வரலாற்று தொல்லியலாளர் அவரது
சொற்களில் (ENGLISH ) ல் SI INSCRIPTION ASI ன் MER MADRAS EPIGRAPHICAL REPOTRS
 என (மாதா மாதம்) வந்ததன் பழம் தொகுப்பிலிருந்து படித்துள்ளார் போலும் 

அவர்களும் 

எந்த செப்பேட்டின் (எண் )
 எந்த பக்கத்தில் (முன் பின்)
எந்த வரியில்
 எப்படி முடிந்ததோ (சொல்லின் எழுத்துக்கள் ) 
அவ்வழியே பதிவு செய்துள்ளனர்.
ஆனால்
வடமொழி வா சக ம் மொழிபெயர்த்தும் தமிழை நாம் படிக்கும் நிலையிலும்
(எழுத்துப்பிழை இருந்தாலும் அப்படியேயும் . விடுபட்டதனை பிறை க்குறி யில் சேர்த்து) 
வெளியிட்டுள்ளனர் 

அதனை அப்படியே சீனி வேங்கடசாமி அவர்களும் வைத்தார்
நானும் அப்படியே  பதிந்தேன் 

மதுரைத் திட்ட பக்கத்தில் முன் சில் பத்திகள் அறிமுகமாக சில வைத்துள்ளது நான் எழுதியவை 

அன்புடன் 
நூ தா லோ சு 

மயிலை  






 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

satha sivam

unread,
Jul 6, 2014, 2:44:08 AM7/6/14
to mint...@googlegroups.com
சோழர் செப்பெடுகள்
நடன காசிநாதன்  சேகர் பதிப்பகம்

கல்வெட்டு ஒர் அறிமுகம்  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை


N D Logasundaram

unread,
Jul 6, 2014, 7:05:15 AM7/6/14
to mintamil
திரு சதாசிவம் அவர்களுக்கு,

நீங்க காட்ட நினைப்பது என்ன ??

சோழர் செப்பெடுகள் 

நடன காசிநாதன்  சேகர் பதிப்பகம் 

கல்வெட்டு ஒர் அறிமுகம்  

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 

என்பது ஒரு நூல்
 வேண்டுமென்றால் வாங்கிப்படியுங்கள் என்பதா? 

அப்படியானல் அதன் உரைகல் உரை என்ன
நீங்கள் படித்ததுண்டா?
 
அதனில் என்னென்ன எப்படி உள்ளது எனும் நூல் பற்றிய் விளக்கம் வைக்கமுடியுமா?

குறிப்பாக இந்த ஆனைமங்கலச் செப்பெடுகள் பற்றி அதனில் என்னென்ன உள்ளன ??

விளக்கங்களை வைக்கலாமே 
Reply all
Reply to author
Forward
0 new messages