மனம் என்பது எங்கே இருக்கிறது?? -- திருமதி. டாக்டர் தேவகி முத்தையா, எம்.ஏ. எம்.ஃபில்..

359 views
Skip to first unread message

KAVIRI MAINDHAN

unread,
Jul 2, 2015, 5:03:26 PM7/2/15
to vallamai, Groups

பூமியில் வாழும் சில உயிர்கள் ஓர் அறிவு மட்டுமே கொண்டவை. புல், பூண்டு, தாவரங்கள் போன்ற உயிரினங்களைச் சொல்லலாம். இவற்றிற்கு தொடுதலால் உணரும் அறிவு (ஸ்பரிசம்) என்ற ஓர் அறிவு மட்டுமே உண்டு. கடல்வாழ் பிராணிகளான சிப்பி, நத்தை, கிளிஞ்சல் போன்ற உயிரினங்களுக்கு தொட்டால் உணரும் அறிவோடு நாக்கு என்ற சுவை அறிவுமாக இரண்டு அறிவுகள் உண்டு. இவ்விரண்டு அறிவுகளுடன் நுகரும் அறிவு உடைய உயிரினங்கள் ஈசல், எறும்பு, செல் போன்றவை. மூன்றறிவுடன் கண் என்ற பார்வை அறிவும் உடையன நான்கு அறிவு கொண்டவையான நண்டு, தும்பி, வண்டு போன்ற உயிரினங்கள். நான்கறிவுகளுடன் கேட்கும் அறிவும் கொண்டவை ஐந்தறிவு கொண்ட வெளவால், ஆமை மற்றும் விலங்கினங்கள் போன்றவை. ஆறாவது அறிவான சிந்திக்கும் மனத்தைக் கொண்டவன் மனிதன் மட்டுமே. இதுதான் ஆராய்ந்தறியும் அறிவு. மனம் என்பது எங்கே இருக்கிறது? பலர் இருதய ஸ்தானத்தைக் காட்டுவார்கள்!! மனம் அங்கு இல்லை. மனம் என்பது சிந்திக்கும் சக்தி!! அது உறுப்பு வடிவில் இருப்பதன்று. அலை வடிவத்தில் அமைந்ததே மனம். உருவம் இல்லாத மனத்திற்கு மகிழ்ச்சி உண்டு. துக்கம் உண்டு. தெம்பு உண்டு. சோர்வு உண்டு. காதல் உண்டு. மோதலும் உண்டு!! கனிவு உண்டு. காழ்ப்பு உண்டு. அன்பு உண்டு. அகங்காரங்களும் உண்டு. நினவுகள் உண்டு. மறதியும் உண்டு. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மனம். உணர்ச்சிகள் பாஸிடிவ், நெகடிவ் (Positive and Negative) என்பதால் மனம் அதற்கேற்றவாறு செயல்படுகின்றது. உடலைப் பிறர் கட்டுப்படுத்த இயலும். ஆனால் மனதை கட்டுப்படுத்த இயலாது ஒருவரைப் பார்க்கச் செல்லக்கூடாது. அவருடன் பேசக்கூடாது என்று உடற்கூறுகளைக் கட்டுப்படுத்த இயலும். அவர்களைப் பற்றி நினக்காதே என்று ஒருவரது மனதைக் கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தவே இயலாது. இதன் காரணமாகவே மனதைத் தூய்மயாகவும், கட்டுப்பாடுடனும் வைத்திருத்தல் அவசியம்.

என் மகள் அபிராமி சிறு வயதில் கேட்பாள். இலையில் எல்லா சாப்பாட்டையும் வைத்து சாதமும் வைத்தாகிவிட்டது. இதற்கு மேலும் என்ன வைத்தால் சாப்பிடலாம்?" என்பாள். எனக்குத் தெரியாது என்பேன் நான். மனசு வைத்தால் சாப்பிடலாம்" என்பாள் அவள். வேடிக்கயான விஷயம்தான். ஆனால் எத்தனை அர்த்தமுள்ள சங்கதி.

திருமதி. டாக்டர் தேவகி முத்தையா, எம்.ஏ. எம்.ஃபில்..அன்பர்களே!

 

 

மற்ற உயிர் இனங்களுக்கும் நமக்கும் வேறுபாடு என்ன?

அறிவு அடிப்படையிலேயே உயிர் இனங்கள் வேறுபடுகின்றன.

ஓர் அறிவு உயிர்:

மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.
எடுத்துக்காட்டு : செடி, கொடி, புல், மரம்

ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்):

மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.
எடுத்துக்காட்டு : சிப்பி, சங்கு

மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்):

மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்
எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு

நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்):

மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல்பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.
எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு

ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்):

மெய், நாக்கு, மூக்கு கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.
எடுத்துக்காட்டு : விலங்குகள், மனிதர்.

இந்நிலையில் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பகுத்தறிவு என்றும்,
அது, இது, என்றும்,
பல கோணங்களில்
"
ஆறாம் அறிவு" இன்று விவாதிக்கப்படுகிறது.

ஆனால் ஒத்த முடிவு இன்று வரை ஏற்படவில்லை.

இதற்கு உண்மை விளக்கம் வள்ளலார் கண்ட
சுத்த சன்மார்க்கத்தில் காணலாம்.

விலங்கு யோனி வர்க்கங்களெல்லாம் சென்று வந்த நாம் (சிற்றணுப்பசு), இந்த மனித தேகத்தில் சிறிதறிவு தோற்றிவிடுத்த கடவுளின் (இயற்கையின்) பெருங்கருணையை இங்கு உணர வேண்டும் என்கிறார் வள்ளலார்.

நிற்க!

சிறிதறிவு பெற்ற நாம்,
அவ்வறிவை கொண்டு செயல்படாமல்,
புலனறிவால் (ஐந்தறிவால்) மட்டுமே செயல்படுகிறோம்.

ஆறாவது அறிவு என்பது என்ன? எனப்பார்க்கும் போது;

அது உண்மையறிதலேஆகும். உண்மையை அறியும் அறிவே ஆறாவது அறிவு ஆகும். உண்மை அறியும் தகுதி படைத்த தேகம் மனித தேகம் மட்டுமே.

மனிதன் உண்மையை அறிவதற்கு நல்ல விசாரணைசெய்து முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துக் கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.

மேற்படி ஆறாவது அறிவான உண்மையறிதலுக்கு தேவையானது நல்ல விசாரணையேஅந்த நல்ல விசாரணைக்கு நமக்கு தகுதியான சாதனமாக உள்ளது கருணையே கருணை என்பதற்கான விளக்கத்தை வள்ளலார் கீழ் வருமாறு தருகிறார்கள்.

கருணை என்பது;

எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே.

Thanking you,
APJ.ARUL, Karunai Sabai, Madurai.

--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

Rishi Raveendran

unread,
Jul 2, 2015, 11:19:21 PM7/2/15
to vall...@googlegroups.com, Groups


// அது உண்மையறிதலேஆகும். உண்மையை அறியும் அறிவே ஆறாவது அறிவு ஆகும். உண்மை அறியும் தகுதி படைத்த தேகம் மனித தேகம் மட்டுமே. //

பிற உயிரிகளுக்கும் பகுத்தறியும் திறன் உள்ளது, உண்மையறிதல் பிற உயிரினங்களுக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களைவிட சில உயிரினங்கள் அதீத ஆற்றல்கள் கொண்டவை.

சரி. ஒரே ஒரு கேள்வி.

மனம் என்றால் என்ன ? அது எங்கே இருக்கின்றது ?  தேகத்தில்தான் மனம் இருக்கின்றதா ?

அது எங்கும் இல்லை என்றால் இல்லாத ஒன்று எப்படி இருப்பதாகும் ?

.

இக்கட்டுரையில் தெளிவான விளக்கம் கிட்டுமா என்ற ஆர்வத்தில் மனம் என்றால் என்ன ? அது எங்கே இருக்கின்றது ?பிற உயிரிகளுக்கு மனம் உண்டா இல்லையா ? மனதிற்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ? பிறப்பிற்கு முன்பும் இறப்பிற்கும் பின்பும் மனதின் நிலை என்ன ?

இக்கேள்விகளை முன்னிறுத்துகின்றேன்.  விடை கிட்டுமா ?

உயிர் என்றால் என்ன ? அது எங்கே இருக்கின்றது ?  பசி என்றால் என்ன ? அது எங்கே இருக்கின்றது என எதிர்க்கேள்விகள் கேட்டு மடக்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. நான் எதிர்பார்ப்பது நிஜமாகவே நிஜமான விடை தேடும் ஆர்வத்துடன் வினா எழுப்புகின்றேன். குதர்க்கத்திற்கான வாதங்களுக்கல்ல. விஞ்ஞானப்பூர்வமாக அறிய விரும்புகின்றேன்.





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


செல்வன்

unread,
Jul 2, 2015, 11:31:48 PM7/2/15
to vallamai, Groups
மனம் மூளையில் உள்ளது.

மனதில் மூன்றுவகை உண்டு..காக்னிஷன் (சிந்தனை), ஆஃபெக்ட் (உணர்வு), கொனேஷன் (Intention)

இவற்றில் பல உட்பிரிவுகள் உண்டு...தாட், பெர்செப்ஷன், ஜட்ஜ்மெண்ட் என பட்டியல் நீளும்.

Rishi Raveendran

unread,
Jul 2, 2015, 11:44:43 PM7/2/15
to vall...@googlegroups.com, Groups
மனம் மூளையில் இல்லை. 

நீங்கள் குறிப்பிடுவது மூளையில் ஏற்படக்கூடிய எண்ணங்கள்.  மூளை எண்ணங்களை உற்பத்தி செய்கின்றது. மனமும் மூளையும் ஒன்றல்ல.

Conscious mind
Sub-Conscious mind
Universal Mind / Super Conscious Mind

Suba.T.

unread,
Jul 3, 2015, 3:47:34 AM7/3/15
to மின்தமிழ், Subashini Tremmel
ரிஷியின் எழுத்துக்களை இங்க்கு பார்த்து நெடு நாட்களாகி விட்டன.
நலம் தானே?

சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages