சமணர்கள் கழுவேற்றம்: வரலாறா, புனைவா?

221 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 8, 2017, 8:09:30 PM10/8/17
to மின்தமிழ்
சமணர்கள் கழுவேற்றம் ..... இது குறித்து பலமுறை மின்தமிழ் குழுமத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.  
மேலும் ஒன்றும் உதவக்கூடும். 

சமணர்கள் கழுவேற்றம்: வரலாறா, புனைவா?

06 May 2014

வரலாறு!

- வி.எம்.எஸ். சுபகுணராஜன், காட்சிப்பிழை இதழின் ஆசிரியர்,

கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியான ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ கட்டுரை யின் மையக் கருத்தாக்கம் கவனத்துக்குரியது.

கட்டுரையாளர் இரா.திருநாவுக்கரசு (பொருத்தமான பெயர்தான். சைவக் குரவர்களின் கைவரிசைதானே கழுவேற்றம்) போகிற போக்கில் மதுரையில் பல்லாயிரக் கணக்கான சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற ‘கற்பனையும் புனைவும் கலந்த மொழிபு (narrative)’ வரலாறாக முன்வைக்கப்படுகிறது என்று முழங்குகிறார். அவர் இறுதியாக நிறுவ முனைந்து எச்சரித்திருக்கும் ‘அயல்’ பார்வை வழியாகவே அவரது வாதமும் நிகழ்கிறது என்பதை அவர் அறியத் தவறியிருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதற்கான ‘அசைக்க முடியாத’ ஆதாரங்களைக் கோரும் அவர் எதனை ஆதாரமாகக் கொள்வார் என விளக்க வேண்டும்.

மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கொடுமைக்கான ஆதாரங்கள் மூன்று தரவுகளாக உள்ளன. முதல் தரவு, சுவரோவியங்களும் சிற்பங்களும். முதலில் சமணர்களைக் கழுவேற்றியதை அன்றைய ஆட்சியாளர்கள் வெற்றியாகவே கருதினர். அதனால்தான் அதுகுறித்த ஓவியங்களை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர் களில் தீட்டி வைத்துள்ளனர்.

அது தவிர்த்து, சுதைசிற்பங்களாகவும் ஆங் காங்கே காட்சிதருகின்றன. ஆர்வ முள்ள ஆய்வாளருக்கு அவை பாண்டி மண்டலம் முழுவதும் இருப்பது எளிதாகத் தென்படும். இன்றைய அரசியல் நியாயங்களுக்கு அது இழுக்காகும் என்பதெல்லாம் அன்றைய மனிதனின் அக்கறைகள் அல்ல.

இரண்டாவது தரவு, இலக்கியத் தரவு. கந்தர்சஷ்டி கவசங்களில் கொலைக்களத்துக்கு வெகு அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை கவசம் பாடிய தேவராயக் கவிராயர் ‘எண்ணாயிரம் சமணர்களை எதிர்கழுவேற்றி’ எனப் பாடுவார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் திருஞான சம்பந்தரின் கீர்த்தியாக இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.

அதில் மதமாற்றம், அதாவது சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டி யனின் கட்டளையை ஏற்காத எண்ணாயிரம் சமணர்கள் ஆனைமலை மற்றும் இதர மலைகளிலிருந்து இறங்கிக் கழுவேறினர் என்கிறது. ஞானியான சம்பந்தர் சைவ மடங்களின் நலனுக்காகவே இந்தக் கழுவேற்றத்தை நிறைவேற்றினார் என் கிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும் அதைப் பெருமிதமாகவே பேசுகின்றன.

இந்தப் பெருமை பேசாத எந்தச் சைவ உரையாவது உண்டென அவரால் காண்பிக்க இயலுமா? அவரது வரலாறு தொடர்பான ஆட்சேபம் எண்ணிக்கை தொடர்பானது எனத் தோன்று கிறது. வெறும் 700 பேர் அல்லது 70 பேர் கழுவேற்றப்பட்டார்கள் எனக் கூறினால் வரலாறு சரியாகி, குற்றமற்ற தன்மை யையும் புனிதமும் அடைந்துவிடும் போலும்.

மூன்றாவது தரவு, வெகு மக்களின் சடங்குகள் வழியாகக் கைமாற்றப்படும் நினைவு வரலாறு. இது நாட்டார் பாடலாகவும் திருவிழாவின் பகுதியான சடங்காகவும் நிகழும். இன்று வரை மதுரை மேற்கில் இருக்கும் மேலக்காலில் இருந்து கிழக்கில் இருக்கும் திருப்புவனம் வரை சிவன் கோயில் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கமாக, கழுவேற்றம் என்னும் சடங்கு தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ந்துவருகிறது.

அது நிகழும் இடம் திருப்புவனத்தில் ‘கழுவேற்றப் பொட்டல்’என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் மிச்சமாகப் பல்வேறு திருவிழாக்களின் பகுதியான சடங்காக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’நிகழ்த்தப்படுகிறது. இதற்குப் பின்னரும் கழுவேற்றம் ‘ஆதாரங் களற்ற புனைவு’ என வாதிட்டால், இந்தப் புராணங்கள் வழியாக ஊர்ஜிதமான ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் புனைவின் பிறப்புகள்தாமோ என்ற ஐயப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிடுமே, என்ன செய்வது.

தொடர்புக்கு: subagu...@gmail.com

________________________________________

அப்படிச் சொல்ல முடியாது!

- இரா. திருநாவுக்கரசு, தமிழ்க் கலாச்சாரம் - சமூக அரசியல் ஆய்வாளர்

கழுவேற்றம் பற்றி ஓவியங்கள், இலக்கியங் கள் மற்றும் சடங்குகளில் இன்றுவரை தொடரும் ‘அசைக்க முடியாத ஆதரங்கள்’பற்றி சுபகுணராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இவை ஆதாரங்களா அல்லது நடந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு சாராரின் ஆழ்மன ஆவலின் வெளிப்பாடா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமணர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கோபம் தெறிக்கும் சொற்கள் மிக முக்கியமான சைவ நாயன்மார்களின் பாடல்களில் இருக்கத்தான் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு, மத்திய காலத்தில் கொடூரமான சமயப் போர்கள், அழிவுகள், படுகொலைகள் நடைபெற்றதாகக் கருதுவதற்குப் போதிய முகாந்திரம் இல்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன காலத்தில், குறிப்பாக 1857-க்குப் பிறகு, சமண வரலாற்றை எழுதியவர்களில் அநேகமாக விதிவிலக்கில்லாமல் அனைவருமே சமண சமயத்தைச் சேராதவர்களே. தமிழ் மொழிப் பற்றாளர்கள், சைவ அபிமானிகள், திராவிட இயக்கச் சார் பாளர்கள் என்று பட்டியல் நீளும். இதன் விளைவுதான், சமணம் பற்றிய நமது பார்வை (பெளத்தத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்) போதாமையைக் கொண்டிருக்கிறது.

மயிலை சீனி. வேங்கடசாமி நாட்டாரின் ‘தமிழும் சமணமும்’ என்ற நூல் (1954) இன்னமும் நமக்கு மிக முக்கியமான ஆவணம். அதைத் தாண்டி, நாம் எவ்வளவு தூரம் ஆய்வு நோக்கில் முன்னகர்ந்திருக்கிறோம் என்று பார்ப்பது அவசியம். தமிழகத்தின் மத்திய கால வரலாற்றை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் பெர்ட்டன் ஸ்டெய்ன், டேவிட் லூடன், கரஷிமா, சுப்பராயலு, செம்பகலட்சுமி இன்னும் பலர், ஐரோப்பியர்கள் கட்டமைத்த இந்திய வரலாற்றை நாம் மீறிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே வந்துள்ளனர்.

சமய நிகழ்வுகளைச் செறிவோடு ஆவணப்படுத்தும் நெடிய பண்பாடுள்ள சமண மதத்தின் மடங்கள் கழுவேற்றம் செய்யப்பட்டுப் பலியிடப்பட்ட சமணர்கள்பற்றி இதுவரை அதிகார பூர்வமாக ஏதேனும் தகவலை வெளி யிட்டுள்ளதா என்று கேட்பதும் அவசியம். போரில் தோற்றால் வடக் கிருந்து உயிர் துறப்பதுபற்றி நமக்குச் சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன.

அதேபோல, விவாதத்தில் தோற்றாலும் தற்கொலை செய்துகொள்ளும் மரபும் நம்மிடம் இருந்திருக்கிறது. விவாதத்தில் தோற்றவர்கள் தற்கொலை செய்துகொள் ளும் விதம் பலவாறாகவும் இருந் திருக்கலாம்; கழுமரத்தில் அமர்ந் தும் உயிர்துறந்திருக்கலாம். மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்தது போல மத அடிப்படையில் இரு மதப் பிரிவினர் தங்களைக் கொடூரமாகப் பலியிட்டுக்கொண்டனர் என்று உறுதிசெய்வதற்குப் போதிய ஆதாரங்கள் வேண்டும். சமரசத்தை ஒரு தனித்துவமான மார்க்கமாக இங்குள்ள சமயங்கள் பெருமளவு பின்பற்றியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

ஓவியங்களை உறுதியான ஆதாரம் என்று அறுதியிட்டுச் சொல்ல வரலாற்று ஆய்வாளர்கள் தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், அதில் இருக்கும் மிதமிஞ்சிய கற்பனாவாதமே. நடந்ததைச் சித்தரிப்பதைவிட, தங்களின் ஆழ்மன ஆவலை, எதிர்பார்ப்பை ஓவியமாக்கும் சாத்தியமும் மிக அதிகமே. இதே பரவலான வரையறையை நாம் சடங்குகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இயற்பியல், வேதியியல் போல ஒரு வரலாற்று நிகழ்வுக்கு ஐயமின்றி நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை அறிவிப்பது எளிதன்று; எனினும், தொல்லியல், மொழியியல், மானுடவியல் மற்றும் உளவியல் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தொற்றுமைக்கு மட்டுமே வர முடியும். ஓர் இனத்தின் கலாச்சார வரலாறு அப்படி மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. இதில் விவாதம் நிச்சயம் இருக்க வேண்டும்; புதிய சான்றுகள் நமது பார்வையை விசாலமாக்கட்டும்.

தொடர்புக்கு: rthi...@gmail.com

தேமொழி

unread,
Oct 8, 2017, 11:56:05 PM10/8/17
to மின்தமிழ்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
பக்கம் 438  லிருந்து  - https://ta.wikisource.org/s/86dw

சமயப் போர் வேறு; சமயிகள் போர் வேறு இவ்வாறு பாடும் பொழுதுகூட இந்நிகழ்ச்சி சமயப்போரின் விளைவன்று என்பதைச் சேக்கிழார் வலியுறுத்திச் செல்கின்றார். சமயப்போர் வேறு சமயிகள் போர் என்பது வேறு. சமயப்போர் சமயத் தத்துவங்களின் உயர்வு தாழ்வுகளைப்பற்றிச் சொற் போரிடுவதாகும். புத்தபிரான் காலத்திலிருந்தே இது நடைபெற்று வந்துள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை. கற்ற அறிஞர்கள் ஒன்றுகூடித் தத்தம் கொள்கைளை எடுத்துரைப் பதும் எதிராளியினுடைய கொள்கைகளில் உள்ள குறைபாட்டை எடுத்துக்கூறி விவாதிப்பதும், அறிவுக்கு விருந்தாகுமே தவிர இதில் தீமை என்று ஒன்றும் இல்லை. புதிதாகத் தோன்றி வளர்ந்த பெளத்தம், சைனம் இரண்டும் அறிவு வாதத்தின் அடிப்படையில் இந்தச் சொற்போரை நம்பித் தத்தம் சமய அறிஞர்களைக் கொண்டு வாதப்போர் செய்தே தம் செல்வாக்கை வளர்த்துக் கொண்டன. இத்துடன் நில்லாமல் சமணம், பெளத்தம் என்ற இரண்டு சமயங்களும் பொது எதிரிகளாகிய சைவ, வைணவருடன் போரிட்டதல்லாமல் தமக்குள்ளும் போரிட்டுக் கொண்டன. நாவரசர் சைவம் விட்டுச் சமணஞ் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தருமசேனர் என்ற பட்டத்தை அவர் பெறுவதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி, அவர் பெளத்தர்களுடன் சொற்போரிட்டு அவர்களை வென்றதனாலேயேயாம். ஆனால் இந் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வந்த வைதிக சமயத்திலும் ஒரோ வழி இத்தகைய வாதங்கள் நடந்துள்ளன என்பதை ஆதி சங்கர பகவத்பாதருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடைபெற்ற வாதம் பற்றிய கதையின்மூலம் அறிய முடிகிறது. இத் தமிழகத்திலும் அத்தகைய அறிவுவாதப் போர்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந் திருக்கலாம். ஆனால் தேவார நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிய பிறகு எந்த அறிவு வாதப் போர்களும் நடந்ததாகத் தெரியவில்லை.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த சைவம், வைணவம் ஆகிய இரண்டும் பக்திமார்க்கத்தில் விளைந்தவையே தவிர அறிவு வழியில் செல்ல வில்லை. வாதம் என்பது அறிவு வழியில் செல்லும் இருவரிடையே நடைபெற வழி உண்டே தவிர்ப் பக்தி வழியில் வாதத்துக்கு இடமே இல்லை. ஆகவேதான் அறிவு வாதப் போர்கள் நடை பெற்றதாக கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. சங்கரர், இராமாநுஜர், மாத்வர் போன்ற அறிஞர்கள் பழைய நூல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குப் புதிய பொருள்களை ஏற்றிப் புதிய சமயப் பகுதி களை நிலைநாட்ட முயன்ற முயற்சிகள் அனைத்தும் அறிவு வாதத்தில் விளைந்தனவேயாகும். எனவே இவர்களைப் பின்பற்றியவர்களிடையே வாதப்போர் ஆங்காங்கே நடைபெற் றிருக்கலாம் என்றாலும் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. கடவுள் நம்பிக்கை, பக்தி வழி என்ற இரண்டும், சைவ வைணவர் கட்குப் பொதுவாகும். ஆனால் பெளத்தம், சமணம் என்ற இரண்டு சமயங்கட்கும் மேலே கூறிய இரண்டும் இல்லை. எனவே சைவம், வைணவம் என்ற இரண்டும், பெளத்த, சமணங்களுடன் போர் புரிவது இயல்பே என்று நாம் நினைக்கலாம். 

தேமொழி

unread,
Oct 9, 2017, 12:03:12 AM10/9/17
to மின்தமிழ்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

என்றாலும் இந்தப் போராட்டக்காரர்கள் அவ்வக் காலத்தில் ஆட்சியில் இருந்த அரசர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு, தம் சமயத்தில் சேர்த்துக் கொண்டு அந்த அரசருடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொண்டே மாற்றுச் சமயத்தாரை ஒடுக்க முயன்றனர் என்று நினைக்க வேண்டியுள்ளது. சிவஞானபோதம், சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் தோன்றிச் சைவ சமயத்துக்கு அறிவுவாத பூர்வமான ஓர் அடிப்படையைத் தருவதற்கு முன்னர் 7ஆம் நூற் ற்ாண்டு வாக்கில் அறிவுவாதத்தை மேற்கொண்டிருந்த பெளத் தர்களையும், சமணர்களையும் சைவர்கள் அறிவு வாதத்தில் வென்றிருக்க முடியுமா என்பது ஐயத்துக்கு இடமானதேயாகும். எனவே, சமண, பெளத்தவாதிகள் முன்வைத்த அறிவு வாதங்களை ஒரளவு அறிவுவாதங்களாலும் பேரளவு தம் பிற ஆற்றலாலுமே இவர்கள் எதிர்த்து வெற்றியுங் கொண்டனர் என்று நினைக்கத் தோன்றுகிறது. அறிவு வாதத்தில் தோற்றவர்களைக் கழுமரத்தில் ஏறச் செய்தல் என்பதும் சரியாகாது. ஒரு பேரரசின் முதல் அமைச்சராக இருந்து நீதி, சட்டம் என்பவற்றை நன்கறிந் திருந்த சேக்கிழாருக்கு இதில் உள்ள இக்கட்டான நிலைமை தெரியாமல் போயிராது. எனவே வாதப் போர் என்பதை மாற்றி அவரவர்களுடைய தவவலிமை, இறைபக்தி, அற்புதம் விளைக்கும் ஆற்றல் என்பவற்றில் வாதம் நிகழ்ந்தது என்று பாடிச் செல்கிறார். போட்டி இடும்பொழுது ஒருவருக்கொருவர் ஒட்டம் (பந்தயம்) வைத்துக் கொள்வது இயல்பு. அந்த முறையில் அனல் வாதம் புனல்வாதம் என்ற இரண்டும் செய்ய வேண்டும் என்று பேசிய சமணர், "தங்கள் வாய் சோர்ந்து தாமே 'தனிவாதில் அழிந்தோமாகில் வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே" என்று சொன்னார் இவ்வாறு தாங்களே இப்படி ஒரு பந்தயம் வைத்துக்கொண்டனர் என்று சேக்கிழார் பாடுகிறார். 

இனி இரண்டு வாதங்களிலும் தோற்றுவிட்ட சமணர் பந்தயப்படிக் கழுவேற வேண்டியவர் களாகின்றனர். ஆனால் இந்த வாதங்களில் ஒருவர் தோற்று விட்டால் எவ்வளவுதான் அவர்களே கட்டிய பந்தயமாயினும் அதற்காக அவர்கள் பலரையும் கழுவேற்ற வேண்டுமா? என்ற வினா பலருடைய மனத்தில் தோன்றத்தானே செய்யும். மேலும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்ச்சி எதுவும் எப்பொழுதும் நிகழந்ததாகச் சான்று இல்லையே. இந்த இரண்டு ஐயங்களும் சேக்கிழார் மனத்திலும் தோன்றித்தான் இருத்தல் வேண்டும். எனவே கழுவேற்றும் நிலை வந்தவுடன் எதற்காகக் கழுவேற்றம் என்பதைக் கவிஞர் விளக்குகிறார். தலைமை அமைச்சராக இருந்தமையின் சட்ட நுணுக்கம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அன்றும், இன்றும் கொலைத் தண்டனை பெறும் பல்வேறு குற்றங்களுள் பிறர் வாழும் இடத்தில் தீ வைத்தல் (Arson) ஒரு முக்கியமான குற்றமாகும். இதனைச் செய்தவர் கள் எத்துணைப் பேராயினும் அவர்கள் கொலைத் தண்டனைக்கு உரியவர்களேயாவர். 

எனவே இத்தண்டனை அவர்கட்கு வழங்கப்பட்டதற்குத் தலையாய காரணம் அவர்கள் திருஞான சம்பந்தர் அடிய்வர் களுடன் தங்கியிருந்த மடத்திற்குத் தீமூட்டிய குற்றத்திற்கே யாகும் என்றும் அடுத்தபடியாக அவர்கள் பந்தயத்தில் தோற்ற தும் இரண்டாவது காரணமாகும் என்றும் பாடுகிறார்.

தேமொழி

unread,
Oct 9, 2017, 12:11:36 AM10/9/17
to மின்தமிழ்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

..................................................................
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச்சமணர் தாங்கள் 
முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச் செய்தார் 
கொன்னுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற, 

புகலியில் வந்த ஞானபுங்கவர் அதனைக் கேட்டும் 
இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு 
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே 
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்த வேளை, 
.................................................................
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடி இட்ட 
எண் பெருங் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் :

என்ற இப்பாடல்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. 

இத்தகைய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. என்றாலும் கருநாடகத்தில் உள்ள அபலூர்க் கோயில் கல்வெட்டுக்களும் சிற்பங்களும் இத்தகைய நிகழ்ச்சிகள் அங்குச் சகஜமாக நடைபெற்றன என்பதை விளக்குதலின் சேக்கிழார் துணிந்து அவற்றைத் தமிழ் நாட்டில் நடை பெற்றதாக ஏற்றிப் பாடுகிறார். அப்படிப் பாடும் அதே நேரத்தில் தம் நாட்டு மன்னனையும், தாம் பாட வந்த பெரியாரையும் இக்குற்றம் சாராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் இருந்ததாக அறிய முடிகிறது. 

அரசனைப் பொறுத்த வரை நீதியை நிலைநாட்ட முற்படும்பொழுது விருப்பு, வெறுப்பு, பச்சாதாபம் என்பவற்றிற்கு அங்கு இடம் இல்லை. அவனுடைய நாட்டில் அவன் தலைநகளில் பிறர் வாழிடத்தில் தீயிடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டிய கடமை அவனுடையதாகிறது. இது போதாமல் அவர்கள் பந்தயமும் கட்டி அதிலும் தோற்றுள்ளனர். எனவே இரண்டு காரணங்களினாலும் அவன் கொடுத்த தண்டனை அதிகம் என்று கூறமுடியாது என்பது காப்பியப் புலவர் வாதமாகும். எனவேதான் 'மிகையிலா வேந்தன் செய்கை' என்று பாடிச் செல்கிறார். 

இனிப் பிள்ளையாரைப் பொறுத்தமட்டில் அவராவது கருணை காட்டி இருக்க வேண்டுமே என்ற வாதத்துக்கு விடை கூறுவார் போலக் கவிஞர்,

"புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக்கேட்டும்
.......................................................
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே 
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்த வேலை " 

என்று பாடிச் செல்கிறார். ஞானபுங்கவர் என்று பிள்ளையாரை விளிப்பது கருத்துடை அடைமொழியாகும். ஞானம் நிறைந்த முனிவராக உள்ள ஒருவர் விருப்பு வெறுப்புக்கனைக் கடந்தவராகலின் அரசன் நீதி செலுத்துவதில் தலையிடவில்லை என்ற கருத்தைப் பெற வைக்கின்றார். அடுத்து ‘இகல் இலர்' என்ற சொல்லால் அவருடைய மனத்தில் மாச்சர்யம் (Malice) கடுகளவும் இல்லை என்பதையும் பெற வைக்கின்றார். ஒருவர் தம்முடைய செல்வாக்கின் காரணமாக அரச நீதியில் தலையிடுவதை இன்று கண்கூடாகக் காணும் நமக்குச் சேக்கிழார் வாதத்தைப் புரிந்துகொள்வது கடினந்தான். மேலும் பிள்ளையார் இது பற்றிச் சிந்தித்தார். அவர்கள் செய்த குற்றம் அறிந்தே செய்த குற்ற மாகும். அறிந்தே செய்த, தீயிட்ட குற்றத்துக்கு அரசன் வழங்கிய நீதி மிகையில்லை என்று கருதினார் என்றுங் கூறுகிறார். 

தேமொழி

unread,
Oct 9, 2017, 12:19:40 AM10/9/17
to மின்தமிழ்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க வேறு எவ்வகையான ஆதாரமும் இல்லாத இந் நிகழ்ச்சியைச் சேக்கிழார் ஒரு வரலாற்றுக் காப்பியத்தில், பாடவேண்டிய இன்றியமையாமை யாது? என்ற வினாவுக்கு வேறு வகையிலே விடை இறுத்தல் கடினம். இரண்டாம் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு கூறுவதை யும், வைகுந்தப் பெருமாள் கோவிலில் துறவிகளைக் கழுவேற்றும் சிற்பம் காணப்படுவதையும் கொண்டு அந் நாளில் இக் கொடுமைகள் தமிழகத்திலும் நிகழ்ந்ததுண்டு என இராசமாணிக் கனார் கூறுகிறார்'. இந்த நிகழ்ச்சி முழுவதும் கற்பனையாகக் கூட இருக்கலாம்; செவிவழிச் செய்தியாக நாட்டில் வழங்கி வந்திருக்கலாம். இவை அனைத்திலும் ஆதாரமுள்ளது ஒரே ஒரு சய்திதான். சமணர்கள் அடியார்கள் வாழும் மடத்தில் தீ வைத்தனர் என்பதற்கு அகச் சான்றாகப் பிள்ளையார் பாடலே. உள்ளது. 

'செய்யனே! திரு ஆலவாய் மேவிய 
ஐயனே! அஞ்சல் என்று அருள்செய் எனைப் 
பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் 
பையவே சென்று பாண்டியற்காகவே '’ 

என்ற இந்த ஒரு குறிப்புத் தவிர அனல்வாதம், புனல்வாதம். கழுவேற்றம் என்பவற்றிற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. இவற்றைப்பற்றிச் சேக்கிழார் பாட உதவிய மூலங்கள் நம்பி யாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் 33, 60 ஆகிய இரு பாடல்களில் வரும் குறிப்புக்களுடன், செவிவழிச் செய்திகள், கருநாடகத்திலுள்ள அபலூர்க் கோவில் புடைச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்பவையேயாகும். நம்பியுங்கூடத் திருஞானசம்பந்தரைப் பற்றிய 33ஆவது பாடலில் ‘சமணர் வலி தொலைய' என்று மட்டுமே பாடியுள்ளார். நின்ற சீர் நெடுமாற நாயனார் பற்றிய 60 ஆவது பாடலில் தான், 

'ஆர்த்த சமணர் அழிந்தது கண்டு மற்றாங் கவரைக் 
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும் 
வார்த்தை அதுபண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே 

என்று குறிப்பிடுகிறார். நம்பியும் இக்கருத்தைச் செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். துதி வைத்த பஞ்சவன் என்றுரைக்கும் வார்த்தை அதுபண்டு என்ற சொற்களால் இது நீண்ட காலமாக உள்ள செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். 

தேமொழி

unread,
Oct 9, 2017, 12:26:34 AM10/9/17
to மின்தமிழ்
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

செவிவழிச் செய்தியாயினும் நம்பிகள் இதனை முழுவதும் ஏற்றுக் கொண்டு ஆங்காங்கே குறித்துச் செல்கிறார். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில்,

'வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான் கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன்........... 

என்றும், 

மண்ணில் திகழ்சண்பைநாதனை, வாதினில் வல்அமனை பண்ணைக் கழுவின் துதிவைத்துஎம் பந்தவினை அறுக்கும் 
கண்ணை, கதியை, தமிழ் ஆகரனை...... ' 

என்றும் பாடுவது நோக்கற்குரியது. மேலும், 

'உறியொடு பீலி ஒருகையிற் கொளும் 
பறிதலைச் சமனைப் பல்கழுமிசையே நீத்தது “ 

என்றும் பாடுகிறார். இதனை அடுத்து அவர் பாடிய 'ஆளுடைய பிள்ளையார் திருவுலா என்ற நூலிலும் கழுவேற்றிய கதையை, 

'கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் 
வாதில் அமணர் வலி தொலையக் காதலால் 
புண்கெழுவு செம்புனல் ஆறுஒடப் பொருதவரை 
வண்கழுவில் தைத்த மறையோனை.....'" 

என்று பாடுவதுடன் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்ற நூலிலும் இக்கருத்தை,

 'அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த 
அமனான வன்குண்டர் கழுவேற முன்கண்ட 
செறிபாடல் வண்சண்பை நக்ராளி.......

என்றும், ஆளுடை பிள்ளையார் திருத்தொகை என்ற பகுதியில், 

‘பாழி அமனைக் கழுவேற்றினான்.......

என்றுங் கூறுவதால் நம்பியாண்டார் நம்பியைப் பொறுத்த மட்டில் இந்தச் செவிவழிச் செய்திக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதை அறியமுடிகிறது. 

ஆனால் அவர் கூற்றுக்களைக் கவனிக்கும்பொழுது சமணர் கழுவேறினர், சமணர் கழுவேற்றப் பட்டனர்; சம்பந்தரிடம் தோற்று ஏறினர்; சம்பந்தர் அவர்களை ஏற்றினார் என்ற முறையில் அமைந்துள்ளதைக் காணலாம். 

ஏறினர்; ஏற்றினார் என்ற இரண்டும் மலைபோன்று வேறு பாடுடைய சொற்கள். ஏறினர் என்றால் அவர்களாகவே ஏறினர் என்று பொருள் தரும். ஏற்றினர் என்றால் மன்னன் ஏற்றினான் என்று பொருள் தரும். இந்தப் பெரிய வேறுபாட்டை நம்பிகள் அறிந்ததாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு காணமால் ஒன்றாகவே பாவித்துப் பாடுகிறார்.  இவருடைய பாடல்களை மட்டும் தமக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட சேக்கிழார் இந்த வேறுபாட்டை நன்கறிந்து 'ஏறினார்கள் என்றே பாடிச் செல்கிறார். 

பிள்ளையார் தங்கியிருந்த மடத்தில் சமயப் பகை காரணமாகச் சமணர் தீயிட்டனர் என்ற ஒரு செய்தியைத் தவிர வேறு எதற்கும் ஆதாரம் இல்லாத செய்திகளைக் கவிஞர் அற்றை நாளில் சைவருக்கும் சமணருக்கும் இடையில் கருநாடகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தம் காப்பியத்தில் பாடினார் என்ற முடிவுக்கு வருவது தவிர வேறு வழியே இல்லை. சேக்கிழார் தாம் புராணம் இயற்ற அந்நாளில் கிடைத்த மூலங்களையும் அவர் அவற்றை எங்ஙனம்  ஆய்ந்து எடுத்துப் பயன்படுத்தினார் என்பதையும் ஒருவாறு காண முடிகிறது.

கழுவேற்றம் ஆய்வு குறித்த இப்பகுதி நிறைவுற்றது 

Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 2:37:08 AM10/9/17
to மின்தமிழ்
2012 எழுதியது:

============================

Banukumar Rajendran 
<banuk...@gmail.com>
Fri, Jun 15, 2012 at 2:50 PM
To: mint...@googlegroups.com
திரு.கே.என்.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய ”தென்னிந்திய வரலாறு” என்னும் பொத்தகத்தில் இருந்து,

“..இதுதான் தருமசேனர் என்ற அப்பர் என்ற திருநாவுகரசரின் வரலாறு. இந்த வாழ்க்கை வரலாற்றில்
எவ்வளவு உண்மையிருக்கின்றதோ தெரியாது.” 

என்ற அவரின் சந்தேகத்தையும்,

”...சேக்கிழார் கூறும் கதையில் மகேந்திரவர்மனின் பெயரே இடம்பெறவில்லை.”

என்ற அவரின் கருத்தையும் கவனித்தால், பிற்காலத்தில் யாரோ இடைச்செருகல் செய்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். எவ்வாறெனின்,

1. அப்பர் காலம் - கி.பி. 6 - 7 ஆம் நூற்றாண்டு.
2. ஆனால், அவர் எழுதிய தேவாரப் பாடல்கள் வெளிப்பட்டது 10 -11 ஆம் நூற்றாண்டு. (நம்பியாண்டார் நம்பி)
3. கழுவேற்றக் குறிப்புகள் கொண்ட பெரிய புராணத்தின் காலம் 13 - 14 ஆம் நூற்றாண்டு.

இடைப்பட்ட காலத்தில் கழுவேற்றத்திற்கான இலக்கிய ஆதாரங்களோ (Internal Evidences) மற்றும்
கல்வெட்டு ஆதாரங்களோ (External Evidences) கிடைக்கவில்லை.

================================

இரா.பானுகுமார்,
சென்னை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 3:50:55 AM10/9/17
to மின்தமிழ்
2017-10-09 9:26 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
பக்கம் 438  லிருந்து  - https://ta.wikisource.org/s/86dw

சமயப் போர் வேறு; சமயிகள் போர் வேறு இவ்வாறு பாடும் பொழுதுகூட இந்நிகழ்ச்சி சமயப்போரின் விளைவன்று என்பதைச் சேக்கிழார் வலியுறுத்திச் செல்கின்றார். சமயப்போர் வேறு சமயிகள் போர் என்பது வேறு. சமயப்போர் சமயத் தத்துவங்களின் உயர்வு தாழ்வுகளைப்பற்றிச் சொற் போரிடுவதாகும். புத்தபிரான் காலத்திலிருந்தே இது நடைபெற்று வந்துள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை. கற்ற அறிஞர்கள் ஒன்றுகூடித் தத்தம் கொள்கைளை எடுத்துரைப் பதும் எதிராளியினுடைய கொள்கைகளில் உள்ள குறைபாட்டை எடுத்துக்கூறி விவாதிப்பதும், அறிவுக்கு விருந்தாகுமே தவிர இதில் தீமை என்று ஒன்றும் இல்லை. புதிதாகத் தோன்றி வளர்ந்த பெளத்தம், சைனம் இரண்டும் அறிவு வாதத்தின் அடிப்படையில் இந்தச் சொற்போரை நம்பித் தத்தம் சமய அறிஞர்களைக் கொண்டு வாதப்போர் செய்தே தம் செல்வாக்கை வளர்த்துக் கொண்டன. இத்துடன் நில்லாமல் சமணம், பெளத்தம் என்ற இரண்டு சமயங்களும் பொது எதிரிகளாகிய சைவ, வைணவருடன் போரிட்டதல்லாமல் தமக்குள்ளும் போரிட்டுக் கொண்டன. நாவரசர் சைவம் விட்டுச் சமணஞ் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தருமசேனர் என்ற பட்டத்தை அவர் பெறுவதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி, அவர் பெளத்தர்களுடன் சொற்போரிட்டு அவர்களை வென்றதனாலேயேயாம். ஆனால் இந் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வந்த வைதிக சமயத்திலும் ஒரோ வழி இத்தகைய வாதங்கள் நடந்துள்ளன என்பதை ஆதி சங்கர பகவத்பாதருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடைபெற்ற வாதம் பற்றிய கதையின்மூலம் அறிய முடிகிறது. இத் தமிழகத்திலும் அத்தகைய அறிவுவாதப் போர்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந் திருக்கலாம். ஆனால் தேவார நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிய பிறகு எந்த அறிவு வாதப் போர்களும் நடந்ததாகத் தெரியவில்லை.

இது மிக முக்கியமான கருத்து. சிரமண மதங்களுக்குள், (சமண, புத்த வாதங்களை) நடந்த வாதங்களை
கேசி இலக்கியங்கள் ஆவணப்படுத்துகின்றன. அவைகள் தங்கள் மெய்யியல் வாதங்களை முன்வைத்தே
தங்கள் வாதங்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கின்றன. 

வாதில் தோற்றவர்கள் அதிகபட்சமாக ஊரை விட்டு போகவேண்டும் என்றுதான் நிபந்தனையாக
இருந்தன. உதாரணமாக. அகளங்க தேவர் என்னும் சமண பெரியார் புத்தவாதிகளை வாதில் வென்று, அவர்களை இலங்கைக்கு அனுப்பினார். 

ஆனால், இங்கு சொல்லப்படும் சைவ-சமண வாதம் அறிவிற்கு பொருந்துவனவாகவில்லை. இங்கு வெறும் 
வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் வாதங்கள் புரிந்ததாக சொல்லப்படுகின்றன. அறிவின் அடிப்படையில்
அமைந்ததாக கூறப்படவில்லை. ஏனெனில், அக்காலத்தில், சைவத்திற்கென்று மெய்யியல் தோன்றாக்காலம்.

அனல், புனல் வாதங்களில் சொல்லப்படும் தண்ணீரை எதிர்த்து ஏடு செல்லுதல், தீயில் ஏடு எரியாமல் இருத்தல் போன்ற நிபந்தனைகளை, சமணர்கள் என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அன்றும், என்றும் நடக்க
வாய்ப்பேயில்லை. அன்று நடந்தால், இன்றும் நடக்கவேண்டும்! (நடத்திக் காட்ட யாரும் தயாரா? ;-))

சைவத்தின் வரலாறு என்பது வெங்காயம் போன்றது. உரிக்க, உரிக்க கடையில் ஒன்றுமே இருக்காது. (கவனியுங்கள், ”சைவத்தின் வரலாறு” என்று சொன்னேன், சைவம் என்று சொல்லவில்லை. வாதத்திற்காக இங்கு சொல்லப்படுகிறது, நிந்தனை என்று நினைக்கவேண்டா, சைவர்கள் மன்னியுங்கள்)

இரா.பானுகுமார்

நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த சைவம், வைணவம் ஆகிய இரண்டும் பக்திமார்க்கத்தில் விளைந்தவையே தவிர அறிவு வழியில் செல்ல வில்லை. வாதம் என்பது அறிவு வழியில் செல்லும் இருவரிடையே நடைபெற வழி உண்டே தவிர்ப் பக்தி வழியில் வாதத்துக்கு இடமே இல்லை. ஆகவேதான் அறிவு வாதப் போர்கள் நடை பெற்றதாக கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. சங்கரர், இராமாநுஜர், மாத்வர் போன்ற அறிஞர்கள் பழைய நூல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குப் புதிய பொருள்களை ஏற்றிப் புதிய சமயப் பகுதி களை நிலைநாட்ட முயன்ற முயற்சிகள் அனைத்தும் அறிவு வாதத்தில் விளைந்தனவேயாகும். எனவே இவர்களைப் பின்பற்றியவர்களிடையே வாதப்போர் ஆங்காங்கே நடைபெற் றிருக்கலாம் என்றாலும் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. கடவுள் நம்பிக்கை, பக்தி வழி என்ற இரண்டும், சைவ வைணவர் கட்குப் பொதுவாகும். ஆனால் பெளத்தம், சமணம் என்ற இரண்டு சமயங்கட்கும் மேலே கூறிய இரண்டும் இல்லை. எனவே சைவம், வைணவம் என்ற இரண்டும், பெளத்த, சமணங்களுடன் போர் புரிவது இயல்பே என்று நாம் நினைக்கலாம். 

--

Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 4:02:36 AM10/9/17
to மின்தமிழ்
2017-10-09 9:26 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
பக்கம் 438  லிருந்து  - https://ta.wikisource.org/s/86dw

சமயப் போர் வேறு; சமயிகள் போர் வேறு இவ்வாறு பாடும் பொழுதுகூட இந்நிகழ்ச்சி சமயப்போரின் விளைவன்று என்பதைச் சேக்கிழார் வலியுறுத்திச் செல்கின்றார். சமயப்போர் வேறு சமயிகள் போர் என்பது வேறு. சமயப்போர் சமயத் தத்துவங்களின் உயர்வு தாழ்வுகளைப்பற்றிச் சொற் போரிடுவதாகும். புத்தபிரான் காலத்திலிருந்தே இது நடைபெற்று வந்துள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை. கற்ற அறிஞர்கள் ஒன்றுகூடித் தத்தம் கொள்கைளை எடுத்துரைப் பதும் எதிராளியினுடைய கொள்கைகளில் உள்ள குறைபாட்டை எடுத்துக்கூறி விவாதிப்பதும், அறிவுக்கு விருந்தாகுமே தவிர இதில் தீமை என்று ஒன்றும் இல்லை. புதிதாகத் தோன்றி வளர்ந்த பெளத்தம், சைனம் இரண்டும் அறிவு வாதத்தின் அடிப்படையில் இந்தச் சொற்போரை நம்பித் தத்தம் சமய அறிஞர்களைக் கொண்டு வாதப்போர் செய்தே தம் செல்வாக்கை வளர்த்துக் கொண்டன. இத்துடன் நில்லாமல் சமணம், பெளத்தம் என்ற இரண்டு சமயங்களும் பொது எதிரிகளாகிய சைவ, வைணவருடன் போரிட்டதல்லாமல் தமக்குள்ளும் போரிட்டுக் கொண்டன. நாவரசர் சைவம் விட்டுச் சமணஞ் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தருமசேனர் என்ற பட்டத்தை அவர் பெறுவதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்ச்சி, அவர் பெளத்தர்களுடன் சொற்போரிட்டு அவர்களை வென்றதனாலேயேயாம். ஆனால் இந் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வந்த வைதிக சமயத்திலும் ஒரோ வழி இத்தகைய வாதங்கள் நடந்துள்ளன என்பதை ஆதி சங்கர பகவத்பாதருக்கும், மண்டனமிஸ்ரருக்கும் நடைபெற்ற வாதம் பற்றிய கதையின்மூலம் அறிய முடிகிறது. இத் தமிழகத்திலும் அத்தகைய அறிவுவாதப் போர்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந் திருக்கலாம். ஆனால் தேவார நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிய பிறகு எந்த அறிவு வாதப் போர்களும் நடந்ததாகத் தெரியவில்லை.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த சைவம், வைணவம் ஆகிய இரண்டும் பக்திமார்க்கத்தில் விளைந்தவையே தவிர அறிவு வழியில் செல்ல வில்லை. வாதம் என்பது அறிவு வழியில் செல்லும் இருவரிடையே நடைபெற வழி உண்டே தவிர்ப் பக்தி வழியில் வாதத்துக்கு இடமே இல்லை. ஆகவேதான் அறிவு வாதப் போர்கள் நடை பெற்றதாக கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆதாரம் எதுவும் காணப்படவில்லை.

இதுவும் ஆய்வில் நிறுத்திக்கொள்ளக்கூடியக் கருத்து!

தேவாரத்தில் அனல், புனல் வாதங்கள்ப்பற்றிக் கூறப்படவில்லை எனும்போது சுமார் ஐந்து, ஆறு நூற்றாண்டுகள் கழித்து எந்தவித உட்புறத்தரவுகளும் இன்றி பெரிய புராணம் போன்ற நூற்களில் (கிட்டயிருந்து பார்த்ததுபோல) விவரிப்பது எவ்வாறு?

இங்கு முக்கியமான ஒரு கருத்தை முன் வைக்கிறேன்.

தேவார ஏடுகளை, கி.பி.10ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி அவர்கள் வெளிக் கொணர்ந்ததாக சைவ
வரலாறு பேசுகிறது. அஃதாவது, 10ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஏடுகளைக் கொண்டு படியெடுக்க ஆரம்பித்த காலம். அவ்வாறாயின், பழம் தமிழ் நூற்களுக்கு உரை எழுந்த காலமும் அந்நூற்றாண்டே. ஆயின், பழம்
தமிழ் நூற்களுக்கு உரையெழுதியவர்கள் தேவாரப்பாடல்களை ஏன் மேற்கோள் பாடல்களாக கூறவில்லை. ஏன் குறளையே எடுத்துக்கொள்ளுங்கள். பரிமேலழகர் தன் உரைக்கு சமண காப்பியமான சீவக சிந்தாமணியிலிருந்து நிறைய பாடல்களை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், தேவாரப்பாடல்களை எங்கும்
தன் உரைக்கு மேற்கோள் காட்டவில்லை, ஏன்?

தேவார பாடல்கள், முன் தேதியிட்ட பின் எழுதி வைத்துக்கொண்ட ஆவணம் என்ற ஐயம் எழத்தான்
செய்கிறது.

இரா.பானுகுமார்

சங்கரர், இராமாநுஜர், மாத்வர் போன்ற அறிஞர்கள் பழைய நூல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குப் புதிய பொருள்களை ஏற்றிப் புதிய சமயப் பகுதி களை நிலைநாட்ட முயன்ற முயற்சிகள் அனைத்தும் அறிவு வாதத்தில் விளைந்தனவேயாகும். எனவே இவர்களைப் பின்பற்றியவர்களிடையே வாதப்போர் ஆங்காங்கே நடைபெற் றிருக்கலாம் என்றாலும் இது பெரிய அளவில் நடைபெறவில்லை. கடவுள் நம்பிக்கை, பக்தி வழி என்ற இரண்டும், சைவ வைணவர் கட்குப் பொதுவாகும். ஆனால் பெளத்தம், சமணம் என்ற இரண்டு சமயங்கட்கும் மேலே கூறிய இரண்டும் இல்லை. எனவே சைவம், வைணவம் என்ற இரண்டும், பெளத்த, சமணங்களுடன் போர் புரிவது இயல்பே என்று நாம் நினைக்கலாம். 

--

Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 4:06:15 AM10/9/17
to மின்தமிழ்
2017-10-09 9:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரிய புராணம் ஓர் ஆய்வு-2
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க வேறு எவ்வகையான ஆதாரமும் இல்லாத இந் நிகழ்ச்சியைச் சேக்கிழார் ஒரு வரலாற்றுக் காப்பியத்தில், பாடவேண்டிய இன்றியமையாமை யாது? என்ற வினாவுக்கு வேறு வகையிலே விடை இறுத்தல் கடினம்.

விடையிருக்கிறது. அப்பாவி பொதுமக்களை இறைவன் செயல் என்று புனைந்துக்கட்டி அவர்களை திசைத்திருப்ப எழுதி வைத்துக்கொண்டது என்பதுதான் அதற்கு விடை.

இந்த அழகில், சீவக சிந்தாமணியைப் புரட்டு நூல் என்று அபவாதம் வேறு! :-)))

இரா.பானுகுமார்

இரண்டாம் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு கூறுவதை யும், வைகுந்தப் பெருமாள் கோவிலில் துறவிகளைக் கழுவேற்றும் சிற்பம் காணப்படுவதையும் கொண்டு அந் நாளில் இக் கொடுமைகள் தமிழகத்திலும் நிகழ்ந்ததுண்டு என இராசமாணிக் கனார் கூறுகிறார்'. இந்த நிகழ்ச்சி முழுவதும் கற்பனையாகக் கூட இருக்கலாம்; செவிவழிச் செய்தியாக நாட்டில் வழங்கி வந்திருக்கலாம். இவை அனைத்திலும் ஆதாரமுள்ளது ஒரே ஒரு சய்திதான். சமணர்கள் அடியார்கள் வாழும் மடத்தில் தீ வைத்தனர் என்பதற்கு அகச் சான்றாகப் பிள்ளையார் பாடலே. உள்ளது. 

'செய்யனே! திரு ஆலவாய் மேவிய 
ஐயனே! அஞ்சல் என்று அருள்செய் எனைப் 
பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் 
பையவே சென்று பாண்டியற்காகவே '’ 

என்ற இந்த ஒரு குறிப்புத் தவிர அனல்வாதம், புனல்வாதம். கழுவேற்றம் என்பவற்றிற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. இவற்றைப்பற்றிச் சேக்கிழார் பாட உதவிய மூலங்கள் நம்பி யாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் 33, 60 ஆகிய இரு பாடல்களில் வரும் குறிப்புக்களுடன், செவிவழிச் செய்திகள், கருநாடகத்திலுள்ள அபலூர்க் கோவில் புடைச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்பவையேயாகும். நம்பியுங்கூடத் திருஞானசம்பந்தரைப் பற்றிய 33ஆவது பாடலில் ‘சமணர் வலி தொலைய' என்று மட்டுமே பாடியுள்ளார். நின்ற சீர் நெடுமாற நாயனார் பற்றிய 60 ஆவது பாடலில் தான், 

'ஆர்த்த சமணர் அழிந்தது கண்டு மற்றாங் கவரைக் 
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும் 
வார்த்தை அதுபண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே 

என்று குறிப்பிடுகிறார். நம்பியும் இக்கருத்தைச் செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். துதி வைத்த பஞ்சவன் என்றுரைக்கும் வார்த்தை அதுபண்டு என்ற சொற்களால் இது நீண்ட காலமாக உள்ள செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். 

Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 4:09:45 AM10/9/17
to மின்தமிழ்
பார்த்தீர்களா, யான் இவ்வளவு காலமாக சொல்லிவந்தது உண்மை என்று அவர்களாகவே நிருபித்துக்
கொண்டு வருகிறார்கள்.

“ஏற்றினார்” என்பது ஏறினர் என்றாகிறது. காலத்தின் கொடுமைடா பதி! :-)

இரா.பானுகுமார்

பிள்ளையார் தங்கியிருந்த மடத்தில் சமயப் பகை காரணமாகச் சமணர் தீயிட்டனர் என்ற ஒரு செய்தியைத் தவிர வேறு எதற்கும் ஆதாரம் இல்லாத செய்திகளைக் கவிஞர் அற்றை நாளில் சைவருக்கும் சமணருக்கும் இடையில் கருநாடகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தம் காப்பியத்தில் பாடினார் என்ற முடிவுக்கு வருவது தவிர வேறு வழியே இல்லை. சேக்கிழார் தாம் புராணம் இயற்ற அந்நாளில் கிடைத்த மூலங்களையும் அவர் அவற்றை எங்ஙனம்  ஆய்ந்து எடுத்துப் பயன்படுத்தினார் என்பதையும் ஒருவாறு காண முடிகிறது.

கழுவேற்றம் ஆய்வு குறித்த இப்பகுதி நிறைவுற்றது 

--
Reply all
Reply to author
Forward
0 new messages