Fwd: எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்? - தினமணி

41 views
Skip to first unread message

coral shree

unread,
Apr 22, 2015, 7:47:42 AM4/22/15
to vallamai, மின்தமிழ்

---------- Forwarded message ----------
From: vallamai editor <vallama...@gmail.com>
Date: 2015-04-22 7:47 GMT-04:00
Subject: Fwd: எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்? - தினமணி
To: coral shree <cor...@gmail.com>

---------- Forwarded message ----------
From: Venugopalan SV <sv....@gmail.com>
Date: 2015-04-13 6:31 GMT-04:00
Subject: எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்? - தினமணி
To:

எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்?

By எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை.

First Published : 13 April 2015 02:59 AM IST

தமது தாய்க்குக் கொள்ளி போட்ட குற்றத்துக்காக ஒரு பெண்மணி கொல்லப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலம், மோதா ஊராட்சித் தலைவர் கீதா பிரஹலாத்தை அவரது சொந்த சகோதரர் தேஜ்ராம் வர்மா வெட்டிக் கொன்றுவிட்டார். இந்தப் பழி தீர்க்கும் தீச்செயலுக்குத் தந்தையுடன் துணை போயிருக்கிறார் அவரது மகன் பியூஷ். வம்சாவழியாக ஆணாதிக்க உரிமையை விட்டுத் தர முடியாதென்பதை என்ன விலை கொடுத்தும் நிரூபிக்கும் வெறித்தனம் இது.

தாய் சுர்ஜுபாய் தனது இறுதிக் காலத்தில் தன்னிடம் தெரிவித்த ஆசையை மட்டுமே கீதா நிறைவேற்றி இருக்கிறார். மகன்களிடம் அத்தனை வெறுத்துப் போனதால், பெற்ற மகளிடம் அப்படி ஒரு கோரிக்கையை அந்த பரிதாபத்துக்குரிய தாய் சுர்ஜுபாய் வைத்திருந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்?

தங்களுக்குப் பிடித்தமற்ற செயலை யார் செய்தாலும் அவர்களைக் கொன்றே தீருவது என்ற சம கால உணர்ச்சிகளின் தீப்பிழம்பு நடுங்க வைக்கிறது. பேச்சு வார்த்தையோ, விவாதங்களோ, ஒருவருக்கொருவர் உள்ளம் திறந்து பேசி, விட்டுக் கொடுத்துப் போவதென்பதோ கிடையாது. வெட்டிச் சண்டைக்கெல்லாம் வெட்டுக் குத்துதான் தீர்வு. இள வயதுக்காரர்களிடம் கூட, ஏன், சிறுவர்களிடம்கூட இத்தகைய பகைமை உணர்ச்சி, பொறுமை இன்மை, சகிப்புத் தன்மை அற்ற வெறுப்புணர்வு, வெறி மேலிட்டு வருவது ஆரோக்கிய சமூகத்துக்கு அழகன்று.

சாதிய, மத விஷயங்களில் மட்டுமல்ல, பாலின பாகுபாட்டு விஷயத்திலும் இந்த வெறித்தனம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி வட்டம் லிங்கநாயக்கன் பட்டி துர்க்கை அம்மன் கோயில் பூசாரி பின்னத் தேவர் மறைந்தவுடன் வம்சாவழியாக பூசாரியாக இருக்கும் உரிமை தனக்கு உண்டு என்று பணியாற்றச் சென்றார் அவரது மகள் பின்னியக்காள். ஒரு பெண் எப்படி பூசாரியாக இருக்கப் போயிற்று என்று அக்கம்பக்க கிராமத்து ஆண்கள் (பல பெண்களும் சேர) எதிர்த்து தகராறு செய்து தடுத்து விட்டிருக்கின்றனர். விசாரணை நடத்திய வட்டாட்சியர் 89 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர் என்று பதிவு செய்ததை அடுத்து பின்னியக்காள் நீதிமன்ற உதவியை நாடியிருக்கிறார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு வழங்கிய முக்கியமான தீர்ப்பைக் கவனியுங்கள்.

ஒரு பெண் அர்ச்சகராகச் செயல்படுவதை பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டித் தடுப்பதை ஏற்க முடியாது என்று சொன்னதோடு, நீதியரசர் கே.சந்துரு, அரசு ஊழியரான ஒரு வட்டாட்சியரே இத்தகைய மூடத்தனங்களுக்கு இரையாகி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதிருஷ்டவசமாக, குறிப்பிட்ட கோயில் ஆகம விதிகளின் கீழில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னியக்காள் வழக்கில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், கோலாகலமாகத் தமது பணிக்குச் செல்ல வேண்டியவர், நீதிமன்ற உத்தரவுப்படியே மாவட்ட நிர்வாக பாதுகாவல் ஏற்பாட்டோடுதான் கோயில் முன் போய் நிற்க வேண்டியிருந்தது.

என்னோடு வங்கிக் கிளையில் பணியாற்றிய சரோஜா அம்மாள் ஒரு துப்புரவாளர். யாருக்கும் அஞ்சாத அவரது துணிவுமிக்க செயல்பாடுகளைக் கவனித்தபோது, அவரது வாழ்க்கையைப் பற்றி கேட்டறிந்து வியந்து போனேன். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த அவர் தமது தந்தைக்கு ஆண் மகனை விடவும் அதிகப் பொறுப்பேற்று, மரம் ஏறுவதிலிருந்து அத்தனை கடுமையான உழைப்பையும் நல்கியவர்.

சகோதரர்கள் உதறித் தள்ளிய பெற்றோரைத் தங்கள் பொறுப்பில் ஏற்று கவனித்த சகோதரிகளில் ஒருவராக, தமது தந்தை இறந்தபோது அவர்தான் கொள்ளி வைத்தார். அதைச் சொல்கையில் அவரது கண்களில் மின்னிய பெருமிதத்தை மறக்க முடியாது. தன்னை வஞ்சித்த கணவனை விலக்கித் தள்ளிவிட்டுக் குழந்தைகளோடு துணிச்சலாக பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து குடியேறிவர்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று ஒட்டுமொத்த சமூகமும் கும்மியடித்துச் சொல்லாமல், சமத்துவ சமுதாயம் சாத்தியமில்லை. ஒரு சில பதவிகள், மிகச் சில பெயர்கள், மிக மிகச் சில விருதுகள், பாராட்டுதல்கள் போன்றவை மேலோட்டமான அங்கீகாரம் மட்டுமே.

உண்மையாகவே பெண்கள் குறித்த பொதுவான ஆழ்மன மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது கவலை கொள்ள வைக்கிறது. சத்தீஸ்கரில் கீதா பிரஹலாத் என்ற ஓர் அற்புத பெண்மணியின் அசாத்திய உயர்வு, அநியாயமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதத்தில் அது மிக மோசமாக பிரதிபலித்திருக்கிறது.

இந்த மாதிரியான எண்ணப் போக்குக்கு எதிரான தீர்மானமான கருத்தோட்டத்தை பள்ளி செல்லும் பருவத்திலிருந்தே குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையும் முகத்தில் வந்து அறைகிறது. எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்?

************

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Apr 22, 2015, 8:25:57 AM4/22/15
to மின்தமிழ்
இந்து தர்ம சாஸ்திரப்படி ஒரு பெண் தன் பெற்றோருக்கோ, அல்லது கணவனுக்கோ கொள்ளி வைக்கலாம்.  இது எங்கள் குடும்பத்திலேயே நடந்திருக்கிறது. ஆனால் பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருந்தால் பெற்றோருக்குக் கொள்ளி வைப்பது கஷ்டம் தான். இங்கு அதனால் தான் அந்தப்பெண் கொலையுண்டிருக்கிறார். அவர் செய்ததுக்கு இது ரொம்பவே அதிகம் தான். இம்மாதிரி நடந்திருக்கக் கூடாது.  நிச்சயமாய் அந்தப் பெண்ணின் சகோதரர் தண்டிக்கப்பட வேண்டியவரே!

Suba.T.

unread,
Apr 22, 2015, 9:00:50 AM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகிர்வுக்கு நன்றி பவளா.
சடங்குகள் என்ற காரணத்தைக் காட்டி இத்தகைய கொடுமைகளை இழைப்பதை வண்மையாக கண்டிக்க வேண்டும். இது மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்பதில் சந்தேகமில்லை.

பெண்கள் ஈமக்கிரியைகள் செய்யக்கூடாது என்று சொல்வது எதன் அடிப்படையில் என்றும் தொடர் கேள்வியைக் கேட்க இந்த இழை பயன்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்.

தகவலுக்காக.... என் அன்னையாரின் இறுதிச் சடங்கில் முக்கிய சடங்குகளை என் தமக்கையார் தான் செய்தார். நான் பின்னர் உடல் எரிக்கப்பட பின்னர் செய்ய வேண்டிய எல்லா காரியங்களையும் செய்து முடித்தேன்.  இதில் சமூகப் பண்பாட்டு  குற்றம் என்று ஒன்று இருப்பதாகவே என்னால் சொல்ல முடியாது.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Nagarajan Vadivel

unread,
Apr 22, 2015, 9:20:49 AM4/22/15
to மின்தமிழ்
தேவதாசிகள் மரபில் இறந்த அன்னைக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை பொட்டுக்கட்டிக்கொண்ட ருத்ரகன்னிக்கு மட்டுமே உண்டு.  பெண்ணுக்கே சொத்துரிமை ஆணுக்கு சொத்துரிமை இல்லை என்பதை எதிர்த்துக் கொடி தூக்கியவர்கள் நாக பாசத்தார் என்றழைக்கப்பட்டுப் பின்னர் குமுகத்தில் நல்லதொரு இடத்தைப்பெற்ற இசை வேளாளர்கள்.  இவர்கள் தேவதாசிகள் போல் தேவதாசர்களாகவும் தேவரடியாள்போல் தேவரடியான்களுமாக இருந்த ஆண்வழி ஆண்களும் பெண்களுமே.  இவர்களே சொத்துரிமைக்காகவும் பொருள் ஈட்டவும் உயர்நிலையில் வாழ்ந்த தேவதாசியரைக் கீழ்மைப்படுத்தியவர்கள்

வலைப்பித்தன்

coral shree

unread,
Apr 22, 2015, 10:52:15 AM4/22/15
to மின்தமிழ், vallamai
உயிரோடு இருக்கும்போது தாயை  அந்த மகன் எவ்வளவு வேதனைப்படுத்தியிருந்தால் அவர் மகளை இறுதிக் காரியம் செய்யச் சொல்லி வேண்டியிருப்பார்.., அப்படிப்பட்ட மகனை கொள்ளி போட அனுமதிப்பது நியாயமே இல்லை. அந்தப் பெண் தம் உயிரைப் பணயம் வைத்து அன்னையின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர் போற்றுதலுக்குரியவர்..

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Apr 22, 2015, 11:01:10 AM4/22/15
to மின்தமிழ், vallamai
நன்றி சுபா. 

இன்றும் மகன் இல்லாத குடும்பங்களில் பெரும்பாலும் மருமகனோ அல்லது பங்காளிகள் வீட்டின் ஆண்களோதான் ஈமக்கிரியைகளைச் செய்கிறார்கள். காலப்போக்கில் மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இளைய தலைமுறை பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்...  முன்பெல்லாம் பெண்களுக்கு இடுகாடு என்றாலே அச்சம் இருந்தது. அதன் காரணமாக வீட்டோடு இருந்திருக்கலாம்.. ஆனால் இன்றைய நிலையில் அப்படியில்லை. சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்துமே நம் மன அமைதியின் பாற்பட்டது. நெருங்கிய உறவினர், ஆணோ, பெண்ணோ பாகுபாடின்றி இறுதிச் சடங்கை செய்ய அனுமதிப்பதே நியாயம்...  சமூக மாற்றம் வரவேண்டும்..

அன்புடன்
பவளா

Malarvizhi Mangay

unread,
Apr 22, 2015, 1:58:46 PM4/22/15
to mint...@googlegroups.com

அதெல்லாம் மாற்றம் வந்தாச்சு.ஒருபுறம் மகனா.?மகளா? பட்டிமன்றம் நடக்கட்டும்.நகர்ப்புறங்களில் பட்டனைத்தட்டி பஸ்மமாக்கிக் கையில கொடுத்துவிடுகிறார்கள்.கொல்லியுமில்லை.கில்லியுமில்லை....

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 3:04:45 PM4/22/15
to mintamil
எக்காரணத்திற்காக நடந்திருந்தாலும், இக்கொலை மன்னிக்க முடியாதது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Apr 22, 2015, 3:39:13 PM4/22/15
to mintamil
அம்மா பிணத்துக்கு எரியூட்டுவது தலைப்பிள்ளைக்கு கிடைக்கும் கவுரவம். அதை தாயே மறுப்பது மிகப்பெரும் அவமானம் என்ற உணர்வு (இது முன்பே இருந்து அம்மாவை சரியாக கவனித்து இருக்கலாம்...என்ன செய்ய?). இதெல்லாம் தங்கை மேல் சேர்ந்து கொலை செய்ய வைத்துள்ளது.

(எனக்கு இரு பெண்கள். இருவரும் சேர்ந்துதான் ஈமகடன் நடத்தணும். அப்ப தான் என் கட்டை வேகும்)

Anbu Jaya

unread,
Apr 22, 2015, 3:45:09 PM4/22/15
to mint...@googlegroups.com
இதை 'தர்மம்' என்பதும் 'தர்மசாஸ்திரம்' என்பது கேலிக்கூத்து. ஆணாதிக்க வெறியர்கள் அவர்களுக்காக எழுதி வைத்தவை. பெண் கொள்ளி வைத்தால் உடல் வேகாதா? இன்னுமா நாம் அந்த பழைய குப்பைகளை நம்புகிறோம்? வெட்கக்கேடு. 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

அன்புடன்,
அன்பு ஜெயா

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2015, 4:23:27 PM4/22/15
to mint...@googlegroups.com
​  இது  முற்றிலும் நியாயமில்லா  செயல்

பல முதியவர்கள்​   இப்போதும்  பிள்ளைகள் படுத்தும் பாட்டைத் தாங்க முடியாமல்

தங்கள் உடலை   தாங்கள் இறந்த பிறகு   பிள்ளைகளிடத்தே கொடுக்காமல்  மருத்துவ ஆராய்ச்சிக்கு  பயன்படும்  வகையில்   எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள்

இப்போதைய   முதியவர்களின் நிலை இதுதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

தேமொழி

unread,
Apr 22, 2015, 7:08:46 PM4/22/15
to mint...@googlegroups.com

மலர்விழி சொல்வது போல ஆண்மகன்தான் கொள்ளி  போட வேண்டும் என்ற மூடப்பழக்கத்தை தொழில்நுட்பம் மூலம்தான்  முறியடிக்க வேண்டும்.

நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் நிறைந்த இடம் போலிருக்கிறது. 

..... தேமொழி 

coral shree

unread,
Apr 22, 2015, 8:54:32 PM4/22/15
to மின்தமிழ், vallamai
கொல்லியுமில்லை.கில்லியுமில்லை....   

இறுதிச் சடங்கு என்பது கொல்லியும், கில்லியும் மட்டும்தானா....  அடப்பாவமே. எத்தனை சடங்குகள், எத்தனை சம்பிரதாயங்கள், சமூக வழமைகள், அத்தனைக்கும் ஆயிரம் காரணங்கள். இதெல்லாம் ஒரு நவீனக் கருவியில் ஒரு பிடி சாம்பலாக்குவதில் இணையாகுமா.. சாம்பலாக்குவது இறுதிக்கட்டம். அதை நெய் பந்தமும் செய்யலாம், நவீனக் கருவியும் செய்யலாம். தமிழர் பண்பாட்டில் இறுதிச் சடங்கு என்பது அவரவர் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு. நல்ல ஆத்மாக்களுக்கு மட்டுமே அது போன்ற புண்ணியங்கள் கிட்டும். மறு பிறவியை நம்புகிறோம் அல்லது நம்பாமல் போகிறோம்.. இருப்பவர்கள் இறந்தவர்களுக்குச் செலுத்தும் இறுதிக்கடன் மூலம் மன நிம்மதி பெறுவதும், ஆறுதல் பெறுவதும் வழிவழியாக வரும் பழக்கம். அது வாய்க்கப் பெறாதவர்கள் அறிந்திருக்க முடியாதவர்களுக்கு அதன் பெருமை உணர முடியாமல் போகலாம். சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் பல காரணங்கள் உள்ளன. அவையெல்லாம் இயந்திரத்தில் சாம்பலாக்குவதால் பாதிப்படைவதில்லை. நாகரீகம் என்ற போர்வை இதையெல்லாம் ஒருகாலும் மறைக்க முடியாது. மறைத்து, பழைய பண்பட்டை சிதைப்பதால் நமக்குப் பெருமையும் இல்லை. ஆயிரம் காலத்திய மரபுகளைச் சிதைப்பதால் நாம் அடையப்போகும் பெருமை என்ன.. எந்த ஒரு மரபுச் சின்னத்தையும் காப்பதில்தான் அதன் பெருமை உள்ளது. நாகரீகம் என்ற பெயரில் அதை அழிப்பது பாரம்பரியத்திற்குக் கேடு... அதனால் நம் வருங்காலச் சந்ததியினரின் இயற்கை குணங்களே மாறும் வாய்ப்பு அதிகரிக்கும். கட்டுப்பாடு இல்லாமல் போகும்..

அன்புடன்
பவளா

Geetha Sambasivam

unread,
Apr 22, 2015, 11:44:40 PM4/22/15
to மின்தமிழ்
எந்த சாஸ்திரத்திலும் பெண்கள் கொள்ளி வைக்கக் கூடாது எனச் சொல்லவில்லை ஐயா! என் பெரிய மாமனார் (மாமனாரின் அண்ணா) இறந்த போது சுடுகாட்டுக்கு அவர் மனைவியே போய்த் தான் கொள்ளி வைத்தார். அவர்களுக்குப் பிள்ளை இருந்து சிறு வயதில் இறந்து போனார். பெண் இருந்தாள். திருமணம் செய்து கொடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டன. எனினும் பெண்ணுக்குப் புக்ககத்தார் அனுமதி தரவில்லை என்பதால் என் பெரிய மாமனார் அவரே சுடுகாடு சென்று கொள்ளி வைத்தார். இது நடந்தது 1977 ஆம் வருஷம், கும்பகோணம் அருகே கருவிலி என்னும் குக்கிராமத்தில். 

அதன் பின்னும் பல குடும்பங்களில் இம்மாதிரி நடந்தது உண்டு. சமீபத்தில் 2006 ஆம் வருஷம் என் சொந்த நாத்தனார் கணவர் இறந்து போக குழந்தைகளே இல்லாத அவருக்கு அவர் மனைவியான என் நாத்தனார் தான் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்தார்கள். அவர் சுடுகாடு செல்ல மறுக்கவே அவர் கையிலிருந்து சாஸ்திர ரீதியாக அந்தக் கொள்ளியை வாங்கி அவர் மைத்துனர் போட்டார். ஈமச் சடங்குகளும் இன்றளவும் வருடா வருடம் திதியும் என் நாத்தனார் தான் செய்து வருகிறார். என்ன ஒரு பிரச்னை என்றால் என் நாத்தனாரோடு அந்தச் சடங்கு முடிந்து விடும். அதற்குள்ளாக அவர் யாரையாவது சுவீகாரமோ, அபிமானமாகவோ எடுத்துக் கொண்டால் அவர்கள் செய்யலாம். எனக்குத் தெரிந்து இது தான் நடைமுறை. இதிலே வடமாநிலங்களுக்கு ஒன்று, தென் மாநிலங்களுக்கு ஒன்று எனக் கிடையாது. அனைவருக்கும் பொதுவானது தான்.  நான் கொள்ளி வைக்கலாம் என்று தான் எழுதியுள்ளேன். கூடாது என்று சொல்லவில்லை. மறுபடியும் நான் எழுதியதைப் படித்துப் பார்க்கவும். நன்றி.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 23, 2015, 5:40:02 AM4/23/15
to மின்தமிழ்
மிகக் கொடுமையான நிகழ்வு!..   மறைந்தவர் தன் விருப்பத்தை முன்பே வெளியிட்டிருக்கிறார். அதன்படி நடந்ததற்கு பரிசா இது?!!..அந்தப் பெண்ணின் சகோதரருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்..

இது தொடர்பாக மற்றொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்..இது பொதுவாக நான் சொல்ல விரும்புவது..  சில சமூகங்களில், கொள்ளி வைக்கும் பிள்ளைக்கு சொத்தில் அதிக பங்கோ அல்லது வழிவழியாக வரும் குடும்ப சொத்துக்களில் முக்கியமானவை (பாரம்பரிய வீடு, நிலம் போன்றவை) அளிக்கப்படுகின்றன. பொதுவாக, மூத்த மகனே  இறுதிக் கடன்கள்  செய்வதால், அவனுக்கே இவை வழங்கப்படுகின்றன. பெற்றவர் இறந்த பிறகும் குடும்பத்தின் முக்கியப் பொறுப்புக்களை (தம்பி, தங்கைகள் இருப்பின் அவர்கள் படிப்பு, திருமணம் போன்றவை) ஏற்றுச் செய்வதாலும், திதி முதலானவற்றை தன் ஆயுள் பரியந்தம் செய்யக் கடமைப்பட்டுள்ளதாலும் இவ்வாறு அதிகப் பங்கு தருவதாகக் காரணம் சொல்கின்றார்கள்.  

வாழும் போது, பெற்றவரை வைத்துப் பராமரிக்க விரும்பாதவர்களாயினும் சொத்துக்களை மறுப்பதில்லை.. அதன் மூலம் கிடைக்கும் ஊர் மரியாதை இன்ன பிறவற்றை விட விரும்புவதில்லை.   அதனால் இறுதிக் கடன்களை மற்றவர் செய்யும் போது, ஆத்திரம் கொண்டு, இம்மாதிரியான கொடூர நிகழ்வுகள் நிகழ்கின்றன. இது நான் பார்த்த ஒரு நிகழ்வை வைத்துச் சொல்வது..

பார்வதி இராமச்சந்திரன்.

2015-04-23 9:14 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​ 
​ 
​  
​ 
​      

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:45:46 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 19:58 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

அதெல்லாம் மாற்றம் வந்தாச்சு.ஒருபுறம் மகனா.?மகளா? பட்டிமன்றம் நடக்கட்டும்.நகர்ப்புறங்களில் பட்டனைத்தட்டி பஸ்மமாக்கிக் கையில கொடுத்துவிடுகிறார்கள்.கொல்லியுமில்லை.கில்லியுமில்லை....

​என் தாயாருக்கும் மலேசியாவில் ஈமக்கிரியை நடந்த போது தொழில் ​நுட்ப வகையில் தான் சவப்பெட்டியை உள்ளே அனுப்ப சில நிமிடங்களில் உடல் பஸ்பமாகி வந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் உறவினர் வந்து சாம்பலையும் எலும்புகளையும் எடுத்து செய்ய வேண்டியது செய்யலாம் எனக் குறிப்பிட இதனை நான் செய்தேன்.  உடன் வந்த எந்த உறவினரும், என் தந்தையும் எனக்கு தடை சொல்லவில்லை. பின்னர் மயானத்தில் எடலும்புகளை புதைத்து கல்லறை கட்டினோம். 

மலேசியாவில் தமிழ்ச்சமூகங்க்களிடையே பரவலாக நடைமுறையில் இது வந்து விட்டது.

சுபா

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:50:01 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-23 5:44 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
எந்த சாஸ்திரத்திலும் பெண்கள் கொள்ளி வைக்கக் கூடாது எனச் சொல்லவில்லை ஐயா!

​நானும் இதனையே தான் நம்புகின்றேன். என் வாசிப்பிற்கு எட்டியவரை எந்த சாஸ்திரமும் பெண்கள் கொல்ளி வைக்க கூடாது என்றோ ஈமக்கிரியை செய்யக்கூடாது என்றோ நான் வாசித்ததில்லை. 
​ப்படி யாராகினும் 
வாசித்திருந்தால் நூல், எழுதியவர், நூலின் பகுதி என இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.  அந்த நூலை வாசித்து அது தரும் கருத்து எத்தகையது என நாம் அலசலாம்
 
​பொதுவாக 'சாஸ்திரத்தில் இருக்கு' என சொல்லிச் செல்லும் ஒரு ​உத்தி என்று மட்டுமே இதனைக் காண்கின்றேன்.

சுபா

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:52:08 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-23 11:40 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மிகக் கொடுமையான நிகழ்வு!..   மறைந்தவர் தன் விருப்பத்தை முன்பே வெளியிட்டிருக்கிறார். அதன்படி நடந்ததற்கு பரிசா இது?!!..அந்தப் பெண்ணின் சகோதரருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்..

இது தொடர்பாக மற்றொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்..இது பொதுவாக நான் சொல்ல விரும்புவது..  சில சமூகங்களில், கொள்ளி வைக்கும் பிள்ளைக்கு சொத்தில் அதிக பங்கோ அல்லது வழிவழியாக வரும் குடும்ப சொத்துக்களில் முக்கியமானவை (பாரம்பரிய வீடு, நிலம் போன்றவை) அளிக்கப்படுகின்றன. பொதுவாக, மூத்த மகனே  இறுதிக் கடன்கள்  செய்வதால், அவனுக்கே இவை வழங்கப்படுகின்றன. பெற்றவர் இறந்த பிறகும் குடும்பத்தின் முக்கியப் பொறுப்புக்களை (தம்பி, தங்கைகள் இருப்பின் அவர்கள் படிப்பு, திருமணம் போன்றவை) ஏற்றுச் செய்வதாலும், திதி முதலானவற்றை தன் ஆயுள் பரியந்தம் செய்யக் கடமைப்பட்டுள்ளதாலும் இவ்வாறு அதிகப் பங்கு தருவதாகக் காரணம் சொல்கின்றார்கள்.  

வாழும் போது, பெற்றவரை வைத்துப் பராமரிக்க விரும்பாதவர்களாயினும் சொத்துக்களை மறுப்பதில்லை.. அதன் மூலம் கிடைக்கும் ஊர் மரியாதை இன்ன பிறவற்றை விட விரும்புவதில்லை.   அதனால் இறுதிக் கடன்களை மற்றவர் செய்யும் போது, ஆத்திரம் கொண்டு, இம்மாதிரியான கொடூர நிகழ்வுகள் நிகழ்கின்றன. இது நான் பார்த்த ஒரு நிகழ்வை வைத்துச் சொல்வது..

​​ஆம் பார்வதி. இதுதான் நிதர்சனமான.. உண்மையாக நடப்பில் இருக்கும் காரணம்.
சொத்து.. ஊர் மரியாதை .. இவை இரண்டுமில்லாது போகுமோ என்ற காரணமே ஏனைய அனீதிகளைத் தூண்டுவதாக உள்ளது.

சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

2015-04-23 9:14 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​ 
​ 
​  
​ 
​      

-- 

Anbu Jaya

unread,
Apr 23, 2015, 7:47:07 AM4/23/15
to mintamil
மன்னிக்க வேண்டும் கீதாம்மா. உங்கள் கூற்றை எதிர்க்கவேண்டுமென்பது என் நோக்கமல்ல. 

 'பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருக்கவேண்டும்'  என்று நீங்கள் எழுதியதை வைத்துத்தான்,'பெண் கொல்லி வைக்கவேண்டுமானால், பெற்றோருக்கு ஆண்வாரிசு இல்லாமல் இருக்கவேண்டும்' என்று பொருள்கொண்டேன். அதன் அடிப்படையில்தான் என் கருத்தைப் பதிவு செய்தேன். 

இந்த துயர சம்பவத்தில் ஆண் வாரிசு இருக்கிறார்தானே? எனவே, நீங்கள் எழுதியதை மீண்டும் வாசித்த பிறகும் எனக்கு அதே பொருள்தான் தோன்றுகிறது. 

எது எப்படியிருந்தாலும், அநியாயமாக கொலையுண்ட அந்தப் பெண்ணிற்காக நமது இரங்கலைத் தெரிவிப்பதில் நாம் ஆனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

நன்றி.

அன்புடன்,
அன்பு ஜெயா

--

Geetha Sambasivam

unread,
Apr 23, 2015, 8:05:38 AM4/23/15
to மின்தமிழ்
ஆமாம், அது என்னவோ உண்மை தான். ஆண் வாரிசு இருந்தால் தான் பெற்றோருக்குப் பெருமை! இப்போவும் அப்படிச் சிலர் இருக்கத் தான் செய்யறாங்க! என்ன செய்வது? பெற்று எடுப்பது என்னமோ பெண் தானே! ஆண் இல்லையே!  அப்படி இருக்க ஆணென்ன? பெண் என்ன? 
Reply all
Reply to author
Forward
0 new messages