கஞ்சி வரதரும், கட்சி கட்டும் தமர்களும்

18 views
Skip to first unread message

N. Kannan

unread,
3:34 AM (20 hours ago) 3:34 AM
to மின்தமிழ்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை தென்கலை சண்டை. கோயிலில் பெருமாள் முன் சண்டை போடுவது அசிங்கம். ஏற்புடையது அல்ல. ஆனால் இதன் பின்னுள்ள சரித்திரம் சுவாரசியமானது.

பிராமணர்களுக்கு அடிப்படை பிரமாணம் வடமொழி வேதம். ஆனால் ஆழ்வார்களின் பாசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அது சாதி, மத வேறுபாடு இல்லாத சமதர்ம நெறி என்பதை வேதமறிந்த பிராமணர்கள் உணர்கின்றனர். எனவே தமிழ் பனுவல்களை திராவிட வேதம் (தமிழ் வேதம்) என்று சொல்லும் புதிய வழக்கு பெரிய எதிர்ப்பிற்கு பின் வருகிறது. இதைத் தீவிரமாக கடை பிடித்த இராமானுஜ முனியை கொல்ல சோழ அரசாணை வருகிறது (அரசர்கள் எப்போதும் தீண்டாமைக்கு சாக்கு). அவ்வளவு எதிர்ப்பு. இருந்தும் ஒரு தமிழ் மரபு இம்மண்ணில் நிலைத்து விடுகிறது. தமிழ் வேதம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆயினும் வட வேதத்தை, வடமொழியை முன்னிலைப்படுத்தும் போக்கும் இருந்து வருகிறது. அதன் மையம் காஞ்சி. காரணம் நகரேஷு காஞ்சி எனப்புகழப்படும் நகரில் பௌத்த, ஜைன, சைவ, வைஷ்ணவ வாக்குவாதம் காலம் காலமாக நடந்து வருவது. அது வடமொழியில்தான் அமையும். ஏனெனில் பெளத்தம், ஜைனம் இரண்டும் ஆரிய மதங்கள். சைவமரபு வடமொழி ஆதரவு தரும் மரபு. அங்கு தமிழ் மரபு இருந்தாலும் தமிழ் வைணவம் போல் ஒரு பிரிவாக வளரவில்லை.

எனவே இந்த சண்டையை தமிழகம் வேறு கோணத்தில் காண வேண்டும். எப்படி இந்தி எதிர்ப்பு ஓர் உணர்வு பூர்வமான தமிழ் எழுச்சியாக காணப்பட்டதோ அது போல் இதைக் காண வேண்டும். இதை சண்டை போடும் ஐயங்கார்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் சண்டை போடுகிறோம் எனும் அரசியல் புரியாமல் சண்டை போடுகிறார்கள். இது சங்கம் தொட்டு எழும் தமிழ் vs வடமொழி மோதல்.

https://www.threads.com/@velmurugan.07/post/DZCFgQUE7bu?xmt=AQG0XdKyBj5emke196gaySWn4tRGhMxeOM0w7YwtbdUI7n_FK-ax-a96L7le0gwY1ZHrJ_sF&slof=1

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Mathan Mohan Thillaiyapillai

unread,
11:22 AM (12 hours ago) 11:22 AM
to mint...@googlegroups.com
சில வரலாற்றுத் தரவுகளையும் தர்க்கப் பிழைகளையும் (Logical Fallacies) வரலாற்றுப் பார்வையில் காணவேண்டும். 

​1. காலவழுப் போலி (Anachronism Fallacy)

​ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலக் கட்டத்தில் இல்லாத ஒரு நவீன அரசியல்/சமூகக் கருத்தியலை, அப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வின் மீது பொருத்திப் பார்ப்பதே "காலவழுப் போலி"  
​இங்கு வடகலை-தென்கலை மோதலை 20-ஆம் நூற்றாண்டின் "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு" ஒப்பிடுவது வரலாற்று ரீதியாகப் பொருந்தாது. உண்மையான பிரிவினை மொழி சார்ந்தது அல்ல; அது தத்துவக் கோட்பாடு மற்றும் நிர்வாக உரிமை சார்ந்தது. இதைத் மொழிப் போராட்டமாகப் பார்ப்பது தர்க்கரீதியாகச் சரியல்ல.

​2. வரலாற்றுத் தரவுப் பிழைகள்

​இந்தியத் தத்துவ வரலாற்றில் வேத மரபும் (Vedic), பௌத்த/சமண மதங்கள் சார்ந்த சிரமண மரபும் (Sramana)  தங்களுக்குள் தர்க்க ரீதியாக உரையாடி, போட்டி போட்டு வளர்ந்த இணையான தத்துவ அமைப்புகள் (Parallel Systems). வேத மரபு வடமொழியைப் பிரதானப்படுத்திய போது, சிரமண மரபுகள் மக்கள் மொழிகளான பாலி, பிராகிருதம் ஆகியவற்றையே பயன்படுத்தின. தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் தமிழில்தான் தழைத்தோங்கின (எ.கா: சிலப்பதிகாரம், மணிமேகலை).

​சோழர் கால மோதல்: ராமானுஜருக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்ட மோதல் மத மோதலே தவிர, தமிழ் VS சமஸ்கிருதம் என்ற மொழி மோதல் அல்ல.

​3. பகுதிக்கான போலி (Fallacy of Composition)

​ஒரு பிரிவின் பண்பை வைத்து, அதுதான் ஒட்டுமொத்த அமைப்பின் பண்பு என்று முடிவு செய்வது பிழை.
​தென்கலை மரபில் தமிழ் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதைக் கொண்டு இந்த 600 ஆண்டுகாலப் பிரிவினையே "தமிழுக்கானப் போராட்டம்" என்று பொதுமைப்படுத்த முடியாது.

இன்று நடப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இரு பிரிவினரிடையே நடக்கும், தர்க்கப் பார்வை, அதிகாரப் பகிர்வு மற்றும் சடங்கு உரிமை மோதல் மட்டுமே. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH8W6Jftkn__ENmRaafnFUTvC%3D3PDtbzfKKKRGfOGnkiVi97JQ%40mail.gmail.com.

தேமொழி

unread,
11:57 AM (11 hours ago) 11:57 AM
to மின்தமிழ்
சிறப்பான மறுமொழி.  எந்த நாமம் போடுவது என்பது போன்றவற்றிலும் கருத்து  வேறுபாடு தத்துவக் கொள்கை மாறுபாடுகளும்   இவர்களிடையே உண்டு என்பதால் மொழிப்  போராட்டம் இவர்கள் சச்சரவில் முதன்மை அல்ல.  அடையாளம் காக்கும் தகராறு. 
Reply all
Reply to author
Forward
0 new messages