மெல்லத் தமிழினி...

39 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 23, 2023, 3:26:34 PM1/23/23
to மின்தமிழ்
மெல்லத் தமிழினி... 

—    ஜி.கீர்த்தனாதேவி உதயகுமார்


பாலூட்டி வளர்த்த பிள்ளை
தோலுயரம் வளர்ந்து
துரோகம் தான் செய்கிறது,
ஞாலம் அது பெருகியது
காலம் அதை பருகியது,
உயிர்களெல்லாம்
உண(ர்)வினை மறக்கிறது
உண(ர்)வுகளோ உதைத்துகொண்டு அழுகிறது
அமிர்தம் அது கசக்கிறது,
நஞ்சும் கூட இனிக்கிறது,
(அ)நாகரீகம் செழிக்கிறது,
மெய்கொண்ட இன்பத்தை
உயிர்கொள்ள மறுக்கிறது.
என் தமிழும் தவிக்கிறது
தனியே தான் நிற்கிறது
பனியும் எரிகிறது
பிணியுமே சுழல்கிறது.
உலகெல்லாம் வதைகிறது
உளமெல்லாம் சிதைகிறது
உண்மைகளும் புதைகிறது
உறவுகளும் தொலைகிறது
உதிரம் மொத்தம் கொதிக்கிறது
வேலைபார்க்கும் இடத்திலெல்லாம்
மேலைநாட்டு மொழி
மேன்மைபெற்று தன்பெருமை பாடுகிறது
அதை,
தொன்று தொட்ட மொழி ஒன்று
தொலைதூரம் நின்று
தொந்தரவு செய்யாமல் பார்க்கிறது..

உலகம் யாவும் விரியும்
மொழியின் அருமை புரியும்
ஆழியிலே தொலைத்த பொருள்
அடுக்கடுக்காய் கிடைக்கும்
மேகத்திலே கரைந்த பொருள்
மெதுமெதுவாய் பொழியும்
காற்றினிலே கலந்த பொருள்
சுவாசமாய் மாறும்
புது புது மொழிகளெல்லாம்
பதுங்கியே போகும்
மறந்து சென்ற பறவையெல்லாம்
பறந்துதான் திரும்பும்
பிறந்து வரும் குழந்தை கூட
மொழி பெருமை பேசும்
வறண்டு போன இடமெல்லாம்
கரை புரண்டு வெள்ளம் ஓடும்
சிக்கி தவித்த கிளியெல்லாம்
சில்வண்டாய் பறக்கும்
திறவாத பூட்டெல்லாம்
மறவாமல் திறக்கும்
மங்கிய நிலையெல்லாம்
இனி மயங்காமல் சிறக்கும்
செல்ல மொழியினி
சிங்காரமாய் ஒளிரும்
மெல்லத்தமிழினி
மேதினியை ஆளும்..


ஜி.கீர்த்தனாதேவி உதயகுமார்,
அகலூர்.
#WhatsappShare

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 25, 2023, 5:01:34 PM1/25/23
to mint...@googlegroups.com, thiru thoazhamai
தோலுயரம் வளர்ந்து

காலம் அதை பருகியது,

போன்ற பிழைகளைத் திருத்தி வெளியிடலாமே .

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/06e7384e-9fe6-4517-869d-ae9f101e7a74n%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Jan 25, 2023, 5:59:32 PM1/25/23
to மின்தமிழ்
நன்றி ஐயா, இனி பிழை திருத்தம் செய்து பதிவிடுகிறேன். 

Raman M P

unread,
Jan 25, 2023, 9:52:57 PM1/25/23
to mint...@googlegroups.com
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலாவது, CBSE பள்ளிகள் உட்பட,  தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காதவரையில் , மெல்லத் தமிழ் மங்குவதை யாரும் தடுக்க முடியாது.  செய்யுமா அரசு?

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 27, 2023, 3:18:17 AM1/27/23
to mint...@googlegroups.com, thiru thoazhamai
மகிழ்ச்சி அம்மா.

இசையினியன்

unread,
Jan 30, 2023, 5:33:56 AM1/30/23
to மின்தமிழ்
- தமிழை ஒருவராலும் அழித்திட முடியாது.
- மேலும் இன்னும் நடுவு நிலைமையோடு பேச வேண்டுமானால்....
  - தமிழ்நாடு நிலப்பகுதியில் தமிழோடு பிற மொழிகளும் பேசப்படுகின்றன. மலையாளம், தெலுகு, கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமே இங்கு இருப்பதாக திராவிட ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னும் பல அறிய மொழிகளும் இருக்கின்றன.
  - இந்நிலப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் பல மொழிகள் இந்நிலப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அந்த மொழிகள் என்ன என்ன? அவற்றில் உள்ள சொற்கள், எழுத்துக்கள் போன்றவையும் போற்றப் பட வேண்டியவைகளுள் ஒன்றாகும்.
  - இதுவரை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் இந்த வகையான மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கவில்லை; மேலும் தமிழ்நாட்டு அரசு இந்த மொழிகளின் பட்டியலையும் தயார் செய்து, அந்த மொழிகளையும் செவ்வனே பராமரிப்பது தேவைகளும் ஒன்றெனக் கருதுகிறேன்.
  - எப்படி ஆங்கிலம் கட்டாயம் என்ற உடன் பல உலக மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளனவோ! எப்படி இந்தி கட்டாயம் எனக் கூறி பட்டியலிடப்பட்ட மொழிகளை அழிவின் விழிம்புக்குக் கொண்டு செல்ல முனைகிறார்களோ; அது போன்றே தமிழ் மொழி மட்டுமே கட்டாயம் என்னும் கொள்கையும்; இங்கே இந்த நிலப்பகுதியில் இருக்கும் மொழிகளையும் அழிவிற்கே கொண்டு செல்லக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  - தமிழ் ஆட்சி மொழியாக இருக்கட்டும், மேலும் பிற இந்நிலத்து- தமிழ்நாடு- மொழிகளையும் பாதுகாத்திட வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை என எண்ணுகிறேன். இந்த மொழிகளையும் கண்டறிந்து, அவற்றையும் தமிழ் நட்டு அரசின் பட்டியலிடப்பட்ட மொழிகளாக அறிவிக்க வேண்டும்.

Pitchaimuthu

unread,
Feb 4, 2023, 2:23:22 PM2/4/23
to mint...@googlegroups.com
Karnataka bids for Tulu as 2nd official language

- the first initiation taken by karnataka government. 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/2isHYG8hiy4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d862521a-b86a-4a0a-8493-d5b3a898c9e6n%40googlegroups.com.
Karnataka bids for Tulu as 2nd official language- The New Indian.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages