முதுகாட்டில் காடுகிழாளின் அறிய சிற்பம்

169 views
Skip to first unread message

Suba.T.

unread,
Mar 3, 2014, 4:04:34 PM3/3/14
to மின்தமிழ், Subashini Tremmel
தினமனி செய்தி.. 

  • தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கண்டெடுக்கப்பட்ட காடுகிழாள் சிற்பம்.
    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கண்டெடுக்கப்பட்ட காடுகிழாள் சிற்பம்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், முதுகாடு என்ற ஊரில் கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காடுகிழாள் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிற்பம் தொடர்பாக முதுகாட்டைச் சேர்ந்த குழ. செல்லையா, மங்கள நாட்டைச் சேர்ந்த அருணாசலம் ஆகியோர் துணையுடன், வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் கொற்றவை என்ற தேவியின் வழிபாடு சங்கக் காலத்திலிருந்து தொடருகிறது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம், பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களில் கொற்றவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

அக்கொற்றவையின் ஒரு வடிவமே காடுகிழாள் என்பதாகும். பொதுவாக வனங்களின் (காடுகளின்) தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் காடுகிழாள் வணங்கப் பெற்றாள்.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டுக் கோடியக்கரைக்கு வந்த சுந்தரர், அக்காட்டில் சிவலிங்க உருவம் காடுகிழாள் உருவத்தின் துணையோடு மட்டும் திகழ்ந்ததாக அவருடைய தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதுகாடு என்ற இத்தொன்மையான ஊர் சோழர் காலத்தில் சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் எல்லையாகத் திகழ்ந்தது. மேலும், வெள்ளாற்றின் வடகரையிலும், அம்புலியாற்றுக்குத் தென்கரையிலும் திகழ்ந்த வடகரை வெள்ளாற்று நாட்டில் திகழ்ந்த ஊர் இது. சோழ நாட்டின் காடு அரணாகத் திகழ்ந்த முதுகாட்டின் காவல் தெய்வமே இந்த காடுகிழாள் சிற்பம்.

எட்டு கரங்களோடு வீராசனத்தில் அமர்ந்துள்ள இத்தேவியின் வடிவம் நிசும்பன் என்ற அரக்கனை தன் காலால் மிதித்த வண்ணம் காணப்படுகிறது.

அவள் கரங்களில் முறையே கபாலம், வாள், கேடயம், திரிசூலம், உடுக்கை, வில், கைமணி ஆகியவை திகழ ஒரு கரம் உயர்ந்து விஸ்மயம் என்ற வியப்பு முத்திரையைக் காட்டுகிறது.

அக்காலத்தில் எவ்வாறு கோயில் இல்லாமல் காட்டின் நடுவே காடுகிழாள் காட்சி தருவாளோ, அதுபோன்றே இன்றும் முதுகாட்டில் இச்சிற்பம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது என குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Megala Ramamourty

unread,
Mar 3, 2014, 4:25:28 PM3/3/14
to மின்தமிழ்
மிகவும் அரிய, அழகிய காடுகிழாளின் சிற்பத்தை இங்கு பகிர்ந்துள்ளீர்கள் சுபா. பாராட்டுக்கள்!
கொற்றவை வழிபாடு நம் தமிழகத்தில் மிகவும் தொன்மையான வழிபாடாகவே திகழ்ந்து வந்திருக்கின்றது.
வீரத்திற்கும், வெற்றிக்கும், போருக்கும் உரிய தெய்வமாக இக்கொற்றவையைத் தமிழிலக்கியங்கள் சுட்டுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வரும் ’வேட்டுவ வரி’ இவளைப் புகழ்வதாகவே அமைந்துள்ளது.
‘பாய்கலைப் பாவை’, ‘ஐயை’  முதலிய வேறுபெயர்களாலும் இக்காடுகிழாள் குறிக்கப்படுகிறாள்.

அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 3, 2014, 9:06:52 PM3/3/14
to Minthamil
1970களில் கோடியக் கரையில் வெளிமான் (black buck) கணக்கெடுப்பிற்காகவும், நீர்ப் பறவைகளைப் படம்
பிடிப்பதற்காகவும் மூன்று நான்கு முறைகள் சென்றிருக்கிறேன்.  அப்போது இந்த ஊரின் பெயரை முத்துக்காடு 
என்று கேள்வி பட்டுள்ளதாக நினைவு.  எது சரி முதுகாடா முத்துக்காடா?

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 4, 2014, 5:37:52 AM3/4/14
to மின்தமிழ்
அருமையான பகிர்வு!... வீராசனத் தோற்றம், பல கிராமங்களில் கோயில் கொண்டிருக்கும் எல்லைக்காவல் தெய்வங்களின் தோற்ற நிலையாகும்..

ஆனால், 

///ஒரு கரம் உயர்ந்து விஸ்மயம் என்ற வியப்பு முத்திரையைக் காட்டுகிறது////

என்று இருக்கிறது.. அது இடது மேல் கரத்தின் முத்திரையைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்..தூக்கிய வலது கரம், சூலம் ஏந்தும் பாவனையுடன் இருக்கிறது..

விஸ்மய முத்திரை, பொதுவாக, ஆலயங்களில் கருவறை வாசலில் வீற்றிருக்கும் துவாரபாலகர்களின் கரம் காட்டும் முத்திரை..அளவிட இயலா பரம்பொருள் உள்ளே சிலாரூபத்தில் வீற்றிருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமே இம்முத்திரை..கொற்றவையின் திருக்கரத்தில் இம்முத்திரையின் காரணம் அறியக் கூடவில்லை.. அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் மிக்க நன்றியுடையேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-04 7:36 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
          
Suba.T.

unread,
Mar 4, 2014, 5:45:15 AM3/4/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-03 22:25 GMT+01:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
மிகவும் அரிய, அழகிய காடுகிழாளின் சிற்பத்தை இங்கு பகிர்ந்துள்ளீர்கள் சுபா. பாராட்டுக்கள்!
கொற்றவை வழிபாடு நம் தமிழகத்தில் மிகவும் தொன்மையான வழிபாடாகவே திகழ்ந்து வந்திருக்கின்றது.
வீரத்திற்கும், வெற்றிக்கும், போருக்கும் உரிய தெய்வமாக இக்கொற்றவையைத் தமிழிலக்கியங்கள் சுட்டுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வரும் ’வேட்டுவ வரி’ இவளைப் புகழ்வதாகவே அமைந்துள்ளது.
‘பாய்கலைப் பாவை’, ‘ஐயை’  முதலிய வேறுபெயர்களாலும் இக்காடுகிழாள் குறிக்கப்படுகிறாள்.

பதிவை முதலில் தினமனியில் பார்த்த போது உண்மையிலேயே ஆச்சரியமாகிப் போனது. கொற்றவை சிற்பத்தின் தோற்றமும் வடிவமும் மிக அற்புதமாக மனதை ஈர்த்தது மேகலா.

திரு.திவாகர் எனது ஒரு பதிவில் சோழர்களுக்கு இஷ்ட தெய்வமாக கொற்றவை/ துர்க்கையை கொண்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்.. பட்டீஸ்வரன் கோயில் தொடர்பான ஒரு பதிவில்.

கொற்றவை பற்றிய விளக்கங்கள் தமிழிலக்கியங்களில் வருவது குறித்த உங்கள் விளக்கம் நன்று. 

சுபா

Suba.T.

unread,
Mar 4, 2014, 5:48:25 AM3/4/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-04 3:06 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
1970களில் கோடியக் கரையில் வெளிமான் (black buck) கணக்கெடுப்பிற்காகவும், நீர்ப் பறவைகளைப் படம்
பிடிப்பதற்காகவும் மூன்று நான்கு முறைகள் சென்றிருக்கிறேன்.  அப்போது இந்த ஊரின் பெயரை முத்துக்காடு 
என்று கேள்வி பட்டுள்ளதாக நினைவு.  எது சரி முதுகாடா முத்துக்காடா?

​முதுகாடு என்பதே சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.

புறநானூறு இலக்கியம். ​ http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=311

​வேறு கருத்துக்கள் இருந்தால் அறிந்தோர் பகிர்ந்து கொண்டால் நன்று.

சுபா

Suba.T.

unread,
Mar 4, 2014, 5:50:52 AM3/4/14
to மின்தமிழ், Subashini Tremmel
உங்களுக்கு மேல் விபரங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் தொல்லியல் அறிஞர்கள், டாக்டர்.பத்மா, குடவாயில் பாலசுப்ரமணியம், எஸ், ராமச்சந்திரன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அறியலாம் பார்வதி. அது உதவலாம்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Mar 4, 2014, 9:06:30 AM3/4/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel, vall...@googlegroups.com

On Tuesday, March 4, 2014 2:50:52 AM UTC-8, Suba.T. wrote:
உங்களுக்கு மேல் விபரங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் தொல்லியல் அறிஞர்கள், டாக்டர்.பத்மா, குடவாயில் பாலசுப்ரமணியம், எஸ், ராமச்சந்திரன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அறியலாம் பார்வதி. அது உதவலாம்.

சுபா

தினமணி வெளியிட்டுள்ள சிற்பம் காளி ஆகும். கொற்றவை/துர்க்கையின் ஓர் அமிசம்.
ஆனால், கொற்றவை சிலை இது அன்று. காளி, தாருகாசுரனை வதம்செய்யும் கோலம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 4, 2014, 9:38:23 AM3/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

கொஞ்சமாகவாவது இந்திய கலைவரலாறு அறிந்தோரை கேட்டுக்கொண்டு பத்திரிகைகள் எழுதவேண்டும். அண்மையில் மாணிக்கவாசகர் ஆவுடையார்கோவில் கட்டியதாக 1602-ஆம் ஆண்டு கல்வெட்டு சொல்வதாக ஹிந்து செய்தி வெளியிட்டது. இது பல காலமாக தெரிந்த
கல்வெட்டே. இந்த 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவர் அருளால் கட்டப்பெற்றது என்கிறது. அவ்வளவுதான் என்றும், 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடம் ஆவுடையாகோவில் என்றும் தெளிவுபடுத்தினார் எஸ், ராமச்சந்திரன் (தினமலர், மார்ச் 1, 2014). இன்னொன்று: எல்லாக் கல்வெட்டிலும் ஆளுடையார் கோவில் என்றுதான் உள்ளது. மக்கள் சக்திபீடம் (ஆவுடை/ஆவிடை) கொண்டு தென்னன் தக்கிணாமூர்த்திக்காய் 13-ஆம் நூற்றாண்டில் டிஸைன் செய்த கோயிலை ஆவுடையார்கோயில் என்று அழைக்கின்றனர். ஆளுடையார் கோவில், ஆவுடையார்கோவிலாய் மாறிவிட்டது. இதுபறி 1915-லேயே கல்வெட்டுக்கள் கொண்டு புத்தகம் வெளிவந்திருக்கிறது.

தினமணி வெளியிட்டுள்ள காளி சிற்பம் போல ஆயிரக்கணக்கான காளி சிற்பம் தமிழகத்தில் கிடைக்கின்றன. கொற்றவை என்றால் மகிடாசுரன் காலடியில் இருக்கவேண்டும். சிலப்பதிகார வருணனை - வேட்டுவ வரி - பார்க்கவும். 4500 வருட கொற்றவை பற்றி
எழுதி ஐராவதம் சொல்லும் ஜல்லிக்கட்டு (உ-ம்: காங்கயம் காளைகளை கொண்டு இப்போது நடப்பது) அல்ல;
கொற்றவை மயிடனுடன் போரிடும் 4500 வருட முத்திரை என்று எழுதிய கட்டுரை. 
சிற்பங்களில் காளியும், கொற்றவையும் வெவ்வேறாகக் காட்டப்படுகின்றனர்.

Suba.T.

unread,
Mar 4, 2014, 9:47:51 AM3/4/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-04 15:38 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

கொஞ்சமாகவாவது இந்திய கலைவரலாறு அறிந்தோரை கேட்டுக்கொண்டு பத்திரிகைகள் எழுதவேண்டும்.

இது ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்​​ அவர்கள் தெரிவித்த செய்தியின் அடிப்படையில் தினமனியில் வெளியிடப்பட்ட செய்தி என்பதை வாசித்தாலே அறியலாம் திரு.கணேசன்.  அவர் ஆய்வாளர் தானே !

அதோடு அவர் குறிப்பிட்டிருப்பதை மேலும் வாசிக்கவும்.

>
அக்கொற்றவையின் ஒரு வடிவமே காடுகிழாள் என்பதாகும். பொதுவாக வனங்களின் (காடுகளின்) தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் காடுகிழாள் வணங்கப் பெற்றாள்.
>

இந்த வடிவம் கொற்றவையின் ஒரு வடிவமான காடுகிழாள் இல்லை என மறுப்பதற்கான காரணங்கள் இருந்தால் அதனைப் பதியலாமே.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Mar 4, 2014, 10:01:10 AM3/4/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel, vall...@googlegroups.com

On Tuesday, March 4, 2014 6:47:51 AM UTC-8, Suba.T. wrote:

2014-03-04 15:38 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

கொஞ்சமாகவாவது இந்திய கலைவரலாறு அறிந்தோரை கேட்டுக்கொண்டு பத்திரிகைகள் எழுதவேண்டும்.

இது ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்​​ அவர்கள் தெரிவித்த செய்தியின் அடிப்படையில் தினமனியில் வெளியிடப்பட்ட செய்தி என்பதை வாசித்தாலே அறியலாம் திரு.கணேசன்.  அவர் ஆய்வாளர் தானே !

அதோடு அவர் குறிப்பிட்டிருப்பதை மேலும் வாசிக்கவும்.

>
அக்கொற்றவையின் ஒரு வடிவமே காடுகிழாள் என்பதாகும். பொதுவாக வனங்களின் (காடுகளின்) தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் காடுகிழாள் வணங்கப் பெற்றாள்.
>

இந்த வடிவம் கொற்றவையின் ஒரு வடிவமான காடுகிழாள் இல்லை என மறுப்பதற்கான காரணங்கள் இருந்தால் அதனைப் பதியலாமே.

This sculpture is KaaLi, and not Durga. 

தினமணி தரும் முதுகாட்டில் காடுகிழாளின் அறிய சிற்பம் - காளி என அறியலாம்.

காடுகிழாள் கொற்றவை என்று தினமணி செய்தி வெளியீடு. ஆனால் அது துர்க்கையாக இருக்கவேண்டும்
Madras Lexicon:
காடுகிழாள் kāṭu-kiḻāḷ

n. < id. +. Durgā, as goddess of the forest; துர்க்கை. (திருமுரு. 259, உரை.)

காடுகெழுசெல்வி kāṭu-keḻu-celvi

n. < id. + கெழுவு- +. Durgā, as dwelling in the forest; துர்க்கை. காடுகெழுசெல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையுங் கொடுத்து (தொல். பொ. 461, உரை.)

கிராம தேவதை காளி சிலை கிடைத்துள்ளது.

Dev Raj

unread,
Mar 4, 2014, 3:31:25 PM3/4/14
to mint...@googlegroups.com
On Tuesday, 4 March 2014 02:37:52 UTC-8, tsparu2001 wrote:
தூக்கிய வலது கரம், சூலம் ஏந்தும் பாவனையுடன் இருக்கிறது..
விஸ்மய முத்திரை, பொதுவாக, ஆலயங்களில் கருவறை வாசலில் வீற்றிருக்கும் துவாரபாலகர்களின் கரம் காட்டும் முத்திரை..அளவிட இயலா பரம்பொருள் உள்ளே சிலாரூபத்தில் வீற்றிருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமே இம்முத்திரை..கொற்றவையின் திருக்கரத்தில் இம்முத்திரையின் காரணம் அறியக் கூடவில்லை.. 
 
ஆம், நீங்கள் கூறுவது சரியே. விஸ்மய முத்ரை
அச்சிலையில் இருப்பதாகத் தெரியவில்லை

தேவ்

தேமொழி

unread,
Mar 4, 2014, 5:19:21 PM3/4/14
to mint...@googlegroups.com

http://thanjavurnews.blogspot.com/

"உள்ளே இருக்கும் ஈசனார் மிகப்பெரியவர்" என்று விஸ்மய முத்திரை காட்டுகிறார். தர்ஜனி முத்திரையால் நம்மை எச்சரிக்கை செய்கிறார். அபய முத்திரையால் ஈசன் கருணைமிக்கவர் என்று உணர்த்துகிறார்" என்று குறிப்புகள்  வருகிறது மேலே கொடுக்கப்பட்ட தளத்தில், படும் கொடுக்கப்பட்டுள்ளது.
_______________
ஆனால் மற்றொரு கோவிலில்:
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1432&Cat=3

அம்மனின்  எட்டு திருக்கரங்களிலும் போர்க்கருவிகள் மற்றும் மணி, கபாலம், விஸ்மய முத்திரை தாங்கி இருக்க,  மரண பயத்துடன் காலடியில் வீழ்ந்திருக்கும்  அசுரன் மீது வலது காலைத் தொங்கவிட்டு, பாதம் அழுத்தமாகப் பதிந்திருக்க, இடது காலை மடித்து பீடத்தின் மீது வைத்து சம்ஹரிக்க தயாரான  நிலையில் காட்சி அளிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில் உக்கிரம் பொங்கி வழிகிறது. வீராவேசத்தில் சடை விரிந்து பரந்து கிடக்க, மார்பில் தவழும் மண்டையோட்டு மாலை மூச் சுக்காற்றின் அனலால் ஆடி அசைய, வலது செவியின் துவாரத்தில் ஓர் அசுரன் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு காதணியாக மாறியிருக்கிறான். சிரசின் மேல் இரு நாகங்களையும் மண்டையோடுகளையும் தாங்கியிருக்கிறாள் அன்னை.

அதனால் சுபா கொடுத்த செய்தியில் வந்த சிலை போலவே அந்த அம்மன் சிலையும் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. 
______________

சுபா கொடுத்த புறம் பாடல் தவிர்த்து எனக்கு மேலும் இரு தேவாரப் பாடல்கள் கிடைத்தன...

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர்
    முழுநீறு மெய் பூசுதீர் மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்
    கடலைக் கடைந்திட்டதோர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூட மாட்டோம்
    பெரியாரொடு நட்பு இனிது என்றிருந்தும்
அண்டம் கடந்து அப்புறத்தும் இருந்தீர்
    அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே  7.2.2

சுந்தரர் --- தேவாரம்

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

திருஞானசம்பந்தர் --- தேவாரம்

ஆனால் அனைத்துப் பாடல்களிலும் முதுகாடு=சுடுகாடு என்றும் அங்கிருக்கும் சிவனைக் குறிக்கவே அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

________________________________

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், முதுகாடு கிராமம் என்பது சரி என இணையதேடலில் தெரிகிறது

கோடிக்கரை அருகில் இருபதாக இருந்தால் அவ்வூர் இருப்பது நாகப்பட்டிணம் மாவட்டமாகும்.
___________________

திரு. கணேசன் சொல்வது போல தருகாசனைக் கொன்றது காளி அல்ல.  சூரபத்மனின் சகோதரன் தருகாசனைக் கொன்றது முருகன்.

காளி ஏறி மிதிப்பது போல கிடப்பவர்கள் சில படங்களில் சிவனும் சில படங்களில் அரக்கனும்.  அந்த அரக்கனின் பெயர் ராக்தபிஜா(?) 'Slayer of Raktabija'  http://en.wikipedia.org/wiki/Kali

துர்கா கொன்றது மகிஷனை, அதன்படி கொண்டால் பல சிலைகளில் எருமை உர்வமும் இருக்கிறது. மனித வடிவத்தையும் எருமையையும் இணைத்தும் காட்டுகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Devi_Durga

திரு. கணேசனும், பாருவும் சொல்வது  கொண்டு பார்த்தால் சிலை காட்டும் முத்திரை பற்றியும், அரக்கனைப் பற்றியும் கொடுத்த தகவல் மறுபரிசீலனை  செய்யவேண்டியதாகத்தான்  தெரிகிறது.

..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 4, 2014, 8:49:18 PM3/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, March 4, 2014 2:19:21 PM UTC-8, தேமொழி wrote:

___________________

திரு. கணேசன் சொல்வது போல தருகாசனைக் கொன்றது காளி அல்ல.  சூரபத்மனின் சகோதரன் தருகாசனைக் கொன்றது முருகன்.

ஆம். தருகாசனைக் கொன்றது காளி அல்ல.

ஆனால், தாருகனை (தாருகாசுரனைக்) கொன்றவள் காளி. இளங்கோ அடிகளாரே விளக்கியுள்ளார்:

 அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் 
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள் !
(கொற்றவையை வருணிக்கையில் மயிடன் பிடர்த்தலை. அவன் பெயர் விக்கிரமன்
என்கிறார் செயங்கொண்டார்.)

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை 
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் 
கானகம் உகந்த காளி தாருகன் 
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் !

(காளி தாருகனை உடலைக் கிழித்தமை)

காளி ஏறி மிதிப்பது போல கிடப்பவர்கள் சில படங்களில் சிவனும் சில படங்களில் அரக்கனும்.  அந்த அரக்கனின் பெயர் ராக்தபிஜா(?) 'Slayer of Raktabija'  http://en.wikipedia.org/wiki/Kali

ரக்தபீஜன். ரக்தம் என்றசொல் அரத்தம் (செம்பரத்தை)/அரக்கு என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு.
அராகம் ? ராக, அரங்கம் > ரங்க ஆனாற்போல் என விரிவாகப் பேசியுள்ளோம்.

துர்கா கொன்றது மகிஷனை, அதன்படி கொண்டால் பல சிலைகளில் எருமை உர்வமும் இருக்கிறது. மனித வடிவத்தையும் எருமையையும் இணைத்தும் காட்டுகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Devi_Durga

திரு. கணேசனும், பாருவும் சொல்வது  கொண்டு பார்த்தால் சிலை காட்டும் முத்திரை பற்றியும், அரக்கனைப் பற்றியும் கொடுத்த தகவல் மறுபரிசீலனை  செய்யவேண்டியதாகத்தான்  தெரிகிறது.

படத்திற்கு ஆங்கிலத்தில் சரியான பெயரை தினமணி கொடுத்துள்ளது. If you right click, its name is Kali.jpg.
Only in Tamil description, they confuse between Durga(KoRRi) vs. KaaLi.

N. Ganesan
 
..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 4, 2014, 9:10:56 PM3/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மு இளங்கோவன், Karanthai Jayakumar, rathina pugazhendi
தினமணி தந்துள்ள முதுகாடு என்னும் ஊரைச் சார்ந்த காளி போல ஆயிரக் கணக்கான காளி சிலைகள் தமிழகம் எங்கும் உள்ளன.
கர்நாடகாவில் கிடைத்த சோழர் காளி சிலை ஒன்றும் அற்புதமானது, பார்த்துள்ளேன்.

நண்பர் மு. இளங்கோவன் சில உலகறியாத காளி சிலைகளின் படம் கொடுத்தார். பார்த்தருளுக.
இவை எல்லாம் காணாமலோ, அழிவதன் முன்னம் நல்ல ஒளிப்படங்களில் பதிவாகப் பிராத்தனைகள்.

-------------

மு. இளங்கோ அவர்களின் பதிவுக்கு பாரதி பாடலை மறுமொழியில் 4 வருஷம் முன் குறிப்பிட்டிருந்தேன்:

அரிய சோழர்காலக் காளியின் சிலை. சூலம் தாங்கிய கோலம், அலங்காரத்தில் இரும்போ, வெள்ளியினாலோ சூலம் சாத்துதல் மரபு. 

காலடியினில் சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள். கதையைத் தேவி மகாத்மியத்தில் காணலாம். காளி உபாசகர் பாரதியை விட யார் "இவள் யார்?" என்று விண்டுரைக்க வல்லார்?

அன்புடன்,
நா. கணேசன்

சக்தி விளக்கம்
~ பாரதியார்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்
சூதில்லை காணுமிந்த நாட்டீர் - மற்றத்
தொல்லை மதங்கள்செயும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் -இந்த
மூன்று புவியும்தன் ஆட்டம்
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி -அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்றுபழ வேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்
சேரத் தவம்புரிந்து பெறுவார் - இங்குச்
செல்வம் அறிவுசிவ போதம்.

ஆதி சிவனுடைய சக்தி -எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி
மீதி உயிரிருக்கும் போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள்விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்தி கள்மூன்று பொருளொன் - றந்த
மூலப் பொருளொளியின் குன்று:
நேர்த்தி திகழும்அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்றுசக்தி என்று.

N. Ganesan

unread,
Mar 4, 2014, 9:25:14 PM3/4/14
to mint...@googlegroups.com

On Tuesday, March 4, 2014 2:19:21 PM UTC-8, தேமொழி wrote:
______________

சுபா கொடுத்த புறம் பாடல் தவிர்த்து எனக்கு மேலும் இரு தேவாரப் பாடல்கள் கிடைத்தன...

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர்
    முழுநீறு மெய் பூசுதீர் மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்
    கடலைக் கடைந்திட்டதோர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூட மாட்டோம்
    பெரியாரொடு நட்பு இனிது என்றிருந்தும்
அண்டம் கடந்து அப்புறத்தும் இருந்தீர்
    அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே  7.2.2

சுந்தரர் --- தேவாரம்

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

திருஞானசம்பந்தர் --- தேவாரம்

ஆனால் அனைத்துப் பாடல்களிலும் முதுகாடு=சுடுகாடு என்றும் அங்கிருக்கும் சிவனைக் குறிக்கவே அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

ஆம். முதுகாடு போலவே, இன்னொரு சொல் முதுவாய். அடிக்கடி, சங்க கால அந்தணர்கள் பணியில் குறிப்பிடப்படும்.
பேயாட்டு, அணங்கு ஆடல், ... போன்றவற்றில் பேய், பிசாசு, பிரேதம், சாமி குரலை மனித உருவில் பேசும் பூசகர் முதுவாய் என்ற
அடையுடன் வருவர்:

நா. கணேசன் 

தேமொழி

unread,
Mar 4, 2014, 11:15:21 PM3/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///ஆம். தருகாசனைக் கொன்றது காளி அல்ல.

ஆனால், தாருகனை (தாருகாசுரனைக்) கொன்றவள் காளி. ///

ஹ..ஹ..ஹா..
திரைப்படங்களில் வெட்ட வெட்ட அரக்கர்கள் உயிர் பெற்று எழுவதாகப் பார்த்துள்ளேன்.
இப்படி இணையத்தில் தேடத் தேட விதம் விதமான பெயர்களில்  அரக்கர்கள் தோன்றுவார்கள் என்பதை அறியாமல்  போய்விட்டேன்.
தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

என்னைப் பொறுத்தவரை தருகாசன், தாருகாசுரன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன்  என்று ஒரு நாளில் தெரிந்து கொண்ட அரக்கர்களின் எண்ணிக்கையே  அதிகப்படி.
அசுரர்கள், தெய்வங்கள் என்று வகையாய்  டேட்டாபேஸ் வைத்திருப்பீர்களோ?

வழிபடும் பொழுது சிலையில் சூலம் சாத்தி வழிபடுவதற்காக  அந்த வகையில் கையை அமைத்திருப்பார்கள்  என்று தோன்றுகிறது, உங்களது குறிப்பையும், நீகள் அளித்த சுட்டிகளின் குறிப்புகளையும் பார்த்தால்.

N. Ganesan

unread,
Mar 5, 2014, 9:16:30 AM3/5/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Tuesday, March 4, 2014 8:15:21 PM UTC-8, தேமொழி wrote:

///ஆம். தருகாசனைக் கொன்றது காளி அல்ல.

ஆனால், தாருகனை (தாருகாசுரனைக்) கொன்றவள் காளி. ///

ஹ..ஹ..ஹா..
திரைப்படங்களில் வெட்ட வெட்ட அரக்கர்கள் உயிர் பெற்று எழுவதாகப் பார்த்துள்ளேன்.
இப்படி இணையத்தில் தேடத் தேட விதம் விதமான பெயர்களில்  அரக்கர்கள் தோன்றுவார்கள் என்பதை அறியாமல்  போய்விட்டேன்.
தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

என்னைப் பொறுத்தவரை தருகாசன், தாருகாசுரன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன்  என்று ஒரு நாளில் தெரிந்து கொண்ட அரக்கர்களின் எண்ணிக்கையே  அதிகப்படி.
அசுரர்கள், தெய்வங்கள் என்று வகையாய்  டேட்டாபேஸ் வைத்திருப்பீர்களோ?

தருகாசன் என யாருமில்லை. எழுதியவர் கமல்காசன், சாருகாசன் நினைவில் எழுதியுள்ளார் என எண்ணுகிறேன்.

------------
வீட்டில் 3000 புத்தகங்கள். ILL-ல் பெற 1.5 லட்சம் புஸ்தகங்கள். இந்தியா பற்றி 30K நூல்களாவது தொட்டுச் சில பக்கங்களாவது
படித்திருப்பேன். புத்தகப் படிப்பு சுமார் 40 ஆண்டுகளாய். புலவர், அறிஞர், பேராசிரியர்கள், சாமியார்கள் பலர் - பழக்கமும் உண்டு
இப்போது ஊரன் அடிகள் (வடலூர்) - பழகும் வாய்ப்பு என் பேறு.

வாழ்த்துக்களுடன்,
நா. கணேசன்

வழிபடும் பொழுது சிலையில் சூலம் சாத்தி வழிபடுவதற்காக  அந்த வகையில் கையை அமைத்திருப்பார்கள்  என்று தோன்றுகிறது, உங்களது குறிப்பையும், நீகள் அளித்த சுட்டிகளின் குறிப்புகளையும் பார்த்தால்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2014, 6:52:11 PM3/5/14
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

கொற்றவை வழிபாடு தமிழகம் முழுவதும் சிறப்புடன் இருந்துள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.
இந்தக் கொற்றவையின் வடிவம் போன்று, 
காரைக்குடி அருகே வேலங்குடியில் உள்ள “ வயல்நாச்சியம்மன் “ வடிவமும் உள்ளது.
மேலும், இதே போன்றதொரு சிற்ப வடிவத்தை சிவங்கை அருகே தமறாக்கி என்ற ஊரில் உள்ள “ ஏழைகாத்த அம்மன் “ கோயிலிலும், லாடனேந்தல் “ வீரமாகாளி “ கோயிலும் கண்டு வணங்கியுள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்

2014-03-04 2:34 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Mar 7, 2014, 9:58:09 AM3/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Wednesday, March 5, 2014 3:52:11 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

கொற்றவை வழிபாடு தமிழகம் முழுவதும் சிறப்புடன் இருந்துள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.
இந்தக் கொற்றவையின் வடிவம் போன்று, 
காரைக்குடி அருகே வேலங்குடியில் உள்ள “ வயல்நாச்சியம்மன் “ வடிவமும் உள்ளது.
மேலும், இதே போன்றதொரு சிற்ப வடிவத்தை சிவங்கை அருகே தமறாக்கி என்ற ஊரில் உள்ள “ ஏழைகாத்த அம்மன் “ கோயிலிலும், லாடனேந்தல் “ வீரமாகாளி “ கோயிலும் கண்டு வணங்கியுள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்

காளை ஐயா,

தினமணி வெளியிட்டுள்ள காளி சிலை போல ஒவ்வொரு ஊரிலும் காளி இருக்கிறாள்.
கொங்குநாட்டில் குலதெய்வக் கோவில்களில் இருக்கும் எல்லா கருவறை
சிலைகளும் இக் காளி போலவே இருப்பவை. செல்லாண்டி அம்மன் என்போம்.
செல்வி அம்மன், சிவசெல்வநாயகி (பல லாரிகள் இப்பெயரில் ஓடுகின்றன
- குலதேவதை பெயர்) என்பதும் உண்டு. அதனால் தான் கொங்குநாட்டின் கரூர்க்காரர்
ஆன இளங்கோ அடிகள் (சங்ககாலத்தில் இந்த வஞ்சி தான் சேரநாட்டுத் தலைநகர்).
கண்ணகி காளியோ? கொற்றவையோ? இலக்குமியோ? என்று வியந்து,
“இவளோ கொங்கச் செல்வி! குடமலையாட்டி ” என்று தொடங்குகிறார்.

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்  50

((1) செல்வி - செல்லாயி - காளி.
(2) தென் தமிழ்ப் பாவை - கொற்றவை. (பாவை - கொற்றவை.
பாவையை வழிபட்டே திருமணம் சங்க காலத்தில். பாடல்களில் காணலாம்.
பாவை நோன்பு - திருமணமாக இள்மபெண்கள் நோற்பது. உ-ம்: ஆண்டாள்.
கலை, கல்வி வடிவாகிய கலைமகள் - துர்க்கை/கொற்றவையின் அமிசம்.
கொற்றவையை பின்னாளில் பெ. சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடினார். இன்று ராஜாங்க தமிழ்வாழ்த்து பெ.சு தந்தது இருக்கிறது.
(3) திருமாமணி - தாமரைப் பொகுட்டில் (கர்ணிகை) வாழும் லக்ஷ்மி.
கண்ணகி என்ற பெயரே இந்த லக்ஷ்மியின் கர்ணிகை என்ற பெயர்தான்.
செட்டி வீட்டுப் பெண் அல்லவோ? லக்ஷ்மி பேர் ஒன்றைத் தந்தை சூட்டினான்.)

நாடார்களின் குலக்கதையிலும் காளி முக்கிய பங்கு வகிக்கிறாள். காளி நாடார்களின்
குலதெய்வமாக நாடார் கோவில்களில் இருக்கிறாள். வெங்கலராசன் கதை
படித்திருக்கிறீர்களா?
வெள்ளைக்காரன் தமிழர், பின்னர் இந்திய உபகண்டம் உழுதும் அடிமைகொளத் தொடக்கம்
வெங்கலராசன் கதை பேசுகிறது:

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages