தமிழ் முதலில் அச்சேறியது எங்கே-எப்போது

4,359 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Aug 13, 2016, 9:34:16 AM8/13/16
to mint...@googlegroups.com

தமிழ் முதலில் அச்சேறியது எங்கே-எப்போது.


I அச்சில் வந்த முதல் தமிழ் நூல் 


தமிழில் அச்சேறிய முதல் நூல் போர்த்துகீசிய தலைநகர் லிஸ்பனிலா , அன்றி  கொல்லத்திலா? - நம் மண்ணின் குரலில் சுபாவிற்கும் –இராஜம் அம்மாவிற்கும் இது பற்றி நடந்த  உரையாடல் கேட்டோம்.

தமிழில் வெளிவந்த முதல் நூல் 11.02.1554 இல் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்டது. ஆனால் தமிழ் எழுத்துகளில் அல்ல. ரோமன் எழுத்துருவில். இந்த நூலின் பெயர் Carthila e lingoa Tamul e Portugues 

நூலின் முகப்பு (போர்த்துகீஸ் மொழியில்).                                   முதல் பக்கம்


 Inline image 1           Inline image 2             



ஒரு ஐரோப்பிய  மொழி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. மேற்கத்திய  எழுத்துருவில் முதலில் அச்சேறியதும்  தமிழ்தான்.  இந்த நூலை வெளியிட்டவர்கள்  Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz, ஆகியோர். இதில் சிறப்பாகக் குறிபிடத்தக்கது , இம் மூவருமே புன்னைக் காயல் –தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். பரதவர்கள். இந்த Carthila e lingoa Tamul e Portugues நூல் வெளிவந்தபோது இந்தியத் துணைக் கண்டத்தில் அச்சு இயந்திரமே வரவில்ல.  இந்நூலில் ஒரு வரி போர்த்துகீஸ் மொழியிலும் அடுத்தவரி தமிழிலும் (ரோமன் எழுத்துருவில்) கருப்பு-சிகப்பு வண்ணங்களில் மாறி மாறி பார்பதற்கு மிக நேர்த்தியாக இருக்கும் என்று இராஜம் அம்மா உணர்ச்சி வயப்படக் கூறுகிறார். இந்நூலின் ஒரே பிரதி தற்போது ஹார்வர்ட் பலகலைக் கழகத்தில் உள்ளது.

I.              அச்சில் தமிழ் எழுத்தில் வந்த முதல் தமிழ் நூல்.

அச்சில் தமிழ் எழுத்தில் வந்த முதல் தமிழ் நூல்.தம்பிரான் வணக்கம். நூலின்முழு தலைப்பு Doctrina Christam en Lingua Malauar Tamul – Tampiran Vanakam என்பதாகும்.


Inline image 3Inline image 4



தமிழில் நூலின் தலைப்பு கொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம

என்றுள்ளது. இன்றைய தமிழில் இதை மாற்றி எழுதினால் கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே

 பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம். Henrique எனும் பெயர் அண்டிறிக் என எழுதப் பட்டுள்ளது.

பத்து X பதினான்கு செ.மீ. அளவும் பதினாறு பக்கங்களும் கொண்ட இந்நூல் கொல்லம் நகரில் அச்சிடப்பட்டு  1578 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  20  ஆம் நாள் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் Henrique Henriques எனும் போர்த்துகீசிய  பாதிரியார்.. ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் உள்ளன.

போர்த்துகீசிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை கொண்டுவர 1533 லேயே அனுமதி கிடைத்தபோதும், இந்தியாவின் முதல் அச்சு இயந்திரம் கோவாவில் 1556 ஆம் ஆண்டுதான்  இயேசு சபையினரால் அறிமுகப் படுத்தப்பட்டது. துவக்கத்தில் இங்கே லத்தீன் மற்றும் போர்த்துகீசிய மொழியில் நூல்கள் அச்சடிக்கப்பட்டன. 1557 ஆம் ஆண்டு இங்கே வடிவமைக்கப்பட்ட   தமிழ் எழுத்துருக்கள் சரியாக அமையாத காரணத்தால்   1558 ஆம் ஆண்டு கொல்லத்தில் அமைக்கப்பட்ட எழுத்துருக்கள் கொண்டு தம்பிரான் வணக்கம் உருவானது. இதற்கான காகிதம் சீனாவிலிருந்து கொண்டுவரப் பட்டது.

மதுரை –தஞ்சை நாயக்கர்களும் , விஜயநகர  அரசர்களும் எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளையும் , கற்களையும் (கல்வெட்டுகள்) பயன் படுத்தி வந்த நேரத்தில், நம் தமிழ்  காகிதமேறியது மகிழ்ச்சியான விடயம். Henrique பாதிரியாரின் நூலில் உள்ள எழுத்துகள் அப்போதைய ஓலைச சுவடிகளையும் கல்வெட்டுகளையும்  பார்த்து வடிவமைக்கப்பட்டன. இச்சமயத்தில் தமிழ் கிறித்துவர்கள் வழங்கிய நிதி உதவி காரணமாக , கொச்சியிலும் ஓர் அச்சகம் நிறுவப் பட்டது.  Henrique பாதிரியார் எழுதி வெளியிட்ட “கிறிஸ்தியானி வணக்கம்”  எனப்படும்  ‘Doctrina Christam’  நூல்  14.11.1579 அன்று கொச்சியில்  வெளியானாது. ‘Doctrina Christam’, ஃபிரன்சிஸ் டேவிஸ் அவர்களால் போர்துகீசீய மொழியில் எழுதப் பட்ட வழிபாட்டு நூலாகும்.

 

 

III, தமிழகத்தில் தமிழில் அச்சான முதல் நூல்.

Henrique பாதிரியார் எழுதி அடுத்து வெளி வந்த நூல் “புனிதர் வரலாறு”. 669  பக்கங்கள் கொண்ட இந்த நூல் தமிழகத்தில் புன்னைக் காயலில் அச்சிடப்பட்டது. தமிழகத்தில் தமிழில் அச்சான முதல் நூல்.இதுவே எனலாம்.


Inline image 5

HENRIQUE HENRIQUES பாதிரியார், முதல் ஐரோப்பிய தமிழ் அறிஞர். தமிழ் அச்சின் தந்தை என அழைக்கப்படும் இப் பெருமகனார் யூத போர்துகீசீய குடுபத்தில்  பிறந்து , தன் செல்வங்களை தானம் செய்துவிட்டு தனது 26 ஆவது வயதில் (1546) , கிறித்துவ மதத்தைப் பரப்ப இயேசு சபையின் சார்பாக  , புன்னைக் காயல் வந்து சேர்ந்தார். தமிழ் பயின்று , தமிழ் நூல்கள் பல எழுதினர். அவற்றுள் இலக்கண நூல்களும் அகராதியும் அடங்கும். தமிழில் முதலில் அச்சேறிய நூல்கள் இவர் எழுதியவையே. 1560 அம் ஆண்டிலேயே புன்னைக்காயலில் ஒரு தமிழ் பல்கலைகழகம் அமைக்கபடவேண்டுமென  குரல் எழ்ப்பியவர் இவர். 1600 ஆம் ஆண்டு  புன்னைக் காயல் கிராமத்தில் இயற்கை எய்திய  இவரது உடல் தூத்துக்குடி பனிமாதா ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் இறந்தபோது , கிறித்துவர்கள் மட்டுமின்றி காயல் பட்டினம் இசுலாமியர்களும் , இந்துக்களும் இரண்டுநாட்கள் உண்ணா நோன்பிருந்தும் கடைகளை மூடியும் மௌன அஞ்சலி செலுத்தினார்களாம்.

 

IV ஐரோப்பாவில் அச்சான முதல் தமிழ் ஆவணம்.

Philippus Baldaeus எனும் பாதிரியார் தமிழில் மொழி பெயர்த்த கர்த்தரின் ஜெபம் 1672 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அச்சானது.  ஐரோப்பிய மொழிகள் அல்லாத வேற்று மொழி ஐரோப்பாவில் அச்சானது இதுவே முதன்முறை.

Inline image 6Inline image 7

              

 

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 13, 2016, 11:09:39 AM8/13/16
to மின்தமிழ்
தம்பிரான் வணக்கம் நூலை மீண்டும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அச்சிட்டனர். 
படி அவர்களிடம் கிடைக்கும். 
அல்லது காந்தளகத்தில் tami...@tamilnool.com கேட்டால் பெற்றுத் தருவார்கள். 

K R A Narasiah

unread,
Aug 13, 2016, 12:02:02 PM8/13/16
to mintamil
Dear Mr Singanenjan 
I shall be presenting on Tamil language growth and history during colonial regime in connection with Madras Day celebrations at the Roja Muthiah Library on 24th Aug at 5 PM. I will be explaining these points also. Pl do come for the meeting.

This is also an invite for mintamil members of Chennai.
Please do come.

Other places  I am speaking are
1. 20th at 3 Pm at Dakshin Chitra on cultural scenario of Colonial Madras.
2. 27th at 1030 AM at CP Ramswami Iyer centre on History of Madras from Indigenous writings.
3. I am also chairing a session on Poompuhar research at AMET University on 26th but that will not be open to public.
In addition I am speaking at two Rotary clubs

Please do come for the public functions.

Narasiah


On Sat, Aug 13, 2016 at 8:39 PM, Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (tami...@gmail.com) Add cleanup rule | More info

தம்பிரான் வணக்கம் நூலை மீண்டும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அச்சிட்டனர். 
படி அவர்களிடம் கிடைக்கும். 
அல்லது காந்தளகத்தில் tami...@tamilnool.com கேட்டால் பெற்றுத் தருவார்கள். 

On Saturday, 13 August 2016 19:04:16 UTC+5:30, singanenjan wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


Singanenjam Sambandam

unread,
Aug 13, 2016, 12:51:01 PM8/13/16
to mint...@googlegroups.com
தங்களின் கனிவான  அழைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி.சென்னையில்  இருக்கும்  நாட்களில்  நிச்சயமாக  வருவேன்.

N. Ganesan

unread,
Aug 14, 2016, 1:22:12 AM8/14/16
to மின்தமிழ், vallamai


On Saturday, August 13, 2016 at 8:09:39 AM UTC-7, Maravanpulavu K. Sachithananthan wrote:
தம்பிரான் வணக்கம் நூலை மீண்டும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அச்சிட்டனர். 
படி அவர்களிடம் கிடைக்கும். 
அல்லது காந்தளகத்தில் tami...@tamilnool.com கேட்டால் பெற்றுத் தருவார்கள். 


ஐரோப்பா கிறிஸ்துவம் பரப்ப 16-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாய் தமிழகத்துக்கு வந்துகொண்டுள்ளார்கள். 16, 17, 18 நூற்றாண்டு ஆவணங்கள்
இணையத்தில் பதிவானால் தமிழ் வளர்ச்சி, கிறித்துவ சமய வளர்ச்சி, அச்சு பரவிய வரலாறு, .... எல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

தூத்துக்குடி எஸ். ராஜமாணிக்கம் பாதிரியார், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு (சென்னை) நடந்தபோது படித்த கட்டுரை:
தனிநாயக அடிகளாரும் இவரும் செய்த பணி அருமையானது.

புலவர் செ. இராசு தமிழின் முதல் புஸ்தகங்கள் பற்றிச் சொல்கிறார்:

16 பக்கங்கள் கொண்ட தம்பிரான் வணக்கம்:

தமிழ்நாடன், தமிழ்மொழியின் முதல் அச்சுப்புத்தகம், சேலம், 2001

பிலோ இருதயநாத், தமிழில் அச்சான முதல் தமிழ் நூல், 2006, சென்னை: இளங்கோ பதிப்பகம்.

அச்சான பக்கத்தை ஸ்கான் செய்தும், பக்கத்திலே யூனிகோடில் அதன் தமிழையும்
தம்புரான் வணக்கம் போன்ற நூல்களுக்குச் செய்யவேண்டும். மிகப் பெரிய பணி.

கள்ளிக்கோட்டை பல்கலை மலையாளத்தில் தம்புரான் வணக்கம் வெளியிட்டுள்ளது.

நா. கணேசன்

dr.ponmudi

unread,
Aug 14, 2016, 1:53:00 AM8/14/16
to மின்தமிழ்
அருமையானதகவல். நன்றி!

Singanenjam Sambandam

unread,
Aug 14, 2016, 4:10:12 AM8/14/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் அய்யாவின்  மேலதிகத்  தகவல்களுக்கு  மிக்க நன்றி.

--

Suba

unread,
Aug 16, 2016, 7:54:14 AM8/16/16
to மின்தமிழ், Dr.Subashini
 நான் நினைத்து பட்டியலில் இருக்கும் சப்ஜெக்ட்.  நல்ல இழை. தொடங்கியதற்கு நன்றி.

இது தொடர்பான எனது கட்டுரை ஒன்றினை இணைத்துள்ளேன்.
கணையாழியில் இது ஜூன் 2012 பிரசுரிக்கப்பட்டது.
நமது மின் தமிழ் ஆர்க்கைவில் நூல் அறிமுகம்:தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம் என்ற தலைப்பில் தேடினால் கிடைக்கும்.

-சுபா

தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்
சுபாஷினி ட்ரெம்மல்

Inline image 1


தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு, ஆவணப் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அத்துறையில் தொழில் ரீதியாக ஈடுபடாதவர்களும் கூட ஆர்வம் காட்டிவரும் நிலை சற்றே பெறுகி வருவதை தற்சமயம் காண முடிகின்றது. இவ்வகை ஆர்வத்தின் வழி தோன்றுகின்ற ஆய்வுகளின் வெளிப்பாடுகளாக புதிய கோணங்களில் வரலாற்று விஷயங்களைத் தருகின்றநூல்களை வாசகர்கள் வாசிக்கும் வாய்ப்பும் பெறுகி வருகின்ற நிலை ஆரோக்கியமான இலக்கியப் போக்காகவே அமைகின்றது.

இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பல அரிய நூல்களுடன் புதிய வெளியீடுகளையும் வாங்கிக் கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் ஒன்று  மோ. நேவிஸ் விக்டோரியா எழுதி பாவை அச்சகத்தின் வெளியீடாக வந்திருக்கும் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" என்ற நூல்.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் ஒரு நூல் அச்சு வடிவம் பெற்ற பெருமையை தமிழ் மொழியே பெறுகின்றது. இப்பெருமைக்கு ஆதாரமாக விளங்கும் தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) 1578ம் ஆண்டில் கொல்லத்தில் வார்க்கப்பட்ட திருத்தமான தமிழ் அச்செழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 14 X 10 செ.மீ  அளவு  காகிதத்தில் பதினாறே பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இது. சீனாவிலிருந்து அச்சமயம் இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தில் ஒரு பக்கம் சிவப்பு வர்ணத்திலும் மறு பக்கம் வர்ணமில்லாமலும் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க மறை நூல் இது. நூலின் மேல் புறமும்  கீழ்புறமும் ஐரோப்பிய வெள்ளை நிறக் காகிதங்கள் வைத்து தைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலின் ஒரு பிரதி மட்டுமே இதுவரை ஆய்வாளர்களின் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1951 முதல் இந்த நூலின் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின் தொன்மையான நூல் வகையைச் சார்ந்த கிளை நூலகமான ஹௌடன் நூலகத்தில் (Houghton Library) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்நூல் 125 பக்கங்களைக் கொண்டது. எளிமையான முகப்புடன் தம்பிரான் வணக்கம் எனும் நூலின் முதல் பக்கத்தையே அட்டைப் படமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். "தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார்" என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் முன்னுரையோடு இன்னூல் வந்திருக்கின்றது என்பதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றது.

ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களையும், ஆவணங்களையும், பல்வேறு செய்திகளையும் தேடியெடுத்து அவற்றை பதிப்பிக்கும் தமிழ்ப்பணியில் பல தமிழறிஞர்கள் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஈடுபட்டு பல அரும் பெரும் இலக்கியங்களைச் சாதாரண மக்களும் வாசித்து புரிந்து கொள்ளும் வகை செய்தனர். இப்பணி முற்றுப் பெற்றிடவில்லை என்பதை நாம் அறிவோம். நூல் பதிப்பாக்கத்திற்குப் பல்வேறு தொழில்நுட்ப வாய்ப்புக்கள் அமைந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் தனியார் பலரும், பல்கலைக் கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஓலைச் சுடி பதிப்புக்களை அச்சுப் பதிப்பாகவும், புதிய தொழில் நுட்பத்தின் துணை கொண்டு நீண்ட காலம் பாதுகாக்கும் வகையினில் பல முயற்சிகளில் ஈடுபட்டும் பதிப்பித்தும் வருகின்றன. ஆரம்பத்தில் ஓலைச் சுவடி பதிப்பாக இருந்த நூல்கள், அச்சுப் பதிப்பாக எளிய வகையில் கையாள்வதற்கு ஏதுவாக வந்த பிறகு இவ்விலக்கியங்கள் பரவலாக வெளியீடு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தன.  தமிழறிஞர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் உயர் மட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி எளியோரும் சாதாரண மக்களும் கூட தமிழ் நூல்களை வாசிக்கவும் அவற்றின் பொருள் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற கல்விப் புரட்சி ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்ததுஅச்சுப் பதிப்பாக்க முயற்சிகள் என்பது மறுக்க முடியாத கருத்து.

அச்சுக்கலை தமிழகத்தில் எப்போது தோன்றியது? அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது? யார் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டோர்? எவ்வகை நூல்கள் தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சு பாதிப்பாக்கம் கண்டன போன்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழ் கற்ற பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது ஐயமே! இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு நூலாக "தம்பிரான்வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்"  நூல் அமைகின்றது.

வணிகத்தைக் காரணமாகக் கொண்டு அத்துடன் கிறிஸ்துவ சமயம் பரப்பும் மதபோதகர்களாக தமிழகம் வந்த போர்த்துக்கீஸிய கத்தோலிக்க மத குருமார்களும், ஜெர்மனியிலிருந்து டேனீஷ் அரசரின் ஆதரவுடனும், பொருளாதர பலத்துடனும் தமிழகம் வந்த ப்ரோட்டெஸ்டண்ட் மத குருமார்களும் பல குறிப்பிடத்தக்க தமிழ்ப்பணிகளை ஆற்றியுள்ளனர் என்பதை நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு சரித்திர ஆவணங்கள், நூல்கள், குறிப்புக்களில் காண்கின்றோம். இம்மத குருமார்களின் அப்பணிகளிலேயே சிகரம் வைத்தது போல அமைந்தது அச்சுக் கலையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தி வைத்தமையே எனலாம்.

கத்தோலிக்க, ப்ரோட்டெஸ்டண்ட் கிறிஸ்துவ சமயத்தைத் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்புவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்த இம்மத குருமார்களுக்கு மொழி எனும் அடிப்படைச் சாதனம் இருந்தால் ஒழிய இப்பணியை எவ்வகையிலும் செய்வது சாத்தியப்படாது என்பதை அறிந்ததன் விளைவாக தமிழ் மொழியைத் தாமே முதலில் கற்றல், பின்னர் அம்மொழியில் மக்களுடன் மக்களாகக் கலந்து உரையாடி, அவர்களுக்கு இப்புதிய மதமான கிறிஸ்துவ மறையில் ஈடுபடுத்துதல் என்ற வகையில் தங்கள் பணிகளைச் செய்தனர். அதில் அச்சுப் பதிப்பாக்கம் முக்கியப் பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத ஒன்று. கிறிஸ்துவ மத போதனையைப் பறப்ப வந்த இந்த ஐரோப்பிய மதபோதகர்கள் உள்நாட்டில் தமிழ் சன்றோர்களின் வழக்கத்தில் இருந்த சுவடி படித்தலைக் கறுக் கொண்டதோடு எழுத்தாணி பிடித்து எழுதும் ஆற்றலையும் பழக்கிக் கொண்டனர் என்னும் செய்திகள் தீவிரத்துடனும் ஆர்வத்துடனும் அவர்கள் புதிய இடத்தில் தங்கள் பணிகளைச் செய்யத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டமையை நன்கு உணர்த்தும்.

தமிழ் மொழியின் முதல் நூலை பற்றி விளக்கும் சில கட்டுரைகளும் முன்னரே வெளிவந்திருக்கின்றன. 2001ம் ஆண்டு செட்டியார் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த சேலம் தமிழ்நாடனின் "தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்" இவ்வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நூல் என்பதில் ஐயமில்லை. அச்சுக்கலை, அச்சுப் பதிப்பு முறைகள், காகிதத்தின்  வரலாறு, காகிதப் பயன்பாடு ஐரோப்பாவிற்கு அறிமுகமான தகவல்கள், அச்சுக்கட்டைகள் உருவாக்கம் எனப் பல விஷயங்களை விளக்கும் ஒரு கருவூலம் இந்தச் சிறிய நூல். இதில் தமிழ் மொழியின் முதல் எழுத்துப் பெயர்ப்பு வடிவ அச்சு நூல் கார்டிலா,தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அச்சுப் பதிப்பான தம்பிரான் வணக்கம்தமிழ் மொழியில் வெளிவந்த இரண்டாவது அச்சுப் பதிப்பான கிரிசித்யானி வணக்கம்தமிழ் மொழியில் வெளிவந்த மூன்றாவது அச்சுப் பதிப்பான கன்பெசனரியோ பற்றிய விளக்கங்களும் அறிமுக உரைகளும் உள்ளன. முதல் தமிழ் அச்சுப் புத்தகத்துக்கு மூலகாரணமாக இருந்த அன்டிறிக்கி அடிகளாரின் (Hendriq Henriquez) வரலாறும் மேலும் பல தகவல்களும் கூட இடம்பெறுகின்றன. அத்துடன் தம்பிரான் வணக்கம் நூல்முழுதாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தமிழாக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது கிரிசித்தியானி வணக்கம், கன்பெசனரியோ ஆகிய நூல்களின் பக்கங்களும் இணைக்கப் பட்டுள்ளன. அவ்வகையில் இதே கருத்தினை மையமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் மற்றுமொரு நூலாக மோ. நேவிஸ் விக்டோரியாவின் "தம்பிரான்வணக்கம்-தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" விளங்குகின்றது.

சரி நூலைப் பற்றி இனி காண்போம்.

இந்திய நாட்டில் ஐரோப்பியர் வருகையை விளக்கும் தகவல்களைக் கொண்டு இந்த நூல் தொடங்குகின்றது. நூல் ஆசிரியர் 16ம் நூற்றாண்டு ஐரோப்பியர் வருகையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த  கிரேக்க இந்திய வர்த்தக தொடர்புகள் தொடர்பான விஷயங்களிலிருந்து தனது பார்வையை செலுத்துகின்றார். இது நீண்ட கால தமிழர்-ஐரோப்பியர் வணிக தொடர்பினைச் சற்று விளக்கும் வகையில் அமைந்து விலக்க வரும் மையக் கருத்துக்குத் தேவையான  அறிமுகமாக விளங்குகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க-இந்திய வாணிகத் தொடர்புகளுக்குப் பின்னர் 15ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கிறிஸ்டபர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோரின் கடல்வழிப் பயணங்கள், அதன் மையைக் குறிக்கோளாக அமைந்திருந்த இந்தியாவைக் கண்டுபிடிக்கும் நோக்கம் போன்றவை வரலாற்றுக் குறிப்புக்களுடன் இம்முதற் பகுதியில் விளக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில் தமிழ் அச்சுப் புத்தகம் தோன்றிய வரலாறு விளக்கப்படுகின்றது. தூத்துக்குடி கடற்கரை வாழ்  பரதவர்கள் 30,000 பேர் ஒரே சமயத்தில் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய வரலாற்றுச் செய்தியும் அக்கால போர்த்துக்கீஸிய கத்தோலிக்க சமயத்தின் நிலைப்பாடு பற்றிய செய்திகளும் இங்கு சற்றே குறிப்பிடப்படுகின்றன.

தமிழகத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் வேறூன்ற முக்கிய காரணமாக அமைந்த முத்துக்குளித்துறை பரதவர்கள் சமூகத்தில் அக்கால கட்டத்தில் நிகழ்ந்த சில விஷயங்களை இன்னூலின் மூன்றாவது பகுதியில் நூலாசிரியர் விரிவாக விளக்குகின்றார். கடற்கரை பட்டினமாகிய தூத்துக்குடியில் அராபிய மூர் இன வணிகர்களின் வருகை, வணிக ஆக்கிரமிப்பு, இதனால் பரதவ மக்களிடையே ஏற்பட்ட சங்கடங்கள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக ஆசிரியர் இக்கருத்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

"கி.பி.1535ம் ஆண்டு, ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரையில் மாவுப்பணியாரம் விற்றுக் கொண்டிருந்த பரதவப் பெண்ணை மூர் அராபியன் அவமானப்படுத்தி விட்டான். இதனைக் கேள்வியுற்ற அவளது கணவன், அவனோடு சண்டையிட்டான். இந்தச் சண்டையின் போது அந்தப் பரதவன் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு மூர் அராபியன் வெட்டி எறிந்து விட்டான்.  இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய  மூர்களோடு சண்டயிட்டு, பலரைக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும், காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து, பரதர்களோடு போரிட்டு நிறையபேரைக் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு வரப்படும் ஒவ்வொரு பரதவனின் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான தலைகள் உருண்டோடின".

மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டமையை இன்னிலையில் கான்கின்றோம். இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி பரதவக் குலத் தலைவர்களான பட்டங்கட்டிகளிடம் பேசி அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள் கிறிஸ்துவ மறையைத் தழுவ வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில் பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல் வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறுகின்றனர்.  வாக்களித்தபடி தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு  ஒரு பெறும் கப்பற்படையை போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக் கொண்டமையை இப்பகுதியில் நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார். அதே ஆண்டிலும் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைகின்றது. 

இத்தகவல்களோடு பரதவ மக்கள் கிறிஸ்துவ மதத்தினைத்  தழுவிய போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பற்றிய குறிப்புக்களையும் இப்பகுதியில் நூலாசிரியர் சில சான்றுகளோடு விளக்குகின்றார். இவை வாசகர்களுக்கு இச்சான்றுகளைக் காணவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.


அண்டிரிக்கி அடிகளாரைப் பற்றி விரிவான குறிப்புக்களுடன் ஒரு பகுதியை நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.. தம்பிரான்வணக்கம் என்ற நூலை 1578ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்ட இவரைப் பற்றிய குறிப்புக்கள் இவரது சமய ஈடுபாடு, மத குருவாக போர்த்துக்கீஸிய கொம்பெய்ரோ நகரில் நிலைப்படுத்தப்பட்ட தகவல்கள், இவரது தமிழக வருகை, முதன்மைக்குருவாக தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகிய விஷயங்களை இப்பகுதியில் காண முடிகின்றது. முதலில் தமிழகம் வந்தபோது இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அறியாதிருந்த அண்டிரிக்கி  அடிகளார் பின்னர் தமிழ் இலக்கணத்தை தீவிரத்துடன் கற்று மிகக்குறுகிய காலத்தில் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட விதம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதியில் மிக விரிவாக தமிழ் அச்சுப் புத்தகம் தயாரிக்க ஏற்பட்ட தேவைகள், அச்சு எழுத்து தயாரிப்புப் பணிகள் பற்றிய விஷயங்களும் விளக்கப்படுகின்றன. 

இதனை அடுத்து தம்பிரான் வணக்கம் நூல் உருவாக்கம், அதன் வடிவமைப்பு, அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள், காகிதங்கள், பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் பிரதி ரோமில் உள்ள இயேசு சபைக்கு அனுப்பப்பட்ட விஷயமும் பின்னர் ஒவ்வொரு இடமாக மாறி இப்போது கிடைக்கும் ஒரே ஒரு பிரதி பற்றியும் இப்பகுதியில் விரிவாக, வாசிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் விபரங்களைத் தருகின்றார். இதன் தொடர்ச்சியாக தம்பிரான்வணக்கம் முழு நூலும் இந்த நூலில் இணைக்கப்படிருப்பதும் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தை அலங்கரிக்கும் கொல்லம் தமிழ்எழுத்து அச்சுப் பதிப்புடன் கீழ்க்காணும் வாசகம் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றது.
"இயேசு சபையைச் சேர்ந்த அண்டிரிக்கி பாதிரியார் தமிழ்லே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்."

தம்பிரான் வணக்கம் நூலில் உள்ள தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, கூர்மையாக கவனித்து வாசிக்க முயற்சிக்கும் போது பல சொற்களை  வாசித்து புரிந்து கொள்ள முடிகின்றது. முழு நூலையும் மெத்த பிரயத்தனத்துடன் வாசகர்கள் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க தேவையிராதவாறு நூலாசிரியர் இப்பதினாறு பக்கங்களுக்கும் அதனை இக்காலத் தமிழில் வழங்கியுள்ளார். இது நூலை பிழையின்றி வாசித்து தெரிந்து கொள்ள பெரிதும் உதவுவதாக அமைந்துள்ளது எனலாம். 

இதே நூலில்,  தம்பிரான் வணக்கம் நூல், அதன் தற்கால தமிழ் வடிவம் ஆகிய பகுதிகளுக்குப் பிறகு அடுத்ததாக அமைவது தமிழின் முதல் ஒலி வடிவ நூல் என அழைக்கப்படும் கார்டிலா.  

திரு.மோ.நேவிஸ் விக்டோரியா கார்டிலா நூலைப் பற்றிய விளக்கத்தையும் அதன் முழு பிரதியையும் இதே நூலில் வழங்கியுள்ளார். கி.பி. 1554ல் வெளிவந்த இந்த நூல் 40 பக்கங்கள் கொண்டது. தமிழ் எழுத்துக்கள் இல்லாமல், தமிழ் மொழி ரோமன்லிபியில் அச்சிடப்பட்ட வகையில் அமைந்த நூல் கார்டிலா.  கர்டிலாவின் ஒவ்வொரு வரியும் மூன்று முறை வருகின்றன. நடுவரியானது சற்று தடிமனான கருப்பு நிறத்திலிருக்கின்றது. இது தமிழ் வார்த்தைகள் ரோமன் லிபியில் வழக்கப்பட்டிருக்கும் பகுதி.  இந்த தடிமனான வரிக்கு மேலே உள்ள சிவப்பு நிறத்திலான முதல் வரி அதன் அர்த்தத்தை ரோமன் லிபியில் விளக்குகின்றது. மூன்றாவதாக கீழே உள்ள சிறிய கருப்பு  நிறத்தில் அமைந்த வரி போர்த்துக்கீசிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் முழு வடிவத்தையும் பார்க்கும் போது வாசிப்போரை வியக்க வைப்பதாக இவ்வமைப்பு உள்ளன.  இதன் தொடர்ச்சியாக கார்டிலாவின் முமு மொழி பெயர்ப்பையும் நூலாசிரியர் வழங்கியிருக்கின்றார். இது நூலை தமிழில் புரிந்து கொள்ள விழைவோருக்கு உதவுவதாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கத்தையும், தமிழ் மொழி ஒலி வடிவத்தில் ரோமன் லிபியில் உருவாக்கப்பட்ட கார்டிலாவையும் சேர்த்து இந்த நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கின்றார். வெறும் நூல் அறிமுகம்என்றில்லாமல் இன்னூல்கள் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணங்கள், அதற்கான தேவை,  இதனை உருவாக்க நடைபெற்ற முயற்சிகள் அதில் அண்டிரிக்கி  அடிகளாரின் பங்கு, போர்த்துக்கீஸிய இயேசு சபையினரின் தமிழ் மற்றும் சமய நடவடிக்கைகள், தூத்துக்குடி முத்துக்குளித்துறை பரதவ மக்களின் 15ம் 16ம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்திகள் என  பலவகையில் விளக்கம் தருவதாக இந்த நூல் அமைந்திருக்கின்றது. நூலாசிரியர் இன்னூலில் கையாண்டுள்ள மொழி நடை மிக எளிதாக நூலின் சாரத்தைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. தமிழ் அச்சுப்பதிப்புகளில் ஆர்வம் உள்ளோர் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களும் வாங்கிப் படித்து பயன்பெற வேண்டிய ஒரு நூல் இது எனத் தயங்காமல் கூறலாம்.

குறிப்பு: இக்கட்டுரை ஜூன் 2012 கணையாழி இதழில் பிரசுரமானது.

வெளியீடு: பாவை அச்சகம்
முதற் பதிப்பு: நவம்பர் 2011
விலை ரூ:80.00


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Sep 3, 2016, 2:19:12 AM9/3/16
to மின்தமிழ், Dr.Subashini
திரு.சிங்காநெஞ்சன்.  

தமிழின் முதல் அச்சு நூல் பற்றி, அதனை முதன் முதலாக நேரில் பார்த்த தனிநாயகம் அடிகள் பற்றிய விழியப் பேட்டியை இன்று மதியம் வெளியிடுவேன். அதில் மிகத் தெளிவாக அமுதன் அடிகள் குறிப்பிடுகின்றார்.
தமிழ் ஒலியில் ஆனால் போர்த்துக்கீசிய எழுத்தில் வந்தது கார்டீலா. அது தமிழ் எழுத்துக்கள் அற்றவை.  அது லிஸ்பனில் அச்சிடப்பட்டது.

தமிழ் எழுத்துடன் வந்த முதல் தமிழ் அச்சு நூல் தம்பிரான் வணக்கம். இது கொல்லத்தில் தமிழ் எழுத்துக்கள் அச்சுக் கோர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. லிஸ்பனில் அல்ல.

அன்புடன்
சுபா 

Singanenjam Sambandam

unread,
Sep 3, 2016, 4:51:42 AM9/3/16
to mint...@googlegroups.com
நன்றி  சுபா, நானும்   இதையே   குறிப்பிட்டுள்ளேன்.

தமிழில் வெளிவந்த முதல் நூல் 11.02.1554 இல் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்டது. ஆனால் தமிழ் எழுத்துகளில் அல்ல. ரோமன் எழுத்துருவில். இந்த நூலின் பெயர் Carthila e lingoa Tamul e Portugues 

கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே

 பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம். Henrique எனும் பெயர் அண்டிறிக் என எழுதப் பட்டுள்ளது.

பத்து X பதினான்கு செ.மீ. அளவும் பதினாறு பக்கங்களும் கொண்ட இந்நூல் கொல்லம் நகரில் அச்சிடப்பட்டு 1578 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  20  ஆம் நாள் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் Henrique Henriques எனும் போர்த்துகீசிய  பாதிரியார்.. ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் உள்ளன.


விழியப்  பதிவைக் காண  ஆவலாக  இருக்கிறேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages