செம்பூழி (Bronze age) விரிவாகக் கிடைப்பது
சிந்து - சரஸ்வதி நதிக் கரை ஊர்களே. நதிகளில்
சிந்தும், சரஸ்வதியும் இருக்கு வேதப் பெயர்கள்.
இவற்றின் திராவிடப் பெயர்கள் முறையே:
சீந்து (ஈங்கு மரம்), விசும்பாள்/ வானி
என்பதாகலாம். ஆயிரக் கணக்கான ஊர்கள் இந்நதிக் கரைகளில்
தொல்லியல் அகழ்வாயில் உள்ளன.
இன்னும் 1% தான் தோண்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஈழம் - கிடைப்பதெல்லாம் இரும்பூழி
நாகரீக ஈமச் சின்னங்கள் தான். ~ 800 BCE or later,
தொல்லியலார் சிந்து குஜராத் ... இருந்து நாகரிகம்
கங்கை, காவிரி (உ-ம்: செம்பியன் கண்டியூர்) கரைகளை
அடைந்தன என்று ஆய்வால் தெரிவிக்கின்றனர்.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு. 1800-கி. பி. 1200க்குள்ளே
இருத்தல் வேண்டும் என்று உலகின் தலைசிறந்த வேதவியல்
நிபுணர்கள் கணிக்கிறார்கள். காரணம், மத்திய ஆசியாவில்தான் முதலில்
குதிரைச் சாரட்டுகள் (Sintashta chariots) கிடைக்கின்றன (கி. மு. 2000).
இரும்பு இந்தியாவில் முதலில் 1200 கி.மு. வாக்கில் கிடைக்கிறது.
சிந்து முத்திரைகளைப் பார்த்தால் குதிரையே காணோம். மேலும்
மடிவைத்த மாடே இல்லை. காளைகளையும், எருதுகளையும்
தான் பார்க்கலாம். இருக்குவேதம் மாறாக, குதிரை சாரட்டுகளை
வெகுவாகச் சிலாகித்துப் பேசும். பசுமாடுகள் (கோமாதா) பாராட்டப்படுகின்றன.
ஆனால், சில நூற்றாண்டுக்குப் பின்னர், நந்தி வாகனம் இந்துசமயத்துக்குப்
பிரதானமாகிறது. இது சிந்துநதி நாகரிகத்தின் நினைவெழுச்சி என்பர்.
சரசுவதி நதி என்று ருக்குவேதம் சொல்லும் நதி
வறண்ட காலம் 1800-1700 கி.மு. அதன் பழைய பெயர் நாம் அறியோம்.
அது வைசம்பாள்ய என்று வேதத்தில் குறிப்பு இருக்கிறது.
இது விசும்பாள் (விசும்பு = வானம்) என்பதா? என்று சங்கிருத
அறிஞர்களைக் கேட்டிருந்தேன். (உ-ம்: வானி என்று கொங்குநாட்டு
நதி பின்னாளில் பவானி என்றானது.) இன்றும் சரசுவதி பூமியிலிருந்து
வெளிப்படும் ஊர் பவானிபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒப்புநோக்குக: வானி ஆறு; விசும்பாள் ஆறு.
சரசுவதி நதிக் கரையில் உள்ள ஊரின் முருகனை
அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியுள்ளார். அது பற்றிப்
பின்னர் பார்ப்போம், பலரும் அறியாச் செய்தி.
வறண்ட ராஜஸ்தானத்தில் ஓடும் சரஸ்வதி (இருக்கு வேதம் புகழ்வது)
பழைய தமிழ்ப் பெயர் வானி (அ) விசும்பாள் என்பதாகலாம்,
வைசம்பால்ய - விசும்பாள் எனும் பெயரின் தத்திதாந்தப் பெயர்ச்சொல்.
சரஸ்வதி நதி மணலில் வவ்வும் இடம் வவ்வானி,
இன்றும் பவானி ஸ்தலம் என்ற பெயரில்
இருக்குமறை புகழும் சரஸ்வதி நதிக்கரையில்
உள்ளது.
திராவிடர்களின் ஊர், ஆறுகள் பெயர்களில் மரங்கள்
----------------------------------------------------------------------------------------------
புடைவை - புடவை, உடைமை - உடமை (பொதுவுடமை),
தகைமை - தகமை (தகவிலர் - குறள்).
குழைவி - குழவி (கல்), முரைதலால் முரைசு - முரசு ....
அதுபோல்,
அரை என்பதை அரச மரத்தின் பெயராக தொல்காப்பியம் தருகிறது.
அரைமரவியற்றே (தொல். எழுத்.304).
அரைசு > அரச மரம். சிந்து சமவெளிக் கலைவெளிப்பாடுகளில்
மிக மிக முக்கியமான மரம் அரைசு/அரசு.
Tamil name of the ficus religiosa tree is 'araicu' - so named because
of the noise of bodhi tree leaves in the forest winds and this
phenomenon of murmuring leaves of the peepul trees are mentioned
widely in Indian literature. ஓசையை எழுப்புதலால்,
போர் ஓசையை விரும்பும் கொற்றவை அரைச மரத்தில்
வாழ்பவளாய் சிந்துக் கலைகளில் சித்திரிக்கப்படுகிறாள்.
உ-ம்: எம்-1186 முத்திரை தந்து, விரிவாக எழுதியுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கொற்றவை < கொல்- என்னும் வினையடிப் பிறந்த பெயர்.
நிற்க.
அரப்பு என்பது பச்சையான உசிலம்பொடி.
உசிலந்துளிரின் அரைப்பு அரப்பு எனப்படுகிறது.
இது தமிழ் மருந்து நூல்களிலும் உள்ள செய்திதான்.
http://unarvukal.com/index.php?showtopic=3913&%3Bmode=threaded
"தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை
[...]
உசிலந்துளிர் - அரப்பு, சீக்கிரி மரம்"
சாத்து(தல்)/சாந்து என்ற வாசமரத்தின்
தமிழ்ப்பெயர் சந்து. இதில் இருந்து
ஸம்ஸ்கிருதம் சென்ற சொல் சந்தநம்.
உசிலை மரம் உஞ்சை என்றும் வழங்கியது.
உசிலை/உஞ்சை (= அரப்பு மரம்) என்ற
ஸ்தல விருக்ஷம் உடைய ஊர் தான்
உஜ்ஜயினி. சைவ க்ஷேத்ரங்களில் காசி, காளத்தி,
ஸ்ரீசைலம் (சுவாமி-அம்பாளின் தமிழ்ப்
பெயர்கள் என்ன? இப்போதைய பெயர்கள்
எப்படி மாறின? என்று சுமார் 10 ஆண்டு
முன்னம் எழுதியுள்ளேன்) அண்ணாமலை,
தில்லை, மதுரை, அஞ்சொலாள்-வள்ளலாரின்
மயூரம், நெல்லை, ... போலவே உஞ்சை
மாகாளம் மிகப் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம்.
சந்து > சந்தந ஆவது போல,
உஞ்சை > உஞ்சநம் ஆகியிருக்கிறது.
அரப்பு மர ஸ்தல விருக்ஷத்தில் உஞ்சேனை
இலிங்கத்துக்கு அபிடேகமான பின்னர்
அரப்புச் சாத்து (குருவாயூரில் வாகைசாத்துப்
போல). உஜ்ஜயினம் - உஞ்சனம் - உசிலை
மகாகாளருக்கு அரப்புசாத்து விசேடம்.
வடநாட்டு ஊர்களின் திராவிட வேர்கள்
இன்னும் ஆயப்பெறவில்லை.
தில்லியின் கல்வெட்டுப் பெயர்:
தில்லிகா : தில்லைச் செடி.
பாடலி-புதர் : பாடலிபுத்ர
(மௌரியர்களின் மகத நாடு,
புத்த மண்டிலம். புத்தர் கையில்
பாடலி பூ வைத்திருக்கும்
பழஞ்சிலைப் படங்கள் என்னிடம் உள.
புத்தருக்கு பாடலி/பாதிரி பூ சின்னம்,
தீர்த்தங்கரர் மகாவீரருக்கு
அசோகு/பிண்டி பூ/மரம் சின்னம் போல.
சிந்து நதி - சீந்து/ஈந்து/ - சீகு - ஈச்சமரப் பெயர்
---------------------------------------
சீந்து *இப்போதைய சிந்து நதி* - இது
ஈங்கு மரத்தால் ஏற்பட்ட பெயர்.
(இதனை ப்ராங்ளின் சவுத்வொர்த், பென்சில்வேனியா
- திராவிடவியல் அறிஞரும் எழுதியுள்ளார்.)
ஈக்கு/ஈந்து/ஈங்கு/ஈஞ்சு/ஈச்சை - ஈச்சமரம்,
ஈர்ந்தூர் கிழார் - ஒரு சங்கப் புலவர்.
ஈர்ந்தூர் - ஈங்கியூர் - சென்னிமலை அருகில்.
ஈங்கோய் மலை (இரத்தினகிரியும் அருகிலேதான்).
ஈங்கோய் மலை எழுபது - இயற்கை வருணனை
சிறந்த புத்தகம், படித்துப் பாருங்கள். (15 வெண்பா ஆறுமுக நாவலருக்கே
கிடைக்கவில்லை. இப்போது கிடைத்துவிட்டது)
பிராகிருதச் சொற்களில் முதல் நெடிலெழுத்துக் குறுகும்:
கூர்மம் (ஆமை) > கும்மம் ஆகும்.
அதுபோல, தொல்தமிழர் வாழ்ந்த சீந்து ஆற்றுப்பகுதி சிந்து நதி ஆனது.
சீந்து ஆறு அங்கிருக்கும் ஈங்கு மரங்களால் பேர்பெற்றது.
ஈழம் என்ற மதுவகை (கள்) ஈச்சம் பனைக்குத் தொடர்பானது.
ஈழம் = இலங்கைத் தீவு, மதுவாகிய கள்.
திராவிடர்கள்
சிந்து சமவெளியில் இருந்தபோது பனை, ஈங்கு போன்றனவே
முக்கியமானவை. இவற்றை எங்குச் சென்றாலும் கொண்டாடினர்.
தமிழ் மொழியில் ஈஞ்ச மரத்துக்கு எத்தனை, எத்தனை பேர்கள்.
சீந்து, ஈந்து, ஈங்கு, ஈஞ்சை, ஈயல், ஈசல், ..........
சீந்து (ஈஞ்ச மரம்) இதுவே சிந்து பூமி,
சீ > சீகு, நா > நாகு, கூ > கூகு என்னுமாபோல்.
சீகளம் என்று ஈழத் தீவின் பெயர் , சீ(கு) என்னும்
இந்த ஈஞ்சப்பனையின் பெயரை அடிப்படையாகக்
கொண்டது - சீகு + அளம் = சீகளம்.
தென்னிந்தியாவிலும், ஈழத்திலும்
சிங்கம் என்னும் விலங்கு
5000 ஆண்டுகளாக வாழவே யில்லை.
ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் siihala என்றுதான்
பாலி இலக்கியத்தில் இலங்கை குறிப்பிடப்படுகிறது.
இதன் அடிப்படை சீகு என்னும் ஈஞ்ச மரமே.
குஜராத் பகுதியில் இருந்து குடிபுகுந்த சிங்களவர்கள்
சீகளம் என்ற சொல்லை சிகளம்/சிங்களம் என்றாக்கி
“சிங்கம்” என்னும் விலங்கைச் சின்னமாக்கினர்.
இது நிகழ்ந்தது 5-ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே.
அதற்குமுன் காடுகளிலோ, கலை இலக்கியத்திலோ
”சிங்கம்” பாலி ஆயினும், தமிழ் ஆயினும் இல்லை.
அதையே சிங்களவர் கொடியில் பொறித்துள்ளனர்.
சீ = சீந்து/ஈந்து/ஈங்கு/ஈஞ்சை/ ... என்னும் மரத்தின் மூலப் பெயர்.
இது பாளையைச் சீவிக் கள்ளெடுப்பதால் ஏற்பட்ட
பெயரா? என்று ஆராய இடமுண்டு.
சீ என்பதை ஈஞ்ச மரத்திற்கான பெயராகப் பேசும் வெகு அரிய வழக்கை
இன்றும் கொங்கு நாட்டுச் சொற்களில் கேட்கலாம்.
(1) சீமாறு என்றால் விளக்குமாறு.
(2) சீவக்கட்டை < சீகக்கட்டை
(Cf. பாவக்காய் < பாகற்காய்)
(சீகு (ஈஞ்சை) மரத்தின் ஈர்க்குகளால் ஆனது).
(3) ஈக்கமாறு < சீக்கமாறு (< சீகு)
கவிஞர் சிற்பி அவர்களின் “அக்கா” - கவிதை:
http://groups.google.com/group/panbudan/msg/5856bd1a1f6bd054
[சீவக்கட்டை என்னும் சொல்லாட்சியைப் பார்க்கலாம்.]
சிந்து/சீந்துநதி (பாக்கிஸ்தானத்துக்கு) ஏற்பட்டதும் ஈஞ்சம்
காடுகளாலேயே.
திராவிடர் சிந்து சமவெளியில் வாழ்ந்தனர் என்பதற்குச் சீரிய ஆதாரம்.
ஈழவக்கத்தி என்பதைப் பாளை சீவும் கத்தி
என்ற பொருளில் தொல்காப்பிய உரை குறிப்பிடுகிறது.
சீ(கு) மரப் பாளைகளில் இருந்து வடியும் கள்
சீழ்/சீழம் எனப்படுகிறது.
கரிய இரும்புக்கு மாழை (< மா ‘கருப்பு, ஒளிர்வது’),
நெஞ்சில் கோக்கும் கபத்துக்குக் கோழை ( < கோ-)
அதுபோல், சீழம் < சீ-.
பின்னர் ஈழம் < சீழம். (Cf. சிறகு:இறகு, சிப்பி:இப்பி).
சிங்களர் ஈழத்தின் பழைய மொழி “எலு” என்கிறார்கள்.
இது ஈழம் என்ற சொல்லின் குறுக்கமே:
எலு:இழு (< ஈழம்). சிந்து < சீந்து, கும்மம் < கூர்மம், ...
என்று பிராகிருதத்தில் ஆவதை நோக்குக.
தென்னிந்திய மன்னர்களுடன் ஈழநாட்டு மன்னர்கள்
திருமணத் தொடர்புகளை வடமொழியில் உள்ள
செப்பேடுகள் “சிந்து குலம்” என்று ஈழ நாட்டாரைக்
குறிப்பிடுகின்றன. வடக்கே சிந்து என்பது ஒருவகைப்
பனைமரம் என்பதற்கு இதுவும் நல்ல சான்றாதாரம் ஆகும்.
(T. N. Subramaniyan, Pallavas in South East Asia).
இலங்கையை ஒட்டி உள்ள மாலத்தீவு (மாலைத்தீவில்)
திராவிடர்கள் ஆதியில் இருந்தமை:
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html
(Prof. Clarence Maloney, Columbia University)
எனவே தொல்பழங்காலத்தில் இலங்கை, மாலைத்தீவு
திராவிடர்கள் வாழ்ந்த இடங்கள். சிறிது சிறிதாய்
சிங்கள மொழிபேசுவோர் கைவசம் ஆகியுள்ளது.
>(ஈழவர் என்பது கேரளாவில் ஒரு குடி. ஈழத்தவர் என்பவர்
>ஈழத்தில் வாழும் மக்கள். ஈழத்தமிழர்கள் ஈழத்தில் வாழும்
>தமிழர்கள், அவர்களை ஈழவர் என்பது பிழை).
மு. மணிவண்ணன் தமிழ்மன்றம் குழு இழையில் ஈழவர் என்பது கேரளாவில்
ஒரு சாதிப் பெயர், ஈழத் தீவர்களுக்குப் பொருந்துமா? என்று
கேட்டிருக்கிறார்.
வலம் வருதல் - ஊர்வலம், தேர்வலம் - எனவே ஒரு வாகன ஓட்டியை
வலவன் என்கிறோம். தமிழ் > தமிழவன் என்றும் பெயர்கள் உள்ளன.
அதுபோல், ஈழம் > ஈழவன் என்றும் இலங்கைத் தமிழர் புழங்குவதைப்
பார்க்கலாம். உ-ம்: ஒரு போராட்டக் குழு, ஈராஸ், இச்சொல்லைப்
பயன்படுத்துகிறது.
கேரளாவில் சில ஈழவ வரலாற்றாசிரியர்கள் தங்கள் முன்னோர்கள்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்று எழுதியுமிருக்கிறார்கள்.
இன்னொரு பெயரைப் பார்த்தால் அது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.
தீயர், இது தீவர் என்பதன் மாற்றம் (உ-ம்: உடம்படுமெய் மாறும்
(1) கோயில், கோவில் (2) வலைவர், வலையர் (சங்க இலக்கியம்) ...
இணைச்சொற்கள்).
நா. கணேசன்
>> மு. மணிவண்ணன் தமிழ்மன்றம் குழு இழையில் ஈழவர் என்பது கேரளாவில்
>> ஒரு சாதிப் பெயர், ஈழத் தீவர்களுக்குப் பொருந்துமா? என்று
>> கேட்டிருக்கிறார்.
>இந்தக் கேள்வி எனக்குள்ளும் உண்டு ஐயா!! ஈழவர் என்பது கேரளத்தின் ஒடுக்கப்பட்ட
>சமுதாயமாக முன்பு இருந்தது.
>கேரளம் என்பதே தமிழ் மண்ணின் இன்னொரு பகுதிதானே? சேர, இலங்கை நாடுகளுக்கிடையே
>இருந்த தொடர்பு குறித்த ஓர் அழகான கட்டுரையை பதிவொன்றில் படித்த நினைவு. தேட
>முடிந்தால் இங்கே இடுகிறேன்.
>நல்ல கட்டுரையை இட்டமைக்கு நன்றி!!
தங்கள் பின்னூட்டிற்கு நன்றி, ஆசிப்.
சென்னைப் பேரகராதி தரும் விளக்கம், ஈழம் என்னும் தீவில் இருந்து
தமிழகத்திற்குச் சீவல் தொழில் ஆற்றப் புலம்பெயர்ந்தோர் என்று
குறிப்பிடுகிறது.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:2330.t...
*ஈழவன் īḻavaṉ
, n. < ஈழம். [T. īḍigavaḍu, M. īḻavaṉ.] One of a caste of people who
emigrated from Ceylon in the remote past and settled in Tinnevelly,
Travancore and Malabar, the caste of toddy-drawers; மலையாள நாட்டிற்
கள்ளிறக்குஞ் சாதியார். தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவர்
ஏறப்பெறாதாராகவும் (S.I.I. ii, 509).
-----------------
திராவிடமொழிகள் யாவற்றிலும் ஈழம் இருக்கிறது தெலுங்கு, கன்னடம் நம்
சிறப்பு ழகரத்தை டகரமாக்கிவிடும்: ஈழம் > ஈடம் (ஈடிகா என்னும் சொல்,
தீபா > தீபிகா ஆவதுபோல்.
ஒப்பு: சோழன் : சோடன். ஓரியாவை ஆண்ட, பூரி ஜகன்னாதர்
ஆலயம் கட்டியவன் சோழ மன்னனின் மகள் வயிற்றுப் பேரன் - அதனால் அவனுக்குச்
சோடகங்கதேவன் எனப் பெயர். சோழகங்கன் சோடகங்கன் ஆனது.
பாதிரியார் கால்ட்வெல் ஐயர் ஈழவர்களிடையே கிறிஸ்துவ மிஷனரியாய்ப்
பணிபுரிந்தவர். கால்ட்வெல் தமிழ்ச் சமயங்களை மோசமாக எழுதியுள்ளார்.
அவரது சிறந்த பணி சென்னை கலெக்டர் எல்லிஸ் (வள்ளுவரைச் [*]
சமணராகக் காட்டி அழகான பொற்காசுகளை மதறாஸ் மிண்ட்டில் அச்சிட்டவர்)
தந்த “திராவிட மொழிக் குடும்பம்” கோட்பாட்டை
விளக்கித் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்* யாத்தமை. கால்டுவெல்
voiceless fricative ஆக உயிரெழுத்தின் நடுவே வரும் ககர, சகர எழுத்துக்கள்
h, s தெரியவில்லை. பின்னர் சி. இலக்குவனார், சுவலபில், ... ஏராளமான
தமிழ் மொழிநிபுணர்கள் குறித்துவிட்டனர்.
அதுபோல, சிங்களம்/சீகல என்ற சிங்களச் சொல்லில் இருந்து தோன்றியதுதான்
ஈழம் என்ற வார்த்தை என்று கால்ட்வெல் குறித்துவிட்டார். “அது தவறு” என்று
நண்பர் பீற்றர் ஷல்க் புஸ்தகமே எழுதினார். ஈழம் என்ற இடப் பெயர் கள்ளில்
இருந்துதான் உருவாகிறது என்று உறுதிபடச் சொல்கிறார்.
இருப்பினும் அவருக்கு, சீ/சீகு என்பது ஈச்சம் பனை என்ற ஆட்சி தமிழில்
உண்டு. ஈழவர் பாளைக்கத்தியால் சீவி வடிவது கள். சீந்து/ஈந்து - ஈஞ்சைப்
பனை.
ஈங்கியூர், ஈங்கோய் தமிழ்நாட்டில் இருக்கிற ஊர்கள் ஈழம் < சீழம்
“ஒருவகைப் பனங் கள்” என்பதை விளக்கவும், திராவிட மொழிகள் அனைத்திலும் \
இருக்கும் ஈழம் ‘கள்’ - அதன் தொன்மை பற்றிக் குறிக்கவுமே இம்மடலை
எழுதினேன்:
http://groups.google.com/group/tamil_ulagam/msg/e7a1be16c942b14c
மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். சீத்தலை எனபதற்கு folkstory
தெரியும் அல்லவா? மாணவர் பிழைகளுக்காக எழுத்தாணியால் தலையில் குத்திப்
புண்ணாம் :) இதை வைத்து மஹாகவி ருத்ரமூர்த்தி ஒரு லிமெரிக்
எழுதியிருக்கிறார் - அக் குறும்பாவில் தமிழ்ச் சந்தி விளையாடும், சந்தி
இலக்கணம்
தெரிந்தால் அதில் பொதிந்த காமச்சுவை புலப்படும்.
நரிவெரூஉத்தலையார் என்றால் நரி பயப்படும் தலையன் என்று பொருள் தராது.
நரிவெரூத்தலை ஓர் இடப்பெயர். அதுபோல் சீத்தலை ஓர் இடப்பெயர் (குழித்தலை
போல்).
சீத்தலை = சீ + தலை, சீ = (ஈஞ்சங் குடும்பப்) பனை.
சீகாழி கூட சீகு + ஆழி, கடலருகே உள்ள பனை மரம் நிறைந்த இடம் என்ற எண்ணம்
எனக்குண்டு. தேவார காலத்தில் சீ(கு) ஸ்ரீ என்னும் முன்னொட்டாக
சம்பந்தர் கருதினாரோ?
மிக அன்புடன்,
நா. கணேசன்
[*] குறிப்பு: கலைஞர் கருணாநிதி அவர்கள் “ஐயன் திருவள்ளுவர்” என்பது
இலக்கணப்பிழை, “ஐயர் திருவள்ளுவர்” என்று அவர் எழுதவேண்டும்
என்று தைரியமாகக் குறிப்பிட்ட இரா. திருமுருகன் நேற்று இயற்கை
எய்திவிட்டார்.
----------
ஆமாம், ஷேக் அப்துல்லா, மகன் ஃபரூக், பேரன் ஒமார் அப்துல்லா
போல என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்:
http://www.vinavu.com/wp-content/uploads/2009/06/indian-ugly-dynasty-politics14.jpg
தமிழ்நாட்டில் வழிவழியாக இனிக் கலைஞர் குடும்பம் முடியாட்சி
என்பதைக் 2 கழகக் காரர்கள் என்ன நினைக்கின்றனர்.
அமெரிக்கா போல, இந்தியாவில் 5 ஆண்டுக்கொருமுறை வேறு குடும்ப
அங்கத்தினருக்கும்
வாய்ப்புக் கொடுக்க வேண்டுமா? திரு. நரசையா அவர்களின் தி ஹிந்து கட்டுரை:
Democracy that is more a monarchy
http://www.hindu.com/op/2009/05/31/stories/2009053150011400.htm