அழிந்து கொண்டிருக்கும் முன்னோரின் சுவடுகளைப் பற்றித் தெரிந்தவரையில் பகிர்ந்துகொள்வோமே......!!!

879 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Mar 20, 2011, 8:35:10 AM3/20/11
to Groups

தமிழனுக்கிடையே பல்வேறு மதங்கள்,இனங்கள்,இனங்களுக்குள் குழுக்கள் ,குழுக்களுக்குள் பிரிவுகள் என இருந்தபோதிலும் , விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்தபோதிலும் கூடிவாழ்வதில் முன்னுதாரணமாகவே இருக்கிறோம்.

இந்த இழையின் நோக்கம் .. எந்தப் பிரிவு மக்களாய் இருந்தாலும் ...அவர்களுக்கென்று சில தனிப்பட்ட வாழ்க்கைமுறைகள் ,பழக்க வழக்கங்கள் கண்டிப்பாக இருக்கும் ...அதனை இங்கே பதிவோம் ........

பல பழக்க வழக்கங்கள் இப்போது வழக்கொழிந்தே போய்விட்டன.....இந்தத் தலைமுறையினருக்கு இதில் பாதிக்கும் மேல் தெரியாமல் போய்விடும் வாய்ப்பே அதிகம் ....

எனவே முடிந்தவரையில் நாமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வோம் இங்கே.......

தேவையில்லை எனில் சாதி/பிரிவுகளின் பெயரை தவிர்த்துவிடலாம்...படிப்பவர்கள் புரிந்து கொண்டாலும் பெரிய தவறொன்றும் இல்லை ,.............

மு.கு : இது நமது பண்பாட்டினை பதிவு செய்யும் ஒரு முயற்சிமட்டுமே ....
சாதீயச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கம் எதுவும் இல்லை ...

தென்தமிழகம் : 
1) தாய் வழியில் மட்டும் தொடரும் உறவுகள் / தாய்வழிச் சமுதாயம் :
தெந்தமிழகத்தின் ஒரு இனம் .. இங்கே தாய்வழியில்தான் உறவுகள் தொடர்ந்து வரும் வழியில் அமைப்பு உள்ளது ....
ஒரு இனம் ,அதனுள் குழுக்கள் (வளவு), அதனுள் பிரிவு (கிளை), அதனுள் உட்பிரிவு (கொத்து) என பல வகைகள்...
இது முக்கியமாக திருமண உறவுகளை நிர்ணயிக்கும் பொருட்டே அமைந்திருக்கிறது ..

இன்னும் விளக்கமாக :
பெண்ணின் பிரிவு/கிளை X எனவும், ஆணின் பிரியு/கிளை Y எனவும் கொண்டால் ...இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் (ஆண்/பெண் இருபாலாருக்கும்) தாயின் கிளையான X தான் தொடர்ந்து வரும் . தந்தையின் கிளை அவருடன் முடிந்துவிடும் ..

ஒரு தாய் வயிற்று ஆண், பெண் குழந்தைகளுக்கும் ஒரே கிளைதான் வரும் என்பதால் அக்காமகள் , தாய்மாமன்போன்ற நெருங்கிய/ ரத்தத் தொடர்புள்ள சொந்தங்களுக்குள் நடக்கும் நடக்கும் திருமணம் தடையாகி விடுகிறது . 

வெளியிடத்தில் பார்த்து நடக்கும் திருமணத்திலும் ஒரே கிளை உள்ளவர்கள் மணம் முடிக்க முடியாது . அவர்களும் சகோதர உறவாகக் கருதப்படுவர்.

குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று ரத்தசம்பந்தத் திருமணங்களை தவிர்க்கச் சொல்கிறது இன்றைய மருத்துவ உலகம்  
ஆனால்.......
 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இது நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது இங்கு...பெருமை கொள்வோம்

( இந்த தாய்வழி உறவுமுறைக்கு முன்னுரிமை இருந்ததால்தான் ஆரம்பத்தில் கிறித்துவைவிட மரியன்னை வழிபாடு தென்தமிழகத்தில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றக் கருத்தும் உண்டு )

2) பெண் குழந்தைக்கே முன்னுரிமை :
திருமணம்..வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு.....
 நடைமுறையில் பெரும்பாலும் நகை, நட்டு ,ரொக்கத்துடன் திருமணச் செலவும் பெண்வீட்டார் தலையில்தான் விடியும் ......

ஆனால் இந்த இனத்தில் எல்லாம் தலை கீழ் ....
 
நகர வாழ்க்கையின் தாக்கத்தில் சில மாற்றங்கள் வந்துவிட்டாலும் இன்னும் கிராமங்களில் 
ரொக்கம் வாங்குவது கேவலமான செயல்
மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதிலிருந்து , திருமணச் செலவுகள் அனைத்தும் மணமகன் வீட்டாரின் பொறுப்பு ....இன்னும் கூடுதலாக மணப் பெண்ணுக்கு வரும் மொய்ப்பணம் பெண்வீட்டாரையேச் சேரும் (மாப்பிள்ளை வீட்டுச் சாப்பாடு/செலவில் ...பெண் வீட்டுக்கு வருமானம் :)))

(திருமணம் என்றால் இங்கே பெண்வீட்டாருக்கு வருமானம் தான் .... நகைச் செலவைத் தவிர்த்து :)


3) தந்தைவழியில் மட்டும் தொடரும் குலதெய்வ வழிபாடு : 
தந்தையின் குலதெய்வமே ...மனைவி,குழந்தைகளின் குல தெய்வமாகிறது ....
பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின் கணவனின் குலதெய்வமே பெண்ணுக்கும் தெய்வம் என்றாகிறது ..( ஆண் தன்குலத்தையே மொத்தமாக விட்டுத்தரும்போது ...பெண் அவனது தெய்வத்தை ஏற்றுக் கொளவதில் தப்பில்லை...:))

பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........

வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள் , கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா, உறவுகளின் சந்திப்பு என புலம் பெயர்ந்து கிடப்பவர்களும் ஓரிடத்தில் நம்பிக்கையின் பெயரில் சந்திப்பார்கள் ....

தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள் அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைவழி உறவின் முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு பரிமாறிக்கொள்வார்கள் ....

4) கோவில் கொடைகள் :
ஆடுகள் ,சேவல் பலியிடுவதிலும் ஒரு வரைமுறை உண்டு..

செம்மறி,வெள்ளை, கறுப்பு , செங்கிடா என ஒவ்வோரு குறிபிட்ட பிரிவிரும் ஓரு குறிப்பிட்ட நிறம் கொண்ட ஆடுதான் பலியிடமுடியும் ..

விழாவிற்கு வரும் பிற பிரிவினர் இந்த வித்தியாசம் /இடம் புரிந்துகொண்டு ...........திருமண உறவுகளுக்காகப் பின்னர் தொடர்பு கொள்வார்


பி.கு : இது அனைவருக்குமான பொது இழை ...தங்கள்ப் பகுதியின் சிறப்புகளை(மட்டும்) இங்கே பதியுங்கள்....

ஆவலுடன் காத்திருக்கிறேன் ......

தொடரலாமா......wan-wan[1].gif
 

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral



wan-wan[1].gif

s.bala subramani B+ve

unread,
Mar 20, 2011, 10:39:42 AM3/20/11
to mint...@googlegroups.com
என்னுடிய கடலோர பகுதிகள் தொடர்பான ஆய்வில் பல இடம்கள் மருதமாய் இருந்து இன்று நெய்தலாகி விவசாயம் காலனிக்கு போனவர்கள் இன்று மதம் மாறி கடலுக்கு போகின்றதை பல கரைகளில் பார்த்து இருக்கிறேன்

அது போல் நெய்தல் பின் வாங்கிய இடம்கள் உப்பளமாகி போனதையும் பார்க்கிறோம்

அதே போல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள் என்ற காரணத்திற்காக  சுறா மீனை உளி எரிந்து  அழகாக பிடித்த  நுளையர் இன மக்கள் இன்று கயிறு திரித்து வருவதையும் பார்க்கிறேன்

சூரியன் உச்ச கட்டத்தில் மகவு பிறந்தால் அறிவாளியாக இருப்பன் என்ற நம்பிக்கையை ஆடி மதத்தில் சேர்ந்தால் வெயிலில் குழந்தை  பிறக்கும் என்று சொல்லி மாற்றியதியும் பார்க்கிறோம்

ஆமை புகந்த வீடு உருபடாது என்று  சொல்லி

கடல் ஆமைகளின் கடல் வழிகளை    பயன் படுத்தி  உலகை வளம் வந்த நம் கடலர்களின் கடவுள்களை
 வெட்டி சாப்பிடும் பழக்கமும் நம்மில் இருக்கிறது
பொதுவாக மீனவர்கள் ஆமைகளை உண்ணுவதில்லை

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே என்பது இடம்களில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்களும்  உண்டு . இன்னும் ஏரளாமான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது


ஒருங்கிணைந்து செயல் பட்டு

நமது பெருமை நன்கு  வெளிப்பட செய்ய  வேண்டும்

அன்புடன்

சிவ பாலசுப்ரமணி

Raja sankar

unread,
Mar 20, 2011, 12:42:30 PM3/20/11
to mint...@googlegroups.com
//சூரியன் உச்ச கட்டத்தில் மகவு பிறந்தால் அறிவாளியாக இருப்பன் என்ற நம்பிக்கையை ஆடி மதத்தில் சேர்ந்தால் வெயிலில் குழந்தை  பிறக்கும் என்று சொல்லி மாற்றியதியும் பார்க்கிறோம்
//

சூரியன் உச்ச கட்டம் என்பது அபிஜித் மூகூர்த்ததை குறிக்கிறது என நினைக்கிறேன். ஜாதக அறிஞர்கள் மேலும் விளக்கம் தரலாம். இது தினமும் வரும். 

வெய்யில் காலங்களில் குழந்தை பிறப்பு என்பது அம்மை நோய் முதலான நோய்கள் வர ஏதுவாக இருக்கும் என்பதால் சொல்லப்பட்டது. அதுவும் எல்லா இடங்களிலும் பின்பற்ற படவில்லை.  சினிமாவில் மட்டும் தான் எங்கிருந்தாலும் ஆடி மாதம் பிரிக்கவேண்டும் என்றெல்லாம் காண்பிக்கிறார்கள். 


இந்த இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன். 

ராஜசங்கர்



2011/3/20 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

வில்லன் .

unread,
Mar 20, 2011, 12:56:48 PM3/20/11
to mint...@googlegroups.com
ஆடி மாசத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன் கருத்தரித்தால் குழந்தை உச்சபட்ச
வெயிலான கத்திரி வெயிலுக்கு முன்பே பிறந்தாலும் அந்த வெயிலையும் பிஞ்சு
குழந்தை சமாளிச்சுதானே ஆகனும்?

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
இப்படிக்கு

"ஸ்ரீ"

"கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்,
புதுமையான தமிழகம் உருவாக வாக்களிப்பீர்
முரசு சின்னத்திற்க்கு"

fonio sivakumar

unread,
Mar 20, 2011, 12:44:51 PM3/20/11
to mint...@googlegroups.com
நன்று !!!!

2011/3/20 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
என்னுடிய கடலோர பகுதிகள் தொடர்பான ஆய்வில் பல இடம்கள் மருதமாய் இருந்து இன்று நெய்தலாகி விவசாயம் காலனிக்கு போனவர்கள் இன்று மதம் மாறி கடலுக்கு போகின்றதை பல கரைகளில் பார்த்து இருக்கிறேன்

--

Raja sankar

unread,
Mar 21, 2011, 1:05:29 AM3/21/11
to mint...@googlegroups.com
வில்லன், 

பிஞ்சு சமாளித்து தான் ஆகவே வேண்டும் வேறு வழியில்லை. ஆனால் இவைகள் வெய்யில் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் தான் பின்பற்றபட்டன. 

கொங்கு பகுதிகளில் இவை பெரும்பாலும் இல்லை. ஏனென்றால் வெய்யில்காலங்களில் அல்லது இந்த மாதிரி பிரச்சினை என்றால் தோட்டத்திற்கு போய் விடுவார்கள். வேப்பமரம், தென்னை மரம் என குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் இருந்து பின் வருவார்கள். 

ஆக எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக போட்டு கூழாக்கி இவைகள் இப்படீத்தான் என்று சொல்வது சரியல்ல. 400 கிமீக்குள்ளேயே இவ்வளவு மாற்றங்கள், இவைகள் தெரியவில்லை என்றால் மற்ற மாநிலங்களை பற்றி என்ன சொல்வது?

ராஜசங்கர்

2011/3/20 வில்லன் . <vom...@gmail.com>

LK

unread,
Mar 21, 2011, 1:08:25 AM3/21/11
to mint...@googlegroups.com
ராஜசங்கர் இதுவும் கூட பலவேறு இனங்களுக்குள் மாறுபடும் என்று எண்ணுகிறேன். எங்கள் குடும்பத்தில் இந்தப் பழக்கம் இல்லை. ஆடி பிறப்பு அன்று புது மாப்பிள்ளை பெண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்போம் அவ்வளவுதான். மாதம் முழுவதும் பிரிப்பது இல்லை 

2011/3/21 Raja sankar <errajasa...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Subashini Tremmel

unread,
Mar 21, 2011, 8:17:33 AM3/21/11
to mint...@googlegroups.com, துரை.ந.உ, Subashini Kanagasundaram
இந்த விஷயம் நாம் நேரில் பேசியிருக்கின்றோம்.  இதனைப் பதியத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி திரு.துரை.  தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

2011/3/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

wan-wan[1].gif

வில்லன் .

unread,
Mar 21, 2011, 9:54:33 PM3/21/11
to mint...@googlegroups.com
என்ன காரணத்துக்கான சடங்கு சம்பிராதாயம் என்றே தெரியாத போது சடங்கையும்
சம்பிராதாயத்தை துறக்க இயலாமல் அதற்கு அறிவியல் முலாம் பூசி அதை அவசியம்
என நிறுவ நினைக்கும் முயற்சி என்பதே எனது கருத்து.

இதே போல கோலம். ஆட்காட்டி விரல் கட்டை விரல் சேர்வது பெண்களுக்கு நல்லது
என்பார்கள்.

துரை.ந.உ

unread,
Apr 17, 2011, 8:09:10 AM4/17/11
to Groups
2. ஊர்களின் பெயர்க் காரணம் :(பெரியவர்கள் தெளிவுபடுத்துங்கள் )
 
 நமது முன்னோர்கள் ..ஊர்களுக்கான பெயர்களை காரணமில்லாமல் வத்திருக்க மாட்டார்கள் ....இன்றைய சூழலில் ஒரு இடத்தின் அடையாளமாக மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.....

உண்மையான பெயர்க்காரணங்களை அறிந்து கோண்டால் ....கூடவே மறைந்து கொண்டிருக்கும் நம் முன்னோரின் பெருமையின் ஒரு பகுதியையும் தெரிந்து கொள்ளலாமே .......

ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் படைப்பிரிவுகளின் பலம் , படைகள் தங்கிச்செல்லும் இடம் சார்ந்ததாக இருக்குமென்று கேட்டிருக்கிறேன் .

’பட்டி’ என முடியும் ஊர்களில் காலாட்படைகள் இருந்ததாகவும் ,
 ‘பாளையம்’ எனமுடியும் ஊர்கள் பாசறைகளாகவும், 
’பேட்டை’ எனமுடியும் ஊர்கள் ,பயணவண்டிகள் தங்கிச்செல்லும் இடங்களாகவும் இருந்திருக்கலாம் என அறிகிறேன் ..(உறுதியான சான்றுகள் இல்லை என்னிடம்...கேள்விப்பட்டதுதான் ....)

தவறிருக்கலாம் ..தெரிந்தவர்கள் தெளிவாக்குங்கள் 

இதுபோலவே ‘பாடி,விளை,குடி,குறிச்சி, பள்ளி, மங்கலம் ‘ என முடியும் ஊர்களுக்கும் ஏதாவது பொதுக் காரணங்கள் இருக்கலாம் ......

இதுபோல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன ...

அறிந்தவர்கள் மேலும் விபரங்கள் தந்து உதவுங்கள் .....
 

2011/3/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
wan-wan[1].gif

devoo

unread,
Apr 17, 2011, 8:54:10 AM4/17/11
to மின்தமிழ்
நன்றி, துரை சார்
இது பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கும் ஆர்வம் உண்டு.

நெல்லைப் பகுதியில் ‘வலசை’ என்றும், கொங்குப் பகுதியில் ‘வலசு’ என்றும்
சிற்றூர்ப் பெயர்கள் அமைந்திருக்கும்.
தென் மாவட்டங்களில் ‘பட்டி’; வடமாவட்டங்களில் ‘பட்டு’ - கல் பட்டு,
அத்திப்பட்டு.
ஏரி, ஊரணி, தாங்கல் என்னும் பெயர்களிலும் ஊர்கள் .
காவிரிப் படுகையில் ‘குடி’ என முடியும் ஊர்கள் நிறைய உண்டு.


தேவ்

On Apr 17, 7:09 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> *2. ஊர்களின் பெயர்க் காரணம் :(*பெரியவர்கள் தெளிவுபடுத்துங்கள் )


>
>  நமது முன்னோர்கள் ..ஊர்களுக்கான பெயர்களை காரணமில்லாமல் வத்திருக்க
> மாட்டார்கள் ....இன்றைய சூழலில் ஒரு இடத்தின் அடையாளமாக மட்டுமே நாம்
> பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.....
>
> உண்மையான பெயர்க்காரணங்களை அறிந்து கோண்டால் ....கூடவே மறைந்து கொண்டிருக்கும்
> நம் முன்னோரின் பெருமையின் ஒரு பகுதியையும் தெரிந்து கொள்ளலாமே .......
>
> ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் படைப்பிரிவுகளின்
> பலம் , படைகள் தங்கிச்செல்லும் இடம் சார்ந்ததாக இருக்குமென்று கேட்டிருக்கிறேன்
> .
>

> *’பட்டி’* என முடியும் ஊர்களில் காலாட்படைகள் இருந்ததாகவும் ,
> * ‘பாளையம்’ *எனமுடியும் ஊர்கள் பாசறைகளாகவும்,
> *’பேட்டை’* எனமுடியும் ஊர்கள் ,பயணவண்டிகள் தங்கிச்செல்லும் இடங்களாகவும்


> இருந்திருக்கலாம் என அறிகிறேன் ..(உறுதியான சான்றுகள் இல்லை
> என்னிடம்...கேள்விப்பட்டதுதான் ....)
>
> தவறிருக்கலாம் ..தெரிந்தவர்கள் தெளிவாக்குங்கள்
>

> இதுபோலவே *‘பாடி,விளை,குடி,குறிச்சி, பள்ளி, மங்கலம் ‘* என முடியும்


> ஊர்களுக்கும் ஏதாவது பொதுக் காரணங்கள் இருக்கலாம் ......
>
> இதுபோல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன ...
>
> அறிந்தவர்கள் மேலும் விபரங்கள் தந்து உதவுங்கள் .....
>

> 2011/3/20 துரை.ந.உ <vce.proje...@gmail.com>


>
>
>
> > தமிழனுக்கிடையே பல்வேறு மதங்கள்,இனங்கள்,இனங்களுக்குள் குழுக்கள்
> > ,குழுக்களுக்குள் பிரிவுகள் என இருந்தபோதிலும் , விரும்பத்தகாத பல நிகழ்வுகள்
> > நடந்தபோதிலும் கூடிவாழ்வதில் முன்னுதாரணமாகவே இருக்கிறோம்.
>
> > இந்த இழையின் நோக்கம் .. எந்தப் பிரிவு மக்களாய் இருந்தாலும்
> > ...அவர்களுக்கென்று சில தனிப்பட்ட வாழ்க்கைமுறைகள் ,பழக்க வழக்கங்கள்
> > கண்டிப்பாக இருக்கும் ...அதனை இங்கே பதிவோம் ........
>
> > பல பழக்க வழக்கங்கள் இப்போது வழக்கொழிந்தே போய்விட்டன.....இந்தத்
> > தலைமுறையினருக்கு இதில் பாதிக்கும் மேல் தெரியாமல் போய்விடும் வாய்ப்பே அதிகம்
> > ....
>
> > எனவே முடிந்தவரையில் நாமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வோம்
> > இங்கே.......
>
> > தேவையில்லை எனில் சாதி/பிரிவுகளின் பெயரை தவிர்த்துவிடலாம்...படிப்பவர்கள்
> > புரிந்து கொண்டாலும் பெரிய தவறொன்றும் இல்லை ,.............
>

> > *மு.கு : *இது நமது பண்பாட்டினை பதிவு செய்யும் ஒரு முயற்சிமட்டுமே ....


> > சாதீயச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கம் எதுவும் இல்லை ...
>

> > *தென்தமிழகம் :*
> > *1) தாய் வழியில் மட்டும் தொடரும் உறவுகள் / தாய்வழிச் சமுதாயம் *:


> > தெந்தமிழகத்தின் ஒரு இனம் .. இங்கே தாய்வழியில்தான் உறவுகள் தொடர்ந்து வரும்
> > வழியில் அமைப்பு உள்ளது ....
> > ஒரு இனம் ,அதனுள் குழுக்கள் (வளவு), அதனுள் பிரிவு (கிளை), அதனுள் உட்பிரிவு
> > (கொத்து) என பல வகைகள்...
> > இது முக்கியமாக திருமண உறவுகளை நிர்ணயிக்கும் பொருட்டே அமைந்திருக்கிறது ..
>

> > *இன்னும் விளக்கமாக *:
> > பெண்ணின் பிரிவு/கிளை *X* எனவும், ஆணின் பிரியு/கிளை *Y* எனவும் கொண்டால்
> > ...இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் (ஆண்/பெண் இருபாலாருக்கும்) *தாயின்
> > கிளையான X தான் தொடர்ந்து வரும் *. தந்தையின் கிளை அவருடன் முடிந்துவிடும் ..


>
> > ஒரு தாய் வயிற்று ஆண், பெண் குழந்தைகளுக்கும் ஒரே கிளைதான் வரும் என்பதால்
> > அக்காமகள் , தாய்மாமன்போன்ற நெருங்கிய/ ரத்தத் தொடர்புள்ள சொந்தங்களுக்குள்
> > நடக்கும் நடக்கும் திருமணம் தடையாகி விடுகிறது .
>
> > வெளியிடத்தில் பார்த்து நடக்கும் திருமணத்திலும் ஒரே கிளை உள்ளவர்கள் மணம்
> > முடிக்க முடியாது . அவர்களும் சகோதர உறவாகக் கருதப்படுவர்.
>
> > குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று ரத்தசம்பந்தத்
> > திருமணங்களை தவிர்க்கச் சொல்கிறது இன்றைய மருத்துவ உலகம்
> > ஆனால்.......
> >  நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இது நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது
> > இங்கு...பெருமை கொள்வோம்
>
> > ( இந்த தாய்வழி உறவுமுறைக்கு முன்னுரிமை இருந்ததால்தான் ஆரம்பத்தில்
> > கிறித்துவைவிட மரியன்னை வழிபாடு தென்தமிழகத்தில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
> > என்றக் கருத்தும் உண்டு )
>

> > *2) பெண் குழந்தைக்கே முன்னுரிமை *:


> > திருமணம்..வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு.....
> >  நடைமுறையில் பெரும்பாலும் நகை, நட்டு ,ரொக்கத்துடன் திருமணச் செலவும்
> > பெண்வீட்டார் தலையில்தான் விடியும் ......
>
> > ஆனால் இந்த இனத்தில் எல்லாம் தலை கீழ் ....
>
> > நகர வாழ்க்கையின் தாக்கத்தில் சில மாற்றங்கள் வந்துவிட்டாலும் இன்னும்
> > கிராமங்களில்
> > ரொக்கம் வாங்குவது கேவலமான செயல்
> > மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதிலிருந்து , திருமணச் செலவுகள்
> > அனைத்தும் மணமகன் வீட்டாரின் பொறுப்பு
>
> ...
>

> read more »
>
>  wan-wan[1].gif
> 7KViewDownload

Raja sankar

unread,
Apr 17, 2011, 10:41:25 AM4/17/11
to mint...@googlegroups.com
தேவ்,

வலசு என்பது வலுவு என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம். வலுவு என்றால் கூட்டம் அல்லது பிரிவு என பொருள் படும். ஒரே கோத்திரம் அல்லது குலத்திற்குள் இருக்கும் பிரிவுகளை குறிப்பிட இந்த வலுவு என்பது பயன்படுகிறது. வலுவு கொஞ்சம் பெரிதானால் ஊர் ஆகும். ஊர் பெரிதானால் கரை ஆகும். கரை பெரிதானால் நாடு.

பட்டி என்பது ஆடுமாடுகளை கட்டிவைக்க பயன் படும் இடம். தொண்டுபட்டி எனவும் சொல்வார்கள்.

கொங்கில் பாளையம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் தெலுங்கு நாயக்க மன்னர்கள் காலத்தில் குடியேற்றம் அல்லது உருவாக்கப்பட்டவை.

மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் அந்தணர்களுக்கோ அல்லது கோயில்களுக்கு நிவந்தமாக விடப்படவை. சதுர்வேதி மங்கலங்கள் உண்டு.

பள்ளி எனும் ஊர் வர இருகாரணங்கள் இருக்கலாம். ஒன்று சிரமணர்களின் பள்ளிகள் இருந்திருக்கலாம். அல்லது பள்ளிப்படை கோயில்கள் இருந்திருக்கலாம்.

கொங்கில் இருக்கும் ஊர் பெயர்கள் பற்றி கொஞ்சம் தகவல்கள் வைத்திருக்கிறேன். முதலில் கொங்கு சொற்கள் பற்றி மரபு விக்கியில் கட்டுரை இணைக்கவேண்டும். அடுத்து இது.

ராஜசங்கர்



2011/4/17 devoo <rde...@gmail.com>

துரை.ந.உ

unread,
Apr 17, 2011, 10:52:54 AM4/17/11
to mint...@googlegroups.com


2011/4/17 Raja sankar <errajasa...@gmail.com>

தேவ்,

வலசு என்பது வலுவு என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம். வலுவு என்றால் கூட்டம் அல்லது பிரிவு என பொருள் படும்.

தென்னகத்தில் இது ‘வளவு ‘ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் .. இது ஒரே வளைவு / முற்றம் என்ற பொருளில் வந்திருக்கலாம் 
 

N. Ganesan

unread,
Apr 17, 2011, 11:02:42 AM4/17/11
to மின்தமிழ்

On Apr 17, 9:52 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> 2011/4/17 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> > தேவ்,
>
> > வலசு என்பது வலுவு என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம். வலுவு என்றால் கூட்டம்
> > அல்லது பிரிவு என பொருள் படும்.
>
> தென்னகத்தில் இது ‘வளவு ‘ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் .. இது ஒரே வளைவு /
> முற்றம் என்ற பொருளில் வந்திருக்கலாம்
>

ஊர்தல் > ஊர், நகர்தல் > நகர்.

பறவைகள் வலசை போதல் அறிவீர்கள் தானே.
ஜன பெருக்கத்தாலோ, நோய் அண்டியதாலோ, பகைவர் தாக்கலாலோ
, ... இன்ன காரணங்களால் ஊர்தல், நகர்தல், வலசை போதல்
நிக்ழ்கிறது.

இன்னொரு இடத்துலிருந்து புதூர் கட்டிய இடம் வலசு.

நா. கணேசன்


> --
> *என்றும் அன்புடன்  --  துரை --*
> *கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Raja sankar

unread,
Apr 17, 2011, 11:09:43 AM4/17/11
to mint...@googlegroups.com
புதூர் என்றால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் வரவேண்டிய அவசியம் எல்லா இடங்களில் இல்லை.

ஒரு ஊரில் பாகப்பிரிவினையோ அல்லது இடவசதி பற்றாக்குறையோ இருந்தாலும் புதூர் வருவதுண்டு. இது சில இடங்களில் மேல்/கீழ், வடக்கு/தெற்கு என பிரிவதும் உண்டு.

ராஜசங்கர்

2011/4/17 N. Ganesan <naa.g...@gmail.com>

devoo

unread,
Apr 17, 2011, 12:49:11 PM4/17/11
to மின்தமிழ்
>> தென்னகத்தில் இது ‘வளவு ‘ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் .. இது ஒரே வளைவு / முற்றம் என்ற பொருளில் வந்திருக்கலாம் <<

பொதுத் தலைவாசலோடு ஏழெட்டு வீடுகள் எதிரும் புதிருமாக அமைந்திருப்பது
‘வளவு’.
ஐயா சொல்வதுபோல் பொதுவான முற்றம் இருக்கும்.
இந்த அமைப்பு நெல்லை மாவட்டத்தில் அதிகம் .

மேல வளவு, மேல வலசை, மேல வலசு - மூன்று பெயரிலும் ஊர் உள்ளது.
சுந்தரபாண்டியபுரம், அழகியபாண்டியபுரம் -
ஒன்று நெல்லை மாவட்டம், மற்றது குமரி மாவட்டம்.

இந்த வலைத்தளம் சுவையான தகவல் தருகிறது -
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=1442


தேவ்

On Apr 17, 9:52 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> 2011/4/17 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> > தேவ்,
>
> > வலசு என்பது வலுவு என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம். வலுவு என்றால் கூட்டம்
> > அல்லது பிரிவு என பொருள் படும்.
>
> தென்னகத்தில் இது ‘வளவு ‘ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் .. இது ஒரே வளைவு /
> முற்றம் என்ற பொருளில் வந்திருக்கலாம்
>
> --

> *என்றும் அன்புடன்  --  துரை --*
> *கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

seshadri sridharan

unread,
Apr 17, 2011, 12:50:36 PM4/17/11
to mint...@googlegroups.com
On 4/17/11, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
> *2. ஊர்களின் பெயர்க் காரணம் :(*பெரியவர்கள் தெளிவுபடுத்துங்கள் )

>
> நமது முன்னோர்கள் ..ஊர்களுக்கான பெயர்களை காரணமில்லாமல் வத்திருக்க
> மாட்டார்கள் ....இன்றைய சூழலில் ஒரு இடத்தின் அடையாளமாக மட்டுமே நாம்
> பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.....
>
> உண்மையான பெயர்க்காரணங்களை அறிந்து கோண்டால் ....கூடவே மறைந்து கொண்டிருக்கும்
> நம் முன்னோரின் பெருமையின் ஒரு பகுதியையும் தெரிந்து கொள்ளலாமே .......
>
> ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் படைப்பிரிவுகளின்
> பலம் , படைகள் தங்கிச்செல்லும் இடம் சார்ந்ததாக இருக்குமென்று கேட்டிருக்கிறேன்
> .
>
> *’பட்டி’* என முடியும் ஊர்களில் காலாட்படைகள் இருந்ததாகவும் ,
> * ‘பாளையம்’ *எனமுடியும் ஊர்கள் பாசறைகளாகவும்,
> *’பேட்டை’* எனமுடியும் ஊர்கள் ,பயணவண்டிகள் தங்கிச்செல்லும் இடங்களாகவும்

> இருந்திருக்கலாம் என அறிகிறேன் ..(உறுதியான சான்றுகள் இல்லை

ஐயா,
பேட்டை என்ற சொல் மராத்தி வழி வந்த சொல்லாக அருளி தமிழில் அயற் சொற்கள்
என்ற தம் நூலில் குறித்துள்ளார்

சேசாத்திரி


> என்னிடம்...கேள்விப்பட்டதுதான் ....)
>
> தவறிருக்கலாம் ..தெரிந்தவர்கள் தெளிவாக்குங்கள்
>

> இதுபோலவே *‘பாடி,விளை,குடி,குறிச்சி, பள்ளி, மங்கலம் ‘* என முடியும்


> ஊர்களுக்கும் ஏதாவது பொதுக் காரணங்கள் இருக்கலாம் ......
>
> இதுபோல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன ...
>
> அறிந்தவர்கள் மேலும் விபரங்கள் தந்து உதவுங்கள் .....
>
>
> 2011/3/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
>
>>
>> தமிழனுக்கிடையே பல்வேறு மதங்கள்,இனங்கள்,இனங்களுக்குள் குழுக்கள்
>> ,குழுக்களுக்குள் பிரிவுகள் என இருந்தபோதிலும் , விரும்பத்தகாத பல நிகழ்வுகள்
>> நடந்தபோதிலும் கூடிவாழ்வதில் முன்னுதாரணமாகவே இருக்கிறோம்.
>>
>> இந்த இழையின் நோக்கம் .. எந்தப் பிரிவு மக்களாய் இருந்தாலும்
>> ...அவர்களுக்கென்று சில தனிப்பட்ட வாழ்க்கைமுறைகள் ,பழக்க வழக்கங்கள்
>> கண்டிப்பாக இருக்கும் ...அதனை இங்கே பதிவோம் ........
>>
>> பல பழக்க வழக்கங்கள் இப்போது வழக்கொழிந்தே போய்விட்டன.....இந்தத்
>> தலைமுறையினருக்கு இதில் பாதிக்கும் மேல் தெரியாமல் போய்விடும் வாய்ப்பே
>> அதிகம்
>> ....
>>
>> எனவே முடிந்தவரையில் நாமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வோம்
>> இங்கே.......
>>
>> தேவையில்லை எனில் சாதி/பிரிவுகளின் பெயரை தவிர்த்துவிடலாம்...படிப்பவர்கள்
>> புரிந்து கொண்டாலும் பெரிய தவறொன்றும் இல்லை ,.............
>>

>> *மு.கு : *இது நமது பண்பாட்டினை பதிவு செய்யும் ஒரு முயற்சிமட்டுமே ....


>> சாதீயச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கம் எதுவும் இல்லை ...
>>

>> *தென்தமிழகம் :*

>> *1) தாய் வழியில் மட்டும் தொடரும் உறவுகள் / தாய்வழிச் சமுதாயம் *:


>> தெந்தமிழகத்தின் ஒரு இனம் .. இங்கே தாய்வழியில்தான் உறவுகள் தொடர்ந்து வரும்
>> வழியில் அமைப்பு உள்ளது ....
>> ஒரு இனம் ,அதனுள் குழுக்கள் (வளவு), அதனுள் பிரிவு (கிளை), அதனுள் உட்பிரிவு
>> (கொத்து) என பல வகைகள்...
>> இது முக்கியமாக திருமண உறவுகளை நிர்ணயிக்கும் பொருட்டே அமைந்திருக்கிறது ..
>>

>> *இன்னும் விளக்கமாக *:
>> பெண்ணின் பிரிவு/கிளை *X* எனவும், ஆணின் பிரியு/கிளை *Y* எனவும் கொண்டால்
>> ...இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் (ஆண்/பெண் இருபாலாருக்கும்) *தாயின்
>> கிளையான X தான் தொடர்ந்து வரும் *. தந்தையின் கிளை அவருடன் முடிந்துவிடும் ..


>>
>> ஒரு தாய் வயிற்று ஆண், பெண் குழந்தைகளுக்கும் ஒரே கிளைதான் வரும் என்பதால்
>> அக்காமகள் , தாய்மாமன்போன்ற நெருங்கிய/ ரத்தத் தொடர்புள்ள சொந்தங்களுக்குள்
>> நடக்கும் நடக்கும் திருமணம் தடையாகி விடுகிறது .
>>
>> வெளியிடத்தில் பார்த்து நடக்கும் திருமணத்திலும் ஒரே கிளை உள்ளவர்கள் மணம்
>> முடிக்க முடியாது . அவர்களும் சகோதர உறவாகக் கருதப்படுவர்.
>>
>> குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று ரத்தசம்பந்தத்
>> திருமணங்களை தவிர்க்கச் சொல்கிறது இன்றைய மருத்துவ உலகம்
>> ஆனால்.......
>> நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இது நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது
>> இங்கு...பெருமை கொள்வோம்
>>
>> ( இந்த தாய்வழி உறவுமுறைக்கு முன்னுரிமை இருந்ததால்தான் ஆரம்பத்தில்
>> கிறித்துவைவிட மரியன்னை வழிபாடு தென்தமிழகத்தில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
>> என்றக் கருத்தும் உண்டு )
>>

>> *2) பெண் குழந்தைக்கே முன்னுரிமை *:


>> திருமணம்..வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு.....
>> நடைமுறையில் பெரும்பாலும் நகை, நட்டு ,ரொக்கத்துடன் திருமணச் செலவும்
>> பெண்வீட்டார் தலையில்தான் விடியும் ......
>>
>> ஆனால் இந்த இனத்தில் எல்லாம் தலை கீழ் ....
>>
>> நகர வாழ்க்கையின் தாக்கத்தில் சில மாற்றங்கள் வந்துவிட்டாலும் இன்னும்
>> கிராமங்களில்
>> ரொக்கம் வாங்குவது கேவலமான செயல்
>> மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதிலிருந்து , திருமணச் செலவுகள்
>> அனைத்தும் மணமகன் வீட்டாரின் பொறுப்பு ....இன்னும் கூடுதலாக மணப் பெண்ணுக்கு
>> வரும் மொய்ப்பணம் பெண்வீட்டாரையேச் சேரும் (மாப்பிள்ளை வீட்டுச்
>> சாப்பாடு/செலவில் ...பெண் வீட்டுக்கு வருமானம் :)))
>>
>> (திருமணம் என்றால் இங்கே பெண்வீட்டாருக்கு வருமானம் தான் .... நகைச் செலவைத்
>> தவிர்த்து :)
>>
>>

>> *3) தந்தைவழியில் மட்டும் தொடரும் குலதெய்வ வழிபாடு : *


>> தந்தையின் குலதெய்வமே ...மனைவி,குழந்தைகளின் குல தெய்வமாகிறது ....
>> பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின் கணவனின் குலதெய்வமே பெண்ணுக்கும் தெய்வம்
>> என்றாகிறது ..( ஆண் தன்குலத்தையே மொத்தமாக விட்டுத்தரும்போது ...பெண் அவனது
>> தெய்வத்தை ஏற்றுக் கொளவதில் தப்பில்லை...:))
>>
>> பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........
>>
>> வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள் ,
>> கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா,
>> உறவுகளின் சந்திப்பு என புலம் பெயர்ந்து கிடப்பவர்களும் ஓரிடத்தில்
>> நம்பிக்கையின் பெயரில் சந்திப்பார்கள் ....
>>
>> தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள்
>> அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைவழி உறவின்
>> முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு
>> பரிமாறிக்கொள்வார்கள் ....
>>

>> *4) கோவில் கொடைகள்* :


>> ஆடுகள் ,சேவல் பலியிடுவதிலும் ஒரு வரைமுறை உண்டு..
>>
>> செம்மறி,வெள்ளை, கறுப்பு , செங்கிடா என ஒவ்வோரு குறிபிட்ட பிரிவிரும் ஓரு
>> குறிப்பிட்ட நிறம் கொண்ட ஆடுதான் பலியிடமுடியும் ..
>>
>> விழாவிற்கு வரும் பிற பிரிவினர் இந்த வித்தியாசம் /இடம் புரிந்துகொண்டு
>> ...........திருமண உறவுகளுக்காகப் பின்னர் தொடர்பு கொள்வார்
>>
>>

>> *பி.கு : *இது அனைவருக்குமான பொது இழை ...தங்கள்ப் பகுதியின்


>> சிறப்புகளை(மட்டும்) இங்கே பதியுங்கள்....
>>
>> ஆவலுடன் காத்திருக்கிறேன் ......
>>
>> தொடரலாமா......[image: wan-wan[1].gif]
>>
>>
>> --

>> *என்றும் அன்புடன் -- துரை --*
>> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
>> http://duraikavithaikal.blogspot.com
>> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
>> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
>> *பதிவு *: 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com


>> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

>> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
>> http://groups.google.co.in/group/thamizhthendral
>>
>>
>>
>>
>
>
> --
> *என்றும் அன்புடன் -- துரை --*
> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
> *பதிவு *: 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com


> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
> http://groups.google.co.in/group/thamizhthendral
>
> --

N. Ganesan

unread,
Apr 17, 2011, 1:45:25 PM4/17/11
to மின்தமிழ்

On Apr 17, 11:50 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:


> On 4/17/11, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > *2. ஊர்களின் பெயர்க் காரணம் :(*பெரியவர்கள் தெளிவுபடுத்துங்கள் )
>
> >  நமது முன்னோர்கள் ..ஊர்களுக்கான பெயர்களை காரணமில்லாமல் வத்திருக்க
> > மாட்டார்கள் ....இன்றைய சூழலில் ஒரு இடத்தின் அடையாளமாக மட்டுமே நாம்
> > பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.....
>
> > உண்மையான பெயர்க்காரணங்களை அறிந்து கோண்டால் ....கூடவே மறைந்து கொண்டிருக்கும்
> > நம் முன்னோரின் பெருமையின் ஒரு பகுதியையும் தெரிந்து கொள்ளலாமே .......
>
> > ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் இருக்கும் படைப்பிரிவுகளின்
> > பலம் , படைகள் தங்கிச்செல்லும் இடம் சார்ந்ததாக இருக்குமென்று கேட்டிருக்கிறேன்
> > .
>
> > *’பட்டி’* என முடியும் ஊர்களில் காலாட்படைகள் இருந்ததாகவும் ,
> > * ‘பாளையம்’ *எனமுடியும் ஊர்கள் பாசறைகளாகவும்,
> > *’பேட்டை’* எனமுடியும் ஊர்கள் ,பயணவண்டிகள் தங்கிச்செல்லும் இடங்களாகவும்
> > இருந்திருக்கலாம் என அறிகிறேன் ..(உறுதியான சான்றுகள் இல்லை
>
> ஐயா,
> பேட்டை என்ற சொல் மராத்தி வழி வந்த சொல்லாக அருளி தமிழில் அயற் சொற்கள்
> என்ற தம் நூலில் குறித்துள்ளார்
>
> சேசாத்திரி
>

மஹாரஷ்ட்ரம் பஞ்ச திராவிட நாடுகளில் ஒன்று.
பேடு என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு: கச்சிப்பேடு.
பேட்டை: பேடு தொடர்புண்டு.

கணேசன்

>
>
> > என்னிடம்...கேள்விப்பட்டதுதான் ....)
>
> > தவறிருக்கலாம் ..தெரிந்தவர்கள் தெளிவாக்குங்கள்
>
> > இதுபோலவே *‘பாடி,விளை,குடி,குறிச்சி, பள்ளி, மங்கலம் ‘* என முடியும்
> > ஊர்களுக்கும் ஏதாவது பொதுக் காரணங்கள் இருக்கலாம் ......
>
> > இதுபோல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன ...
>
> > அறிந்தவர்கள் மேலும் விபரங்கள் தந்து உதவுங்கள் .....
>

> > 2011/3/20 துரை.ந.உ <vce.proje...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Apr 17, 2011, 10:06:37 PM4/17/11
to மின்தமிழ்
>>பேடு என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு<<

மப்பேடு, தொழுப்பேடு ,கோயம்பேடு,கல்பேடு,

பசு பக்ஷிகளின் பெயரில் பல ஊர்கள்.
கடலோரத்தின் சிற்றூர்கள் பல பொதுவாகக் கவனத்துக்கு
வரவில்லை. சங்க கால ஊர்ப் பெயர்களையும்
தொகுக்க வேண்டும்

தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Apr 18, 2011, 7:30:10 AM4/18/11
to மின்தமிழ்

On Apr 17, 9:06 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>பேடு என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு<<
>
> மப்பேடு, தொழுப்பேடு ,கோயம்பேடு,கல்பேடு,
>
> பசு பக்ஷிகளின் பெயரில் பல ஊர்கள்.
> கடலோரத்தின் சிற்றூர்கள் பல பொதுவாகக் கவனத்துக்கு
> வரவில்லை. சங்க கால ஊர்ப் பெயர்களையும்
> தொகுக்க வேண்டும்
>
> தேவ்
>

Hope as India gets richer, Humanities dept.s get good students
interested & pursue these fields also.

ng

துரை.ந.உ

unread,
May 3, 2011, 10:30:34 AM5/3/11
to Groups
இதுவரையிலும் கிடைத்த செய்திகளின் தொகுப்பு :

name reason.bmp


2011/4/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
name reason.bmp
wan-wan[1].gif

கிருஷ்ணமூர்த்தி

unread,
May 3, 2011, 11:06:15 AM5/3/11
to மின்தமிழ்
//பள்ளி எனும் ஊர் வர இருகாரணங்கள் இருக்கலாம். ஒன்று சிரமணர்களின்
பள்ளிகள்
இருந்திருக்கலாம். அல்லது பள்ளிப்படை கோயில்கள் இருந்திருக்கலாம். //

திரிசிரபுரம் அல்லது திரிசிராப்பள்ளி -திருச்சியின் பெயரில், பள்ளிப் படை
அல்லது சிரமணப் பள்ளி இருந்தது என்ற வாதம் சரிவரப் பொருந்தவில்லையே!

அதேமாதிரி, கரூர் அருகே கோயம்பள்ளி என்ற சிறு கிராமம் உண்டு. கரூர்
ஆநிலையப்பர் கோவிலுக்கு சொந்தமான பசுக்கள் மேய்வதற்காக நிவந்தமாக
அளிக்கப்பட இடம் என்று சொல்லப்படுவதுண்டு. இங்கேயும் உங்கள் ஊகம்
பொருந்தவில்லை. பாளையக்காரர்கள் சம்பந்தம் எதுவுமில்லாமலேயே,
செல்லாண்டிப்பாளையம்,செட்டிப்பாளையம், அப்பிப்பாளையம், மேலப்பாளையம்
என்றெல்லாம், கரூர்ப் பகுதியில் உண்டு.

அதே மாதிரி, பட்டி என்று, சிறு கிராமங்கள் மதுரை, விருதுநகர்
மாவட்டங்களில் ஏராளம்! விருது[பட்டியாக இருந்தது, கொஞ்சம் வளர்ந்தபிறகு
விருதுநகராகிப் போனது!அவை அத்தனையும் ஆடு, மாடு கட்டி வைக்கிற
இடமாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பதில்லை! ஹார்வி மில் பெயரை வைத்து,
ஹார்விப்பட்டி, அப்புறம் ஆஸ்டின் பட்டி என்றெல்லாம் கொஞ்சம் காலத்தால்
பிந்தைய பெயர்களிலும் இந்தப்பக்கம் பார்க்க

------------------------------------
பெயர்க்காரணங்களை ஊகிப்பது கூடக்
கொஞ்சம் சுவாரசியமாகத் தான் இருக்கிறது!

கிருஷ்ணமூர்த்தி

On Apr 17, 7:41 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> தேவ்,

Geetha Sambasivam

unread,
May 4, 2011, 8:49:14 AM5/4/11
to mint...@googlegroups.com, vce.pr...@gmail.com
துரை,

எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பாக எனக்கு அனுப்பவும்.  மரபு விக்கியில் சேர்க்கிறேன்.  நன்றி.

2011/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
wan-wan[1].gif
name reason.bmp

Raja sankar

unread,
May 4, 2011, 9:35:11 AM5/4/11
to mint...@googlegroups.com
அன்பின் துரை,

பட்டி என்றால் ஆடுமாடுகள் கட்டும் இடம். அதை காவல் காக்கும் நாய் பட்டி நாய். மலையாளத்தில் பட்டினாலே நாய் தான். :-)))

பட்டி எனும் ஊர்கள் மேய்ச்சல் நிலங்களாக இருந்து ஊராக ஆயிருக்கலாம்.

பாடி என்றால் கால்நடைகள் என்ற பொருளும் படைகள் தங்கும் முண்ணனி அரண் என்றும் பொருள் உண்டு. இரண்டில் ஏதாவது ஒரு காரணத்திற்காகவும் இந்த ஊர்ப்பெயர்கள் வந்திருக்கலாம்.

பள்ளி என்பது மன்னன் உறையும் இடமாகவும் இருக்கலாம். மன்னர்கள் இறந்து பள்ளிப்படுத்தப்பட்ட இடமாகவும் இருக்கலாம். நனிபள்ளி எனும் தேவார பாடல் பெற்ற தலம் பற்றீ இவ்வாறு சொல்லப்படுகிறது


  èô¢ªõ좴è¢è÷¢ üò颪è£í¢ì «ê£öõ÷ï£ì¢´ Ýè¢Ãó¢ ï£ì¢´ð¢ ð¤óñ«îòñ¢ ïù¤ð÷¢÷¤ âù¢Áñ¢, ªð¼ñ¢ðø¢øð¢¹ô¤Îó¢ «è£ò¤ô£ó¢ ð¤ø «è£ò¤ô¢è좰 ݬíò¤´õ£ó¢ âù¢Áñ¢, «õï¢îÂ袰 ªõø¢ø¤»í¢ì£è Ýí¢´«î£Áñ¢ õ¤ö£ ïìõªîù¢Áñ¢, Ýè¢Ãó¢ ï£ì¢´ð¢ ð¤óñ«îòñ£ù î¬ôê¢êé¢è£ì¢´ê¢ ê¬ðò£ó¢ ïù¤ð÷¢÷¤»¬ìò ñ裫îõó¢è¢° ï¤ôñ¢ ªè£´ð¢ðªóù¢Áñ¢, ê¢Åôñ¢ ªð£ø¤î¢î «õ¬÷è¢è£óó¢ î¦ò¤ô¢ ïì ð¤óñ£íñ¢ ªêò¢¶î¼õªóù¢Áñ¢, ªè£ô¢ôó¢, îê¢êó¢, îì¢ì£ó¢ ºîô¤«ò£¬ó Ü«ô£ñó¢ âù¢Áñ¢, õôñ¢¹ó×¼¬ìò «îõ«îõ¬ó Þõ¢×ó¢è¢° â¿ï¢î¼÷ð¢ðí¢µõªóù¢Áñ¢, ð¤ø¾ñ¢ (180-97 / 1925) ÃÁè¤ù¢øù. ïù¤ð÷¢÷¤¬ò Þï¢ï£÷¤ô¢ ¹ë¢¬ê âù¾ñ¢ è¤ì£óñ¢ ªè£í¢ì£ù¢ âù¾ñ¢ áóõó¢ ÃÁè¤ù¢ø£ó¢è÷¢

http://www.tamilvu.org/slet/l5F31/l5F31v02.jsp?id=107

ராஜசங்கர்



2011/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இதுவரையிலும் கிடைத்த செய்திகளின் தொகுப்பு :

name reason.bmp

wan-wan[1].gif
name reason.bmp

venkatachalam Dotthathri

unread,
May 6, 2011, 7:57:09 AM5/6/11
to mint...@googlegroups.com
>> *2. ஊர்களின் பெயர்க் காரணம் :(*பெரியவர்கள் தெளிவுபடுத்துங்கள் )

>>>
>>> நமது முன்னோர்கள் ..ஊர்களுக்கான பெயர்களை காரணமில்லாமல் வத்திருக்க
>>> மாட்டார்கள் ....இன்றைய சூழலில் ஒரு இடத்தின் அடையாளமாக மட்டுமே நாம்
>>> பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.....
>>>
>>> உண்மையான பெயர்க்காரணங்களை அறிந்து கோண்டால் ....கூடவே மறைந்து
>>> கொண்டிருக்கும் நம் முன்னோரின் பெருமையின் ஒரு பகுதியையும் தெரிந்து
>>> கொள்ளலாமே
>>> .......
>>>
>>> ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் இருக்கும்
>>> படைப்பிரிவுகளின்
>>> பலம் , படைகள் தங்கிச்செல்லும் இடம் சார்ந்ததாக இருக்குமென்று
>>> கேட்டிருக்கிறேன்
>>> .
>>>
>>> *’பட்டி’* என முடியும் ஊர்களில் காலாட்படைகள் இருந்ததாகவும் ,
>>> * ‘பாளையம்’ *எனமுடியும் ஊர்கள் பாசறைகளாகவும்,
>>> *’பேட்டை’* எனமுடியும் ஊர்கள் ,பயணவண்டிகள் தங்கிச்செல்லும் இடங்களாகவும்

>>> இருந்திருக்கலாம் என அறிகிறேன் ..(உறுதியான சான்றுகள் இல்லை
>>> என்னிடம்...கேள்விப்பட்டதுதான் ....)
>>>
>>> தவறிருக்கலாம் ..தெரிந்தவர்கள் தெளிவாக்குங்கள்
>>>
>>> இதுபோலவே *‘பாடி,விளை,குடி,குறிச்சி, பள்ளி, மங்கலம் ‘* என முடியும்

>>> ஊர்களுக்கும் ஏதாவது பொதுக் காரணங்கள் இருக்கலாம் ......
>>>
>>> இதுபோல இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன ...
>>>
>>> அறிந்தவர்கள் மேலும் விபரங்கள் தந்து உதவுங்கள் .....
>>>
>>>
>>> 2011/3/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
>>>
>>>>
>>>> தமிழனுக்கிடையே பல்வேறு மதங்கள்,இனங்கள்,இனங்களுக்குள் குழுக்கள்
>>>> ,குழுக்களுக்குள் பிரிவுகள் என இருந்தபோதிலும் , விரும்பத்தகாத பல
>>>> நிகழ்வுகள்
>>>> நடந்தபோதிலும் கூடிவாழ்வதில் முன்னுதாரணமாகவே இருக்கிறோம்.
>>>>
>>>> இந்த இழையின் நோக்கம் .. எந்தப் பிரிவு மக்களாய் இருந்தாலும்
>>>> ...அவர்களுக்கென்று சில தனிப்பட்ட வாழ்க்கைமுறைகள் ,பழக்க வழக்கங்கள்
>>>> கண்டிப்பாக இருக்கும் ...அதனை இங்கே பதிவோம் ........
>>>>
>>>> பல பழக்க வழக்கங்கள் இப்போது வழக்கொழிந்தே போய்விட்டன.....இந்தத்
>>>> தலைமுறையினருக்கு இதில் பாதிக்கும் மேல் தெரியாமல் போய்விடும் வாய்ப்பே
>>>> அதிகம்
>>>> ....
>>>>
>>>> எனவே முடிந்தவரையில் நாமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வோம்
>>>> இங்கே.......
>>>>
>>>> தேவையில்லை எனில் சாதி/பிரிவுகளின் பெயரை தவிர்த்துவிடலாம்...படிப்பவர்கள்
>>>> புரிந்து கொண்டாலும் பெரிய தவறொன்றும் இல்லை ,.............
>>>>
>>>> *மு.கு : *இது நமது பண்பாட்டினை பதிவு செய்யும் ஒரு முயற்சிமட்டுமே ....

>>>> சாதீயச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கம் எதுவும் இல்லை ...
>>>>
>>>> *தென்தமிழகம் :*
>>>> *1) தாய் வழியில் மட்டும் தொடரும் உறவுகள் / தாய்வழிச் சமுதாயம் *:

>>>> தெந்தமிழகத்தின் ஒரு இனம் .. இங்கே தாய்வழியில்தான் உறவுகள் தொடர்ந்து
>>>> வரும்
>>>> வழியில் அமைப்பு உள்ளது ....
>>>> ஒரு இனம் ,அதனுள் குழுக்கள் (வளவு), அதனுள் பிரிவு (கிளை), அதனுள்
>>>> உட்பிரிவு
>>>> (கொத்து) என பல வகைகள்...
>>>> இது முக்கியமாக திருமண உறவுகளை நிர்ணயிக்கும் பொருட்டே அமைந்திருக்கிறது ..
>>>>
>>>> *இன்னும் விளக்கமாக *:
>>>> பெண்ணின் பிரிவு/கிளை *X* எனவும், ஆணின் பிரியு/கிளை *Y* எனவும் கொண்டால்
>>>> ...இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் (ஆண்/பெண் இருபாலாருக்கும்) *தாயின்
>>>> கிளையான X தான் தொடர்ந்து வரும் *. தந்தையின் கிளை அவருடன் முடிந்துவிடும்

>>>> ..
>>>>
>>>> ஒரு தாய் வயிற்று ஆண், பெண் குழந்தைகளுக்கும் ஒரே கிளைதான் வரும் என்பதால்
>>>> அக்காமகள் , தாய்மாமன்போன்ற நெருங்கிய/ ரத்தத் தொடர்புள்ள சொந்தங்களுக்குள்
>>>> நடக்கும் நடக்கும் திருமணம் தடையாகி விடுகிறது .
>>>>
>>>> வெளியிடத்தில் பார்த்து நடக்கும் திருமணத்திலும் ஒரே கிளை உள்ளவர்கள் மணம்
>>>> முடிக்க முடியாது . அவர்களும் சகோதர உறவாகக் கருதப்படுவர்.
>>>>
>>>> குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று ரத்தசம்பந்தத்
>>>> திருமணங்களை தவிர்க்கச் சொல்கிறது இன்றைய மருத்துவ உலகம்
>>>> ஆனால்.......
>>>> நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இது நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது
>>>> இங்கு...பெருமை கொள்வோம்
>>>>
>>>> ( இந்த தாய்வழி உறவுமுறைக்கு முன்னுரிமை இருந்ததால்தான் ஆரம்பத்தில்
>>>> கிறித்துவைவிட மரியன்னை வழிபாடு தென்தமிழகத்தில் வேகமாக
>>>> ஏற்றுக்கொள்ளப்பட்டது
>>>> என்றக் கருத்தும் உண்டு )
>>>>
>>>> *2) பெண் குழந்தைக்கே முன்னுரிமை *:

>>>> திருமணம்..வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு.....
>>>> நடைமுறையில் பெரும்பாலும் நகை, நட்டு ,ரொக்கத்துடன் திருமணச் செலவும்
>>>> பெண்வீட்டார் தலையில்தான் விடியும் ......
>>>>
>>>> ஆனால் இந்த இனத்தில் எல்லாம் தலை கீழ் ....
>>>>
>>>> நகர வாழ்க்கையின் தாக்கத்தில் சில மாற்றங்கள் வந்துவிட்டாலும் இன்னும்
>>>> கிராமங்களில்
>>>> ரொக்கம் வாங்குவது கேவலமான செயல்
>>>> மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதிலிருந்து , திருமணச் செலவுகள்
>>>> அனைத்தும் மணமகன் வீட்டாரின் பொறுப்பு ....இன்னும் கூடுதலாக மணப்
>>>> பெண்ணுக்கு
>>>> வரும் மொய்ப்பணம் பெண்வீட்டாரையேச் சேரும் (மாப்பிள்ளை வீட்டுச்
>>>> சாப்பாடு/செலவில் ...பெண் வீட்டுக்கு வருமானம் :)))
>>>>
>>>> (திருமணம் என்றால் இங்கே பெண்வீட்டாருக்கு வருமானம் தான் .... நகைச்
>>>> செலவைத்
>>>> தவிர்த்து :)
>>>>
>>>>
>>>> *3) தந்தைவழியில் மட்டும் தொடரும் குலதெய்வ வழிபாடு : *

>>>> தந்தையின் குலதெய்வமே ...மனைவி,குழந்தைகளின் குல தெய்வமாகிறது ....
>>>> பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின் கணவனின் குலதெய்வமே பெண்ணுக்கும் தெய்வம்
>>>> என்றாகிறது ..( ஆண் தன்குலத்தையே மொத்தமாக விட்டுத்தரும்போது ...பெண் அவனது
>>>> தெய்வத்தை ஏற்றுக் கொளவதில் தப்பில்லை...:))
>>>>
>>>> பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........
>>>>
>>>> வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள்
>>>> ,
>>>> கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா,
>>>> உறவுகளின் சந்திப்பு என புலம் பெயர்ந்து கிடப்பவர்களும் ஓரிடத்தில்
>>>> நம்பிக்கையின் பெயரில் சந்திப்பார்கள் ....
>>>>
>>>> தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள்
>>>> அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைவழி
>>>> உறவின்
>>>> முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு
>>>> பரிமாறிக்கொள்வார்கள் ....
>>>>
>>>> *4) கோவில் கொடைகள்* :

>>>> ஆடுகள் ,சேவல் பலியிடுவதிலும் ஒரு வரைமுறை உண்டு..
>>>>
>>>> செம்மறி,வெள்ளை, கறுப்பு , செங்கிடா என ஒவ்வோரு குறிபிட்ட பிரிவிரும் ஓரு
>>>> குறிப்பிட்ட நிறம் கொண்ட ஆடுதான் பலியிடமுடியும் ..
>>>>
>>>> விழாவிற்கு வரும் பிற பிரிவினர் இந்த வித்தியாசம் /இடம் புரிந்துகொண்டு
>>>> ...........திருமண உறவுகளுக்காகப் பின்னர் தொடர்பு கொள்வார்
>>>>
>>>>
>>>> *பி.கு : *இது அனைவருக்குமான பொது இழை ...தங்கள்ப் பகுதியின்

>>>> சிறப்புகளை(மட்டும்) இங்கே பதியுங்கள்....
>>>>
>>>> ஆவலுடன் காத்திருக்கிறேன் ......
>>>>
>>>> தொடரலாமா......[image: wan-wan[1].gif]
>>>>
>>>>
>>>> --
>>>> *என்றும் அன்புடன் -- துரை --*
>>>> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
>>>> http://duraikavithaikal.blogspot.com

>>>> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
>>>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
>>>> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
>>>> *பதிவு *: 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
>>>> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
>>>> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
>>>> http://groups.google.co.in/group/thamizhthendral
>>>>
>>>>
>>>>
>>>>
>>>
>>>
>>> --
>>> *என்றும் அன்புடன் -- துரை --*
>>> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
>>> http://duraikavithaikal.blogspot.com
>>> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/

>>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
>>> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
>>> *பதிவு *: 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
>>> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
>>> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
>>> http://groups.google.co.in/group/thamizhthendral
>>>
>>>
>>
>>
>> --
>> *என்றும் அன்புடன் -- துரை --*
>> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
>> http://duraikavithaikal.blogspot.com
>> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/

>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
>> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
>> *பதிவு *: 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
>> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
>> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':

Subashini Tremmel

unread,
Aug 6, 2011, 10:30:45 AM8/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்தத் தொடரை மீண்டும் தொடருங்கள் திரு.துரை. பல தகவல்களைத் கொஞ்சம் கொஞ்சமாக தொகுக்கலாம்.
 
-சுபா

2011/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இதுவரையிலும் கிடைத்த செய்திகளின் தொகுப்பு :

name reason.bmp

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
name reason.bmp
wan-wan[1].gif

துரை.ந.உ

unread,
Aug 22, 2011, 9:21:14 AM8/22/11
to Groups

3.தமிழரின் திருமணமுறை :

 சாமிஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் J


விடியற்காலை ...ஒரு செல்பேசிஅழைப்பு..

“அண்ணே ...நான் குட்டி ...தூத்துக்குடியில இருந்து ... வணக்கம்ண்ணே...எந்த ஊர்ல இருக்கீங்க “

 

வணக்கம் தம்பி.....வீட்ல தான் இருக்கேன்

 

உங்களைப் பார்க்கணும் ..என்னோட திருமண விடயமாக உங்களைச் சந்திக்க வேணும் ... வரவா ?

(கவனிக்க : விடயமாக )

 

“மிக மகிழ்வான செய்தி...வாங்க தம்பி “

 

8மணிக்கெல்லாம் வந்துவிட்டார் .

(இவர்தான் எனது உறவினருக்கு மிக அரிதானவகை இரத்தம் கிடைக்க மிக உதவியவர்..)

 

அழைப்பிதழைத் தந்தார்..

‘கோவிலில் திருமணம்.. நேரம் இரவு 7.00 முதல் 8.00வரை.. குழப்பமாக அவரைப் பார்த்தேன் ...

 

சிரித்துக்கொண்டே சொன்னார் “ஆமாண்ணே ...இரவுதான்....

முன்னோர்களின் வழியில் நமது பாரம்பரிய முறையில்தான் திருமணம்..

 

இன்னும் விளக்கமாகச் சொல்லுங்க தம்பி

 

“அந்நாளில்....வயல்வெளியில் , பிற இடங்களில் வேலையெல்லாம் முடிந்து , அனைவரும் வீடு திரும்பிய பின்னர் ,மலையில்/இரவின் தொடக்கத்தில் தீபம்/விளக்கின் முன்னால் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன

 

பகல்நேரத் திருமணங்களில் உள்ள இடையூறுகள் பல இதில் இல்லை...

விடுமுறை எடுக்க வேண்டாம் ..(அ) ஒரு மணி நேர அனுமதிவாங்கிவிட்டு அவசர அவசரமாக அலுவலகம் ஓட வேண்டாம்.

மண்டபங்களில் மின்தடை ஏற்பட்டால் வெளியில்வந்து நின்று வெயிலின் வெம்மைக்கு ஆளாக வேண்டாம்...

கோவிலுக்கும் வந்ததுபோல் இருக்கும்..திருமணத்தில் வாழ்த்தியதுபோலவும் இருக்கும் ...

 

இதுபோக இன்னும் முக்கியமான ஒண்ணு இருக்குண்ணே..

உங்களுக்குத்தான் தெரியுமே .... நம்ம பகுதியும் ,மக்களும் பொருளாதாரத்தில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கோமுன்னு..

 

மண்டபம் , திருமணச் செலவுன்னு பெண்குழந்தையைப் பெற்றவர்கள் படும்பாடு தெரிந்ததுதானே ....

 

இப்போ கொஞ்சம் வசதியா இருக்குறா நான் ..கோவில்ல திருமணன் செய்து கொண்டால் .... இதைப்பார்த்து இன்னும் சிலர் அட..இது புதுமையா இருக்கேன்னு கோவில்ல திருமணத்திற்கு முயற்சி செய்தால் .. பெண்ணைப் பெற்றோரின் சுமை கொஞ்சமாவது குறையுமே ...அதுவும் ஒரு காரணம் “

 

அட... நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்ற வார்த்தைகள் .. ஒரு நொடி வெட்கிப் போனேன் ...வயசுல குறைந்தவர் என்று ’தம்பி தம்பி’ என்றல்லாவா சொல்லிக் கொண்டிருந்தோம் இந்த மனிதரை.... நம்மைவிட மனதால் எவ்வளவு பெரியவர் இவர் ..

 

(ஒரு குறிப்பு: என்வீட்டின் கீழ்ப்பகுதி முதுவதும் காலியாக இடம்விட்டுக் கட்டி இருக்கிறேன் .. பின்பகுதியிலும் 1.5 கிரவுண்டு காலி மனைஉண்டு ..இடண்டும் இணைந்து கீழ்ப்பகுதி  ஒரு மண்டப அமைப்பில் இருக்கும்..எங்கள் பகுதியில் வசதிகுறைந்த குடும்பங்களின் முக்கிய நிகழ்வுகள் இங்கேதான் நடைபெறும் ... அவர்களுக்கு குறைந்தது 50,000 வரை மண்டப வாடகைவகையில் மிச்சமாகும் ...இதைச் செய்வதையே ஏதோ பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தேன்... அதையும் தாண்டி செயலால் மிகப் பிரம்மாண்டமாய் என்முன்னால் எழுந்து நிற்கிறார் இவர் )

 

திருமண நாள் :

தெய்வம் சாட்சியாக, கோவிலின் மின்விளக்குகள் இன்றி , தீபங்களின் மத்தியில், குத்துவிளக்கின் முன்நின்று

தேவாரமும் , திருவாசகமும் முழங்க ..வீட்டின் மூத்தவர் தாலி எடுத்துக் கொடுக்க, மாலைமாற்றி திருமணம் முடித்து வெளிவந்த மணமக்களைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக உணர்ந்தேன் ... இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பொறி இருக்கத்தான் செய்கிறது ...

 

இவ்வளவு நேரம் ஒதுக்கி நானும் இதுவரையில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டதில்லை ... கோவிலுக்கு வெளியே ..சொந்தங்கள் சந்தித்து..அமர்ந்து, ஆற அமர உரையாடி,உறவாடி ,உணவருந்தி பதட்டமின்றி விடைபெற்றுச் சென்றதைப் பார்த்து நின்றதே ஒரு புதிய அனுபவம் எனக்கு .......

 

இப்பொழுது மிக முக்கியக் கேள்வி :

இந்த இரவுநேர திருமணமுறை சரியா ?

நமது முன்னோரிடம் இந்தத் திருமணமுறை இருந்ததா ? 

 

பெரியவர்களின் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன் ..

சில படங்கள் :  

DSCN2941bf.jpg

DSCN2939bf.jpg

DSCN2933bf.jpg

DSCN2936bf.jpg

DSCN2942bf.jpg

DSCN2946bf.jpg

DSCN2949bf.jpg


2011/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>


DSCN2946bf.jpg
DSCN2941bf.jpg
DSCN2949bf.jpg
DSCN2942bf.jpg
DSCN2936bf.jpg
DSCN2939bf.jpg
DSCN2933bf.jpg

துரை.ந.உ

unread,
Aug 22, 2011, 9:29:06 AM8/22/11
to Groups
//////“அந்நாளில்....வயல்வெளியில் , பிற இடங்களில் வேலையெல்லாம் முடிந்து , அனைவரும் வீடு திரும்பிய பின்னர் ,மாலையில்/இரவின் தொடக்கத்தில் தீபம்/விளக்கின் முன்னால் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன/////////

2011/8/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
DSCN2942bf.jpg
DSCN2936bf.jpg
DSCN2949bf.jpg
DSCN2933bf.jpg
DSCN2941bf.jpg
DSCN2946bf.jpg
DSCN2939bf.jpg

Geetha Sambasivam

unread,
Aug 22, 2011, 9:40:04 AM8/22/11
to mint...@googlegroups.com
வடமாநிலங்களில் எப்போதுமே இரவில் தான் திருமணம் நடக்கும், இன்றும் அவ்வாறே நடந்தும் வருகிறது.

2011/8/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
//////“அந்நாளில்....வயல்வெளியில் , பிற இடங்களில் வேலையெல்லாம் முடிந்து , அனைவரும் வீடு திரும்பிய பின்னர் ,மாலையில்/இரவின் தொடக்கத்தில் தீபம்/விளக்கின் முன்னால் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன/////////


துரை.ந.உ

unread,
Aug 22, 2011, 10:10:29 AM8/22/11
to Groups
2011/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இதுவரையிலும் கிடைத்த செய்திகளின் தொகுப்பு :

name reason.bmp


கூடுதல் செய்தி :
தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன. பாடி, சேரி, பள்ளி, சிறுகுடி, ஊர், பட்டினம், பாக்கம், குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன. இவற்றிற்குப் பதிலாகக் கோட்டை, மங்கலம், சமுத்திரம், புரம், குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன. எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை, திருமங்கலம், அம்பாசமுத்திரம், சமயபுரம், பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம். 

 நன்றி : Raja sekar எடுத்தது www.tamilvu.org/courses/degree/c031/c0313/html/c03131l3.htm
name reason.bmp
wan-wan[1].gif

Subashini Tremmel

unread,
Aug 25, 2011, 10:13:30 AM8/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பகிர்வுக்கு நன்றி.
 
ஆலயங்களில் திருமணம் நடைபெறுவது தமிழகத்தில் குறைந்து விட்டது போலும். மலேசியாவில்  ஹிந்து திருமணங்கள் பெரும்பாலும் ஆலயங்களில் தான் நடைபெறுகின்றன.  திருமணத்திற்குப் பின்னர் நடைபெறும் விருந்து மட்டும் மண்டபங்களில் நடைபெறுவது வழக்கம்.
 
சுபா
 
2011/8/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

3.தமிழரின் திருமணமுறை :

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
DSCN2936bf.jpg
DSCN2933bf.jpg
DSCN2942bf.jpg
DSCN2946bf.jpg
DSCN2939bf.jpg
DSCN2949bf.jpg
DSCN2941bf.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages