1969ல் இரு கணனிகளுக்கிடையில் “Log-in” என்ற சொல்லே முதலில் அனுப்பி
பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.
1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்கழகங்களை
இணைத்தனர்.
1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி
காட்டப்பட்டது. UK ஆண்டு ஸிறி ஐ சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @
உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.
1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது
கருத்துக்கோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம
கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன.
(TCP/IP) 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.
1976இல் முதலாவது மின் அஞ்சல் e-mail பிரித்தா¡னிய மகாராணியினால்
அனுப்பப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச
தலைவருமாவார்.
1982 முதல் முதலாக “internet” சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.) என்ற
குறியீடு இணைக்க தொடங்கப்பட்ட வருடம்.
1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொடங்கியதுடன் 1000 இணைப்புக்களை
எட்டிப்பிடித்தது.
1985 AOL, .com, .edu, .gov உதயம்
1986 .net அறிமுகம்
1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம்
தொடர்ந்த ஆண்டு.
1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ்
தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.
1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம் Tim
Berners-Lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை
(HTML) வெளியிட்டதுமல்லாமல் www. ஐயும் நிறுவினார்.
1990ல் world.std.com தனது dial-up சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக
நோக்கிலான இணைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில்
இருப்பது கணக்கிடப்பட்டது.
1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு “www” நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.
1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன்
பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
1993 இணைய வானொலி, இணையத்தள பேசுமொழி பரிமாற்றி அமுலாக்கி (http)
அறிமுகத்தோடு சீosaiணீ உதயம்.
1994 இணையம் பிறந்து 25வருடம் பூர்த்தி கொண்டாட்டம், அத்துடன் இணைய
உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன்
பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.
1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar mozilla வருகை,
இணைய வர்த்தகத்தில் அழியா புகழ்பெற்ற e-bay (இன்று வரை 223 மில்லியன்
மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்) வெளியானதோடு java, java script
அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, Mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.
1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி, இணைய உலகில் தகவல் பெற என்றும்
தட்டப்படும் wiki,Alexa என்பவற்றின் வருகை tv.com விற்கப்பட்டது
($15,000) இணைய உகலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை
பெற்றது பதிவானது.
1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம், Business.com விலைபோனது
($150,000) இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.
Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் $ ஒரு
மில்லியன்) செய்தனர்.
1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL
மிகமிகப் பெரிய விலைக்கும் ( $4.2 பில்லியன்கள். மில்லியன் அல்ல) Compaq
நிறுவனம் Alta vista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.
1999 இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் “Blog” என்ற
சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $
250 மில்லியன்களை கொடுத்தது.
2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக
இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16
பில்லியன்களை கொடுத்து ஹிiசீலீ warnலீr ஐ சொந்தமாக்கியது.
2001மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்
(Virus of the year). biz,info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற
கலைக்களஞ்சியமான wikipலீனீia பிறந்ததும் இந்த ஆண்டில்தான்.
2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியன்களை தாண்டியது.
RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.
2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune
அறிமுகமானது இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol- microsoft
தீர்ப்பானது. AOL இற்கு $ 750 மில்லியன் நஷ்டஈடாக கொடுத்ததுடன் Netscape
இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.
2004 கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய்
$ 117 பில்லியங்களையும் தாண்டியது.
2005 இணைய உலகின் பெயர்பெற்ற Video தளம் youtube உருவானது.
2006 Google தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை
கொடுத்து youtube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு
மேலாக இணையதளங்கள் வலம் வந்தன.
2007 மிகவும் அண்மையில் (30th September)எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்
படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,244,449,601ஐயும் தாண்டி
சாதனை தொடர்கிறது
from
http://tamilinternet-hi.blogspot.com/2011/09/blog-post_27.html
N. Ganesan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
அப்படியே தமிழ் இணைய வரலாற்றையும் தரலாம்
தேவ்
On Oct 5, 12:18 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அப்படியே தமிழ் இணைய வரலாற்றையும் தரலாம்
>
> தேவ்
I am sure many who are able will contribute to your question.
தமிழுக்கு கணினி ஃபாண்டுகள் உருவான கதை:
http://tamil.berkeley.edu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
N. Ganesan
மிகவும் பயனுள்ள இழை.
இக்கட்டுரை எழுதியவர் பெயர் வரவில்லை. இம்மாதிரிப் பகிர்வுகள்,
எவ்வளவுதான் இணைப்புச் சுட்டி தந்தாலும், அது தாங்கள் எழுதியது என்பது
போன்றதோர் மாயத்தோற்றம் தர ஏதுவாகிறது. இதை எழுதியவர் ஒரு ஈழத்தமிழராக
இருக்க வாய்ப்புண்டு. மொழி நடை காட்டிக்கொடுக்கிறது.
வெட்டி, ஒட்டும் போதும், இல்லை முன்பு வந்த ஒரு மடலை உங்கள் பெயரில் மறு
சுற்றுக்கு அனுப்பும் போதும் காலப்போக்கில் அவை தாங்கள் உலகிற்கு அளித்த
பதிவு என்பது போன்ற சரித்திரப்பிழை நடக்க வழி உள்ளது. பேரா.நாகராஜன்
சொன்னது சரி. கூகுள் வலை கொண்டு தேடினால் பெரிய மீனாக அகப்படுவது உங்கள்
பெயர்தான்.
உங்கள் பங்களிப்பு மிக முக்கியம். அதைப் புறம் தள்ள முடியாது. அதே
நேரத்தில் எல்லோர் அட்சதையையும் உங்கள் தலையில் போட்டுக்கொள்வதும்
நல்லதல்ல. எல்லோர் கருமமும் உங்கள் தலையில் ஏறும் :-)
நா.கண்ணன்
2011/10/6 N. Ganesan <naa.g...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Oct 5, 6:43 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> வெட்டி, ஒட்டும் போதும், இல்லை முன்பு வந்த ஒரு மடலை உங்கள் பெயரில் மறு
> சுற்றுக்கு அனுப்பும் போதும் காலப்போக்கில் அவை தாங்கள் உலகிற்கு அளித்த
> பதிவு என்பது போன்ற சரித்திரப்பிழை நடக்க வழி உள்ளது. பேரா.நாகராஜன்
> சொன்னது சரி. கூகுள் வலை கொண்டு தேடினால் பெரிய மீனாக அகப்படுவது உங்கள்
> பெயர்தான்.
>
from
http://tamilinternet-hi.blogspot.com/2011/09/blog-post_27.html
சுட்டி கொடுத்திருந்தேனே. எழுதியவர் பெயர் எனக்கு
தெரியாது.
நா. கணேசன்
2007 மிகவும் அண்மையில் (30th September)எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்
படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,244,449,601ஐயும் தாண்டி
சாதனை தொடர்கிறது
from
http://tamilinternet-hi.blogspot.com/2011/09/blog-post_27.html
N. Ganesan
பெரா.ஜியார்ஜ் ஹார்ட் ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கிற்கு
(அதுதான் எல்லாவற்றிற்கும் முன்னோடி) 90களில் செல்லும்
வாய்ப்புக்கிடைத்தது. அப்போதுதான் நா.கணேசனைப் பார்த்து, அவர் தமிழறிவு
கண்டு வியந்து போனேன். எனவே அவர் பெயரில் இப்படியொரு கட்டுரை வந்தவுடன்
ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அவருக்கும் இவ்வரலாறு தெரியும்,
அதில் பங்கேற்றும் உள்ளார். எனவே அவர் வாயால் கேட்பது சுகமென்று
வாசித்தேன். பின் ஈழத்து நடை கண்டு உடனே கீழே பார்த்தேன். சுட்டி
இருந்தது. அங்கு போனால் யார் பதிவு என்ற விவரமே தெரியவில்லை. அருமையான
ஒரு கட்டுரை அநாமத்தாக இருந்தால் அதன் நம்பகத்தன்மை குறையும்.
ஆங்கிலத்தரவுகளை மொழி பெயர்த்து யார் வேண்டுமானாலும் எழுதலாம். நிறையச்
சேதிகள் உள்ளன. எனினும் நம் கணேசன் சொன்னால் சுகமாகத்தான் இருக்கும்.
அவர் வெட்டி ஒட்டுவதற்குப்பதில் ஓய்வாக இருக்கும் போது தன் அனுபவத்தில்
இணையம் வளர்ந்த கதை சொன்னால் கேட்க சுகமாக இருக்கும்.
நா.கண்ணன்
2011/10/6 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
On Oct 5, 2:18 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அப்படியே தமிழ் இணைய வரலாற்றையும் தரலாம்
>
> தேவ்
தமிழ் இணையம் தங்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் பலர்
எழுதியுள்ளனர். அவற்றுள் சிலவும் பார்க்கலாம்.
ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் உள்ளது.
அவர் தன் அபிலாசைகளை இன்னின்னது இணைய வளர்ச்சிக்கு
நிகழ வேண்டும் எனப்பட்டியல் இட்டுள்ளார். அவற்றில்
சில ஏற்கெனவே நடந்துகொண்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக
இருக்கிறது.
நா. கணேசன்
இணைய உலகமும் நானும் - எழுத்தாளர் ஜெயமோகன்
இணைய உலகமும் நானும் <http://jeyamohan.in/?p=5362>
இணையத்தின் உலகுக்கு நான் 1998 வாக்கில் என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம்
அவர்கள் மூலம் இழுத்து வரப்பட்டேன். அவர் அப்போது மைசூரில்
தொலைபேசித்துறையில்
கணிப்பொறிப்பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இணையத்தின் சாத்தியங்களை
அவர்
எனக்குச் சொன்னார், நான் நம்பவில்லை. ஆனால் நான் அப்போது எழுத
ஆரம்பித்திருந்த
பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ருஷ்ய கம்யூனிச வரலாற்றைப்பற்றி
நிறைய
தகவல்கள் தேவைப்பட்டன. அவற்றை நான் இணையம் மூலம் பெற்றுக்கோண்டேன்
சிலவருடங்கள் கழித்து 2000 த்தில் அமெரிக்க வாசகர் ஒருவரின் உதவியால்
நான் ஒரு
கணிப்பொறி வாங்கினேன். அப்போது அது என் பணவசதிக்கு அப்பாற்பட்ட ஆடம்பரம்.
நண்பர் நீலகண்டன் அரவிந்தன் வந்து என்னை தமிழ் தட்டச்சுக்குப்
படிப்பித்தார்.
அவர்தான் முரசு அஞ்சல் என்ற சேவையை எனக்கு அறிமுகம் செய்தார். அன்று
முதல்
இன்றுவரை நான் எழுதுவது முரசு அஞ்சல் எழுத்துருவில்தான்.
நான் பேசும் வேகத்தில் தட்டச்சுசெய்பவன். ஒருமணிநேரத்தில் இரண்டாயிரம்
சொற்கள்
வரை. அது தட்டச்சில் ஒரு சாதனை என்கிறார்கள். கணிப்பொறியில் தட்டச்சிட
ஆரம்பித்தபின்னர் என் எழுதும் முறை மாறிவிட்டது. முதல்விஷயம் எழுதும்
அளவை மனம்
கணக்கிட்டபடியே இருக்கிறது. சொற்கணக்கு வரிக்கணக்கு. பத்தி அளவுகள் சீராக
அமைகின்றன. ஒரு பத்தி என்பது ஒரு கருத்து என்பதனால் கட்டுரைகளின் அமைப்பு
சமவிகிதம் கொண்டதாக ஆகியது
மேலும் எழுதுவதை மாற்றுவது செம்பிரதி எடுப்பது ஆகியவற்றில் அதிக நேரம்
வீணாவது
தடுக்கப்பட்டது.நான் எழுதும் பக்கங்கள் சீராக இருக்கவேண்டும் என
விரும்புகிறவன். பிழைகளை நான் வெட்டுவதில்லை. முன்பெல்லாம் நான் எழுதும்
காகிதப் பக்கங்களில் பிழைகள் மேல் காகிதத்தைவெட்டி ஒட்டுவேன். கணிப்பொறி
சீரான
எழுத்துப்பக்கங்களை அளித்து என் படைப்பூக்கத்தை தக்கவைக்க உதவுகிறது.
இப்போது பலவகையான எழுத்துருக்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பலவற்றை நானே
சோதித்துப் பார்த்துவிட்டேன். முரசு தான் எனக்கு வசதியாக இருக்கிறது.
அத்துடன்
முரசு எழுத்துருவை பிற இதழ்கள் பதிப்பகங்களின் எழுத்துருக்களுக்கு
எளிதில்
மாற்றிக்கொள்ளலாம். முரசு எழுத்துருவை உருவாக்கிய முத்து நெடுமாறன்
குழுவினருக்கு நான் கடமைப்பட்டவன்.
இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான தளம் திண்ணை. அதில் நான் தொடர்ந்து
பலவருடங்கள் எழுதியிருக்கிறேன். எனக்கு இணையவெளியில் ஒரு வாசகர் வட்டம்
உருவாக
திண்ணை ஒரு காரணம். அதன் ஆசிரியர்கள் கோ.ராஜராம், துக்காராம் ஆகியோர் என்
நன்றிக்குரியவர்கள்.
ஆனால் இணைய விவாதங்களில் நான் மனக்கசப்புகளையே அதிகம் சந்தித்தேன்.
இணையம் ஒரு
சுதந்திர வெளி. நமக்கு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென தெரியாது.
திண்ணை
விவாதங்களிலும் ·பாரம் ஹப் என்ற தளத்தின் விவாதங்களிலும் நான்
நேர்மையாகக்
கலந்துகொண்ட நாட்களில் பலர் புனைபெயரில் வந்து என்னை வசைபாடினார்கள். என்
கருத்துக்கள் திரிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் நான் சொல்லியவற்றையே
விளக்கிச்
சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்
இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும்
மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும்
முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை
கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது.
அவர்கள்
ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை
எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.
பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும்
பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும்
தீவிரமான
விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை எழுதிப்
புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையின்,
தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள்
இணையம்
அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல் செய்கின்றன.
இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவது, அவர்களின் அந்தரங்கங்களை
தோண்டி
எடுத்து திரித்து வெளியிடுவது, எழுதவரும் பெண்களை அவமதிப்பது என்பது ஓர்
இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய வெளிக்கு வர
அச்சப்படும்
நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார் பெயரால்,தமிழியத்தின் பெயரால்
சிலரால்
செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும் கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும்
செய்திருக்கிறார்கள். அவை தங்களை திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள்
விபரீதத்தை உணர்ந்தார்கள்.
இணையத்தில் தமிழைக் கொண்டுவர உழைத்த முன்னோடிகளில் சிலரே
சாதிக்காழ்ப்புடன்
இதைச் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான்
பயன்பட்டன
என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன். ஒரு திரட்டியில் என்
இணையதளத்தை இணைப்பதற்கே நான் அச்சப்படும் சூழல் இன்று நிலவுகிறது.
அவ்வகையில் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப்பரிமாற்றத்துக்கான
சாத்தியங்களை
இல்லாமலாக்கி நம் பொதுவெளியை சீரழித்தது என்றே சொல்ல வேண்டும். இன்றும்
தமிழில்
இணையத்தில் ஓர் பொது உரையாடல் சாத்தியம் என நான் நம்பவில்லை.இணையத்தில்
தமிழில் வரும் எதையுமே நான் நம்புவதில்லை. இந்நிலைக்கு முன்னோடி
இணையப்பதிவாளர்கள்தான் பொறுப்பு.
இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு
குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது
எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும்
சருகுக்
குப்பைகள். எந்த ஒரு தலைப்பிலும் இணையத்தில் தமிழில் தேடினால் ஒன்று
அல்லது
இரண்டு பதிவுகளே பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். பெரும்பாலானவை
அரட்டையோ
வசையோ ஆகவே இருக்கும். சந்தேகமிருந்தால் தேடிப்பாருங்கள்.
தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த ,
பதவிகளில்
இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி தலைகுனியவேண்டிய
விஷயம்.
இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும் பலவருடங்கள் வாசித்தார் என்றால்
அவர்
எந்தவகையான பொது அறிவும் இலக்கிய அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார்.
தமிழில்
உள்ள பல மூத்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியும்,
ஒரு
பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல
வருடங்களாக
அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர் குமுதம் போன்ற
ஒரு
வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்.
தமிழ் இணைய உலகின் இந்த இழிநிலையை மாற்ற என்ன செய்யமுடியும் என்றுதான்
இப்போது
கவனிக்க வேண்டும். நமக்குப்பிடிக்காதவர்களை தாக்குகிறார் என்ற ஒரே
காரணத்துக்காக அவதூறுகள் செய்பவரையும், வசைபாடுபவரையும் நாம்
அங்கீகரித்து
ஆதரித்தோம் என்றால் தமிழுக்கு ஒரு பெரும் கெடுதலை அளிக்கிறோம் என்று நாம்
உணர்ந்தாக வேண்டும்.
இந்த எதிர்மறை அம்சங்களைத் தாண்டி நான் இணையத்தை என் கருத்துச்
செயல்பாடுகளுக்காகவும் இலக்கியச்செயல்பாடுகளுக்காகவும் சாதகமாகப்
பயன்படுத்த
இயலும் என்றே எண்ணியிருக்கிறேன். 2003 ல் நான் நண்பர்கள் உதவியுடன்
மருதம் என்ற
இணைய இதழை ஆரம்பித்தேன். நிதிப்பற்றாக்குறையால் அது நின்றது. சென்ற
இரண்டு
வருடங்களாக என் இணையதளம் வந்துகொண்டிருக்கிறது. [www.jeyamohan.in]
என் இணையதளம் வெளிவர ஆரம்பித்தபின்னர் எனக்கு கிடைத்த வாசக கவனம்
இருமடங்காக
ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். தினம் பல்லாயிரம்பேர் இதை
வாசிக்கிறார்கள்.
எதிர்வினையாற்றுகிறார்கள். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி என்னை
புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பர் சிறில் அலெக்ஸ் இந்த
இணையதளத்தை
நடத்துகிறார்.
இணையத்தில் இன்று செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன என்று எனக்குப்
படுகிறது.
1. அபிதான சிந்தாமணி போன்ற புராதனமான கலைக்களஞ்சியங்களை இணையத்தில்
ஏற்றவேண்டும். அவை அகர வரிசைப்படி முழுமையான உள் இணைப்புகளுடன்
அமைந்திருக்க
வேண்டும்.
2. பெரியசாமி தூரன் உருவாக்கிய ‘தமிழ் கலைக்களஞ்சியம்’ இணையத்தில்
ஏற்றப்படவேண்டும்
3. தமிழ் இலக்கிய, தத்துவக் கலைச்சொற்களுக்காக ஒரு இணையதளம் வேண்டும்.
அது
விக்கிபீடியா போல ஒரு திறந்த அமைப்பாக இருக்கலாம். யாரும் சொற்களை
இணைக்கலாம்.
ஒரு பொதுவான மேற்பார்வை மட்டும் போதும். ஆனால் அதற்கு ஒரு ‘டெம்ப்ளேட்’
தேவை.
அ. கலைச்சொல். ஆ. அதன் ஆங்கிலச் சொல். இ. அதன் பொருள். ஈ. ஏதேனும்
நூலில்
இருந்து ஒரு மேற்கோள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். அதில் தேடும் வசதி
தேவை.
ஆங்கிலச்சொல்லை கொடுத்தால் அதற்கான தமிழ்ச் சொற்களும் தமிழ்ச்சொல்லைக்
கொடுத்தால் ஆங்கிலச் சொல்லும் தெரியவேண்டும்.
4. தமிழகக் கல்வெட்டுகளை புகைப்படமாகவும் தமிழிலும் ஆங்கிலத்திலும்
உள்ளடக்க
விவரங்களுடனும் இணையத்தில் ஏற்றவேண்டும்.
5. தமிழக சைவ வைணவ ஆலயங்களைப்பற்றிய ஒரு நல்ல இணையதளம் தேவை. இவற்றையும்
விக்கி போலவே திறந்த நிலையில் உருவாக்கலாம். தானாகவே அவை வளரும் வண்ணம்.
இவை எதிர்காலத்தில் நிகழலாம். நிகழவேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Oct 5, 3:56 pm, seethaalakshmi subramanian
<seethaalaks...@gmail.com> wrote:
> தேவ், இது பாதுக்காக்கப்பட வேண்டிய பதிவு. என்னைவிட ஓரளவு கொஞ்சம் கூடுதலாகவே
> உங்களுக்குத் தெரியும். எனவே நிறைய கேள்விகள்
> கேட்டு விபரங்கள் பெறவும். முதலில் இணைய வர;லாறு தொடரட்டும் இறுதியில் தமிழ்
> இணைய வரலாறு வரட்டும். நாம் முடிந்த மட்டும் முழுமையாக அறிந்து கொள்வோம்.பதிவு
> மற்றவர்களால் திசை மாறாமல் பார்த்துக் கொள்ளவும். யாரும் இதனைத் தவறாக
> எடுத்துக் கொள்ள வேண்டாம். அறிந்தவர், தெரிந்தவர் எழுதலாம். ஆனால் திரு கணேசன்
> அவர்கள் முன்னின்று செல்லட்டும். தகுதியான தலைமை. அவருக்கு மீண்டும் நன்றி
> கூறிக் கொள்கின்றேன்
> சீதாம்மா
>
பிறந்தநாள் காணும் அம்மா,
தாங்கள் படிக்க தமிழ் கணிமை வரலாற்றுக்கு
ஒரு விக்கி பக்கம். காலக்கோடு காட்டப்பட்டுள்ளது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
மற்றவர்கள் தமிழ் கணிமை, இணைய வரலாறு
தருவார்கள்.
நன்றி,
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அதென்னங்க மறதி ஞானிமறந்துட்டாலே ஞானம் இல்லாமல் போயிடுமே
இந்த சுட்டியை அளித்த கணேசன் சாருக்கு நன்றி
1.இணையத்தில் தனிமனித தாக்குதல் இருந்த காலகட்டம் 2006 -2008 என்று நினைக்கிறேன்
மேலும் இணையத்தின் விசாலத்தை அதன் வளர்ச்சியை அது பாதிக்க வில்லை
2.இணையத்தில் தனிமனித தாக்குதலை செய்தவர்கள் திராவிடத்தை உயர்த்தினார்கள் என்றாலும் அது தவறே என அப்போதே
பல இணைய வாசிகள் திராவிட ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்
3.இணையம் என்பது பொது வெளி அங்கே ஜெயமோகன் வருவதற்கு முதலே பலர் மிக பெரிய விசயங்களில் தமிழுக்கு
தொண்டாற்றுவதில் ஈடுபட்டார்கள் முக்கியமாக இடதுசாரி திராவிட ஆதரவாளர்கள் செய்திருந்தார்கள்
4.திண்ணை ஒரு இணையதளம் ஆனால் பல பிளாக்கர்கள் மிகப்பெரிய விவாதங்களை முன்னெடுத்து இருந்தார்கள்
5.இதையெல்லாம் சொல்வதன் மூலன் ஜெயமோகன் ஏற்படுத்தும் குறிப்பிட்ட பிம்பத்தை உடைக்க முயல்கிறேன் என விளங்கும்
நன்றி
யேசுராஜன்
--
நிறைய பேர் செய்திருக்கிறார்கள் முகுந்த் என்பவர் ஞாபகம் இருக்கு தமிழ் டைப்பிங் நிறலி எழுதி இருந்தார்