கொங்குநாட்டு நிலத்தியல்
(GEOLOGY OF KONGU NADU)
முன்னுரை
கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற சொற்பொழிவுகள், கொங்கு நாட்டைச் சார்ந்த வரலாறு, தொல்லியல், நிலவளம், மக்கள் கலை ஆகியன பற்றி அமைவன. அவ்வகையில் இம்மாத (”ஃபிப்ரவரி”, 2018 ) நிகழ்ச்சியாகக் கொங்கு நாட்டு நிலத்தியல் குறித்து நிலத்தியல் பேராசிரியர் முனைவர். கி.கதிர்வேலு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய ஒரு பதிவை இங்கு பகிர்கிறேன். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். நிலத்தியல் படிப்பு சென்னையில் மாநிலக் கல்லூரியில் மட்டுமே இருந்த நாள்களில் முதுகலை நிலத்தியல் படித்து முனைவர் பட்டமும் பெற்றவர்.
நிலத்தியல் ஓர் அறிமுகம்
நிலத்தியல் என்பது புவியைப் பற்றிய அறிவியல் என்றாலும், அதன் கீழ் உட்பிரிவுகள் பல உள. ”கட்டமைப்பு நிலத்தியல்” (STRUCTURAL GEOLOGY) என்று ஒரு பிரிவு. பாறைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை பற்றிய அறிவியல் துறை. கனிமவியல் (MINEROLOGY) என்றொரு பிரிவு. கனிமங்களைப் பற்றிக் கூறுவது. இவை போன்று பல்வகைப் பிரிவுகள். புவி (EARTH) தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்று கணிக்கப்படுள்ளது. புவியின் தோற்றத்துக்குப் ”பெருவெடிப்பு” (BIG BANG) என்னும் நிகழ்வு காரணமாயிருந்துள்ளது என்று அறிவியலார் கண்டறிந்துள்ளனர். கோள்களின் மோதல்களாலும், விண் கற்களின் மோதல்களாலும் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே புவி தோற்றம் பெற்றது.
புவி, கதிரவனிடமிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் அமைந்துள்ளது. 3476 கி.மீ. விட்டம் கொண்டது. 5 கோடி 10 மில்லியன் சதுர கி.மீ. அளவு பரப்புக்கொண்டது. புவி தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்பது அறிவியலாளர்கலின் கருத்து. புவியின் தோற்றத்தைப் பற்றிய குறிப்பு “பைபிளி”ல் உள்ளது. அதன்படி 6000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும், 12000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும் இரு குறிப்புகள் பைபிள் வழி அறியப்படுகின்றன. இந்தியக் கணிப்பில் பத்து யுகங்களுக்கு முன்னர் புவி தோன்றியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கி.பி. 1403 வரை, அதாவது கோபர்னிகஸ் (COPERNICUS) என்னும் அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்கு முன்பு வரை, புவியை மையமாகக் கொண்டு மற்ற கோள்கள் சுற்றுவதாகக் கருதப்பட்டது. அதே போல், கலிலியோ (GALILEO) என்னும் அறிவியலாளர் கண்டறிந்து சொன்ன பின்னரே, புவி உருண்டை வடிவுடையது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், மாணிக்கவாசகப் பெருமான், தம் திருவண்டப் பகுதியில், அண்டம், பேரண்டம் ஆகிய சொற்களால் உலகத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். பேரண்டம் என்பது எண்ணற்ற கோளங்களை உள்ளடக்கியது. கதிரவனின் ஒளிக் கற்றைகளுக்கிடையில் நாம் காணுகின்ற தூசிப் படலத்தைப் போல் அண்டத்தில் கோளங்கள் இயங்குகின்றன என்று மாணிக்கவாசகர் கூறுவது கருதத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரும் தம் அகவலில் அண்டம் உருவாகியதைக் குறிக்கிறார். கதிரவனை மையமாகக் கொண்டுள்ள விண்ணியல் அமைப்பில் (SOLAR SYSTEM), கதிரவனைச் சுற்றும் முதலிரு கோள்களாகிய வெள்ளியிலும் புதனிலும் (VENUS, MERCURY) அவற்றின் மிகு வெப்பம் காரணமாக உயிரினம் இல்லை. மூன்றாவதாகச் சுற்றும் புவியில் மட்டுமே உயிரினம் தோன்றியது.
புவியின் உட்புறத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதற்பகுதி, மேற்பரப்பு. இதனை ஆங்கிலத்தில் CRUST என்பர். இதன் ஆழம் 50 கி.மீ.. அதற்கடுத்த பகுதி 50-2980 கி.மீ. ஆழம் கொண்டது இதனை ஆங்கிலத்தில் MANTLE என்பர். மூன்றாவது பகுதி 6378 கி.மீ வரையிலான ஆழம். இதனை ஆங்கிலத்தில் CORE என்பர். புவியின் மேற்பரப்பில் எட்டு அடுக்குகள் (PLATES) உள்ளன. கடலுக்கு அடியில் அமைந்துள்ள நிலத்தின் அடர்த்தியை விடப் புவியின் மேற்பரப்பு (எட்டு அடுக்குகள் கொண்ட 50 கி.மீ. ஆழம் கொண்ட பகுதி) அடர்த்தி குறைவானது. எனவே, இந்த எட்டு அடுக்குகளும் கடலில் மிதக்கின்றன. இந்த அடுக்குகளில்தான் கண்டங்களின் நகர்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த எட்டு அடுக்குகளில் அன்ட்டார்டிகா, ஆர்க்டிக் ஆகியன இரு அடுக்குகள்; ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா போன்றவை ஆறு அடுக்குகள். இந்தியக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்ததுண்டு. இந்த அடுக்குகளின் நகர்வின்போது, இந்தியக்கண்டம் யூரேசியாவின் மீது மோதியபோது இமயமலை தோன்றியது. இவ்வடுக்குகள் உட்பகுதியில் பாறைகளைக் கொண்டுள்ளன. CORE எனப்படும் மூன்றாவது பகுதியில், திடப்பொருள் வடிவிலான இரும்பு, நிக்கல் ஆகியன இருக்கும். மரியானா அகழி (MARIANA TRENCH) என்னும் இடம்தான் கடலின் மிக ஆழமான பகுதி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ 11 கி.மீ. ஆழம் கொண்டது.
பூமிக்கடியில் செல்லச் செல்ல வெப்பமும் அழுத்தமும் மிகுதி. எனவே, பூமிக்குக் கீழ் செல்வது இயலாது. பூமியின் மேற்பரப்பில் ஏறத்தாழ 115 தனிமங்கள் (ELEMENTS) உள்ளன. சிலிக்கான், அலுமினியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், நிக்கல், சல்ஃபர் என்பன போன்ற இருபது தனிமங்கள் மட்டும் 98 விழுக்காடு உள்ளன. 1638 வகையான பாறைகள் உள்ளன. 700 கி.மீ. ஆழத்தில், பாறைகள் உருகி “மாக்மா” (MAGMA) என்னும் பாறைக்குழம்பு உருவாகிறது. அதுவே குளிர்ந்து பின்னர் கனிமப் பாறைகளாக மாறுகின்றது. பாறைகளில் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS), படிவுப்பாறைகள் (SEDIMENTARY ROCKS), உருமாற்றுப் பாறைகள் (METAMORPHIC ROCKS) எனப் பல்வேறு பாறை வகைகள் உள்ளன.
கொங்கு நாட்டு நிலத்தியல்
கொங்கு நாடு, நான்கு புறமும் மலைகள் அரணாகச் சூழ்ந்து மிகுந்த பாதுகாப்பாக அமைந்துள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல், குடவனாறு, சண்முக நதி, பவாநி, உப்பாறு, நல்காஞ்சி போன்ற பன்னிரண்டு ஆறுகள் ஓடுகின்ற நாடு. “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்” என்று பழமொழி உள்ளது. ”கொங்கு” என்னும் சொல்லுக்குத் தேன் என்றும், சாரல் என்றும் பொருள் உண்டு. மேற்கு மலைத் தொடரில், கிழக்குச் சாரலில் அமைந்துள்ளது கொங்கு நாடு. சேர, சோழ, பாண்டியரின் நாடுகளின் ஓரத்தில் கொங்கு நாடு அமைந்திருந்ததால் “கங்கு” என்று பெயரமைந்தது எனலாம். ”கங்கு” என்னும் சொல், எல்லை, கரை, வரம்பு ஆகியவற்றைக் குறிக்கும். (கங்கு, கொங்காகத் திரிந்திருக்கலாம்). கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு. படிவுப்பாறைகளோ, எரிமலைப் பாறைகளோ கொங்கில் இல்லை. இதன் காரணமாகவே, கொங்கு நாட்டில் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
கொங்கு நாட்டில் பச்சைக் கல் (BERYL) ஒட்டன் சத்திரம், சித்தம்பூண்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ஊத்துக்குளிப் பகுதியில் படிகக் கற்கள் (QUARTZ) கிடைக்கின்றன. கோவையில் பெருமளவில் செய்யப்படும் மாவரைக்கும் பொறிக்கான (GRINDER) கற்களான “பேசிக் சார்னக்கைட்” (BASIC CHARNOCKITE) ஊத்துக்குளிப்பகுதியில்தான் உள்ளன. பல்லடத்தில் “ஜிப்சம்” என்னும் கல் கிடைக்கின்றது. ஆங்கிலேயரான இராபர்ட் புரூஸ்ஃபுட் (ROBERT BRUCE FOOTE) என்னும் நிலத்தியல் அறிஞர், 1905-இல் சிவன் மலைப்பகுதியில் ஆய்வு செய்து, இப்பகுதியில் ”நெஃப்லைன் சைனைட்” (NEPHELINE SYENITE) மற்றும் கொரண்டம் சைனைட் (CORUNDUM SYENITE) ஆகிய பாறைகள இருப்பதைக் கண்டறிந்தார். இவை, ALKALINE ROCKS வகைக் கற்களைச் சேர்ந்தன. இக்கற்கள் தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைப்பதில்லை என்பதோடு, இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். சேலத்தில், ட்யுனைட் (DUNITE), பெரிடோடைட் (PERIDOTITE) ஆகிய கற்கள் இருப்பதையும் இவர் கண்டறிந்தார். இவையும் கொங்கு நாட்டில் மட்டுமே உள்ளன. ட்யுனைட் (DUNITE) என்பது, மாக்னசைட்டின் நரம்புகள் எனப்படுவன. தொழிற்சாலைகளில் வெப்பம் தாங்கிகளாகப் பயன்படுவன. இராமயணத்தில், சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் போரிட்டு மடியும் ஜடாயுவின் இறக்கைகளே இந்த மாக்னசைட் நரம்புகள் என்னும் ஒரு புனைவு உண்டு.
”நெஃப்லைன் சைனைட்” பாறைக்கல்
சிவன் மலையில் இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது
படம் - இணைய தளம்
கொங்கு நாட்டின் கொடுமணல் பகுதியில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் நிறுத்தியிருக்கும் நடுகற்கள் BIOTITE GRANITE GNEISS என்னும் உருமாற்றுப் பாறைக்கற்களால் ஆனவை. நெடிதுயர்ந்த அக்கற்கள் பெருந்துறை, சென்னிமலைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இடம் பெயர்ந்து கொண்டுவரத் தக்க தொழில் நுட்பம் அப்போதே இருந்துள்ளமை வியக்கத்தக்கது. கொடுமணலில், பச்சைக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகிய மணிகளைச் செய்து மாலைகளாக்கி உரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்கூடங்கள் இருந்தன என்பதை நாம் அறிவோம். கொடுமணலில், பெருங்கற் சின்னங்களான கல்பதுக்கைகளில் (CIST), ”சார்னக்கைட்” (CHARNOCKITE) வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறிப்பு: "சார்னக்கைட்” (CHARNOCKITE) வகைக் கற்களுக்கு அப்பெயர் வந்த பின்னணி கருதத்தக்கது. 1656-இல் கல்கத்தாவில் முதல் வைஸ்ராயாகப் பதவியேற்ற ”ஜாப் சார்னக்” (JOB CHARNOCK) என்பவர் கல்கத்தா நகரை உருவாக்கியவர். 1693-இல் மறைந்த அவருக்குக் கல்கத்தாவில் கல்லறை கட்டப்படும்போது, சென்னைக்கருகிலுள்ள பல்லாவரத்திலிருந்து ஒரு வகைக் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. ஹாலந்து (T.H. HOLLAND) என்னும் நிலத்தியல் அறிஞர் 1893-இல் இவ்வகைக் கற்களுக்குச் சார்னக்கின் பெயரையே சூட்டினார்.) கொடுமணலில் காணப்படும் கல்வட்டங்களில் (CAIRN CIRCLE) பயன்படுத்தப்பட்ட கற்கள் ”மாக்னடைட்” (MAGNETITE) என்னும் இரும்புத்தாது கொண்ட கற்களாகும்.
BIOTITE GRANITE GNEISS பாறைக் கல்
(கொடுமணல் நடுகற்களில் காணப்படுவது)
படம் - இணைய தளம்
"சார்னக்கைட்” கல்
(பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது)
படம் - இணைய தளம்
பெரிடோடைட் (PERIDOTITE)
படம் - இணைய தளம்
”ஜாப் சார்னக்”கின் கல்கத்தாக் கல்லறை
கொங்குநாட்டில் சேலத்தில் கஞ்சமலைப்பகுதியில், ”மாக்னடைட்” (MAGNETITE) என்னும் இரும்புத்தாது கொண்ட கற்கள் கிடைக்கின்றன. ஆனால், சுரங்கம் அமைத்து இரும்பு எடுக்கும் தொழில் தொடங்கப்படவில்லை.
கனிமங்களும் சித்தமருத்துவமும்
சித்தர்கள், கனிமங்களைப் ( MINERALS) பற்றி நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, போகர் கனிமங்களைச் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது ஆய்வு வழி வெளிப்பட்டுள்ளது. அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய “போகர் ஏழாயிரம்” என்னும் நூலில், அவர் பயன்படுத்திய கனிமங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. சென்னையைச் சேர்ந்த சித்தமருத்துவர் திருமதி சொர்ண மாரியம்மாள் என்பவர், ”போகர் ஏழாயிரத்தில் பயன்படுத்திய கனிமங்கள்” என்னும் நூலில் இக்கனிமங்கள் பற்றி எழுதியுள்ளார். இவர் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
வேறு செய்திகள்
அமெரிக்காவில், அரிசோனா பகுதியில் “பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) அமைந்துள்ளது. 446 மைல் நீளமும், 24 மைல். அகலமும், 5000 அடி ஆழமும் கொண்டது. நிலத்தியல் அறிவியலாளர்களின் சொர்க்கம் என்று அதனைக் குறிப்பிடுவர். ஏனெனில் அங்கு புவி தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலான காலத்துக் கற்கள் அனைத்தும் காணக்கிடைக்கின்றன. 1925-45 காலக்கட்டத்தில், அமெரிக்கர் அங்கு சுரங்கம் அமைத்து “யுரேனியம்” (URANIUM) எடுத்தனர். இந்தக் கனிம வளமே அமெரிக்கா வளர்ந்த நாடாக உருவாகக் காரணமாயிற்று. இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA” என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
“பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) - சிவன் மலை
படம் - இணைய தளம்
கொடுமணல் காலத்திலிருந்து சிவன் மலையாக அடையாளம் கொண்ட சிவன் மலை, பின்னாளில் முருகன் மலையாக மாற்றப்பட்டிருக்கலாம். இன்றுவரை, சிவன் மலை என்னும் பெயரே வழங்குவதைக் காண்க.
திருப்பதி மலைப்பகுதி முன்பு கடலாயிருந்தது. இந்த மலை, படிவுப்பாறைகள் கொண்டது. இப்படிவுப்பாறைகள் சார்ந்த மண்ணில் செம்மரம் வளரும். திருப்பதி மலை தோன்றி 120 மில்லியன் ஆண்டுகள் ஆயின. திருவண்ணாமலை தோன்றி 2800 மில்லியன் ஆண்டுகள் ஆயின.
நொய்யல் ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடியது என்றொரு நிலத்தியல் கருதுகோள் உள்ளது. இது ஆய்வுக்குரியது.
ஆண்டாள் தன் பாசுரத்தில் “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று” என்பதாகப் பாடியிருக்கிறாள். வெள்ளிக் கோள், வியாழக் கோள் (VENUS, JUPITER) பற்றிய வானியல் அறிவு, கோபர்னிகஸ் காலத்துக்கு முன்பே இங்கு இருந்துள்ளதை இது புலப்படுத்துகிறது எனலாம்.
முடிவுரை-கட்டுரை ஆசிரியர் கருத்து.
நிலத்தியல் பற்றிய அறிவு, அதன் துறை சார்ந்த படிப்புப் படித்தவர்க்கே கிடைப்பது இயல்பு. அவ்வகைப் படிப்பு அற்றவர்க்கும் நிலத்தியல் பற்றிய புரிதலுக்கும், நிலத்தியலின் அடிப்படையில் கொங்கு நாட்டமைப்பைப் பற்றிய புரிதலுக்கும் ஏதுவாக எளிமையாக ஆனால் ஆழ்ந்த செய்திகளைத் தம் உரை மூலம் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கி. கதிர்வேலு அவர்கள் பாராட்டுக்குரியவர். மூப்பின் காரணமாக உரை நிகழ்த்துவதற்குத் தளர்வு ஏற்பட்டாலும் நெடு நேரம் நின்று உரையாற்றியது சிறப்பு. கொங்கு மக்கள் பேறு பெற்றவர்கள். பேரிடரான நில நடுக்கம், நம்மை அண்டாது என்னும் நம்பிக்கையை அவரது உரை ஊட்டியது எனில் மிகையல்ல.
படங்கள் உதவி : இணைய தளம்
-------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கொங்குநாட்டு நிலத்தியல்
(GEOLOGY OF KONGU NADU)
வேறு செய்திகள்
அமெரிக்காவில், அரிசோனா பகுதியில் “பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) அமைந்துள்ளது. 446 மைல் நீளமும், 24 மைல். அகலமும், 5000 அடி ஆழமும் கொண்டது. நிலத்தியல் அறிவியலாளர்களின் சொர்க்கம் என்று அதனைக் குறிப்பிடுவர். ஏனெனில் அங்கு புவி தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலான காலத்துக் கற்கள் அனைத்தும் காணக்கிடைக்கின்றன. 1925-45 காலக்கட்டத்தில், அமெரிக்கர் அங்கு சுரங்கம் அமைத்து “யுரேனியம்” (URANIUM) எடுத்தனர். இந்தக் கனிம வளமே அமெரிக்கா வளர்ந்த நாடாக உருவாகக் காரணமாயிற்று. இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA” என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
“பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) - சிவன் மலை
On Friday, March 9, 2018 at 8:49:34 PM UTC-8, dorai sundaram wrote:கொங்குநாட்டு நிலத்தியல்

கிளாரன்ஸ் டட்டான் என்ற நிலவியல் ஆய்வாளர், கிராண்ட் கேன்யான் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது நிலவியல் குறிப்புகள் என்ற முறையில் உலகம் முழுவதும் உள்ள "பொருத்தமான" தொன்மக் கதைகளின் அடிப்படையில் நிலவியல் பெயர்களை வைக்க முற்பட்டார்.
இதில் இந்தியா என்றல்ல பிறநாடுகளின் தொன்மப் புனைவுகள் பெயரும் அடக்கம்.சிவன் தலை உச்சி இமயம், வாராக அவதார திருமால் குடைந்து புவியின் அடிக்குச் செல்வதை நினைவுறுத்தும் கதைகள் இவற்றில் தாக்கம் கொடுத்தன. அவ்வாறே உலகின் பிறன் நாட்டுத் தொன்மங்களும்.
இது அறிவியலில் பெயர் வைக்கும் முறையில் ஒரு மரபு. உயிரியலில் சைகிளாப்ஸ் என்ற ஒற்றைக் கண் அரக்கன் பெயர் தாங்கிய விலங்கினம் நினைவு வருகிறது.
Clarence Dutton worked for the U.S. Geological Survey from 1875-1891, in the meantime publishing his Tertiary History of the Grand Cañon District, one of the definitive books on the geology of the Canyon. Dutton is known as one of the fathers of seismology, and many scientists regard his work as laying the foundation for modern geology, including the theories of plate tectonics and continental drift, which were based in part on Dutton’s research at the Grand Canyon (Powell 2005: ch. 8). Following Powell’s general hypotheses, Dutton explained how the formation of the Canyon required both the uplifting of the Colorado Plateau and the downcutting of the Colorado River. He elaborated many important principles of erosion and volcanic action that shaped the fantastic landforms of the Canyon. His work therefore contributed to the accepted consensus among geologists by the turn of the century that erosion was an essential force in creating the Canyon landscape. At the same time, he also christened many of the features in the canyon with names inspired by Asian religions or ancient Roman and Greek mythology...... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Friday, March 9, 2018 at 8:49:34 PM UTC-8, dorai sundaram wrote:கொங்குநாட்டு நிலத்தியல்
(GEOLOGY OF KONGU NADU)
வேறு செய்திகள்
அமெரிக்காவில், அரிசோனா பகுதியில் “பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) அமைந்துள்ளது. 446 மைல் நீளமும், 24 மைல். அகலமும், 5000 அடி ஆழமும் கொண்டது. நிலத்தியல் அறிவியலாளர்களின் சொர்க்கம் என்று அதனைக் குறிப்பிடுவர். ஏனெனில் அங்கு புவி தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலான காலத்துக் கற்கள் அனைத்தும் காணக்கிடைக்கின்றன. 1925-45 காலக்கட்டத்தில், அமெரிக்கர் அங்கு சுரங்கம் அமைத்து “யுரேனியம்” (URANIUM) எடுத்தனர். இந்தக் கனிம வளமே அமெரிக்கா வளர்ந்த நாடாக உருவாகக் காரணமாயிற்று. இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA” என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
“பெரும் பள்ளத்தாக்கு” (GRAND CANYON) - சிவன் மலை
கிளாரன்ஸ் டட்டான் என்ற நிலவியல் ஆய்வாளர், கிராண்ட் கேன்யான் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது நிலவியல் குறிப்புகள் என்ற முறையில் உலகம் முழுவதும் உள்ள "பொருத்தமான" தொன்மக் கதைகளின் அடிப்படையில் நிலவியல் பெயர்களை வைக்க முற்பட்டார்.
இதில் இந்தியா என்றல்ல பிறநாடுகளின் தொன்மப் புனைவுகள் பெயரும் அடக்கம்.சிவன் தலை உச்சி இமயம், வாராக அவதார திருமால் குடைந்து புவியின் அடிக்குச் செல்வதை நினைவுறுத்தும் கதைகள் இவற்றில் தாக்கம் கொடுத்தன. அவ்வாறே உலகின் பிறன் நாட்டுத் தொன்மங்களும்.
இது அறிவியலில் பெயர் வைக்கும் முறையில் ஒரு மரபு. உயிரியலில் சைகிளாப்ஸ் என்ற ஒற்றைக் கண் அரக்கன் பெயர் தாங்கிய விலங்கினம் நினைவு வருகிறது.
Clarence Dutton worked for the U.S. Geological Survey from 1875-1891, in the meantime publishing his Tertiary History of the Grand Cañon District, one of the definitive books on the geology of the Canyon. Dutton is known as one of the fathers of seismology, and many scientists regard his work as laying the foundation for modern geology, including the theories of plate tectonics and continental drift, which were based in part on Dutton’s research at the Grand Canyon (Powell 2005: ch. 8). Following Powell’s general hypotheses, Dutton explained how the formation of the Canyon required both the uplifting of the Colorado Plateau and the downcutting of the Colorado River. He elaborated many important principles of erosion and volcanic action that shaped the fantastic landforms of the Canyon. His work therefore contributed to the accepted consensus among geologists by the turn of the century that erosion was an essential force in creating the Canyon landscape. At the same time, he also christened many of the features in the canyon with names inspired by Asian religions or ancient Roman and Greek mythology...... தேமொழி
--
திரு துரை சுந்தரம் அய்யா அவர்களுக்கு, வணக்கம்.
முதற்கண், நான் உங்கள் இரசிகன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் GEOLOGY DEPT. , 1955 ஆம் ஆண்டு டி. என். முத்துசாமி ஐயர் அவர்களால் துவங்கப்பட்டது.
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் புவியின் தோற்றம், வரலாறு, கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதே புவியியல். புவியின் மேற்பரப்பிலுள்ள நிலத்தைப் பற்றி மட்டும் பேசாமல், உள்கட்டமைப்பு போன்ற செய்திகளும் பேசப்படுவதால்,GEOLOGY என்பதை “நிலத்தியல்” என்று சொல்வதைவிட புவியியல் என்றோ புவிஅறிவியல் என்றோ சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது,என் பணிவான கருத்து. மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுங்கள். Geography என்பதற்கு வேறு ஏதேனும் பெயர் சூட்ட வேண்டும்.
புவியின் தோற்றம் என்பது,Cosmology, Astrophysics போன்றவற்றை உள்ளடக்கியது.
புவியின் வரலாறு என்பது,Stratigraphy, Historical Geology, Paleontology, Isotope Geology, Geochronology போன்றவற்றை உள்ளடக்கியது.
புவியின் கட்டமைப்பு என்பது Petrology, Mineralogy, Crystallography, Structural Geology போன்றவற்றை உள்ளடக்கியது.
இவை ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகள் உள.
ஆனால், மாணிக்கவாசகப் பெருமான், தம் திருவண்டப் பகுதியில், அண்டம், பேரண்டம் ஆகிய சொற்களால் உலகத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். பேரண்டம் என்பது எண்ணற்ற கோளங்களை உள்ளடக்கியது. கதிரவனின் ஒளிக் கற்றைகளுக்கிடையில் நாம் காணுகின்ற தூசிப் படலத்தைப் போல் அண்டத்தில் கோளங்கள் இயங்குகின்றன என்று மாணிக்கவாசகர் கூறுவது கருதத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரும் தம் அகவலில் அண்டம் உருவாகியதைக் குறிக்கிறார்
மாணிக்கவாசக பெருமானும், வள்ளலாரும் இது பற்றிக் கூறியுள்ளவற்றை சுட்டிக் காட்டும்படி வேண்டுகிறேன்.
PLATES என்பதனை ‘அடுக்குகள்’ என்று எழுதியிருக்கிறீர்கள். ஒன்றன் மேல் ஒன்று இருப்பதையே அடுக்குகள் என்கிறோம். ஆனால் PLATES ஒன்றையொட்டி ஒன்று என்றே அமைந்திருக்கின்றன. ஒன்றின் மேல் ஒன்று இல்லை. எனவே PLATES என்பதை ‘புவித்தட்டுகள்’ என்றோ ‘புவிப் பெருந்தட்டுகள்’ என்றோ குறிப்பிடுவதுதான் முறையாக இருக்கும். மாறாக,STRATIGRAPHY என்பதனை ‘புவி அடுக்கியல்’ என எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
கொங்கு நாடு
கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு...
அன்று. கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளே. மருத மலை, கரைமடை, புளியம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிரானைட் பாறைகள் மட்டுமே தீப் பாறைகள் அல்லது அழற்பாறைகள் ஆகும்.
படிவுப்பாறைகளோ, எரிமலைப் பாறைகளோ கொங்கில் இல்லை. இதன் காரணமாகவே, கொங்கு நாட்டில் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
தவறு.
ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதும் ஏற்படாததும் , பாறை அமைப்பைப் பொறுத்தது அல்ல. மாறாக, அந்தப் பகுதியின் புவிக் கட்டமைப்பைப் பொறுத்தது.
கோயம்பத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி :
08 February 1900 - Coimbatore area, Tamil Nadu, M? 6.0 (13)
10.800 N, 76.800 E (1)
Known as the Coimbatore earthquake, it was felt over a large section of south India and is the largest event during the historical period.
SOURCE:http://asc-india.org/seismi/seis-tamil-nadu.htm
இவை, ALKALINE ROCKS வகைக் கற்களைச் சேர்ந்தன. இக்கற்கள் தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைப்பதில்லை
தவறு.
ஏலகிரி மலை முழுவதுமே ALKALINE ROCKS பாறைகளால் ஆனது. பாப்பாரப்பட்டி அருகேயும் இந்தப் பாறைகள் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் இவ்வகைப் பாறைகள் உள்ளன.
சேலத்தில், ட்யுனைட் (DUNITE), பெரிடோடைட் (PERIDOTITE) ஆகிய கற்கள் இருப்பதையும் இவர் கண்டறிந்தார். இவையும் கொங்கு நாட்டில் மட்டுமே உள்ளன.
மீண்டும் தவறு
ட்யுனைட் (DUNITE), பெரிடோடைட் (PERIDOTITE) பாறைகள் , திருவண்ணாமலை,கேரளாவில் புனலூர் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
1656-இல் கல்கத்தாவில் முதல் வைஸ்ராயாகப் பதவியேற்ற ”ஜாப் சார்னக்”
தவறு.
வைஸ்ராய் பதவி என்பது, சிப்பாய் புரட்சிக்குப் பின், பிரிட்டிஷ் இந்தியா, கிழக்கிந்திய கம்பனியின் நிர்வாகத்திலிருந்து வெள்ளை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்பு ஏற்ப்படுத்தப்பட்ட பதவி. முதல் வைஸ்ராய் கானிங் பிரபு. ( இவர் பெயரில் எங்கள் கடலூரில் இன்றும் ஒரு தெரு இருக்கிறது). வைஸ்ராய் பதிவிக்கு முன் ‘கவர்னர் ஜெனெரல் பதவி இருந்தது. முதல் கவர்னர் ஜெனெரல் வாரன் ஹேஸ்டிங்.
இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA” என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.
இதற்கான விளக்கம் கீழே :
Many of the canyon's landmarks were named by geologist Clarence Dutton who published one of the earliest (and best) detailed geologic studies of the canyon in 1882. Dutton believed that the canyon was such an important and impressive feature on the planet, that the names of its features should reflect all the world's cultures and thus he chose many names from mythologies and legends from around the world. Other examples of canyon landmarks named in this way are Wotan's Throne, Cheops Pyramid, Budda Temple, Solomon Temple, Jupiter Temple and Tower of Ra (all of these are major buttes, spires or mesas in the canyon).
ஆண்டாள் தன் பாசுரத்தில் “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று” என்பதாகப் பாடியிருக்கிறாள். வெள்ளிக் கோள், வியாழக் கோள் (VENUS, JUPITER) பற்றிய வானியல் அறிவு, கோபர்னிகஸ் காலத்துக்கு முன்பே இங்கு இருந்துள்ளதை இது புலப்படுத்துகிறது எனலாம்.
.இங்கே ஆண்டாளை நுழைப்பதின் அவசியம் என்ன?
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட (புறம் 35.7-8)
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற்றுபத்து 24)
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (சிலப்பதிகாரம் 10,102)
இவையெல்லாம் தெரியவில்லையா? இவையெல்லாம் கோபர்னிகஸ் காலத்திற்கு முற்பட்டவை இல்லையா?
ஐயா ,
நான் காட்டியுள்ள தவறுகளில் தவறுகள் இருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள் , திருத்திக் கொள்வேன்.
பேராசிரியர் கதிர்வேலு அவர்களின் பணி போற்றுதற்குரியது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு...
அன்று. கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளே. மருத மலை, கரைமடை, புளியம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிரானைட் பாறைகள் மட்டுமே தீப் பாறைகள் அல்லது அழற்பாறைகள் ஆகும்.
கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு...
அன்று. கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளே. மருத மலை, கரைமடை, புளியம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிரானைட் பாறைகள் மட்டுமே தீப் பாறைகள் அல்லது அழற்பாறைகள் ஆகும்.
காரை Canthium Parviflorum, Lam.; Rubiaceae. அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர் குன்றாத வெஞ்சிலையிற் கேளரவ நாண்கொளுவி ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. - திருஞானசம்பந்தர்.
காஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ளது கச்சிநெறிக்காரைக்காடு; இத்தலத்தின் தலமரம் காரை ஆகும். இஃது இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடி. பச்சை நிறக் காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் கொண்டுள்ளது. பழங்கள் உண்ணக் கூடியவை. இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் நனிபள்ளி போலு நமர்காள். 2.84.1எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. 11.காரைக்-2.1 காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் 12.சம்.115 நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச் சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் 12.சம்.1000
--