தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டுமானம் குறித்த தகவல்களைப் பெருந்தச்சன் திரு தென்னன் மெய்மன் அவர்களிடமிருந்து யாம் தொடர்ந்து பெற்று உங்களுக்குத் தொடர்ந்து அளிப்போம்.
ஏற்கனவே, ஆய்வாளர் திரு. தென்னன் மெய்ம்மன் அவர்களின் தமிழர்களின் புத்தாண்டைப் பற்றிய புதிய வரலாற்று ஆதாரத்தினை வெளிப்படுத்திய ஆய்வுக் கட்டுரை, "தி ஹிந்து தமிழ்" நாளிதழில் 5th January,
2014 அன்று வெளிவந்தது. அதன் உரலித் தொடர்பு: http://bit.ly/1f6dov1.
1. கட்டுமானங்களிலுள்ள புடைப்புகள்:
இங்கேயுள்ள படங்களில் நீங்கள் காண்பவை தஞ்சை 'இராசராசேச்சுரப் பெரிய கோயில்' கோபுரத்திலுள்ள கட்டுமானத்தில் காணப்படும் புடைப்புகள் குறித்து அவர் அவர்கள் விளக்குகிறார். இவற்றில் புடைப்புகளுள்ள இடங்களில் சிலமட்டும் வட்டமிட்டுக் காட்டியிருக்கிறோம்.
இவைகள் பிடிமானத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை என்றும், இந்தக் கட்டுமானங்களில் ஒவ்வொரு கற்களையும் மரக்கட்டைகளையும் கைகளையும் கொண்டு தூக்கி வைக்க ஏற்படுத்தப் பட்டிருக்கும் கற்புடைப்பு தான் எனக் குறிப்பிடுகிறார் திரு தென்னன் மெய்மன் அவர்கள்...
இவற்றினை 'எழுதியடித்தல்' என்பார்களாம்...
விளக்கம்: பெருந்தச்சன் திரு தென்னன் மெய்மன் அவர்கள்.
படங்கள்: திரு. யுவா (Go Green).
எடுக்கப்பட்ட தேதி: 19th January, 2014.
படப்பகுப்பு: எமது Iniya Hospitality Solutions, Chennai.
2. தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள 'யோக நடன முறைகளை' விளக்கும் சிற்பங்கள்...:
உடுக்கை ஒலிகளுக்கேற்ப கரணம் பிடித்து ஆடும் ஓக [யோக] நடன முறைகள். இப்படங்களில் உடலை வளைத்து ஆடும் கலையை பார்க்கலாம். அது மனித உடலின் சரவோட்டத்தையே மாற்றும் ஆற்றல் பெற்றதாம்.
3. கண்ணப்பநாயினார் கோவில்:
பாரம்பரிய கோவில் கட்டுமானங்களுக்கான சூத்திரம் போல் செயல்படும் மிகச் சிறிய வடிவம் தான் இது. இது ஒரு அளவுகோல் போலிருந்துள்ளது. இதில் நந்தி விதானத்தில் கோவிலிலிருந்து வெளிப்புறம் பார்த்து உட்கார்ந்திருப்பதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு அமைப்பு மாமல்லபுரத்திலும் இருக்கிறது. சோழர்களின் வழிபாட்டினில் இக்கோவில் யோக முறைக்கு மட்டுமே கட்டப்பட்டதால் இதில் குடமுழுக்கோ, வேள்விகள் போன்ற முறைகளோ கடைபிடிக்கப்படவில்லை. பிற்காலத்திய வேற்றரசர்களின் உள்ளூடுருவுகளால் பண்டைய கலாச்சாரம் சிதைக்கப்பட்டு பின்னால் பெரிய நந்தியுருவம் நாயக்கர்களின் காலத்தில் இறைவனைப் பார்த்து இருப்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முன்னுக்கு முரணானது. கீழெங்கும் செல்லமாக துள்ளித்திரியும் நாய்கள் அப்படியே தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

4. ஆட்டைத் திருவிழா:
தஞ்சையில் இராசராசன் பருவத்தினைச் சரியாக பொழியச்செய்த கட்டுக்கோப்பான ஆட்சியைக் கொடுத்து, வருடம் முழுவதும் வானம் மும்மாரி பொழிய வைத்து இயற்கையின் சக்தியை இயற்கை சுழற்சிகளின் மூலம் மிகச் சரியாகக் கொண்டுவந்து சோழப் பேரரசன் கரிகாலனுக்குப் பின் வருட நாட்களை 360 நாட்கள் சரியாக கணக்கில் வருமாறு வைத்திருந்து, தை மாதப் பௌர்ணமியில் ஆரம்பித்துப் பன்னிரண்டு நாட்கள் “ஆட்டைத் திருவிழா” என்று கொண்டாடி, 12-ம் நாள் முடிவில் அதனைத் தைப்பூசமாகக் கொண்டாடியது தான் தமிழர் திருநாளாம் தமிழர் புத்தாண்டாகவும், உழவர் திருநாளாகவும் கொண்டாடப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரமே இரண்டாம் கோபுர வாயிலிலிருக்கும் “ஆட்டை” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வெட்டு.
பின்பு வரி ஏய்ப்பு செய்வதற்காக முன்குடுமிக் காரர்களால் இத்திருவிழா சித்திரை மாதத்திற்கு சூழ்ச்சி செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. சித்திரையும் தமிழர் திருநாள்தாம். ஆனால் புத்தாண்டாகச் சோழர்கள் இயற்கை சுழற்சிகள் கொண்டு கொண்டாடியது தை ஒன்றுதாம்.
கருத்து மற்றும் கல்வெட்டில் இவற்றை அடையாளம் காண உதவிய 'பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்' அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. இங்களிக்கப்பட்டுள்ளவையே அக்கல்வெட்டுகள்.
5. தஞ்சை ராசராசேச்சுரத்தில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த நந்திதான் மூலவிமானத்தின் உச்சியில் இருக்கும் எட்டு நந்திகளில் ஒன்று. சுமார் 9 அடி உயரம் இருக்கும் இந்த நந்தி போல் எட்டு நந்திகள் எண்திசைகளைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பம் செதுக்கும் போது ஏற்பட்ட சிறு தவறோ அல்லது கல்லில் ஏற்பட்ட குறைபாடோ இதனை இங்கேயே வைத்துவிட்டார்கள். தூரத்திலிருந்து கோபுர உச்சியை அண்ணார்ந்து பார்க்கும் போது கடுகளவு தெரியும் அந்த எட்டு நந்திகளின் உண்மையான உருவத்தினை அருகில் பார்க்கும் போது எவ்வளவு பிரமாண்டமாக உள்ளது என்பது அதன் உயரத்தைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா...?
6. யாரய்யா சொன்னது, பழங்காலத்தில் சீனர்களும் கிரேக்கர்களும் தான் மேற்சட்டை அணிந்திருந்தார்கள் என்று? பாருங்கள் சோழர்கள் காலத்திய மேற்சட்டை:
இச்சட்டையணிந்த மனிதர்களின் காலக்கட்டம் பற்றி திரு. தென்னன் மெய்ம்மன் இன்றளவிலும்கூட இது ஆராயப்படவில்லை என்கிறார்.
சோழர்கள் காலத்தில் மேற்சட்டையா? இச்சிற்பங்கள் பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான சோழர்கால ஓவியங்கள். பின்னால் வந்த வேற்றரச படையெடுப்புகளில் நாயக்க, மராட்டிய ஆட்சிகளில் முக்கியமாக நாயக்கர் காலங்களில் இச்சிற்பங்களின் மீது நாயக்கர்களின் கலையாக தற்போதிருக்கும் நீல நிற ஆலிழை கிருஷ்ணர் மற்றும் இதர கண்ணாடி ஓவியங்கள் வரையப்பட்டன.
முழுதும் சுவர் வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த முழு பண்டைய சோழர்கால சித்திரத் தொகுப்புகள், பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களால் புறாக்கள் வந்து தங்குகிறதே உள்ளே இடமிருக்கும் போல என்று சுவற்றினை உடைத்துப் பார்த்து கண்டறிந்துள்ளார்.
இச்சட்டை முழுதும் வெண்மை நிறத்தில் முழுக்கை [Full Sleeve] கொண்டு கழுத்துப்பட்டை [Collar] கொண்டிருப்பது ஏதோ நவீன மேற்சட்டை போன்று தோற்றமளிக்கிறது. முழுமையாகப் பார்க்கும் போதும் இதனில் பொத்தான்கள் இல்லை. அதற்னைக்கொண்டு பார்க்கும்போது, ஆண்கள் உடுத்தும் நவீனகால Blazer மேலங்கி போலல்லவா இருக்கிறது!!!

அனைவரின் கருத்துக்களும் நம் பழந்தமிழ் வாழ்வியல் முறைகள் குறித்த கருத்தாக்கங்களும் வரவேற்கப் படுகின்றன.
நன்றி.
Thanking you.
--
With best regards,
Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.