”எனக்குத் தெரிந்த வரை“

26 views
Skip to first unread message

Va.Mu.Se. Kavi Arasan

unread,
Feb 11, 2009, 8:11:34 AM2/11/09
to minT...@googlegroups.com
அன்பர்களே
 
திரு. ஆமாச்சு அவர்கள் ஒரு மடலில் குறிப்பிட்டவாறு, பொழுது போக்கிற்கு மட்டுமே மடலாடுகிறார்கள் என நானும் எண்ணவில்லை.
 
“கற்றது கையளவு, கல்லாதது உலகளவு”.
 
சிலர் தான்  கற்ற கையளவை வைத்து உலகத்திற்கே  முடிவான நீதி போல் சொல்வார்கள்.  சிலர் ”கற்றது கையளவு” தானே என்ற பயத்தில் ”எனக்குத் தெரிந்த வரை என்பர்”. அதில் தெரிவது அவரின் முதிர்ச்சி தானே?  
 
”கற்ற கையளவை”  மட்டுமே முதலாகக் கொண்டுஅது தான் சரி என்று விவாதிப்பவர்களும் உலகில் உண்டு தானே?
 
மேலும் நாம் இருக்கும் குழுவின் தரத்தைப்பொருத்ததுத் தானே விவாதமும்.
 
”நிகழ் காலப் பெரும்பான்மையினர்” ஏற்காததால் பிற்காலத்தில் போற்றப் பட்டவர்கள்,  அவர்களின்  நிகழ் காலத்தில் தூற்றப்பட்ட நிகழ்வுகள் நீங்களும் அறிந்தது தானே?
 
அன்புடன்
.கவி.
 

வேந்தன் அரசு

unread,
Feb 11, 2009, 10:56:39 AM2/11/09
to minT...@googlegroups.com
நன்றாக சொன்னீர்கள் கவியாரே.
 
இந்த குழுவில் நான் ஒரு ஏதிலி என்றிருந்தேன்.
 
நன்றி


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

இராமதாசன்

unread,
Feb 11, 2009, 12:56:49 PM2/11/09
to mint...@googlegroups.com
> திரு. ஆமாச்சு அவர்கள் ஒரு மடலில் குறிப்பிட்டவாறு, பொழுது போக்கிற்கு
மட்டுமே மடலாடுகிறார்கள் என நானும் எண்ணவில்லை.


ஏன்? ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி.. அலாவுதீனும் அற்புத விளக்கும்
படத்துல "இவன் இம்ராத் சின்னப் பையன்" ன்னு அசோகன் சொல்றாப்ல நானோ சின்னப்
பையன்..

பூத கணங்கள் எல்லாம் இங்கே இருக்க..

அதுவும் என்னை சின்னக் குழந்தைக் கூட சிக்கலில்லாமா அக்ஷர இலக்ஷணமா பேர்
சொல்லிக் கூப்டனும்டுதானே ஆமாச்சுன்னு பேரை அழகா மழலையா மெயின்டைன்
பண்றேன்..

அதுக்கு முன்னாடி இப்படி திரு - பின்னாடி அவர்கள் எல்லாம் போட்டால் மழலை
மாறிடுதுல்ல..

--

ஆமாச்சு

Kannan Natarajan

unread,
Feb 11, 2009, 7:20:20 PM2/11/09
to minT...@googlegroups.com
சிந்திக்கவைக்கும் இழை!

பழமொழிகளை நாம் "பழம்" மொழிகளாக எண்ணுவதைவிட, இப்படியான வழிமொழிகளை புத்தாக்கம் செய்து, மேன்மேலும் தொடர்மொழிகளாக வலம் வர ஆவனச் செய்யவேண்டும்.

"கற்றது கையளவு, கல்லாதது உலகளவு". இப்பழமொழியை சற்று கூர்ந்து கவனித்தால், சில கேள்விகள் இக்காலத்தில் எழலாம்!

1. இப்பழமொழி தோன்றிய காலத்தில், சில குறிப்புகளை கவனிக்கவேண்டுவுள்ளது;
   அ) சிறந்த பள்ளி/பல்கலைக் கழகங்கள் தொலைவு
  ஆ) நூல்களின் எண்ணிக்கை
   இ) நூலகங்களின்        ,,
    ஈ) அயல் நாடுகள் பயணக்குறைவு
   உ) இடை வினையாற்றும் குழுக்கள் குறைவு

2. உடலில் குறைவுற்ற உறுப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வு. அக்கால மற்றும் "நிகழ் காலப் பெரும்பான்மையினர்", நம் உறவுகள் சிலர், இப்படி உள்ளனர் என்பதை, மறந்தோ (அ) புறக்கணித்தோ விடுகின்றனர்.

இக்காலத்தில், மேற்கூறிய வாய்ப்புக்கள் மட்டுமின்றி, கணினியின் எழுச்சியினால் நல்லதொரு படிக்கும் வளர்ச்சி அனைத்து வயதினரையும் ஈர்த்துள்ளது. எப்படி ஒளவைத் தொடங்கி, பாரதி வளர்த்து, இக்காலம் வரை புதிய ஆத்திச்சூடிகள் மலர்கிறதோ, அதுபோல நிகழ்காலத்திற்கு ஏற்ப "கற்றது கையளவு" என்பதில்லாமல்,

"கற்றது அவரவர் அளவு, கல்லாதது கணினியளவு"


என்றும் நம் தொடர்மொழியை போற்றலாம்!

கற்றதில் கூட நம் முனைவர் நா.கண்ணன் பலமுறை, இக்குழுமத்தில் வழிமொழிந்தது, வள்ளுவரின் வாக்கின்படி, "கற்றதை (கற்பதை) கசடறக் கற்கவேண்டும்" என்று.

>"நிகழ் காலப் பெரும்பான்மையினர்" ஏற்காததால் பிற்காலத்தில் போற்றப் பட்டவர்கள்,  அவர்களின்  நிகழ் >காலத்தில் தூற்றப்பட்ட நிகழ்வுகள் நீங்களும் அறிந்தது தானே?

இவ்வாறானவர்களை Lateral/Critical thinkers என்று 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அவர்கள் சிந்தனைகள் குற்றங்காண்கிற மனப்பான்மையாக உள்ளது என்று கூறினாலும், அவர்களை விளங்கிக்கொள்ள சிறுது காலம் தேவைப்படுகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில், அவ்வாறானவர்களை சிலர் புரிந்து கொள்ளவும், பலர் அப்படியானவர்களை "தொல்லையர்" என்று கூறி வருவதும் நடைமுறை.

இப்படியான நேர்மாறான சிந்தனைவுள்ளவர்களைப் பற்றி, இக்காலத்தில் நாம் மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் தவிர, பிற்காலத்தில் அவர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது புறந்தள்ளப்படுமா என்று இப்போதே வருவதுரைக்க இயலாது! என்னுள் சில கேள்விகள் எழுகின்றன. விடையாக் காண என்னாலான முயற்சிகள் எடுக்கவுள்ளேன். அதேவேளை, குழுமத்தில் உள்ளவர்கள் விடையறிந்தால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.

கேள்விகள்:-
  1. இவ்வாறான முரண்பாடானக் கருத்துகள் தோன்ற என்ன அடிப்படை?
  2. அவர்கள் மனநிலையில் - சினமூட்டக்கூடிய (provocate) (அ) மற்போருக்கழை (challenge) புலனுணர்வு எவ்வாறு செயல்படுகின்றன?
  3. நேர்மாறான சிந்தனை உள்ளவர்களுக்கு ஏதாவது மரபணு மாற்றங்கள் உள்ளதா?
  4. கடினமான வினாக்களை, கட்டவிழ்கக் கூடி திறன் (problem solving) இவர்களிடம் உள்ளதா?
  5. பொதுவான எண்ணத்திலிருந்து மாறுகின்ற, இவ்வாறானவர்களின் மூளையின் செயல்திறன் எவ்வாறு மாறுபடுகிறது?
  6. மருட்சிக்குறிய கூறுகள் (perceptual disturbances) இருப்பின், dementia போன்ற வயதுமுதிர்ந்தச் சீர்கேடூகள் (70-80 அகவை) நிலையில் வராமல், நடுவயதினில் (40-50 அகவை) வரவாய்ப்புள்ளதா?
  7. ஆழ்த்துயிலில் ஏற்படும் சில நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபாடுகளினால், நேர்மாறான சிந்தனை ஊற்று பெருக்கெடுக்குமோ? (திவாவின் விடையை அறிய ஆவல்:-))
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2009, 9:33:35 AM2/12/09
to minT...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் நடராஜன் அவர்களே நான் கிட்டத்தட்ட 160 பழமொழிகளை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
12 பழமொழிகள் எழுதி விட்டேன்

அந்தக் காலத்தில் எப்படி பழமொழிகள் ஏற்பட்டன, அவற்றை பெரியவர்கள் எப்படிக் கூறி இருக்கிறார்கள், காலப்போக்கில் மருவி எப்படி நாம் பொருள் கொள்ளுகிறோம் உண்மையான பொருள் என்னவாக இருக்கும்  என்பது தான் என் விளக்கங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/12 Kannan Natarajan <thar...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ
peopleofindia.net@gmail.com
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

வேந்தன் சரவணன்

unread,
Feb 12, 2009, 9:41:58 AM2/12/09
to minT...@googlegroups.com
அப்படியா?. அவற்றை எங்கே காணலாம் என்று சுட்டுங்களேன்!
 
அன்புடன்,
 
பொன்.சரவணன்
பெங்களூர்.

 
2009-02-12 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:
அன்புள்ள கண்ணன் நடராஜன் அவர்களே நான் கிட்டத்தட்ட 160 பழமொழிகளை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
12 பழமொழிகள் எழுதி விட்டேன்

 
அந்தக் காலத்தில் எப்படி பழமொழிகள் ஏற்பட்டன, அவற்றை பெரியவர்கள் எப்படிக் கூறி இருக்கிறார்கள், காலப்போக்கில் மருவி எப்படி நாம் பொருள் கொள்ளுகிறோம் உண்மையான பொருள் என்னவாக இருக்கும்  என்பது தான் என் விளக்கங்கள்

 
அன்புடன்
தமிழ்த்தேனீ

--
அன்புடன்,

பொன்.சரவணன்
பெங்களூர்.
தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Feb 12, 2009, 10:04:09 AM2/12/09
to minT...@googlegroups.com
ஏற்கெனெவே மின் தமிழில் இட்டிருக்கிறேன்
இப்போது ஒவ்வொன்றாக என்னுடைய வலைத்தளமான
http://thamizthenee.blogspot.com  சென்று படிக்கலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/12 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages