Barathi Naaill #1

618 views
Skip to first unread message

Krishnan S

unread,
Dec 6, 2008, 6:49:22 PM12/6/08
to mint...@googlegroups.com, tamil-...@yahoogroups.com
      மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் திங்கள், 11-ம் நாள்.
       அவரை நினைவு கூறும் முகமாக சில சிந்தைகள்

   

    ''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு

         செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
      குவிக்கும் கவிதைக் குயில்; இந்நாட்டைக்
        கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
     நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
       காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
    கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
      திறம்பாடி வந்த மறவன்; புதிய
   அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
      படரும் சாதிப் படை மருந்து
  மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
    அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்! ''
                  -- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

 மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
அடிமை இருளை அகற்றத் தோன்றிய 'இளம் ஞாயிறு' 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய' இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட, அறியாமை இருள் நீங்கிட,சமுதாயம் சீர்பெற்றிட, வறுமையை வெளியேற்ற 'எல்லோரும் ஓர்

நிலை எல்லோரும் ஓர் நிறை' ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.

 

எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாளில் தோன்றிய பாரதியார், ஏழாம் அகவையிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். படிபடிப்படியாகப் பாட்டெழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

தம் 11-ஆம் அகவையில் எட்டைபுரத்துச் சிற்றரசைச் சேர்ந்த புலவர்களால் ''பாரதி'' என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்றார்.அன்று முதல் பாரதி கவிதை எழுவதை தொழிலாகக் கொண்டார்.
 
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் பெயரால் ''ஷெல்லி மன்றம்'' அமைத்தார்.ஷெக்ஸ்பியர், ஷெல்லி, பைரன், விக்டர் யூகோ முதலிய உலகப் கவிஞர்களின் கவிதைகளைச் சுவைத்து, பாரதியார் தம் கவிதை ஆற்றலை மேலும் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த படைப்புக்களையும் உருவாக்கத் தொடங்கினார்.

                 ''திறமை கொண்ட, தீமையற்ற

             தொழில் புரிந்து யாவரும்,

             தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

             வாழ்வம் இந்த நாட்டிலே''   என்று முழக்கமிட்டவர்

 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கவிதை மறுமலர்ச்சிக்கும் தடையாக இருந்தவற்றை எல்லாம் தகர்த்திடும் வகையில் எழுச்சி கவிதைகள் புனைந்து, இலக்கியத் தொண்டாற்றி தமிழுக்கு புது நெறி காட்டிய பெரும் புலவர்
.'கன்னனொடு கொடை போயிற்று - உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்று' என்று இருந்த காலத்தில், 'ஓராயிர வருடம் ஓய்ந்து வாராது வந்து சிறப்பாக தமிழுக்கும் தமிழ்மக்கட்கும் பாரதியார் ஆற்றிய பணி அளப்பரியது. ஒவ்வொரு துறையிலும் அவர் முன்னோடியாகவும்,முன் மாதிரியாகவும் திகழ்ந்தார். அவர் ஒரு மகாகவி, தீவிர தேசபக்தர், அரசியல்வாதி, சீரிய சிந்தைனையாளர், தத்துவஞானி தீர்க்கதரிசி,பத்திரிகையாசியர், புரட்சியாளர், இலக்கியப் படைப்புகளைப் படித்து அவற்றின் நயங்களை அனுபவித்து,

       

      ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்

      தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!

      பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட

      வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!

      தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே

      பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !

      எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்

      இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!

  என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.

 

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். மரபு வழி வந்தவர் என்றாலும் அவர் மரபைக் கண்மூடிப் போற்றவில்லை. பாமர மக்கள் அணுகும் வண்ணம் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து
கொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைக் கொண்டு இலக்கியம் படைத்தார்.அது உலக இலக்கியமாக திகழ்கிறது.
பாரதியாரே தம்முடைய கவிதைகளில் பாங்கை உணர்த்த முற்படும்போது,

       

                ''சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;

                சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;

                எந்நாளும் அழியாத மாக்கவிதை.

      என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.


அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Narayanan Kannan

unread,
Dec 6, 2008, 10:22:21 PM12/6/08
to minT...@googlegroups.com
எளிய, பொருள் செறிந்த கட்டுரை...பாரதி வழியிலேயே!
வாழ்த்துக்கள் கிருஷ்ணன்!!

2008/12/7 Krishnan S <krishna...@gmail.com>:


> மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் திங்கள், 11-ம் நாள்.
> அவரை நினைவு கூறும் முகமாக சில சிந்தைகள்
>

சிந்தனைகள் என்று இருக்க வேண்டுமோ?

க.>

karth...@gmail.com

unread,
Dec 6, 2008, 10:44:23 PM12/6/08
to மின்தமிழ்
கண்ணன்,

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்ற சிறு பாடல்
இப்படித் தனியாக நிற்பது பற்றி நான் வியந்ததுண்டு.
அண்மையில் "மக்கள் தொலைக்காட்சியில்" ஓர் அரிய
செய்தி கேட்டேன். இந்தப் பாடல் பாரதியார் எழுதிய பெண்விடுதலை
பற்றிய சிறுகதையில் "பெண் விடுதலை பரவுமா?" என்ற
கேள்விக்கு ஒரு பதிலாக இதைச் சொல்லியிருக்கிறார் என்பது
செய்தி. பொருத்தமாக இருக்கிறது.

மின் தமிழ் அறிஞர்கள் மேலதிகத் தகவல் இருந்தால்
பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரெ.கா.

On Dec 7, 11:22 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> எளிய, பொருள் செறிந்த கட்டுரை...பாரதி வழியிலேயே!
> வாழ்த்துக்கள் கிருஷ்ணன்!!
>

> 2008/12/7 Krishnan S <krishnan.sin...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Dec 6, 2008, 11:53:18 PM12/6/08
to minT...@googlegroups.com
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

அக்னி என்பது இந்திய உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கிய
கருபொருள். என்று மனிதன் தீ எனும் பெரும்பூதத்தை கையாளத் தொடங்கினானோ
அன்றே 'தொழிற்புரட்சி' தொடங்கிவிட்டது! விவசாயத்தை நம்பி மானுடம்
திரும்பியபோது நெருப்பு என்பதே அவன் வாழ்வின் கதியைத் தீர்மானிப்பதாய்
இருந்தது. உதாரணமாக நெல் போன்ற கடின தானியங்களை சமைப்பதற்கு தீ அவசியமாக
இருந்தது. எனவேதான் அக்னியை பொன்போல் பாதுகாக்கும் ஓர் ஆன்மீக வழக்கம்
தோன்றியது (அக்னிஹோத்ரி). அக்னியைப் பற்றிப்பேசும் வேதம், ருத்ரன்
என்பவன் அக்னியே என்று சொல்கிறது. கொடுத்தால் அள்ளிக்கொடுப்பவன்.
அழித்தால் முற்றும் அழிப்பவன் என்று (சிவபெருமான் நடராஜ சிலையில் அவர்
அக்னியை கையில் வைத்திருப்பது மட்டுமல்ல, அவரைச் சூழ்ந்து அக்னியே
உள்ளது. அவர் திரிபுரம் எரித்தவர்). அக்னியே 7 சக்கரங்களின் இயங்கு
சக்கரம் போலிருக்கும் வயிறுக்கு உருவகமாக வருகிறது. எல்லா உயிர்வேதியல்
மாற்றத்திற்கும் எரியூட்டு சக்தி அவசியமாகப்படுகிறது (இந்த சக்தி எரிவளி
எனப்படும் ஆக்சிஜன் வழியாக நடைபெறுகிறது). அக்னி வயிற்றில் தங்கிறது
என்றால் குழந்தையிலிருந்து மூப்புவரை இச்செயல் நடைபெறுகிறது. உடல்
வெப்பம் தணிந்தவுடன் உயிர் போய்விடுகிறது. இந்தப்பின்னணியில் பாரதி
அக்னியின் தோற்றம், வளர்ச்சி, உபயோகம் போன்றவற்றை வேதவியல் பார்வையில்
பார்க்கிறான் என்று கொள்ளமுடியும்.

இப்பாடலை நான் வாசித்தவுடன் எனக்குச் சட்டென வந்த எண்ணம் அக்னி என்பது
ஞானச்சுடர் என்பதே! முருகனைப்பற்றிப்பாடும் போது இதை குகையில் வளர்
சுடரே! என்பான். எனவே உள்ளமெனும் பொந்தில் அக்னியை வைக்கும் போது மடமை
எனும் அறிவீனம் வெந்து தணிகிறது. இதே சொல்லாட்சியை ஆண்டாள்
பயன்படுத்துவதை கவனிக்க "தீயினுள் தூசாகும் செப்பேலோ எம்பாவாய்" என்று.
அறிவுச் சுடர் உள்ளவனை சிறியோன், பெரியோன் எனப்பார்க்காது உலகம்
மதிக்கிறது, எனவே அறிவின் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

இதை பெண்ணியத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதும் சுவையாக உள்ளது. என்
அன்னை அடுப்படியை விட்டு வெளியே வந்ததே இல்லை. அவளைத் தமிழ் சமூகம் "அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்" என்று வைத்திருந்தது. ஆனால் அவளது
சுயஞானம் (native intelligence) கருதி பலரும் ஆலோசனை கேட்க (என்
தந்தையும் சேர்த்து) வருவது ஊரில் வழக்கம். இந்த அக்னி என்ன செய்தது? தன்
வயிற்றில் ஈன்ற எங்கள் அனைவரையும் படிக்க வைத்தது. அப்போது வெந்து
தணிந்தது காடு! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!

கண்ணன்

Krishnan S

unread,
Dec 7, 2008, 2:20:24 AM12/7/08
to minT...@googlegroups.com

மிக்க நன்றி அய்யா.
கிருஷ்ணன்


From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Sunday, 7 December 2008 11:22:21
Subject: [MinTamil] Re: Barathi Naaill #1
க..>


Importing contacts has never been easier..
Bring your friends over to Yahoo! Mail today!

Hari Krishnan

unread,
Dec 7, 2008, 9:44:12 PM12/7/08
to minT...@googlegroups.com



கண்ணன்,

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்ற சிறு பாடல்
இப்படித் தனியாக நிற்பது பற்றி நான் வியந்ததுண்டு.
அண்மையில் "மக்கள் தொலைக்காட்சியில்" ஓர் அரிய
செய்தி கேட்டேன். இந்தப் பாடல் பாரதியார் எழுதிய பெண்விடுதலை
பற்றிய சிறுகதையில் "பெண் விடுதலை பரவுமா?"  என்ற
கேள்விக்கு ஒரு பதிலாக இதைச் சொல்லியிருக்கிறார் என்பது
செய்தி. பொருத்தமாக இருக்கிறது.
 
கதையில்?  கேட்க நன்றாக இருக்கிறது.  சொல்லியிருப்பது 'கதையில்' என்பதால் பொருத்தமாகவும் இருக்கிறது. 
 
உங்களுக்கொன்று தெரியுமா?  'ஹரி கிருஷ்ணன் என்று ஒருத்தன் பிறந்து, என்னைப் பற்றி எழுதுவான்' என பாரதி தன்னுடைய ஞானபாநு கட்டுரைகள் ஒன்றில் ஏதோ ஒரு பகுதியில் எழுதியிருப்பதாக யாரோ ஒருவர் சொன்னதாக எனக்குத் தெரிய வருகிறது. :-)
 
வேடிக்கை இருக்கட்டும்.  அப்படி ஏதேனும் ஒரு கதையில் பாரதி குறிப்பிட்டிருந்தால் அது (என்னை விடுங்கள்) சீனி விசுவநாதன் கண்ணுக்குக் கூட தென்படவில்லை என்பதல்லவா ஆச்சரியமாக இருக்கிறது!  அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பாடலைப் பற்றிய ஒரு குறிப்பும் இதுவரை சிக்கவில்லை.  ஆளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
என் பங்குக்கு நானும் ஒன்று சொல்லிவிடுகிறேன்.  சூர்ப்பணகை முதன்முறையாகச் சீதையைப் பார்க்கின்ற சமயத்தில் கம்பன் பாடுவது இது:
 
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள்
.
 
வெந்து தணிந்தது காடு, அக்கினிக் குஞ்சு... இரண்டுமே இங்கே ஒன்றாகத் தென்படுகின்றன.  இதைப் படிக்கும்போதெல்லாம், அக்கினிக் குஞ்சு பாடலுக்கான முதல் வித்து இங்கேதான் ஊன்றப்பட்டிருக்குமோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு.



--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Dec 7, 2008, 9:56:43 PM12/7/08
to minT...@googlegroups.com
2008/12/8 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>
> ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி, உருவில் நாறும்
> வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க, நோக்கி,
> மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
> கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள்.
>

சரிதான். இராமாயணச் சுருக்கம் என்று சொல்ல வருகிறீர்கள்!

எப்படியும் இது பெண்ணியம்தான் :-)

க.>

karth...@gmail.com

unread,
Dec 8, 2008, 3:23:52 AM12/8/08
to மின்தமிழ்
ஹரி,

இதைச் சொன்னவர் மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும்
பேசுகின்ற ஒரு அன்பர். பெங்களூருவில் என்ன நேரம் என்று
தெரியவில்லை. எங்களூருவில் காலை 7 மணி. (உங்களூருவில்
காலை 9.30 -10 என இருக்கலாம்.) ஆள் பேரை நாளை பார்த்துச்
சொல்லுகிறேன். பிரபஞ்சன், பிரளயன் ஆகியோரின் பேச்சுக்கு
முன் இவர் பேச்சு வரும்.

அக்கினிக் குஞ்சு பாடலுக்கான பல்வேறு ஹேஷ்யங்கள் இருப்பதைச்
சொல்லிவிட்டு (இதில் சி.சு.செல்லப்பாவின் ஊகம் ஒன்றையும்
சொன்னார்) அதன் உண்மை இப்படி என்றார்.

எனக்கு மெய் எனத் தோன்றியது. உங்களுக்கு "மெய் போலும்மே"
எனத் தோன்றியிருக்கிறது.

சென்னை சித்தன் கொஞ்சம் கேட்டுச் சொல்லலாமா? பாரதி நினைவு
நாள் அன்று ஒலிபரப்பப்பட்டது.

"ஹரிகிருஷ்ணன் என்னைப் பற்றி எழுதுவான்" என பாரதி சொல்லியிருப்பதாக
யாராகிலும் சொன்னால் நான் நம்புவேன். பாலில் நெய் இருக்கிறது என்றால்
ஏன் நம்பக் கூடாது?

ரெ.கா.


On Dec 8, 10:44 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/12/7 karthige...@gmail.com <karthige...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 8, 2008, 3:32:13 AM12/8/08
to minT...@googlegroups.com
2008/12/8 karth...@gmail.com <karth...@gmail.com>:

>
> அக்கினிக் குஞ்சு பாடலுக்கான பல்வேறு ஹேஷ்யங்கள் இருப்பதைச்
> சொல்லிவிட்டு (இதில் சி.சு.செல்லப்பாவின் ஊகம் ஒன்றையும்
> சொன்னார்) அதன் உண்மை இப்படி என்றார்.
>

பாரதி பற்றி இப்படி நிறையக் கதைகள் உண்டே (படித்தவர்களிடம்).

மதுரைப் பல்கலைக்கழகத்தில் நிஜநாடக இயக்கத்தில் (இராமசாமி) அவ்வப்போது
பங்குகொள்வதுண்டு. ஒருமுறை ராமசாமி சொன்னார், வயக்காட்டில் நடை போடும்
பெண்களைக் கண்டு "செந்தமிழ் நாடெனும் போதினிலே" (இடுப்பு வெட்டுவது போல்
சந்தம் அமையும்) பாடினார் என்று. மின்தமிழ் இடுகை ஒன்று பாரதிதாசன்
போன்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் போட்டிக்கவிதையாக அவர் எழுதினார்
என்று!! அவர் பரிசு பெற்றாரா இல்லையா என்று சொல்லாதால் அதற்கொரு
புதுக்கதை கிளம்பும்!

பாரதி ஹரி பற்றியும், கிருஷ்ணன் பற்றியும் நிறையப்பாடுகிறார். உண்மைதான் ;-)

க.>

Hari Krishnan

unread,
Dec 8, 2008, 4:11:28 AM12/8/08
to minT...@googlegroups.com


2008/12/8 karth...@gmail.com <karth...@gmail.com>
ஹரி,




அக்கினிக் குஞ்சு பாடலுக்கான பல்வேறு ஹேஷ்யங்கள் இருப்பதைச்
சொல்லிவிட்டு (இதில் சி.சு.செல்லப்பாவின் ஊகம் ஒன்றையும்
சொன்னார்) அதன் உண்மை இப்படி என்றார்.

எனக்கு மெய் எனத் தோன்றியது. உங்களுக்கு "மெய் போலும்மே"
எனத் தோன்றியிருக்கிறது.
 
அன்புள்ள ரெகா,
 
விடுதலை முத்தம்மா என்ற கதையில் இந்தப் பாடலை பாரதி ஆண்டிருப்பது உண்மைதான்.  வேணு முதலி (இந்தப் பாத்திரத்தை பாரதியின் பல கட்டுரைகளில் பார்க்கலாம்.  தன்னுடைய புதுவை நண்பரான வேணு நாயகர் என்பவரைத்தான் தன் கட்டுரைகளில் இவ்வாறு குறிப்பது பாரதியின் வழக்கம்) விடுதலைக கட்சி ஒன்று தொடங்குகிறார்.  அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் இந்தக் கட்சியை ஆதரிககின்றனர்.  'என்ன ஓய்.. உம்ம குழந்தைகளுக்கு விடுதலைப் பைத்தியம் ஏறிப் போயிருக்கிறதே' என்று கேட்கும் போது 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ' என்ற அடிகளுடன் கூடிய இந்தப் பாடலை வேணுமுதலி பாடுகிறார்.
 
ஆனால், இந்தப் பாடல், இந்தக் கட்டுரைக்காகத்தான் எழுதப்பட்டதா என்பது ஒரு முக்கியமான கேள்வியல்லவா?  எத்தனையோ கட்டுரைகளில் பாரதி தனனுடைய பல பாடல்களை மேற்கோளாகக் காட்டியிருக்கிறான்.  அவற்றில் ஒருசில, அந்தந்தக் கட்டுரைக்காகவே எழுதப்பட்டவைதாம்.  ஞானரதத்தில் வரும் பாடல் ஒன்று இதுபோன்றதுதான்.  ஆனால், சந்திரிகையின் கதையில் இடம்பெறுகிறது என்ற காரணத்துக்காக, 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலை, சந்திரிகையின் கதைக்காகவே எழுதப்பட்டது என்று சொல்லி, அந்தக் கதைப் போக்கோடு சென்று விளக்கம் அளிக்க முற்பட்டால் அது சரியாக இருக்குமா?
 
அக்கினிக் குஞ்சு பாடல் விடுதலை முத்தம்மா கட்டுரைக்காக எழுதப்படடதன்று.  இதைப் பற்றிய விவரங்களை இன்னமும் தேடிக்கொண்டுதன் இருக்கிறேன்.  எங்காவது சிறு குறிப்பாகத் தென்படலாம். 
 
இதுதான் அது என்று சொல்லாமல், இதுவும் அது என்று சொல்வதானால், போகட்டும்.  ஏற்கலாம்.  உறுதியாகத் தெரியாத எதையும் இப்படி அடித்துச் சொல்வது நம் மேடைப் பேச்சாளர்களின் வழக்கம்தான்.  ஒரு முறைக்கு நான்கு முறை பாரதி வசனகவிதைகளில் வரும் அந்த மேகமாகிய சல்லடையைக் கொண்டு ('கசடை மட்டும் தன்னிடத்தில் நிறுத்திக் கொண்டு, நல்லதை எல்லாம் கீழே சிந்தும் வழக்கமான சல்லடை போல் அல்லாமல், நல்ல ஒளியைத் தன்னிடம் நிறுத்திக் கொண்டு, மீதத்தைக் கீழே சிந்தும் மேகமாகிய சல்லடை' என்பதுபோல் சொல்லியிருப்பான்) சலித்துப் பார்த்தே எடுத்துக் கொள்வது நம்முடைய வேலை, இல்லையா? :-)
 
 


"ஹரிகிருஷ்ணன் என்னைப் பற்றி எழுதுவான்" என பாரதி சொல்லியிருப்பதாக
யாராகிலும் சொன்னால் நான் நம்புவேன். பாலில் நெய் இருக்கிறது என்றால்
ஏன் நம்பக் கூடாது?
 
:-))))
 
நன்றி ரெகா.  உளமார்ந்த நன்றி.

chitha...@yahoo.co.in

unread,
Dec 8, 2008, 6:38:38 AM12/8/08
to மின்தமிழ்
வணக்கம் ரெ.கா
இது குறித்து பிரபஞ்சனிடம் கேட்டபோது, அவர் இப்போது மக்கள்
தொலைக்காட்சியில் இல்லையென்றும், அவர்கள் காட்சிப்படுத்துவது முந்தைய
stock நிகழ்ச்சிகளே என்றும், அவருக்கு முன்னால் உள்ள நிகழ்ச்சியைச்
செய்து கொண்டிருந்தவர் கஜேந்திரன் ( முன்பு சன் T V ) என்றார். இதே
கஜேந்திரன் தான் எங்களுக்கும் - காலை வணக்கம் - நிகழ்ச்சியின்
அமைப்பாளராக இருந்தார். ( எங்கள் தொலைக்காட்சிக்காக உங்களை நெர்காணல்
நான் கண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் ரெ. கா)
அவரைத் தொடர்பு கொள்ள, அவரும் இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பழைய
பதிவுகள் என்றும் தானும் இப்போது மக்கள் தொ. கா வில் இல்லை என்றும்
கூறிவிட்டார். இதர்கு மேல் , மக்களில் , கார்மலிடமோ, அன்பிடமோ கேட்டால்
உண்மை வெளிவரும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.இருந்தாலும்
கேட்டுப்பார்க்கிறேன்.----சித்தன்

devoo

unread,
Dec 8, 2008, 7:14:28 AM12/8/08
to மின்தமிழ்
// Dec 8, 1:23 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:

> இதைச் சொன்னவர் மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும்
> பேசுகின்ற ஒரு அன்பர். பெங்களூருவில் என்ன நேரம் என்று
> தெரியவில்லை. எங்களூருவில் காலை 7 மணி. (உங்களூருவில்
> காலை 9.30 -10 என இருக்கலாம்.) ஆள் பேரை நாளை பார்த்துச்
> சொல்லுகிறேன். பிரபஞ்சன், பிரளயன் ஆகியோரின் பேச்சுக்கு
> முன் இவர் பேச்சு வரும்.

> ரெ.கா.//

இது குறித்துப் பேசியது திரு.கஜேந்திரன் அவர்கள்.
மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சிகளில்
இவர் பங்கு கொள்வார். இவரது கைபேசி எண் கிடைத்திலது.
மக்கள் தொ.கா திரு. விஜய்தெரிவித்த தகவல் இது.
இந்நிகழ்ச்சி ஒரு பழைய பதிவின் மறு ஒளிபரப்பு.

தேவ்

V, Dhivakar

unread,
Dec 8, 2008, 11:00:05 PM12/8/08
to minT...@googlegroups.com
தயவுசெய்து இந்தப் பதிவின் தலைப்பை மாற்றுங்களேன்...

தி

2008/12/8 devoo <rde...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 8, 2008, 11:24:14 PM12/8/08
to minT...@googlegroups.com


2008/12/9 V, Dhivakar <venkdh...@gmail.com>

தயவுசெய்து இந்தப் பதிவின் தலைப்பை மாற்றுங்களேன்...

தி
 
இளைய பாரதத்தி னாய் வாவாவா
எதிரா வலத்தி னாய் வாவாவா....
 
வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா....
 
:-))

Narayanan Kannan

unread,
Dec 8, 2008, 11:37:26 PM12/8/08
to minT...@googlegroups.com
ஹா.ஹ..ஏனிப்படி தலைப்பிட்டார்?
கூகுளில் தமிழிலேயே தலைப்பிடலாமே!

க.>

2008/12/9 V, Dhivakar <venkdh...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages