--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கற்றவறை ஓதத் தெரிந்துகொள்ளுதலே பெரிது
| நான்முகன் படைத்த நானா வகையுலகில் ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால் ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ நாண்முதிதோ? கோண்முதிதோ? நல்வினைமுதிதோ? தீவினைமுதிதோ? செல்வஞ்சிறப்போ? கல்விசிறப்போ? அல்லதுலகின் அறிவுசிறப்போ? | 5 |
| தொல்லைமாஞாலந் தோற்றமோ? படைப்போ? எல்லாப்பிறப்பு மியற்கையோ? செயற்கையோ? காலத்தாற்சாவரோ? பொய்ச் சாவு சாவரோ? நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம் | 10 |
| என்செயா நிற்குமோ? எவ்விடத்தேகுமோ? உண்டியை யுண்குவது உடலோ? உயிரோ? கண்டின் புறுவது கண்ணோ கருத்தோ? | 15 |
| உலகத்தீரே யுலகத்தீரே ! நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின் மனிதர் வயது பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க்கோதை மார்பின் மேலனாய்க் கழிந்த நாளும் பிணிமூப்பு வந்து கையில் கோலனாய்க் கழித்த நாளும் போக மிஞ்சப்போவது யாது. பேராற்றின் இடிகரையில் வாழ்மரம் போன்று நிலையற்ற வாழ்க்கையில் நன்றான ஒவ்வொன்றை இக்கணமே செய்யச்சொல்கிறார். மனிதர்க்கு வயது நூறல்லதில்லை ஐம்பது இரவில் அகலும் துயிலினால் | 20 |
| ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும் ஆக்கை யிளமையி ல் ஐம்மூன்று நீங்கும் எழுபது போகநீக்கி இருப்பனமுப்பதே (அவற்றுள்) இன்புறுநாளும் சிலவே அதாஅன்று துன்புறுநாளுஞ் சிலவேயாதலால் | 25 |
| பெருக்காறு ஒத்தது செல்வம்பெருக்காற்று இடிகரையொத்தது இளமை இடிகரை வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால் ஒன்றேசெய்யவும் வேண்டும் அவ்வொன்றும் நன்றேசெய்யவும் வேண்டும் அந்நன்றும் | 30 |
| இன்றேசெய்யவும் வேண்டும் அவ்வின்றும் இன்னேசெய்யவும் வேண்டும் அவ்வின்னும் நாளைநாளை யென்பீ ராகில் நம்னுடை முறைநாள் ஆவதுமறியீர் நமமுடை முறைநாள் ஆவதுமறியீர் உயிர் அன்றும் பார்க்க முடியவில்லை இன்றும் போய்விட்டது, உடல் அன்றும் இருந்தது. இன்றும் இங்கேதான் கிடக்கிறது. உடலைக் கள்வர்போல கோமணத்தைக் கூட உருவிவிட்டுக் கொளுத்துபவர் உறவினரே | |
| உயிர் கொடுபோவான் உடல்கொடுபோகான் ஏதுக் கழுவீர் ஏழை மாந்தார்காள் உயிரினை யிழந்தோ உடலினையிழந்தோ? | 45 |
| உயிரிழந்து அழுதும் என்றோது வீராகில் உயிரினை அன்றுங் காணீர் இன்றுங்காணீர் உடலினை அன்றுங் கண்டீர் இன்றுங்கண்டீர் உயிரினையிழந்த உடலதுதன்னைக் களவுகொண்ட கள்வனைப்போலக் | 50 |
| காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக் கூறைகளைந்து கோவணங்கொளுவி ஈமத்தீயை எரியெழ மூட்டிப் பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப் போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது | 55 |
| சலமெனப் படுமோ? சதுரெனப்படுமோ? பசுவும் எருமையும் தான் சாதியில் வேறானவை. மனிதர் வேறானவர் அல்லர். ---- மாந்தர்காள் பகர்வது கேண்மின் இறந்தவரா யுமை யிவ்விடை யிருத்திப் பாவனை மந்திரம் பலபடவுரைத்தே உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது | 60 |
| அடுபசியால் குலைந்து ஆங்கவர் மீண்டு கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர் அருந்தியவுண்டியால் ஆர்பசி கழிந்தது ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர் இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர் | 65 |
| பற்பலர்நாட்டிலும் பார்ப்பார் இலையால் முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல் நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டி நீர் மேல்வகை கீழ்வகை விளங்குவது ஓழுக்கால் பெற்றமும் எருமையும் பிறப்பினில்வேறே | 70 |
ஒருவகைச் சாதியா மக்கட்பிறப்பிலீர் இருவகையாகநீர் இயம்பிய குலத்துள் | 75 |
| ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின் கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின்றிலீரோ? எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ அந்நிலத்து அந்த வித்து அங்குரித்திடுமலால் மாறி வேறாகும் வழக்கமொன்றிலையே | |
மேலும் பல வரிகளில் பிறப்பு வளர்ப்புக்கு எடுத்துக்காட்டாக கபிலர் பிறப்பும் அந்தணச்சேரி வளர்ப்பும் உப்பை,உறுவை,ஒள்வை,வள்ளி,வள்ளுவன்,அதிகமான் பிறப்பும் வளர்ப்பும் கூறப்படுகின்றன, எழுவரும் சகோதர சகோதரிகள் என்ற குறிப்பும் உள்ளதால் ஆசிரியரே எழுதியதா அல்லது அவர் கூற்றில் வழிவந்தோர் எழுதியதா என்பது எண்ணுதற்குரியது. | |
வேற்றுமை இல்லை என்பதற்கு இயற்கையை மிக அருமையாகத் துணைக்கு அழைக்கிறார். மழை சிலருக்கு மட்டும் பெய்யுமா. காற்று சிலரை நீக்கிவிட்டு வீசுமா-- அடடா மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ காற்றுஞ் சிலரை நீக்கிவீசுமோ | 120 |
| மானிலஞ் சுமக்க மாட்டேன் என்னுமோ? கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ? வாழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலும் கீழ்நான்கு சாதிக் குணவுநாட்டிலுமோ? திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறும் | 125 |
| சாவதும் வேறிலை தீரரணி யோர்க்கே குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே கபிலரகவல் ஓங்கிச் சொல்லும் உயர் கருத்து. முன்னோருரைத்த மொழிதவறாமல் | 130 |
| எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து பேணியுரைப்பது பிழையெனப் படாது | 135 |
| சிறப்புஞ்சீலமும் அல்லது பிறப்பு நலந்தருமோ பேதையீரே. |
பாடலுக்குப் பொருள் கொள்ளும்பொழுது முழுப்பாடலும் இருந்தால் தெளிவாகப் பொருள் கொள்ளலாம்...இல்லாவிட்டால் "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்பது போல தவறான பொருள் கொள்ள ஏதுவாகும்....