சேர்ப்பி Tamilapps பகிர்க!
அனைவருக்கும் வணக்கம்,
இந்தக் கார்த்திகை நன்னாளில், நமது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின், இரண்டாம் செயலி, கூகுள் ப்ளேயில், ஆண்ட்ராய்டு தொலைபேசிக்காக வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் கூகுள் பிளேவில் இதனைத் தேடி, தங்கள் கைபேசியில் நிறுவிப் பயன் பெற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் போல உங்கள் ஆதரவு இதற்கும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
சொல்லின் பெருக்கமே மொழியின் வளர்ச்சி, இங்கு ஆயிரம், ஆயிரம் சொற்கள் இருந்தும், அதனைத் தெரிந்து கொள்ளாமல் சொற்பமான சொற்களை வைத்துப் பேசியும் எழுதி வருகிறோம். இதில் பிற மொழி கலப்புகள் வேறு. இதனைக் குறைக்கும் வண்ணம், நாம் இந்த மாதத்தில் சில செயலிகளை வெளியிட உள்ளோம். அதன் மூலம் தனி ஒருவரின் தமிழ் சொல் வளமையை பெருக்கலாம். இதன் வழி பயன்பாட்டில் ஒழிந்த பல சொற்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
அதில் முதல் கட்டமாக, இந்தச் சேர்ப்பி செயலியை உருவாக்கியுள்ளோம். இதில் இரண்டு, இரண்டு எழுத்துக்களாக, கட்டம் கட்டங்களாக இருக்கும். இரண்டு கட்டங்களைச் சேர்த்தால், ஒரு நான்கு எழுத்துச் சொல் உருவாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் 16 சொற்கள், 32 கட்டங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும். திரையில் இருக்கும் அனைத்து சொற்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இதில் பாதி தெரிந்த சொற்களும், மீதி தெரியாத சொற்களும் இருக்கும்.
அறியாததை அறிய, அழிந்ததை மீட்க, இந்த முயற்சி, இதனைத் தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம். இது அனைவருக்கும் பயன்பட, அனைவரிடம் கொண்டு செல்ல வேண்டியது, உங்கள் அனைவரின் பொறுப்பு.
விரும்புக! பிடித்திருந்தால் பகிர்க!
https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.tamilwordsidentifierநன்றி,
இவண்
இங்கரசால் நார்வே & அர்ச்சித்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்