<<<<ஒட்டியானம் = மேகலை சரியா?>>>>
மேகலை என்பது ஒட்டியாணம் போன்ற அல்லது அதன் வகையச் சார்ந்த ஆபரணமென்று நினைக்கிறேன்...
ஹரி ஐயா,
சிலப்பதிகார காலத்திலேயே தமிழில் கலப்பு வந்து விட்டதா? கீழுள்ளதை சற்று கவனியுங்கள்...
"சுரியற்றாடிமருள்படுபூங்குழற் பவளச்செவ்வாய்த் தவளவொண்ணகைநீணில மளந்தோன்மகன்முன்னாடிய-பேடிக் கோலத்துப்பேடுகாண்குநரும் என்மணிமேகலையினும் "ஆண்மைதிரிந்த பெண்மைகோலத்துக்காமனாடிய பேடியாடலும்"எனச் சிலப்பதிகாரத்துங் கூறப்பட்டதனானறிக.
கதிர்வேலு பிள்ளையின் அகராதியில் இருந்து எடுக்கப்பட்டது.
நண்பர் தேவுவோ, கல்யாண சுந்தரக்குருக்களோ மேடு பள்ளம் பார்ப்பவர்கள்
அல்ல. ஒருவர் உபய வேதாந்தி, இன்னொருவர் 'தென்னாடுடைய சிவனே போற்றி' :-)
உங்கள் வேர்ச்சொல் அலசலை முன் வையுங்கள். இன்பமுடன் அனுபவிப்போம். ஒருவர்
இது வட சொல்லா? என்று கேட்டார். அதற்கு மூன்று பேர் இலக்கிய, அகராதி
உசாத்துடன் அது வடசொல் என்று முன்மொழிந்துள்ளனர்.
மின்தமிழில் மொழிப்பேதம் கிடையாது. இங்குள்ள அனைவரும் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டவர்களே (திராவிடம் என்பது தமிழே எனவே திராவிட
மொழிக்குடும்பத்துக்காரர்களை தமிழர் என்று சொல்கிறேன்).
க.>
>அது என்னய்யா, எப்பப் பார்த்தாலும் சங்கதமே மேடு, தமிழ் பள்ளம் -
> மேட்டிலிருந்து தான் பள்ளத்திற்கு நீரோட வேண்டும்? )
>
Odda or Odra refers to Orissa. Take tamil word, oDDar
(or, oDDa-k-kUttar (after the Kalinga victory - he must have
gone to Odda, as is evident from his TakkayaakapparaNi.
OTTakkUttar sang mUvar ula - on 3 Chola emperors - must be
long lived man). So, Oddiyana pITham refers to a site name
in Orissa.
There is also a question whether Oddiyana is Kanchipuram
(Kanchi = Mekala).
---------
UdyAna is in Swat valley, Pakistan.
mg 2 c,
N. Ganesan
//நாம எல்லாரும் மூச்சு விடுறது கூட வடமொழியாலே தான்”னு சொல்லிருவீக
போலிருக்கு.
கை பொத்தி, வாய்பொத்தி ஊர்க்கூட்டத்துலே பெருந்தனக்காரய்ங்க உட்காரச்
சொல்லிருவாய்ங்க,
ஒரு நீளக்கட்டுரையே எழுதலாம். ஆனா, எத்தனை பேருக்கு இங்கே
புடிக்குங்கிறீக?
”வெறுமே அதுலே போட்டிருக்கு, இதுலே போட்டிருக்கு”ன்னு சொல்லக் கூடாது.
”அந்தக் கருத்து எப்படி எழுந்தது, எப்படிப் பிறக்கலாம்,
இணைக்கருத்துக்கள் உண்டா,
இந்தச் சொல்லைக் கடன்வாங்கியது என்றால்,மற்ற இணைச் சொற்கள் எல்லாம்
எப்படிப் பிறந்தன?”
என்றெல்லாம் கூட அலச வேண்டும். அப்புறம் மெதுவாக ஒரு முடிவிற்கு வர
வேண்டும். அதுவும் கூடப் புதிய தரவுகளினாலே மாறலாம்.
நாம் நெடுந்தொலைவு செல்லமுடியாது.
என் இடைப்பரட்டும் உண்டு.] //
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிரடியான அறிவுரைகள் !! ஆராய்ச்சி அந்தரத்தில் !!
‘ஒட்டி’ -
உதட்டோடு உறவாடி ஒட்டிக்கொண்டு முடிந்து போயிற்று.
ஆய்வு தொடர்ந்து கீழுதட்டிற்குக் கீழே போகாமல் இருந்ததற்குக் களிபேருவகை
கொள்ளலாம்.
அடுத்தது ‘யாணம்’ -
ஆணி வேர் அகப்படவில்லை. அருளியார் அருளிச்செய்யவில்லையா ?
யாணத்தைத் தலைமுழுகுவதற்கு ஒரு யானத்தை ஏற்பாடுசெய்ய வேண்டும்.
’கலி யாணம்’ எப்பொழுது ? காத்திருப்போம் .
--------------------------------------------------------------------------------------------------
ஒரு குரல் : ஏ இங்ஙன வா. ஒரு நல்ல பாசய மூதிக முளியாப் பாக்க மூதி !
ஒனக்கு எடக்குப் பேச்சு வேறயா ?
இல்லீங்க அண்ணாச்சி , அதுக்கு அர்த்தமே தெரியாதுங்க எனக்கு.
குரல் : வெளங்கலேண்ணா கையெக் கெட்டிக்கிட்டு கீள இருக்கணும்.
பேசப்படாது. வெளங்காத மூதி.
அதுக்கு இல்லீங்க. ‘கலி யாணம்’ பத்திக் கொஞ்சம் சீக்கிரமா .....
குரல் : ஆராச்சின்னா ஒனக்கு என்னான்னு தெரியுமா ? எடப்பெரட்டு வேல
எம்புட்டுப் பாக்கணும் ! சும்மா பொய்த்தவத்துல அங்ஙன பாத்தேன், இங்ஙன
பாத்தேன்னு
எளுதிட்டுப்போக முடியாது. ஒங்க அவசரத்துக்கெல்லாம் ஆராச்சி
பண்ண ஏலாது. தல முளுகவா சொல்லுத. ஏல! ஒன்னையெல்லாம்
என்ன செய்யணும் தெரியுமாடா ? இங்ஙன பீப்பாய்ல என்ன இருக்குது
தெரியுமா?
தெரியாதுங்க அண்ணாச்சி.
குரல் : செங்காவிச் சாயம்டா சாயம் ! ஒன்னிய அதுல முக்கி முக்கி எடுத்து,
மண்ணுல போட்டுப்புரட்டிக் கும்மி எடுக்கணும்டா. பெறவு நீ குத்தால
அருவீல நா முளுக்க நிண்ணாலும் ஒங்கொரங்கு நெறம் போகாதுடா.
எத்தன பேத்த இதுல முக்கி எடுத்திருக்கேன். போய்க்கேட்டுப் பாரு.
வேண்டாங்க அண்ணாச்சி, மன்னிச்சுக்குங்க. ’கலி யாணம்’ எல்லாம் வேண்டாம்.
குரல் : அது !
இப்பத் தெரியுதா நா யாருன்னு !
இப்ப எல்லாத்துக்கும் சொல்லிக்கிடுதேன்.
எசமானுக்கு ஏகப்பட்ட வேல. ஆராச்சி முடிஞ்சு அடுத்த பதிவு போடுத
வரக்கும் எல்லாரும் கம்முணு கெடக்கணும். ஆராச்சிக் கட்டுர வந்தா
எல்லாரும் எடப்பெரட்டப் புரிஞ்சு கண்டிசனாப் படிக்கணும். பராக்கப்
பாக்கப்படாது.
பாசய மூதிக முளியாக்கப் படாது.
இனிமெ ’தமிழ் லெக்ஸிகன்’, ‘வின்ஸ்லோ அகராதி’,
‘கதிர்வேலுப் பிள்ளை அகராதி’ ண்ணு குண்டக்க மண்டக்க
ஆரும் பேசப்படாது. பெரியதனக்காரவுங்க ஒக்காரச் சொல்லிருவாய்ங்க.
பாவாணர் சொல்லிருக்கது மட்டுந்தேன் . தொல தூரம் போவணுமுல்ல.
நானும் கண்டிசனாச் சொல்லிப்புட்டேன்.
தேவ்
தேவ்:
எப்படி இவ்வளவு ஓர் ஜீவிதமான நெல்லை நடை? என்ன உரைநடை அழகு!
கி.ராவிற்குப் பிறகு வாசித்து, வாசித்து சிரிக்க வைத்த உரைநடை.
பெண்டு புரட்டினாலும் நம்மால இப்படி எழுத முடியாது! சபாஷ் தலைவா!
(பின்விளக்கம்: எந்த உள்நோக்கும் இல்லாமல் நெல்லைத்தமிழ் என்னுள் செய்த
கிளு, கிளுப்பைப் பகிர்ந்து கொண்டேன். பிற பிரச்சனைகள் இருக்கவே
இருக்கின்றன. சிரிக்கும் போது சிரித்து விடவேண்டும் ;D
"அதிரடியான அறிவுரைகள் !! ஆராய்ச்சி அந்தரத்தில் !!" என்ற தலைப்பில் வந்த
உங்கள் ”உபய வேதாந்தம்” படித்தேன். வாழ்க்கையின் 20 ஆண்டுகளை நெல்லைச்
சீமையில் கழித்த என்னால், வரிக்கு வரி அதே நடையிலேயே இடக்காய் எழுதி “அபய
வேதாந்தம்” பண்ணவும் முடியும்; இருந்தாலும், இந்த அகவையில் அப்படிச்
செய்யலாமோ? அப்புறம் ”வேதாந்திகள்” என்னைக் கோவித்துக் கொள்ளப்
போகிறார்கள். ”உபய வேதாந்தம் பண்ணலாம்; அபய வேதாந்தம் பண்ணப்படாது,
இல்லையோ? :-)”. அதோடு அவை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? எனவே
உங்கள் முன்மடலின் “குரல் உரையாடலை” ஒதுக்கித் தள்ளி என் கட்டுரையைத்
தொடர்கிறேன்.
”என்னாடாது, ஒருபகுதியைப் படித்து விட்டு, அடுத்த பகுதிகளைக் காணலியே?”
என்ற குமைச்சலில் உங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை போலும். நான் முழு
நேரமும் இணையத்தில் உட்கார்ந்து இருப்பவன் அல்லன். என்னுடைய உடல்
நிலையைப் பொறுத்து, கிடைக்கும் நேரத்தில் தான், என் கட்டுரைகளை
உள்ளிட்டுக் கொண்டிருக்கிறேன். [என்னை அறிந்தோர்க்கு என் நிலை தெரியும்.]
அதற்கிடையில் பொறுமையில்லாமல், திரு. நாக. இளங்கோவன் எழுதியதையே
”இரண்டும் இரண்டும் நாலு” என்ற கணக்கில் என் கருத்தாய் எண்ணிக் கொண்டு,
”ஒட்டி - உதட்டோடு உறவாடி ஒட்டிக்கொண்டு முடிந்து போயிற்று. ஆய்வு
தொடர்ந்து கீழுதட்டிற்குக் கீழே போகாமல் இருந்ததற்குக் களிபேருவகை
கொள்ளலாம்” என்று நீங்கள் குசும்போடு எழுதியதில் இருந்தே ”மூதிக முளி
யார்” என்று தெரிந்து போயிற்று.
என்ன பண்றது அண்ணா, மூதிகங்குறது அப்படித்தான்; நம்ம முழியை எப்போதும்
மறைக்கும். அதனாலெ மூடிக் கிடக்குற மூதிகத்தைக் கொஞ்சம் தூக்கி
எறியுங்கோ! கூடவே, தத்தக்கா புத்தக்கான்னு வானத்துக்கும் பூமிக்குமாக்
குதிக்காம, பொறுமையா, கூர்மையாப் படியுங்கோ! பாவாணரை ஏசுகிறவர்களும் கூட
இன்றைக்கு அவரை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய ஆழ்ந்த
பங்களிப்பு நிறைய மூதிகங்களைத் தூக்கி எறிய வைத்திருக்கிறது. [அதே
பொழுது, அவர் சொன்ன எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று
இல்லை.]
அப்புறம் விட்டுட்டனே, ”யாணத்தை ஏன் தலைமுழுகணும், சொல்லுங்கோ? யாணத்தின்
ஆணிவேர் அகப்பட்டுத்தான் இருக்கு. ”மூதிக முளி”க்கு வேணுமானாத் தெரியாமல்
இருக்கலாம். தெரியுறவாளுக்குத் தெரிஞ்சு தான் இருக்கு. அருளியார்
எழுதித்தான் இருக்கார். [அவர் போன்றவர்கள்
அருளிச் செய்வதில்லை. நான் தலைவணங்கும் ஆழ்வார்கள் தான் அருளிச்
செய்திருக்கிறார்கள். நான் படித்த உபய வேதாந்தம் அப்படித்தான்
சொல்கிறது.] அதனாலே பொறுத்திருங்கோ, கலியாணங்கிறது கால காலத்துலே
வர்றபோது வரும், அவ்வளவு அவசரப்படப் பிடாது.”
அன்புடன்,
இராம.கி.
----------------------------------------------------------------------
ஒட்டியாணம் -2
உகரச் சொற்கள் பலுக்கற் திரிவில் இகரச் சொற்களாய் மாறுவது இயல்பு. அதே
பொழுது ஒடுக்கம், சிறுமை, நெருக்கம் என்ற அடிப்படைப் பொருட்பாடுகளைச்
சுட்டிய படியே அவை தம் அடையாளம் காட்டும். ஒடுக்கம் என்பது உடலின்
ஒடுக்கம், வெளியின் ஒடுக்கம், உட்கொள்ளும தன்மை, மற்றவற்றைப் பார்க்கச்
சிறுக்கும் தன்மை ஆகியவை மேலே காட்டிய சொற்களிலும், இனி வரப்போகும்
சொற்களிலும் பொருள் காட்டி நிற்கும். ஒடுக்கத்தின் வழிப்பொருள்கள்
நெருக்கமும் செறிவும் ஆகும்.
உடு>இடு>இடை = உடலில் உள்ள ஒடுங்கிய அல்லது சிறுத்த உறுப்பு. [36-24-36
என்று சொல்கிறார்கள் இல்லையா? அந்த 24 இதுதான்.]
இடு>இடுப்பு = இடையின் பக்கம் [இந்தக் காலத்தில் இடையையே இடுப்பு என்று
சொல்லுகிறோம்.]
இடு>இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல்
இடுகு>இடுக்கு>இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி
இடுக்கு>இடுக்கி = ஒடுக்கி (அல்லது நெருங்கிப் பிடிக்கும்) கருவி
[இன்றைக்கும் நாட்டுப்புறங்களில் உள்ள சொல்]
இடுக்கு என்பது இதுக்கு/இசுக்கு என்றும் தென்மாவட்டங்களில் ஒலிக்கப்
பெறும். ”இதுக்குனோண்டு/இசுக்குனோண்டு/இத்துனோண்டு இடம் இருக்கு”
[ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]
இடுக்கம் = நெருக்கம், இடைவெளியொடுக்கம்
இட்டளம் = நெருக்கம், தளர்வு (”பரம பதத்தில் இட்டளமுந் தீர்ந்தது” ஈடு
3:8:2)
இட்டிடை = சிறுத்த இடை “இட்டிடையின் மின்னிப் பொலிந்து” திருவாசகம் 7:16;
“இட்டிடை இடைதனக்கு” கந்தபு. தெய்வயா. 183.
இட்டிது = சிறிது “ஆகாறளவு இட்டிதாயினும்” குறள் 478.
இட்டிமை = சிறுமை, ஒடுக்கம்.
இட்டிய = சிறிய (ஐங்குறு 215)
இட்டேறி = சிறிய வண்டிப்பாதை
இட்டி = சிறு செங்கல்
இட்டிகை = மிகச் சிறிய செங்கல்
இடுக்கண் = நெருக்கு வட்டில் ஏற்படும் துன்பம் “இடுக்கண் வருங்கால் நகுக
- குறள் 621”
இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம்
இடுக்கிடை = நெருக்கம்
இடுகுதல் = ஒடுங்குதல் “கண்களை இடுகக் கோட்டி” (சீவக. 2086), சிறுகுதல்
“இடுகிடைத் தோகாய்” (கம்ப ராமாயணம். சித்திர. 19)
இடுங்குதல் = உள்ளொடுங்குதல் “கண்ணிடுங்கி” (த்வ்ய. பெரிய திருமொழி.
1:3:4)
இடும்பை -= துன்பம் “ஏமஞ் சாலா இடும்பை” - தொல் பொருள்.50)
இடுவல் = இடுக்கு
இண்டு = மிகச்சிறிய இடைவெளி; இண்டும் இடுக்கும் என்பது உலக வழக்கு.
இனி இன்னொரு வளர்ச்சித் தொடரைப் பார்ப்போம்.
உல்>ஒல்>ஒல்குதல் = சுருங்குதல் ”ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்” குறள்
136.
ஒல்கு>ஒற்கு>ஒற்குதல் = குறைதல் “ஒற்காமரபிற் பொதியில் அன்றியும்” -
சிலப் 25:117
ஒற்கு> ஒற்கம் = குறைவு “ஒற்கத்தின் ஊற்றாந் துணை” குறள் 414; வறுமை
(தொல்.சொல்.360)
உடு>ஒடு>ஒடுங்குதல் = சுருங்குதல், குவிதல், “தாமரையின் தடம் போது
ஒடுங்க” திவ்வி.இயற்.திருவிருத்த. 76
ஒடுங்கி = ஆமை
ஒடுக்கு = அடக்கம்
ஒடு>ஒடி>ஒடிதல் = முறிதல்
ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல்
ஒடி>ஒசி [ஓப்பு நோக்குக குடவன்>குசவன், பிடி>பிசி (பொய்)]
பேச்சு வழக்கில் உகரச்சொற்கள் அகரச்சொற்களாய்த் திரிவதும் உண்டு.
ஒடுங்கு>அடுங்கு>அடங்கு>அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல்,
கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல்
அடங்கு>அடக்கு>அடக்கம் = அடங்கிய நிலை “அடக்கம் அமரருள் உய்க்கும் -
குறள் 121”
ஒடுங்கு>ஒதுங்கு>ஒதுக்கு>ஒதுக்கம் = ஒடுங்கியநிலை
ஒதுங்கு>அதுங்கு>அதுக்கு>அதுக்கம்; அதுங்குதல் = ஒடுங்கியநிலை.
அதுக்குதல் = வாயில் அடக்குதல்
அதுக்கு = ஒடுக்கு, கல நெளிவு
ஒதுங்கு>ஒருங்கு>ஒருங்குதல் = ஒடுங்குதல் “உரம் ஒருங்கியது ......
வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர.90) [ஒப்பு.நோ. விதை>விரை]
ஒருங்கு>ஒருக்குதல் = அடக்குதல் “மனத்தை ஒருக்கு ஒருக்கத்தின்
உள்ளே” (பதினொரு. திருவிடைமும். 24) [இனி ஒடுங்கு>ஒருங்கு என்றுமாம்.
ஒ.நோ. அடுக்கங்கடை>அடுப்பங்கரை, படவர்>பரவர்]
ஒன்று சேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும், ஒடுங்குதலைக்
குறிக்கும் ஒருங்கு என்ற சொல்லும் வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்தில்
சாதற் கருத்துக்கு இடமின்மை காண்க.
இனி,
உல்கு>ஒல்கு>அல்கு. அல்குதல் = சுருங்குதல்
அல்கல் = குறைவு “அல்கலின் மொழி சில அறைந்து” (நைடத. அன்னத்தைக் கண்.66)
பெண்ணின் உடலில் அல்கிய இடம் அல்குல். இதை இடை என்று ஓரோவழி சொல்லுவாரும்
உண்டு; பெரும்பாலோர் ஒக்கலுக்கும் கீழே பெண்குறி நோக்கி, உடலின்
மேற்பாகம் குறுகுவதைக் குறிப்பாரே மிகுதி.
அல்கு>அஃகு. அஃகுதல் = அளவிற் குறுகுதல் (நன். 60); சுருங்குதல் “கற்பக்
கழிமடம் அஃகும்” (நான்மணி.20); குவிதல் “ஆம்பல் ..... மீட்டு
அஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104); நுண்ணிதாதல் “அஃகி அகன்ற அறிவு
- குறள் 175”
அஃகல் = சிறியதாகை (திவாகரம்)
அல்கு>அற்கு>அற்கம் = அடக்கம் “அற்கம் ஒன்றும் அறிவுறாள்” (திவ்.திருவாய்.
6:5:4)
அடுத்த பகுதியில் ஓட்டு, ஒட்ட, ஓட்டி என்ற விதப்பான சொற்களுக்குப்
போவோம்.
அன்புடன்,
இராம.கி.
On Nov 22, 4:02 pm, devoo <rde...@gmail.com> wrote:
> அதிரடியான அறிவுரைகள் !! ஆராய்ச்சி அந்தரத்தில் !!
>
> ‘ஒட்டி’ -
> உதட்டோடு உறவாடி ஒட்டிக்கொண்டு முடிந்து போயிற்று.
> ஆய்வு தொடர்ந்து கீழுதட்டிற்குக் கீழே போகாமல் இருந்ததற்குக் களிபேருவகை
> கொள்ளலாம்.
> அடுத்தது ‘யாணம்’ -
> ஆணி வேர் அகப்படவில்லை. அருளியார் அருளிச்செய்யவில்லையா ?
> யாணத்தைத் தலைமுழுகுவதற்கு ஒரு யானத்தை ஏற்பாடுசெய்ய வேண்டும்.
>
> ’கலி யாணம்’ எப்பொழுது ? காத்திருப்போம் .
> தேவ்
அடியேன் பிறப்பால் உபய வேதாந்தி அல்லன்;
அப்படி ஆகும் தகுதியும் அடியோடு இல்லை.
ஆயினும் அச்சுதன் அருளால் அத்தகுதி வாய்ந்த பல
பெரியோர்களின் பரிவுக்குப் பாத்திரமானவன்.
வைணவத்தின் மென்மையும், கருத்தாழமும் ஈட்டில்
ஈடுபாடு கொள்ளச்செய்தன. எழுத்திலும் என்னையறியாமல்
அதன் தாக்கம் தலை காட்டும். இத்தாக்கத்திற்கு இடமளிப்பது
ஒரு குறையா, நிறையா அறியேன். பெரியோர் இட்ட பெயரும்
வைணவு மரபு சார்ந்த பெயர்போல அமைந்து விட்டது.
என் புரிதல் இன்மையை ‘குரல் உரையாடல்’ தெரிவிக்கிறது.
மனத்தாங்கல் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும்.
தொடருங்கள் உங்கள் பணியை !
முற்றிலும் புதிய துறை.
ஏதேனும் புரிந்தால் தெளிவு பெறுகிறேன்.
இல்லையேல் இந்த இழையிலிருந்து விடை பெறுகிறேன்.
மின் தமிழுக்கு உங்கள் பங்களிப்பு நின்றுபோகக் கூடாது.
மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்
தேவ்
தேவ்
இராம.கி ஐயா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். துறையால் பொறியியலாளராக
இருந்தாலும் மனதால் என்றும் தமிழுடன் ஒட்டி வாழ்பவர்.
இணையம் உருவான காலத்திலிருந்து மின்தமிழ் உலகிற்கு சொல் வழங்கி வருபவர்.
பல நேரங்களில் இவரது வேர்த்தேடல் என்னைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது.
எண்ணத்தின் அருகில் சென்று பார்க்கும் இயல்பு இவருக்கு இயல்பாகவே
அமைந்திருக்கிறது.
ஒட்டியாணம் என்ற கேள்வி வந்தவுடன், இராம.கி வருவார் என்று தெரியும்.
அதற்கு நற்சகுணமாகவே உங்களில் பலர் பங்கு கொண்டது.
இழை தொடரட்டும். இழையும் பிரிய வேண்டாம். யாரும் பிரிய வேண்டாம்.
நான் உங்களை உபய வேதாந்தி என்று சொன்னது பிறப்பை வைத்து அல்ல. உங்கள்
இருமொழிப்புலமை, வேதாந்த ஈடுபாடு இவைகளை வைத்தே. இராம.கியும்
அப்படியேதான் புரிந்து கொண்டிருப்பார். ஆழ்வார்கள் பற்றிய அவரது மேற்கோள்
அதைக் காட்டுகிறது.
ஒட்டியாணத்தைப் பற்றிப் பேசப்போய்தான் வைரமுத்துவின் "ஒட்டகத்தைக்
கட்டிக்கோ!" பாடலுக்கு பொருள் புரிந்தது ;-) (இளங்கோவன் மன்னிப்பாராக
;-))
க.>
உபய வேதாந்தம் உள்ளது மிக்குயர் நிலையில்.
உள்ளும் புறமும் மாசுபட்ட நாம் வாழ்வதோ
முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில்.
நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவிலாத,
புலன்களையும் வெல்லாத பெருமைதான் என்னிடம்
உள்ளது.
நம் உரையாடலில் நற்கலைகள் அறைபட வேண்டாம்
என்பதால் ஒன்றிரண்டு கூறினேன்.
கூறியவற்றை ஓர் அறிமுகமாகக் கொள்ளலாம்.
எப்படியோ ’ஓட்யாண பீடம்’ ஐயாவை அழைத்து வந்துவிட்டது.
அகத்தியமோ, ஆரியமோ எல்லாமே தெய்வத்தன்மை
பொருந்தியவைதாம்.
ஐயா அவர்கள் எழுதிய பாமரப் பேச்சு நெல்லைச் சூழலை
ஏற்படுத்தி விட்டது.
குழுமத்தில் ஏற்கெனவே நெல்லை உரையாடல் ஒன்று
கொடுத்துள்ளேன்.
தேவ்
எனக்கும் சொல்லுங்கள். "ஜாக்கிர் ஹுசேன் தபலா" போல ஏதாவதா?
ரெ.கா.
[ஓட்டியாணம் என்ற இந்தக் கட்டுரைத் தொடரை ஒட்டி மின்தமிழ்க் குழுமத்தில்
எழுந்த பின்னூட்டுக்களில், ஓட்டக் கூத்தரைப் பற்றிய பேச்சும் எழுந்தது.
தமிழில் பெரும்பாலான புலவர்களின் பெயர்கள் இயற்பெயர்களாய் இல்லாமல்
காரணப்பெயர்களாகவே காட்சியளிக்கின்றன. ஒட்டக் கூத்தர் என்னும் பெயரும்
அப்படியே இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய பெயர் மூன்று வகையால்
ஏற்பட்டிருக்கலாம். ஒன்று, அவர் ஒட்ட நாட்டின்
கூத்தராய் இருந்திருக்கலாம். [ஒட்ட நாடு = ஒரிசா. இது கடற்கரையை ஓட்டி
ஒடுங்கிய நாடு. அதன் வட மேற்கில் காடுகளே மிகுத்து இருந்ததால், மக்கள்
கூட்டம் ஓர் ஒடுங்கிய பகுதியிலேயே வாழ்ந்திருக்கிறது. ஒட்டு என்று சிறு
குன்றுகளையும் அழைப்பது உண்டு. சிறு குன்றுகளால் ஆன நாடு, ஒட்ட நாடு
என்று கூடச் சொல்லப்பட்டிருக்கலாம். அதே பொழுது, சோழநாட்டுக்காரர் என்று
பொதுவாக அறியப்படும் ஒட்டக் கூத்தர் ஒட்ட நாட்டுக்காரராய் இருக்க
வாய்ப்புக் குறைவு.] இரண்டாவது பட்டுமை(possibility)யில், ஓட்டக் கூத்து
என்பது ஒட்ட நாட்டுக் கூத்தாக இருக்கலாம். ஒருவேளை இந்தக் கால
ஒட்டியக்கூத்து> ஒடியக்கூத்து>ஒடிசிக்கூத்து பேரரசுச் சோழர் காலத்தில்
ஒட்டக் கூத்தாக அறியப் பட்டிருக்கலாம். ஒட்டக் கூத்து அறிந்தவர், அல்லது
ஒட்டக் கூத்துக் கலையில் வல்லவர்களின் கொடிவழியில் வந்தவர் ஒட்டக்
கூத்தர் என்று பொருள் கொள்ளலாம். மூன்றாவது வகையில் வேறு மாதிரிப் பொருள்
கொள்ளலாம். ஒட்டு என்ற சொல்லிற்கு ஆணை, சூள், பந்தயம் என்ற பொருளும்
உண்டு, ஒட்டேற்றுதல் என்பது சூளுரைத்தலைக் குறிக்கும். பலர்முன்
ஒட்டேற்றி (சூளுரைத்துப்) பாடி வெல்லும் கூத்தராய் ஒட்டக் கூத்தர்
இருந்திருக்கலாம். பலரோடும் புலமைப் பந்தயத்தில் இறங்கி அதில் தோற்றோரின்
காதுமடல்ளை ஒட்டக் கூத்தர் பறித்ததாகத் தொன்மக் கதைகள் உலவுகின்றன.
மூன்று பட்டுமைகளுல் எது இங்கு சரியென்று என்னால் கூற முடியவில்லை.
மேலும் பல தரவுகளைக் கொண்டு மற்ற ஆய்வாளர்கள் ஆழ்ந்து நோக்கலாம்.]
இனி ஒட்டுதல் என்னும் சொல்லுக்கு வருவோம். இந்தச் சொல்லிற்கு ”ஒன்று
சேருதல், உடன் வருதல்” என்ற மற்ற பொருட்பாடுகள் உண்டென்றாலும், [அதே போல
பந்தயப் பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது என்றாலும்] அவற்றை ஒதுக்கி,
முன்னே சொன்னது போல், ஒடுங்கற்
பொருளை மட்டுமே பார்ப்போம். ஏனெனில், ஓட்டியாணத்தின் பொருளைப் புரிந்து
கொள்ள ஒடுங்கற் பொருளே அடிப்படையாகும். மேலே சொன்ன ஒடுங்கும் பொருளை
ஆழமாய் உணரும் வகையில் ஒட்டு என்ற சொல்லின் பொருளையும் அறியும் வகையில்
மற்ற சொற்களையும் பார்க்கலாம்.
ஓட்ட = இறுக “ஓட்டக் கட்டு”
ஒட்டகம் = பாலைவனப் பயணத்திற்கு உதவும், நீண்டநாள் உண்ணாதிருக்கும் ஒரு
விலங்கு; ஓட்டு = பட்டினி. ஒட்டகம் = பட்டினி கிடக்க வல்ல விலங்கு,
அதாவது ஒடுங்கவல்ல விலங்கு.. ஒட்டுதல் = ஒடுங்குதல், பட்டினி கிடக்கும்
போது வயிறு ஒடுங்கிப் போகும். வயிற்றை இறுகக் கட்டுவதும் பட்டினி தான்.
(ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும் - தொல்.பொரு.56. ஓங்கு நிலை ஓட்டகம்
துயில் மடிந்தன்ன - சிறுபாண் 154.)
இனி, அது போன்ற ஒருவிலங்கு நீண்ட கழுத்துப் பெற்றதனால், ஒப்பு நோக்கி,
நீண்ட கழுத்துப் பெற்ற நெருப்புக் கோழி ஒட்டகக் கோழி என்று வழிப்பொருளால்
சொல்லப் பெறும். ஒட்டகப் பறவை, ஓட்டகச் சிவிங்கி என்ற சொல்லாட்சிகளும்
இப்படி வழிப்பொருளில் அமைந்தவைதான்.
ஒட்டப் பிடித்தல் = இழுத்துப் பிடித்தல் (வின்சுலோ அகராதி)
ஓட்டப் போடுதல் = பட்டினி கிடக்கச் செய்தல் (வின்சுலோ அகராதி), மெலிய
வைத்தல். ஓட்டிய வயிறு என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். வயிறும்
இடுப்பும் ஒன்றோடு ஒன்றாகத்தான் அமைகின்றன.
ஒட்டற் காது = குறுகிய காது. (வின்சுலோ அகராதி)
ஒட்டறுதல் = வற்றுதல்
ஒட்டிப் போகுதல் = வற்றுதல் (கன்னம் ஒட்டிப் போயிருக்கிறது.)
ஒட்டு = சிறுமை (அற்பம்; சூடாமணி), ஓரம் (அந்தக் குழந்தை ஒட்டிலேயே
இருக்கிறது.)
ஒட்டுக் காயம் = பட்டினி கிடக்கை (திருநெல்வேலி வழக்கு)
ஒட்டுக் குஞ்சு = சிறு குஞ்சு (வின்சுலோ அகராதி)
ஒட்டுக் குடித்தனம் = ஒட்டிய குடித்தனம், சிறு குடித்தனம்
ஒட்டுக் குடுமி = தலை உச்சியில் இருக்கும் சிறு குடுமி
ஒட்டுக் கை = துண்டுக் கை மரம்.
ஒட்டுத் திண்ணை = பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறம் கட்டப்படும்
சிறு திண்ணை; வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையில் உள்ள மிகச்
சிறிய தெருத் திண்ணை. (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இது இல்லாது
ஒரு பெருந்தனக்காரர் வீடு இருக்காது.)
ஒடியல்>ஒடிசல் = ஒல்லி
ஓட்டியன்>ஒடியன் = ஆமை
ஒடியிடை = ஒடுங்கிய இடுப்பு
ஒடிவான் = அற்பன்
ஒடிவு = குறைவு “ஒடிவில் பொற்கிழி நல்கி” (திருவிளை. இரசவா. 10)
ஒடுக்கு எடுத்தல் = நெளிவு எடுத்தல் (ஒடுக்கு = நெளிவு)
ஒட்டியம் = ஓட்டியாணம்
ஒட்டில் = சிறுமை.
வின்சுலோ அகராதியைப் பார்ப்பவர்கள் ஒருங்கு சேரப் பார்க்கவேண்டும். ஒரு
சொல்லை மட்டும் பார்க்கக் கூடாது. இதே போல கலைக்களஞ்சியம், சென்னைப்
பல்கலைக் கழக அகராதி போன்று பார்ப்பவர்களும் ”ஆழ்ந்து பாருங்கள்” என்று
தான் நான் சொல்லுகிறேன்.
இனி அகராதிகளுக்கு முன்னிருந்த நிகண்டுகளுக்குப் போகலாம். திவாகரம்,
பிங்கலாம் எல்லாம் 8,9 ஆம் நூற்றாண்டு நிகண்டுகள். கிட்டத்தட்ட அண்மைக்
கால (14 ஆம் நூற்றாண்டு) நிகண்டாய், சூடாமணி நிகண்டைச் சொல்ல முடியும்.
அதிலும் கூட எல்லா இடுப்புச் சொற்களும் பதிவு செய்யப் படவில்லை. இடை
(waist) பற்றிய சொற்களாய், சூடாமணி நிகண்டு "நடு, நுசுப்பு, மருங்கு,
மத்திமம், உக்கம்" என்ற ஐந்து சொற்களையும், மருங்கின் பக்கத்துப் பெயராய்
ஒக்கலையையும் (hip) காட்டும். [இது போக அரை, குறுக்கு என்ற சொற்களையும்
இடுப்பிற்கு மாற்றாய்ப் புலவோர் சொல்லுவார்கள். சில ஆண்டுகளுக்கு
முன்னால் வைரமுத்து கூட ஒரு திரையிசைப் பாடலில் “குறுக்குச் சிறுத்தவளே”
என்று பாடியிருப்பார்.]
இவற்றில் நடு என்பது உடம்பின் நடுப் பாகத்தைக் குறிக்கும். நடுவம்>நடுமம்
என்பது நடுவில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லாகும். வடக்கே போகக் போக,
டகரம் அழுத்தி ஒலிக்கப் பட்டு, நகரியின் இரண்டாம் டகரமாகிப்
( நடுமம்>நட்டுமம்; அழுத்தி ஒலிக்கும்போது டகரம் இரட்டிப்பது தமிழிலும்
உள்ள பழக்கம் தான்; நட்ட நடு என்று சொல்லுகிறோமே, அதை இங்கு எண்ணிப்
பாருங்கள்.) பின் வடபுலத்துப் பேச்சுத் திரிவில் நட்டுமம் “நத்துமம்”
என்று ஒலிக்கப் படும். இனி, தமிழில் நகர, மகரப் போலிகள் மிகுதியும்
உண்டு. நம் பேச்சில் நுடம் முடம் ஆகும், நுதல் முதல் ஆகும், நுப்பது/
முப்பது, நுனி/முனி, நுணுத்தல்/முணுத்தல் என்பது போன்ற திரிவுகளும்
தமிழில் பலவாறாக ஏற்படும். இதில் என்ன வியப்பு என்றால், நகர/மகர தமிழியச்
சொற்களில், இந்தையிரோப்பியத்தில் பொதுவாக இணை காட்டும் சொற்கள் மகர
ஒலிப்பிலேயே அமைகின்றன, இந்தவகையில் நத்துமம்>மத்திமம் ஆகும்.
(குற்றியலுகரம் குற்றியலிகரமாகப் பலுக்கப் படுவதும் ஓர் இயல்பான
திரிவுதான்.) இதே போல, நட்டம்> நட்யம்> நத்யம்> மத்யம்> மத்தியம்>
median, நுணுத்து>minute போன்ற மாற்றங்களையும் பார்க்கமுடியும். பின்னால்
நடு என்னும் தமிழ்ச்சொல்லின் வளர்ச்சியான மத்திமம் என்ற வடசொல் மீண்டும்
இடைக்காலத் தமிழில் கடன்வாங்கப் பட்டு உடம்பின் நடுப்பாகத்தைக்
குறித்திருக்கிறது. நடுமம் என்று சொல்ல நாம் தான் தடுமாறுகிறோம்.
அடுத்து இடை என்னும் பாகம், நுணுகிய (=சிறுத்த) பகுதியாதலால்,
நுணுகுதலின் வேரான நுல்லில் இருந்து நுல்>நுரு>நுருங்கு>நருங்கு என்ற
வளர்ச்சியும், நுள்>நுறு>நுறுங்கு>நறுங்கு என்ற வளர்ச்சியும் ஏற்பட்டு
உடம்பின் நுணுகிய/ஒல்லிய பகுதியைக் குறிக்கும். ஒல்லியாய் இருக்கும்
பெண்ணைச் சிவகங்கைப் பக்கம் “என்னது இந்தப் பொண்ணு கொஞ்சம் நருங்குனாப்/
நறுங்குனாப் போல ஒடிசலா இருக்கு, பார்த்தா வாட்ட சாட்டமா இருக்க வேணாமா?”
என்று சொல்லுவார்கள். நருங்கு/நறுங்கு என்பது ஒடுங்கிய நிலையைக்
குறிக்கும் சொல். வழக்கம் போல மகர நகரப் போலியில் நருங்கு மருங்கு ஆகும்.
மருங்கு மருங்குல் என்றும் புடைத்து நிற்கும்.
இனி நுள்>நுசு>நுசுப்பு என்பதும் நுணுகிய மகளிர் இடையையே குறிக்கும்.
[பொதுவாகப் பேச்சுவழக்கில், ளகரவொலி யகரமாய்த் திரிந்து பின் சகரமாய்
மாறும். வாழைப் பழம் வாயப் பயம் என்று வட ஆர்க்காட்டாரால் ஒலிக்கப்
படுவதை நோக்குக.]
இதே போல, உக்கம், ஒக்கல், ஒக்கலை, ஆகியவற்றைப் பற்றி இந்தத் தொடரின்
முதற் பகுதியிலும், இடை, இடுப்பு ஆகியவற்றை இதன் இரண்டாம் பகுதியிலும்
பார்த்தோம்.
அதே பொழுது, முன்னே சொன்னது போல், ஒடு, இடு என்பவற்றிற்கு அடிச்சொல் உடு
என்பதே. இடுப்பு என்னும் பொருள் கொண்ட இந்தச் சொல் உடு>உடை, ஒடு>ஒடு
என்று தமிழிலும், உடு>ஒடி எனத் தெலுங்கிலும், கன்னடத்திலும் திரியும்.
ஒடி = இடுப்பு. ஒடி என்பது வடபுல அழுத்தத்தில் ஒட்டி என்று பலுக்கப்
படும். ஒட்டியாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் உடு யாண் / உடு ஞாண் / உடு நாண்.
உடு நாண்>ஒட்டு நாண் என்றும் திரியும். இதை உடை நாண் என்றும் சொல்லுவார்
உண்டு. ”உடுத்த பஞ்சிமேற் கிடந்து உடைஞாண் பதைத்து இலங்க” - சீவக 2240.
சீவக சிந்தாமணி இல்லையென்றால் இந்தச் சொல்லாட்சியை அறிந்திருப்போமோ?
இடு>இடை என்பது போல உடு>உடை என்பதும் இடுப்பையே குறித்திருக்கிறது.
மலையாளத்தில் உடஞாண், ஒட்டியாண், ஒட்டிஞாண் என்றும், கன்னடத்தில்
உடேநேண், உடெ நூல், ஒட்ட்யாண, ஒட்யாணை என்றும், தெலுங்கில் ஒட்டாணமு,
ஒட்யாணமு, ஒட்யாண்டு என்றும், துளுவில் ஒட்யாண என்றும் சொல்லப் படுகிறது.
பலரும் புரட்டிப் பார்க்கும் பர்ரோவின் Dravidian Etymological
Dictionary இதைத் திராவிடச்சொல் என்றே பதிந்திருக்கிறது.
அதே பொழுது வடமொழிச்சொல் என்று சொல்லுவது, அறியாமல் சொல்லுவது என்றேு
மோனியர் வில்லியம்சின் Sanskrit English Dictionary யைப் பார்த்தால்
புலப்படும். ஒட்டியாண(ம்) என்ற சொல்லே நான் பார்த்தவரை அங்கு காண
முடியவில்லை. நான் தவறாய்ச் சொன்னால் என்னைத் தெளிவு படுத்துங்கள்.
[வடமொழியில் ஒகரம் கிடையாது, ஓகாரம் மட்டுமே உண்டு. ஓகார வரிசையில்
இந்தச் சொல்லைக் காணோம். இந்தச்சொல் உகரவரிசையிலும் பதிவு செய்யப்
படவில்லை. அந்தநிலையில் லலிதா சஹஸ்ரமநாமத்தில் எடுத்தாளப் படுகிறது
என்றால் அதன் கடன் வாங்கியது என்றே பொருள். வடசொல் என்பவர்களுக்கு நான்
மீண்டும் உரைப்பது: “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர
உசாவுவதே மெய்”.
இனி, உடைஞாணைப் போலவே, உடை தாரம் என்ற சொல்லும் தமிழில் உண்டு. அது
அரையில் அணியும் அணிவகையைக் குறிக்கும். இதே போல், உடை மணி =
குழந்தைகளின் அரையணி, மேகலை. நமக்கும் எல்லாம் தெரிந்த இன்றையத் தமிழில்
உள்ள உடைவாள் என்ற சொல் உடையில் (இடுப்பில்) செருகும் வாளைக் குறிப்பது
தான். உடைவாளுக்கும் உடை ஞாணுக்கும் உள்ள நெருக்கம் கூடவா நமக்குத்
தெரியாமற் போயிற்று? அப்புறம் எப்படி ஒட்டியாணை (உடையாண்/உடை ஞாணின்
திரிவு தானே?) தமிழில்லை என்று சொல்லுகிறோம்? [ஒட்டுஞாண் என்பது
மலையாளத்தில் உள்ள பலுக்கல்.]
ஒட்டியாணம் என்பது முனிவர்கள் அணியும் ஓகப் பட்டையையும், மாதர் இடையில்
அணியும் அணிகளில் ஒன்றையும் குறிக்கும். கிடைத்தவற்றுள் பழமையான குறிப்பு
திருமந்திரத்திலேயே இருக்கிறது. திருமந்திரம் 811 ஆம் பாடல் கேசரியோகம்,
சகஸ்ராரத் தியானம் பகுதியில்
மண்டலத்துள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டு, அகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டி,
பண்டு அகத்துள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே!
என்று வரும். மன ஒட்டியாணம் என்ற கருத்திற்குள் நான் போக முற்படவில்லை.
ஆனால் ஒட்டியாணம் என்ற சொல்லாட்சி தெளிவாக இடுப்புப் பட்டையையே
குறிக்கிறது.
இனி யாணத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அது ஒரு தெரிதல்.
ஒட்டியாணம் - 3
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
இனி என்ன சொல்லுவோம்எங்கள் வாயை அடைத்து விட்டீர் இராம. கி சார்.
”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு
பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார்
சொல்லாய்வறிஞர் அருளி. யா - என்னும் வேர்ச்சொல்லுக்கு கருமைப் பொருளும்,
பொருந்தற் பொருளும், வினாப் பொருளும் சொல்லி அந்தப் பொருட்பாடுகளை
உணர்த்தும் பல்வேறு சொற்பிறப்புகளையும் அதில் தருக்கித்து
நிறுவியிருப்பார். கூடவே பல சொற்களில் யா>ஞா>நா என்ற ஒலித்திரிவு
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார்.
அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.
அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர்
பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல்,
இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி,
யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு),
யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார்.
இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர்
பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன்.
[பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில
இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]
யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல்
என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ்
இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான்.
சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும்.
இனி விளக்கங்களுக்கு வருவோம்.
யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>
யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப்
பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல்
என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச்
செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின்
ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக்
கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி,
சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின்
மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி,
தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும்
பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி,
வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி,
குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே
இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர்
காட்டியிருப்பார்.
அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது
கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63]
என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன்
ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார்.
இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று
புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு”
என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு
வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.
{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு
கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -
இராம.கி}
ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால்
உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண்
என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்”
என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு
என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம்
என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில்
வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” -
இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி
(=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று
இந்தச் சொல் அமைந்திருக்கிறது.
ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது
கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற
பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa
arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில்
இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு
கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய,
சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில்
இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]
அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.
யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப்.
திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக்
கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]
[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு
கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம்
தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை
ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க:
சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67]
[சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும்
தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக்
குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும்,
இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]
இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.
யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp,
Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான்
"சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு
தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்
சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற்
கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து
ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர்
ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி
வகுப்பதாகும்.
அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர்
“விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்)
சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126]
சடை> (Sanskrit) Jataa = matted hair
சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு
திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி
அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர்.
இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின்
Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது.
இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre
from bark of East Indian plants of genus Corchorus used for sacking,
mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.
அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று
விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.
உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491
இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17,
“ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை
ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம்,
காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58
என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124,
ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும்
இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.
{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற
சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும்
மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?”
- இராம.கி.}
அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்>
யாணம் = கட்டு
கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக்
கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.
{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் =
கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும்
சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள்
கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப்
பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்ட என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப்
பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே
என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள்
இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத்
திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது.
“கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில்
கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க்
கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்”
வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது,
போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று
மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த
பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}
அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும்
அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது
பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி
யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி
கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான்
இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர்
அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால்,
நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும்
பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு
அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும்
அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப்
போங்கள் :-).
இராம.கியாரே! அப்படித்தப்பிவிடமுடியுமா?
வெஞ்சணம் எனும் சொல்லாட்சி வடமொழியில் உண்டு.
இங்கிருந்து அங்கா? அங்கிருந்து இங்கா? ஹ..ஹா:-))
கோவிச்சுக்காதீங்க!!
கண்ணன்
> உள்>உளுக்கு>உளுக்கார்தல் = ஒடுங்கியிருத்தல், கீழிருத்தல்
> உளுக்கார்தல்>உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல் (எங்ஙனம்
> அமர்ந்திருப்பினும் நிற்கும் நிலையினும் உட்கார்ந்திருக்கும் இருப்பு
> உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.]
"உட்கார்" என்ற சொல்லின் மூலம் ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தேன்.
"நில்" என்ற் சொல் துல்லியமான தமிழாயிருக்க அதற்கு எதிர்ச் சொல்லான
"இரு" என்பதை (சாதாரண வழக்கில்) வென்று "உட்கார்" அமர்ந்திருக்கிறது.
"உளுக்கார்தல்" என்ற சொல் இலக்கியத்தில் காணப்படுகிறதா?
ரெ.கா.
On Nov 18, 6:35 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> அண்மையில் மின்தமிழ் மடற்குழுமத்தில் ”ஒட்டியாணம் தமிழ்ச்சொல்லா?” என்று
> திரு. கல்யாணக் குருக்கள் கேட்க, அதற்கு “ஓட்யாணம் வடமொழிச் சொல்.
> ’ஓட்யாண பீடநிலயா’ –ன்பது லலிதா ஸஹஸ்ர நாமம். சாக்த நெறி
> தேர்ந்தவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். ).
அன்பு இராமகி,
"நில்" என்ற் சொல் துல்லியமான தமிழாயிருக்க அதற்கு எதிர்ச் சொல்லான
"இரு" என்பதை (சாதாரண வழக்கில்) வென்று
"உட்கார்" அமர்ந்திருக்கிறது.
--
அகன்று போகிறவர்களை நில் என்று சொல்லியேஇருக்க வைப்பது நம் வழக்கம் ஆங்கே நில் என்னும் சொல்லுக்குபோகாதே இரு என்று பொருள் வருகிறது,
உங்களோடு உரையாடி நெடுநாட்களாயிற்று. மீண்டும் இங்கு மின் தமிழ்க்
குழுமத்தில் சந்திப்பதற்கு மகிழ்ச்சி. உங்கள் ஆக்கங்கள் என்றும் நான்
படித்து மகிழ்பவை. இந்தக் கட்டுரைத் தொடரை எழுத வைத்ததில் உங்களுக்கும்
பங்குண்டு. உங்கள் மடல் வந்தவுடன் மறுமொழிக்காததற்கு மன்னியுங்கள். தொடரை
முடிக்க வேண்டும் என்ற முன்முனைப்பே அதற்குக் காரணம். வேறொன்றும் இல்லை.
அன்பிற்குரிய குமரன்,
உடுக்கை என்னும் ஆடைப்பொருள் எங்கிருந்து வந்தது என்று
கேட்டிருக்கிறீர்கள். அது உள்>உடு>உடுக்கை என்று பொருந்துதல் பொருளில்
வரும். உடன், உடம்பு, உடுக்கை என எல்லாமே பொருந்துதற் பொருளில்
வந்தவையே.
அன்பிற்குரிய ஹரிகி,
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்
என்ற குறளை ஏன் சொன்னீர்கள் என்று புரியவில்லை. இங்கு நான் கூறிய ஒரு சில
சொற்களை உங்களை நோக்கிக் கூறியதாகப் பொருள் கொள்ள வேண்டியதில்லை.
பொதுவாகப் பல தமிழ்ச் சொற்களைச் சங்கதம் என்று சாதிப்பவர் பற்றிச்
சொன்னேன். அவ்வளவு தான்.
அன்பிற்குரிய ராஜசங்கர்,
தங்கள் கனிவிற்கு நன்றி.
அன்பிற்குரிய கண்ணன்,
வெஞ்சணம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருக்கலாம். இருந்தாலும் அது
எங்கிருந்து கிளைத்தது என்பதில் தான் வேறுபாடு. சங்கதத்தில் புழங்கி
விட்டாதாலேயே பலரும் ”சங்கதமே ஊற்றுக்கண், தமிழ் வழியோடை” என்று எண்ணி
விடுகிறார்கள். அது எல்லா நேரங்களிலும் சரியில்லை என்பதே என் கூற்று.
அன்பிற்குரிய வேந்தன் அரசு,
தங்களின் ஆதரவிற்கு நன்றி.
ஆணி என்ற சொல்லிற்கு அடிப்படையாக வினைச்சொல் ஒன்றும் கிடைக்காத நிலையில்,
யாத்தல் என்ற வினையே அடிப்படையாகப்
புலப்படுவதால், இங்கு இப்படிக் கொள்ளப் பட்டது. அருளியாரின் ஒட்டு
மொத்தமான தருக்கத்தையும் பார்த்து, [விதப்போடு முழுமையையும் பார்க்க
வேண்டியிருக்கிறது.] இப்படிப் புரிந்து கொள்ளுகிறோம். மேலும் தரவுகள்
கிடைக்கும் போது நம் முடிவுகள் மாறலாம்.
ஒட்டி + ஆணம் = ஒட்டியாணம் என்று ஆகவில்லை என்பதை கலியாணம் என்ற இன்னொரு
இணைச்சொல்லாலும் அறிந்து கொள்ளுகிறோம். தவிர ஆணம் என்ற சொல்லிற்கு
அடிப்படையான வினைச்சொல்லை முன் சொன்னது போல் நான் காணமுடியவில்லை.
அன்பிற்குரிய தேவு,
கால்கட்டு என்ற பேச்சுவழக்குச் சொல் கலியாணம் என்ற பொருளைச் சரியாக
உணர்த்துகிறது. அது இரண்டு பேருக்கிடையே உள்ள கட்டு. அனைவருக்கும்
களிபேருவகை நல்கும் மங்கல நிகழ்ச்சியைக் குறிக்கும் சொல்லாக விழா என்னும்
பொதுமைச்சொல் இருக்கிறது. கலியாணம் என்பது விதப்புச் சொல்.
அன்பிற்குரிய ரெ. கா,
உங்களோடு உரையாடி மிகுந்த நாட்களாயிற்று. உளுக்கார்தல் என்ற சொல்
நாலாயிரப் பனுவலுக்கான விண்ணவர்களின் ஈட்டு உரையில் உள்ளது.
பெரியவாச்சான் பிள்ளையின் படி கிடைத்திருக்கா விட்டால், இந்தப் பயன்பாடே
நாம் அறிந்திருக்க மாட்டோம். உள்> உள்கு> உள்குறு> உள்குறுதல்>
உள்கார்தல்> உட்கார்தல் (உள்கார்தல் என்பதைத்தான் உகரம் சேர்த்து
உளுக்கார்தல் என்று ஈடு சொல்லுகிறது. இதே போல உள்கு>உளுக்கு ஆகும்.
மலையாளத்தில் “இவ்விடே உள்ளு” என்று சொல்லுவதை ”இவ்விடத்தில் உட்கார்”
என்று நாம் சொல்லுகிறோம். உள் என்ற அடிச்சொல் அப்படித்தான்
மொழியாய்வர்களுக்குப் புலப்பட்டது. பலநேரம் மற்ற தமிழியமொழிகளைப்
பார்த்து நம் சொற்களின் பிறப்பை உய்த்துணர வேண்டியிருக்கிறது. உள்ளுதல்
என்னும் வினைச்சொல் இலக்கியங்களில் மிகுதியும் உண்டு. (வெறூம்
நம்பிக்கையின் பால் எழும் மறுப்பைச் சற்று ஒதுக்கிப் பார்த்தால், உட்கு
என்ற தமிழ்ச்சொல்லுக்கும் இந்தையிரோப்பிய sit என்னும் சொல்லுக்கும் உள்ள
உறவை, ஸகர முன்னொட்டுச் சேர்த்துப பலுக்கும் பழக்கத்தோடு பொருத்தி ஆய
முடியும். கப்பல்>kappa>schappa>schip>ship ஆவது போல பல சொற்கள் உள்ளன.
இதைச் செய்யமுடியாது பலரையும் தடுத்து வைத்தது சங்கதம் என்னும் ஆடி
வில்லையே. சங்கதம் என்னும் ஆடியில்லாது மொழியியல் ஆய்வு 19 நாம்
நூற்றாண்டில் நடந்திருந்தால், பல புதிய செய்திகளை நாம் உணர்ந்திருக்க
முடியும்.)
அன்புடன்,
இராம.கி.
> அன்பிற்குரிய கண்ணன்,
>
> வெஞ்சணம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருக்கலாம். இருந்தாலும் அது
> எங்கிருந்து கிளைத்தது என்பதில் தான் வேறுபாடு. சங்கதத்தில் புழங்கி
> விட்டாதாலேயே பலரும் "சங்கதமே ஊற்றுக்கண், தமிழ் வழியோடை" என்று எண்ணி
> விடுகிறார்கள். அது எல்லா நேரங்களிலும் சரியில்லை என்பதே என் கூற்று.
>
அன்றொரு உபன்யாசத்தில் வெஞ்சணம் எனும் சங்கதச் சொல்லாட்சி கேட்டேன்.
வேளுக்குடியாரின் உபன்யாசத்தில் "வளையல்" எனும் சொல் வால்கீயின் வாக்கில்
வருகிறது!!
இவ்வளவு தமிழ் சொற்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் போது அதன் மீது
மீளாப்பகைமை எங்கணம் வந்தது?!!
க.>
இவ்வளவு தமிழ் சொற்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் போது அதன் மீது
மீளாப்பகைமை எங்கணம் வந்தது?!!
முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். பல்கலைக்கழக நாட்களில் இவ்வுரிமைக்காக நான்
கைகலப்பில் ஈடுபட்டதுண்டு. ஏன் ஜப்பானில் கூட வட இந்தியர்களுடன் கடுமையாக
சண்டை போட்டதுண்டு.
இப்போது யோசிக்கையில் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நம் பெருமையை
நமக்குள்ளே பேசிப்பயனென்ன? அதை அவர்கள் அறியும்படி செய்ய வேண்டியது நம்
கடமை.
தமிழில் மட்டும்தான் எழுதுவேன் என்போரால் இது பரவாது. பிறமொழி
அறிந்தோரால் மட்டுமே இது சாத்தியப்படும். எனவே பல்மொழி வாணர்களை முதலில்
நாம் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். வேற்று மொழி பேசினாலே வெட்டு-குத்து
என்றால் என்ன செய்ய :-))
க.>
வேற்று மொழி பேசினாலே வெட்டு-குத்து
என்றால் என்ன செய்ய :-))
க.>
மிக்க நன்றி.
இங்குள்ள தமிழறிஞர் ஒருவர் கிராமங்களில் "உக்கிரு"
- "உள்ளே வந்து இரு" என்ற வழக்கு இருப்பதாகவும்
அதன் எழுத்து வடிவம் "உட்கார்" என ஆகியிருப்பதாவும்
சொன்னார். எல்லாம் ஒத்துத்தான் வருகிறது.
ரெ.கா.
அவக்கரத்தில் இன்னொரு செய்தியை மறந்துவிட்டேன். தென்பாண்டி நாட்டில்
குறுக்கு வெட்டாகக் கைகளை வைத்துக் கொண்டு, இரு காதையும் பிடித்துக்
கொண்டு உட்கார்ந்து எழுவதை உக்கி போடுதல் என்பார்கள். (உட்கு>உட்கி உள்ளே
இருப்பதை ஓர்ந்து பார்த்து அறிந்து கொள்ளலாம். பிள்ளையார் திருமேனிக்கு
முன்னால் மூன்று உக்கி போட்டுத் தான் அந்தக் காலத்தில் தொழச் சொல்லிக்
கொடுத்தார்கள். தவிர, அந்தக் காலங்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில்
மிகவும் பரவலாக அளிக்கப் படும் ஒரு தண்டனை உக்கி போடுதல். 50 உக்கி, 100
உக்கி என்று போகும். அந்தத் தண்டனை முடிந்து எழுந்தால், முழங்கால்
கன்னிச் சிவந்து போகும். தண்டனைப் பட்டு அறிந்ததால் நான் சொல்லுகிறேன்.
இந்தக் காலத்தில் படிப்பு வன்முறை என்று சொல்லிவிடுவார்கள். வழக்கு
மன்றங்களில் அலைய வேண்டாம் என்று உக்கி போடச் சொல்லும் வழக்கம்
முற்றிலும் மறைந்து போனது.
பொதுவாக, நல்ல தமிழ் நம் நாட்டுப்புறத்தார் நாவில் இன்றும் பயில்கிறது.
ஆங்கிலம் படித்த நாம் தான் தமிழை மறந்து போகிறோம். தமிழ் பேசுவோரை
ஏளனமும் செய்கிறோம்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய ரெ.கா.,
அவக்கரத்தில் இன்னொரு செய்தியை மறந்துவிட்டேன். தென்பாண்டி நாட்டில்
குறுக்கு வெட்டாகக் கைகளை வைத்துக் கொண்டு, இரு காதையும் பிடித்துக்
கொண்டு உட்கார்ந்து எழுவதை உக்கி போடுதல் என்பார்கள். (உட்கு>உட்கி உள்ளே
இருப்பதை ஓர்ந்து பார்த்து அறிந்து கொள்ளலாம். பிள்ளையார் திருமேனிக்கு
முன்னால் மூன்று உக்கி போட்டுத் தான் அந்தக் காலத்தில் தொழச் சொல்லிக்
கொடுத்தார்கள். தவிர, அந்தக் காலங்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில்
மிகவும் பரவலாக அளிக்கப் படும் ஒரு தண்டனை உக்கி போடுதல். 50 உக்கி,
நீங்கள் குறிப்பிடும் வரிகள் எதில் வருவன?
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய வேந்தன் அரசு,
நீங்கள் குறிப்பிடும் வரிகள் எதில் வருவன?
2008/12/10 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
அன்பிற்குரிய வேந்தன் அரசு,
நீங்கள் குறிப்பிடும் வரிகள் எதில் வருவன?நற்றிணை ஐயா.கூகுள் தேடலிலும் கிட்டும்
64 குறிஞ்சி - உலோச்சனார்
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக்
கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது
இந்த பாடல் குறுந்தொகை:
27. பாலை - தலைவி கூற்று
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.
-வெள்ளிவீதியார்.
இப்படி உக்காங்கு வை துக்காங்கு என்று எழுதி வைத்தால் தேடுபொறிகள் தேடி தருமா?
தமிழை எளிமை படுத்துங்கள் புலவோரே!
அன்புடன்,
இராம.கி.
வெளங்குனாத்தானுங்களே !
மறுக்க ஒருக்க கோவப்படாமச் சொல்லோணும்.
புரிஞ்சவய்ங்க சொன்னாலு கேட்டுக்கிறலா..
தேவ்
ओत a. [आ-वे-क्त] Woven, sewn with threads across. -Comp. -प्रोत a. 1 sewn crosswise and lengthwise. -2 extending in all directions Mb.5. (-तम्) ind. crosswise and lengthwise, vertically and horizontally.
ओतुः ōtuḥ
வடமொழியில் யாணம் என்ற சொல் இல்லை. யானம் மட்டுமே இருக்கு
ஹரியண்ணா
நான்இருந்து முன்னும் பின்னும் புரட்டினேன். காணலை
மனத்துக்கு நெருக்கமாக உணர்பவர்களிடம் மட்டுமே நான் சில சலுகைகளை எடுத்துக்கொள்வேன். அப்படி ஒரு சலுகையை உங்களிடமும் அன்று எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான். கோபம் இல்லை.)
--