நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

11 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 9, 2026, 2:21:41 PM (3 days ago) Oct 9
to மின்தமிழ்
Nobel .jpg

இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமைதியையும், சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், நிறவெறி ஆட்சி நிலவிய காலத்தில், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த இவர், வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்றம், ருவாண்டாவுக்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பாகுபாடு, இனப் பிரிவினை ஆகியவற்றை எதிர்த்துப் போராடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும் நவநீதம் பிள்ளை பதவி வகித்துள்ளார்.
Reply all
Reply to author
Forward
0 new messages