வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை
காட்சிகள் -2
2001 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையை தொடங்கினோம்.
ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கின்ற அலுவலக விடுமுறைகள் பெரும்பாலானவற்றை தமிழ்நாட்டிற்கு வந்து ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி திரிந்து தமிழர் பண்பாட்டு வரைவுகளை அறிந்து கொள்ளவும் அவற்றை ஆவணப்படுத்தவும் எனது செயல்பாடுகள் அமைந்தன.
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் நண்பர்கள் அமைந்தார்கள். நான் செல்கின்ற இடங்களில் நண்பர்களின் இல்லங்களில் தங்கிக் கொள்வேன். மக்களோடு மக்களாக, இயல்பான வாழ்வியலை அறிந்து கொள்ளவும் அவற்றை ஆவணப்படுத்தவும் அது எனக்கு உதவியது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டிற்குள் இந்த மாதம் பயணிக்கவிருக்கின்றோம்.
கடந்து வந்த பாதையின் சில காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
காட்சி: மானாமதுரை மண்பாண்டம் செய்கின்ற கிராமத்தில் குழந்தைகளுடன். இது மானாமதுரை மண்பாண்ட குடிசைத் தொழில் பற்றிய ஆவணபப்திவு செய்த போது பதிவாக்கப்பட்டது. இத்துடன் வெளியிடப்பட்ட காணளி நமது
https://tamilheritage.org/ வலைப்ப்க்கத்தில் காணலாம்.
~~~~~
In the year 2001, we started Tamil Heritage Foundation.
Every year, during my annual holidays , I would travel to Tamil Nadu, visiting one village after another to explore and document the cultural landscapes of the Tamil people.
In many villages across Tamil Nadu, I made friends. Wherever I traveled, I would stay in the homes of these friends. Living among the people in a natural setting helped me to understand their way of life and document it authentically.
This month, we are about to embark on our journey toward the Silver Jubilee year of the Tamil Heritage Foundation.
I am sharing with you a few glimpses from the path we have travelled.
Photo With children in a village near Manamadurai 9A village in Tamil Nadu near Madurai) where traditional clay pots are made. This photo was taken while documenting the traditional clay pot-making huts of Manamadurai.
The video released along with this can be viewed on our website:
https://tamilheritage.org/-சுபா
5.8.2025
https://www.facebook.com/photo?fbid=4328988394011191&set=a.1388119661431427