நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 1. அறிமுகம்
எனக்கு வயது 70க்கு மேல் ஆகிவிட்டது. நல்ல பல அனுபவங்களோடு கூடிய போராட்ட வாழ்க்கை. எல்லாம் அறிவுப் போராட்டங்க்ளே. அதில் ஒன்றே எனது சமயம் யாது என்ற போராட்டம். பல மத மாற்ற முயற்சிகள் அதனாலும் பல பொராட்டங்கள் இப்பொழுது ஓர் முடிவிற்கு வந்துவிட்டேன். நான் ஓர் சைவன். இங்கு நான் ஓர் இந்து என்று சொல்வதில் கூட எனக்கு விருப்பம் இல்லை, ‘இந்து’ என்பது மிகக் குழப்பமானது என்பதொடு வேதாந்த ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒன்று. மேலும் இப்பொழுது வடநாட்டு இந்துத்துத்வா ஆதிக்கம் வேறு. நான் விரும்பும் சிந்தனை சுதந்திரம் அங்கு இல்லை என்றும் நினைக்கின்றேன்.
அது சரி: நான் ஏன் ஓர் சைவன் என்றும் உலகமே சைவம் ஆகவேண்டும் என்று நினைக்கின்றேன்?
இதுவே இக்கட்டுரைத் தொடரின் உட்கிடைக்கையாக அமையும். இது இன்றைய திராவிட இயக்கதின் போக்கிற்கும் வடநாட்டு இந்துத்துவா போக்கிற்கும் எதிரானது என்று தெரியும். ஆனால் அவற்றையும் மீறி சுய சிந்தனையின் காரணமாக பல ஆண்டுகள விசாரித்து விசாரித்து வந்த தெளிவின் காரணமாக இந்த முடிவிற்கு வந்து இந்த உலகமே சைவ சமயத்தை நலமே உணர வேண்டும் அதன் வழி வாழ வேண்டும் என்றும் நினைக்கின்றேன்.
மேலும் நான் விரும்புகின்றேனோ அல்லையோ இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த பரந்த உலகமே சைவமாக எழுந்து நல் வாழ்க்கை வாழும் என்றும் நினைக்கின்றேன். இது உலகப் பண் பண்பாட்டு வளர்ச்சியின் ஓர் நல் விளைவாக அமையும்.
இதற்குக் காரணமாக அமைந்துள்ளது திருவள்ளுவரின் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதுதான். இதுவே அறிவியல் என்ற வாழ்நெறியில் ‘நூலிய அறிவியல்’ என்ற வாழ்நெறியாகும். இது ஐரோப்பிய பொறிலிய அறிவியல் அல்ல( positive sciences). அது பாதி குருடு, வள்ளுவரின் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதொடு முற்றிலும் ஒத்துப்போகாத ஒன்று.. அங்கு ஆன்மா உண்டு இறைவன் உண்டு என்பதெற்கெல்லாம் தடை எழுப்புவதிலேயே கருத்தாக இருந்து இறையிலி கொள்கையே அறிவியல் சான்ற கொள்கை என்று பொய்வழி காட்டுவர்,
சைவன் என்றால் மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்று அந்த அறிவியல் வாழ்க்கையை வாழ்ந்து மெய்ஞானம் பெற்று உயர்கின்றவன். சிவ மூர்ஹ்த்டங்கலஓடு மற்ற இன்னும் பல மூர்த்தங்களையும் வழிபட்டு வருகின்றவன் அப்படிப்பட்ட ஓர் சைவ நான் என்ற முடிவிற்கு வந்து இந்த உலகமே என்னைப் போன்ற ஓர் சைவன் ஆக வேண்டும் என்று நினைக்கின்றவன்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ராரே த்ரிஉமூலர். அதுபோல எனது ஆர்வங்கள்
இதற்கு காரணமாக அமைந்தவர்களைப் பற்றி இந்த அறிமுகத்திலேயே சில கூறிட வேண்டும்
என் ஞானக் கண்களைத் திறந்தவர்களில் முதன்மையானவர் மெய்கண்டாரே அவரது சிவஞானபோதமே யாகும். மற்றும் இவருக்கே வழிகாட்டியாக இருந்த திருமூலர் போன்றோரும் இன்னும் மெய்கண்டார் வழிசென்று இந்த சைவ சித்தாந்தப் பெருநெறியை வளர்த்த அருணந்தி உமாபதி சிவஞான வள்ளல் கண்ணுடைய வள்லல் தத்துவபிரகாசர் சிற்றம்பல நாடிகள் என்றவாறு ஓர் பெரிய சிவஞானிகள் திருகூட்டமே இருக்கின்றது.
மேலும் இவர்கட்கெல்லாம் மூலமால விளங்கிய திருவள்ளுவர் தொல்காப்பியர் போன்றாரையும் மறக்க முடியாது,
மேலும் இவர்கக்ட்கும் மூலமாக விளங்கிய முதற் சங்கத் தமிழ் சிந்தனை சிற்பிகளாகிய சூருபாக்கு ஏண்உடுஅன்னா சூல்கி போன்றோரை நான் அறிந்த காரண கர்த்தாக்களாக நான் நீச்சயம் காட்ட வேண்டும்.
இல்லைஅயேல் வேதத்திகிருந்துதான் எல்லாம் வந்தது என்ற நீண்ட காலப் பிரசாரத்தை முறியடிக்க முடியாது. அது உண்மை அல்ல என்று நிறுத்த முடியாது.
சைவ மரபின் முதற் சங்க சிற்பிகள் இவர்கள் அல்லவா? ‘நிகழ்.நம் கல்.கல்.இன் நிகவே மெய் கல்.கல்’ என்று கூறி ‘உலகியல் கூறி மெய்பொருள் காண்பதே அறிவு ” எனும் சைவப் போக்கினை உருவாகியவர்கள் இந்த முதற் சங்கத் தமிழர்கள் தானே?
சைவ சிந்தனை பாரம்பரியம் இவ்வாறு உலகின் மிக நீண்ட மிகப் பழமையான மானிட நாகரீகத்டையே உருவாக்கிய ஓர் பாரம்பரியம் என்பதொடு சிந்தனைய சுதந்திரத்தை வளர்த்து வளர்த்து மனித பண்பாட்டையே வளர்த்த ஓர் பாரம்பரியம் ஆயிற்றே!
இதனை எல்லாம் நான் தெளிவாக உணர்ந்திருப்பதால் கூறுகின்றேன்: நான் ஓர் சைவன், இந்த பரந்த உலகமே விரைவில் தானே சைவம் ஆகிவிடும் என்று.
இனி இவற்றை எல்லாம் அடுத்தடுத்து விளக்குவதாகவே இந்த கட்டுரைத் தொடர் அமையும்
தொடரும்
உலகன்
Loga Sir,
I like that statement.. "Naan oru Saivan".If Chivam is god then Chivan is the follower of ChivamJust to be clear..Im a Saivan.. Im a vegetarian.. These two are two different statements right?Regards,Raj
__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (2) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
சைவ மரபின் முதற் சங்க சிற்பிகள் இவர்கள் அல்லவா? ‘நிகழ்.நம் கல்.கல்.இன் நிகவே மெய் கல்.கல்’ என்று கூறி ‘உலகியல் கூறி மெய்பொருள் காண்பதே அறிவு ” எனும் சைவப் போக்கினை உருவாகியவர்கள் இந்த முதற் சங்கத் தமிழர்கள் தானே?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 2 : சர்வ சுதந்திரத்துவம்
இந்தத் தலைப்பில் நான் ஏன் எழுதவேண்டும்? நிச்சயமாக சுத்த போசனம் எனும் சைவ சாப்பாட்டைப் பற்றியோ அகிம்சா தர்மத்தை வற்புறுத்தவோ இதனை நான் தொடங்கவில்லை. சுத்த போசனமாகிய சைவ சாப்பாடு எனக்குப் பிடிக்கும் ஆனால் உடம்பு தாங்காது. அகிம்சையும் எனக்கு மிகப் பிடிக்கும். என் போராட்டங்கள் எல்லாம் விவாதங்களில் தான். அந்த அளவுதான் அவற்றைப் பற்றி பேசுவேன். ஆனால் ‘இந்து’ எனக் கூறிக்கொண்டால் இப்பொழுது ‘இந்துத்துவா” ஆதரவாளன், சனாதன தர்மி வர்ணாஸ்ரம தர்மி வேதங்களே இந்து சமயத்தின் பிரமாண நூல, செங்கிருதமே மூல மொழி தெய்வ மொழி என்றெல்லாம் வெகுவாக பிரச்சாரம் நடக்க அது உண்மை அல்ல என்று எனக்கு நலமே தெரிய, நான் இந்த பொருண்மையில் ஓர் இந்து அல்ல. ஆனால் நான் வழிபடும் தெய்வம் அந்த கூத்தபிரான் ஆயிற்றே? அவன ஆடி ஆடி அல்லவோ இந்த உலகத்தையெல்லாம் நடாத்துகின்றான்? இதுவே உண்மை என்றால் நான் ‘ஓர் சைவன்’ என்றுக் கொள்வதில் அமைதி அடைகின்றேன். இதுதான் என்னைப் பற்றிய உண்மை. இப்பொழுது அதனை நான் மறுக்க விரும்பவில்லை, துணிந்து உலகே அறிய பறைசாற்றுகின்றேன். என்னோடு இன்னும் பலர் பறைசாற்ற வேண்டும் என்றும் நினைக்கின்றேன்.
சநாதன தர்மம், வேத பிரமாணம் செங்கிருதம் மூலமொழி எல்லாம் ‘நான் சைவன்’ என்பதில் அடிப்பட்டு போகின்றது. எனது வேர்கள் மூலங்கள் சுமேருத் தமிழ் எனும் முதற் சங்கத் தமிழிற்கே சென்று விடுகின்றன. சைவ சமயம் யாரோவோர் அந்நிய மக்கள் என் முன்னோர்களிடையே புகுத்திய ஒன்றல்ல. தமிழ் மொழி என்று தோன்றிற்றோ என்று தமிழ் பேசும் ஓர் மக்கள் இனம் தோன்றிற்றோ அன்றே சைவ சமயத்தின் வேர்கள் தோன்றிவிட்டதாக நினைக்கின்றேன்
இந்த மூல வேர்களே வளர்ந்து வளர்ந்து சிறந்து சிறந்து திருவள்ளுவரின் இரண்டு குறப்பாக்களாக எழுந்து என்னை சைவன் ஆக்குகின்றன.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இங்கு ஆழமான மெய்ஞானம் யாதுமில்லை--- அநாதிபொருள் இது என்றோ வாழ்க்கையின் உயர் நோக்கு இது என்றோ யாதுமில்லை, ஆயினும் எப்படி வாழவேண்டும் என்று வாழ்க்கைக்கே ஓர் வழி காட்டுகின்றது. வாழ்க்கைக்கு ஒர் அழகிய முறையியல் வடிக்கப்படுகின்றது. எப்படி?
வாழ்க்கையில் அதிகாரத்துவம் என்று யாதும் இல்லை அதிகாரி என்று யாரும் இல்லை என்று கூறி என்னை ஓர் சுதந்திரப் புருடன் ஆக்குகின்றது திருவள்ளுவம். என் அறிவு வேதங்கட்கு அடிமை இல்லை ஆகமங்கட்கு அடிமை இல்லை திருமுறைகட்கு அடிமை இல்லை திவ்விய பிரபந்தங்கட்கு அடிமை இல்லை. மற்றும் எதற்குமே அடிமை இல்லை என்று இவை உணர்ஹ்ட்துகின்றன.
நான் யார்க்குங் குடி அல்லாத சுதந்திரப் புருடன். எப்பொருளாயினும் அது யாரிடமிருந்து வந்தாலும் கேள்வி கேள் உன் ஐயங்கள் தீரும் வரை உண்மை வெளிப்படும் வரை என்று கூறும்போது, நான் சனாதன தர்மி அல்ல. வேதாகமப் பிரமாணி அல்ல. உண்மையைத் தவிர்த்து எனக்கு பிரமாணம் என்றோ அளவை என்றோ யாதும் இல்லை.
நான் சைவனாக இருந்தால் நான் எதற்கும் கட்டுப்படாது சர்வ சுதந்திரப் புருடன் என்பதொடு அந்த சுதந்திரத்தை நலமே வளர்த்தால்தான், விடாது அடங்காது அலங்காது தொடர்ந்து வினாக்களே எழாத இனிய முடிவு வரும் வரை கேட்டுகொண்டே இருந்தால்தான் மெய்ஞானம் விளையும் எனும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சைவம் என்னை அடிமை யாக்காது சுதந்திரத்தை சுயத்தை வளர்த்து வளர்த்து என்னையும் ஓர் சுதந்திரப் புருடன் ஆக்குகின்றது!
இப்பொழுது எனக்குப் புரிகின்றது ஏன் அப்பர் பெருமான் ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்ற பாடிய கையோடு, “தான் யார்க்கும் குடிஅல்லா சங்கரனைச் சார” என்று அந்த சுதந்திரத்துவத்தின் மூலம் இறைவனே என்றும் பாடினார் என்று.
எவன் தன் சுதந்திரத்தை வளர்த்து வளர்த்து அகத்தே செறிந்திருக்கும் எல்லா அடிமைத் தளைகளையும் அடையாளங்களையும் துமித்து சுத்தமாகி சுதந்திரம் ஆகின்றானோ அவனே இறைவனைச் சார்வான் எனும் போது, எனக்கு சைவம் ஆழமான ஈர்ப்பைத் தருகின்றது என்பதொடு ஐயப்பாடுகள் தயக்கங்கள் எல்லாம் போக்கி ‘நான் ஓர் சைவன்’ என்று கூறவும் வைக்கின்றது.
எனக்கு உடன் இன்னொன்றும் புரிகின்றது. இதுபோன்ற சர்வ சுதந்திரத்துவம் எல்லாருக்கும் பிடிக்காது என்றும் அவர்கட்கு யாதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுவே அவனே எல்லாம், அங்குதான் உண்மை இருக்கின்றது கேள்வி கேட்காது மறுமொழி பேசாது எவ்வாறும் ஐயப்படாது ஆழ்ந்த விசுவாசத்துடன் பற்றிகொண்டு செல்ல மோட்சம் அடைவாய் என்று யாராவது சொன்னால அவர்கட்கே அடிமையாகி அமைதியும் ஆவர்.
நான் அவர்களின் ஒருவன் அல்ல. ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு” என்றவாறு விசாரித்து விசாரித்து அகத்தே மெய்ஞானம் தானே சுடருமாறு செய்து அந்தத் தெளிலில் வாழ்வதே நல் வாழ்க்கை மெய்வாழ்க்கை என்று வாழ நான் ஓர் சைவன் ஆகின்றேன், இப்படி யார் வாழ்கின்றானோ அவனே ‘சைவன்’ என்றும் கூறுகின்றேன்.
ஆனால் உடன் ஓர் கேள்வி எழும். இதுவென்ன சைவத்திற்கு மாத்திரம் உரிய ஒன்றா? புத்தம் சமணம் வேதாந்தம் இசுலாம் சீக்கியம் கிறித்துவம் போன்ற சமயங்களுந்தான் சிந்தனை சுதந்திரத்தை வற்புறுக்கின்றனவே? என்று கேட்கலாம்.
என் அனுபவத்தில் அப்படி இல்லை என்றேப் படுகின்றது. சைவத்தில்தான் எல்லா சமயங்களையும் அலசிப் பார்த்து அவற்றின் ஆழத்தில் ஓர் உட்சமயம் இருக்கின்றது அதுவே சைவ சமயம் என்றும் எல்லா சமயங்களையும் புரிந்துகொண்டு அவற்றை ஓர் தர வரிசையில் பரபக்கம் சுபக்கம் என்றவாறும் பிறவாறும் வைக்கும் பூரண சைவம் இந்த சைவ சமயத்தில்தான் இருக்கின்றது என்பதொடு எல்லா சமயங்களையும் ஒருங்கே பார்த்து ஆனால அவற்றையெல்லாம் கடக்கும் சமயாதீதம் போற்றும் பண்பும் சைவத்தில் தான் இருக்கின்றது, வேறு சமயங்களில் இல்லை என்றே நினைக்கின்றேன்
தமிழர்களால் வளர்க்கப்ப்ட்ட திருமாலியத்திலும் இது இல்லை என்றே நினைக்கின்றேன்.
பிழை என்றால் சுட்டிக் காட்டி தக்கச் சான்றுகளோடு என்னைத் திருத்துங்கள்.
சரி அப்படியே இருந்தாலும் பாதகமில்லை, அதனையும் சைவமே பெயர் வேறாக இருந்தாலும் என்று நான் ஏற்றுக் கொள்வேன்.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 3 : இறைவனது உண்மை
நான் என் இளமைகாலத்தில் அதாவது ஓர் 18 வயது இருக்கும்போது, எனது உண்மையான இயல்பு வெளிப்பட்டு என் ஆளுமையை நிறுத்திய, ஒரு வகையில் நான் பூப்பெய்திய காலத்தில், எனது உண்மை ஆளுமை வெளிப்பட்ட காலத்தில், திராவிட இயக்க நூற்களை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் மெய்யறிவு நூற்களைக் கற்கத் தொடங்கியபோது நான் படித்த முதல் நூல் Betrand Russel அவர்களின் Logic and Mysticism எனும் நூல் தான். இதனாலேயே மெய்யறிவுத் துறையில் ஆர்வங் கொண்டு ஆனால் பிழைப்பிற்கு ஓர் வழி தேடிக்கொள்ளும் வகையில் கணிதத் துறையை தேர்ந்தெடுத்து ஓர் கணித ஆசிரியனாக வாழ்ந்துகொண்டே கணிதத்தின் மூலம் மெய்யறிவு விசாரணை செய்து வாழலாம் என்று நினைத்து அப்படியே செயல்பட்டேன்.
இப்படிபட்ட இரசல் அவர்கள் தான் Why I am Not a Christian என்ற நூலை எழுதினார். அதனையும் படித்தேன். அதேப் போல ஓர் பாரசீக அறிஞர் Why I am not a Muslim என்றவொரு நூல் எழுதியிருப்பதாகக் கேள்வி. நூலைப் பார்த்ததில்லை படித்ததில்லை, எப்படி துணிந்து இந்தத் தலைப்பில் எழுதினார் என்றும் தெரியவில்லை.
ஆனால் என்னால் இப்படி ‘நான் ஏன் ஓர் இந்து இல்லை?” ‘நான் ஏன் ஓர் சைவன் இல்லை?” என்றவாறு மறுப்புப் போக்கில் எழுத மனம் வரவில்லை, முடியவும் இல்லை.
இதற்கெல்லாம் மூல காரணம் சிவஞானபோதம் யாத்த நம் மெய்கண்டார் தான். எவ்வளவு அழகாக ஆழமாக ஏரணத் திறத்தோடு இறையுண்மையை முயற்சிப்பார் அனைவரும் காணவைக்கின்றார்? அவரை படித்து மறுத்து மறுத்து எறிந்து அவர் கோட்பாடு பிழையே என்று நிறுத்த பல ஆண்டுகளாக முயன்ற பின் முடியாது போக, நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆதிசங்கரர் இராமாநுசர் மாதவர் போன்றும் இன்னும் பலரையும் பரபக்கம் ஆக்கியதுபோன்று சிவஞானபோதத்தை பரபாக்கம் ஆக்க முடியாது சித்தாந்த உண்மையின் சுபக்கமாகக் கண்டும் கொண்டும் நானும் மெய்கண்டாரைப் போல சைவனும் ஆனேன்
மெய்கண்டார் பிரமாணமாக வேதத்தையோ ஆகமங்களையோ தேவாரத் திருமுறைகளையோ திவ்விய பிரபந்தங்களையோ காட்டவில்லை. அளவைகள் என்று பிரத்தியக்கம் அநுமானம் ஆப்தர் வாக்கு ஆகம பிரமாணம் என்றேல்லாம் யாதும் கொண்டிருக்கவில்லை. ‘பிரமா கரணம் பிரமாணம்” அதாவது பிரமா எனும் மெய்யறிவை பிறப்பிப்பதே பிரமாணம் என்று அளவை நிறுத்தி அவற்றை பிரத்தியக்கம் அனுமானம் ஆகமம் என்றவாறு நையாயிகம் பேசவில்லை,
இறைவன் உண்டென உலகை வைத்தே அனைவரையும் காண வைக்கின்றார். காண்பாருக்கு இறைவன் உண்டு எனும் உனர்வு அறிவில் எழுந்து அவனை ஆத்திகன் ஆக்கி பின் சைவ ஆக்குகின்றது. காணமுடியாதாருக்கு காண விரும்பாதவருக்கு அவன் போக்கில் அவனை விட்டு விடுகின்றது மெய்கண்டாரின் அணுகுமுறை.
அப்படி சிவஞான போத்தில் என்ன தான் செய்கின்றார்?
முதற் சூத்திரத்தைப் பாருங்கள்:
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
(இவ்வுலகு) தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து,
உளதாம் (அருளின்)அந்தம் ஆதி(யே முதல்) என்மனார் புலவர்
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
(அடையில் இருப்பன, தோன்றாது தொக்கு நிற்பன. தெளிவின் பொருட்டு வெளிப்படையாக நான் எழுதி உள்ளேன்)
இங்கு ஆதிசங்கரரைப் போன்று அது இதுவெனத் தோன்றும் இந்த உலகம் ஓர் கற்பிதம் அத்தியாசம் ஆரோபிதம் கயிற்றை பாம்பென பார்ப்பது போன்ற மருள் காட்சிகளால் வருவது என்று கூறாது சுட்டுணர்வாய் நம் அறிவிற்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் சுட்டுணர்வாய் அவன் அவள் அது அவை என்றெல்லாம் உயர்திணை அஃறிணை என விளங்கும் இந்த உலகம் தனித்தும் தொகுப்பாயும் தோன்றி நின்று அழிகின்றதே அது எவ்வாறு என்று கேட்டு, அதற்கு மூலமாக் அழிக்கின்ற மலம் இருக்க அதனையும் சங்கரிக்கும் சத்தியாக இறைவன் இருக்கின்றான் என்றல்லவா கூறுகின்றார்?
இங்கு உலகை வைத்து இறைவன் இருப்பதை அநுமானித்து அறி என்றவாறு அனுமானம் கூறவில்லை,
உலகை வைத்து அதனை புறவுரு புதையுரு எனும் இரட்டுருவில் நூலாகக் காணவைத்து, புதையுருவாக இறைவன் இந்த உலகத்தில் உள்ளேயுள்ளே ஆழத்தில் உள்ளான், கண்டு கொள் என்கின்றார். நம்பிக்கை வை என்று கூட கூறவில்லை, காண்டிகை உரை எழுதி கண்டுகொள் என்றுதான் வற்புறுத்துகின்றார்.
உலகத்தை வைத்தே இறைவனைக் காணமுடியும் என்கின்றார். ஆக இங்கு அவர் செய்வது கண் விழிப்பிப்பது. பொறிலியப் பார்வையின் சுட்டுணர்வுப் போற்றி பின் நூலியப் பார்வையின் புதையுருவின் இறைவனக் காணலாம் என்கின்றார்.
ஆக மெய்கண்டார் பயிலும் உத்தி ‘கண் விழிப்பித்தல்’ எனும் உத்தியாகும். இதுதானே தொல்காப்பியர் மரபியலில் விளக்கும் காண்டிகை உரையின் மாண்பும் ஆகும்?
ஓர் கருத்தினை தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி பிறருங் கண்டு உடன்பட வைப்பதுதான் காண்டிகை உரை. இதுவே நூலிய அறிவியலும் ஆகும்.
ஆக இறைவன் உண்டு வேதம் ஆகமம் தேவாரம் திவ்விய பிரபந்தம் போன்ற இருடிகள் சிவாச்சாரியார்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வாக்கு அதுதான் கூறுகின்றது ஆகவே இறைவன் உண்டென நம்பு அந்த நம்பிக்கையில் வாழ் என்று கூறவில்லை, இந்த உலகை வைத்து அங்கு உயர்திணை என்றும் அஃறிணை என்றும் தோன்றி நிற்கும் பொருள்கள் எல்லாம் அழிந்துபோங் காலமும் வரும் போது அழிகின்றன ஒருவாறு மீண்டும் தோன்றுகின்றன. ஆக அழிக்கின்றதாக ஓர் சத்தி (மலம்) இருக்க ஆக்குகின்றதாக மீண்டும் அவற்றை உலகில் இருப்பதாகத் தோற்றும் ஓர் சத்தியும் இருக்கின்றது அதுவே இறைவன் உண்டெனக் கண்டு கொள் என்று கூறுகின்றார்,
உலகை வைத்தே அங்கு நடக்கும் சனன மரண கூத்தாட்டத்தைக் கண்டே இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் அந்த கூத்தப்பிரானை என்னால் நலமே காணமுடிகின்றது. ஆகவே இறைவன் உண்டு என்பதொடு அவன் ஓர் கூத்தன் என்றும் எனக்குத் தெளிவாக நான் மிக உறுதியாக எந்த ஐயப்பாடும் இன்றி ஓர் சைவன் ஆகின்றேன், உலகிற்கும் இதனை பறை சாற்றுகின்றேன் ஓர் ஐம்பது வருட அலசல்கட்குப் பிறகு!
ஆயினும் உடன் ஓர் கேள்வி எழுகின்றது. அறிவியல் சிறந்து விளங்கும் ஐரோப்பியர்களை விஞ்சியா இந்த மெய்கண்டார் எனும் தமிழன் ஓர் அறிவியல் அணுகுமுறையில் ஐரோப்பியர்கள் சாதிக்க முடியாத ஓர் அழகிய அறிவியலை சாதித்துவிட்டார்?
ஆம் அவர் நூலிய அறிவியல் வளர்த்து சமய வாழ்க்கையையே ஓர் அறிவியல் ஆக்கியுள்ளார். மிகவும் வியப்பான இதனை அடுத்து விளக்க இருக்கின்றேன்
உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 4 : நூலிய அறிவியல்
அறிவியல் என்றாலே உடன் நமக்கு ஐரோப்பியர்களின் பல அற்புதமான தொழில் நுட்பக் கலைகட்கு வித்திட்ட பொறிலிய அறிவியல்தான் நினைவிற்கு வரும். உடன் சிலர் தமிழர்களிடையேயும் இதுபோன்ற அறிவியல் கலைகள் என்றுமென்று பல சான்ருகளைத் தருவர். இவற்றை நாம் மறுக்க வேண்டியதில்லை. வான சாத்திரத்தையே ஓர் அற்புதமான அறிவியல் துறையாக வளர்த்தவனே முதற்சங்கத் தமிழனாகிய சுமேருத் தமிழன் தான். காணுதற்குரிய பல கருவுக்களோடு கோயில்களளயே அய்வுக்கலமாஅக்க் கொண்டு வின்னை அலந்தவன் அவந்தானே. ஓர் வருடத்தி 365 நாட்கள் என்றும் ஓர் நாளுக்கு 24 மணி நேரங்கள் என்றும் ஒரு மணிக்கு 60 நிமிடங்கள் என்றால காலத்தைஅயே கணக்கிட்டவன் அவனதானே. எண்களுக்கு சூன்யத்திற்கு உடபட வரிவடிவம் தந்தவன் அவனதானே? அவனே வேளண்மையையும் ஓர் அறிவியல் துறையாக வளர்த்ததொடு மொழிக்கும் வரிவடிவம் அமைத்தவனும் அவனதான். இன்றும் வளரும் சித்த மருத்துவம் நல்லார் கையில் நல்லவொரு அறிவியல் துறைதான். ஆழமான மிக நுட்பமான தொழிநுடப அறிவு இல்லைஅயேன்றால் ஆயிரமாண்டுகட்கு மேள் அழியாது நிற்கும் கருங்கற் கோயில்களை கலை அழகோடு எழுப்ப முடியுமா?
ஆனால் ஐரோப்பியர்கள் வளர்க்காத , இன்றும் அது இருப்பதை உணர்ந்தாலும் அதனை வளர்க்க அஞ்சுபவர்களாக இருக்கும்போது தமிழர்கள் தொல்காப்பியர் காலத்திலேயே நலமே வளர்த்துள்ள ஓர் அறிவியல் துறையே நூலிய அறிவியல் என்பது. இதனைத்தான் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் நூன்னெறி என்கின்றார். இதுவரை அதற்கு சரியான உரை அமையவில்லை,
ஐரோப்பிய பொறிலிய அறிவியல்(positive sciences) ஓர் குருட்டு அறிவியல், அதன் கண்களுக்கு இறைவன் ஆன்மா போன்றவை தென்படாது. இதுவரை அவர்கள் உலகில் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து சனனமரணம் கூத்தாடும் இறைவனை உண்டென உணர்த்த ஓர் கருவியை கண்டு பிடிக்கவில்லை, இந்த உடம்பில் நலமே உயிர்த்து பலவாறு இயங்கும் ஆன்மாவை படம்பிடித்து உண்டெனக் காட்ட இதுவரை எந்த கருவியையும் கண்டு பிடிக்கவில்லை.
அவர்களால் கண்டு பிடிக்கவும் முடியாது. காரணம் அவர்கள் ‘பார்வை’ என்றால் ஐம்புலன்களால் அதன் விருத்தியாகிய பூதக்கண்ணாடி நுண்பெருக்கி தொலைநோக்கி போன்ற கருவிகளால் அமையும் பார்வை அவற்றால் காணக்கூடிய பொருட்களே பொருட்கள் என்றவாறு ஓர் குறைபாடுடைய பொருட்கொள்கைக் கொண்டிருப்பததுதான். ஐரோப்பிய அறிவியலாளர்கள் தாம் அஞ்ஞானிகள் என்ற அறியாதத் திமிரின் அற்ப அஞ்ஞானிகள்.
அவர்கள் பொருளதிகாரம் சடப் பொருட்களையே பொருட்களாக உடைய ஓர் பெருங்குறைபாடுடைய பொருள் உலகமாகும். சைவத்தின் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்று கூறவே முடியாத ஆகவே நாந்திப் பொருளியலே கூறமுடியாத மிகவும் குறைபாட்டுள்ள் ஆகவே ஓர் குருட்டுப் பொருளதிகாரமே அவர்கள் பொருட்கொள்கை.
இப்படிபட்ட வல்லியக் குருடர்களாக இருந்துகொண்டு அவர்கள் மெய்ஞானம் பகரமுடியும்?
முடியவே முடியாது என்று சொல்லத் தயங்குகின்றான் இன்றைய அஞ்ஞானத் தமிழன். தமிழை இழந்து தமிழனின் அற்புத அறிவியல் சிந்தனையின் ஆழத்தை இழந்து, பொற்காசுகள் குவிந்து கிடக்கும் ஓர் பெருங்குகையின் மேலே ஞான வறியனாய் குடிசைக் கட்டிக் கொண்டு அதில் ஞானபிச்சைக்காரனாக வாழ்கின்றான். உலகிற்கே நல்வழி காட்ட வல்ல அற்புத ஞானத்தை தன மொழியில் பாரம்பரியத்தில் வைத்துக்கொண்டு அதனையெல்லாம் அறவே உணராத அஞ்ஞானியாகத் திரிகின்றான் புலம்புகின்றான் இருக்கின்ற முன்னோர்களின் கண்டுபிடிப்புக்க்ளையும் அழிக்கின்றான, அவமதிக்கின்றான்.
இந்த உலக நாகரீக்கத்திற்கு வித்திட்ட இந்த தமிழையே மறந்து வருகின்றானே? அவனது மடமையை என்ன சொல்வது?
தமிழ் கண்டது வளர்த்தது பொறிலிய அறிவியலையும் அகப்படுத்தி ஆனால் அதற்கு மேலும் செல்லும் நூலிய அறிவியல் ஆகும்( Hermeneutic Sciences). ஐரோப்பாவில் ஜெர்மானிய அறிஞர் Dilthey என்பார் சென்ற நூற்றாண்டில் ‘ வரலாறு ஓர் அறிவியல் துறை” என்றவாறும் Human Sciences என்றவாறும் இந்த தொல்காப்பிய நூனெறியைத்தான், நூலிய அறிவியலைத் தான் அறிமுகப்படுத்தப் பார்த்தார் ஆனால் தோற்றார்.
ஆனால் தமிழர்கள் அதனை வளர்த்து வளர்த்து சமய வாழ்க்கையையே ஓர் நூலிய அறிவியல் ஆகவே ஓர் அறிவியல் துறை ஆக்கி விட்டார்கள். இவ்வகையில் உலகிற்கே நல்லவோர் வழிகாட்டியாக விளங்குகின்றார்கள்.
இதன் அடிப்படையே ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் கோட்பாடுதான். அறிவியல் என்றால் ஐம்புலன்களுக்கு ஆளாகுவதுதான் பொருள் என்று கூறி அறிவினை மடகும் முடக்கும் உலோகாயத அறிவியல் அல்ல தமிழர்களின் அறிவியல்.ஐம்புல அறிவுகட்கு எட்டாத ஆனால் அதனையும் உள்ளடக்கிய மேலான பார்வைகட்கு காணவரும் பொருட்களும் உண்டு , பொறிலியப் பார்வைக்கு மேலாகிய நூலியப் பார்வை நுதலியப் பார்வைகளும் அப்பார்வைகட்கு காணவரும் சித்துப் பொருட்களாகிய ஆன்மாக்கள் அவற்றை நலமே செலுத்தும் தெய்வ சத்திகள், இந்த சத்திகட்கே பெரும்சத்தியாக விளங்கும் இறைவன் என்றெல்லாம் பொருட்கள் உண்டு என்றவாறு குறைபாடில்லாதவோர் பொருளுலகை தனது பொருள்திகாரமாக கொண்டு தமிழன் தனது பொருளறிவை வளர்த்து அதற்குத் தக தன் வாழ்க்கையை பண்பாட்டை செப்பம் செய்துள்ளான். வாழ்க்கைஅயையே திருநெறியாக் வடித்துள்ளான்.
இதில் சைவ சித்தாந்தம் வளர்த்த சைவம் சிறந்தோங்கிச் சுடர்வதால், என் கண்களைத் திறந்து பொறிலியப் பார்வையோடு நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை தூல பஞ்சாக்கரப் பார்வை சூக்கும பஞ்சாக்கர பார்வை மகேசுரப் பார்வை காலாதீதப் பார்வை பேரருட்பார்வை என்றவாறு இதுவரை என்னுள் இருப்பதாக ஆனால் வெளிப்படாதே இருப்பதாக உணர்த்தி என் கண்கட்கு விழிதிறப்பு செய்தவாறு இருக்கும் இந்த சைவ சித்தாந்த நெறியை எப்படி என்னால் புறகணிக்க முடியும்?
முடியாது போகவேதான் நான் உரக்க உரக்க கூறுகின்றேன்: நானோர் சைவன், நீங்களும் என்னைப்போல் ஓர் சைவன் ஆகுங்கள் இறைவனை கூத்தபிரனாகக் கண்டு மகிழுங்கள் என்று! எனது பார்வையை விரித்து விரித்து அகலமாக்கி குடைந்து குடைந்து ஆழமாக்கி காணாததை எல்லாம் கண்டு அஞ்ஞானம் போக்கும் அந்த நுதல்விழி நாட்டஹ்ட்து இறைவனை தொழுது வணங்கி அவனை அடையுங்கள் மகிழுங்கள் என்கின்றேன்.
இது ஒர் மதவெறியின் சமய பிரச்சாரம் அல்ல. உண்மை இதுதான் என்று அந்த உணமையைக் காண்பதே அறிவியல் என்று, அறிவியலாளர் ஆகுங்கள் மெய்யறிவுப் பெற்று உய்யுங்கள் என்றுதான் நலவழி காட்டுகின்றேன். இது மதவெறி அல்ல மற்று அது தோன்றாதொழிக்கும் அறிவு வெறியாகும்
இந்த வெறி பொல்லாத வெறி அல்ல மாறாக நல்லார் நன்னெறி நல்ல வெறியுங் கூட
நான் காட்டத்தான் வேண்டும் யான் பெற்ற இனபத்தை யான் மாத்திரம் மகிழ்வது சுயநலம். அந்த சுயநலம் எனக்கில்லை,
உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 4a : நூலிய அறிவியல் (பிழை திருத்தியப் பதிவு)
அறிவியல் என்றாலே உடன் நமக்கு ஐரோப்பியர்களின் பல அற்புதமான தொழில் நுட்பக் கலைகட்கு வித்திட்ட பொறிலிய அறிவியல்தான் நினைவிற்கு வரும். உடன் சிலர் தமிழர்களிடையேயும் இதுபோன்ற அறிவியல் கலைகள் உண்டு என்று பல சான்றுகளைத் தருவர். இவற்றை நாம் மறுக்க வேண்டியதில்லை. வான சாத்திரத்தையே ஓர் அற்புதமான அறிவியல் துறையாக வளர்த்தவனே முதற்சங்கத் தமிழனாகிய சுமேருத் தமிழன் தான். காணுதற்கு உதவும் பல கருவிகளோடு கோயில்களையே ஆய்வுக்களமாகக் கொண்டு விண்ணை அளந்தவன் அவன் தானே. ஓர் வருடத்தில் 365 நாட்கள் என்றும் ஓர் நாளுக்கு 24 மணி நேரங்கள் என்றும் ஒரு மணிக்கு 60 நிமிடங்கள் என்றும் காலத்தையே கணக்கிட்டவன் அவன் தானே. எண்களுக்கு சூன்யத்திற்கு உட்பட வரிவடிவம் தந்தவன் அவன் தானே? அவனே வேளாண்மையையும் ஓர் அறிவியல் துறையாக வளர்த்ததொடு மொழிக்கும் வரிவடிவம் அமைத்தவனும் அவனதான். இன்றும் வளரும் சித்த மருத்துவம் நல்லார் கையில் நல்லவொரு அறிவியல் துறைதான். ஆழமான மிக நுட்பமான தொழில்நுடப அறிவு இல்லையென்றால் ஆயிரமாண்டுகட்கு மேல் அழியாது நிற்கும் கருங்கற் கோயில்களை கலை அழகோடு எழுப்ப முடியுமா?
ஆனால் ஐரோப்பியர்கள் வளர்க்காத, இன்றும் அது இருப்பதை உணர்ந்தாலும் அதனை வளர்க்க அஞ்சுபவர்களாக இருக்கும்போது தமிழர்கள் தொல்காப்பியர் காலத்திலேயே நலமே வளர்த்துள்ள ஓர் அறிவியல் துறையே நூலிய அறிவியல் என்பது. இதனைத்தான் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் நூன்னெறி என்கின்றார். இதுவரை அதற்கு சரியான உரை அமையவில்லை,
ஐரோப்பிய பொறிலிய அறிவியல்(positive sciences) ஓர் குருட்டு அறிவியல், அதன் கண்களுக்கு இறைவன் ஆன்மா போன்றவை தென்படாது. இதுவரை அவர்கள் உலகில் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து சனனமரணக் கூத்தாடும் இறைவனை உண்டென உணர்த்த ஓர் கருவியை கண்டு பிடிக்கவில்லை, இந்த உடம்பில் நலமே உயிர்த்து பலவாறு இயங்கும் ஆன்மாவை படம்பிடித்து உண்டெனக் காட்ட இதுவரை எந்த கருவியையும் கண்டு பிடிக்கவில்லை.
அவர்களால் கண்டு பிடிக்கவும் முடியாது. காரணம் அவர்கள் ‘பார்வை’ என்றால் ஐம்புலன்களால் அதன் விருத்தியாகிய பூதக்கண்ணாடி நுண்பெருக்கி தொலைநோக்கி போன்ற கருவிகளால் அமையும் பார்வை அவற்றால் காணக்கூடிய பொருட்களே பொருட்கள் என்றவாறு ஓர் குறைபாடுடைய பொருட்கொள்கைக் கொண்டிருப்பததுதான். ஐரோப்பிய அறிவியலாளர்கள் தாம் அஞ்ஞானிகள் என்ற அறியாதத் திமிரின் அற்ப அஞ்ஞானிகள்.
அவர்கள் பொருளதிகாரம் சடப் பொருட்களையே பொருட்களாக உடைய ஓர் பெருங்குறைபாடுடைய பொருள் உலகமாகும். சைவத்தின் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்று கூறவே முடியாத ஆகவே அநாதிப் பொருளியலே கூறமுடியாத மிகவும் குறைபாடுள்ள ஆகவே ஓர் குருட்டுப் பொருளதிகாரமே அவர்கள் பொருட்கொள்கை.
இப்படிப்பட்ட வல்லியக் குருடர்களாக இருந்துகொண்டு அவர்கள் எப்படி மெய்ஞானம் பகரமுடியும்?
முடியவே முடியாது என்று சொல்லத் தயங்குகின்றான் இன்றைய அஞ்ஞானத் தமிழன். தமிழை இழந்து தமிழனின் அற்புத அறிவியல் சிந்தனையின் ஆழத்தை இழந்து, பொற்காசுகள் குவிந்து கிடக்கும் ஓர் பெருங்குகையின் மேலே ஞான வறியனாய் குடிசைக் கட்டிக் கொண்டு அதில் ஞானபிச்சைக்காரனாக வாழ்கின்றான். உலகிற்கே நல்வழி காட்ட வல்ல அற்புத ஞானத்தை தன மொழியில் பாரம்பரியத்தில் வைத்துக்கொண்டு அதனையெல்லாம் அறவே உணராத அஞ்ஞானியாகத் திரிகின்றான் புலம்புகின்றான் இருக்கின்ற முன்னோர்களின் கண்டுபிடிப்புக்க்ளையும் அழிக்கின்றான், அவமதிக்கின்றான்.
இந்த உலக நாகரீக்கத்திற்கு வித்திட்ட இந்த தமிழையே மறந்து வருகின்றானே? அவனது மடமையை என்ன சொல்வது?
தமிழ் கண்டது வளர்த்தது பொறிலிய அறிவியலையும் அகப்படுத்தி ஆனால் அதற்கு மேலும் செல்லும் நூலிய அறிவியல் ஆகும்( Hermeneutic Sciences). ஐரோப்பாவில் ஜெர்மானிய அறிஞர் Dilthey என்பார் சென்ற நூற்றாண்டில் ‘ வரலாறு ஓர் அறிவியல் துறை” என்றவாறும் Human Sciences என்றவாறும் இந்த தொல்காப்பிய நூனெறியைத்தான், நூலிய அறிவியலைத் தான் அறிமுகப்படுத்தப் பார்த்தார் ஆனால் தோற்றார்.
ஆனால் தமிழர்கள் அதனை வளர்த்து வளர்த்து சமய வாழ்க்கையையே ஓர் நூலிய அறிவியல் ஆகவே ஓர் அறிவியல் துறை ஆக்கி விட்டார்கள். இவ்வகையில் உலகிற்கே நல்லவோர் வழிகாட்டியாக விளங்குகின்றார்கள்.
இதன் அடிப்படையே ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் கோட்பாடுதான். அறிவியல் என்றால் ஐம்புலன்களுக்கு ஆளாகுவதுதான் பொருள் என்று கூறி அறிவினை மடக்கும் முடக்கும் உலோகாயத அறிவியல் அல்ல தமிழர்களின் அறிவியல். ஐம்புல அறிவுகட்கு எட்டாத ஆனால் அதனையும் உள்ளடக்கிய மேலான பார்வைகட்கு காணவரும் பொருட்களும் உண்டு , பொறிலியப் பார்வைக்கு மேலாகிய நூலியப் பார்வை நுதலியப் பார்வைகளும் அப்பார்வைகட்கு காணவரும் சித்துப் பொருட்களாகிய ஆன்மாக்கள் அவற்றை நலமே செலுத்தும் தெய்வ சத்திகள், இந்த சத்திகட்கே பெரும்சத்தியாக விளங்கும் இறைவன் என்றெல்லாம் பொருட்கள் உண்டு என்றவாறு குறைபாடில்லாதவோர் பொருளுலகை தனது பொருளதிகாரமாக கொண்டு தமிழன் தனது பொருளறிவை வளர்த்து அதற்குத் தக தன் வாழ்க்கையை பண்பாட்டை செப்பம் செய்துள்ளான். வாழ்க்கையையே திருநெறியாக வடித்துள்ளான். தமிழையே திருநெறித் தமிழாக வளர்த்துள்ளான்.
இதில் சைவ சித்தாந்தம் வளர்த்த சைவம் சிறந்தோங்கிச் சுடர்வதால், என் கண்களைத் திறந்து பொறிலியப் பார்வையோடு நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை தூல பஞ்சாக்கரப் பார்வை சூக்கும பஞ்சாக்கர பார்வை மகேசுரப் பார்வை காலாதீதப் பார்வை பேரருட்பார்வை என்றவாறு இதுவரை என்னுள் இருப்பதாக ஆனால் வெளிப்படாதே இருப்பதாக உணர்த்தி என் கண்கட்கு விழிதிறப்பு செய்தவாறு இருக்கும் இந்த சைவ சித்தாந்த நெறியை எப்படி என்னால் புறகணிக்க முடியும்?
முடியாது போகவேதான் நான் உரக்க உரக்க கூறுகின்றேன்: நானோர் சைவன், நீங்களும் என்னைப்போல் ஓர் சைவன் ஆகுங்கள் இறைவனை கூத்தபிரானாகக் கண்டு மகிழுங்கள் என்று! எனது பார்வையை விரித்து விரித்து அகலமாக்கி குடைந்து குடைந்து ஆழமாக்கி காணாததை எல்லாம் கண்டு அஞ்ஞானம் போக்கும் அந்த நுதல்விழி நாட்டத்து இறைவனை தொழுது வணங்கி அவனை அடையுங்கள் மகிழுங்கள் என்கின்றேன்.
இது ஒர் மதவெறியின் சமய பிரச்சாரம் அல்ல. உண்மை இதுதான் என்று அந்த உணமையைக் காண்பதே அறிவியல் என்று, அறிவியலாளர் ஆகுங்கள் மெய்யறிவுப் பெற்று உய்யுங்கள் என்றுதான் நல்வழி காட்டுகின்றேன். இது மதவெறி அல்ல மற்று அது தோன்றாதொழிக்கும் அறிவு வெறியாகும்
இந்த வெறி பொல்லாத வெறி அல்ல நல்லாரின் நல் வெறி.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 5 : நூலிய அறிவியல் 2
நூலிய அறிவியல் என்ற கருத்து என்னை நெருங்கி இருப்பவர்கட்கும் பன்முறை விளக்கியும் முற்றாக புரிந்துகொள்ள முடியாத ஓர் கருத்தாகவே இருக்கின்றது, ஆயினும் தமிழப் பண்பாட்டின் அதன் மிகச் சிறந்த படைப்பாகிய சைவ சித்தாந்தத்தின் சிறப்புக்களை, பாரத அளவில் மாத்திரம் அன்றி உலகளாவிய நிலையில் கண்டு மகிழ்வது தேவைப்படும் ஒன்று. இதுவே விளக்கொளியைக் கண்டு விழும் விட்டில்பூச்சிகளைப் போல நமது சுயத்தை இழந்து ஆங்கில மோகம் ஐரோப்பிய மோகம் அந்நிய மத மோகம் போன்ற மோகங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் மருந்து.
பண்டே நம் பண்பாட்டில் இந்த குறைபாடு உண்டு. அந்நிய மோகம் நம்மை மயக்க நாம் விழுந்து தடம் புரண்டு சென்று பிறகு தெளிவு பிறக்க சிலர் துணிந்து போராடி சுயத்தை மீட்ட கதைதானே நம் கதை?
இன்றும் அதுதான். அந்நிய மத மயக்கு இந்துத்துவா மயக்கு வேதாந்த மயக்கு என்றவாறு பல மயக்குகளில் அகப்பட்டு மாட்டிகொண்டு சுயத்தை இழந்து சினிமா போதையிலும் மது போதையிலும் அதிகார போதையிலும் அரசியல் போதையிலும் இன்னும் இதுபோன்ற பல போதைகளிலும் வீழ்ந்து கிடக்கின்றோம். நாம் சைவம் வளர்த்த சோழத் தமிழர்கள் அல்ல. இருந்த நல்லதையெல்லாம் இழந்துகொண்டிருக்கின்ற பலவகையான போதைப் பித்தர்கள், உலகமே மாயை என்று மாயாவாதம் பகரும் வேதாந்திகள். உள்ள உலகை உள்ளவாகக் காண முடியாது அதனின்று பலவாறு ஓடிவிட முயற்சிக்கின்ற கோழைகள்.
ஒவ்வொருவனும் தன்னையேத் தான் யார் என்று அறியத்தரும் இந்த நூன்னெறி பண்டே பழக்கத்தில் இருந்த ஒன்று எனினும், மெய்கண்டார் தனது சிவஞானபோதத்தில் மீட்டெடுத்து வேதியர்களாகிய உமாபதி தீக்கிதரையும் அவர் குரு சாமவேதப் பாரம்பரியத்தில் உதித்த மறைஞான சம்பந்தன் என்ற பெரியவரையும் சைவ சித்தாந்தி ஆக்கினார் என்பதொடு சைவ ஆதீனங்கள் பல தோன்றி வளர்வதற்கும் காரணமாகிவிட்டார்.
நூனெறி ஓர் அறிவியல் நெறி. யார் எந்த சமயத்தை சேர்ந்திருந்தாலும் எந்த மரபின் வழி வந்திருந்தாலும், உண்மைநெறி அறிவியல் நெறியாகிய நூனெறி இதுவே என்று அறிந்தபின் அவர்கள் சைவ சித்தாந்தி ஆகிவிடுவர் என்பதையே இது உணர்த்துகின்றது. புத்தனாவது சமணனாவது வேதியனாவது வேதாந்தியாவது மெய்ஞானம் பெற நூன்னெறி எனும் அறிவியல் நெறியைத் தேர்ந்து விட்டால் அவன் ஓர் சைவ சித்தாந்தி ஆகிவிடுகின்றான்.
உண்மை எனும் உணர்வு தன்னுள் கொண்டிருக்கும் ஓர் ஈர்ப்பினால் வன்மையால், சிந்திக்கின்ற எவனும் எவ்வளவுதான் சுகமாக இருந்தாலும் பொய்யான கற்பிதங்களில் நெடுங்காலம் இருக்க மாட்டான். காலம் வர தன்னையேத் தான் தனது செருக்கால் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்ந்து பொய்வழி கடிந்து மெய்வழி தேர்ந்து சைவ சித்தாந்தி ஆகிவிடுவான்.
நான் பல வித்தைகள் பயின்று பெரும்பொருட் செலவில் பலவகையான பிரச்சாரங்கள் செய்ய வேண்டியதில்லை. உண்மை இது என்று நான் உணர்ந்ததை நன்றாக தெளிவாக உலகோர் அறிய உணர்த்திக்கொண்டிருந்தால் போதுமே?
மெய்கண்டாரோ அவரை போற்றும் சைவ ஆதினங்க்ளோ எனக்கு சைவ பிரச்சாரம் செய்ய வில்லை, யானே சிவஞானயோகிகளின் சிவஞானபாடியம் கற்று அதன் வழி சிவஞானபோதம் அறிய வந்து அதனோடு கடுமையாகப் போரிட்டு முடிவில் அங்குதான் உண்மை நெறி இருக்கின்றது அதுவே நூலிய அறிவியல் நெறி என்று அறிந்து உடன்பட்டு அடங்கினேன். மெய்வழி கண்டேன். தொடர்ந்து என் மெய்ஞானப் பயணத்தில் இறையருள் மீண்டும் உதவ மாபெரும் ஞானநூலாக நூலிய அறிவியல் பனுவலாக அழிவிலுண்மை எனும் நூலை எழுதி அதனைவிட இன்னும் அரிய ஞானப்பணியாகிய ஏரணவுரையும் எழுதினேன்
இந்தப் பெரு நூலில் முடிவான பகுதியாக ‘ஏரணவியல்’ என்றவோர் இயலையே விளக்கியிருக்கின்றேன். இது தொல்காப்பியத்தில் விளங்கும் காண்டிகை என்ற பெயரில் விளக்கப்படும் ஏரணவியலை மீட்டெடுத்து விளக்குவதாகும்.
அதன் முதல் சூத்திரம் இவ்வாறு செல்லும்:
சூத்திரம் 25. இயலிய நூலியம்
அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்
பொருளை இரட்டுருவிற் காட்டி யகத்தே
இலங்கிடு மறியாமை இருளைப் பாரிடும்
ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.
இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , அறிவுகளாக உணர்வுகளாக அனுபவிப்பதற்குக் காரணமாக நிற்கும் அனைத்தும், ஓர் நூலினைப் போல இருப்பதின், ஒற்றுமை நயத்தின் நூலெனவேப் படும் என்பதையும், அதனின் பொருளுணர்வினைப் பயப்பிக்கும் அது புறவுரு புதையுரு எனும் இருவகையுருவில் பயப்பிக்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். மேலும் புறவுரு தெளிவாக இருக்க, புதையுருவாக நிற்பது , புதைநிலை போக்கிடுவகையில் அகத்து இருப்பதாகத் தெரியவரும் அறியாமை இருளைப் பாரிடும் வகையில் தகுந்த உத்திகள் பெய்யுமாறும் அது தூண்டியும் நிற்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இதனின் மெய்யறிவாய்வின் மூலவூக்கத்தின் தோற்றுவாயும் விளக்கப்பட்டவாறு. நூலென வொன்று வெளிப்பட்டு ஆன்மாவைக் கவ்வி நிற்க அது அறிவிலாகி அகத்துச் செறிந்திருக்கும் அறியாமைத் துன்னிருளை உணருமாறு படுத்த, அதனின் உண்மைதான் யாதென்று அறியப்புகும் ஞானவேட்கை எழும் என்பது.
உலகம் இப்படிப்பட்ட இரட்டுருவின் ஓர் நூல். அதன புறவுரு அவன் அவள் அது எனும் அவை மூவினைப்படுவது, அதன் புதையுரு ஆணவ மலமும் அதனை சங்கரிக்கும் இறைவனும் ஆகும்.
புறவுருவை அறிந்து புதையுருவை தெள்ளிதாக அறியாதிருக்க, என்னுள் அஞ்ஞான் இருள் இருக்கின்றது என்று உணரவும் எழும்படிச் செய்கின்றேன். அகத்துச் செறி இந்த ஞான அந்தகாரம் என்னுள் செறிந்திருப்பதை நான் உனர்ந்தவுடன் அதனை போக்க வேண்டுமே என்றவோர் வேகம் எழ, நான் ஓர் தத்துவஞானி ஆகின்றேன். எனது அறியாமைத் துன்னிருள் ஏன் ஏன்னுள் எப்படி எல்லாம் என்று விசாரித்து மெதுவாகத் தெளிந்து பதியினைப் போல பசு பாசம் அநாதி என்ற மாபெரும் ஞானத் தெளிவிற்கும் வந்து சைவ சித்தாந்தியாக ஓர் மன உறுதியுடன் எழுகின்றேன்.
இந்த உறுதி அகத்தே மெய்ஞானம் சுடர்வதால் வருவது. பழையவோர் தமிழப் பாரம்பரியத்தை மிண்டும் கண்டுவிட்டோமே என்றவோர் பெருமையால் செருக்கால் வருதல்ல. உண்மையில் நிற்கின்றேன், ஐயங்கள் திரிபுகள் யாதும் தோன்றா தெள்ளறிவின் ஒளிப் பிரகாசாகத்தில் ஓர் தேசிகனாக சுடர்கின்றேன் என்று என்னையே நான் அறிந்திட வருவதால் வரும் உவப்போடு வரும் அசைக்க முடியாத வைரவுறுதி யாகும்
Rene Descartes என்ற பரங்கி தத்துவஞானி சொன்னாரே apodictic certainty என்ற அந்தத் தெளிவுதாம். இவர் தனது meditations வழியாக சாதிக்க முயன்றதை மெய்கண்டார் 13ஆம் நூற்றாண்டிலேயே சாதித்துவிட்டதோடு இந்த டேகார்ட்டும் சரி மற்றும் ஏனைய ஐரோப்பிய தத்துவஞானிகளும் சரி சாதிக்காத ஆழத்தையும் விரிவையும் மெய்கண்டார் அன்றே சாத்தித்துவிட்டார்.
இவை எல்லாம் பிறகு விளக்கப்படும்
இதுவே என்னை துணிந்து உலகே அறிய ‘நானோர் சைவன்’ என்று பறைசாற்றவும் செய்கின்றது, தெளிவு இருக்க துணிவும் வருகின்றது.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 6 : வள்ளுவர் ஓர் சைவனே!
திருவள்ளுவரின் நூன்நெறியைப் புரிந்துகொள்ளாது அவரை சமணன் என்றும் கிறுத்துவ சமயத்தின் வழி சென்றவர் என்றும் இன்னும் பலவாறும் பலர் கூறுவர். இவை எல்லாம் எனக்கு வியப்பாகவே இருக்கின்றது. ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு” என்பவரை எப்படி ஓர் வரம்புடைய கோட்பாடுகளின் அதிகாரத்துவ மறை நூற்களின் ஓர் சமயவாதியாக, ஓர் சமயகணக்கராகக் கொள்ள முடியும்?
நூலிய அறிவியல் வழி சென்றவர் எந்த சமயத்தையும் சேராதவராகத் தானே இருக்க முடியும்?. ஆனால் அவர் இறைவன் உண்டென்றும் ஆன்மாக்கள் உண்டென்றும் அவை வீடுபேறு நோக்கி உழல்கின்றன என்றும் கூறுகின்றாரே ஆக அவரும் ஓர் சமயவாதியாகத்தானே இருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஆம திருவள்ளுவர் இறைவன் உண்டு ஆன்மா உண்டு என்று கூறும் ஓர் ஆத்திகர் தான் ஆனால் ஓர் மதவாதி அல்ல. அவர் சைவம் கூறும் சமயாதீதவாதி! ஆக ஓர் சைவர்.
சைவத்தின் சிறப்பே அது சமயாதீதம் கூறுவதுதான். மேலும் திருமூலர் ஆய்வில் சைவம் என்றால் எல்லா சமயங்களின் ஆழத்தின் ஆழத்தில் இருக்கும் உட்சமயமும் ஆகும்.
மேலும் சிவப்பிரகாசப் பெருந்திரட்டு போன்ற நூற்களைக் கண்டால் சைவம் எல்லா சமயங்களையும் புரிந்துகொண்டு எந்த சமயத்தை எங்கே வைப்பது என்று எல்லா சமயங்களையும் ஓர் விருட்சமாகக் கண்டு உலக சமயங்களை அவற்றின் கிளைகளாகவும் காண்கின்ற ஒன்றுமாகும்,. சமயங்களில் ஒன்றல்ல சைவ சமயம், எல்லா சமய்ங்களையும் புரிந்துகொள்ளும் பூரண சைவம்
உலக சமயங்கள் அனைத்தையும் கண்டு புரிந்துகொண்டவனே சைவன் என்று இந்தப் பெருந்திரட்டு உணர்த்துகின்றது. உலக சமயங்கள அனைத்தையும் புரிந்துகொண்டு எதனை எவ்விடத்தில் வைக்கவேண்டுமோ அதனை அவ்விடத்தில் வைக்க உதவும் திருவள்ளுவர் இதனால் ஓர் சைவன் ஆகின்றார்.
.
இப்படி எல்லா சமயங்களையும் ஒதுக்காது புரிந்துகொண்டு எதிர்காலத்தில் வரக்கூடிய சமயங்களையும் அனுமதித்து ஆனால் அவற்றையும் கடந்து மேலே சென்று ஓர் சமயாதீத நிலையில் மக்களை நிறுத்தும்போது அது வரம்புடை ஆற்றுச் சமயங்களில் ( sectarian religion) ஒன்றல்ல என்றும் அழகிய சமயாதீத சமயம் என்றும் புரிகின்றது அல்லவா?
திருவள்ளுவர் ஓர் நூலியல் அறிவியல்வாதி என்பதொடு மெய்ப்பொருளே வேண்டுவது என்ற அறிவுடையார் யாரோ அவர்கள் அனைவரும் மெய்பொருளையேத் தேடிச்சென்று மெய்யுணர்வையே மகிழ்வர் எனும் போது அவர் ஓர் சைவன் ஆகின்றார்
அவர் முன்கூட்டியே மதவாதிகளின் கொடுமையையும் மடமையையும் பொய்மையையும் வஞ்சகத்தையும் இன்னும் இதுபோன்ற கீழ்மைகளையும் கேவலங்களையும் பொறுக்க மாட்டாது அவர்களை எதிர்க்கும் முகத்தானே இறைவன் இல்லை இறை நம்பிக்கையெல்லாம் வேண்டாம் என்று பொய் நாத்திகம் பறைசாற்றும் ஒருவர் அல்ல. இறைவனை வைத்து பொய்யாடும் இந்த அற்ப சாமியார்களை வெறுத்து நாத்திகம் பேசுவதால் உண்மையாகிய இறைவன இல்லாது போய்விட மாட்டான். உண்மை என்றும் உணமையே என்பதொடு உண்மை என்று அறிந்ததை நாம் உடன்படவும் வேண்டும்.
உண்மையின் வன்மையும் அதுதானே?
உண்மை அனைவரையும் வணக்குகின்றது, அடி பணிய வைக்கின்றது, உடன்பட்டு ஒத்துபோக வைக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்த திருவள்ளுவரும் இறைவன் ஆதிபகவனாக இருக்கின்றான் என்று இந்த உலகை வைத்தே கூறுகின்றார்.
திருவள்ளுவரின் முதற் குறளைத் தெரியாத தமிழறிந்த தமிழர்கள் யாரும் இல்லை,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
ஆம் இறைவன் உண்டு அதுவோர் உண்மை ஆகவே அதனை நீ ஏற்றுக்கொண்டு அடஙகித்தான் ஆக வேண்டும். அந்த உண்மையை அகப்படுத்தி நீ ஒழுகத்தான் வேண்டும் என்கின்றார். நீ மறுக்கலாம் ஆனால் அப்படி மறுத்தால் உண்மையில் வாழ்வதை விட்டு பொய்மையில் வாழ்வாய் அதற்குரிய பயன்களை அனுபவிப்பாய் என்கின்றார்.
ஆனால் இந்த உண்மையை சமணர்களின் ஆகமங்களை வைத்தோ தீர்த்தங்கரர்களின் வாக்குகளை வைத்தோ வேதங்களை வைத்தோ சிவாகமங்களை வைத்தோ அல்லது விவிலியத்தை வைத்தோ ஏசுபிரான் திருவாய் மலர்ந்தருளிய வாக்குகளை வைத்தோ அவர் கூறவில்லை,
அனைவருக்கும் பொதுவாகிய வாழுதற்கு ஓர் ஆதாரத் தலமாக இருக்கின்ற இந்த உலகத்தின் மறுக்கமுடியாது உண்மையை வைத்தே கூறுகிகின்றார். திரிபும் மயக்கமும் இல்லா தெளிகாட்சியொடு இருள்காட்சி மருள்காட்சி என்றெல்லாம் கண்டவர் உலகை ஓர் மித்தை ஓர் கறிபிதம் ஓர் பொய் என்று வேதாந்துமும் பேசாது உலகு உண்மையே சுட்டுணர்விற்கு வருவதால் என்று கூறி அதனை வைத்தே ஆதிபகவனாக இறைவன் இருக்கின்றான் என்றும் கூறுகின்றார்- நல்ல ஓர் உவமையை வைத்து
அகரம் என்பது எல்லா ஒலிகட்கும் மூலமாகிய நாத சொரூபம. ஆன்மா என்ற ஒன்றால்தான் பொருளற்ற அந்த ஓசைகள் பொருண்மை உணர்த்தும் எழுத்தோசைகள் ஆகின்றன. இந்த ஆன்மாவின் செயற்பாட்டால்தான் அகர நாதவோசை உலகமொழிகளின் ‘எழுத்தோசை’ ஆகின்றது என்று கூறி எழுத்துக்ளை வைத்து நம்மை மொழியுணர்விற்கு மூலமாகிய ஆன்மாவைக் காண வைக்கின்றார்.
முகத்தைப் பார்த்து உள்ளத்தில் சோகம் இருக்கின்றது வேதனை இருக்கின்றது அமைதி இருக்கின்றது என்றெல்லாம் உள்ளத்தை ஆன்மாவின் இருப்புநிலையைப் பார்க்கின்றோமே, அதுபோலத்தான் இங்கும்
இதுவே நூன்னெறியாகும். பொருண்மைத் தோற்றா ஒலிகள் பொருண்மைத் தோற்றும் எழுத்தோசை யாவது சித்துப்பொருளாகிய ஆன்மாவால் என்று உளர்த்தி அதுபோலத்தான் இந்த உலகு--- அவன் அவள் அது என்றெல்லாம் பகுதிப்பட்டு தனித்தனி பொருட்களாக சுட்டறிய வருபவையாக தோன்றி நின்று அழிந்து மீண்டும் தோன்றுவதற்கு மூலகாரணமாக ஓர் சித்துப் பொருள் இருக்கவேண்டுமே? அதுவே ஆதிபகவன் என்றும் இறையுண்மையை காண வைக்கின்றார்.
அவன் அனைத்திற்கும் ஆதி எனும்போது அவனுக்கு வேறோர் ஆதி இல்லை என்றும் குறிப்பதால் அவன் அநாதி என்றும் ஆகின்றது.
இங்கு அவர் பயில்வது சைவத்தின் அடைப்படை உத்தியாகிய விழிதிறப்புத்தான்.
நாம் வாழும் உலகை பொறிலியப் பார்வையைக் கொண்டு மாத்திரம் பார்க்காது நூலியப் பார்வை வழியும் பார்த்தால்தான் அங்கு உலகை இயக்குபவனாக அதன் நிமித்தகாரண( agentive cause) புதையுருவாக இறைவன் இருப்பதை உணர்வாய் என்கின்றார்!
இது நூலிய அறிவியல் என்றால் திருவள்ளுவர் ஓர் சைவன் ஆகின்றார். அவர் சமணனுமல்ல புத்தனும் அல்ல கிறித்துவனும் அல்ல மற்றும் எந்த சமயத்தைச் சேர்ந்தவரும் அல்ல, மாறாக நூன்னெறி வழி சென்று மெய்ஞானங்களையே மகிழ்ந்து மகிழ்ந்து உயர்ந்த ஓர் அறிவியல்வாதி ஆகின்றார், ஒர் சைவன் ஆகின்றார்.
அவரைப் போன்ற ஓர் சைவன் நான் என்றும் அஞ்சாது தயங்காது கூறி நானும் அந்த மெய்ஞானம் உணரத் தரும் திருநெறி வழி உய்கின்றேன் என்பதையும் எண்ணி மகிழ்கின்றேன், இந்த உலகையும் என் வழிக்கு அழைத்து சைவன் ஆகச் சொல்கின்றேன்
இது மதப் பிரச்சாரம் அல்ல. கிரித்துவர்கள் இசுலாமியர்கள் இன்றைய இந்துத்துவாக்கள் போல மதமாற்றும் முயற்சி அல்ல என் முயற்சி. எல்லா உள்ளத்தும் ஏற்கனவே இருக்கின்ற ஓர் மெய்வழிக்கு அழைப்பு விடுத்து அது உங்கள் உள்ளத்தில் ஏறகனவே இருக்கின்றது அதனை பாருங்கள், அவ்வழி செல்லுங்கள் எனும் போது அது மதமாற்ற நடவடிக்கை அல்ல, உண்மையை காண அழைப்பது, யான் பெற்ற இனபம் அவர்களும் அடைய உழைப்பது.
உண்மையை அறி உண்மையைத் தேடு உண்மையில் நில் என்றெல்லாம் கூறுவது மதப் பிரச்சாரம் செய்வதல்ல, உலகதையே ஓர் மதத்திற்கு இழுப்பது அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் சுயத்திற்கு அழைப்பு விடுப்பது. .
தொடரும்
உலகன்
அன்புள்ள முனைவர் உலகன்,வள்ளுவம் குறித்த அறிவியல் சார்ந்த, ஆழமான, அழகிய சிந்தனையை முன்வைத்துள்ளீர்கள்.திருக்குறளில் எல்லாச் சமயக் கருத்துக்களும் இருக்கின்றன என்று கூறினாலும், அதிலுள்ள கருத்துக்கள் எல்லாம் எல்லாச் சமயங்களும் ஏற்றதாக, ஒத்துக்கொள்ளக் கூடியதாக, இல்லை. ஆனால் சைவத்துக்கு முரணான, ஏற்க முடியாத கருத்துக்கள் என்று எவையும் இல்லை. காரணம், சைவம் சமயாதீதக் கருத்துக்கள் கொண்டமையால் எனக் கருதுகிறேன்.சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனின் இலக்கணமே, அவன் அனைத்தையும் கடந்தவன், அனைத்து நற்குணங்களின் நிறைவாக இருப்பவன், ஞான வடிவினன், பேரருளாளன் ஆகியவையாகும். இவை எல்லோரும் ஏற்கக் கூடிய பொதுவான பண்புகள்.க. கணேசலிங்கம்
From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com
Sent: Monday, 22 December 2014, 15:22
Subject: [MEYKANDAR] Re: நான் ஏன் ஓர் சைவன்?
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை
7: ஆணவச் செருக்கு
என்னுள் ஓர் கேள்வி: நான் ஓர் சைவன்! என்று துணிந்து பல ஐயப்பாடுகளைளை எல்லாம் கடந்து உலகே அறிய இன்று நான் பறைசாற்றுகின்றேன் என்றால், இது ஓர் திமிர் இல்லையா? ஓர் ஆணவ செருக்கு இல்லையா? வெற்றி அடைந்த கொரில்லாக் குரங்கு மார்த்தட்டிக் கொள்வது போல என்றெல்லாம் பல கேள்விகள். ‘நான் ஓர் ஆரியன்’ ‘நான் ஓர் பிராமணன்” என்றெல்லாம் கூறும் போது ‘நான் பிறரைவிட மேலானவன், பிறப்பினாலேயே உயர்ந்துவன்” என்றெல்லாம் கூறி மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்று குறிப்பாய் உணர்த்தி ஓர் மமதை ஆடுகின்றேன் அல்லவா? அது போலவா? மேலும் ‘நான் ஓர் வேளாளன், முதலி மேனோன் தேவர்’ என்றெல்லாம் கூறி நான் ஓர் உயர்ந்த சாதிக்காரன் என்று பறைசாற்றி ஆகவே நான் பறையன் அல்ல பள்ளன் அல்ல மற்றும் இவர்களைப் போன்ற தீண்டத்தகாதவன் அல்ல என்று குறிப்பாய் உணர்த்தி ஓர் செருக்காடுகின்றேனே, அதுபோலவா இது?
அப்படி இல்லை என்றே எனக்குப் படுகின்றது, சைவம் தனது அநாதிபொருளியலில் மூல மலமாகிய ஆணவ மலத்தைக் கண்டு இயல்பான சகசமான அதுவே ஆணவம் அகம்பாவம் செருக்கு தீமிர் போன்ற குணங்கட்கு மூல காரணமாகவும் இருக்கின்றது என்று கண்ட தரிசனம் ஆயிற்றே! இந்த உலகத்தையும் மற்றும் அனைத்தையும் அழித்து மரண விளையாட்டு விளையாடும் இந்தச் காரிருள் அரக்கன் தானே என் பார்வையையும் அறிவையும் இருட்டுள் அழுத்தி என்னை அணுத்துவப்படுத்தி சிறுமதியின் அற்பன் ஆக்குகின்றறான்?.
அந்த சிறுமதியினால்தானே நான் ஆரியன் என்றும் பிராமணன் என்றும் வேளாளன் என்றும் முதலி தேவர் மேலோன் என்றேல்லாம் இனங் கூறி வர்ணம் கூறி சாதி கூறி செருக்காடுகின்றேன்? அதன்வழி ‘நான் உயர்ந்தவன்’ என்று ஓர் கற்பித இன்பம மகிழ்கின்றேன்? (எந்தவொரு நாணமும் இல்லாது?)
இந்து சிறுமதி கூடாது அதற்குக் காரண்மாக இருக்கின்றது இந்த ஆணவ மலத்த்தை ஆன்மாவிருந்து நீக்க வேண்டும் அது மெய்ஞானத்தை வளர்ப்பதால்தான் முடியும், உண்மை எனும் மெய்யுணர்வே அதனை போக்கும் என்று சைவத்தின் திறத்தை உணர்ந்து அதற்கு உடன்பட்டு என் உள்ளத்தில் இவ்வாறான செருக்குகள் யாதும் இருக்ககூடாது , அவ்வாறு செருக்காடுவோரைக் கண்டு அவர்களது அணுத்துவ மதியினை அவர்களே அறிந்து வேதனைப் பட்டு அதனின்று வெளிப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் போக்கினை வளர்க்கும் சைவத்தைத் தேர்ந்து அறிந்து அதனை அனைவரும் அறியும் வகையில் ‘நான் ஓர் சைவன்” என்று பறை சாற்றும் போது நான் எப்படி செருக்காடுவதாகக் கொள்ள முடியும்?
இருக்கும் வீணான செருக்கையெல்லாம் அதற்கு மூலமாக இருக்கும் ஆணவமலத் தொடக்கை எல்லாம் உண்மை எனும் உணர்வின் அறிவை மெய்ஞானத்தை வளர்த்து வளர்த்து போக்கு என்று சைவங் கூற சைவப் பெரியார்கள் கூற அதற்கு உடன்பட்டு அவ்வழி செல்லும் நான் எப்படி செருக்காடுவதாக முடியும்? செருக்கையேப் போக்கும் அதற்கு மூலமாகிய அகத்துச் செறி ஆணவ மலத்தை போக்கு என்று வறுபுறுத்தும் நான் எப்படி செருக்காடுவதாக முடியும்?
முடியாது என்றே நினைக்கின்றேன்.
சைவம் பேசுவது
இனவாதம் பேசுவது அல்ல, இந்த பொல்லாத வர்ணதர்மம் பேசுவது அல்ல சாதி தர்மம்
பேசுவதும் அல்ல. இதுபோல மானிட பேதங்களைப் பேசி தன்னை மேல்தட்டில் தானே வைத்து மார்தட்டிக்
கொள்வதும் அல்ல. இவை எல்லாம் வேண்டாம் பிழை பாவம் அதன் மூலகாரணமாகிய ஆணவமலத்தை
போக்கி தூய்தாக்கி அன்பினை வளர்த்து அந்நியமின்றி அனைவருடன் பழகு என்று கூறும்
சைவத்தை நான் உண்மையாக உணர்ந்து பறைசாற்றும்போது நான் எப்படி செருக்காடுவதாக
முடியும்?
இனத் திமிர் வர்ணத் திமிர் சாதித் திமிர் போன்ற திமிர்களையெல்லாம் கண்டிக்கும் சைவம், அதற்கு மூலகாரணம் அறிவினை ஓர் அந்தகாரத்தில் வீழ்த்தும் அகத்துச் செறி ஆணவ மலமே என்ற உணமையை பறைசாற்றும் சைவம், தானே இன்னொரு சமையத் திமிரை வளர்க்காது. ஆக ‘நான் ஓர் சைவன்’ என்பது ஓர் திமிர் கிளவி அல்ல மாறாக ஓர் மெய்ஞானக் கிளவி!
யார் ஆரியன் போன்ற இனப் பொய்மையை பிராமணன் போன்ற வர்ண கற்பிதத்தை சாதி போன்ற மந்தை உணர்வை கண்டிக்கின்றார்களோ அவர்களை கடுமையாகக் கண்டித்து அழித்துவிட நினைப்பவர்கள் இந்த அகங்காரச் செருக்கினிம் சிறுமதி மாந்தர்கள் ஆகும். சமீப கால தமிழர்களின் அரசியல் போராட்டமே இது தானே? யார் இவற்றைய் எல்லாம் கண்டித்து ஓர் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நினைக்கின்றார்களோ அவர்கள் கடுமையாக எதிர்க்கவும் படுகின்றார்கள்,
இதுபோன்ற ஆணவ செருக்கையெல்லாம் உடைத்தெரியும் சைவத்தையும் வளர்ந்து செழிக்க வொட்டாது திரித்து சொல்வாரும் உண்டு. அதனை புதைத்து வர்ண தர்மமே தரம்ம் என்று கூறும் வேதாந்த மரபினையே போற்றிப் போற்றி புகழ்ந்து அந்த புகழ்ச்சியில் சைவம் தாழ்ந்து வீழ்ந்து மறைந்து விளங்கவொட்டாது செய்வதும் உண்டு.
இன்றைய சைவத்தின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம். திருமூலரின் வாக்கு “ஒன்றே குலமும் ஒருவனேத் தேனும்’ என்பது வெறும் சொல்லளவிலேயே மக்கள் வாயில் நடமாடி வருவதற்கும் இதுவே காரணம். சைவங் கெட எங்கு பார்த்தாலும் பொய்மையே வேதாந்தக் கற்பிதங்களே வீணான புராணக்கதைகளே உண்மையே இல்லாது சோதிடக் கலைகளே எண் சாத்திரம் போன்ற பொய்க் கலைகளே இந்து என்பானின் பண்பாடாக இருக்க, இவை யெல்லாம் ஆணவ மலம் மிக்கிருப்பதையேக் காட்ட அதனை வெறுத்து அது வேண்டாம் என்று பறை சாற்றும் வகையில் “நான் ஓர் சைவன்’ என்று துணிந்து உலகே கேட்கும் வண்ணம் கத்தினால், அது செருக்காடுவது ஆகாது மாறாக செருக்கொழிப்பதே யாகும்.
இந்த செருக்கு ஒழிந்து அடங்கி அன்பினைப் பெருக்கி அனைவரோடும் அந்நியமின்றிப் பழகி அன்பே சிவமாக நிற்கும் இறைவனோடு இணங்குவதுதான் மெய்வாழ்க்கை ! அதனைப் பறை சாற்றும் போது அது செருக்காடுவது ஆகாது, ஞானவிழியைத் திறந்து செருக்கடுவதை ஒழியுங்கள் என்று வற்புறுத்துவது ஆகும்!
தொடரும்
உலகன்
அன்புடை ஐயாஇந்த சைவன் என்ற சொல் உணவு மற்றும் சமயப் புலத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட நிலையில் பயன்படுத்தப்பட்டாலும் சைவத்துக்கு எதிர்மறை அசைவம் என்ற நிலைப்பாட்டைக் காட்டுவதாகவே உள்ளதுசைவன் அசைவன்சைவம் அசைவம்என்பதிலிருந்து இந்தக் கருத்துருவை எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கலாம் என்று விளக்கவும்ரு.பூனை
...
[Message clipped]
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 8: ஆணவம் வர்ண சாதி கற்பிதங்கள்
என்னைச் சைவன் ஆக்கியதே திருமூலர் முதற்கொண்டு பல சிவஞானிகள் உறுதி செய்த முப்பொருளுண்மையின் அநாதிப் பொருளியல் தான்: பதியினைப் போல பசு பாசம் அநாதி என்ற ஆழுண்மைதான். இதனை யானும் திறன்பட ஆய்ந்து அவ்வாறே முடிவும் செய்துள்ளேன். என் அழிவிலுண்மை எனும் பெருந்நூலில் இதனை எல்லாம் விளக்கியுள்ளேன். வியப்பென்ன வென்றால் பாரதத்திலும் சரி உலகளாவிய நிலையிலும் சரி இந்த முப்பொருளுண்மையின் அநாதிப் பொருளியல் சைவத்திற்கே உரியதாக இருக்கின்றது. ஆயினும் இன்னொரு வகையில் வியப்பான ஒன்றல்ல. சுமேருத் தமிழின் முதற்சங்க காலத்திலேயே ஓர் உள்ளுணர்வாக விளளங்கும் இந்த ஆழுண்மை படிப்படியாக வளர்ந்து திருமூலர் காலத்தில் நல்ல தெளிவடைந்து சொல்லாகி, மெய்கண்டார் கால்த்தில் உறுதியிலும் உறுதியாகிய உண்மையாகின்றது. அதன் பிறகு அருணந்தியார் உமாபதியார் சிவஞான வள்ளல் சிற்றம்பல நாடிகள் தத்துவப் பிரகாசர் போன்ற சிந்தனை ஆழமிக்க சிவஞானிகள் அதனை இன்னும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முப்பொருள் உண்மையின்றி எந்தவொரு அறிவியலும் இயங்க முடியாது அதிலும் குறிப்பாக இந்த மாந்தரியல் உளவியல் அரசியல் குமுகாயவியல் போன்றவை. சமய வாழ்கையும் அதனோடு கலை வாழ்க்கையும் அப்படித்தான். ஏன் அங்கு மூர்த்திகள் இருக்கின்றன சரியைகள் கிரியைகள் இருக்கின்றன ஆழ்ந்த சிந்தனையின் பல்வேறு உடற்பயிற்சிகளின் யோகங்கள் இருக்கின்றன பல்வேறு ஞானவிசாரணைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் இந்த முப்பொருளுண்மையின் அடிப்படையிலேயே விளக்கப்படுவன வாகும்.
இங்கு குமுகாயவியலின் (sociology) அதுவும் குறிப்பாக இந்து சமுதாயத்தின் இந்த வர்ணங்களையும் சாதிகளையும் மக்களில் சில குழுமங்களை ஒதிக்கி தள்ளி வைப்பதுமாக ஏன் நடக்கின்றது என்பதை ஓர் சைவன் என்கின்ற முறையில் விசாரித்து விளக்க முற்படுவேன்
சைவனாகிய எனக்கு, திருமூலர் போன்ற எனக்கு, சாதி இல்லை வர்ணபேதங்கள் இல்லை என்பதொடு இருக்க முடியாது. அதனை நான் விளக்க வேண்டுமல்லவா? அது என் உரிமை அல்லவா? கடமை அல்லவா?
நான் ஓர் சைவன். என்னுள் என்னை மெதுவாகக் கொன்று கொண்டே வரும் ஆணவ மலம் என்னும் ஆலகால விசம் இருக்கின்றது. நான் உயிர் வாழ்வது இறைவன அகத்துள் எழுந்து அந்த ஆணவ மலத்தை சங்கரித்து முயலகனாக வடித்து காலில் அழுத்தி கீழே புதைத்து வைப்பதால்தான் என்று எனக்குப் புரிகின்றது. ஆடவல்லான் திருமூர்த்தத்தில் இடது பாதம் ஆணவத்தை அழுத்தி சங்கரிக்க வலது பாதம் எடுத்தப் பாதமாக வளைந்து அருள. நான் குணடலினிப் பாய்வு பெற்று சத்திமானாக எழுந்து பல செய்கின்றேன்.
இவ்வாறு அழுத்தபப்டும் ஆணவம் என் அகத்திலும் இருந்துகொண்டு என்னை கீழே கீழே இழுக்கின்றது, கீழானவற்றை நினைக்க சிந்திக்க செய்ய ஊக்குவிக்கின்றது. பாவ காரியங்கள் இழிவான காரியங்கள் அற்பங்கள் காம விகாரங்கள் பலவகையான வெறிகள் வன்முறைகள் கொலைவெறிகள் என்றவாறு பல என்னுள் எழ நான் என்னை நினைத்து நாணிக் கோணிக் குறுகி நான் அற்பன் அற்பத்திலும் கேவலமான அற்பன் என்றவாறு நினைத்து நினைத்து குமைகின்றேன்.
என்னை நான் அறியாது என்னுள் இந்த மலம இருக்கின்றது அதுதான் என்னை இவ்வாறு கீழே கீழே இழுத்து என்னை கேவலத்திலும் மிக கேவலமான ஒருவன் ஆக்குகின்றதையும் உணராதே மயங்கித் தடுமாறுகின்றேன். அதுபொழுது இந்த கொடூரமான மிகவும் வெறுக்கத் தக்க உள்ளத்து வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க ஓர் உபாயமும் சிந்தையில் உதிக்கின்றது!.
இழிவின் இழவின் அற்ப சிந்தனைகளை விட்டு உயர்வின் உன்னதத்தின் மேன்மையின் தனியோர் சிறப்பின் குணங்களை நான் ஏன் கற்பித்து அவற்றை மெய்யெனக் கொண்டு ‘நான் தாழ்ந்தவன் அல்ல, உயர்ந்தவன் மிக உயர்ந்தவன்” என்ற நினைப்பில் மகிழ்ச்சியாக வாழக்கூடாது?
இந்த எண்ணத்தில்தான் நான் வரண தர்மத்தை கற்பிக்கின்றேன். தர ஏணி வரிசையைப் புகுத்துகின்றேன். என்னை பிராமணன் ஆக்கி பிறரை சத்திரியன் வைசியன் சூத்திரன் என்றெல்லாம் ஆக்குகின்றேன். என்னைக் கண்டு இந்த சூத்திரர்கள் அந்த கீழமையை உரிமைப் பரிப்பை வெறுத்து மறுத்து சாதிகளை உண்டாக்கி அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று ஓர் சாதியை உண்டாக்கி ‘நான் உயர்ந்தவ்ன்” என்ற மிதப்பில் தனது கேவலத்தை கீழ்மையை ஆணவ மலச் செறிவால் வருகின்ற அற்பத்தை முயற்சியை தன் நம்பிக்கையை துணிவை சுயமரியாதையை எல்லாம் போக்கும் அந்த கீழ்மையைப் போக்குகின்றேன்!
இதுதான் உண்மை என்று மக்கள் ஏற்றுக்கொள்ள வேதங்கள் சொல்கின்றன வேதங்களே பிரமாணம் வேத வாக்கு யாண்டும் பொய்யாகாது அது ஆபுருஷகம் என்றெல்லாம் கதைகட்டி அந்தக் கதைகளை நானும் நம்பி ஒருவாறு வாழ்கின்றேன் நல்ல இந்து என்ற மிதப்பில்! தேவமொழியாகிய வடமொழியில் எழுதப்படும் ஏறக்குறைய எல்லா இலக்கியங்களிலும் வர்ண தர்மத்தைப் புகுத்தி அதுவே தர்மம் என்றவாறு மக்களை நம்ப வைத்து நானும் நம்புகின்றேன்
ஆனால் சைவ சிந்தனை வருகின்றது, ஓர் ஆழமான ஞானச் தெளிவும் வெடிக்கின்றது. இப்படிப்பட்ட குமுகாய கற்பிதங்கட்குக் காரணம் இந்த அநாதிப் பொருட்களின் ஒன்றாகிய ஆணவ மலமே என்று எனக்கு அறிய வர, உண்மை எனக்குப் படுகின்றது!
வர்ண தர்மம் சாதி தர்மம் போன்றவை எல்லாம் எனது கற்பிதங்கள், இந்த பொல்லாத ஆணவ மலத்தின் தாக்கத்தால் நான் அறியாது அஞ்ஞானத்தில் கிடப்பதால்தான் அப்படி எல்லாம் கற்பிதங்களில் வீழ்ந்து சீரழிந்தேன். சைவனாகியப் பின்றை இப்பொழுது எனக்குப் புரிகின்றது. நான் உயர்வதற்கு வேண்டியது இப்படிப்பட்ட கற்பிதங்கள் அல்ல மாறாக ஞானத் தெளிவின் ஆணவ மலத் தாக்கம் போக்கிய அகத் தூய்மை தான் என்று!
இந்தத் தூய்மை குளிப்பதால் வருவதல்ல புனித நீரில் ஆடுவதால் வருவதல்ல சுத்த போசனம் உண்பதால் வருவதல்ல விரதங்களால வருவதல்ல வேத மந்திரங்களையோ மற்ற மந்திரங்களையோ ஒதுவதாலும் இதுபோன்ற பல வித்தைகளாலும் வருவதல்ல.
உண்மை எது உண்மை எது என்று விசாரித்து விசாரித்து மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்று வாழ்ந்து அகத்துச் செறி அழுக்காகிய தூசுவாகியய துகளாகிய ஆணவ மலத்தை போக்கத்தான் வருமென்று அறிந்த உடனே. வரண கற்பிதங்களும் சாதி கற்பிதங்களும் எவ்வளவு பாவமானவை என்று பட, சூடேரிய செங்கலை வீசி விடுவது போல வீசி விடுகின்றேன். சமத்துவம் தகைப்பட்டு “ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்’ என்று திருமூலர் போன்று நானும் பறை சாற்றுகின்றேன்
வர்ணம் பேசுவது சாதிச் செருக்காடுவது எல்லாம் விசம் குடிப்பதுபோன்று ஆகிட அவற்றை தூர தூர வீசிவிட்டு அமுதம் பருகுவது போல அந்நியம பாராட்டி வெறுப்பதெல்லாம் போக்கிவிடுகின்றேன். நான் ஓர் சைவன் ஆகின்றேன்!
ஓர் சைவனுக்கு சாதியில்லை வர்ணபேதம் இனபேதம் போன்ற எந்த பேதங்களும் இல்லை, அவன இதனை எல்லாங் கடந்த ஓர் தூயன் நற்சுத்தன் என்றெல்லாம் ஆகும் விருப்புடையவன்!
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 9: அம்மையப்ப இறைவன்
இளமையிலேயே எனக்கோர் அறிவுத்தாகம், அதனால் பல தத்துவ நூற்களையும் சமய நூற்களையும் முடிந்தவரை படித்து இந்த உலக சமயங்கள் தத்துவஞானிகள் இவ்வாறு இவ்வாறு சிந்திக்கின்றனர் என்று ஓரளவு அறிந்துவைத்திருந்தேன். பல்கலை படிப்பின்போது 3 ஆண்டுகள் விருப்பப்பாடமாக மெய்யறிவுப் பாடங்களையும் எடுத்துள்ளேன். எல்லாம் மற்றவர்கள் என்னதான் எப்படித்தான் சிந்திக்கின்றனர் என்று தெரிந்துகொள்வதற்கே.
இவ்வாறு வளர்ந்த எனக்கு ஓர் வியப்பாக அமைந்தது சைவ சமயத்தில் தான் இறைவனை அம்மையப்பராக அதனோடு தொடர்புடைய சிவலிங்கமாக கண்டு தொழுகின்றனர் என்பது . கிரேக்கர்கள் ரோமானியர்கள் யூதர்கள் கிறுத்துவர்கள் புத்தர்கள் சமணர்கள் ஏன் நம் திருமாலியர் உட்பட, அம்மையப்பர் வடிவத்து இறைவனை அவரகள் போற்றுவதாகத் தெரியவில்லை,
சைவச் சிந்தனையில் இறைவனை அம்மையப்பராகக் கண்டு தொழுவது பரக்கக் காணப்படுகின்றது, . மெய்கண்ட சாத்திரங்களில் ஆனால் மெய்கண்டாருக்கு முன்பே எழுதப்பட்ட நூற்களில் ஒன்றாகிய திருகடவூர் உய்யவந்த தேவரின் திருகளிற்றுபடியார் எனும் மெய்ஞானப் பனுவலில் முதற் பாடலே இவ்வாறு அமைகின்றது.
அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்-- அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார் போல் நிற்பர் அவர்
ஏன் இப்படி மானிடவியல் சான்ற உலகில் வாழ் எல்லா உயிர்கள் சான்ற முறையில் இறைவனை அம்மையப்பர் என்று கூறவேண்டும்? இந்த உலகமும் எல்லா உயிர்களும் பிரசவிக்கப்படும் பொருட்களா?
அப்படித்தான்
தெரிகின்றது. மெய்கண்டாரும் இந்த உலகையும் உயிர்களையும் மூவினைப் படும் என்பதால் அதாவது
தோன்றி வாழ்ந்து இறந்து மீண்டும் தோன்றும் பண்பின என்பதால் அழிக்கும் ஆணவமலத்தொடு தோற்றும்
இறைவனும் இருக்கின்றான் என்றல்லவா கூறுகின்றார்? இந்தத் தோற்றுதல் பிரசவிப்பதுபோன்றது
தானே?
ஆம் தோற்றுதல் இங்கு பரசவித்தல் போன்றது. சுமேருத் தமிழர்களின் மிகப் பண்டைய தெய்வம் ஈன்.அன்னை ( in-anna) , இந்த உலகத்தையும் மற்றும் அனைத்தையும் ஈன்று புறந்தருகின்றவள். 40 ஆயிரங்கட்கு முன்பு ஆஸ்த்திரேலியா சென்ற தமிழ் தொல்குடியினர், ஓர் பெருங் குகைக்குள் உள்ளே சித்திரமாக தெய்வத்தை கீற்று ஓவியமாக வரைந்திருப்பதைப் பார்த்தால் ஓர் அம்மையார் பல குழந்தைகளை தன் கழுத்திலிருந்து விழும் பைகளில் கொண்டிருப்பதாக வரைந்திருந்தனர். ஆக அக்கால கட்டத்திலேயே தத்துவ சிந்தனை இந்த அளவிற்கு தமிழர்களிடையே வளர்ந்திர்ந்ததைக் காண முடிகின்றது.
அது இன்றும் தொடர்கின்றது- இந்த அற்புதமான சைவ சமயத்தின் ஓர் கூறாக!
இறைவனே ஏகனாக அப்புறத்தும் அல்லார்போல நின்று இப்புறத்து அம்மையாய் அப்பனாய் வடிவெடுத்து ஒன்றாகி கருவுற்று இந்த உலகத்தையும் உடம்பின்றி ஆணவத் துன்னிருளில் கிடக்கும்
உயிர்கட்கு ஓர் உடம்பும் தந்து வாழ்க்கை எனும் ஒன்றை அருளுகின்றான் என்றுதானே இதன் பொருள்?
திருவள்ளுவர் இறைவனை பலவாறு கூறும் போது முதன்முதலில் ‘ஆதி பகவன்” என்று தானே கூறுகின்றார். இங்கு ‘பகவன்’ என்பது ‘பகுவன், பாத்துவன்” அதாவது தன்னுள்ளிருந்து பிரிந்து வருமாறு செய்வன் என்று பொருள்படுவதாக கூறலாம்.
ஆயினும் இந்த anthropomorphic thinking எனப்படும் மானிடவடிவச் சிந்தனை மிகப் பழமையானது. சுமேருத் தமிழ் எனும் முதற் சங்கத் தமிழிலேயே வரும் ஒன்று. கீழ் வரும் வரியை பாருங்கள்
Enki and NinHursaga
5.
dili-ni-ne dilmunki-a u3-bi2-in-nu2
He laid her down all alone in Dilmun,
தனி,நினே தில்முன்(கீ)ய உள் பின் ஒன்னு
Dili> தினி> தனி. தனி,நினே: தனியாக
U> உள்: உண்டாய்?, மெய்யே?
u3-bi2-in-nu2 : உள் பின் உன்னு>ஒன்னு : அணைத்தல் மெய்யாக?
இங்கு ஆணாகிய அப்பன் பெண்ணாகிய அம்மையோடு ஒன்னுகின்றான், ஒன்றாகுகின்றான் அதாவது புணருகின்றான் என்றே குறிக்கப்படுகின்றது.
எங்கே இது நடக்கின்றது எனும் போது தில்முன் எனப்படும் தில்லையில் என்று விளக்கப்படுகின்றது. அங்குதானே எல்லாமே தோற்றபடுகின்றகின்றன? இந்த உலகின் உயிர்கள் உடபெடுத்து உலகில் வாழத் தொடங்கும் உலகில் ஒன்றாய் தோன்றுமிடம் இதுதானே?. தனனை யாரும் தோற்றுவிக்காது ஆனால உலகமே அதிலுள்ள அனைத்துமே தோற்றுவிக்கபப்டும் இடம் தான் இந்த தில்முன் எனப்படும் தில்லையம்பலம்!
இதுவே கையிலை என்னும் கைலாயமும் ஆகும்
தமிழர்களின் சிந்தனை பண்டே இந்த உலகத் தோற்றத்தை எண்ணி அதுவோர் வியப்பாக இருக்க புதிராக இருக்க அதனை புரிந்துகொள்ள முயன்று இந்த அம்மையப்பர் கருத்திற்கு வந்திருக்கின்றது. ஓர் ஆண் சத்தியும் பெண் சத்தியும் இணைந்தாலே இந்த உலக உறபத்தி என்பதை உணர்ந்து ஆணவ மலத்தை சங்கரித்து இந்த உலகை எல்லாம் அந்த காரிருள் அரக்கன் வயிற்றிலிருந்து மீட்டு மீண்டும் ஒளிப்பட உலகில் திகழுமாறு செய்வது ஓர் பிரசவம் போன்ற ஒன்று என்று எண்ணி இறைவனை சரியாகவே அம்மையப்பராகக் கண்டிருக்கின்றது.
அம்மையப்பரும் சிவலிங்கமும்
ஆனால் சைவச் சிந்தனை அத்தோடு நிற்கவில்லை, இந்த மானிடக் கூறுகளையும் கழற்றி நீக்கி சுத்தமாக்கி இவற்றிற்கெல்லாம் மூலமாக இருக்கும் மூல வடிவைக் கண்டால் அது நாதம் எனும் ஆண்மையும் விந்து எனும் பெண்மையும் இணைந்து நிற்கின்ற ஓர் வடிவம் என உணர்ந்து இந்த மூல வடிவத்தையே சிவலிங்கமாகக் கண்டு சிவபெருமானின் திருவுருவம் இந்த சிவலிங்கமே என சிவனுக்கென எழுப்பும் கோயில்களில் எல்லாம் மூல மூர்த்தமாக சிவலிங்fகத்தையே பிரதிட்டை செய்துள்ளனர்.
அம்மையப்பர் anthropomorphic thinking என்றால் சிவலிங்கம் அதனை கடந்த pure abstract thinking ஆகும்.
ஆனால் ஏன் உலகக் சமயங்களிலும் தமிழர்களால் வளர்க்கபட்ட திருமாலியத்திலும் இந்த அம்மையப்பர் வடிவமும் ச்வலிங்க வடிவமும் இல்லை? அல்லது இருந்தது இருக்கின்றது ஆனால் சிவலிங்கம் என உணரப்படாது இருக்கின்றதா?
அது எப்படி இருந்தாலும் எனது அடிப்படை தத்துவ கேள்விக்கு: இந்த உலகம் ஏன் அப்படி எதற்கு அதில் ஓர் உடம்பொடு எனக்கு ஓர் பிறப்பு எப்படி அமைகின்றது என்பதற்கு இந்த சைவ சமயமே நல்லவோர் விளக்கம் தருவதால், நான் ஓர் சைவ ஆகின்றேன்.
உலகன்
தொடரும்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 10: சிவலிங்கச் சிந்தனை
எனக்கு ஓர் பலவீனம் உண்டு. எனது இயல்பாகவே அமைந்துவிட்டது. உணர்ச்சி வயப்பட்டு உள்ளங் கசிந்து நெக்குருகி பாடுவது ஆடுவது போன்றெல்லாம் எனக்கு முடிவதில்லை. நான் எழுதும் கவிதைகள் கூட சில சமயங்கங்களில் ஏமாற்றத்தால் வரும் சினத்தைத் தாங்கி வருமேத் தவிர அழுவதுபோன்ற அவலப் போக்கு இருக்காது, நான் அழுவதே மிகக் குறைவு.
உணர்ச்சி வயப்படுவது தவறு என்று கூறவரவில்லை. ஆனால் என்னுடைய இயல்பு அதுவல்ல என்றுதான் கூறவருகின்றேன். இதற்குக் காரணமே என் அறிவின் திமிர் என்று கூறலாம். எனக்கு எதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கையே ஏனது பிற வேட்க்கைகளை விட அதிகம். ஓர் பெண்ணால் வரக்கூடிய காதல் இன்பத்தை காம இன்பத்தையும் மறக்கவும் உதாசீனம் செய்யவும் முடியும். ஆனால் தத்துவ விசாரணை செய்வதை ஒதுக்க முடியாது. ஆழமான கவலைகள் வரும்போது அதனின்று மீள நான் அழுவதில்லை, ஆழமான ஓர் மெய்யறிவுப் பனுவலை படிக்கத் தொடங்கி அல்லது ஒன்றிற்கு உரை எழுததொடங்கி கவலை எல்லாம் மறப்பேன்
இதுபோலத்தான் இந்த சிவலிங்கத்தின் பொருளும் வாழ்க்கையை அது விளக்கும் சிறப்பும் என்றவாறு நான் புரிந்துகொண்டது.
வாழ்க்கையில் மிக எளிதாக காணக்கூடிய ஒன்று உயிர்கள் பெரும்பாலும் ஆனாய் பெண்ணாய் பிறப்பதும் காமக்கவர்ச்சியின் காரணமாக ஓர் ஆண் பெண்னை விரும்புவதும் ஓர் பெண் ஆணை விரும்புவதும் திருமணம் செய்துகொண்டு சந்ததி விருத்தி செய்வதும் ஆகும். ஆனால் ஒரு சிலர் இதனின்று விடுபட பெரிதும் முயன்று துறவு வாழ்க்கையை பின்பற்ற முயல்வர். சிலர் அந்த முயற்சியில் அகால மரணம் எய்துவதும் உண்டு.
எப்படி உயிர்கள் ஆணாய் பெண்ணாய் பிறக்கின்றன? எப்படி சொல்லி வைத்தார்போல் பெரும்பாலும் ஓர் ஆண் பெண்ணை விரும்புவதும் ஓர் பெண் ஓர் ஆனை விரும்புவதும் மெய்யாகின்றது?. இதில் சில பிறழ்ச்சிகளும் உண்டு, ஓர் ஆண ஆணையே விரும்புவதும் ஓர் பெண் இன்னொரு பெண்ணையே விரும்புவதும் மணப்பதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த பிறழ்ச்சிகள் எல்லாம் கைக்கிளை பெருந்திணை போன்று இயல்பானவை அல்ல. ஓர் சிறு தொகையினருக்கே உரித்ததாக விளங்குகின்றன.
ஆனால் என்னுடைய கேள்விகள் இவை அறமா மறமா ? என்பதல்ல. நான் அவற்ரைப் புரிந்துகொள்ள வேண்டும்: ஏன் இத்தகையப் பிறப்புக்கள் போக்குக்கள்? அதன் சூக்குமங்கள் என்ன?
நான் வேதாந்திகாக இருந்தால் இந்த கேள்வியே ஓர் பிழையானக் கேள்வி , அவன் அவள் அது என்றெல்லாம் காண்பதே ஓர் மாயை ஓர் கற்பிதம், அரவத்தின் மேல் பாம்பு எப்படி ஓர் கற்பிதமோ அதுபோல பரப்பிரமத்தில் மேல் இவை எல்லாம் கற்பிதங்கள் என்று கூறி இந்தக் கேள்வியே எழா வகை சிந்தனையை முடக்குவேன். ஜகத்குரு ஆதிசங்கரரே சொல்லிவிடார் அல்லவா?. புத்தர்களில் ஒரு சாரார் இன்றைய quantum mechanics கூறுவது போன்று நிரந்தரமான பொருள் ( substance) என்ற யாதும் இல்லை, எல்லாமே கணிகங்களின் ஓயாத ஓட்டம். இந்த ஓட்டத்தைத்தான் நான் பொருள் என்று கற்பித்து மயங்குகின்றோம் என்பர்.
இதனை எல்லாம் மறுக்கத்தான் மெய்கண்டார் அவன் அவள் அது எனுமவை என்று கூறி பின் தொகுத்து சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் என்றார். அது என்று சுட்டப்படும் பொருள் எனது கற்பிதம் அல்ல. உலகில் அது ஒன்றாக இருக்கின்றது. என்னைப் போல இன்னும் எத்தனையோ பேர் அது, அவன் அவள்’ என்றெல்லாம் சுட்டி அறியும் போது பலருக்கு உண்டாய் விளங்கும் பொருள் கணிகங்கள் தொகுப்பாக அல்லது குவாந்தம் துகள்களின் சாரைப் பாம்பு ஓட்டம் போன்ற ஒன்றாக உருக்க முடியாது.. நான் இருக்கின்றேன் உடம்பெடுத்து ஓர் உயிராக இருக்கின்றேன். இந்த உடம்பை இழந்த பிறகும் ஒன்றாய் பரகாயத்தில் புரியட்டத் தேகம் எனும் மந்திர உடம்போடு இருந்து மீண்டும் பிறப்பெடுக்கின்றேன்
ஆனால் ஏன் எப்படி ஆணாய்? பெண்னாய? இடையே காம ஈர்ப்புத் தட்ட?
எல்லாம் இந்த சிவலிங்கத்திலான் வருவது, திருமூலர் இந்த சிவலிங்கத்தை அண்டலிங்கம் பிண்டலிங்கம் ஆதமலிங்கம் சதாசிவலிங்கம் ஞானலிங்கம் சிவலிங்கம் என்றெல்லாம் வகுத்து உலகில் எவ்வாறு இந்த சிவலிங்கக் கூத்து நடக்கின்றதென்று ம்க ஆழமாக விளம்புகின்றார்.
இந்த சிவலிங்கம் என்பது சிவ தத்துவங்கலாகிய நாத விந்துக்களின் இணைப்பு. தூணாக நிற்பது நாதம், பீடமாக தாங்குவது விந்து. உயிரில் பதியும் பிண்டலிங்கம் நாதம் மிக்கிருந்து விந்து குறைந்திருக்க, ஆண பிறப்பு; விந்து மிக்கிருந்து நாதம் குறைந்திருக்க பெண் பிறப்பு. இந்த நாதக் குறைவு விந்துப் பசியாக் விந்துக்குறைவு நாதப் பசியாக வெடிக்க இவையே ஆணகள் பால் பெண்கள் மேல் எழும் காமவேட்கையாகவும் பெண்கள் பால் ஆண்கள் மேல் எழும் காமவேட்கையாகவும்ம் தோன்றுகின்றன.
இவையே ஆணமை பெணமை பிறப்புக்களின் அவர்களிடையே முகிழும் மிக வன்மையான காமவேட்கையின் தோற்றத்தை சைவம் விளக்கும் விதமாகும்.
ஐரோப்பியர்கள் X chromosome Y chromosome என்றவாறு சில வேத்தியல் கூறுகளையும் மற்றும் சில சுரப்பிகளையும் வைத்து இதனை விளக்கமுயல்வர் ஆயினும் எவ்வாறு இந்த வேத்தியல் கூறுகள் அமைகின்றன எவ்வாறு இந்த சுருப்பிகள் முதலில் உடம்பில் வந்தமைகின்றன என்பதற்கு அங்கு விளக்கம் இல்லை, அங்கு தத்துவ விசாரணயின் ஆழம் இல்லை. அவர்களால் கருவிகள் வழி கண்டும் அளந்தும் நிறுத்தவல்ல பொருட்களையே பொருட்களாகக் கொண்டு விளக்க முய்லவர். பொறிலியப் பார்வையிலேயே அடங்கி விடுவர்.
ஆனால் இந்த சிவத்தத்துவங்களாகிய சிவலிங்கமாக தோன்றும் நிற்கும் நாதவிந்துக்கள் என் பிறப்பினை எனக்கு விளக்குவதோடு ஏன் நான் காமவேட்கையுடையவனாக அதனால் ஓர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தைகளை ஈன்ரெடுக்கின்ரேன் என்ற வாழ்க்கையின் அடிப்படைப் போக்குகள் தெளிவாக, நான் மீண்டுமோர் நல்ல முடிவிற்கு வருகின்றேன்.
நான் சிவலிங்க வழிபாட்டை முதமைப் படுத்தும் சைவனாகவே வாழ முடிவு செய்கின்றேன்
அது மாத்திரமா?
சில குழப்பமான பிறப்புகட்கும் நல்ல விளக்கம் கிடைக்கின்றது. பிண்டலிங்கம் ஆன்மலிங்கம் போன்ற கருத்துக்கள் ஏன் திருநங்கைகளும் திருநம்பிகளும் மற்றும் இதனைப் போன்ற பால் குழப்ப பிறப்புக்களும் மெய்யாகின்றன என்பதையும் இவை விளக்குகின்றன. ஆன்மலிங்கம் விந்து மிக்கிருக்கும் சிவலிங்கமாக, உடம்பு நாதம் மிக்கிருக்கம் பிண்டலிங்கமாக ஆண் உடம்பில் பெண் உயிர் தோன்றி அதனை திருநங்கை ஆக்குகின்றது. இதேபோல மாறி வர திருநம்பிகள், பெண் உடம்பில் ஆண் உயிர் குடிகொள்கின்றது.
இதுமட்டுமல்ல. சிவலிங்கங்கள் பல வகைப்படும். ஒரே பீடத்தில் பல இலிங்கங்க்ள் உள்ல தோகைலிங்கம், பலபீடங்கள் ஒன்றித்து நிற்க அதிலே ஒரே இலிங்கத் தூண் தோன்றும் பற்பீடலிங்கம் என்றெல்லாம் பலவுண்டு, இவற்றில் ஏகதாரக் குடும்பம்( monogamy) பலதாரக் குடும்பம்( polygamy) என்றும் பற்கண்வ குடும்பம்( polyandry) என்றும் தொடர் ஏகதாரம் ( sequential monogamy) என்றெல்லாம் பல குடும்ப வகைகள் என்றவாறு ஏன் பல வகையான குடும்ப வகைகள் தோன்றுகின்றன என்பதை விளங்கிக்கொள்ல முடிகினறது.
அத்தோடு மட்டுமல்ல, காமத்தின் தோன்றம் விளக்கப்பட அதன் கடப்பும் விளக்கக் படுகின்றது. என்று ஓர் ஆன்மா தன்னுள் தான் நாதக்குறை விந்துக்குறை இல்லாது பூரண சிவலிங்கம் ஆகின்றதோ அதுபொழுது அதற்குக் காமவேட்கைத் தோன்றாது போய், அந்தக் காமமே இறைவன் மேல் கொண்ட தூய அன்பாக பத்தியாக உருமாறுகின்றது.
இப்படி வாழ்க்கையையே பொய்யென்று மறக்கச் செய்யாது உண்மையென்று உணரச் செய்து அது இப்படிபட்ட சிவலிங்கத்தால்தான் அமைகின்றது என்று விளக்க நான் துணிந்தும் மகிழ்ந்தும் ஓர் சைவன் என்று கூறுகின்றேன். சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வாழ்க்கையையே ஆண்மை பெண்மை பிறப்பையே திருமண பந்தத்தையே மகட்பேறு மகிழ்வதையே புரிந்துகொள்ளுமா அமைந்திருக்கின்ற இந்த சைவ சமயமே எனக்கு நான் வேண்டும் விளக்கங்களைத் தருவதால் நான் ஓர் சைவன் என்று உலகெல்லம் அறிய பறை சாற்றுகின்றேன்
இதில் என்ன தவறு இருக்க முடியும்?
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 11: கண்திறப்புத் திருக்கூத்து
எனக்கு வியப்பினும் வியப்பாக இருப்பது மெய்கண்டார் சிவஞானபோதத்தில் தான் எழுதிய சூத்திரங்கட்கு தானே எழுதிய உரை உண்மையில் தொல்காப்பிய மரபியல் கூறும் காண்டிகை உரையாகும் என்பதை அதிஞர் உலகம் இதுவரை அறியாதிரூபதே. அத்தோடு சிவஞானபோதம் சூத்திரங்களின் நடையைப் பார்த்தால் அங்கு விளங்கும் சொல்லாட்சியைப் பார்த்தால்ல் மெய்கண்டார் ஓர் ஆழமான் தொல்காப்பியப் புலவர் என்பதை மிக எளிதாகக் கண்டுகொள்ள்ளாம் என்றாலும் அறிஞர் உலகம் இதனை அறிந்ததாகத் தெரியவில்லை. ஆனால இதவரை எழுதப் பட்ட இராண்டாம் படிவ அதாவது உரைக்கு உரையாக வந்த சிவஞாண யோகிகளின் சிற்றுரை பேருரை அந்த பேருரைக்கு எழுந்த விளக்க உரைகள் மற்றும் வேறு வகையில் எழுதப்பட்ட பலவேறு உரைகளிலும் மெய்கண்டார் எழுதிய உரை ஓர் காண்டிகை என்று விளக்க்படாதே உள்ளது. சமகாலத்தவர் ஏது திருட்டாந்தங்களால் இந்த சிவஞானபோத்தை விளக்கியுள்ளார் என்று கூறும் அளவில் அவர் செய்த புரட்சியை கண்டுள்ளனர் என்றபோதிலும் தொல்காபியத்தோடு தொடர்பு படுத்தவில்லை.
ஆயினும் இப்பொழுது இன்னும் ஆழ சிந்திக்க ஐரோப்பியச் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க மெய்கண்டார் செய்த புரட்சியின் சிறப்பு வெளிப்பட்டு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
காண்டிகை உரை என்றால் ஒருவன் தான் கண்ட ஓர் ஆழுண்மையை பிறறுங் கண்டு தன்னோடு உடன்படுமாறு செய்ய, தக்க ஏதுக்களையும் எடுத்துக்காட்டுகளையும் தருவதாகும். தான் கண்டதை பிறருங் காண வைக்க, அவர்களும் கண்டு உடன்பட அதுவோர் கற்பிதம் அல்ல மித்தை அல்ல மாறாக ஓர் உலகியல் உண்மை ஆகின்றது. கயிற்றை பாம்பெனக் கண்டு நான் மிரண்டால் அந்த காட்சியை இன்னொருவன் காண நான் எந்த ர்ர்துவை எடுத்துக்காட்டினைத் தரமுடியும்? ஆதி சங்கரரின் மித்தியா ஞானம் என்பன மருள் காட்சிகள் பிராந்தி ஞானங்கள் மெய்கண்டார் கூறும் சுட்டுணர்வுகள் அல்ல. எப்படித்டான் இந்துமக்கள் இவ்வாறு கூறிய ஆதிசங்கரரி ஜகத்குரு என்றெல்லாம் கொண்டாடுகின்றார்கள் என்று தெரியவில்லை
இவ்வாறு தான் கண்டதை பிறருங் காண வைப்பதே காண்டிகை உரையின் பண்பு என்றால், என்னதான் நடக்கின்றது இங்கே?
உடன் நமக்குப் புரிகின்றது தான் கண்டதை பிறருங் காணவைப்பது திசை திருப்பி அவன் காண மறந்ததை காணாதிருப்ப்தை காண ஒதுக்கியதை எல்லலம் காண வைப்பது என்பதே காண்டிகை உரையின் பண்பு. பார்வையை அகலமாக்கி ஆழமாக்கி கண் விழிபித்தலாகும், கண் திறப்பித்தலாகும். ஆக காண்டிகை உரையில் அமைவது கண்திறப்பு திருவிளையட்டு!
நமக்கு இரண்டு கண்களும் நன்றாக அமைந்துவிட்டால் அவற்றோடு காது மூக்கு நாவு தோல் போன்ற ஏனைய புறக்ரணங்களும் நன்றாக அமைந்துவிட்டால் நாம் அவற்றொடும் அல்லது பல கருவிகளீன் துணையோடு எல்லாவறையும் பார்த்துவிடலாம் என்பதில்லை.
இந்த புறக்கரணங்களோடு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் எனும் அந்தகரணங்களும் இருக்கின்றன. ஐம்பொறிகளோடு தொழிற்படுவது மனம் ஒன்றுதான். இனி மேற்கொண்டு புத்தி ஆங்காரம் சித்தம் போன்றவையும் இந்த ஐம்பொறிகளோடு தொழிற்பட்டால்தான் மேற்கொண்டு சாதரண முறையில் பார்க்க முடியாததை பார்க்க முடியும் மேலான பார்வைகளும் கூடி வரும்
தொல்காபியர் காலத்தில் ஒன்றறிவது இரண்டறிவது என்றவாறு அடுக்கி முடிவில் ஆறறிவு வரை சென்றபோது அங்கு புலன்கள் வழி பார்ப்பதே அளக்கபப்ட்டது தெளிவு. ஆனால் ஐம்புலங்களும் அந்தகரணங்கள் நாங்கும் ஆகவே ஆறறிவும் அமைந்த பிறகு மேற்கொண்டு பார்வை வளர்ச்சிகள் இல்லையா?
உண்டு என்கின்றனர் சைவர்கள்.
இந்தத் தொகாப்பிய அறிவியல் ஆய்வுகளோடு தொடர்புடையதே மிகப்பண்டைய கலத்திலேயே இறைவனை அறிதுயில் மகிழும் திருமால் என்றும் நுதல்விழி நாட்டத்து இறைவனாக சிவபெருமானைக் கண்டதும் ஆகும். இவையெல்லாம் மனிதனுக்கு வெளிப்படாத திறங்களை வெளிபடுத்தும் மூர்த்தங்கள் ஆகும்.
பொறிலியப் பார்வை இயல்பானது ஆனால் நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்றெல்லாம் பார்வைகள் இருக்கின்றனவே? எப்படி?
முகத்தை பார்த்து ஒருவனின் அகத்தை அறிவது புறத்திலிருந்து அகத்து ஊடுருவிச் செல்வது நூலியப் பார்வை யாகும். ஓர் நூலைப் படிக்கும் புறவுருவாகிய எழுத்துக்கள் மறைய புதையுருவாகிய பொருண்மையே காணப்படுவது போல இது என்பதால் இது நூலியப் பார்வை ஆயிற்று. இங்கு ஒரே சம்யத்தில் இரண்டு பார்வைகள். எழுத்தைப் பார்க்கும் பொறிலியப் பார்வை, பொருண்மையைப் பார்க்கும் நூலியப் பார்வை என இரண்டு.
இனி உறங்கும்போது எல்லா புலங்களும் அடங்கி ஒடுங்கிக் கிடக்க கனவு காண வருகின்றது. அதனால் மந்திரவுலகு அறிய வருகின்றதே? இதுவே திருமால் அருளால் அமையும் அறிதுயில் ஆகும்.
இப்படிப்பட்ட அறிதுயில்கள் விழித்திருக்கும்போதே சிலருக்கு அமையும். அதுபொழுது அவர்கள் சித்தர் பெருமக்களில் ஒருவகையினர் ஆகின்றனர். இங்கு மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் எனும் நுதல்விழி நாட்டம் அமைவதின் இது நுதகியப்பார்வை ஆகின்றது. ஆக நுதலியப்பார்வை இருவகையாகின்றது.
இந்த நெற்றிக்கண் பார்வையே இன்னும் இன்னும் வளர்ந்து பரப்பார்வை அதீதப் பார்வை பஞ்சாக்கரப் பார்வை மகேசுரப் பார்வை காலாதீதப் பார்வை பேரருட் பார்வை என்றவாறு வளர்ந்து முடிவில் இறைவனது பார்வை ஆகிய பார்வையற்ற பார்வை ஆகின்றது. பிற எல்லாப் பார்வைகளிலும் ஏதாவதோர் முறையில் அந்நிய உணர்வினைத் தரும் சுட்டுணர்வு இருக்க, முடிவான பார்வையற்ற பர்வையில் எந்த சுட்டும் இல்லை என்பதால் அந்நியமும் இல்லை, ஆன்மா அனைத்தொடு அந்நியிமின்றி ஒன்றித்து அவையே தானேயாய் நிற்கும்
எப்படி ஒருவனின் பார்வைகள் இவ்வாறு வளர்ந்து உயர்ந்து முடிவில் பார்வையற்ற பார்வை ஆகின்றது ?.
எல்லாம் இறைவனது கண்திறப்பு திருகூத்தினால் தான்! எப்படிபட்ட திருகூத்து இது என்பதை அடுத்து காண்போம்.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 12: கூரதலறத் திருக்கூத்து
நம் கண்களைத் திறந்து உலகையே ஒன்றெனக் கண்டால் ‘யாதும் ஊரே யாவருங்க் கேளிர்’ என்று கணியன் பூதங்குன்றனார் போல பாடுவோம். இனி ஆழமான தத்துவச் சிந்தனையால் வரும் தெளிவு அறிவில் நிற்க ‘ஒன்றே குலம் ஒருவனேத் தேவன்’ என்று கூறி சமய பேதங்கள் இன பேதங்கள் போன்றவற்றைக் கடிவோம்.
இப்ப்டி உணர்வதற்கும் வாழ்வதற்கும் ஓர் அண்டப் பார்வை வேண்டும். இறைவனைப் பாட வரும் மாணிக்கவாசகர் ‘அண்டப் பகுதியின் உண்டை பிறக்கம்’ என்று அண்டவியல் கூறி இறைவன் இந்த அண்டமே இல்லத்தினுள் விழும் ஒளி கீற்றைபோல சிறிதாகின்றது இறைவனை ஒக்க என்று பாடுகின்றார்.
இந்த அண்டவியல் பார்வை சுமேருத் தமிழில் பல இடங்களில் காணப்படும் ஒன்றாகும் சூருபாக்கின் நெறி எனும் நூலில்( கி.மு 3000 ) தொடக்க வரிகளே அண்டவியல் பார்வை தான். சூருபாக்கின் தொன்மையை கூற வரும் போது அண்டம் இருளிலே பண்டு கிடந்தபோதும் எரியை உற்பவைத்து அண்டதோற்றத்தை செய்தான் இறைவன் என்பதுபோன்ற ஓர் கருத்து விளங்குகின்றது.
எல்லா சிவஞானிகளின் இந்த அண்டப்பார்வை என்னை மகிழ்விப்பதொடு திருமுலர் கூறும் மிக நுட்பமான திருவண்டவியல் என்னை வியக்கச் செய்து சைவனும் ஆக்குகின்றது. திருமூலர் காணும் அண்டவியல் ‘பேதாண்டம்’ என்றோர் அண்டத்தையும் கொண்டு கூர்தலறக் கோட்பாட்டையும் அகப்படுத்திய ஓர் அண்டவியலாக இருப்பதைக் கண்டு நான் ஓர் சைவன் ஆம் ஓர் சைவன் மிக உறுதியாக என்று கூறி மகிழ்கின்றேன்
திருமந்திரத்தில் ஏழாம் தந்திரத்தில் வரும் கீழ் வரும் பாட்டைப் பாருங்கள். இதுவரை இதன் ஆழத்தையும் நுணுக்கத்தையும் அறிவியல் திறத்தையும் வெளிபடுத்துவதாக எந்த உரையும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். அதனால் யானே நான் புரிந்து கொண்ட அளவில் ஓர் உரை போன்ற விளக்கம் தருகின்றேன்
7( 2728)
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட, ஐங்கருமத் தாண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே
இங்கு எத்தனை வகையான
அண்டங்கள்? பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம், யோகாண்டம் மூதாண்டம் முத்தாண்டம்
மோகாண்டம் தேகாண்டம் தாகாண்டம் என்றவாறு ஒன்பது அண்டங்களக் காண்கின்றார். இவை
இருப்பதால் இந்த அணடமே பிரமாண்டம் ஆகின்றது என்பதொடு இவற்றை தனது ஐந்தொழிகளால் இயக்குகின்றான்
இறைவன் என்றும் கூறுகின்றார் திருமூலர்.
விளக்க உரை:
இந்த மாபெரும் பிரமாண்டம் என்பது பல அண்டங்களை தன்னுள் கொண்டு விரிந்திருப்பது. முதலில் ஐம்பூதங்களாகிய நீர் நிலம் வளி தீ விசும்பு ஆகிய பஞ்சபூதங்களால் ஆகிய ஒன்று. இதுவே பூதாண்டம். எல்லா உயிர்கட்கும் முதலில்
அறியவரும் அண்டம், ஐம்புலன்களாகிய கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற இவற்றால் நாம்
அறிய வரும் அண்டம்
அதனுள் ஐம்புல நுகர்ச்சிக்கும் மற்றும் எல்லா வகை போகங்களுக்கும் இடந்தரும் கூறாக போகாண்டம் இருக்கின்றது. தன்மாத்திரைகளாகிய சத்த பரிச ரூப ரச கந்தம் என்பர். இப்படிப்பட்ட புசிப்புக்கள் அல்லது நுகர்வுகள் இல்லாது நம்மால் வாழவே முடியாது. மேலும் போகம் என்பது உண்பது உறங்குவது காம இன்பம் தூய்ப்பது ஆடல்பாடல் வழியாக மகிழ்வது என்பன போன்றவையும் அடங்கும்
இவ்வாறு புசித்து பற்பல வினைகளைச் செய்ய, அவற்றில் நல்லவைகளையேச் செய்ய, ஆன்மாக்களை பக்குவத்தில் உயர்த்தி ஓங்கத்தரும் ஓகாண்டம் ( = யோகாண்டம்) இருக்கின்றது. ஓகாண்டம் என்றால் ஓங்கி உயர்ந்து செல்லத்தரும் அணடப் பகுதி என்று கொள்ளலாம். அனடத்தில் ஆதாரச் சக்கரங்கள் இருப்பதக பண்டு முதலே சுமேருத் தமிழ் காலத்திலிருந்தே தமிழர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் எழுப்பிய கோயில்களை ஏழு அடுக்குள்ள மலை( ஏழுமலை) எனவே எழுப்பியுள்ளனர். எகிப்து பிரமிடுகளும் ஏழு அடுக்கு உடையவைதான். மலை ஏறுவது பிரமிட் ஏறுவது போன்றான ஒன்றுதான் உயிர்களின் பிரபஞ்சச் செலவு என்பதாக இத்தகைய கோயில் அமைப்புக்களே காட்டுகின்றன.
இனி இந்த போகங்களையும் நுகர்வுகளையும் அதனால் மெய்யாகக்கூடிய பக்குவ முதிர்ச்சி உயிர் வகையில் கூர்ந்து மேலானப் பறவி அடைதல் போன்றவற்றை எல்லாம் கொண்டுள்ள மூலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் தந்து கொண்டே இருக்கும் ஒன்றாக மூதாண்டம் இருக்கின்றது. அதில் எல்லா உயிர்களும் அஞ்ஞான இருள்போக்கி முத்தி அடைந்து உய்யுமா செய்யும் ஞானதெளிவினை ஊட்டிக்கொண்டே இருக்கும் முத்தாண்டமும் இருக்கின்றது.
இங்கு ‘முத்தாண்டாம்’ என்பது ஒவ்வொரு உயிருக்கும் அதற்கேற்ற முறையில் முத்தி எனும் ஓர் நோக்கினை வாழ்க்கையின் முடிவை பிரபஞ்சச் செலவின் முடிவை நுதிப்பது பதிப்பது போன்றவையாகும். எல்லா உயிர்களும் குறிப்பாக ஆறறிவின் மாந்தர்கள் இதுதாம் வாழ்க்கையின் முடிவு என்றவாறு முத்தி கருத்து உருவாகி அகத்தே இருப்பதால் தான் எதிர்கால நோக்கினராக் வாழ்கின்றனர்.
இதுவே நமக்கு உயர்கள் தத்தம் வினைகட்கு ஏறப மேலான பிறவிகளை அடையும் வண்ணம் செயல்படும் பேதாண்டமும் இருப்பதைக் காட்டுகின்றது. ‘பேதித்தல்’ என்றால் பதவூழிகள் அதாவது கீழான ஓர் பக்குவத்திலிருந்து மேலான ஓர் பக்குவத்திற்கு பெயர்வது. ஐந்தறிவு உயிர் ஆறறிவு உயிராக உயர்வது ஆறறிவு உயிர்க்கள் பொறிலியப் பார்வைத் தொடங்கி இன்னும் இன்னும் மேலான நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற பார்வைகளைப் பெற்று பக்குவத்தில் உயர்தல் போன்றவையாகும்
இங்கு தான் சைவத்தில் கூர்தல் அறம் வெளிப்படுகின்றது. இது பேதாண்டம் எனும் கருத்திலும் அடுத்து வரும் “தேகாண்டம்’ எனும் கருத்திலும் வெளிப்படுகின்றது
உடலோடு வாழ்ந்து பல செயல்களை செய்யவும் அது பொழுது நல்லது எது கெட்டது எது என்று தெளிதற்கும் அடையப்படும் தெளிவிற்கு ஏற்ப உடல்களை தந்து உதவும் தேகாண்டமும், அந்த தேகத்தோடு வாழும் போது மரணத்தைத் தழுவாது இனிதே வாழத்தரும்படியாக மோக வுணர்வுகளைத் தரும் மோகாண்டமும் இருக்கின்றது. இனி அஞ்ஞானத்தையும் தீவினைகளையும் சுட்டெரித்து தகிக்கும் தீ நிறைந்த தாகாண்டமும் இருக்கின்றது. இத்தகைய பிரமாண்டத்தை தான் ஒருவனே மேம்பட்டிருக்கும் ஏகாந்த தற்பரமாக இறைவனே தமது ஐங்கருமத்தால் ஆண்டவாறு இருக்கின்றான் என்று ஞானசித்தர்கள் கூறுவர்.
குறிப்பு:
இந்த பிரமாண்டம் எனப்படுவது , எந்த புலனை தேர்ந்தெடுக்கின்றமோ அதற்குத் தக அது காணப்படும். மேலே காண்டவற்றோடு இன்னும் பலவகையிலும் காணப்படும். வள்ளலாரின் பாடல்களைக் காண்க. ஆயினும் இந்த பிரமாண்டம் பௌதிகப் பொருள் மாத்திரம் அல்ல - ஐம்பூதங்களால் ஆகிய ஒன்று மாத்திரம் அல்ல. உயிர்களும் உடம்பினைத் தந்து அவர்களது பக்குவத்திற்கு புதிய உயர்ந்த உடம்புகளைத் தரும் ஒன்றாகும் போது அது சித்துப்பொருள் உள்ள ஒன்றும் ஆகின்றது. இறைவனே இங்கு
அநாதி முத்த சித்துருவாக நின்றும் தனது ஐங்கருமத்தால் உயிர்க்ட்கு உடம்பு
தருவதோடு, அவர்கள் செய்கின்ற வினைகட்கு ஏற்ப பக்குவ முதிர்ர்சியையும் தந்து முத்தி
நோக்கிச் செல்லவும் ஆடுகின்றான், அத்தோடு பல செயல்களைச் செய்ய வைத்து கற்கவைத்து ஞானத்தெளிவினைத் தந்து வீடுபேறு அடைய உதவும் அண்டமாகவும் இந்த
அண்டத்தை ஆட்டுகின்றான். இவற்றையெல்லாம் தொகுத்துக் காண , இந்த பேரண்டமே இறைவன் சிவசத்தியாக எழுந்து ஆடும் திருகூத்தாகவே ஞானவான்களால் உணரப்படும் என்பதாம்
இங்கு கூர்தல் கோட்பாடு உண்டென்ற போதிலும் டார்வின் ( Darwin) போன்றோர் ஒவ்வொரு உயிரும் அவை செய்கின்ற வினைகட்கு ஏற்பத்தான் கூர்தல் என்றோ இந்த கூர்தலும் முத்தி நோக்கி செல்லும் ஒன்று என்றோ இல்லை, மேலும் பொதுவாக எந்த ஐரோப்பியச் சிந்தனையிலும் இல்லை. என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். திருமூலர் போன்ற சிவஞானிகள் ஐரோப்பிய விஞ்ஞானிகளை விட இன்னும் ஆழமாக அண்டத்தை பற்றியும் அதில் எவ்வாறு உயிர்கள் கூர்ந்து பரிணாம வளர்ச்சி அடைகின்றன என்பதைப் பற்றியும் ஆழச் சிந்தித்துள்ளனர் என்பதை இப்பாடல் நலமே காட்டுகின்றது.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 13: புண்ணியப் பாவ திருகூத்து-1
என்னக் கவரந்த மெய்யறிவு நூற்களில் ஓர் சிறப்பான இடம் வகிப்பது அருணந்தி சிவாச்சாரியாரின் ‘இருபா இருபது” எனும் நூலாகும். பல உரைகளைப் படித்துப் பார்த்தேன். அவையெல்லாம் அதன் ஆழத்தைக் கொண்டு வராது போக யானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதினேன். அந்த நூலில் புதைந்துகிடக்கும் எல்லா ஆழத்தையும் வெளிபடுத்தும் நோக்கில் இந்த உரையை எழுதி மகிழ்ந்தேன். உரையும் அவ்வாறே அமைந்துவிட, நான் பெரிதும் மகிழ்ந்தேன்
இந்த நூலை நான் படிக்கத் தொடங்கியது இலண்டனில் முதுகலைப் பட்ட படிப்பை மேற்கொண்ட பொழுதே யாகும். இதன் அடிப்படையை விளக்கி ஓர் கட்டுரையும் எழுதி நல்ல பாராட்டுகளையும் பெற்றது நினைவில் இருக்கின்றது. அது பிறகாலத்தில் ‘சைவ சித்தாந்தம் எனும் காலாண்டு இதழில் வெளிவந்துள்ளதாக நினைவு..
புண்ணியம் எது பாவம் எது என்பதே அடிப்படைக் கேள்வி. இதனையே இருவினைச் சிந்தனை என்பார்கள். ஆங்கிலேயர்கள் இதனை எல்லாம் Emotive Theory என்றவாறு இறைவனோடு தொடர்பில்லாத முறையிலேயே விளக்குவர். ஆயினும் தமிழ் மரபில் மிகத் தொன்மையான தத்துவக் கேள்வியாகும் இது. முதற் சங்கத் தமிழில் அப்பொழுது வாழ்ந்த சித்தர்கள் மாந்தர்கட்கு வரும் நோய்களைப் பற்றி அலசும் போது அவை பாவம் செய்வதால் வருவன என்பர். செய்கின்ற ஓர் செயல் ‘பாவம்’ என்றால் அதனால் பல நோய்கள் வரும் என்று கூறி அதற்குத் தக மருத்துவம் கூறும் பழக்கம் அங்கிருந்ததைக் காண்கின்றோம்
மேலும் இதுவரை கிடைத்த எழுதப் பட்ட நூற்களில் உலகிலேயே மிகத் தொன்மையானது சூருபாக்கின் ‘நெறி’ (nari) எனும் நூலாகும். நன்னெறி யாது என்பதை சூருப்பாக்கு தன் மகன் உபர்தூதுக்கு உரைப்பதாக் இந்த நூல் தொடங்குகின்றது.
காண்க:
4. u-ba gestu.tuku inim.galam inim.zu-a kalam-ma
ti-la-am ( In those days, the intelligent one, who made the elaborate words,
who knew the (proper) words, and was living in Sumer .
ஊப கெஸ்த்துதொகு எனம்கலம் எனம் சூவ களம்ம தில்லாம்
5.Suruppak gestu.tuku inim.galam inim.zu-a kalam-ma ti-la-am ( Suruppak - the
inelligent one, who made the elaborate words , who knew the (proper) words, and
was living in Sumer
5. சூருபாக்கு கெஸ்த்துதொகு எனம்கலம் எனம் சூவ களம்ம தில்லாம்
இங்கு ‘கெஸ்த்து” என்றால் ‘ஞானம், அறிவு” என்றெல்லாம் பொருள்படும் ‘அகத்தியம், அகத்தியர்’ என்ற சொற்கள் இதனடியாக பிறந்துருக்கின்றன. ‘எனெம்,கலம்’ என்றால் ‘அருங்கலச் செப்பு’ என்று பொருள் படும். ‘என்’ என்பது வினைச்சொல்ம் பெயர்ச்சொல்லுமாம். இங்கு ‘என்.அம்” பெயர்ச்சொல் ‘சொற்கள்
என்று பொருள்படும்
இதே நூலில் ‘ஏது நுதலிய முதுமொழி” என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்குச் சான்றாக பல கிளவிகளைக் காணலாம். ஏரணவியல் சிந்தனை இப்படிப்பட்ட ‘ஏது நுதலிய முதுமொழி” வழியாகவே தோன்றியுள்ளதை பல சான்றுகளோடு தனியோர் கட்டுரையும் எழுதியுள்ளேன்
இந்த வரலாற்று உண்மை யாதை உணர்த்துகின்றது?
மெய்யறிவுச் சிந்தனையின் தோற்றமே ‘இருவினை’ என்னும் புண்ணியபாவச் சிந்தனையின், அறம் எது மறம் எது என்ற கேள்வியேயாகும். இதனைத்தான் அருணந்தி தன் குருவாகிய மெய்கண்டாரிடம் கேட்டு பலவாறு குடைகின்றார், காண்க
பாடல் 14
அற்றதென் பாசம் உற்றது உன் கழலே
அருட்டுறை உறையும் பொருட்சுவை நாத
வேறென்று இருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ!
aRRathen paacham uRRathu un kazalE
aruttuRai uRaiyum porutchuvai n-aatha
vERenRu irun-tha vennai yaanpeRa
vERinmai kaNta meykaNta thEva!
Oh! Thou the divine who hast seen TRUTH, because of thy GRACE, I have
transgressed the chains that bind me to the worldly and attained the realms of
Thy DANCE. Oh! Thou who resideth in the SPACE OF ARUL and discloses Thyself as
the excellent in all kinds of taste, it is because of Thy grace that I have
overcome the alienation and gained for myself Being the SAME as Thee,
Notes: kazal, though means the anklets but metaphorically stands for the DANCE,
the sivaththaandavam.
இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாகா
iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa
Now I have some questions pertaining to iruvinai or mUlakarma. If
it is said they are none other than the pleasant and unpleasant experiences
that are produced by effecting actions bodily, mentally or verbally, then it
would mean that karma is something ephemeral, that which gets destroyed
immediately after the onset and hence not something that accompanies one firmly
as a help in self development throughout the whole of existence.
இவ்வாறான குடைதலுக்கெல்லாம் விளக்கமாகத்தான் மெய்கண்டார் தமது விளக்கமாக சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்தில் திறன்பட விளக்குகின்றார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த சூத்திரத்தின் நுணபொருளை அடுத்தக் கட்டுரையில் காண்போம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. அறநெறிச் சிந்தனை மாந்தர்கட்கு இயல்பாகவே அமைந்தது. நாலடியார் திருக்குறள் திரிகடுகம் போன்ற பதுணென் கீழ்கணக்கு நூற்க்ளைக் கற்றோ வடமொழி தர்ம சாத்திரங்களைல்க் கற்றோ நாம் இருவினைச் சிந்தனைக்கு வருவதில்லை. இந்த சிந்தனை இயல்பபகவே அமைந்த ஒன்று எனும் போது அது எப்படி அமைகின்றது ஏன் அது மாந்தர் அறிவில் திகழ்கின்றது என்ற கேள்விகள் எல்லாம் எழ அதற்கு நூலியல் அறிவியல் சான்ற ஓர் விளக்கத்தை மெய்கண்டார் தன் சிவஞானபோதத்தில் தந்து தமிழச் சிந்தனைக்கே ஓர் சிறப்பு சேர்க்கின்றார்.
அடுத்து வரும் சில கட்டுரைகளில் இதனைப் பற்றியே பேசுவோம்
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 14: புண்ணியப் பாவ திருகூத்து- 2
சிந்திக்கும் திறத்து மாந்தர்கள் அனைவருக்கும் புண்ணியம் எது பாவம் எது என்று தேரும் திறன் இயல்பாகவே அமைந்துவிட்டது. நாகரீகம் அறியாது கற்கால வாழ்க்கையே வாழும் மாந்தர்களிடையேயும் இந்த இருவினைத் திறன் இருக்கத்தான் நல்லொழுக்கத்தை நிறுத்தும் வகையில் சில வரம்புகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. சைவ சமயத்தில் பசுவாகிய அதாவது பாசங்களால் கட்டப்பட்ட ஆன்மாக்கள் எனும் போது இது ஓரறிவு முதல் ஆறறுவு வரை எல்லா உயிர்களையும் உட்படுத்தும். ஆக ஐரோப்பியர்களின் கிறித்து சமயத்தின் ‘ soul’ எனப்படுவது சைவத்தின் பசு அல்ல. ஆனால் ‘சித்துப் பொருள்’ எனும் அர்த்தமுடைய psychic entity என்பதொடு ஒத்துவரும். கொசுவும் ஓர் பசுதான் , ஓர் சித்துப்பொருளாகிய psychic entity தான்
புண்ணியப் பாவச் சிந்தனையின் இருவினைத் திறன் மெய்கண்டார் கருத்துப்படி ஓர் சாதாரண விசயம் அல்ல. இதனைப் பற்றி மிக ஆழமாக சிந்தித்து இதுவே உயிர்கட்கு ஓரறிவாகப் பிறந்து ஆறறிவு மாந்தனாய் கூர்வதற்கும் பிறகு மாந்தனாய் பிறந்து அந்தப் பிறப்பிலும் பக்குவத்தில் உயர்ந்து உயர்ந்து முடிவில் இந்த இருவினைத் திறத்தையும் கடந்து இறைவனோடு ஒன்றித்து வீடுபேறு அடையவும் உதவுகின்றது என்று கூறுகின்றார்.
ஆக இது ஓர் உதவி, ஓர் தற்காப்பு உதவி. எல்லா உயர்களும் உயர்ந்து உயர்ந்து உயிர் வகையில் உயரவும் மாந்தனாய் பிறந்த பின் இன்னும் பக்குவத்தில் உயரவும் உதவியாக இருப்பது இந்த இருவினைத் திறந்தான்.
புண்ணியம் செய்ய மேலெழுந்து பக்குவத்தில் உயர்ந்து கூர்தல் மெய்யாகி உயர, இதற்கு மாறாக பாவம் செய்யும் போது கீழிறங்கி இருந்த பக்குவத்தையயும் இழக்க நேரிடுகின்றது. ஆக இந்த ஆன்மாக்கள் கீழிறக்கம் அடையாது உயர்ந்து உயர்ந்து செல்ல இறைவன் அருளகின்ற ஓர் அகத் தற்காப்பு திறனே இந்த இருவினைத் திறன் ஆகும்..
மெய்கண்டார் இதனை ஓர் உவமை வழியாக விளக்குவார். ஓர் அரசன் தன் கோட்டைக்கு தீயவர்கள் புகுந்துவிடாது எப்படி பாடிகாவல் எனும் தற்காப்பிற்கு வீரர்களை அமைத்து காவல் செய்கின்றானோ அதுபோல இறைவன் அனைவர் அகத்தும் உள்ளுணர்வாய் புண்னியம் இது பாவம் இது என்று உணருமா ஓர் திறத்தை அருளியிருக்க அதுவே இந்த இருவினைத் திறன் ஆகின்றது என்கின்றார்.
சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம் இரண்டாம் படிமெய்
மேற்கோள்: இனி,இவ்வாமான்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது
ஏது: ஒரு நகரியைக் காப்பான், பாடிகாவல் இட்டாங்கு அவை தனது ஆக்கினை யாகலான்
விளக்கம்:
எங்கு அதிகாரம் இருகின்றதோ, தலைமைத்துவம் இருக்கின்றதோ அங்கிருந்தே அனைத்தையும் நடாத்திச் செல்லும் ஆணைகளும் பிறக்கும். இந்த ஆணைகள் வழியேதான் நடக்குமொன்றினை துலாபாரத்தில் ஏற்றி, அது சரியானது அல்லது தப்பானது என்றவாறு நீதிகள் நியாயங்கள் என்ற வகையில் தீர்ப்புகள் வழங்கப்படும். அந்த தீர்ப்புகட்கு ஏற்ப பரிசில்களோ அல்லது தண்டனைகளோ கொடுக்கவும் படும். இறைவன் தற்பரனாக, எல்லா ஆன்மாக்களின் தலைவனாகவும் நிற்பதால், உலகியல் தானைத் தலைவர்களும் சர்வவல்லபனாகிய இறைவனுக்கு தொழும்பாகியே நிற்பதால், அவனது ஆணையின் வழியே தான் இவ்வுலகு நடக்கின்றது. எல்லா ஆன்மாக்களுக்கும் அவனோடு யாண்டும் பிரிக்க முடியா வகையில் இருப்புநிலை பெற்றிருக்கும் அந்நிலலையில், சுத்தாசுத்த விகற்பத்திறன், மன்னர்கள் வழியுமின்றி மதத்தலைவர்கள் வழியுமின்றி, இறைவனது ஆணையின் வழியேதான் பிறக்கும், பிற வழிகளில் அல்லவென்றது.
உலக வாழ்க்கையில் எல்லார் அகத்தும் இருக்கும் இறை ஆணைக்கு உட்பட்டது புண்ணியம் என்றும், உட்படாது பிறழ்ந்து செல்வது பாபம் என்றும் உணரப்படும் என்பதாம்.
சாதாரண வாழ்க்கையில், பெற்றோர்கட்கு உட்பட்டு குழந்தைகளும், தலைவர்க்கு உட்பட்டு தொண்டர்களும், முதலாளிக்கு உட்பட்டு தொழிலாளிகளும் . ஆசிரியர்க்கு உட்பட்டு மாணவர்களும், அதிகாரிக்கு உட்பட்டு அலுவலர்களும் , தளபதிக்கு உட்பட்டு போர்வீரர்களும் என்றவாறு வாழ்வது போக்கி கழன்று விடுபட்டு, அகத்திலிருக்கும் இறைவனை அறிந்து அவனே இவ்வாறு வரும் அனைத்திற்கும் மூலமாக, மெய்யான தற்பரனாக இருப்பதை உணர்ந்து யார் செயல்படுகின்றார்களோ, அவர்களே மெய்யான இருவினைவாய்ப்பட்டு, மெய்யாக எது புண்ணியம் எது பாபமென்றறிந்து பழுதற்ற சிவவாழ்க்கை வாழ்ந்து உய்வர் என்பதாம்.
இறைவன் தன்பால் சகசமாகவே ஆன்மாக்களை, காந்தம் இரும்பை வசிப்பது போன்று வசிப்பதே இங்கு அதன் செயல்பாட்டினைக் கருதி "ஆணை" என்று உவமிக்கப்படுகின்றது. மேலும் 'இதைச் செய்' 'அதைச் செய்யாதே' என்றவாறு ஞானிகள் உள்ளத்தே வெளிப்பட்டு இவ்வாறானா தகைப்புக்களையும் விடுப்புக்களையும்
தந்து நல்லது கெட்டது உணரச் செய்வதும் இறைவனே என்ன, அரசனது செய்கைப்போன்று இது இருக்க, அதன் பொருட்டும் இதனை 'ஆணை' என்றதுமாம்.
இந்த ஆணையின் உண்மை, 'புண்ணியம்" 'பாவம்' என்ற மதிப்பீடுகள் வாழ்க்கையில் வழங்குவதும் , புண்ணியம் செய்வதால் நன்மையும் பாவம் செய்வதால் தீமையும் வந்து சேர்வது உலகியல் உண்மைகளாக இருக்க, அவற்றின் புதையுருவாக இது இருக்கின்றது என்று பெறப்படுகின்றது என்பதாம். செய்கின்ற புண்ணிய பாவங்கட்கேற்ப வந்தமைவது மூலகன்மம் எனப்படுவது. சிந்திக்கும் திறனிலா உயிர்கள் மாட்டும் இதுவுண்டு.
அணுத்துவப்பட்டு அருட்பதிவின் பற்பல வினைகள் செய்து அதனைத் தீர்த்து, படிப்படியாக பரத்துவம் எய்தி வீடுபேறு உறுதற்கு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் ஆன்மாக்களுக்கு அது கிட்டும் வரை பிறப்பு உண்டென கன்மமும் உண்டாம். ஓர் பிறவியின் போது செய்கின்ற வினைகட்கு ஏற்பவே மூலகன்மம் அமைகின்றது, அதற்கேற்பவே அருட்பதிவும் நடக்கின்றது , இவற்றிற்கு எற்பவே அடுத்த பிறப்பு என்பதாக கன்மத் தளையைப் பற்றி அடுத்த பல எடுத்துக்காட்டுகள் வழியாக, மூலனைக் கண்ட முனிவப் பெருந்தகை விளக்கியருளுகின்றார். இங்கு சைவத்தின் கூர்தல் அறக்கோட்பாடும்( evolutionary
theory) விளக்கப்படுவதைக் காண்க.
இனி எப்படி வாழ்வது என்பதற்கு ஓர் நல்ல விளக்கமும் கிடைக்கின்றது. இறைவனது ஆணை என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்கு புண்ணிய பாவ அறிவு இருக்கின்றது. அந்த ஆணையும் இறைவன் தான்பால் ஓர் காந்தம் இரும்பு துணடுகளை தன்பால் ஈர்ப்பதுபோல் ஈர்ப்பதால் வருவது.
இனி இறை நம்ப்பிக்கை உடையார் இதனை உணர்ந்த்து தன செயல்களை சோதித்து அவை பாவமாக இருக்கக்கூடாது புண்ணியமாகவே இருக்க வேண்டும் என்று செயல்படுவர். இறைவன் இல்லை என்று தீர நம்புகின்றவர்கட்கு புண்னிய பாவ சிந்தனை இராது. நல்லது கெட்டது என்று சீர்தூக்கிப் பார்த்தாலும் அதனை இனிமை கசப்பு இன்பம் துன்பம உலாபம் தருவது நட்டம் தருவது என்றவாறே கணித்து தனக்கு எது இன்பமோ பயனுள்ளதோ அதனையே செய்தவாறு வாழ்வர்.
இதனால் இறை நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் ஒழுக்க சீலர்கள் புண்ணியமே செய்கின்றவர்கள் என்றும் கூற முடியாது. சமயத்தின் பேரில் பல கொடுமைகளும் நடக்கின்றன.
வேதங்களை ஆதாரமாக் கொண்டுதானே பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் ஆக்கி அவர்கள் உரிமைகளைப் பரித்துப் பாவமும், தம இன மக்களையேத் தீண்டத்தகாதவர்கள் என்று அடிமைப் படுத்தும் கேவலப்படுத்தும் சாதி வெறியும் தெய்வ நம்பிக்கையின் பேரில்தானே நடக்கின்றது?
இவர்கள் பொய் ஆத்திகர்கள், மெய்யான ஆத்திகர்கள் அன்பே வடிவானவன் இறைவன் என்று இறைவனையும் சரியாகப் புரிந்துகொண்டு அதன்வழி இறைவனை அருளோன் என்றெல்லாம் உணர்ந்து அதன்வழி வாழ்கின்றவர்கள் ஆகும்
சிலர் நாத்திகம் பேசுவர். ஆனால சமுதாயத்தில் பாவங்கள் செய்யப்பட்டால் அதனை கடுமையாக எதிர்ப்பவர்களும் அவர்களே ஆக, இவர்கள் சொல் அளவில் நாத்திகம் பேசினும் செயல் அளவில் உண்மையன இறை நம்பிக்கை உடைய பக்தர்களே ஆகும்.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 15: இருவினையும் கூர்தலறமும்( Ethics and Evolution)-1
அமெரிக்காவில் ஓர் பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த அண்டம எப்படிப்பட்டது? தானே இயங்கும் ஓர் தானியியங்கியா? அல்லது அறிவார்ந்த ஓர் சித்துப்பொருளின் ஆட்சியில் ( intelligent design) இருப்பதா? என்றெல்லாம் கேள்விகள் மிகச் சூடாக விவாதிக்கப்படுகின்றன. அத்தோடு வருவதே கூர்தலறக் கோட்பாடும். டார்வின் போன்றோர் இறைநம்பிக்கை உடையவர் என்றாலும், உயிர்கள் கூர்வதற்கும் இறைவனுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகக் அவர் கூறவில்லை என்பதொடு ஐரோப்பியர்கள் யாரும் கூறுவதாக கூறி இருப்பதாகவும் தெரியவில்லை,
ஆனால் சைவத்தில் அப்படி அல்ல. தொல்காப்பிய காலத்திலிருந்தே நம்மிடம் கூர்தலறக் கோட்பாடு உண்டு. மாணிக்கவாசகரும் தனது சிவபுராணத்தில் ‘புல்லாகிப் பூடாகி” என்றெல்லாம் பாடி எவ்வாறு தான் கூர்ந்து கூர்ந்து வளர்ந்து மானிடப் பிறவிப் பெற்றும் பிறகு சைவனாக வளர்ந்து சிவஞானம் பெற்று இப்பொழுது இறைவனது திருவடிகளை அடைந்து வீடுபேறு அருளப்பெற்று இந்த பிர்பஞ்சச் செலவை முடிக்கின்றேன் மீண்டும் பிறவாமை மகிழ்கின்றேன் என்கின்றார்
இப்படிப்பட்ட பிரபஞ்சவியலும் அதில் எவ்வாறு எல்லா ஆன்மாக்களும் வீடுபேற்றை அடையவே உழல்கின்றன என்றெல்லாம் எந்த ஐரோப்பிய தத்துவஞானியும் விஞ்ஞானியும் சமயவாதியும் கூற வில்லை,
சைவ சிந்தனைக்கு மிக நெருங்கி வரும் Martin Heidegger என்பாரும் உலகையே ஆராய வேண்டும் அதில் நம் இருப்பையே ( existence Da-sein)) ஆராய வேண்டும் என்றெல்லாம் கூறினாரேனும் மரணத்தையே நோக்கி வாழ்க்கை இயங்குகின்றது என்றும் கூறி மரணத்திற்கு மேல் முத்தி எனும் வீடுபேறு இருப்பதை அவர் அறியவில்லை, அதனால் அவரது தத்துவ விசாரணகள் அவரே ஒத்துக்கொண்டவாறு முடிவற்ற ஒன்றாகவே திகழ்கின்றன. அவரது மிகச் சிறப்பான நூலாகிய Being and Time முடிவுறாதே முடிகின்றது.
இதேப் போலத்தான் டார்வினது கோட்பாடும். ஓர் உயிர் அதற்கு அமையும் சூழ்நிலைக்கு ஏற்ப தனை மாற்றி அமைக்கொண்டால் அது தொடர்ந்து வாழ்கின்றது, பல மாற்றங்களை அடைகின்றது இல்லையேல் மறைந்து இல்லாது போகின்றது என்கின்றார். இங்கு Natural Selection, Survival of the Fittest போன்ற கருத்துகள் மும்மொழியப்பட்டு உலகெல்லாம் பரவி உலகாயத நாத்திக வாதத்திற்கு வலு சேர்த்துள்ளன.
ஆனால் நம் மெய்கண்டார் மிகச் சிறப்பாக இவ்வாறான கூர்தல் அறத்திற்கும் புண்ணியம் பாவம் எனவரும் இருவினை சிந்தனைக்கும் முடிச்சு போடுகின்றார். ஓர் உயிர் புண்ணியம செய்தால் உயரும், பக்குவதில் முதிரும் பாவம் செய்தால் பக்குவத்தில் உயராது அப்படியே கிடக்கும் அல்லது எதையாவது இழக்கும் என்கின்றார்.
மெய்கண்டார் டார்வினை எல்லாம் அறிந்தவர் அல்ல. ஆனால் உயிர்கள் கூர்கின்றன, மானிடராய் ஆறறிவு உயிர்களாய் வாழ்வோரும் பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்கின்றனர் என்றெல்லாம் அறிந்தவரே
உயிர்களை எல்லாம சகலர் என்றும் பிரளயாகலர் என்றும் விஞ்ஞானகலர் என்றும் வகுத்து அவர்கட்கு எவ்வாறு இறைவன் பின்நின்றும் முன்நின்றும் பிறகு நேராக அகத்திருந்தும் போதிக்கின்றான் என்று கூறியவர் அல்லவா?
அவர்தான் ஓர் வயல் எவ்வாறு உழப்படும் திறத்திற்கு ஏற்ப பயன்களைத் தருகின்றதோ அதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர் செய்கின்ற செயல்கட்கு ஏற்ப வினைப்பயன்களை அருளுவன் என்கின்றார். புண்ணியம் செய்தால் மல நீக்கம் போன்றவை அதனால் பக்குவத்தில் உயர்தல் போன்றவறை, பாவம் செய்தால் ஆணவ மலத்தின் அதிகரிப்பு அதனால் பல இழப்புக்களும் வீழ்ச்சிகளும் என்கின்றார்
அணுத்துவப்பட்டு அருட்பதிவின் பற்பல வினைகள் செய்து அதனைத் தீர்த்து, படிப்படியாக பரத்துவம் எய்தி வீடுபேறு உறுதற்கு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் ஆன்மாக்களுக்கு அது கிட்டும் வரை பிறப்பு உண்டென கன்மமும் உண்டாம். ஓர் பிறவியின் போது செய்கின்ற வினைகட்கு ஏற்பவே மூலகன்மம் அமைகின்றது, அதற்கேற்பவே அருட்பதிவும் நடக்கின்றது , இவற்றிற்கு எற்பவே அடுத்த பிறப்பு என்பதாக கன்மத் தளையைப் பற்றி அடுத்த பல எடுத்துக்காட்டுகள் வழியாக, மூலனைக் கண்ட முனிவப் பெருந்தகையாகிய மெய்கண்டார் விளக்கியருளுகின்றார். இங்கு சைவத்தின் கூர்தல் அறக்கோட்பாடும்( evolutionary theory) தெளிவுறுவதைக் காண்க.
எடுத்துக்காட்டு 2.2.1
உள்ளதேத் தோற்ற உயிர் அனையும் அவ்வுடலில்
உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே -- வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யே போல்
செய்வன்; செயல் அணையா சென்று
செயல் அணையா சென்று:
உலகில் இச்சிப்பதை பற்பல முயற்சிகள்வழி, தக்க வினைகள் ஆற்றி அடைந்து விடுவதுவது போன்று, பிறப்பொன்றினை அடைவதும் அதற்கேற்ற தனுகரணபுவன போகங்களைப் பெறுவதும் அல்ல; மானிடச் செயல்களுக்கு ஒரு வரம்புண்டு; இன்ன பிறப்புதான் வேண்டும் என்று இச்சித்து அதனை அடையும் பொருட்டு செய்யக்கூடிய வினைகள் என்று யாதும் இல்லை.
மற்று ஒரு பிறப்பு எவ்வாறு அமைகின்றதெனில்,
வள்ளலவன் செய்வன்:
கட்டின்றிய கருணை வடிவத்து, வேண்டுவார்க்கும் வேண்டுருவைத் தரும் வள்ளலாக அனைத்துயிர்களோடு பிரிவற நிற்கின்ற இறைவன், அவ்வவர் செய்த கருமங்கட்கு ஈடாகவே, ஒரு பரிசாகவே ஓர் பிறப்பினைத் தருவன் என்பதாம். நற்பிறப்பும் எப்பிறப்பும் மானிட முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் அடையப்படுவதல்ல, அவ்வவர் செய்கின்ற புண்ணிய பாவ வினைகட்கு ஏற்ப, இறைவனேத் தருவது என்பதாம்.
மற்று இதனை எவ்வாறுதான் இறைவன் செய்கின்றானென்னில்:
செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போல் (செய்வன்):
ஒரு வயல் எவ்வாறு அந்த உழவனின் முயர்சிகட்கு ஏற்ப, விளைச்சலைத் தருகின்றதோ அதுபோல ஓர் ஆன்மாவிற்கும் அதனது உழைப்பிற்கிணங்கவே வருகின்ற பிறப்பை இறைவன் அரூளுவன் என்றவாறு.
கடுமையாக தளராது உஞற்றுபவனுக்கு, பல்வேறு வகையில் மனந்தளராது ஊக்கங்கெடாது அகத்துச் செரிந்திருக்கும் மலமாசுக்களை போக்கும் வண்ணம் உலகின் யாவன் ஒருவன் பற்பல செய்கின்றானோ அவனுக்கு உயர் பிறப்பும், அவ்வாறு இல்லாதானுக்கு இழிபிறப்பும் உண்டென்க. இவ்வாறான முறையில் பிறப்பினை நிறுத்துவதே கன்மம் எனவும், இதுகொண்டு இதுவுமோர் தளை அல்லது விலங்கு எனவும் படுகின்றது. வினை எனினும் விலங்கு எனினும் ஒன்றே. ஆன்மாவை ஓர் பிறப்பில், அதற்கேற்ற தனுகரண புவன போகத்தில் வீழ்த்துவது, கட்டுவது என்பதின் 'வினை' என உவமிக்கப்பட்டது.
இனி எவ்வாறு இது உலகில் காணக்கிடக்கின்றது என்றக் கேள்வி எழ, இந்த கன்மம் பிரார்த்த வினையாக நின்று தொழிற்படுவதை தெரிக்கின்றார் அடுத்து.
உள்ளதேத் தோற்ற உயிர் அணையும் (அவ்வுடலில்):
இல்லது யாண்டுமே இன்மைற்று, சூன்யத்து என்பதின், சூக்குமவடிவில் வெளிப்படாது மூலவித்தாகவே நின்று, பிறகு தூலவடிவில் மலர்ந்து நிற்பதே தோன்றுதல் என்பதின் பொருள் என்பதால், ஒரு கருவில் உதித்து மலர்ந்து தோன்றுவதாகிய இவ்வுடல், அதற்கு முன்னும் சூக்கும வடிவில் மூலமாயையில் கிடந்திருக்கவேண்டும். ஓர் உயிர் உடலொடு பிறப்பெடுக்கும்போது, இவ்வாறு முன்பு சூக்குமமாக நின்றவொன்று தூலமாக மலர்ந்திட , அதனைத் தனதாகக் கொண்டு ஓர் உயிர் உடலெடுக்கும் என்றவாறு.
எத்தனையோ யோனிகள் இருக்க, ஓர் ஆன்மாவின் பக்குவத்திற்கும் முற்செய்வினகட்கும் ஏற்ற முறையில், ஆறறிவு ஆன்மாவிற்கு அதற்குத் தக மானிட உடம்பும்; மானிட பண்பில் சிறந்ததற்கு அதற்கேற்ற உயர் பிறப்பும், ஏனைய குறைவான அறிவுதிறத்து ஆண்மாக்களுக்கு அதற்கேற்ற உடம்பும் என்றவாறு எவ்வாறு குறையின்றி பிழையின்றி அமைகின்றதெனின், அதனையும் விளக்குகின்றார் நம் ஆசிரியர்.
அவ்வுடலில் உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே:
ஓர் உயிருக்கு அமைகின்ற உடம்பில், அந்த ஆன்மாவின் முற்செய்வினையாகிய பிரார்த்த கன்மம் உள்ளடைவாக நிற்க, அதுவே அமையும் பிற உடம்புகள் அமையாது போம் என்றவாறு.
முற்பிறப்பில் பற்பல செய்து ஈட்டப்பட்ட ஆகாமியகன்மம், அந்த ஆன்மாவுடன் புரியட்ட தேகமாக , பிற நினைவெல்லாம் சிதைந்து மறைய , இது மாத்திரம் சிதையாது ஆன்மாவுடன் இருக்கும். ஓர் உடலோடு பிறப்பெடுக்கும்போது, இதுவே பிரார்த்தமாகி, எவ்யோனி என்பதையும் ஆணென பெண்னென பால்வேறுபாட்டினை நிறுத்துவதும் மற்றும் உடலொடு வரும் பிற திறன்களையும் நிறுத்துவதுமாக செயல்பட்டு நிற்கும். 'உள்ளடைவு' என்பது, ஒரு கணினியை தொழிற்படுத்தும் வினையடைவுகள் (programs) போல், இங்கு அசுத்த மாயையை தொழிற்படுத்தும் அக்கரசக்கரங்களாக நிற்கும் மந்திர வடிவங்களாகும். இவற்றைக் கொண்டிருப்பதே புரியட்ட தேகமாகும். சுத்தமாயை வடிவிற்று. மந்திர சொரூபியாகவே ஆன்மா உடலற்றுக் கிடக்கும் போது, இப்படிப்பட்ட மந்திரசொரூபியாகவே சுத்தமாயையில் எங்கோ கிடக்குமென்பது. பிறப்பெடுப்பதென்பது அசுத்த மாயையில் புகுந்து அதனை உள்ளடைவாய் நிற்கும் வினை அடைவுகட்கு ஏற்ப திரித்து கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டதொரு உடலைப் பெறுவதாகும்.
தோடரும்
உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 16: இருவினையும் கூர்தலறமும்( Ethics and Evolution)-2
மேலே விளக்கப்பட்ட எடுத்துக்காட்டும் பிறவும் இன்னும் பல உண்மைகளை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டிருக்க, நூலிய அறிவியல் முறையில் அதனை விளக்கப் புதுந்துள்ள இந்நிலையில், புதைந்து கிடப்பதையும் வெளிப்படுத்தி சொல்லாக்குவது வேண்டப்படுகின்றது. மேலும் இதுவரை சிவஞானிகள் கன்மக்கோட்பாட்டை சஞ்சிதம் பிராரத்தம் ஆகாமியம் என்ற முறையில் ஆய்ந்துள்ளனரேத் தவிர அருள் ஈட்டலை மையமாகக் கொண்ட செயல் தெரியத்தை (A Theory of Action) விளக்கியதாகத் தெரியவில்லை. இதனால் சைவம் பிழையாகவே உணரப்பட்டுள்ளது.
பழைய கன்மக் கோட்பாடு திருமூலரால் தெளிவாக்கப்பட்ட பதியினைப் போல பசு பாசம் அநாதி எனும் அநாதிப் பொருளியலைச் சார்ந்து எழுந்த ஒன்றாகத் தெரியவில்லை. புண்ணிய பாவ உணர்வுகளைக் கடந்து செல்லும் வகையில் ‘கன்மவொப்பு” என்ற கருத்தும் குழப்பத்தைத் தருவதாகவே இருக்கின்றது. இந்த ‘கன்மவொப்பு” என்பது ஓர் செயல் வகையா? அதனைச் செய்யும்போது கன்ம ஈட்டங்கள் இல்லையா? கன்ம ஈட்டங்கள் எவ்வாறு இல்லாதுபோகின்றது?
அத்தோடு அநாதிப் பொருளியலிற்கு தொடர்பில்லாது இந்திய சமயங்கள பலவற்றிற்குப் பொதுவாக இருக்கும் இந்த பழையக் கோட்பாடு எப்படி வந்திருக்கும்?
ஓர் ஆன்மா தான் செய்கின்ற வினைகளின் வழி, தான் பிறப்பெடுக்கும் போது அடைகின்ற தனு கரண புவன போகத்திற்குக் காரணமாக நிற்பது மூலகன்மம் எனப்படுவது. இதனைத்தான் மெய்கண்டார் ‘ முற்செய்வினை உள்ளடைவு” என்கின்றார். சுத்தமாயைத் தாரகமாகக் கொண்டிருப்பது. உண்மையில் இவையெல்லாம் அக்கரசக்கரங்களாகும். இவற்றின் சொரூபம் மந்திர வடிவங்கள். எல்லாவகை ஈட்டங்கட்கும், வேண்டியவாறு வேண்டியதை கொடுக்கும் நிலையில் இதனை சஞ்சிதம் என்று உணர்கின்றோம். ஓர் செயலைச் செய்து அதன்வழி இந்த அக்கரசக்கர களஞ்சியத்திலிருந்து யாதை ஈட்டுகின்றோமோ அதுவே ஆகாமியம் எனப்படுகின்றது. செய்யப்படுகின்ற புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப இது அமையும். இதுவே ஆன்மாவின் புரியட்ட தேகத்தின் ஓர் கூறாகி உடலற்று கிடக்கும் போதும் ஆன்மாவினை விட்டுப் பிரியாது நின்று மறுபிறப்பின் பண்புகளை நிறுத்தும்போது அதனை பிராரத்தம் என்று பயில்கிறோம். ‘பிரார்த்தம்’ அடுத்த பிறப்பிற்கு ஏதுவாயது என்று பொருள்படும்
இப்படிப்பட்ட உள்ளடைவுகள் genetics எனப்படும் நவீன அறிவியல் துறையின் மரபணுக்களோடு ஒப்பிட்டு பார்த்தல் நலம். நம் முன்னோர்கள் இதனை அக்கரசக்கரங்கள் என்று கூறுவதோடு இது ஒத்துவருவதுபோல் தெரிகின்றது.
இவை இவ்வாறு முற்பிறப்பு, இப்பிறப்பு , மறுபிறப்பு என்ற நிலையில் விளக்கப்பட்டாலும், வாழ்க்கையின் பல்வேறு நிலைகட்கும் பொருந்துவதாக இதனை விரித்து அறிந்துகொள்ளவேண்டும். பிறந்தது முதற்கொண்டு செய்யப்படும் வினைகளின் பயன்கள் பலவாறு இருக்க , அவற்றில் சிலவற்றை வாழும்போதே அனுபவித்தலும் உண்டு; சிலவற்றை மறுபிறப்பிலேயே அனுபவித்தலும் உண்டு. இவ்வாறு வினைகளும் அவற்றின் பயன்களும் பல்வகைப்படும். எப்படியெனில் சிறிது விளக்குவோம்.
நோக்கின்றி செயலில்லை எனினும், சில சமயங்களில் ஓர் செயலில் ஈடுபட வைக்கும் சத்தி மறைபொருளாகவே இருக்க, அபுத்தி பூர்வமாக செய்வதும் உண்டு. அறிந்த நோக்கோ அறியா நோக்கோ ஒர் செயலினைச் செய்யவேதான் யாதோவோர் பயன் விளையும். இவ்வாறு ஊந்தும் விழைவுகளை இடகலை பிஙகலை சுழிமுனை நாடிகள் என்றும் பிறகு இவற்றிற்கு முடிவானவொன்றாய் குருநாடி என்றும் சித்தர்கள் கூறுவர். இவற்றோடு ஆணவமலத்தின் இழுப்பின் காரணமாக எழும் வினைகளை மரணநாடி பட்டதாகக் கொள்ளவேண்டும். இறைவன் ஆன்மாக்களை தன்பால் இழுக்கின்றதின் வெளிப்பாடுகளாக ஏனைய நாடிகள் இருக்க, மரண நாடியோ இறைவனை விட்டு எதிர் திசை செல்வதாகும். இவற்றில் இடகலை பிங்கலை நாடிச் செலவில் செய்யப்படுபவை உலகியல் நாட்டத்துடையவையாக இருக்கும் போது, உடனேயும் பின்புமாக மெய்யாகும் அதன் பயன்கள் விளையும். பசித்திருக்க உணவு உட்கொள்வது உடன் பசியைப் போக்கும். ஆயினும் அதே பசியின் காரணமாக, பிறரை வஞ்சித்து தான் உண்டு தன் பசியை மாத்திரம் போக்குவது, ஆணவமல மறைப்பின் எழுவது என்பதின் அதுவோர் பாவ காரியாமாகின்றது. ஆணவமல பந்தம் துமிக்கப்படுவதற்கு பதில் அதன் ஆட்சி அதிகரிக்கப்பட, அன்று இல்லாவிட்டாலும் பிறிதொரு சமயம் மனக்கலக்கம், துக்கம், துயரம் இழப்பு நோய் என்பனவாக பல துர்பலன்களைத் தரும்.
இது அனுபவ உண்மை, களவாய்வு செய்து சோதித்து மெய் நிறுத்தலாம்.
இவ்வாறு இன்மைப்பயன்களை தந்து கொண்டிருக்கும் உடனிருக்கும் இறையாணை, மறுபிறப்பிற்கு ஏதுவாய் சில வினைப்பயன்களை ஆன்மாவின் புரியட்ட தேகத்திலே சேர்த்துவிடும் . ஓர் ஆன்மாவிற்கு அது செய்யும் காரியங்களைக் கொண்டு எவ்வாறான மறுபிறப்பு அதற்கு உரியது என்பதை நியதி வழுவா முறையில் இறைவனைத் தவிர்த்து வேறு யாரும் செய்யமுடியாதென்பதின், சில வினைப்பயன்களைத் தேர்ந்து அவற்றை மறுபிறப்பிற்கு ஏதுவாய் ஆக்குவது இறைவனே யாம் என்பது.
இனி கன்மக் கோட்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திவிட்டால், கன்மத் தளையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் செயல்களாக யாதும் இல்லாது போய்விடும்.; யாண்டும் இந்தக் கன்மக் கட்டிலிருந்து விடுபடா வகையில் உலகபந்தத்திலேயே வீழ்த்தி வீடுபேறு அடையும் உபாயத்திற்கு வழி யில்லாது ஆக்கிவிடுவோம். ஆயினும் மெய்கண்டார் இதனோடு தனது கன்மக் கோட்பாட்டினை, வினை தெரியத்தை நிறுத்திவிடவில்லை. தமது பத்தாவது சூத்திரத்தில் இதனைத் தொடர்கின்றார். அங்கு
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே
என்று நவின்று, இறைவனோடு ஒன்றித்து நின்று செய்வதெல்லாம் சிவச்செயலேயாக, அருள் ஈட்டி இந்த மும்மலங்களின் தொடக்கிலிருந்து விடுதலை அடைவதற்கு உதவும் செயல் வகைகளையும் விளக்கி அருளுகின்றார். இவ்வகையில் சென்று மேலும் சிந்திக்க வினைகளைப் பற்றி இன்னொரு தெளிவும் கிடைக்கின்றது.
இடகலை பிங்கலை நாடி வயப்பட்டு, இன்மைப் பயன்களையேக் கருதி சுத்த அசுத்த மாயாப்பொருட்களையே இச்சித்து எவ்வினைகள் செய்யப்படுகின்றனவோ அவை உழற்சி வினைகள் ஆகும். இதகைய வினைகள் மாயா பந்தத்திலேயே ஆன்மாக்களை கிடத்துவதின் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இனி இவ்வாறான பந்தங்களை அறுத்து, பாசத்தளைகளை ஓரளவு செற்று சத்திநிபாதம் தேற்றி பக்குவ முதிர்ச்சிக்கு ஏதுவாக யாவை செய்யப்படுகின்றனவோ, அவை கழற்சி வினைகள் எனப்படும். இவற்றிற்கு வேறாக காதலில் கசிந்து பிரிவற நிற்கும் இறைவனை இன்னும் நெருங்கிடு நோக்கில் , சுழிமுனை நாடிச் செலவினதாக யாது செய்யப்படுகின்றதோ அவை ஊழ்ச்சி வினைகள் எனப்படும் . இனி இவற்றிற்கு மேலாக தன் தற்போதமெல்லாங் கெட, சிவபோதமே மிக்கிருக்கும் வகையிலும் தன்னை இழக்கும் வகையிலும் யாது செய்யப்படுகின்றதோ அவை மலர்ச்சி வினைகள என்பதாகும்.
மலமாயை தன்னொடு வல்வினைகளைப் போக்குவனவாக கழற்சி வினைளும் ஊழ்ச்சி வினைகளும் அமைய, திரோதகம் போக்குவனவாக இறைபணி எனும் மலர்ச்சி வினைகள் அமைகின்றனவாம்.
இனி இவற்றோடு ஆணவ மல இழுப்பிற்கு ஆளாகி செய்யப்படும் எல்லா பாவச் செயல்களும் இவ்வகையில் வீழ்ச்சி வினைகள் ஆகும்.
இனி இவ்வாறன கன்மங்கள் இருப்பதற்கும், அதனை இறைவனே அறிந்து ஊட்டுவான் என்பதற்கும் என்ன ஏதுக்கள் உண்டு? கன்மங்கள் தானே வந்து ஆன்மாக்களுடன் பந்தித்து தத்தம் பயன்களை தராதா? ஓர் உயிர் அதற்கு அமையும் சூழலிற்கு ஏறப அது செய்கின்ற வினைகளின் காரணமாக இத்தகைய கன்ம ஈட்டங்கள் அமையாதோ? நீரில் வாழ்வன விண்ணில் பறப்பன பிற உயிர்களின் உடம்பில் பல வகையான நுண்ணுயிர்களாக வாழ்வன என்றவாறு உயிர்கள் பல திறப்படுவதெல்லாம், வாழும் சூழல் என்றவொன்று அமைத்துத் தரமுடியுமா? நீர் தான் மீன்களுக்கு நீரில் நீந்தும் திறனையும் அதற்கேற்ற உடம்பினையும் தருகின்றதா? இந்த நீர் என்ன ஓர் சித்துப் பொருளா? அறிவுப் பொருளா? இல்லையே! அப்படி இருக்க அது எப்படி இதனை எல்லாம் செய்யும்?
ஐரோப்பியர்கள் இப்படித்தானே நினைத்தார்கள் நினைக்கின்றார்கள்? இல்லை அவற்றைத் தருபவன் ஒருவன் வேண்டுவதோ? என்றெல்லாம் கேள்விகள் எழ, எல்லா ஐயப்பாடுகளையும் எளிதில் தீர்க்கும் இயல்பின் மெய்கண்டார் இதற்கும் கீழ்க்கண்டவாறு பதிலிருக்கின்றார்.
என்னதான் கூறுகின்றார் என்பதை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
...
--
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 17: இருவினையும் கூர்தலறமும்(Ethics and Evolution)-3
ஓர் வண்ணாத்தி பூச்சி இருக்கின்றது, அது பாதுகாப்பாக உயிர்வாழ, அதன் சிறகுகள் அது வாழும் சூழலிற்கு ஏற்ப அமைந்துவிட, அது அந்தச் சூழலில் வேறு என்று காணப்படாது தப்பிக்கின்றது. வாலில்லா குரங்கு படிப்படியாக நாற்கால்களால நடப்பது ஓடுவது போய் பின் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடக்கத் தொடங்கி முன்னிரு அங்கங்கள் கட்டை விரலோடு கூடிய கரங்கள் ஆகின்றன. ஓராங் ஊத்தான் (காட்டுவாசி) என்ப்படும் போர்னியோ காடுகளில் திரியும் ஓர் மானிடக்குரங்கு மழை பெய்யும் போது ஓர் படர்ந்த இலையை பீய்த்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு அதனை ஓர் குடையாக்கி மழையில் நனைவதிலிருந்து தப்பிக்கின்றது.
இப்படி இயற்கையில் எத்தனையோ அபூர்வங்கள். இவை எல்லாம் எப்படி அமைகின்றன என்பதே கேள்வி. வண்ணாத்திப் பூச்சிகளா தப்பிக்கும் உபாயமாக தன் சிறகுகளை சூழல் வடிவில் அமைத்துக்கொள்கின்றது? அந்த அளவிற்கு அதற்கு அறிவு உண்டா?
இவ்வாறு செயல்படும் வகையில் அவற்றிற்கு வெவ்வேறு கன்மங்கள் உயிரோடு கலந்த உள்ளடைவுகளாக இருக்கின்றனவா?, அதனால்தான் அவை இந்த பண்புகளோடு திகழ்கின்றனவா?
இயற்கையை உன்னிப்பாக கவனித்து இந்த வினோதங்களை எல்லாம் காணும் போது ஓர் மாபெரும் அறிவு, எல்லா உயிர்களோடும் அவையேத் தானாய் ஒன்றித்து நிற்கும் ஓர் அறிவு உதவியவாறு இருப்பதால்தான் இப்படியெல்லாம் என்று ஊகித்துக் காண முடிகின்றது.
இனி இவ்வாறான கன்மங்கள் உள்ளடைவுகளாய் இருப்பதற்கும், அவற்றை இறைவனே அறிந்து ஊட்டுவான் என்பதற்கும் என்ன ஏதுக்கள் உண்டு? கன்மங்கள் தானே வந்து ஆன்மாக்களுடன் பந்தித்து தத்தம் பயன்களை தராதா? புத்த சமயிகள் இப்படித்தானே நினைத்தார்கள்? மேலும் இவை எல்லாம் தற்செயலாய் நடப்பவை என்றும் கொள்ளலாமே? இல்லை அவற்றைத் தருபவன் ஒருவன் வேண்டுவதோ? என்றெல்லாம் கேள்விகள் எழ, எல்லா ஐயப்பாடுகளையும் எளிதில் தீர்க்கும் இயல்பின் மெய்கண்டார் இதற்கும் கீழ்க்கண்டவாறு பதிலிருக்கின்றார்.
எடுத்துக்காட்டு 2.2.2
.
அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தான்சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம்போல் -- அவ்வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தாம் அறிந்து அணைப்பார் ஆங்கு
இதன் பொருள்:
காந்தப் பசாசம்போல், அவ்வினையை பேராமல் ஊட்டும் பிரானின்:
ஒரு காந்தம் ஓர் இரும்புத் துண்டினை தன்பால் வசிப்பதுபோல, எல்லா உயிர்களோடும் அத்துவிதமாய், இறைவன் தானே என்று எண்ணும்படியாக நின்று, தன்பால் நெருங்கும்படியாக வசித்து, அந்த வசிப்பின் காரணமாக பற்பல வினைகளை அவ்வான்மாக்கள் ஆற்றும்படியாக அவர்களை ஆட்டுவிக்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் பலவாறு இயங்கி பற்பல செய்வதற்கும் ஏதுவாய் 'அது நான்' 'அது நான்' என்றவாறு "அது" வெனும் நுதிப்புக்களை ஆன்மாக்கள் உள்ளத்திலே பதியவைத்து, அதே பொழுது தான் அதனால் சலிப்புறாதும் நிற்கின்றான்:
அவ்வினைஞர் தான் சென்றங்கு அவ்வினையைச் செய்வதனில்:
இவ்வாறு எழும் நுதிப்புக்களைப் பற்றிட , அதனால் அது தானாக வேண்டும் என்ற விருப்பும் எழ, நோக்கொன்று தேற்றி ஒரு வினைகர்த்தாவாக இருப்புநிலை பெற்று, ஒரு வினையை ஆன்மாக்கள் செய்கின்றன. "அது" வெனும் நுதிப்புக்களை ஆன்மாக்கள் தாமே உதிப்பியா. தன்னோடு , தன்னறிவோடு அத்துவிதமாக பிரிப்பின்றி நிற்கும் இறைவனே அதனை அகத்தே ஊட்டுகின்றான். அதனால்தான் செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்ற முனைப்பே எழுகின்றது.
அவ்வினையை பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்:
இவ்வாறு நுதிப்பொன்றினைத் தேற்றி, ஓர் ஆன்மா ஒரு செயலைச் செய்யும்படி ஆட்டுவிக்கும் இறைவனாலேயே, அதன் பயன்களையும் நுகரும் பேறு கிட்டும் என்பதாம்.
ஏன் இவ்வாறு? செய்யும் வினையே அதன் பயனைத் தாராதோ? வெனின்;
ஆர்தான் அறிந்து அணைப்பர் ஆங்கு:
ஒருவன் செய்யும் ஒரு வினையின் தரத்தினை; அது உழற்சியதா, கழற்சியதா, ஊழ்ச்சியதா அல்லது மலர்ச்சியதா என்பதனை உறுதிசெய்ய சடப்பொருட்களாகிய சுத்தாசுத்த மாயைகளாலும் , அணுத்துவப்பட்டு அல்லல் உறும் சித்துப்பொருட்களாகிய ஏனைய ஆன்மாக்களாலும் முடியாது போக எஞ்சி நிற்கின்ற சித்துப்பொருளாகிய பதியினாலேயே அது ஆகக்கூடியது என்றாயிற்று.
மரணமுற்று உடலை இழந்தும் உலகவாழ்வினை இழந்தும் புரியட்ட தேகத்தோடு பரலோகத்தில் எங்கோ திரியும் நிலையில், சமயங்களும் சமயக் குரவர்கள் போதனைகளும் கொள்கைகளும் கோட்பாடுகளும் நன்னெறி அறிவுகளும் ஞான நூற் தெளிவுகளும் மறந்துபட்ட நிலையில், ஒன்றுமின்றியதாய் ஆன்மா நிற்கும். ஆயினும் அந்நிலையிலும் ஆன்மாக்களை விட்டகலாதிருப்பது இறைவன் ஒருவனேயாம். அவனே வாழும்போது பல நுதிப்புகளைக் கொடுத்து , ஆன்மாக்களை பற்பல வினைகள ஆற்றும்படி செய்தவன் ஆதலின், அவற்றின் பயன்களை இந்நிலையில் ஊட்டவும் செய்வன் என்பதாம். அவ்வாறு அறிந்து ஊட்டுதற்கு வேறு யாரும் இல்லை என்பதாம். ஒரு பிறப்பெடுத்து வாழும்போது, நல்லதெது கெட்டதெது என்பதை உலகும் உலக மாந்தர்களும் தத்தமக்கு ஏற்ற வகையில் உணர்த்தக் கூடுமெனினும், உடலற்றும் உலகற்றும் கிடக்கும்போது , இவையெல்லாம் போயகல அகலாது உடனிருப்பது இறைவனே யாதலால், வினைப்பயன்களை அறிந்தும் அடுத்த பிறப்பிற்கு ஏன்றதை புதிதாக அருளுபவனாகவும் அதனின் பக்குவத்தில் கூரும்படி செய்பவனாகவும் இறைவனே இருக்கின்றான், வேறு யாதுமில்லை என்றவாறு. முற்பிறப்பை நோக்க, வரும் பிறப்பு கூர்தலில் சிறந்திருப்பதின் இது ஏனையவற்றால் ஆகாது இறைவனாலேயே ஒல்லும் என்பது.
இவ்வாறு நுகர்விப்பது வாழும்போதும் இல்லையெனில், புண்ணிய பாப அறிவே அகத்து எழாது போம் என்பதையும் கவனிக்க. ஆயினும் இருவினை சிந்தனை உலகியல் உண்மையென, இறைவனே கன்ம பலங்களைத் தருவதும் உண்மையாயிற்று.
இனி இவ்வாறான கன்மமலம் அநாதிப்பொருளோ அல்லையோ? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆணவ மலமாகிய கங்குலியம், பதியாகிய இறைவன், எண்ணிறந்த பசுக்கள், சுத்தமாயை அசுத்தமாயை என்பவையெலாம் அநாதிப்பொருட்களாக, யாராலும் தோற்றுவிக்கப்பட¡து அன்றே இருக்கும் பொருட்களாகத் திகழ, இல்லாதிருந்து உளதாகுவதோ இந்தக் கன்மங்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு அறிவின் தெளிவாய் அரனேத் தானாய் ஆதித்தச் சுடராய் விளங்கும் மெய்கண்டார், கீழ்கண்டவாறு விளக்கம் தருகின்றார்.
எடுத்துக்காட்டு 2.2.3
நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பில் களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே -- வல்லி
மலகன்மம் அன்றுளவாம்; வள்ளலாற் பொன்வாள்
அலர் சோகம் செய் கமலத்து ஆம்.
இதன் பொருள்:
நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பில் களிம்பும், சொல்லில் புதிதன்று தொன்மையே:
தொன்மையாவது இல்லாதிருந்து பிறகு இடையே வந்து சேராதிருப்பது; அநாதியே இருப்பதாகும். நெல்லிற்கு அதனோடு வருவதாகிய தோலும் தவிடும் , மெய்யாக உலகில் காணப்படும் செம்பிற்குள் விளங்கும் களிம்பும், அவை தூலமாக காணவரும் வகையில் வெளிப்படாது இருப்பினும், மேலும் பிறகு பிரித்து அகற்றப்படக்கூடியதாயினும் மூலமாயையில் இவை கிடக்கின்றபோதே அவற்றோடு இருப்பனவாம்.
வல்லி மலகன்மம் அன்றுளவாம்:
அதேப்போன்று போக்கக்கூடிய ஆனால் அரிதாகிய இந்த கன்ம மலமும் அநாதியே மூலமாயையில் கிடக்கும் ஒன்றாம்; இடையிற் சேர்ந்த ஒன்றல்ல என்றவாறு.
இந்த கன்மத்தை மலம் என்று அடைகொடுத்தது, ஆன்மாவின் கங்குலியமாகிய இருளைத் தரும் ஆணவம் இருக்கின்றவரை இந்தக் கன்மத் தொடர்பும் இருக்கும் என்பதற்காகவும் , மேலும் எந்த கன்மமும் ஒன்றினைக் காட்டுதற்கு ஏதுவாக நிற்கும் அதேபொழுது, பிறிதொன்றினை மறைக்கவும் செய்வதால், இதனின் மலம் போல் செயல்படுவதாலும் இவ்வாறு பகரப்படுகின்றது என்பதாம். இதனை "வல்லி" என அழைப்பது ஏனெனில், மிக மிக அரிதாகவே இந்த கன்மக் கட்டிலிருந்து , தொடர்ந்து கன்மங்களை ஈட்டிக் கொண்டே இருப்பதிலிருந்து ஆன்மாக்கள் கழற முடியும் என்பதால் என்க.
இனி இறைவனுக்கும் இந்த கன்ம ஈட்டத்திற்கும் என்ன தொடர்பு; கன்ம ஈட்டம் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும், அதனின்று விடுதலை இல்லையோ என, இறையருளால்தான் விடுதலை என்கின்றார் அடுத்து.
வள்ளலாற் பொன்வாள் அலர் சோகம் செய் கமலத்து ஆம்:
புறத்திலே கமலமாகிய தாமரை, ஆதவனைக் காண மலர்வதும், காணாதபொழுது குவிந்து சோகித்தலும் போல, ஆன்மாக்கள் உள்ளத்திலே ஞானச் சுடராக இறைவன் எழுந்தருள, அதனின் கன்மக் கட்டின் கழற்சி, ஊழ்ச்சி போன்றவற்றைத் தந்து பக்குவ முதிர்ச்சியை ஞானமலர்ச்சியை அருள, , அவ்வாறு எழுந்தருளா நிலையில் கரந்து நின்றே ஆட்டுகின்ற நிலையில் ஆன்மாக்கள் கன்மங்கள் ஈட்டி உழன்றும், பக்குவமுதிர்ச்சி பெறாதும் வருந்தும் என்பதாம்.
என்றுமுள்ள வல்லிதாகிய கன்மங்களை ஈட்டி உழன்று உழன்று செல்வதிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் கருணையின், அகத்தே ஆதவனாக வெளிப்பட்டு சிவதீக்கை தந்தருளுகின்றான் என்பது. அகத்திலே இவ்வாறு தோன்றும் இறைவனோடு ஒன்றித்து நின்று செய்யும் செயலெல்லாம் சிவச்செயலாகவே ஆக்கிவிட, கன்ம ஈட்டம் இல்லையாம். இதனால் பிறவித் தொந்தனை அறுவதோடு விடுதியும் கிட்டுமென்பது. இப்படிபட்ட வினைகளே மலர்ச்சி வினைகளாம்.
அன்றாட வாழ்க்கையில் உலகத்து ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு செய்யும் காரியங்கள் உழற்சிக்கு ஏதுவாக, ஆங்கே விளையும் துன்பங்களும் துயரங்களும் இறைநாட்டத்தைக் கொண்டு வந்து கழற்சியையாவது தந்து அறிவின் வளர்ச்சிக்கு பக்குவ முதிர்ச்சிக்கு ஏதுவாகும். இறையருளோடு நின்று தானெனும் முனைப்பொடு செய்யினும், கழற்சி வினையாகி ஞானமலர்ச்சியைக் கொண்டு வரும். இதன்வழி சத்திநிபாதம் ஓரளவு நடக்க, மலநீக்கமும் உண்டாம். இதன்வழி மனநலம் உடல் நலம் போன்ற்வைகளும் மெய்யாகும். மேலும் ஆணவமல நீக்கத்து ஊழ்ச்சி வினைகள் செய்வதற்கும், தன்னை மறந்து இறைவனேத் தானாக்குவிக்க உதவும் திரோதக நீக்கத்து மலர்ச்சி வினைகளை செய்யக்கூடிய சூழலும் பிறக்கும் என்பதாம்.
ஞானவிளக்கத்தினை பொன்வாள் என உள்ளுறை உவமப் படுத்தியது, என்றும் அழியா உண்மைகளாக , மனமகிழ்ச்சியைத் தரும் பொன்னாக, அஞ்ஞான இருளைக் கிழித்துக் கொண்டு உள்ளத்தைத் தைக்கும் பண்பினதாக , இஞ்ஞானச் செஞ்சுடர் திகழ்வதின் காரணமாகவாம்.
இனி முற்பிறப்பு என்றும் மறுபிறப்பு என்றும் இவற்றிகிடையே இப்பிறப்பு என்றும் வாழ்வு உண்டு என்று கொண்டாலே ஒழிய, பிராரத்த கன்மம் என்றவோர் கன்மம் இருக்கிறதென்றும் , இப்பொழுது ஈட்டப்படும் ஆகாமியத்தில் ஒரு கூறே இவ்வாறு ஆகும் என்றுந் துணியமுடியாது. ஆயினும் இவ்வாறு பிறந்திறந்து உழலும் பேறு உண்மையோ பொய்யோ, இஃது ஆரணவியலில் அடங்கும் ஓர் ஆழுண்மையோ அல்லையோ என வினவுவாரின் ஐயங்கள் போக்க நல்லவோர் விளக்கம் தருகின்றார், விளக்கி விளக்கியே ஞானவிந்தை புரியும் மெய்கண்டார்.
இதனை அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்.
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 18: மறுபிறப்பு உண்டா?
சில நாட்களுக்கு முன்பு அமேசான்(Amazon) அடர்காடுகளில் இன்றும் பண்டேப் போல வாழும் பூர்வீகக குடிகளின் சிலரைப் பற்றி ஓர் காணொளி பார்த்து வியந்தேன். நாலைந்து குடும்பங்களே குழந்தைக் குட்டிகளுடன் ஓர் குழுமமாக இயங்குகின்றது. ஆணும் பெண்ணும் ஆடைகள் யாதும் அணியாது அம்மணமாக இயல்பாக சுற்றித் திரிகின்றனர். ஆனால் திருமண பந்தங்கள் உண்டு. வேளாண்மை தெரியவில்லை, காட்டில் திரியும் விலங்குகளை வேட்டையாடியும் கனிகள் கிழங்குகள் வேர்கள் கொட்டைகள் கீரைகள் என்றவாறு கைக்குக் கிடப்பதையும் உண்டு வாழ்கின்றனர். நதிகள் வர அங்கு மீன்களையும் பிற நீர்வாழ் உயிர்களையும் பிடித்து உண்கின்றனர். நெருப்பு உருவாக்க அறிந்திருக்கின்றனர். உணவுகளை சமைத்தே உண்கின்றனர்.
ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது அவர்கள் ஓர் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்களையோ பெண்களையோ பார்க்க முடியாது இருப்பதுதான். ஏனென்று விசாரிக்க அவர்கள் இந்த வயதை எட்டியதும், காட்டில் கிடைக்கும் ஓர் வகையான விசத்தை உண்டு மரித்துவிடுகின்றனராம். ஏன் இப்படி என்று மேற்கொண்டு விசாரிக்க, தாங்கள் இந்த வயதை எட்டியதும் ஏற்கனவே இறந்துவிட்ட தன் பெற்றோர்களோடு அண்ணன் தம்பிகளோடு சகோதரிகளோடு சேர்ந்து வாழ விரும்பியே இப்படிச் செய்கின்றனர் என்று அறிய வருகின்றோம்.
இதுதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நாகரீக்கத்தின் அடிப்படையாகிய வேளாண்மையையும் அறியாத இவர்கள் ஒருவன் மரணமடைந்தால் அவனது உயிர் அழியாது இருக்கின்றது என்றும், தான் மரணமடைந்து உடலை இழந்தால் தானும் அவர்களோடு ஏதோ ஓர் உலகில் மீண்டும் வாழலாம் என்றும் எப்படி நம்புகின்றார்கள்? எப்படி இந்த அறிவு அவர்கட்கு உண்டு? எப்படி இதனைக் கற்றார்கள்?
கற்பனையாக இருந்தாலும் எப்படி இப்படி எல்லாம் கற்பனைகள் அமைகின்றன? மேலும் தற்கொலையே செய்துகொள்ளும் அளவிற்கு அல்லவா அது உண்மை என்று அவர்கட்குப் படுகின்றது? எப்படி இதுவெல்லாம்?
தொல்கற்கால மாந்தரிகளிடையே கூட இந்த அறிவு இருக்கின்றது. தங்களைச் சேர்ந்த ஒருவன மரணமடைந்தால் அவனது உயிர் அழியாது எங்கோ இருக்கின்றது என்ற நம்பிக்கையில்தானே முன்னோர் வழிபாடு உலகெங்கும் பரவி இருக்கின்றது.?
ஆன்மா அழிவதில்லை, மற்றும் இந்த பொல்லாத மாயாவாத வேதாந்திகள் கூறுவதைப் போல அது பிரம்மம் ஆகி இல்லாது போகின்றது என்பதும் இல்லை. மெய்கண்டார் கூறுவது போன்று இல்லது தோன்றாது, உள்ளதும் திடுமென இல்லது ஆகாது.
அநாதிப் பொருளாகிய ஆன்மா மாறிப்பிறந்து வரும் என்கின்றார் மெய்கண்டார். இனி அவரது நுட்பமான சிந்தனைப் போக்கினை அனபர்கள் ஓரளவாவது அறிந்து மகிழ அவர் சொற்களிலேயே எவ்வாறு ஓர் உள்ளுணர்வாகவே இருக்கின்ற இந்த உண்மையை ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றோடு கூடிய தெள்ளறிவாக நிறுத்துகின்றார் என்பதை காண்போம். இதன் உரை விளக்கம என்னுடையதே
சிவஞான போதம் இரண்டாம் சூத்திரம் மூன்றாம் படிமெய்
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது.
ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.
இதன் பொருள்:
அநாதியே இருப்புடையதாக (Being) யாது இருக்கின்றதோ அதுவே அறிவினால் அறியப்பட்டு உளது என்று கூறப்படும். மேலும் அவ்வாறு "உளது" என்று யாது பொறிலியக் கண்கொண்டோ, நூலியப்பார்வை கண்கொண்டோ கூறப்படுகின்றதோ அது தோற்றத்தையும் ஈற்றிணையும் துணைகளாகக் கொண்டு விளங்கும். ஆகவே மரணமுறும் ஓர் ஆன்மா, ஓர் அநாதிப்பொருள் என்பதாலும் , உண்டு என்று அறியப்படுவதாலும் இவ்வாறு உடம்பெடுத்துப் பிறந்தும் உடம்பு நீங்கி பராகாயத்தில் மந்திரசொரூபியாகத் திரிந்து பின் உடம்பெடுத்து தோன்றியும் உழன்றவாறு கிடக்கும் என்பதாம்.
அநாதிப் பொருளாக உள்ளதாகிய ஆன்மாவிற்குத் தான் மரணம் உற்றாலும் மறுபிறப்பும் உண்டு, மீண்டும் பிறக்கும் இன்னொரு வாழ்க்கையையும் தொடரும். அது இல்பொருளாக ஆகாது. ஆதிசங்கரர் போன்ற வேதாந்திகள் கூறுவதுபோன்று அதுவோர் கற்பிதப் பொருள் என்றால் அதற்கு பிறப்பும் இல்லை மரணமும் இல்லை மறுபிறப்பும் இல்லை. ஏன்--- எந்த கற்பிதப் பொருளுக்கும் பிறப்பே இல்லை.
ஆயினும் மரணம் என்றால் என்ன? அது ஏன் நிகழ்கின்றது? என்ற கேள்விகள எழும் அதேப் பொழுது மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழல்வது தேவையா? ஏன் அப்படி? அதிலிருந்து விடுபடுவது எப்படி என்ற கேள்விகள் எழ அதற்கெல்லாம் நல்ல பல விளக்கங்களைத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார் நம் மெய்கண்டார்.
இவற்றையெல்லாம் அடுத்த வரும் இரண்டு எடுத்துக்காட்டுகளில், தக்க உவமானங்களைத் தந்து அனைவரும் அறிந்துத் தெளிய விளக்குகின்றார். இங்கு மெய்கண்டார் கொண்ட கனாத் தெரியமும் (Dream Theory) கனவுகள் என்றால் என்ன என்பதும் ஓர் விளக்கங் காண்கின்றது.
எடுத்துக்காட்டு 2.3.1
கண்ட நனவை கனவு உணர்வில் தான் மறந்து
விண் படர்ந்து அத்தூடு வினையினால் -- கண்செவிகெட்டு
உள்ளதேத் தோற்ற உளம் அணுவாய்ச் சென்று மனம்
தள்ள விழுங் கருவில் தான்.
இதன் பொருள்.
கண்ட நனவைக் கனவு உணர்வில் தான் மறந்து:
விழிப்பு நிலையில் பொறிபுலன்களைத் தொழிற்படுத்தி நனவாக பற்பல ஞானங்களை ஈட்டி, பிறகு மறவாதே இவ்வாறு நினைவில் இருத்திய அனைத்தையும் மறந்திட்டேதான் உறக்கத்தின் போது கனவு காண்கையில் கனவினில் வருவதைக் காணமுடிகின்றது. நனவு நிலை அவத்தையிலிருந்து கழன்றியக்காலே சொப்பனாவத்தை கூடும்; இல்லையே அவத்தைப் பெயர்ப்பு மெய்யாகாதாம்;
(அது போல) கண்செவி கெட்டு விண் அத்தூடு படர்ந்து:
அதுபோல மரணம் வந்தணைய பொறிபுலங்களைத் தந்துகொண்டிருந்த உடலழிய, பொறிகள் வழி அறிய முடியா நிலை எய்தி. "வாழ்வது" எனும் அவத்தையை இழந்து, மந்திர சொரூபியாக ஆன்மா விண்ணூடு பராகாயம் படர்ந்து கிடக்கும்;
பறைவைகள் போல் ஆவிகள் போல் திரியாது, மந்திரசொரூபியாகித் திரிவதே "விண் அத்தூடு படர்தல்" என விளம்பப்படுகின்றது.
வினையினால் உளம் அணுவாய்ச் சென்று:
அவ்வாறு பராகாயத்தில் திரிய, புரியட்ட தேகமாகிய அந்த மந்திர சொரூபத்தில் முற்செய்வினைகள் பிராரத்தமாய் உள்ளடைவாய் நிற்க, அந்நிலையால் ஆன்மாவானது பரத்துவம் எய்தி எங்கும் வியாபித்து நிற்பது அல்லாது, அணுத்துவம் பட்டே நிற்கும் என்றவாறு. இவ்வாறு பரத்துமிலாது அணுத்துவ நிலயில் கிடப்பதே மறுபிறப்பிற்கு வேண்டி நிற்கும் நிலையாம்.
(அது பொழுது) உள்ளதேத் தோற்ற:
இவ்வாறான அணுத்துவ நிலையில் கிடக்கும் ஆன்மாவின்மேல் கருணை வைத்து, அந்த அணுத்துவத்தை நீக்குவான் பொருட்டு, சூக்குமவடிவில் கிடக்கும் ஒரு தனுவினை தூலமாய் இறைவன் தோற்றுவிக்க;
மனம் தள்ள விழும் கருவில் தான்:
அணுத்துவ நிலையினால் வரும் குறையே, அபூர்ண நிலையே அவாவினை தோற்றுவிக்க, உருவாகிக் கொண்டிருக்கும் கருவில் விழுந்து, மீண்டொரு பிறப்பெடுக்கும் அவ்வான்மா என்பதாம்.
எவ்வளவு ஆழமான அழகான அறிவிற்கு ஒத்துவரும் விளக்கங்கள்?
ஆன்மாவிற்கு அழிவில்லை, மரணம் ஆன்மாவை அழிக்கின்ற ஒன்றல்ல, அது ஆன்மா குடிகொண்டிருக்கும் உடலைத் தான் அழிக்கும்.
இனி மரணம் என்பதை வள்ளுவப் பெருந்தகை உறங்குவது போன்ற ஒன்று என்றும் மீண்டும் பிறப்பது உறங்கி விழிப்பது போன்ற ஒன்று என்றும் கூறிப்போக அதனை இன்னும் ஆழமாக விளக்குகின்றார் நம் மெய்கண்டார்.
மரணம் என்பது நனவு அவத்தையிலிருந்து கனவு அவத்தைக்குப் பெயர்வது போன்ற ஒன்று,. அங்கு நனவில் நிகழ்ந்தவற்றை எல்லாம் மறந்தால்தான் ஓர் கனவினைக் காண முடியும். உடம்போடு இருக்கும்போது நனவு நிலை, அதலிருந்து விடுபட்டு மந்திரவுலகு புகுவது கனவு அனுபவிக்கும் நிலை,
இது ஓர் உலகப் பெயற்சியாகும். நனவினை இழந்து உறங்கும்போது கனவு கண்டு மந்திரவுலகம் திரிந்து மீண்டும் உடலிற்குள் புகுந்துவிட்டால் கண் காது போன்றவை செயற்பட்டால் விழிப்பும் அப்படி மீண்டும் புகமுடியாது போய்விட்டால் மரணம்! உடல் அழிய அதனுள் ஆன்மா மீண்டும் நுழையாது , நுழைய முடியாது ! அதுவே மரணம்.
ஆனால இவ்வாறு உடம்பிலிருந்து விடுதலையாகும் ஆன்மா புரியட்டதேகத்தில் அதாவது ஓர் மந்திர வடிவில் திரியும் போது அது ஈட்டிய கன்மங்கள் அதனோடு இருக்க அதனால் அது அணுத்துவப் பட்டு ஓர் புள்ளிபோல் குறுகிக் கிடக்க அதுவே மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஊந்தலைத் தருகின்றதாம் அதனாலதாம் மறுபிறப்பும் உண்டாம்!
எவ்வளவு ஆழமான அனுபவத்திற்கு ஒத்துவருகின்ற விளக்கம்? மாந்தர்கள் உள்ளத்தில் நூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தெளிவற்ற ஓர் உள்ளுணர்வாக இருந்த ஓர் ஆழமான உண்மை மிகத் தெளிவான ஓர் நூன்னெறி அறிவியல் வடிவை மெய்கண்டார் வாக்கில் அடைகின்றது!
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை அளந்து நிறுத்த ஐரோப்பிய அறிவியல் இன்னுமோர் கருவியை கண்டுபிடிக்கவில்லை, கண்டுபிடிக்கவும் முடியாது. ஆயினும் அது ஓர் பொய் அல்ல, மெய்கண்டார் வற்புறுத்தும் நூலிய அறிவியல் வழி சென்றால் அது ஓர் உண்மை என்று மிகத் தெளிவாக அறிய வருவோம்
இதனோடு மெய்கண்டார் நிற்கவில்லை. இன்னும் விளக்குகின்றார். அதனையும் அடுத்துக் காண்போம்
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 19: அகண்ட அறிவியலும் சைவமும்
நாம் இங்கு மெய்கண்டார் வழி செல்வது physical sciences எனப்படும் ஐரோப்பிய அறிவியல் அல்ல, மாறாக metaphysics எனப்படும் தத்துதுவ ஞான விசாரணையையும் ஆகவே சமயங்களையும் உள்ளடக்கிய அகண்ட அறிவியல் ஆகும். இங்கு தமிழர்களின் மெய்கண்டாரியம் ஓர் அறிவியல் துறையை வடித்து அதனுள் ஐரோப்பிய விஞ்ஞானத்தையும் அகப்படுத்தி ஓர் விரிவான அகண்ட அறிவியலை நூலிய அறிவியலை வடித்திருக்கின்றது. ஆனால் இதனை நாம் அறியாத ஞானக் குருடர்களாக இருப்பதின் மீண்டும் நான் இதனை இங்கு கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றும் இவ்வழி செல்வதே அகண்ட அறிவியல் என்றால். மேலே ஆன்மா மரணத்திற்குப் பிறகும் உண்டு, அது அழியாது தான் ஈட்டிய கன்மங்களை உள்ளடைவாய்க் கொண்ட ஓர் மந்திரத் திருமேனியொடு பரகாயம் திரிந்து பின் அதனோடு யாண்டும் உடனிருக்கும் இறைவனது அருளால் தக்கவோர் பிறப்பெடுக்கும் என்று கூறுவதும் அறிவியல்தான் ஆனால ஐம்பொறிகளால் காண்பதே பொருள் எனும் உலகாயதச் சார்பின் குறுகிய அறிவியல் அல்ல. இதுதான் ஐரோப்பிய அறிவியல். அது பொய்யானது என்று கூற வரவில்லை, ஆனால் அது குறைபாடுடைய ஓர் குறுகிய அறிவியல், தமிழர்களின் அகண்ட அறிவியல் அல்ல. அதற்கு பொறிலியப் பார்வைதான் உண்டு, நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற மேலான பார்வைகள் இல்லை. மேலும் அதன சாதனங்களில் பலவகையான அளக்கும் கருவிகளும் படம் பிடிக்கும் கருவிகளும் இருக்கும் ஆனால கண்களை விழிப்பிக்கும் ஆடல் பாடல் இசைபோன்றவை சாதனங்களாக இருக்காது. அகண்ட அறிவியல்வாதியாகிய ஓர் சைவன் ஆடியும் பாடியும் மந்திரவுலகு அறிந்து தன் பார்வையை ஆழமாக்கி அகன்றதாக்கி காணாததைக் கண்டு மெய்ஞானம் பெறுவான். ஐரோப்பிய குறுகிய அறிவியல் இதனை கேவலப்படுத்தி எள்ளி நகையாடும். இது அவர்கட்கு அறிவியலோடு தொடர்புடையது அல்ல.
ஆன்மா மரணத்திற்குப் பிறகு உண்டு என்பது மெய்கண்டார் தெளிவு படுத்தும் ஓர் உண்மை, மெய்ப்பொருள் காண்பதால் வருவது. பண்டே மாந்தர்கள் உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வாக இருக்கும் ஒன்றை தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி ‘உண்மை’ என்று நிறுத்துவதாலும் மேலும் வீணான கற்பிதங்கள் எல்லாம் நீக்கி சிந்திப்பார் அனைவரும் உடன்படும் வகையில் இந்த ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் அமைய அது வீணான கற்பிதம் அல்ல, மாறாக மிக ஆழமான உண்மை என்று புலனாகின்றது.
எவ்விதத்திலும் மறுக்கமுடியாத உண்மை என, உடன்பட்டுத் தானே ஆகவேண்டும்?
ஆயினும் சில வேதாந்திகள் இருக்கின்றார்கள். இதெல்லாம் பெரும் பிழை, வேதங்களில் உபநிடதங்களில் இவ்வாறு கூறப்படவில்லை. எவ்வாறு ஓர் குடம் தான் அடைத்துக்கொண்டிருக்கின்ற ஆகாயம்(space) குடம் உடைய அது பரந்த விண்வெளியாகின்றதோ அதிபோலத்தான் இந்த ஆன்மாவும். இந்த உடம்பெனும் சிறையில் கட்டுப்பட்டு பிணிக்கப்பட்டு கிடக்க அதுவோர் தனிபொருளாக உணர வருகின்றது. ஆனால இந்த உடல் நோயால் முதுமையால் விபத்தால் சிதைவுற்று அழிய. உயிரும் தனிப்பொருளாக பரலோக்கத்தில் புரியட்ட தேகத்தோடு திரியாது தனித்துவம் இழந்து பரப்பிரமம் ஆகிவிடுகின்றது என்று கூறுவர். இதற்குச் சான்றாக உபநிடத்தங்களில் வரும் மகா வாக்கியங்களாகிய ‘அகம் பிரமம் அஸ்மி” ‘தத் துவம் அசி” போன்றவைற்றை கூறுவர். வேதமே சொல்லியிருக்க அது எப்படி பொய்யாகும்? வேத வாக்கு எப்படி பொய்யாகும்?
இப்படி வேதப் பிரமாணம் கூறித்தான், ஆதி சங்கரரை அவரைப் போன்ற வேதப் பிரமாணர்களும் பிறரும் விடாது சொல்லிவைத்தாற்போல் கூட்டாக ஜகத்குரு என்று பறை சாற்றி பொய்ப் பிரச்சாரம் செய்து சித்தாந்த சைவம் எடுபாடாது ஆக்கி புறந்தள்ளி ஏறக்குறைய புதைத்து விட்டனர்.
மிகப் பிழையான மாயாவாதங் கூறிய ஆதிசங்கரரை உலகமே அறிந்திருக்கின்றது,. அகண்ட அறிவியல் கூறி சமயவாழ்க்கையை ஓர் அறிவியல் துறை ஆக்கி அதன் வழி வர்ணீய சாதீய சிந்தனைகட்கும் சமயத்திற்கு தொடர்பில்லாது ஆக்கிய மெய்கண்டாரை இன்று தமிழர்கள் கூட அறியாதிருக்கின்றனர்!
மெய்கண்டார் கண்ட அகண்ட அறிவியல் வர்ணீய சாதீய கருத்துக்களை பொய்யென்று காட்டுவதால், னெய்கண்டாரியம் வீழ்ந்ததோ? இருக்கலாம்.
இப்பொழுது சமய வாழ்க்கையையே ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற அடிப்படையில் ஓர் நூலிய அறிவியல் துறை அல்லது அகண்ட அறிவியல் துறை ஆக்கிய மெய்கண்டாரை நம் இளைஞர்கள் அறியாதே வளருகின்றனர். நமது பெரியவர்கள் மெய்கண்டாரை ஓர் வலுவான திரையிட்டு மூடிவிட்டனர். இப்படி மெய்கண்டரையே அறிந்திருக்காத போது அவர்கள் எப்படி அருணந்தி உமாபதி கண்ணுடைய வள்ளல் சிற்றம்பல நாடிகள் தத்துவபிரகாசர் சிவஞான வள்ளல் போன்ற மெய்கண்ட சாத்திர வித்தகர்களை அறிவார்கள்?
இப்படி இருக்கும்போது ‘மெய்கண்டாரியம்’ என்றும் அதன்வழி பிறந்த அறிவியற் பனுவலாகிய ‘மெய்கண்ட சாத்திரங்கள்’ என்பதையும் அறிந்து தானும் ஓர் மெய்கண்ட சாத்திரம் (என்னைப் போல?) எப்படி படைக்க முயல்வார்கள்?
பெரியாரின் திராவிட இயக்கமும் தோன்றி இப்படிப்பட்ட ஞானநூற்களை நூலிய அறிவியற் பனுவல்கள் , அகண்ட அறிவியற் பனுவல்கள் என்பதின் பகுத்தறிவுச் சார்ந்தவை என்று உணராது, பகுத்தறிவிற்கு புறம்பானது பிராமண ஆதிக்கத்தால் எழுந்தது என்று கூறி, அவற்றை இளைஞர்கள் படிக்கவொட்டாது மற்றும் வெறுக்கச் செய்து ஞானம் வளர்க்காது முடக்கி விட்டனர். இதனால் இப்பொழுது பரக்கக் காணவரும் பண்பாட்டுச் சிதைவுகள் தான், சீரழிவுகள் தான். ஆணவ மலம் அகத்தே அதிகரித்து வலுவாகிட வேறென்ன நடக்கும்?
ஆன்மா உண்டென்பதும் அது மரணத்திற்குப் பிறகு பரகாயத்தில் மந்திரத் தேகத்தோடு திரியும் என்பதும், ஈட்டப்பட்ட கன்மம் உடனிருக்க அணுத்துவப் பட்டு கிடக்கும் என்பதும் அதனாலே அதற்கு மீண்டும் உடம்பெடுத்து வாழவேண்டுமெனும் ஓர் ஊந்துதல் இருக்கும் என்பதும் அதன் காரணமாக அதற்கு தக்கவோர் யோனி அதனது கன்ம ஈட்டத்திற்கு ஏற்ப ஓர் பிறப்பு அமையும் என்பதும் இன்னும் இதுபோன்றவை எல்லாம் அழியா ஆழுண்மைகள். வேதத்தில் இருக்கோ இல்லையோ யாரோவோர் பிராமணன் கூறியுள்ளானோ அல்லையோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இவை எல்லாம் நம் உள்ளத்தில் நம் அறிவில் ஏற்கனவே உள்ளுணர்வாக இருக்கின்றவை. மெய்கண்டார் வழி சென்று நாம் சிந்தித்து தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழியாகச் சிந்தித்துத் தெளிந்து உண்மையே என்று தெளிந்து உடன்பட்டு அதற்கேற்ப வாழவேண்டும். அதுவே அறிவுடைமை.
மேலே காட்டியுள்ளது ஓர் நூறாயிரம் ஆண்டுகட்கு முன்பும் அந்த அமேசோன் காட்டுவாசிகள் போல பல மாந்தர்கள் உள்ளத்தில் பதிக்கப்பட்டுவிட்ட ஓர் அறிவு வாகும். அவர்கள் முறைப்படி சிந்தித்துத் தெளியாது உள்ளுணர்வாக உணர்ந்து அதனால தெய்வங்களை வழிபட்டதோடு முன்னோர்களையும் வழிபட்டு வாழ்ந்தனர். இன்றும் அது தொடரத் தானே செய்கின்றந்து?
இதனை எல்லாம் தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி தெளிவாக்கி நாம் ஐயம் திரிபற அறியத் தரும் மெய்கண்டார் ஓர் மெய்யை மெய்யென்று நிறுத்தி பொய்யை பொய்யென்று காட்டி அறிவிலே தெளிவினைத் தரும் அவர் எப்படி பகுதறிவிற்கு புறம்பான ஒன்றை கூறுபவராக இருக்க முடியும்? ஐரோப்பியர்களின் குறுகிய அறிவியலிற்கு வேறாக மாறாக அகண்ட அறிவியல் கூறி metaphysics எனப்படும் தத்துவ ஞானத் துறையையும் அறிவியல் துறை ஆக்கிய மெய்கண்டார் எப்படி பகுத்தறிவிற்கு புறம்பானவர் என்று கூற முடியும்?
பிராமண எதிர்ப்பு என்பது நம் கண்களை மறைக்கக்கூடாது, அறிவினை பொய்வழி செல்ல வைக்கக்கூடாது. வர்ணாச்சிரமம் பிராமணீயம் என்றவாறு முன்பு பிராமணர்களாக இருந்தவர்களாலும் இப்பொழுது இந்த பிராமணீயம் போன்றவை கண்டிப்படும் ஒன்றாகி விட்டது. அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே. மேலும் பிராமணீயமும சாதீயமும் கண்டிக்கப்படுவதோடு அழிக்கபட வேண்டியதும் ஆகும்.
இதற்கு ஒரே வழி அகண்ட அறிவியல் வழி செல்லும் சைவம் வளர்ப்பதே. தமிழர்களின் சைவம் பிராமணீயம் போற்றும் இந்து சமயம் அல்ல, அது இன்று வடநாட்டில் பிரபலமாகி வரும் இந்துத்துவாவும் அல்ல, அது நூன்னெறி பாற்பட்ட ஓர் அறிவியல் சமயம். அங்கு வர்ண தர்மம இல்லை சாதி தர்மம் இல்லை, இருக்க முடியாது.
எங்கு ‘மெய்பொருள் காண்பதே அறிவு” என்று ஓர் சமயமோ பண்பாடோ இயங்குகின்றதோ அது வர்ணாச்சிரம தரமத்தையோ சாதி தர்மத்தையோ அல்லது அதிகாரத்துவ வேதங்களையோ ஆகமங்களையோ போற்றாது, பிரமாணமாக ஏற்றுகொள்ளாது. தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி செல்லும் ஏரணசிந்தனையைத் தான் போற்றும்
இப்பொழுது நான் மீண்டும் கூறுகின்றேன்
நான் வேத பிரமாணத்தை அங்கீகரிக்கும் வேதியன் அல்ல, ஏரணவியல் வழி செல்லா வேதாந்தியும் அல்ல, இறைவன் இல்லை ஆன்மா இல்லை எனும் புத்தன் இல்லை மற்றும் இதனைப் போன்ற ஏனைய உலகாயதவாதியும் அல்ல, சைவாகமங்களே பிரமாணம் எனும் சிவாச்சாரியாரும் அவர்கள் பகரும் ஓர் வகையான சைவத்தை போற்றுகின்றனும் அல்ல, அதன் வழி சாதிபேதங்களை அங்கீகரிக்கும் சாதீய சைவனும் அல்ல.
நான் ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு’ என்று இயங்கும் மெய்கண்டாரியம் போற்றும் ஓர் அறிவியல் சைவன்!
இதுவோர் சாதாரண பாரம்பரியம் அல்ல. உலக நாகரீகத்திற்கு வித்திட்ட சுமேருத் நாகரீகத்தின் வழி வந்த ஒன்று. இதனை வடித்த பெருமை வேதங்கட்கெல்லாம் முற்பட்ட சூருபாக்கு ஏண் உடு அன்னா சூல்கி போன்றோரால் வளர்க்கப்பட்ட, உலகிற்கு 2500 வருடங்கட்கு முன்பே தொல்காப்பியம் எனும் மாபெரும் பொருளியல் நூலை அருளிய ஓர் பெரும் நாகரீகம்.
இதனை புரிந்துகொள்ளாத இன்றைய மடமையால் அதன் அழிவிற்கு தமிழர்களாகிய நாம் காரணமாகி விடக்கூடாது.
தொடரும்
உலகன்
நான் ஏன் ஓர் சைவன்?
முனைவர் கி.லோகநாதன், 18-12-14
இடுகை 20: அகண்ட அறிவியலும் நித்திய சத்தியங்களும்
இப்பொழுது பல போராட்டங்கட்குப் பிறகு மெதுவாக ஆனால் உறுதியாக சுமேருமொழி முதற் சங்கத் தமிழே, சங்க இலக்கியங்களில் காணப்படும் முச்சங்க வரலாற்றுக் குறிப்பு மெய்யானதே, சுமேரியாவில்தான் முதற் சங்கம் இருந்திருக்க வேண்டும் ஆகவே இடைச் சங்கமும் பாரதத்தில் எங்கோ இருந்திருக்க வேண்டும் என்பவை எல்லாம் உண்மையே பொய்யல்ல என்பது உறுதியாகி வருகின்றது. உலகம் இதனை ஏற்றுக் கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஏன் தமிழர்களே இன்னும் முற்றாக ஏற்றுக்கொள்ளாதுதானே இருக்கின்றனர்?.
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு வீணான கற்பிதக் கவிதைகளை வடித்து வடித்து உணர்ச்சியைத் தூண்டித் தூண்டி தமிழ் வெறியில் வாழ்கின்றார்களேத் தவிற, முறையாக சிந்தித்து தக்க ஆவணங்களைத் தேடி உண்மையை அறிந்து மகிழும் திறனை இழந்து கிடக்கின்றார்கள். அளவிற்கு மீறிய கற்பித புகழ்ச்சிகளில் மனநிறைவு அடைந்து முறையான அறிவார்ந்த ஆய்வுகளில் ஈடுபட மறுக்கின்றார்கள்.
ஆனால் எனக்கு இந்த சுமேருத்தமிழே முதற் சங்கத் தமிழ் எனும் உண்மை பெரிதும் உணர்த்துவது, ஏன் தமிழனமே வேளாண்மை கண்டும் விண்ணியல் ஆய்ந்தும் மொழிக்கு வரிவடிவம் கண்டும் உலக நாகரீகத்திற்கு வித்திட்டதற்குக் காரணமே அவர்கள் ஏதோ ஓர் வகையில் அகண்ட அறிவியல்வாதிகளாக இருந்ததுதான். இதனால் அவர்கள் அறிவியல் சைவர்களாக இருந்ததுதான்
இதைக் கண்டுதான் அதே நெறியை இன்று கிடைக்கும் தொல்காப்பியம் திருக்குறள் திருமந்திரம் சிவஞானபோதம் போன்ற மெய்கண்ட சாத்திரங்களில் கண்டு வியந்து மகிழ்ந்து இந்தத் தொடரினை தொடங்கி பல எழுதி வருகின்றேன்
தமிழர்கள் அகண்ட அறிவியல்வாதிகள் ஆகவே வர்ணாச்சிரமம் அதனைச் சார்ந்தெழுந்துள்ள சாதீயம் போன்றவற்றை ஆதரிக்காத ஓர் பண்பாடே அவர்கள் பண்பாடு. அது முதற்சங்க காலத்திலிருந்து வரும் ஓர் பண்பாடு எனும் போது, சாதீய சகதியில் விழுந்து கிடக்கும் இன்றையத் தமிழர்கட்கு அது எடுபடாது போவதோடு, எவ்வாறு மெய்கண்டாரை புறக்கணித்து புதைத்துவிட்டார்களோ அதேப் போல இந்தத் தொடரில் விளங்கும் கருத்துக்களையும் புறம்தள்ளி புதைத்துவிடலாம் மெய்கண்டாரின் அற்புதமான அகண்ட அறிவியலையும் புறகணித்து சாதிச் சகதியில் மீண்டும் விழுந்து விடலாம்.
ஆயினும் தமிழன் கண்டது ‘அகண்ட அறிவியல்’ என்பதும் அது ஐரோப்பிய அறிவியலையும் விட சிறப்பானது ஆழமானது சமய வாழ்க்கையையும் அறிவியலாக்கிய ஒன்று என்பது ஓர் உண்மையாக, இன்றில்லாவிட்டாலும் நாளை அது புகழ் பெறும், உலகெல்லாம் வளரும் என்பது உறுதி.
நான் ஏன் இப்படி நினைக்கின்றேன்?
இன்று உலகெல்லாம் பரவி கிடக்கும் ஐரோப்பிய குறுகிய அறிவியல் கண்டித அறிவியல், சிந்திக்கும் பண்பாட்டை வளர்ப்பதால் தானே இந்த அகண்ட அறிவியலிற்கு இட்டுச் சென்று விடும். இந்த ஐரோப்பிய அறிவியல் தன்னுள் ஓர் பெருங் குறையைக் கொண்டுள்ளது. அது மெய்கண்டாரியம் தரவல்ல ‘நித்திய சத்தியம்’ என்ற மெய்யுணர்வைத் தரமுடியாது என்றும் ஓர் உறிதியற்ற நிலையில் மானிட அறிவை இருத்தி ஓர் விரக்தியை உள் நமைச்சலைத் தந்துகொண்டே இருக்கும் ஒன்று. அறிவின் இந்த நமைச்சலே அகண்ட அறிவியலிற்கு இட்டுச் சென்று மெய்கண்டாரியத்தைப் போற்றவும் செய்யும்
Karl Popper தமது Conjectures and Refutations என்ற நூலிலும் பிற நூற்களிலும் கூறியுள்ளது போல், கண்டித அறிவியல் உண்மைகள் என்று உணர்த்தப்படுவதை மறுக்கத்தான் தருமேத் தவிர, இதுவே உண்மை, மறுக்கவே முடியாது என்றவாறு நித்திய சத்திய உணர்வைத் தராது. இன்று மிகவும் உறிதியான உண்மை என்ற ஓர் அறிவியல் உண்மை நாளை அப்படி அல்ல என்று அது வீழ்த்தப்படும் சாத்தியம் எப்போதும் உண்டு.
ஐரோப்பிய அறிவியலில் நித்திய சத்திய உண்மைகள் இல்லை ஆனால் தமிழர்களின் அகண்ட அறிவியலில் பதியினைப் போல பசு பாசம் அநாதி என்பன போன்ற எவ்வாற்றும் மறுக்க முடியா நித்திய சத்தியங்கள் உண்டு.
‘மறுத்துமறுத்து எறிந்தும் மரியாவகை ஒளிர்ந்து
உறுத்தி நிற்பதே உண்மை’
என்று அருட்குறள் கூறுகின்றது. ( இந்நூலும் நான் எழுதியதுதான்!)
தமிழப் பண்பாடு அதிலும் குறிப்பாக சைவப் பண்பாடு பரபக்க-சுபக்க சிந்தனையை வளர்த்து வந்துள்ள சிறப்பால், எவ்வகையான சிந்தனையும் தோன்றி வளருமா வளரவிட்டு பின் அதற்கு ஏதுக்கள் என்ன. எடுத்துக்காட்டுகள் தான் என்ன, எவ்வகையில் அதன் மெய்மை நிறுத்தப்படும் என்றெல்லாம் கேட்டுக் கேட்டு அறிவிற்கு வரக்கூடிய எல்லா கோணங்களிலும் அது உண்மையா? பொய்யா? என்று விசாரித்து பரப்பக்கமாக எவ்வாறும் ஆக்க முடியாத நிலையில் சுபக்கமே உண்மையே நித்திய சத்தியமே என்ற உணரத் தருகின்றது. அதன் வழி ஓர் அற்புதமான அகத் தெளிவை ஆகவே ஓர் உறுதியைத் தருகின்றது.
இறைவன் உண்டு, அவனுக்கு வேறாக எண்ணிறந்த ஆன்மாக்கள் உண்டு மேலும் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களும் உண்டு, இவை ஆன்மாக்களையே பந்தித்து அவற்றை பசுவாக்கும் அதாவது அணுத்துவ ஆன்மாக்கள் ஆக்கும், அதனால் பிறப்பெடுத்து மரணமுற்று மீண்டும் பிறந்து கற்று கற்று பக்குவத்தில் உயர்ந்து முடிவில் இந்த மும்மலத் தொந்தனைகள் எல்லாம் விட்டு நீங்கி மீண்டும் பிறவாமை அருளப்பெற்று இறைவனடி சேரும் என்பவை எல்லாம் அகண்ட அறிவியல் தரும் நித்திய சத்திய உண்மைகள்!
ஐரோப்பிய அறிவியல் தரும் அறிவுகள் எல்லாம் வெற்று சாத்தியங்களே யாண்டும் மறுக்க வரும் தற்காலிக உண்மைகளே அதாவது அசத்தறிவுகளே, சத்தறிவுகள் அல்ல, நித்திய சத்தியங்கள் அல்ல.
ஐரோப்பிய அறிவியலிற்கு எல்லா அறிவுகளும் அசத்தறிவுகள் தான்--- இன்றில்லாவிட்டாலும் நாளை அவை மறுக்கப்படலாம். அவை எல்லாம் ஒருவகையான conjectures தான், ஊகங்கள் தான், ஆகவே யாண்டும் அவை மறுக்கப்டலாம், can always be refuted.
சைவங்கூறும் அநாதிபொருளியல் போன்ற உண்மைகள் இப்படிப்பட்ட conjectures, அல்ல வெறும் சாத்தியங்கள் அல்ல, அவை நித்திய சத்தியங்கள், அழியாவுண்மைகள் எப்படிப்பார்த்தாலும் எந்த கோணத்தில் விசாரித்தாலும் மறுக்கவேப் படாத முடியாத உண்மைகள். ஏதுக்கள் என்ன எடுத்துக்காட்டுகள்தான் என்ன என்று விடாது விசாரித்து தெளிந்து தெளிந்து தெளிவின் எல்லைக்கேச் சென்று மேற்கொண்டு எவ்வித ஐயப்பாடும் தோன்றாத ஞான எல்லைக்கேச் சென்று அறிவையே அடங்கிடச் செய்து சுத்த மோனமே விளங்கிடச் செய்யும் அழியா உண்மைகள் இவை.
இப்படிப்பட்ட நித்திய சத்தியங்களை மெய்ஞானத்தை சிவஞானத்தை தமிழனின் அகண்ட அரிவியல்தான், மெய்கண்டாரியந்தான் தரும், சைவ நெறிதான் தரும் , ஐரோப்பிய அறிவியல் நெறி அல்ல.
இப்பொழுது புரியுமென்று நினைக்கின்றேன், ஏன் நான் ஓர் சைவன் என்று பறை சாற்றித் திரிகின்றேன் என்று.
தொடரும்
உலகன்