திருக்குறளில் "குடும்பம்" என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப்
பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். “இல்வாழ்க்கை”, “மனை மாட்சி” என்றே
குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர்
சொல்லுங்கள்.
ரெ.கா.
On Nov 28, 4:15 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/11/28 karthige...@gmail.com <karthige...@gmail.com>
இந்தக் "குடும்பி" இப்போதுள்ள குடும்பம் என்ற பொருளில்தானா?
சம்ஸ்கிருதத்திலும் இருக்கிறதென்று சித்தன் சொல்லுகிறார், இங்கிருந்து
அங்கே போனதா, அங்கிருந்து இங்கேயா?
ரெ.கா.
On Nov 28, 7:15 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/11/28 karthige...@gmail.com <karthige...@gmail.com>
>
. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? //
’குடும்பம்’ , ‘குடும்பகம்’ இரண்டும் வட சொற்களே.
‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’
என்று மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார்கள்.
’பரந்த மனமுடையோர்க்கு உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’
என்று பொருள் கொள்ளலாம்.
உறவினர், மக்கள், வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும்
இச்சொல் பயனாகிறது.
தேவ்
ஹரி,
இந்தக் "குடும்பி" இப்போதுள்ள குடும்பம் என்ற பொருளில்தானா?
சம்ஸ்கிருதத்திலும் இருக்கிறதென்று சித்தன் சொல்லுகிறார், இங்கிருந்து
அங்கே போனதா, அங்கிருந்து இங்கேயா?
குடும்பம் வடசொல் என்றாலும் அது திராவிட வேர் சொல் பிறப்பே
குடி, குவை, குட்டு, குப்பை, போல கூட்டப்பொருளில் வரும் சொற்களுடன்
குலம் ,
குடும்பத்தை சேர்க்கலாம்
கர்ப்பம் (கரு)
கரம் (கை)
சொற்களும் இதேபோல் திராவிட வேரின் வடசொற்கள்
வேந்தன் அரசு///
பஹுத் அச்சீ பாத் ஹை !
தேவ்
அவங்களுக்குத் தமிழ். நமக்கு செங்கிருதம். அவ்வளவுதான். :-)
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"Sneha is proof that God loves me and wants me to be happy"- Me.
2008/11/28 Hari Krishnan hari.har...@gmail.com
அவங்களுக்குத் தமிழ். நமக்கு செங்கிருதம். அவ்வளவுதான். :-)ஹரி அய்யாஉங்கள் நிலைமை அளிதுதான்
அல்லியும் வாய் திறக்கமுடியலேஇங்கும் வாய் திறக்க முடியலே
எங்கப்பா மாடு மேய்த்தவர்நான் ஒரு நாலு எழுதது படிச்சிட்டேன்அதனால் இந்த ஆட்டம் ஆடுகிறேன்நீங்க சிரிச்சுகோங்க. ஒரு மூலையில் ஓ இப்படியும் இருக்குமோ நு ஒரு ஐயப்பாடு தோணுமோ என்னவோ!!
கூடவே ஒரு வேண்டுகோள். திராவிட வேரிலிருந்து கிளைத்த வட சொற்களைப்
பட்டியலிட்டு நன்கு விளக்கி விட்டால் எதிர் காலத்தில் ஐயம் தோன்றவே
இடமிராது.
கடன் வாங்காமல் உள்ளிருந்தே கிளைத்தவை - கடன் வாங்கி அமைந்தவை
என்று பகுத்துவிட்டால், வின்ஸ்லோ, கதிர்வேலுப் பிள்ளை, வாமன் ஷிவராம்
என்று அலையும் வேலையும் மிச்சமாகும்.
பல்கலைக் கழகங்களுக்கோ , தமிழ் ஆர்வலர்களுக்கோ பஞ்சமில்லை;
அரசோ கழக அரசு.
தேவ்
// Nov 29, 3:53 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> 2008/11/28 வேந்தன் அரசு raju.rajend...@gmail.com
>
> பஹுத் அச்சீ பாத் ஹை !>
>> இதற்கு வடமொழியில் என்ன சொல்லுவாக?>> வேந்தன் அரசு//
> --
-----------------------------------------------------------------------
साधु कथितम !
ஸாது கதிதம் !
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
எனக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை. எதற்காக இப்படியெல்லாம் சொல்கிறீர்களோ நானறியேன். வியத்தலும் இலமே, இகழ்தல் அதனினும் இலமே.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
அவங்களுக்குத் தமிழ். நமக்கு செங்கிருதம். அவ்வளவுதான். :-)
//பஹுத் அச்சீ பாத் ஹை
ரொம்ப நல்ல வார்த்தைங்கோ
தமிழ் - வடமொழி
இந்தி - வடமொழி
எந்த அணியில் ஒற்றுமை அதிகம் //
//எங்கப்பா மாடு மேய்த்தவர் //
//தமிழ் வடமொழியின் கிளை என்று எவரால் நிறுவ முடியும் //
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies. //
யாரோ ஹிந்தியையும் தமிழையும் ஒப்பிடுவது போலவும்,
யாரோ மாடு மேய்த்ததை யாரோ பழித்தது போலவும்,
யாரோ வடமொழியிலிருந்து தமிழ் கிளைத்தது என இடைவிடாமல்
நிறுவிவருவது போலவும், இந்த அடாத செயல்களை ஒருவர் முன்னின்று தடுப்பது
போலவும் !
இதெல்லாம் என்ன இடப்பரட்டு வேலை, வேந்தன் ?
ஏதாவது நல்ல நூலை மொழிபெயர்ப்பதிலோ, மின்னாக்கம் செய்வதிலோ
கவனம் செலுத்தக் கூடாதா ?
தேவ்
ஏதாவது நல்ல நூலை மொழிபெயர்ப்பதிலோ, மின்னாக்கம் செய்வதிலோ
கவனம் செலுத்தக் கூடாதா ?
தேவ்
நடிப்பவர்கள் எல்லோரும் பார்வையாளர்கள் ஆகிவிட்டால் எப்படி கலை வளரும்
On Nov 28, 4:58 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
குடி செயல்வகை
---------------------------------------
திருக்குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
குடி = குடும்பமும், சுற்றமும்.
குடிகெடினும் நள்ளேன் நினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2).
குடும்பம் பற்றி இராம்கி ஐயா எழுத விண்ணப்பிக்கிறேன்.
நா. கணேசன்
சொல் - சொல்வது
நாக்கு - நவில்வது
பல் - பலுக்குதல்
பதம் - ???
:)
ஒரு ஆங்கில சொல் தமிழில் வேறு பொருள் தருவதற்கு ஒரு எடுத்துக்காட்டு,
assault. :)
ஒரு சொல் திசைச்சொல் எனக் கண்டு கொள்ள அதன் பலுப்பல் பிறழ்வைச்
சுட்டலாமென எனது பிரெஞ்சு நண்பர் சொல்லியிருக்கிறார். அவர் இங்கு வந்து
சமிஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் கற்றவர். உதாரணமாக, பத்மா என்ற சொல்
வடசொல். எனவே நம்மவர் இதைப் பிரட்டிப்பலுப்பர் (Badma என்பதுபோல்). அதே
போல் ஸ்வேதா என்று நமக்குச் சொல்ல வராது. பூரி என்பதை Buri என்போம்.
இவையெல்லாம், இவை திசைச்சொற்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுமென்று
என் நண்பர் சொன்னார்.
க.>
பூரி என்பதை Buri என்போம்.
இவையெல்லாம், இவை திசைச்சொற்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுமென்று
என் நண்பர் சொன்னார்.
அண்மையில் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது
வள்ளுவருக்குப் பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். 'இல்வாழ்க்கை', 'மனை
மாட்சி' என்றே குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம்
என்ன? அறிந்தவர் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தவிர, அந்தச் சொல்
“தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா, வடமொழியில் இருந்து தமிழுக்கு
வந்ததா?” என்றும் கேட்டிருந்தார். உடனே, “குடும்பம், குடும்பகம் -
இரண்டும் வட சொற்களே. ‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’ என்று
மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார்கள். ’பரந்த மனமுடையோர்க்கு உலகம்
முழுவதும் ஒரே குடும்பம்’ என்று பொருள் கொள்ளலாம். உறவினர், மக்கள்,
வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது" என்று திரு.தேவு
சொல்லியிருந்தார். ஆனால்,
ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||
""This is my own and that a stranger" - is the calculation of the
narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"
என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவே இல்லை என்று சர்வேஷ் திவாரி
என்பவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார்.
(http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-
Hitopadesha/blog-148.htm). {மேலும், இந்த வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய
ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதே பொழுது இந்தச் சொற்றொடர்
பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில
காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப்
பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத்
தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப்
படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்கு முன்னால் பஞ்ச தந்திரக்
கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாவது
அதிகாரத்தில் ஏழாவது அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில்
அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆவது அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச்
சொலவங்களிலும் இந்தச் சொற்றொடர் ஆளப்பட்டிருப்பதாக திவாரியின் கட்டுரைகள்
சொல்லுகின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எந்த
இடத்தில் இந்தச் சொற்றொடர் ஆளப்பட்டிருக்கிறது என்று அதிகாரம், வரிக்
குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக
இருக்கும். பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு
அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற
சொல் சண்டோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி
ஆகியவற்றில் ஆளப் படுவதாகத் தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி
குறிப்பிடுகிறது.]
மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோராலும் கருதப்
படுகிறது. ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள்
நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம்
புத்தருக்கும் முற்பட்டது என்று சொல்லுவார்கள். வேத நெறி பயிலாத
(ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளர்களிடம் பெரிதும்
புழங்கியவை பஞ்ச தந்திரக் கதைகள். தொடக்க காலத்தில் அவற்றைப் பயன்படுத்த
வேத நெறி பெரிதும் தயங்கியது. பின்னால், நெடுங்காலம் கழித்தே, வேத நெறி
தன் பரப்புரைகளில் ஒரு சில பஞ்ச தந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது.
உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400
வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்லுகிறார்கள்.
குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென
அறுதியிட்டுச் சொல்ல முடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த
வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின்
சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால்,
அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின்
தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]
பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோவொரு காரணங் கருதி
மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று
இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே
சுருங்கியது), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த
தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமயநெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி,
முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும்,
குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும்
புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர்
போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட
பகுதி ஆய்வு செய்யப் படாமலே அழிந்து கொண்டிருக்கிறது. ”வரலாற்றுத்
திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக்
கொண்டிருக்கின்றன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன
என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும்
வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள்
சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்கள் உண்டு என்பதை
மறுக்கிறார்கள். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில்
பொருளென்ன இருக்கிறது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே
இப்படி எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசல்
என்று முட்டிக் கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் தான்
என்ன குடி முழுகியா, போய்விடும்? புதுக் காற்றுத் தான் தென்றலாய் வந்து
அடிக்கட்டுமே?
அன்புடன்,
இராம.கி.
On Nov 28, 3:58 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> தமிழறிஞர்களே,
>
> திருக்குறளில் "குடும்பம்" என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப்
> பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். “இல்வாழ்க்கை”, “மனை மாட்சி” என்றே
> குறளில் ஆளப் பெறுகிறது.குடும்பம்என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர்
இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம்.
நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம்
அதிகாரத்தில் இருந்தே
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக்
குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இந்தக்
குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை என்னும்
அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த
அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் ஓர் அகன்ற குடும்பத்தையே
குறிக்கிறது. இந்தக் காலத்து நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப்
போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut;
nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை
எப்படியெல்லாம் இந்தக் காலத்தில் தமிழ் வழியே நெற்றுப் பூதியலைச்
(nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக் கொள்ளலாம் என்பது
விளங்கும். நாம் தான் இருப்பதைத் தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று
தவிப்பவர்கள் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக்
கொண்டிருந்தால் எப்படி?) அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்கள்
புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும்
வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.
குல்>குலம்;
குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம்
சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்>
குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு
எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே
உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர்
குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ
என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம்
பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட
குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம்
என்று போட்டிருப்பார்கள்.
பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல்
என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த
வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல்
உருவாக்கமுறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகு
வளர்ச்சியும், ஏற்பட்டிருக்கிறது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.
அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற
பெயர்ச்சொல்லும் கூட உண்டு.
எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர்
இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..
கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை
உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற
பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும்.
இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு
என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு
கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு
முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்லுவார்கள். “தேரோடத் துகள் கெழுமி”
என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.
இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்
என்ற சொற்களும்,
துள்> ........தழு> தழுவு> தழும்பு என்ற சொல்லும் மேலே சொன்ன
வினையாக்கமுறையை உணர்த்தும்,
இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு
தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற
வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில்
தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின்
வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக்
கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். நீர்த்
திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.
அடுத்து,
துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு =
வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில
அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார்கள். தொழும்பரும் தொண்டரும் ஒரே
பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு
சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல்
ஏற்படுகிறது.
இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு>
பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி
என்பார் உண்டு. [எத்தனை சொற்களைத்தான் வடசொல்லெனச் சொல்வார்களோ? எத்தனை
எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தங்களின்
நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவர்களை என்னசொல்லி
அறிவுறுத்த இயலும்?] .
இதே போல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே
இந்தக் காலத்தில் சொல்லுகிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற
பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் =
கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும சொல். [கிளம்புதல்
கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல் தான்.]
...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப்
புரிபடவில்லையா?]
பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும்
சொல்லுவார்கள். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப்
புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது
உடல் என்னும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு
ம்பு என்று முடியும் ஈற்றைப் பாருங்கள்.]
ழகரம் டகரமாவதற்கு மேலும் நமக்குச் சான்று வேண்டும் என்றால் புடலங்காய்க்
கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை)
இருக்கும் காய் புடலங்காய்.
யாரோ கேட்கிறார்கள், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்கள்?
வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால்,
புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..
நான் சொல்லிக் கொண்டே போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன
குழம்பு?” என்று சொல்லும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள்
மசலைப் பொருள். அதை மசாலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.) பொருள்
ஒன்று சேர்ந்து கலங்கிக் கிடக்கும் சாறைத் தான் சொல்லுகிறோம், இல்லையா?
குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று
குழியம் என்றசொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக்
குறிக்கும். கோளம் கூடக் குல் என்னும் வேரில் பிறந்தது தான். குழுவல் =
கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடையே விதப்பாகக் கையாளும் குறி.
குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப் பொருளுக்கு வாகாகச்
சொல்லமுடியும்.
குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில்
மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும்
உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல்
கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முது பெண்டிர் வாயில் இன்றும்
பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடும்பியைத் தேங்காய்க் குடும்பி
என்று பலுக்குவார்கள்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள
ஓர் ஈறு. வடமொழியில் அது மிக மிக அரிதாகவே காணப் படுவது. மற்ற
இந்தையிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்று
சொல்பவர்கள் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன்
காட்ட முயலாது இருக்கிறார்கள். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக்
காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அதோடு பல வடபுலச் சொற்களையும்
முடிந்தவரை இணை காட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதும் என்ற அளவிலேயே
”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடர்களை எடுத்துக் காட்டும்
போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis
properly instead of just quoting this or that saying to support ocur
assertions.}
இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில்
வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப்
பார்க்கலாம்.
குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை
“கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம்
பாட்டின்(சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில்
காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும் இல்லையெனில்
கடும்பு என்ற சொல் ஆளப் படமுடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி
குடும்பம் தானே?
அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் என்னும் விகுதி செறிவு,
திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர்
கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -
இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.
புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த
பல்லோருள்ளும்” என்னும் போது ஒரு குடும்பத்தில் பிறந்த என்ற பொருளைத்தான்
சொல்லுகிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம்
காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற
பொருளைத்தான் உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல்
இன்று பொருள் விரிந்து குடியரசு வரைக்கும் வந்துவிட்டது. ஆனாலும்
தொடக்கப் பொருள் குடும்பம் தான். குடும்பு என்றசொல் பூங்கொத்து,
காய்க்குலை ஆகியவற்றையும் கூடக் குறிக்கும். family என்றபொருளில்
பேரரசுச் சோழர் காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய
பெருமக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப்
பட்டிருக்கிறது.
இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப்
போதுமானதாகக் கருதப்பட்ட உழவு நிலத்தின் பரப்பையும் கூட வழிப்பொருளாய்க்
குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)
குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்ற சொல் களிற்றுக் கூட்டம் அல்லது
திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது
என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக்
கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைத் தான்
குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தைய வளர்ச்சி சங்க இலக்கியத்தில்
காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில்
கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழமண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம்
ஆகவில்லையா? அழிம்பு>அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே
போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப்
படுவதில்லையா? துளைப் பொருளில் வரும் குழி என்ற சொல்லும் குழும்பு என்ற
மாற்று வடிவில் ஆளப் பட்டிருக்கிறது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர”
மதுரைக் 273]
இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம்,
கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற
சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம்
தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.
அந்தக் காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை
நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன்,
பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில்,
சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த
அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக்
குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of
family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு நூலில் தமிழர்
உறவுமுறை பற்றிய ஒரு வியப்புக் குறிப்பு வரும்.]
அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” என்றே
சொல்லப் பட்டது. அந்தக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடி
வாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரச கட்டளையால் மக்கள் கூடி வாழத்
தலைப்பட்ட colony யும் கூடக் குடி என்றே சொல்லப் பட்டது.
இந்தையிரோப்பியச் சொல்லான colony யும் தொடக்கத்தில் குலம் தொடர்பான சொல்
தான். தமிழ் நாடெங்கணும் விரிந்து கிடக்கும் ’குடி”களைப் பார்த்தால்,
குடியின் பொருள் விளங்கும். குடியேறுதல் என்ற சொல்லும் ஓர் அகன்ற
குடும்பம் இடம் விட்டு இடம் புகுந்து வாழ முற்படுவதைக் குறிக்கும்
வினைச்சொல்லையே குறிக்கும்.
[சோழநாட்டில் இருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய
நாட்டுக் கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின்
அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர்,
சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர்.
பின்னால் இளையாற்றங்குடியில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு
குடியினர் பிரிந்தனர். இன்றைக்கும் ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற
குடும்பத்தார் தான். இவர்கள் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப்
படுவர். குடும்பச் சொத்தில் பங்கு இருக்கும் தந்தை வழி உறவினரைப்
பங்காளிகள் என்றே எங்கள் பக்கம் அழைப்பார்கள்.] குடும்பு/குடும்பம்
என்பதும் குடி என்பதும ஒன்றுதான் என்பதற்கு இந்த விவரத்தைச் சொன்னேன்.
குடும்பம் என்பதைத் தமிழில்லை என்று சொன்னால், அப்புறம் மேலே கூறிய
பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடரும் வினைச்சொற்களையும் தமிழில்லை
என்று சொல்ல வேண்டும். அப்புறம் முடிவெங்கே இருக்கிறது என்று எண்ணிப்
பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படையான பொருள். அது இல்லாமல் ஓர்
இயல்மொழி இருக்க முடியுமா?
குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருள் அல்லாமல், வளைவுப்
பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு.
இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக்
குறிக்கும் சொற்களும் உண்டு. [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள்
மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப்
பொருளில் இருந்து எப்படி வந்ததென்று என்று அங்கு விளக்கப் படவில்லை..
முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன்
பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற
சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச்
சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்கு ஒரு
நேரடிச்சான்று இல்லைதான். என்ன செய்வது? எப்பொழுதும் நான் சொல்லுவது போல
”சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலி அல்ல. அது நமக்குக் கிடைத்த ஓர்
இலக்கியப் பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சில தான். தருக்கத்தின்
வழி உய்த்து உணர வேண்டியது ஏராளம்.”
அன்புடன்,
இராம.கி.
சிறப்பான செய்திகள்.
தங்கள் தந்தையாரின் எம்பாவை உரையைக் கொஞ்சசம்
கொஞ்சமாக ஓரிழை தொடங்கி அதை மின்நூல்
ஆக்கி விடலாமே. பிறகு மதுரைத் திட்டத்திலும்
சேர்த்துவிடலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
வைணவ இலக்கியத்திற்கு இருக்கும் அளவு சைவ இலக்கியத்திற்கு உரை வளம் கிடையாது.
திருமறைகளை மலையாளப்படுத்திவரும் ஆற்றூர் ரவிவர்மா கூட என்னிடம் இது
பற்றிக் குறை பட்டுக்கொண்டார்.
உங்களைப் போன்றோர் இக்குறை களையலாமே!
பூவணத்து புனிதனார்க்கு அடியேனுக்கும் அடியேன்
கண்ணன்
2008/12/24 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>: