http://www.youtube.com/watch?v=eYNXu_aPIAc
சீன juggling போல. இது தமிழில் 21 பந்தை வைத்து
ஆடுவதாக சீவக சிந்தாமணியில் விளக்கியுள்ளார்
திருத்தக்கதேவர் (சமணர். கொங்குச் சோழ மரபினர்.
ஊர்: தாராபுரம் அருகே வீராச்சிமங்கலம். அவர் அங்கே
சிந்தாமாணி பாடியதால் பிற்கால இலக்கியங்கள்
சிந்தாமணியூர் என்கிறது. சிந்தாமணியும், சூளாமணியும்
கொங்குநாட்டு நூல்கள் என்று ஆய்ந்து தெரிவித்தார் உவேசா.
வளையாபதி கொங்குநாட்டில் கிடைக்கும் என்று
சாகும்வரை உறுதியுடன் இருந்தவர் உவேசா.)
ஆகிரா (பொள்ள்ளாச்சி/காஞ்சி :) ) அவர்களுக்காக
“பறக்கும் பந்து பறக்கும்” - கண்ணதாசன் பாடல்.
(ஆண்-பெண் பந்தாடல் 20-ஆம் நூற்றாண்டுதான்.)
நா. கணேசன்
On Sep 2, 10:00 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> திரு. கணேசனின் இடுகையைக் கண்டதும் தோன்றிய பாடல். இது சிலப்பதிகாரக்
> கந்துகவரிப் பாடலை* ஒட்டிய ஓசை கொண்டது:
> இங்கு மங்கு மாக ஏகும் இறகுப் பந்தை மாதரார்
> தங்கை மட்டை கொண்டு தாங்கித் தட்டி ஆடும் போதிலே
> தொங்கு கூந்தல் துள்ளி யாடத் தோடு மாடக் காண்கையில்
> பொங்கி ஆடும் காளை நெஞ்சில் பூத்த காதல் பூவுமே!
http://www.youtube.com/watch?v=QaV6gsyGfYI
http://www.raaga.com/play/?id=28178
பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
திரைப் படம்: பணக்காரக் குடும்பம் (1964)
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்தர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிப்பு: எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி
டி.எம்.எஸ்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் -அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
டி.எம்.எஸ்: சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: ஓடும் உனை நாடும் - எனை
உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் - உந்தன்
பதில் கொண்டு வந்து போடும்
டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
டி.எம்.எஸ்: இது தான் இந்த நிலவோ என்று
முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று
போராடும் கண்ணில் வண்டு
சுசீலா: வருவார் இன்று வருவார் என்று
மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று
வழி பார்க்கும் காதல் செண்டு
டி.எம்.எஸ்: பறக்கும்
இருவரும்: பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
சுசீலா: முதல் நாள் இரவில் தனியே என்னை
அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று
இழுத்தோடி வரும் கண்கள்
டி.எம்.எஸ்: அருகில் மிக அருகில் கண்டு
அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று
அலை பாய்ந்து வரும் உள்ளம்
இருவரும்: பறக்கும் பந்து பறக்கும் - அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் - அது
சிரித்தோடி வரும் மாது
~ கவிஞர் கண்ணதாசன்
> அனந்த்
> 2-9-2009
> * கந்துக வரியின் முதல் பாடல்
> பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட
> மின்னி லங்கு மேக லைக ளார்ப்ப ஆர்ப்ப எங்கணும்
> தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த டித்துமே
> தேவார மார்பன் வாழ்க வென்று பந்த டித்துமே
> இதுபோன்ற சந்தத்தில் நானும் பசுபதியும் முன்பு போரம்ஹப் தளத்தில் கந்துகவரி
> பற்றிய இடுகைகளில் எழுதியது நினைவுக்கு வருகிறது.
என்.ஜி.ஆர். பந்து விளையாடுவதும் குஸ்தி போடுவது போலவே உள்ளது. நான்
ஆணையிட்டால்!
> http://www.youtube.com/watch?v=QaV6gsyGfYIhttp://www.raaga.com/play/?id=28178
ஞானும் கணேசன் சார் போல் நேயர் விருப்பம் கேட்கப்போகிறேன்.
கமலம்
-
On Sep 5, 6:29 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பழைய வடமொழியில், தமிழில் பந்தாடல் ஒரு பெண்கள் விளையாட்டு.
> ஆண்கள் ஆடமாட்டார்கள். கொட்டையூர் என்று ஒரு சிவஸ்தலம்
> தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
______________________________________________________________________
Search, browse and book your hotels and flights through Yahoo! Travel.
http://sg.travel.yahoo.com