காணொளி: முனைவர் க. சுபாஷிணி

347 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 23, 2023, 3:22:07 PM1/23/23
to மின்தமிழ்
Suba interview.jpg
IBC Tamil - முனைவர்..சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை நேர்காணல்
------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 12, 2023, 6:07:19 PM2/12/23
to மின்தமிழ்
வட்டமேசை மாநாடு - அண்ணல் அம்பேத்கர் திறனாய்வு
suba speech.jpeg


#இன்று! வாட்சப் குரூப்! "#வாருங்கள் #படிப்போம்",
குழுவில் "பாபாசாகேப் #அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5" என்ற தலைப்பில் குழுவின் 206 ஆவது #புத்தக #திறனாய்வு நடைபெற்றது. நூல் திறனாய்வு செய்தவர் முனைவர் #சுபாஷிணி , மலேசிய தமிழறிஞர், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
தன்னுடைய நூல் விமர்சனத்தில் அவர் பேசும்போது: "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய தலைவர் என்ற பார்வைதான் அதிகமாக உள்ளது. ஆனால், அவர் ஒரு தலைசிறந்த பொருளாதார மேதை. "இந்திய பொருளாதாரத்தின் தந்தை" என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார். நான்
அம்பேத்கர் எழுத்துக்கள் பற்றிய ஒரு ஆய்வில் நான் ஈடுபட்டேன். அவரது நூல்கள் 53 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நூலாக சூத்திரர்கள், வட்ட மேசை மாநாடு போன்ற 53 தலைப்புகளில் உள்ள நூல்களில் 12 பற்றி மட்டும் நான் ப்ரூஃப் ரீடிங் செய்தேன்.
வட்ட மேசை மாநாடு நடக்கும் முன்பு #சைமன் #கமிஷன் வந்தது. இந்தியாவை எப்படி உருவாக்குவது என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.
#ராயல் #கமிஷன் இந்தியா வந்தது. இந்தியாவில் #பண #மேலாண்மை எப்படி உருவாக்கலாம் என்று அந்த கமிஷனில் பொருளாதார நிபுணர் என்ற வகையில் டாக்டர் அம்பேத்கர் ஆலோசனை அளித்தார். அப்போது #ரிசர்வ் #பேங்க் என்ற அமைப்பை உருவாக்கலாம் என்ற திட்டம் ஒன்றை அவர் அளித்தார். அவரது திட்டப்படி உருவானதுதான் #ReserveBankofIndia . இது பலருக்கு தெரியாத உண்மை.
வட்ட மேசை மாநாடு என்ற நூல் மிகப்பெரியது. 456 பக்கங்கள். இந்த நேரத்தில் அவருடைய நூல்கள் வெளிவரக்கூடாது என்று அந்த காலத்தில் அவற்றை பூட்டி வைத்திருந்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நம்ப முடியாத உண்மையாக இருக்கின்றது. ராம் விலாஸ் #பஸ்வான் முயற்சியால் அன்றைய #பிரதமர் #வி_பி_சிங் ஆதரவில் அவருடைய நூல்கள் ஒவ்வொன்றாக வெளி வந்தன. முதலில், ஆங்கிலம் பிறகு மற்ற மொழிகளில் வெளி வந்தன.
அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொத்தம் 37 தொகுதிகள் வெளி வந்தன. "#அம்பேத்கரியம்" என்ற அமைப்பின் மூலம் 50 தொகுதிகள் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த அத்தனை தொகுதிகளையும் ஒருவர் படிக்க முடியாவிட்டாலும் #எழிலினி #பதிப்பகம் வெளியிட்டு உள்ள
ரூ.100/- மட்டும் விலை உள்ள அம்பேத்கர் என்ற ஒரு நூலை மட்டும் படித்தால் போதும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
விமர்சகர் தன் பேச்சில் மூன்று வட்ட மேசை மாநாடுகள் பற்றியும் அவற்றில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்றும் விரிவாக கூறினார்.
மேலும், இந்த 5ஆவது தொகுதி நூலில் அம்பேத்கர் பதிவு செய்து இருக்கிறார், "இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 4.5 கோடி மக்கள் இருக்கிறோம்!" ஆனால், இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டும்தான் இருக்கின்றனர் என்ற கருத்துதான் அப்போது நிலவி வந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்ல பொருளாதார முன்னேற்றம் பற்றியும் அந்த வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கர் பேசினார். மேலும், முக்கியமாக #வாக்குரிமை யானது பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அம்பேத்கர் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.
நான் மும்பை சென்று அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை பார்த்தேன்.
அங்கே பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருபவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த தமிழர் என்பதை அறிந்து வியப்பு அடைந்தேன்.
தமிழகத்திலும் ஏன் ஆந்திராவில் கூட அம்பேத்கர் சிலைக்கு சில இடங்களில் எதிர்ப்பு. சிலையின் பகுதிகளை உடைப்பது, சிகப்பு மை கொட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.
ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரை, பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசியவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக மட்டும் அடையாளம் காணப்படுவது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சாதிய உணர்வு இந்திய மண்ணில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் சாதி என்ற சொல்லுக்கு பொருள் எதுவும் இல்லை. இதை இந்தியர்கள் உணர வேண்டும்.
அம்பேத்கர் பற்றிய பாடம் பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் பற்றிய ஆராய்ச்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஆராய்ச்சிகளை செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினராக, தலித் மக்களாக, மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா பிரிவினர்களும் இந்த ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்."
அவரது பேச்சின் இறுதியில் பரபரப்பான, விறுவிறுப்பான விவாதம் நடைபெற்றது. பல பெரிய ஆளுமைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்து பேசினார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்த இணைய வழி கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் ஒரு மாணவன் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.
விவாத நேரத்தில் ஒளிவண்ணன் அவர்கள் கேட்ட கேள்வி பொருள் பொதிந்ததாக இருந்தது. Olivannan Gopalakrishnan கேள்வி: " இப்போது சிலர் டாக்டர் அம்பேத்கர் செய்த சேவைகளையும், #பெரியார் செய்த சேவைகளையும் ஒப்பிட்டு இவர் உயர்ந்தவரா, அவர் உயர்ந்தவரா என்று விவாதம் செய்கிறார்களே! அதைப்பற்றி உங்கள் கருத்து?"
இந்த கேள்விக்கு மிகவும் சிறந்த, அற்புதமான பதிலை கூறினார் பேச்சாளர் சுபாஷினி: "ஆராய்ச்சி நோக்கில் பார்ப்பவர்கள் யாரையும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று சொல்லவே மாட்டார்கள். ஒரு சிலர் சில தலைவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டு அந்த இமேஜை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். இது ஆராய்ச்சிப் பார்வையே அல்ல. இதை நான் ஏற்கவில்லை".
M.A.,வரலாற்று ஆய்வுகள் படிப்பை சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முறையில் படித்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சி ஒரு பயனுள்ள, பல புதிய, இதுவரை எனக்கு தெரியாத, அறியாத தகவல்களையும், பார்வைகளையும் அளித்தது. பங்கேற்று பங்களிப்பு செய்த அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சியை யூடியூப்பில் பார்க்க விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்பில் பார்க்கவும்.

தேமொழி

unread,
Feb 15, 2023, 5:55:50 PM2/15/23
to மின்தமிழ்
suba speech.jpg

தமிழ்த்தடம் அறக்கட்டளை - தமிழ்க்கூடல்2022
| முனைவர் க. சுபாஷினி | புலம்பெயர்வும் தமிழ் வளர்ச்சியும்
டிசம்பர் 18, 2022
https://youtu.be/vFqdJwtR6eU
புலம்பெயர்வு ஏற்படுத்திய உலகளாவிய தமிழ் வளர்ச்சியும் விரிவாக்கமும்  என்ற தலைப்பில் உரை
தமிழ்த்தடம் அறக்கட்டளை நடத்திய தமிழ்க்கூடல் 2022 நிகழ்வில் முனைவர் க. சுபாஷினி , நிறுவனர் மற்றும் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, ஆற்றிய உரை. 

e-Content Development

unread,
Feb 15, 2023, 8:16:42 PM2/15/23
to mint...@googlegroups.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/cd60f429-4809-4eb8-a057-be1f3099ea3an%40googlegroups.com.


--
With Warm Regards,

S.Edward Packiaraj
Rosary e-Solutions
Trichy-621216
Cell 9786424927
https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )
www.packiam.wordpress.com (web directory)
http:/edwardpackiaraj.blogspot.in (Resume)

தேமொழி

unread,
May 10, 2023, 2:30:01 AM5/10/23
to மின்தமிழ்
1.jpeg
சுந்தர சோழனுக்கு பிறகு ஆதித்த கரிகாலன் ஆட்சி செய்தார்
- Dr. Subashini சொல்லும் புதுத் தகவல்
Wow Tamizhaa
https://youtu.be/4Y6SZ3yGEok
-------------------------------------------------------------------------------


2.jpeg
திருவள்ளுவருக்கு பூணூல் போடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது
- Historian Dr Subashini Explains
Wow Tamizhaa
https://youtu.be/q7pCr2n_Et0
-------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 16, 2023, 1:55:50 PM5/16/23
to மின்தமிழ்
suba video Screenshot.jpg
ஆப்பிரிக்கர்களின் தொடர்ச்சிதான் தமிழ்நாட்டில் இன்று இருப்பவர்கள்!
Wow Tamizhaa
https://youtu.be/WpDpcFdfiDw

அண்மையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய மரபணு ஆய்வு தொடர்பான கருத்தரங்கின் தொடர்ச்சியாக சில வாரங்களுக்கு முன் வாவ் தமிழா சேனல் செய்த பதிவு இன்று வெளிவந்துள்ளது.
-------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 19, 2023, 9:48:32 PM5/19/23
to மின்தமிழ்

suba video.jpg
உடையார் குடி கல்வெட்டுத் தரவுகளுடன் 
ஆதித்த கரிகாலன் மரணம் குறித்து . . . 

பொன்னியின் செல்வன் திரைப்படம் 
"நந்தினிக்கான தேவையே இல்லை..நடந்தது என்ன? 
கல்வெட்டு ஆதாரத்தோடு பேசிய சுபாஷிணி 

தேமொழி

unread,
Jun 7, 2023, 7:09:27 PM6/7/23
to மின்தமிழ்
பார்க்க:   https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0XFBsrsJT9Yvnch3VPS7yCFNjVXXXKNhq9Nor8UhRrryi7bdvXih7PRvdz5T3ruxtl


suba speaks.jpg
தொல்லியல் அகழாய்வுகளில் அறிஞர்கள் கண்டுபிடித்த மனித இனங்களில் பல வகை உண்டு. உலகில் இன்று வாழ்கின்ற எல்லா மனிதர்களுமே ஹோமோ சேப்பியன்கள் தான். அப்படி இருக்க ஆண்ட பரம்பரை நாங்கள் என கூறிக் கொள்வதோ சாதியில் உயர்ந்தவர்கள் நாங்கள், குறைந்தவர்கள் நீங்கள் என சொல்வதோ எவ்வளவு அறியாமை.. அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் நமது சமூகத்தில் நிலவுகின்ற உயர்வு தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய கருவி. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டு வளர்ச்சியடைந்த நாகரிகம் பெற்ற மனிதர்களாக வாழப்போகின்றோமா அல்லது குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டு பிழையான கற்பனைகளை உண்மை என்று நம்பிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு அறிவியல் உலகிலிருந்து தூரத்தில் நின்று கொண்டு வாழப்போகின்றோமா என்ற தேர்வு நம் கையில் தான் இருக்கின்றது. காணொளியைக் காண்க. கருத்துகள் பகிர்க!

தேமொழி

unread,
Jun 9, 2023, 5:43:24 PM6/9/23
to மின்தமிழ்
அண்மையில் சுபா யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது ....
இலங்கை, லண்டன் ஆகிய பகுதிகளிலிருந்து இயங்கும் IBC தமிழுக்கு வழங்கிய நேர்காணல்
suba speaks.jpg

தேமொழி

unread,
Jul 5, 2023, 2:03:46 PM7/5/23
to மின்தமிழ்
அருங்காட்சியகங்கள் குறித்து 
சுபாவின்  உரை. . . 
museum .jpg
---

தேமொழி

unread,
Jul 22, 2023, 5:57:11 PM7/22/23
to மின்தமிழ்
Screenshot suba .jpg
WHO WE ARE AND HOW WE GOT HERE திறனாய்வு : முனைவர் சுபாஷிணி
-------- 

தேமொழி

unread,
Sep 25, 2023, 3:21:35 PM9/25/23
to மின்தமிழ்
பத்திரிக்கையாளர் இவள் பாரதியுடன் ஒரு கலந்துரையாடல்.
பகுதி 1

suba speech.jpg
உலகளாவிய பயணங்கள், அருங்காட்சியகம் 
குறித்து பகிர்ந்துகொள்கிறார் முனைவர் சுபாஷிணி 
---

தேமொழி

unread,
Oct 28, 2023, 9:38:51 PM10/28/23
to மின்தமிழ்
உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் 
- முனைவர் க.சுபாஷிணி எழுதிய நூலின்  திறனாய்வு: ஒளிவாண்ணன்
suba book review.jpeg

------

தேமொழி

unread,
Mar 24, 2024, 1:54:10 AM3/24/24
to மின்தமிழ்
suba  speech.jpeg
"திப்பு சுல்தான் - அழகர் நம்பி" 
- திறனாய்வு முனைவர் க. சுபாஷிணி
https://www.youtube.com/watch?v=WxpcksnPcq4
---

தேமொழி

unread,
Mar 26, 2024, 12:28:09 AM3/26/24
to மின்தமிழ்
thippu.jpg
"திப்பு சுல்தான் - அழகர் நம்பி"
- திறனாய்வு முனைவர் க. சுபாஷிணி
--------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 30, 2024, 4:18:42 AM4/30/24
to மின்தமிழ்
Screenshot.jpg
'மூடநம்பிக்கை ஒழிப்பு'  
காலத்தைப் புரட்டிப்போட்ட பாரதிதாசனின் புரட்சிக்கருத்து
 —  முனைவர் க. சுபாஷிணி
https://www.youtube.com/watch?v=I6eE69w9l8g
------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 18, 2024, 4:42:05 AM6/18/24
to மின்தமிழ்
suba.jpg
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'பிரிஃப் ஆன்சர்ஸ் டூ பிக் கொஸ்டியன்ஸ்'
நூல் திறனாய்வு: முனைவர் க. சுபாஷிணி
https://www.youtube.com/watch?v=zQ0NENis6sQ

----------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jul 22, 2024, 5:13:42 PM7/22/24
to மின்தமிழ்
new.jpg
சோழப்பேரரசின் தலைமுறையைக் காட்டும் ஒரே செப்பேடு இதுதான்! 
| மின்னம்பலம் தமிழ்
https://www.youtube.com/watch?v=CzerRe3N8ec

----

தேமொழி

unread,
Nov 2, 2024, 3:10:27 PM11/2/24
to மின்தமிழ்
suba - Screenshot.jpg
"The Silk Road Journey with Xuanzang"- Sally Hovey Wriggins 
நூல் திறனாய்வு முனைவர் க. சுபாஷிணி 
------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 10, 2024, 5:47:59 PM12/10/24
to மின்தமிழ்

தேமொழி

unread,
Jul 16, 2025, 3:03:10 PM7/16/25
to மின்தமிழ்

Suba Speaks.jpg
உரை : 
கணினி இயந்திரத் துறையில் என் தொழிற்பயணம் - முனைவர் க. சுபாசிணி
https://www.youtube.com/watch?v=g64aN3kjt04

கலந்துரையாடல் :
கணினி இயந்திரத் துறையில் என் தொழிற்பயணம் - கருத்துப் பரிமாற்றம்
https://www.youtube.com/watch?v=FW5YzuJhPH4
------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 21, 2025, 12:24:26 PM8/21/25
to மின்தமிழ்
suba speaks.jpeg
ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை
முனைவர் க. சுபாஷிணி 
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
https://www.youtube.com/live/MFE1oMHxyf4
--------------------------

தேமொழி

unread,
Aug 22, 2025, 2:14:17 AM8/22/25
to மின்தமிழ்
suba speaks2.jpg

"ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலக மயமாக்கலின் தேவை" என்ற தலைப்பில், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் நேற்று முனைவர் க. சுபாஷினி ஆற்றிய உரையே ஓர் ஆவணத் தெளிவாக அமைந்து போனது. இதுநாள்வரை பரவலாகப் பேசப்படாத தமிழ் ஆவணங்களைப் பற்றி அவர் நிறையப் பேசினார். நூறாண்டு கால ஆவணங்களைக் கூட பாதுகாத்து வைக்கும் பழக்கமும், அறிவுத் தெளிவுமில்லாத தமிழ் மக்களிடம் இருந்து கேட்டுப் பெற்றும், பணம் கொடுத்து வாங்கியும் எடுத்துச் சென்ற ஆவணங்களை 500 ஆண்டுகளாக, ஐரோப்பியர்கள், அறிவியல் முறைப்படிப் பாதுகாத்து வரும் தன்மையை அவர் மிகவும் சிலாகித்துக் கூறினார். அதற்காகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆய்வு நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அங்கே எடுக்கப்பட்ட படங்களுடன் அவர் விளக்கிக் கூறினார்.

தமிழ் ஆவணங்களைப் பாதுகாப்பதில் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் அதிக அக்கறை காட்டி வருவதையும், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நாட்குறிப்புகள், அறிக்கைகள், இதழ்கள், செப்பேடுகள், உரையாடல்கள், கல்வெட்டுகள் ஆகிய தமிழ் ஆவணங்கள் மிகுந்த பாதுகாப்போடு, அறிவியல் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அவர் பட விளக்கங்களுடன் எடுத்துக் கூறினார். மக்களின் இயல்பு வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அன்றைய கல்வி நிலை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், உழைப்பு, வேலை, பண்பாட்டைப் பறைசாற்றும் ஓவியங்கள், பிற காகித ஆவணங்கள், இலங்கை, சிங்கை, பினாங்கு, மலேசியா போன்ற நாடுகளில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள், லைடன், வேள்விக்குடி செப்பேடுகள், டென்மார்க்கில் அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள நாட்குறிப்புகள், அரிய பழமையான நூல்கள், அகராதிகளாகத் தொகுக்கப்பட்டவைகள் என்று பிரமிக்கத்தக்க வகையில் அவரது ஆவணச் சேமிப்புச் செய்திகள் இருந்ததைக் காண முடிந்தது. அவை குறித்து அவர் தந்த செறிவான விளக்கங்கள் அவற்றின் மீது உள்ள அவரது ஈடுபாட்டை எடுத்துக்காட்டி நம்மைப் பெருமூச்சடைய வைத்தன.

குறிப்பாக அன்றையக் காலத்து வரைபடங்கள் இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்லின. முதன்முதலாக ஐரோப்பியர்கள் கப்பலில் வந்த போது அந்நாட்களில் அவர்களின் பட்டறிவுப்படி சதுரமாக, செவ்வகமாக வரைந்த வரை படங்கள், பின்னர் அறிவியல் அளவு முறைகளின் படி வரைந்த வரைபடங்கள் இவையெல்லாம் வரலாற்றில் ஒவ்வொரு படிநிலைகளையும் எடுத்துக்காட்டி, வரலாறின் வளர்ச்சியை அறியத் தந்தன. இதுவரையில் இப்படிப்பட்ட ஆவணங்களின் மீது ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற எண்ணமும், அதைத் தொடர்ந்து உள்ளம் கூம்பிய நாணமும் ஏற்பட்டது என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். இவ்வுணர்வு அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பட்டது என்பதைப் பார்வையாளர்களின் கருத்துகளும், ஆதங்கங்களும் வெளிப்படுத்தின.

இவையெல்லாம் பொதுமக்கள் எண்ணமாக இருந்தாலும், இங்கு இருக்கின்ற பல்கலைக்கழகங்கள். கல்விக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், ஆய்வு நூலகங்கள், ஆவணக்காட்சியகங்கள், அருங்காட்சியகங்கள், அரசாங்கங்கள் இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தன; செய்து கொண்டிருக்கின்றன என்பதும் பார்வையாளர்களின் ஆதங்கமாக அமைந்தது. மொத்தத்தில் ஓர் அரிய ஆவண உரையாக சுபாஷினியின் ஆய்வுரை அமைந்து விழிப்புணர்வைப் பெற வைத்தது. இது பற்றி அனைவரும் நிறைய எழுத வேண்டும்; பேச வேண்டும். அத்தோடு நில்லாமல் வாய்ப்புள்ளவர்கள் அயல் நாடு சென்று, ஆவணங்களைக் கண்டு, அது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்ற அவரது அன்பான அறிவுரைக்கு நாம் தலை சாயத்தே தீர வேண்டும்.

முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.

தேமொழி

unread,
Aug 22, 2025, 2:50:58 PM8/22/25
to மின்தமிழ்

suba speaks.jpeg
ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை
முனைவர் க. சுபாஷிணி 
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
https://www.youtube.com/live/MFE1oMHxyf4
--------------------------

Narayanan Kannan is with Pappa and 
6 others
.

ஐரோப்பிய தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை எனும் தலைப்பில் முனைவர் சுபாஷிணி ஆகஸ்ட் 21 ம் தேதி ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் பேசிய பேச்சு ஒரு கிளாசிக். பிரித்தானிய நூலகத்தில் பத்து புத்தகங்களை மின்னாக்கம் செய்தது வரை நான் ஐரோப்பாவில் இருந்தேன். நான் கொரியா, மலேசியா சென்ற இடைப்பட்ட காலத்தில் ஓர் அசுரத்திறனுடன் சுபா இத்தாலி, பிரான்சு, நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி என பல இடங்களுக்கு தன் சொந்த செலவில், சிரமம் பார்க்காமல் அலைந்து சேகரித்து இருக்கும் ஆவணங்களின் மதிப்பு குறைந்தது இரண்டு முனைவர் பட்டங்கள். இதை உரை கேட்க வந்திருந்த பேராசிரியர் பாண்டிய ராஜா மிக அழகாக எடுத்துரைத்தார். ஒரு முனைவர் பட்ட ஆய்வென்றால் எவ்விதம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் முன்னோடியாக இப்பேச்சு அமைகிறது என்றார். உண்மையில் அது அவரது முனைவர் பட்ட ஆய்வல்ல. அவர் தொடர்ந்து தமிழின் பால் உள்ள ஆவலால் செய்யும் காரியமிது. "பெரிதினும் பெரிது கேள்" என்பான் பாரதி. சுபா தனிநாயகம் அடிகள் செய்வித்தது போன்று நாமும் செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் செயல் பட்டு இருக்கிறார்.
அயலகத்தில் இருக்கும் தமிழ் ஆவணங்கள் எத்தகையன எனச் சொல்லும் சுபா: ஓலைகள், காகித ஆவணங்கள், செப்பேடுகள், வரைபடங்கள், காசுகள் என ஒரு நீண்ட பட்டியல் தந்து உதாரணங்களோடு விளக்கிய விதம் அயலக தமிழ் இலக்கிய, சரித்திர உலகிற்கு புதிது. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஆங்கிலேயர்கள் தான், ஆனால் தமிழ் ஆவணப்பாதுகாப்பில் முன் நிற்பவர் ஜெர்மானியர் என்பது புதிய சேதி. எதிர்மறையாக தமிழகத்தில் பரவியிருக்கும் புரட்டு, நாட்சி காலத்தில் ஜெர்மானியர் தமிழின் வழங்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு போய் விட்டனர் என்பது. இந்த மனநிலை இருந்ததால்தான் நான் (ஜெர்மன் குடிமகனாக) பாரத குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கேட்கிறார் எனச் சொல்லியும் Oriental manuscript library நூலகர் "வாண சாத்திரம்" எனும் நூலை என்னிடம் தரவில்லை. இன்றுவரை அது பதிப்பிக்கப்படவுமில்லை. That book is about ancient rocket technology!
கல்வெட்டு மட்டுமே நம்பகமான சான்று எனக்கருதும் தமிழ் ஆய்வாளர்களுக்கு அவர் வரைபடங்கள் எத்தகைய புதிய செய்திகளைத் தருகின்றன என கிரேக்க/ரோமானிய கால வரைபடம் ஒன்றைக் காண்பித்தார். அதில் அகஸ்டஸ் அரசனுக்கு பண்டைய சேர நாட்டில் கட்டப்பட்ட கோயிலொன்று இருந்ததை இத்தாலியில் கிடைக்கும் ஓர் சுவர் ஓவிய வரைபடம் காட்டுவதை காட்டினார். ஒரே ஓலையில் ஜெர்மன், தமிழ், பண்டைய தமிழக பள்ளி பற்றிய ஓவியங்கள், வீரமாமுனிவர் வெளியிட்ட சித்திரக்கதை, சித்திரச் சுவடிகள், ஜெர்மானியர் தமிழ் புலமையென ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம் தரும் தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார்.
தமிழகத்தில் இருக்கும் ஆவணங்களை பதிப்பிக்கவென உருவாக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் சரியான இடம். இந்த அருமையான பேச்சை ஏற்பாடு செய்த சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் IAS அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நூலக இயக்குநர் திரு.சுந்தர் அவர்களுக்கும் நம் நன்றிகள்!
------------------------------------------------------

தேமொழி

unread,
May 31, 2026, 10:50:34 AM (yesterday) May 31
to மின்தமிழ்
suba speech.jpg

ஆனைமங்கலம் செப்பேடு ஏன் இவ்வளவு முக்கியம்? | 
செப்பேட்டின் முழு பின்னணி கதை சொல்லும் முனைவர்  சுபாஷிணி!

இக்காணொளியில் . . .
ஆனைமங்கலம் செப்பேட்டின் முழு பின்னணி
ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் கால தொடர்புகள்
சூளாமணி விகாரம் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
நெதர்லாந்தில் இருந்த செப்பேட்டை தேடி சென்ற டாக்டர் சுபாஷிணியின் பயணம்
இன்று ஆனைமங்கலம் கிராமம் எப்படி இருக்கிறது?
ஏன் இந்த செப்பேடு தமிழர் வரலாற்றில் முக்கியமானது?
இந்த செப்பேடு திரும்பியதற்காக பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் நன்றி சொன்னது ஏன்?
வரலாற்று ஆய்வாளர்கள் ஏன் இதை பெரிய சாதனையாக பார்க்கிறார்கள்?

சோழர் வரலாறு, தமிழர் அடையாளம், மறைந்துபோன பாரம்பரியம் மற்றும் உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழர் வரலாற்றுச் சுவடுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான அலசல்தான் இந்தக் காணொளி !

shanmuga Sundharam

unread,
May 31, 2026, 6:29:06 PM (yesterday) May 31
to mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages