--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பாரதியார் பிறந்த இல்லம்
பாரதியார் குடும்பப் படம். (புதுவை 1917)
பாரதியாரின் பத்திரிகை இந்தியா (1907)
பாரதி பிரசுராலய நிறுவனர்களில் ஒருவரான பாரதியின் இளைய மாப்பிள்ளை நடராசன்.
செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்" நூலைப் பற்றி..
பாரதி குடும்பத்தினர் படம்: சகோதரர் விஸ்வநாதய்யர், பேத்தி, புதல்வி ஸ்ரீமதி சகுந்தலை, பேரன், புதல்வி ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி, பேத்தி
பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ரா.கனகலிங்கம்
சென்னையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் பழைய தோற்றம்.
தனிமை இரக்கம் பாடலை (1904) அச்சில் முலாவதாக வெளியிட்ட விவேகபானு மு.ரா.கந்தசாமி கவிராயர்.
காரைக்குடியில் பாரதியார் (1919)
பாரதியாரின் துணைவியார் செல்லம்மா
ஸ்வதேச கீதங்கள் (1907) சிறு நூலை வெளியிட்ட வி.கிருஷ்ணசாமி ஐயர்
சென்னையில் மகாகவி பாரதியார் (1920)
வாழ்க்கைக் குறிப்பு
திறப்பு விழா
பாரதியார் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள்.
காந்தியடிகளின் வாழ்த்து
பாரதியார் கையெழுத்து
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
From: Suba.T. Sent: Wednesday, September 10, 2014 3:33 PM To: மின்தமிழ் Reply To: mint...@googlegroups.com Cc: Subashini Tremmel Subject: Re: [MinTamil] பாரதிக்கொரு ‘பா ’ரதம்! |
பவள சங்கரி
லட்சியமே சுவாசமாக
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு
பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
சம்மனமிட்டு
வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!
நதி வெள்ளப் பிரவாகத்தின்
மதிவெல்ல
மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்
சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!
காக்கை குருவி எங்கள் சாதியென
இனமறியா
இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!
மனிதநேயமெனும் தூரிகையால்
வண்ணங்கொண்டு
வானளாவத் தீட்டியவவைகள்
தீதின்றி திண்ணமாய் இன்றும்
உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
அச்சமின்றி
துச்சமென சுடரையேந்தி வலிமையை
ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!
அமரப்பொழுதிலும் அரியணையைத்
துறக்காத
ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!
பரிதிக் கிரணங்களாய் பாரினை
ஒளியூட்டி
அடிமைத்தளையை சுட்டெரித்து
சோதிவடிவாய் சுடர்வோனே!!
நன்றி : வல்லமை
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்ன ஷைலூ இப்படி பா ரதம் என்று திடீர் அறிவிப்பு ...தக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?>>>
முன் அறிவிப்பு மடல் உங்களுக்கு வரலை என தெரிகிறது தக்க ஏற்பாடா எதுக்கு எல்லாரும் நம் மேல் அன்பு கொண்டவர்கள்தானே!
குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே. அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...அல்லது அவர்களது ஆலோசனை தேவை என்று கருத்தரங்கம் ஒன்று கூட்டி தஞ்சை..மதுரை என ஆளைக் கடத்தவோ ஏற்பாடு செய்து விட்டீர்களா?இல்லாவிட்டால் அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில் எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும் ....அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே...எனக்கு இப்பொழுதே கிலி தொடங்கிவிட்டது...எதற்கும் அனைவரும் தயாராக ....முன்னெச்சரிக்கையாக போட்டது போட்டபடி ஓடிவிடத் தயாராக இருங்கள்...ஏதோ என்னால்இயன்ற ஆலோசனை...>>>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனக்காக பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ ப்ளீஸ்!(தூசின்னாலும் ஏசின்னு புகழ்ந்த என் மடலையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?:)
கவிராசனுக்கோர் பாமாலை!
அடிமை யிருளது அகன்றிட
அக்கினிக் குஞ்சென வந்தவன்!
மடமை எனும்களை அழித்திட
அறிவுக் கோடரி யானவன்!
சுதந்திர தேவிதன் துயிலெழப்
பள்ளி யெழுச்சியைப் பாடினான்!
மதத்தின் பெயரினால் சண்டைகள்
செய்பவர் தம்மையே சாடினான்!
கண்ணனைக் காதலி ஆக்கியே
கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!
எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே
என்று உரைத்தநல் பாமகன்!
ஆணும் பெண்ணுமே நிகரென
வீர முழக்கத்தை எழுப்பினான்!
நாணும் அச்சமும் நாய்கட்கே
நங்கையர்க் கெதற்கென வினவினான்!
பாங்காய்ச் சத்திரம் கட்டியே
அன்னம் இடுவதைக் காட்டிலும்
ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு
அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!
பழைய பெருமைகள் பேசியே
பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா
புதியன படைத்திடப் புறப்படு
என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே
பா’ரதம்’ ஓட்டிய பாவலன்!
நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற
பாரதம் கண்டமா கவியிவன்!
வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!
(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)
அன்புடன்,
மேகலா
கவிராசனுக்கோர் பாமாலை!
அடிமை யிருளது அகன்றிட
அக்கினிக் குஞ்சென வந்தவன்!
மடமை எனும்களை அழித்திட
அறிவுக் கோடரி யானவன்!<<>>அறிவுக்கோடரி ! ரசித்தேன்.
சுதந்திர தேவிதன் துயிலெழப்
பள்ளி யெழுச்சியைப் பாடினான்!
மதத்தின் பெயரினால் சண்டைகள்
செய்பவர் தம்மையே சாடினான்!
கண்ணனைக் காதலி ஆக்கியே
கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!
எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே
என்று உரைத்தநல் பாமகன்!
ஆணும் பெண்ணுமே நிகரென
வீர முழக்கத்தை எழுப்பினான்!
நாணும் அச்சமும் நாய்கட்கே
நங்கையர்க் கெதற்கென வினவினான்!>>>>ஆமாம் பாரதியே நமக்காய் உரக்ககுரல்கொடுத்தவன்!
பாங்காய்ச் சத்திரம் கட்டியே
அன்னம் இடுவதைக் காட்டிலும்
ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு
அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!>>அறிவுகொளூத்துதல் ஆஹா! என்ன ஒரு வீரியச்சொல் மேகலா!
பழைய பெருமைகள் பேசியே
பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா
புதியன படைத்திடப் புறப்படு
என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!>>>>சிங்கம்தான் பாரதி. அவன் பாடல்கள் அனைத்தும் கர்ஜனைதான் அழகாய் எடுத்துரைத்தீர்கள் .
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே
பா’ரதம்’ ஓட்டிய பாவலன்!
நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற
பாரதம் கண்டமா கவியிவன்!>>>>>>ஒவ்வொருவரியும் முழக்கம் மேகலா அருமை!
வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!
(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)
அன்புடன்,
மேகலா
்
ஆஹா!.. 'பா' ரதம் மிக அருமையாக உலா வந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் பங்களிப்புகள் ஒவ்வொன்றும் அருமை. ஷைலு அக்கா, கீதாம்மா, பவழா அக்கா, சுபா, மேகலா ஒவ்வொருவரும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள். புரொபசர் ஜி பற்றியெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை (நான் எலிங்கறதால, நேயர் விருப்பப் புலின்னு என்னைச் சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!).>>>>அப்படியா ஊர்ப்பாசம் பாரு், புலின்னு நான் நினச்சேனே!
மற்ற நண்பர்களின் பங்களிப்புகளும் அருமை..
கீதாம்மாவின் கட்டுரை நெஞ்சை உருக்கியது.. பாரதியாரின் இந்தப் பாடல், எனக்கு எப்போதும் பெண் சுதந்திரத்தோடு பொருத்திப் பார்க்கவே தூண்டும். இது இப்போதும் பொருந்துவது காலத்தின் கோலம். திருச்சி லோகநாதனின் உருகும் குரலில், எஸ்.வி. சுப்பையாவின் அற்புதமான நடிப்பில், பி.ஆர் பந்துலுவின் கைவண்ணத்தில் உருவான இந்தப் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' படத்திலிருந்து.. 'தஞ்சம் அடைந்த பின் கைவிடலாமோ' வரும் போது ஒவ்வொரு முறையும் அழுது விடுவேன்!.>>>குரல் உருக்கும் நானும் கண்கலங்கிவிடுவேன் நன்றி பாட்டுக்கு.
(கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில், பந்துலு ஐயா வாரிசுகள், இந்தப் படத்தையும் வண்ணமயமாக்கி வெளியிட்டால் அது மிகப் பெரிய சேவை!)
தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி
1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.
நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.
என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.
சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..
இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.
போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.
தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.
ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.
ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.
முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.
பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.
பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.
சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..
திவாகர்
செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம்.எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என ஆரம்பித்துகனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!
தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.
கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.
அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.
இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.
நிறைய கவிஞர்களும் பாரதி அன்பர்களும் இதில்கலந்துகொள்வார்கள்..
ஆண்டுதோறும் பாரதி திருவிழாநடத்தும் வானவில்பண்பாட்டு மையத்தின் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் ரவி.இவர் செய்திவாசிப்பாளராயிருந்த ஷோபனா அவர்களின் கணவர்.
ஜதிப்பல்லக்கு ஊர்வலம் நடத்த உங்களுக்கு எப்படி எண்ணம் தோன்றியதெனக்கேட்டபோது அவர் சொன்னது.
:கவிபாரதி தனது இறுதிக்காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். அவரது நண்பர்கள் அவரிடம் எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உதவிகோரி கடிதம் எழுதும்படி ஆலோசனை சொன்னார்கள்.
இதற்கு பாரதியின் தன்மானம் இடம்தரவில்லை. இருந்தாலும் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாய் தனது புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுதவி கேட்டு சீட்டுக்கவி எழுதி அனுப்பினார்.
அந்த கவிதையில் ஜதிப்பல்லக்கு பொற்குவை தந்து மரியாதை தரவேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் தனக்காகக் கேட்டது இது ஒன்றுதான் ஆனால் அவருக்கு எட்டயபுரம் சமஸ்தானத்திலிருந்து பதிலே வரவில்லை.
எனவேதான் நாங்கள் பாரதியின் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய அவரது பிறந்த நாளில் ஜதிப்பல்லக்கில் அவரது சிலையை வைத்து ஊர்வலம் செய்கிறோம். அவருக்கு சால்வையும் பொற்குவையும் வழங்கியபின் அதனை ஒரு மூத்தகவிஞருக்கு தருகிறோம்: என்றார்.எத்தகைய அருமையான பணி அல்லவா!மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது இந்தக்கவிதையை!
கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....எழுதியவர் திரு..கிரேசி மோகன்....
அன்புடன்ஷைலஜாசெய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
பாரதியார்.
....
-------------------------------------------------------------------
--அன்புடன்ஷைலஜா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நான் எலிங்கறதால, நேயர் விருப்பப் புலின்னு என்னைச் சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்
அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி >>>
ஒங்க கும்பனியில் ரெட்டைப்புலவரகள் இருக்காங்களே பட்டையக்கிளப்ப>>>கம்பனிதெரியும் அதென்ன கும்பனி குழப்பமா எழுதறோம்னு கு்ம்பனிங்கறீங்களா?:) ரெட்டைப்புலவர்கள்? அழகா பேரையும் சொன்னா குளிரமாட்டோமா என்ன?:)
சீறினான் கொடுமை கண்டு.. சீற்றமே அவனது தொண்டு
பாரினில் ஆயிரம்
புலவர் தோன்றியே மறைந்தபோதும்
பாரதிபோலொருவர் காண்பது வழியே இல்லை!
நேரினில் பார்வைகொண்டு..நெஞ்சமே நிமிர்த்திநின்று
யாரடா என்பான் அவனே.. அவனுக்கு நிகரே இல்லை!!
செந்தமிழ் ஜதியே சொல்லும்..வந்தங்கே சிந்துபாடும்
சிந்தையில் நிறைய கவிதை என்றவன் வாழ்ந்தபோதும்
சீறினான் கொடுமை கண்டு.. சீற்றமே அவனது தொண்டு
ஆடினான் அதற்கு முன்பு.. ஆனந்த சுதந்திரமென்று!!
பைந்தமிழ்ப் பரதமாடும் பாஞ்சாலி சபதம்கூட..
பொங்கிடும் கனலேயன்றி பொய்யிட்ட வார்த்தையல்ல..
கண்ணனின் பாடல் கேட்டால் கருணையின் மழையே ஆகும்
எங்களின் பாட்டன் என்று எதிர்வரும் தலைமுறை சொல்லும்!
பாடினான் பல்வகைப் பாடல்.. பண்களில் பரவசக் கூடல்
தேடிநான் எதனைச் சொல்ல? தெள்ளமுதம் வேறு அல்ல..
வீரத்தின் விளைநிலம் அங்கே வெற்றியின் திருமுகம் அங்கே..
ஞானத்தின் தலைமகன் அவனே..பாரதத்தின் சாரதியன்றோ?
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல் - சென்னை 600 075.
தற்போது - அபுதாபி (அமீரகம்)
00971 50 2519693
Website: thamizhnadhi.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
என்னுடைய பங்கு: பழங்கஞ்சிதான் இது.. ஆனால் என்றுமே ஆறாத கஞ்சி..>>ஆனாலும் கஞ்சிக்கு மிஞ்சி வேறெதுமில்லை!
ஏற்கனவே போட்டதுதானே இது என்று முதலில் நினைத்தேன்.. ஆனால் லஜ்ஜைநாயகி பா-ரதம், பாரதம், சாரதி என்றெல்லாம் எழுதியவுடன் இதுதான் நினைவுக்கும் உடனே வந்தது. பாரதி நினைவுநாளில் இது கூட நினைவுக்கு வரவில்லையென்றால் எப்படி? பாரதியின் பிரிவு துக்கம், பாரதியின் பிறப்பு சுகம்.. இந்தக் கட்டுரையும் சுகதுக்கத்தை சமானமாகக் கொண்டதுதான்..>>நன்றி மிக பாரதியை நினைப்பதே முக்கியம் அந்த வகையில் உங்க பதிவுக்கு நல்வரவு!
தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி
1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.
நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.
என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.
சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..
இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.
போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.
தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.
ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.
ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.
முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.
பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.
பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.
சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..>>டச்சிங். நன்கு விவரமாய் அருமையாய் எழுதிட்டீங்க திவாகர்
திவாகர்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன்னை கரம் பிடித்தேன்
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ம்ம்க்கம்ம்..
குமாரி கமலா ரசிகர் மன்றத்தினரை தூண்டிவிடலாம் என வேண்டுமென்றுதான் நாங்களும் திட்டம் வகுப்போமாக்கும் <<<<>:):):):)
தேமொழி
“அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”
என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.
காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.
நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.
கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
(பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)
பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.
——————————————————————————————————————————————————————-
பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
——————————————————————————————————————————————————————-
”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”
என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.
வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.
மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.
இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.
மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.
பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.
இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.
அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.
இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.
அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.
நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.
அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.
ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாசெய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,பாரதியார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி >>>பாரு ஐ மீன் பார்வதி!! ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ பாட்டைக்கொஞ்சம் எனக்குப்ப்போட்டுஎன்னை ஆறுதல்படுத்தும்மா:)
சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அக்கா கேட்ட பாட்டு!!:)
http://www.youtube.com/watch?v=_ongMRRVZrk&feature=youtube_gdata_player
sent from iphone.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
2014-09-11 12:01 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:2014-09-11 7:23 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:அதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி >>>பாரு ஐ மீன் பார்வதி!! ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ பாட்டைக்கொஞ்சம் எனக்குப்ப்போட்டுஎன்னை ஆறுதல்படுத்தும்மா:)இது ரொம்ப நல்ல பாட்டாச்சே.. மறந்து போயிருந்தேன். நினைவு படுத்தி விட்டீர்கள்.>>>என்ன பண்றது சுபா ,சிக்சுவேஷன் சாங் ஆகிவிட்டது இப்போ): புகழ்வதையும் புரிஞ்சிக்கலேன்னா என்ன செய்றது சொல்லுங்க:)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிவகாமி பாட்டியாவது நியாயமா ஏதாவது சொல்வார்கள்
B.நீரஜா!!!
sent from iphone.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்துவாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க ஓடி நீயும் போனதென்ன!>>>> கூரான வார்த்த..ஆஹா பாரு இது ரொம்ப ஜோரு!
சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும் ஒசத்தியில்ல!
பாட்டுக்கு ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!<<<< அதானே பாட்டுக்கு ராசா நீ!
தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னுஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்சபூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே பாவி சனம் எங்க போவோம்!>>>>>> அய்யோ மனசைப்போட்டு உலுக்குதே.
முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோடகண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.<<<<< நினைவுநாளில் ரொம்பவே அழுத்துதையா
குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.<<<<நீ விட்ட தமிழே துணை ஐயா
வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன!பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன!ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட வீரனாக குரல் கொடுத்த மகராசா!.>>>> சிம்மக்குரல் அல்லவா!
தங்கு தடை இல்லாம கவித சொன்ன கோமகனகங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க நிற்பதென்ன!தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!>>>கண்டிப்பா பாரதி இருப்பாரு பாரு பாமரன் பார்வையிலான எதார்த்தவரிகள்அன்புடன்
ஜா ல பேரு முடிவதாலே சிறப்பா இருக்கோ?:)(ஐயோ ஜூட் ஜூட் எஸ்கேப்:):)
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
களிபடைத்த மொழியினாய் ..பாரதி சொல்கிறாரே இதில் களி என்றால் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியைப்படைத்தவராய் இளைய தலைமுறையினரை அழைப்பது எத்தனைப்பொருத்தம்! ஒளிபடைப்பது களிபடைப்பது எல்லாம் இளமைக்கே சாத்தியம்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆஹா!!.. சிறப்பிக்க ஒரு பாட்டென்ன ஆயிரம் பாட்டு போடலாம் . பாரதியார் இழைங்கறதால இந்தப் பாடல் !!
http://www.youtube.com/watch?v=tDU7NB440bs&feature=youtube_gdata_player
sent from iphone.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்துவாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க ஓடி நீயும் போனதென்ன!
செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம்.எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என ஆரம்பித்துகனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!
தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.
கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.
அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.
இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.
நிறைய கவிஞர்களும் பாரதி அன்பர்களும் இதில்கலந்துகொள்வார்கள்..
ஆண்டுதோறும் பாரதி திருவிழாநடத்தும் வானவில்பண்பாட்டு மையத்தின் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் ரவி.இவர் செய்திவாசிப்பாளராயிருந்த ஷோபனா அவர்களின் கணவர்.
ஜதிப்பல்லக்கு ஊர்வலம் நடத்த உங்களுக்கு எப்படி எண்ணம் தோன்றியதெனக்கேட்டபோது அவர் சொன்னது.
:கவிபாரதி தனது இறுதிக்காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். அவரது நண்பர்கள் அவரிடம் எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உதவிகோரி கடிதம் எழுதும்படி ஆலோசனை சொன்னார்கள்.
இதற்கு பாரதியின் தன்மானம் இடம்தரவில்லை. இருந்தாலும் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாய் தனது புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுதவி கேட்டு சீட்டுக்கவி எழுதி அனுப்பினார்.
அந்த கவிதையில் ஜதிப்பல்லக்கு பொற்குவை தந்து மரியாதை தரவேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் தனக்காகக் கேட்டது இது ஒன்றுதான் ஆனால் அவருக்கு எட்டயபுரம் சமஸ்தானத்திலிருந்து பதிலே வரவில்லை.
எனவேதான் நாங்கள் பாரதியின் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய அவரது பிறந்த நாளில் ஜதிப்பல்லக்கில் அவரது சிலையை வைத்து ஊர்வலம் செய்கிறோம். அவருக்கு சால்வையும் பொற்குவையும் வழங்கியபின் அதனை ஒரு மூத்தகவிஞருக்கு தருகிறோம்: என்றார்.எத்தகைய அருமையான பணி அல்லவா!மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது இந்தக்கவிதையை!
கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....எழுதியவர் திரு..கிரேசி மோகன்....
அன்புடன்ஷைலஜாசெய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
பாரதியார்.
....
-------------------------------------------------------------------
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
மரணத்தை வென்ற மாகவி
(கவியரசு கண்ணதாசன் கவிதை)
ஆசைதனக் கொருகாணி நிலமென்று
அற்புத பாட்டிசைத்தான் - அன்று
ஆற்றிவற்றவர் தம்மிடையே - தமிழ்
ஆனந்தக் கூத்தடித்தான்!
மீசைத்துடித்திட மேனிகொதித்திட
வீரக்கனல் வடித்தான் - கவி
வேந்தன் உலகத்து மா கவிவாணரை
வெல்லும்தமிழ் கொடுத்தான்!
தந்தையர் நாடென்ற பேச்சில்ஒரு
சக்தி பிறக்குதென்றான் - அவன்
சாப்பிடும் சோறுக்கு வைக்காமல் - கவிச்
சந்ததி வைத்துச் சென்றான்!
சிந்தையிலும் ரத்தத்திலும் இந்த
தேசத்தில் பாசம் வைத்தான் - அட
தீயொருபக்கமும் தேனொருபக்கமும்
தீட்டிக் கொடுத்துவிட்டான்!
சந்திரசூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் - ஒரு
சரித்திரப் பாட்டில் பாரத தேசத்தின்
தாய்மையை வளர்த்துவிட்டான்!
இந்திரா தேவரும் காலில்விழும்படி
என்னென்ன பாடிவிட்டான் - அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் - புவி
ஏற்றமுரைத்து விட்டான்!
(கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்)
பாகம் 1 & 2 நூலில் இருந்து சில பகுதிகள்
நன்றி - கவியரசர் மின்னஞ்சல் 1889
11.09.2014
பிரசாத்து அழகா தமிழ்ல சொலல்க்கூடாதா இதை?!
2014-09-11 13:34 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
வாவ்... அமேசிங் ரைட் அப்...
2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்துவாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
--ஊரான ஊர் பாக்க ஓடி நீயும் போனதென்ன!