அழிவை நோக்கி சிற்பக்கலை தொழில்

56 views
Skip to first unread message

Satheesh kumar R

unread,
Jul 27, 2009, 5:50:04 AM7/27/09
to minT...@googlegroups.com
http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Erode#205213
1.அழிவை நோக்கி சிற்பக்கலை தொழில் கோபிசெட்டிபாளையம்: கல்லையும் கையெடுத்து கும்பிடும் வகையில் கல்லுக்கு உயிர் கொடுத்த சிற்பக்கலை தொழில் மெல்ல மெல்ல நலிந்து வருகிறது. இந்தியாவின் புகழை இன்றளவும் வெளிநாடுகளில் பறைசாற்றி வரும் கல் சிற்ப கலை தொழிலை காப்பாற்ற இளைய தலைமுறைக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.  மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஏராளமான கோவில்கள், மண்டபங்கள், நினைவு சின்னங்கள் போன்றவை கற்களால் எழுப்பப்பட்டன. தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் ஏராளமான கோவில்கள் கல் சிற்ப கலைகளால் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தஞ்சாவூர் கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கல் "நந்தி' சிலையை கண்டால் உடலில் ஒருவித ஈர்ப்பு சக்தி ஏற்படுவதை உணர முடியும். சென்னை மாமல்லபுரம் பகுதியில் உள்ள கல் சிற்பங்களை காண வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மன்னர் காலத்தில் பெரும் புகழோடு இருந்த கல் சிற்ப கலைஞர்கள் நாளைடைவில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். சுதந்திரத்துக்கு பிறகு கல் சிற்பங்கள் மூலம் கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவது குறைந்தது. கல் சிற்ப தொழிலாளர் பலர் வேலையிழந்து மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது குறைந்தளவே தொழிலாளர்கள் கல் சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கோபி குதிரை வண்டி சாலையில் பத்துக்கும் மேற்பட்ட கல் சிற்ப கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கோவில்களுக்கு கருவறை, ஸ்வாமி சிலைகள், சிறிய அளவிலான எலி, நந்தி, சிங்கம் மற்றும் புலி உள்ளிட்ட சிலைகள் மட்டுமே செய்யப்படுகிறது. பெரிய அளவிலான கல் சிற்பங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் குறைந்தளவே தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். கோபியில் செய்யப்படும் கல் சிற்பங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. கல் சிற்ப தொழிலாளர்கள் கூறியதாவது: கல் சிற்ப தொழில் வெகுவாக நசிந்து வருகிறது. 50க்கும் குறைவான தொழிலாளர்களே கோபியில் உள்ளனர். இரண்டு அடி உயரம் கொண்ட கல் சிற்ப ஸ்வாமி சிலையை செய்ய குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். வருவாய்த்துறைக்கு சொந்தமான குவாரிகளில் இருந்து கல் எடுத்து வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை அரசு எளிமை படுத்தவேண்டும். சென்னை மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் கல் சிற்ப பயிற்சி கூடங்களில் இளைய தலைமுறைக்கு இலவசமாக போதிய பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கல் சிற்பங்களை கொண்டு அரசு தரப்பில் அடிக்கடி முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் நடத்தினால் போதிய வருமானமும், வெளி மாநிலத்தில் இருந்து ஆர்டர்களும் கிடைக்கும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல் சிற்ப கூடங்களை ஒரே இடத்தில் செயல்படும் வகையில் அரசு இடம் ஒதுக்கி தரவேண்டும். கல் சிற்ப தொழிலை தொடங்க வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

kannan snk

unread,
Jul 27, 2009, 7:46:43 AM7/27/09
to minT...@googlegroups.com
இந்த சிற்பகலையை தமிழக அரசே மாமல்லபுரத்தில் அராய்ச்சி நிலையமாக எடுத்து நடத்துகிறது.மாணவர்களுக்கும் கற்று தருகிறது

2009/7/27 Satheesh kumar R <svp...@gmail.com>

--
நினா.கண்ணன்

v.dotthusg

unread,
Jul 27, 2009, 8:16:42 AM7/27/09
to minT...@googlegroups.com
ஓம்.
சிற்பக்கலையின் திறமை வழிவழி வந்த, பராம்பரிய வாரிசுதார்களுக்கே உரியது என்பது ஒரு நடைமுறை.
ஸ்தபதிகள் தன் குலத்தின் வழித்தோன்றல்களுக்கு மட்டும் கற்பித்து பிறருக்கு வாய்ப்புத்தராத நிலை.
 
பலரும் பல இனத்தவரும் பிரியம் கொண்டவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.
 
என்னுடைய நண்பர் ஒரு சிற்பி.
வட்டத்தின் சுற்றளவு காண 
(2x22/7 x r)  or(22/7 x d) என்ற சூத்திரத்தைப் பற்றிப் பேசினோம். அவர் அதற்குறிய தமிழ் சிற்பகலை வாய்பாடு சொன்னார்.
”வளையதைக் கிளையதாக்கி, கிளையதை எட்டதாக்கி, எட்டில் மூன்றைத்தள்ளி  நின்றது நெற்றிக்கனம்”
 
ஒரு பெரிய தூண் ( சிலிண்டர் வடிவம்) அதன் விட்டம் காண (இரண்டு ஆரங்கள் சேர்ந்தது விட்டம்.) இந்தவாய்பாடு சிற்பிகளால் பயன் படுத்தப்படுகிறது. தமிழ் சிற்பக் கலையில் நெற்றிக் கனம் என்பது விட்டம்.
 
திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பெருந்தூணின் குறுக்கு விட்டம் (நெற்றிக்கனம்) கணக்கிட நீளமான ஒரு கயிறு எடுத்து அந்த விட்டம் காணவேண்டிய தூணின் சுற்றளவினை அளக்கவேண்டும். அந்த சுற்றளவின் நீளம்கொண்ட கயிற்றினை முதலில் இரண்டு சமபாகமாக மடித்துக்கொள்ளவேண்டும். அப்படி சம பாகமாகப் பிரித்துக் கொண்ட கயிற்றினை மீளவும்  எட்டு சமபாகமாக மடித்துக்கொள்ளவேண்டும். அந்த மடிப்புகளிலிருந்துமூன்று பாகம் நீக்கிவிட்டு எஞ்சி இருக்கும் கயிற்றின் அளவு, (ஐந்து பாகம் மட்டும்) அந்தத் தூணின் விட்டமாகும் என்பார்.  
 
நாட்டு வைத்தியம் என்னும் சித்த மருத்துவம் பிறருக்கு வெளிப்படையாகக் கற்பிக்கப்படாமல் மறைந்துவருகின்றது.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
 
-------Original Message-------

FREE Animations for your email - by IncrediMail! Click Here!
04_tile2.jpg
04_footer.gif
imstp_animation_monkey_en_020908.gif

Subashini Tremmel

unread,
Jul 28, 2009, 2:54:32 PM7/28/09
to minT...@googlegroups.com
சிற்பக்கலை போற்றிப் பாதுக்கக்கப்படுவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். இச்செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்ற கண்காட்சிகள் நடைபெருவது மக்களிடையே இக்கலையை பற்றிய சிந்தனைகளை உருவாக்க உதவும்.
-சுபா

2009/7/27 Satheesh kumar R <svp...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages