வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 5, 2026, 6:41:02 PM (yesterday) Feb 5
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்

 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      06 February 2026      கரமுதல



(வெருளி நோய்கள் 1081-1085 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1086-1090

  1. சுழல் விளக்கு வெருளி – Strovophobia

சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு(strobe light) பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் சுழல் விளக்கு வெருளி.
ஆட்சியாளர்கள், உயர் அலுவர்கள் ஊர்திகளில் சுழல் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. எனவே, சுழல் விளக்கை அதிகாரத்தின் அறிகுறியாக எண்ணிப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.
00

  1. சுழற் கதவு வெருளி – R🚗znonphobia / Orbitagoraphobia

சுழற் கதவு (revolving door)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுழற் கதவு வெருளி.
நம்மால் தள்ளி இயக்கக்கூடியதாகவும் தன்னால் இயங்கக்கூடியதாகவும் சுழற்கதவுகள் உள்ளன. இதன் செயல்பாட்டைப்புரிந்து கொள்ளாமல், சிக்கிக் கொள்ள நேரிடும் என அஞ்சுவோர் உள்ளனர்.
அரசியலில் சுழற்கதவு இயக்கம் உள்ளது. சட்டத்தை இயற்றுநருக்கும் அதனைச் செயல்படுத்துநருக்கும் இடையே உள்ள கருத்து மோதல் அடிப்படையில் உருவாவது.
கதவு வெருளி(Entamaphobia) உள்ளவர்களுக்குச் சுழற்கதவு வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00

  1. சுழற்காற்று வெருளி – Turbophobia

சுழற்காற்று குறித்த அளவுகடந்த பேரச்சம் சுழற்காற்றுவெருளி.
சுழற்காற்றினகள் ஏற்படலாம், உடைமை அழிவு ஏற்படலாம், உயிரிழப்பு நேரலாம் என்பனபோன்ற பேரச்சங்களால் வெருளிக்கு ஆளாகின்றனர்.
turbo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சுழற்காற்று.
காண்க: புயல் வெருளி – procellaphobia
00
1089.சுறா வெருளி- Galeophobia/Selachophobia

சுறா மீன்கள் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் சுறா வெருளி.
சுறாக்களில் ஏறத்தாழ 440 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும்.புலி சுறாக்களுக்கு பத்தாண்டுகளில் 24,000 பற்கள் முளைக்கின்றன. என்றாலும் கடல் பயணத்தில் சுறாவால் தாக்கப்படலாம், உயிர் இழப்பு நேரிடலாம் எனக் காரணமற்ற பேரச்சம் வருவதுண்டு.
தாடைகள் [Jaws (1975)], ஆழ் நீளக் கடல் [Deep Blue Sea (1999)], இருள் அலை [Dark Tide (2011)], முதலான திரைப்படங்களில் சுறா மீன்கள் மிகவும் பேரிடர் / ஆபத்து வாய்ந்ததாகக் காட்டப்பட்டன. இவற்றின் பின்னர், பலருக்குச் சுறா வெருளி வந்ததாகக் கூறுவர்.
இதனைப் பூனை வெருளி என்றும் குறிப்பிடுகின்றனர். பூனை வெருளியைக் குறிக்க வேறு சொற்கள் உள்ளமையால் இதனைச் சுறா வெருளி என்றுமட்டுமே சொல்லலாம்.
Galeos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிறுசுறா(dogfish).
selachos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குருத்தெலும்பு எனப் பொருள். குருத்தெலும்பால் ஆன எலும்புக்கூடு உடைய சுறாவைக் குறிக்கிறது.
00

  1. சுன்ன வெருளி – Oudenophobia / Nilophobia

சுன்னம் அல்லது சுழி குறித்த வரம்பற்ற பேரச்சம் சுன்ன வெருளி.
ouden என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் nihil என்னும் இலத்தீன் சொல்லிற்கும் இன்மை எனப் பொருள்; ஒன்றுமில்லை எனும் பொருளில் சுன்னம் அல்லது சுழியைக் குறிக்கின்றன.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages