குருகு மட்டுமே சாட்சி
யாரும் இல்லை, தானே கள்வன்!
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே! (குறுந். 25)
தலைவன் என்னுடன் கூடியிருந்தபோது, அதற்குச்
சான்றாக அந்த இடத்தில் யாரும் இல்லை.
அப்போது அங்கே கால்வாயில் ஓடிய நீரில் நீந்தும்
ஆரல் மீனை உண்பதற்காகப் பார்த்துக் கொண்டு,
தினைத்தாள் போன்ற கால்களைக் கொண்ட
குருகு மட்டுமே இருந்தது. தலைவன் கூறிய
உறுதிமொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்.
There was no one else but himself;
And, if he refutes his words, what can I do?
Only a Heron, with millet stalk like tender legs,
Was there watching for slippery eels in running water,
When we were together.