சங்கத்தமிழ் நாள்காட்டி: சங்க இலக்கியப்பாடல்கள் — விளக்கங்கள் ஓவியங்களுடன்

133 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 30, 2025, 7:52:23 PMNov 30
to மின்தமிழ்
Screenshot 2025-12-01.jpg

எங்கும் முல்லைப் பூக்களே!

அவரோ வாரார்! முல்லையும் பூத்தன!
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே! (குறுந். 221)
        உறையூர் முதுகொற்றனார்

பொருள்:
அவர் இன்னும் வரவில்லை. முல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டது.
பனைஓலையால் ஆன குடையைக் கையில் வைத்திருக்கும் இடையர்கள்,
தங்கள் ஆட்டு மந்தையை விட்டு, ஆட்டுப் பாலை விற்கச்சென்று
பாலுக்குப் பதிலாகக் கூழைப் பெற்று வருவார்கள்.
அவர்கள் தலையில் சூடியிருப்பவையும் முல்லைப் பூக்களே.

Our lover has not yet returned,
But the mullai vines have blossomed;
The herdsmen, who carry palm fronds as rain guards
And exchange milk for porridge,
Wear in their head the tiny mullai buds.

தேமொழி

unread,
Dec 1, 2025, 9:18:17 PMDec 1
to மின்தமிழ்
Screenshot 2025-12-02.jpg
திரும்பத் தந்துவிடு

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ!
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடல் சேர்ப்ப! நீ உண்ட என் நலனே! (குறுந். 236)
        நரிவெரூஉத்தலையார்

பொருள்:
மணல் நிறைந்த கடற்கரையானது குன்றைப் போல் தோன்றும்.
அதில் நின்ற புன்னை மரத்தின் தாழ்ந்த கிளையில்
புதிய நாரை  வந்து தங்குகின்ற குளிர்ந்த கடற்கரையின் தலைவனே!
தலைவியை, நீ கைவிடும் நாள் வரும் என்றால், நீ நுகர்ந்த
அவளது பெண்மை நலத்தை மீண்டும் எம்மிடம் தந்துவிட்டுச் செல்.

O' lord of the cool shores where a newly arrived stork
Roosts on a low branch of a punnai tree
On sand dunes as tall as mountains!
When the day of departure comes
And you are willing to leave her,
Please return her femininity that you partook!

தேமொழி

unread,
Dec 2, 2025, 9:06:51 PMDec 2
to மின்தமிழ்
Screenshot 2025-12-03.jpg 

ஒளி திரும்பியதா?

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து,
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்ற நோக்கினென், தோழி!
பண்டை யற்றோ, கண்டிசின், நுதலே! (குறுந். 249)
        கபிலர்

பொருள்:
தோழி, மயில்கள் தோகையை விரித்து ஆரவாரிக்கும் காட்டில்,
குரங்கு தன் குட்டியுடன் குளிரால் நடுங்கும்படி
பெருமழை பொழிந்த மலைச் சாரலை உடையது தலைவனின் நாடு.
ஒளியிழந்து பசலை படர்ந்திருந்த என் நெற்றி, அவர் நாட்டின்
குன்றத்தைப் பார்த்ததும், ஒளி பொருந்தியிருக்கும் பழைய
நிலையில் இருப்பதைக் காண்!

O' friend! Has my brow become lovely like
It used to be in the past,
Since I looked at his mountain
Where heavy rain pours down,
Peacocks cry and white-faced monkeys
Tremble in the cold with their young?

தேமொழி

unread,
Dec 3, 2025, 9:24:17 PMDec 3
to மின்தமிழ்
Screenshot 2025-12-04.jpg

குருகு மட்டுமே சாட்சி

யாரும் இல்லை, தானே கள்வன்!
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே! (குறுந். 25)

        கபிலர்

பொருள்:
தலைவன் என்னுடன் கூடியிருந்தபோது, அதற்குச்
சான்றாக அந்த இடத்தில் யாரும் இல்லை.
அப்போது அங்கே கால்வாயில் ஓடிய நீரில் நீந்தும்
ஆரல் மீனை உண்பதற்காகப் பார்த்துக் கொண்டு,
தினைத்தாள் போன்ற கால்களைக் கொண்ட
குருகு மட்டுமே இருந்தது. தலைவன் கூறிய
உறுதிமொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்.

There was no one else but himself;
And, if he refutes his words, what can I do?
Only a Heron, with millet stalk like tender legs,
Was there watching for slippery eels in running water,
When we were together.

தேமொழி

unread,
Dec 4, 2025, 10:29:07 PMDec 4
to மின்தமிழ்
Screenshot 2025-12-05.jpg

பலாப்பழங்களுக்குக் காவல்

கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ, பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? (குறுந். 342)
        காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

பொருள்:
மணம் கமழும் பெரிய பலாப்பழத்தை ஆண் குரங்கு ஒன்று பிளந்தது.
அதனைக் கண்ட கானவர், பிற பலாப் பழங்களை அவற்றிடமிருந்து காப்பாற்றும் நோக்கில், குரங்குகளை அகப்படுத்தும் வலைகளை விரித்திருந்தார்.
அப்படிப்பட்ட குன்றத்தை உடைய தலைவனே!
தழை உடை அணிந்த தலைவி, இங்கே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு வருந்துகிறாள்.
நீயோ உன்னை விரும்பியோரின் துன்பத்தைப் போக்கும்
பண்பு இல்லாதவனாக இருக்கிறாய். இது உனக்குத் தகுதி ஆகுமோ?

O' lord of the mountain country
Where male monkeys tear apart large jackfruits.
In response the forest dweller sets net traps around every fruit.
My friend wearing a garment made from leaves and flowers
From the lush pond, is sad.
Does it suit you not to remove the
Pain and fear of the one who loves you?
 

தேமொழி

unread,
Dec 5, 2025, 10:21:03 PMDec 5
to மின்தமிழ்

Screenshot 2025-12-06.jpg

பலி ஏற்குமோ!

பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறுநுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ, பலியே? (குறுந். 362:3-7)
        வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்

பொருள்:
வெறியாடும் வேலனே! பல நிறமுடைய சோற்றுப் பலியைச் சிதற விட்டுள்ள வெறியாட்டுக்களத்தில்
வெறியாடி, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதன் இரத்தத்தைத் தலைவியின் நெற்றியில் தடவி,
முருகனை வழிபட வைக்கிறாய். ஆட்டுக்குட்டியைப் பலியாகக் கொடுப்பதென்றால்,
இவளுடைய துன்பத்துக்குக் காரணமான மலைப்பகுதியைச் சேர்ந்த மாலைகள் அணிந்த
தலைவனின் மார்பும் அப்பலியை ஏற்குமோ? சொல்.

O' fortune teller! You smear her fragrant forehead
With the blood of sacrificial kid goat
And offer various coloured rice as ritualistic offering;
Will the broad chest of the Lord of the rising hills,
Who is the reason for her ailment, accept this?


தேமொழி

unread,
Dec 6, 2025, 8:23:55 PMDec 6
to மின்தமிழ்
Screenshot 2025-12-07.jpg 

தலைவன்தான்  கள்வன்! 

'எந்தை எனக்கு ஈத்த இடுவளை, ஆரப் பூண்
வந்தவழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு!'
'மாலை அணிய விலை தந்தான், மாதர்நின்
கால சிலம்பும் கழற்றுவான், சால
அதிரல் அம்கண்ணி! நீ அன்பன், எற்கு அன்பன்!
கதுவாய்! அவன் கள்வன்! கள்வி நான் அல்லேன்! (பரி. 20:76-82)
          நல்லந்துவனார்

பொருள்:
'என் தந்தை எனக்குத் தந்த வளையலையும் முத்து மாலையும்
உன்னிடம் இருக்கிறது என்றால் அது களவினால் அல்லாமல் எப்படி வரும்?
அப்படி இல்லை என்றால் அதைத் தந்தவன் யார் என்று
எனக்குச் சொல்லிவிட்டுப் பேசு' என்றாள் தலைவி.
அதற்கு, 'நான் உன்னுடைய அணிகலன்களைக்
களவுகொண்ட கள்வி அல்லேன். இவையே அல்லாமல் உன்
காலில் உள்ள சிலம்புகளையும் எனக்குத் தரும் பொருட்டுக்
கழற்றும் தன்மை உடையவன் தலைவன். உனது
தலைவனே எனக்கும் தலைவன்!  அவனே கள்வன்.
அவனை நீ பிடிப்பாயாக!' என்றாள் பரத்தை.

Wife: 'How did you get these jewels that my father gave me,
If you didn't steal it, tell me who gave it to you?'
Mistress: 'Your lover is mine too, my girl!
He gave these as a gift for the joy we had;
He will take your anklets too for me; he's the thief, not me.'

தேமொழி

unread,
Dec 7, 2025, 10:18:02 PMDec 7
to மின்தமிழ்
Screenshot 2025-12-08.jpg

கள்ளுக்கு நெல்

வளன் உடைச்செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி,
அரியல் ஆர்கை வன்கை வினைநர்,
அருவிஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடுசிறை வரிவண்டு ஓப்பும்! (பதிற்று. 62:14-18)

          கபிலர்

பொருள்:
வளமான வயலில் விளைந்த கதிரிலிருந்து களத்தில் உதிர்ந்த
நெல்மணிகளைச் சேர்த்து, அவற்றைத் தூசு நீக்காமல் காஞ்சி
மரத்தின் அடியிலே ஒன்றாய்த் தொகுத்து வைத்தனர் உழவர்கள்.
அந்நெல்லைக் கொடுத்துக் கள்ளினைப் பெற்றுக்
குடித்த வலிய கையைக் கொண்ட உழவர்,
வண்டுகள் மொய்க்கும் ஆம்பல் மலரினைச் சூடியிருப்பர்.

Farmers let their cows graze in meadows
While they heap excess grains under trees
And drink toddy; Bees buzz around lilies
That adorn these strong farmer's heads.

தேமொழி

unread,
Dec 8, 2025, 10:02:20 PMDec 8
to மின்தமிழ்
Screenshot 2025-12-09.jpg 

கழுவுள் அடி பணிந்தான்

கன்றுடை ஆயம்தரீஇப் புகல்சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
மத்துக்கயிறு ஆடா வைகல்பொழுது நினையூஉ,
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதிபாழாக வேறுபுலம் படர்ந்து! (பதிற்று. 71:14-18)
        அரிசில் கிழார்

பொருள்:
கன்றுடன் கூடிய ஆநிரைகளை நீ கைப்பற்றி உன் வீரர்களுக்குத் தந்தாய்.
அதனால் ஆர்வம் கொண்ட அவ்வீரர்கள் மீண்டும் மீண்டும் அம்பு விட்டனர்.
தயிர் கடையும் மத்தில் கயிறு இடாத அதிகாலையிலேயே வந்து
உன் அடி பணிவதற்காக கழுவுள் என்னும் இடையர் தலைவன் வணங்கி நின்றான்.
அதனால் வேறு ஊர்கள் பலவும் பாழாகும்படியாய்ப் பகைவர் நாட்டை நோக்கிப் புறப்பட்டாய்!

Cattle herders who live with fear gave oxen, cows and calves to
Your soldiers who carry flesh-reeking bows.
Kazhuvul, the leader of cattle herders, bowed to you in the early morning
And gave tributes, to guard his kin from raids.
Thus you turned to lands afar.

தேமொழி

unread,
Dec 9, 2025, 10:42:58 PMDec 9
to மின்தமிழ்

Screenshot 2025-12-10.jpg

ஊழித்தீப் போன்றவன்

நிலம் பொறை ஒராஅநீர் ஞெமர வந்து ஈண்டி,
உரவுத்திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்,
வரையா மாதிரத்து இருள்சேர்பு பரந்து,
ஞாயிறுபட்ட அகன்றுவரு கூட்டத்து
அம்சாறு புரையும் நின்தொழில் ஒழித்து,
பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்!
(பதிற்று. 72:9-14)

        அரிசில் கிழார்

பொருள்:
உயிரினங்கள் ஒருங்கே அழிவதற்குரிய ஊழிக்காலம் வரும்போது, நீர் பெருகும்.
வலிய அலைகள் மேலெழுந்து அனைத்துத் திசைகளிலும் இருளுடன் பரவும்.
இந்த இருளைப் போக்குவதற்கு ஊழி முடிவில் பன்னிரண்டு
சூரியனும் தோன்றும். அச்சூரியன் இருளையும்
வெள்ளத்தையும் வற்றும்படி செய்வதைப் போன்ற நீ,
பகைவரை எதிர்க்கும்போது, ஊழிக்காலத்தில் தோன்றும்
வடவைத் தீயைப் போலச் சினத்துடன் தோன்றுவாய்.

During apocalypse, all living beings perish
Sea waves roar and floods spread across the land,
Darkness engulfs the world; then, the Sun's rays will spread
To evaporate flood waters with their heat;
Like that apocalyptic fiery sun are you, my Lord!
To your enemies.

Jeyapal K

unread,
Dec 10, 2025, 6:23:49 AMDec 10
to mint...@googlegroups.com
சிறு சந்தேகம்.
பாடலில் ஞாயிறு இருக்கிறது. 
பன்னிரண்டு என்பது தெரியவில்லையே!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/90fee96d-cde9-4bb4-82ea-9761bef7cd4bn%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 10, 2025, 3:34:34 PMDec 10
to மின்தமிழ்
///பாடலில் ஞாயிறு இருக்கிறது. 
பன்னிரண்டு என்பது தெரியவில்லையே!///

எனக்கும் அந்த ஐயம் வந்தது ஐயா!!!   


பதிற்றுப்பத்து - பழைய உரை
https://www.tamilvu.org/slet/l1241/l1241all.jsp?x=71&y=80&sno=72

பாடல் 72
. . .   . . .    . . .    . . .
உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் [10]
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்து

வெள்ளம் பரக்கையாலே  அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர் பன்னிருவரும் தோற்றின பெரிய கூட்டத்தையுடைய வடவைத்தீயென உரைக்க. ஆதித்தர் கூட்டத்தை இவன் (சேர மன்னர்) படைத்தலைவர்க்கு உவமமாகக் கொள்க.
_____________________

ஆதித்தர் பன்னிருவர் குறித்து மேலும் தேடி அறிந்து கொண்டது
இவர்கள் வேதம் குறிப்பிடும் **முப்பத்து மூன்று தேவர்கள்** என்பவரில் ஒரு பிரிவினர்.  
வசுக்கள் எண்மரும், **ஆதித்தர் பன்னிருவரும்**, உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் என நால் வகைப்பட்ட முப்பத்து மூவர் எனப் படுபவர்கள்.
ஒவ்வொரு ஆதித்தரும் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் உரியவர்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் இவர்கள்  சூரியனின் வெவ்வேறு சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரும் உண்டாம் !!!
வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பார்க்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோ கசாக்ஷி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி. இவர்கள் மாதம் ஒருவராய்க் கடவுளாஞ்ஞைப்படி இருளைப் போக்குவர்.
ஆனால் பல பட்டியலில் இப்பெயர்களில்  வேறுபாடுகளும் உள்ளனவாம்.
பரிபாடல், திருமுருகாற்றுப்படை, பதிற்றுப்பத்து  என்று சங்க இலக்கியம் என அறியப்படும் நூல்களிலேயே இந்தப் புனைகதைகள் நுழைந்துள்ளன.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சூரியன் என்று 12 சூரியன்களா  ? அந்த ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு சக்தியா ?
காலத்திற்கு  ஒவ்வாத படைப்புக் கொள்கை கதைகளில் ஒன்று. அவர்கள் கற்பனையைக் கண்டு, அதைப் படைத் தலைவர்களுக்கு உவமையாக்கியதைக் கண்டு வியந்து கடக்க வேண்டிய வரிகள். 
sun.jpg
நடுவில் சூரிய பகவானும், மேல் பகுதியில் பிற 11 ஆதித்தர்கள் கொண்ட சிற்பம், காலம் 11ம் நூற்றாண்டு

paripadal.png
திருப்பரங்குன்றம் = இமயமலை !!!!
YES !!!
Both are Great Trigonometrical Survey sites 
ஃ Thiruparankundram = Himalayas

-------------------------------------------------------------------------------------


தேமொழி

unread,
Dec 10, 2025, 7:21:44 PMDec 10
to மின்தமிழ்
Screenshot 2025-12-11.jpg

அயிலைமலைக் கொற்றவை

கொல்களிற்று யானை எருத்தம் புல்லென,
வில்குலை அறுத்து, கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்குடை மரபின் கட்டில் மேலிருந்து,
தும்பைசான்ற மெய்தயங்கு உயக்கத்து
நிறம்படுகுருதி புறம் படின் அல்லது,
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ! (பதிற்று. 79:10-18)

          அரிசில் கிழார்

பொருள்:
உன் பகை மன்னரின் யானையை வீழ்த்தி
அதன் தந்தத்தை வெட்டி, இருக்கை அமைத்து அதில் வீற்றிருந்தாய்.
உனது ஆட்சிக்குக் கீழ்ப்படியாத
அவர்களுடைய முரசின் கண்ணைக் கிழித்தாய்.
தும்பை மலரைச் சூடிப் போரிட்ட உன் வீரர்களின்
உடலில் உண்டான புண்களிலிருந்து ஒழுகும் குருதியால்
மடைகொடுத்தும் ஏற்காத அச்சம் தருபவளாகத் திகழ்ந்தாள்
அயிலை மலைக் கொற்றவை.

My lord! You broke your enemy's war drum
Killed his royal elephant, and carved a seat out of its tusks
For the fearsome war goddess of Ayirai hills,
Who is not satisfied with offerings of warriors' blood alone.

தேமொழி

unread,
Dec 11, 2025, 11:39:51 PM (13 days ago) Dec 11
to மின்தமிழ்
Screenshot 2025-12-12.jpg 

நீடு வாழ்க!

எரிமருள் வேங்கை இருந்த தோகை,
இழையணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனை யால், நுந்தை வாழியர்!
நன்மனை வதுவை அயர, இவள்
பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே! (ஐங். 294)

        கபிலர்

பொருள்:
வேங்கை மரத்தில் அமர்ந்திருக்கும் மயில்,
அணிகளை அணிந்த மகளிர் போல் தோன்றும் நாடனே!
நல்ல மனையில் மணம் நிகழும் இவ்வேளையில், இவளுடைய
பின்னப்பட்ட கரிய கூந்தலில் மலரை அணிவித்தாய்.
இதை முன்னமே செய்தாய் என்றாலும், இப்போது இனிதே செய்தாய்.
இப்படிப்பட்ட உன் பெற்றோர் நீடு வாழ்வாராக!

O' hero of the country, where the peacock, seated
On the venkai tree that has flame-like flowers,
Seems like a belle, bedecked with jewels,
You adorned her braided dark tresses
With blooms to celebrate the wedding in good house,
You did the pleasant thing,
May your father live long!

தேமொழி

unread,
Dec 12, 2025, 7:48:23 PM (13 days ago) Dec 12
to மின்தமிழ்
Screenshot 2025-12-13.jpg 

குன்றமே நீ வாழ்க!

அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறைத்த குன்றே! (ஐங். 312)

       கபிலர்

பொருள்:
உடன்போக்கில் தலைவனுடன் சென்றபோது, எங்களைத்
தொடர்ந்து வந்த எம் உறவினர் அறியாதபடி தலைவனை
மறைத்து உதவிய ஒளி பாயும் அருவிகளையுடைய குன்றமே!
எங்கும் வறட்சி உண்டாயினும், இம்மலையில் வறட்சி
ஏற்படாமல் அறம் நிறைந்து வளம்பெற்று ஓங்குக.

Let virtue abound; even during famine!
In the hill of bright charming waterfalls
Which concealed my hero from my kin
When we eloped.

தேமொழி

unread,
Dec 13, 2025, 10:48:19 PM (12 days ago) Dec 13
to மின்தமிழ்

Screenshot 2025-12-14.jpg
உயிர் தப்புவாளோ!

யாங்கு ஆகுவள்கொல் தானே, ஓங்குவிடைப்
படுசுவல் கொண்ட பகுவாய்த் தெள்மணி
ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர்உயிர் அணங்கும் தெள்இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே! (அகம். 214:10-15)
         வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

பொருள்:
காளையின் கழுத்தில் கட்டிய பெரிய மணியின் ஓசையையும்,
பசுக்களை அழைத்துவரும் கோவலர் மீட்டும், பிரிந்துள்ளவர்களுக்குத்
துன்பத்தைத் தரும் ஆம்பல் குழலோசையையும்,
யாழில் செவ்வழிப்பண் இசையையும் மாலைக்காலத்தில்
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கேட்டால் எந்நிலையை அடைவாளோ?

The cowherds would go homeward with their cattle
When the big bells tied to the necks of the huge bulls would tinkle;
The cowherds would play their pipe and also their goodly yaal.
Alas, what would be the plight of her when she hears this music
That causes grief to the lonely?

தேமொழி

unread,
Dec 14, 2025, 9:28:28 PM (11 days ago) Dec 14
to மின்தமிழ்
Screenshot 2025-12-15.jpg 

தந்தைக்கு உணவுதரும் மகள்

நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்,
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார்அரி நறவுஉண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர்! (அகம். 216:1-5)
       ஐயூர் முடவனார்

பொருள்:
கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீனைப் பிடிக்கும் பாணர் மகள்,
அவள் பிடித்து, கரையில் இழுத்துப் போட்ட வரால் மீனை
வஞ்சி மர விறகால் சுடுவாள். அம்மீனை, வடிகட்டிய
கள்ளைக் குடித்த, தன் தந்தைக்கு ஊட்டுவாள். இப்படிப்பட்ட
நீர்த்துறையைக் கொண்ட தலைவன்.

A lass of the Paanar clan
Catches a varaal fish from the bank of a stream nearby;
She roasts it in the fire and lovingly feeds her father,
Who is intoxicated with filtered liquor.

தேமொழி

unread,
Dec 15, 2025, 9:23:01 PM (10 days ago) Dec 15
to மின்தமிழ்
Screenshot 2025-12-16.jpg

தலைவனோடு செல்

... நின்
தண்நறு முச்சி புனைய, அவனொடு
கழை கவின் போகிய மழைஉயர் நனந்தலை,
களிற்று இரை பிழைத்தலின், கயவாய் வேங்கை
காய்சினம் சிறந்து குழுமலின் வெரீஇ,
இரும்பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே! (அகம். 221:9-14)
      கயமனார்

பொருள்:
'மழை பெய்யாததால் மூங்கில்கள் அழகிழந்து காணப்படும் பாலைநிலத்தில்,
வேங்கைப்புலி ஒன்று ஆண் யானையைத் தாக்குவதற்குக் குறிபார்த்தது
அந்தக் குறி தப்பிவிட்டதால், சினத்தோடு முழங்கும் வேங்கைப்புலியின் குரல் கேட்டு,
கரிய பெண் யானைகள் அஞ்சி ஓடும் கொடுமையான வழியில், உனக்கு
பூச்சூட்டிய தலைவனுடன் நீ, உடன்போக்கில் செல்' என்றாள் தோழி.

Our lover, who adorned your treeses with honey-dripping blooms,
Will go with you crossing the well-nigh impassable path
Where the bamboo clusters have lost their beauty
And where the dark-hued she-elephants run scared
On hearing the growl of an angered tiger.

தேமொழி

unread,
Dec 16, 2025, 10:34:37 PM (9 days ago) Dec 16
to மின்தமிழ்
Screenshot 2025-12-17.jpg 

எம் தலைவனைப் போன்றது இது!

அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற
தறுகண் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது,
அருவழி விலக்கும்எம் பெருவிறல் போன்ம் என,
எய்யாது பெயரும் குன்றநாடன்! (அகம். 248:5-10)

      கபிலர்

பொருள்:
வேட்டையாடுபவரை எதிர்நோக்கிக் காத்திருந்தது காட்டுப்பன்றி.
அதனை வேடன் ஒருவன் அருகில் நின்று பார்த்தான். 'பகைவர்
படையைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை வீரர்
புறமுதுகுகாட்டி ஓடிவிட, தான் ஓடாமல் பகைவர் வரும்
வழியில் தடுத்து நிற்கும் என் வலிமையான தலைவனைப் போல் இப்பன்றி உள்ளது'
என எண்ணி வியந்து, அதன்மீது அம்பு எய்யாமல் திரும்பிப் போனான்.

A boar stands poised to attack men.
A hunter nears the boar aiming at it a sharp dart
But moves away without attacking as it recalls to his mind
His valorous chief, who would not move away from the battlefield
Even when his warriors of immense strength retreated.

தேமொழி

unread,
Dec 18, 2025, 12:18:45 AM (7 days ago) Dec 18
to மின்தமிழ்
Screenshot 2025-12-18.jpg 

குற்றமிழைத்தவனுக்குத் தந்த தண்டனை

தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும்பெயர்க் கள்ளூர்,
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன், அறியேன் என்ற
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே! (அகம். 256:14-21)
        மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்

பொருள்:
கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த இளம்பெண் ஒருத்தியை,
ஒருவன் தன் வலிமையினைக்காட்டி அவளுடைய
விருப்பத்துக்கு மாறாக அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டு,
அவளை எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டான்.
அப்பெண், ஊர்ப் பெரியவர்களிடம் கூறிட, குற்றம்
மெய்ப்பிக்கப்பெற்றதைத் தொடர்ந்து, குற்றமிழைத்தவனை
ஒரு பெரிய மரத்தில் கட்டி வைத்து, அவன் தலையில்
சாம்பலைக் கொட்டினர். அச்சமயம் அருகிலிருந்த
அவ்வூர்க்காரர்கள் ஆரவாரம் செய்தனர்.

In Kallur, when the elders heard the plaint of a girl of tender age,
And punished the lad who had despoiled her feminine charm
By pouring buckets of ash as a way of chastisement,
The townsfolk aroused an uproar with excitement.

தேமொழி

unread,
Dec 18, 2025, 8:04:09 PM (7 days ago) Dec 18
to மின்தமிழ்
Screenshot 2025-12-19.jpg 

மறக்குடிப் பெண்

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்ஐ,
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே!
நெருநல் உற்ற செருவிற்கு, இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி, ஆண்டுப்பட் டனனே!
இன்றும், செருப்பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇ
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க! என விடுமே! (புறம். 279:3-11)
        ஒக்கூர் மாசாத்தியார்

பொருள்:
முதல்நாள் போரில் இவளுடைய தந்தை,
யானையை வீழ்த்தித் தானும் இறந்தார்.
நேற்றைய போரில், இவளுடைய கணவன் ஆநிரைகளைக்
கவர்ந்து செல்பவர்களிடம் போரிட்டு அவற்றைக் காத்து இறந்தான்.
இன்றைய போருக்கு வீரர்களை அழைக்கும் பறையொலி கேட்டு,
தன்னுடைய ஒரே மகனை அழைத்து, அவன்
தலைக்கு எண்ணெய் தேய்த்து,
வெள்ளுடை உடுத்தி, கையில் வேலைக் கொடுத்து,
'போர்க்களம் நோக்கிச் செல்வாயாக' என்று சொல்லி அனுப்புகிறாள்.

Her father was killed in the battle two days before, slaying an elephant;
Her husband was killed yesterday, protecting the cow herd;
Yet today, when she hears the roll call for battle,
She hands the spear to her only son and sends him forth.

தேமொழி

unread,
Dec 19, 2025, 7:52:11 PM (6 days ago) Dec 19
to மின்தமிழ்

Screenshot 2025-12-20.jpg

உயிர்த் துணையானவன் தலைவன்

இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே! (புறம். 324:11-14)
        ஆலத்தூர் கிழார்

பொருள்:
இடையர் கொளுத்திய சிறிய விளக்கொளியில்
பாணர் சூழ்ந்திருக்க, அவரிடையே வீற்றிருந்த அடக்கமுடைய தலைவன்,
வெற்றியையுடைய மன்னனுக்கு உயிர் போகும்படியான துன்பம்
வந்தால் தானும் உயிர் கொடுக்கும் துணையானவன். அவன் வாழ்க!

My lord, who sits amiably with bards
Amidst lamps lit by herdsmen,
Will treat his king's troubles as his own
And stand with him, such a true ally is he.

தேமொழி

unread,
Dec 20, 2025, 10:36:07 PM (5 days ago) Dec 20
to மின்தமிழ்

Screenshot 2025-12-21.jpg

தலைவன் ஊரின் வீரமும் ஈகையும்

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அருமிளை இருக்கை அதுவே! வென்வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே! (புறம். 325:11-15)
        உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

பொருள்:
வெற்றி வேல் கொண்ட மன்னர்,
பெரும்படையுடன் எதிர்த்து வந்தாலும் தாங்கும்
அளவு வலிமையுடைய காவல் காடுகளையும்
அளவற்ற வகையில் பிறருக்கு வழங்கும் வளத்தையும் உடையது தலைவனின் ஊர்.
அந்த ஊரின் மன்றத்தில் உள்ள இலந்தை மர நிழலில்
சிறிய தலையுடைய சிறுவர்கள் அம்பு எய்து விளையாடுவர்.

In the shade of the swaying tree in public square
Kids play with bows and arrows in this impregnable town;
Even if mighty Kings enter with their great armies,
This town led by the generous chief can provide for them all.

தேமொழி

unread,
Dec 21, 2025, 8:35:50 PM (4 days ago) Dec 21
to மின்தமிழ்
Screenshot 2025-12-22.jpg 

காளைப் போர்

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு,
மலைத் தலைவந்த மரைஆன் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறு படத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை!
(மலைபடு. 330-335)
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பொருள்:
தன் மந்தையை விட்டு நீங்கிவந்த எருதும்
மலையிலிருந்து இறங்கி வந்த மலை எருதும்
பின் வாங்காமல் ஒன்றை ஒன்று தாக்கும்.
அதனைக் காட்டுமல்லி மாலை அணிந்த
ஆயரும் குறிஞ்சி மாலை அணிந்த குறவரும்
ஆரவாரத்துடன் கண்டு களிப்பர். இவ்வாறு போர் செய்யும்
எருதுகளால் அந்த ஊரே ஆரவாரத்துடன் விளங்கியது.

A bull with a moving hump, that strayed from its herd
And another bull that came from the mountains, fine males,
Fought with each other with strength without backing down,
Causing wounds to each other,
Ruining thick-petaled kulavi flowers and kurinji blossoms.
To this, the cattle herders and mountain dwellers raised uproars.

தேமொழி

unread,
Dec 22, 2025, 10:16:11 PM (3 days ago) Dec 22
to மின்தமிழ்
Screenshot 2025-12-23.jpg

 பெண் கேட்டு நடக்கும் போர்

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே! தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழி அலனே!
இஃது இவர் படிவம் ஆயின், வைஎயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை,
மரம்படு சிறு தீப் போல,
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே! (புறம். 349)
மதுரை மருதன் இளநாகனார்

பொருள்:
வேந்தனும் தன் கை வேலின் முனையால் நெற்றியின் வியர்வையைத் துடைத்தபடி,
அச்சம் தரும் சொற்களைச் சொல்கிறான். இவளுடைய தந்தையும் வஞ்சினச்
சொற்களைத் தவிரப் பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லவில்லை.
இது இவர்களுடைய கொள்கையாகும். இதை ஆராய்ந்து பார்க்கின்,
கூர்மையான பற்களையும் வரிகள் பொருந்திய கண்களையும் அழகிய மாநிறத்தையும் உடைய பெண்,
மரத்தைக் கொண்டு தீக்கடையும்போது தோன்றும் தீ அம்மரத்தையே அழிப்பதைப் போன்று,
தான் தோன்றிய ஊருக்கே துன்பத்தை ஏற்படுத்திவிட்டாள்.

The king, who wipes the sweat from his forehead
With the tip of his spear, speaks words that are fierce.
Her father says nothing to ingratiate himself but only mouths curses.
So they stand, and the lovely woman,
Like a wood burning itself out of sparks while being sawed,
Brings sorrow now to her native city.

தேமொழி

unread,
Dec 23, 2025, 9:21:20 PM (2 days ago) Dec 23
to மின்தமிழ்
Screenshot 2025-12-24.jpg 

பன்னாட்டுப் பொருள்களுடைய புகார் வீதி

நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்! (பட்டின. 185-193)
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பொருள்:
கப்பலில் வந்த நிமிர்ந்த நடைகொண்ட குதிரைகளும்,
வண்டிகளில் வந்த கரிய மிளகு மூட்டைகளும்,
வடமலையில் கிடைத்த பொன்னும்,
குடகு மலையில் கிடைத்த சந்தனமும் அகிலும்,
கங்கைக் கரையில் கிடைத்த பொருள்களும், காவிரிக் கரையில் கிடைத்த பொருள்களும்,
ஈழத்தில் கிடைத்த உணவு வகைகளும், மியான்மரில் கிடைத்த பொருள்களும்
அரியவையாகவும் பெரியவையாகவும் காவிரிப்பூம்பட்டினத்துத்
தெருக்களில் நிறைந்திருந்தன.

Swift horses which arrive on ships from abroad,
Sacks of black pepper that arrive by carts,
Gold that comes from northern mountains,
Sandalwood and akil that come from the western mountains,
Materials that come from the Ganges, and the yields of river Kaaviri,
Things from Eezham, products made in Myanmar,
And many rare and big things are seen piled up
On the wide streets of Kaaviripoompattinam.

*தென்கடலில் கிடைத்த முத்தும் கிழக்குக் கடலில் கிடைத்த பவளமும்
என்ற விளக்கம் விடுபட்டுள்ளது 

தேமொழி

unread,
Dec 24, 2025, 8:24:22 PM (15 hours ago) Dec 24
to மின்தமிழ்

Screenshot 2025-12-25.jpg
குறவர் தந்த பரிசுகள்

கருங்கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்
மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்,
இருங்கேழ் வயப்புலி வரிஅதள் குவைஇ
விருந்துஇறை நல்கும்! (புறம். 374:8-15)
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பொருள்:
குறிஞ்சி மரம் பொருந்திய மலையைப் போற்றிப் பாடினேன்.
எனக்குப் புலிப்பல் கோத்த தாலி அணிந்த குறச் சிறுவர்களைப்
பெற்ற மான்போன்ற கண்களையுடைய மகளிரின் கணவர், தங்கள்
வில்லினால் வீழ்த்திய முள்ளம்பன்றியின் கொழுத்த ஊனையும்,
மலையில் கிடைத்த சந்தனக் கட்டைகளையும்,
புள்ளிபொருந்திய முகத்தையுடைய யானையின் தந்தங்களையும்,
வலிமையான புலியின் தோல் மீது குவித்துக் கொடுத்தனர்.

As I sang the praises of his hill country,
The hill chieftain plied me with gifts of
Chunky meat of porcupine, sandal wood pieces
And elephant tusks, spread over a rug of tiger skin.

Reply all
Reply to author
Forward
0 new messages