கோடு என்றால் என்ன

1,180 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Jun 25, 2016, 11:42:39 AM6/25/16
to mint...@googlegroups.com

குமரிக்கண்டம் -? (பாகம்-11 )

2.ஈ .சிலம்பில் கடல்கோள்

குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பதறிவு”

திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன.  நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில்  முடிந்ததைக் கண்டேன்.  எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.

கோடு என்பதற்கு நீர்க்கரை எனப் பொருள் கொள்வார் அரும்பத உரையாசிரியர். அடியார்க்கு நல்லார் இவரைத் தழுவியே சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அகரமுதலியும் கோடு எனும் சொல்லிற்கு, மலை, குன்று, நீர்க் கரை , வளைவு எனப் பொருள் கூறுகிறது. கோடு எனும் சொல் வளைவு எனும் பொருளில் எங்கெங்கே வருகிறது எனப் பார்க்கலாம். கம்ப இராமயணத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாடலைப் பாருங்கள்.

“ஆடவர் நகையுற ஆண்மை மாசுற

 தாடகை எனும் பெயர் தையலாள் படக்

கோடிய வரிசிலை இராமன் கோமுடி

சூடுவன் நாளை, வாழ்வு இது “ எனச் சொல்லினாள் .

வளைந்த வில்லை ஏந்திய இராமன்......

கோடிய எனும் சொல் வளைந்த எனும் பொருளில் வருவதைக் காண்க.

இனி, இதே படலத்தில் இன்னுமொரு பாடல்

“ ‘நாடி உனக்கு ஒன்று உரை செய்வேன் நளிர்மணி நகையாய்

தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேளை

ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்

கோடி’ என்றால் உள்ளமும் கோடிய கொடியாள்”

மந்தரை (கூனி) உடல் மட்டும் வளைந்தது அன்று....அவள் உள்ளமும் வளைந்த ஒன்று தான்  என்று கம்பன் உரைக்கிறான்.

அடுத்து சிதம்பரத்தில் இருந்து தெற்கு நோக்கி நீளும் தமிழகக் கிழக்குக் கடற்கரை, ஓர் இடத்தில் 90 பாகை வளைந்து மேற்கு நோக்கித்  திரும்புகிறது. . அந்த இடம் கோடியக் கரை , அதாவது வளைந்தகரை என்றே வழங்கப் படுகிறது. திருச்செங்கோடு, முற்காலத்தில் செங்குன்றம் என்றும் செங்கோட்டு மலை என்றும் அழைக்கப் பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல்

சாம்பல் நிற நைஸ் பாறைகளில் இளம்சிவப்பு நிற (POTASH RICH) கிரானைட் பாறை கோடு போல் ஊடுருவியுள்ளதாலேயே அது திருச்செங்கோடு எனப்படுகிறது..(காண்க :படம்). ஆதலின் குமரிக்கோடு எனும் தொடருக்கு குமரி மலை என பொருள் கொள்ளாமல் வளைந்த  கரையை உடைய குமரி அடுக்கம் எனப் பொருள் கொள்வதே சரி என்று தோன்றுகிறது.

VIL.png
HUNCH.png
KODI.png
kodu.png

Pandiyaraja

unread,
Jun 25, 2016, 1:37:06 PM6/25/16
to மின்தமிழ்
கோடு என்பதற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. அரபிக்கடலில் உருவாகி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியைத் தாண்டித் தமிழ்நாட்டுக்கு வரும் தென்கிழக்குப் பருவக்காற்றை முல்லைப்பாட்டு வருணிக்கிறது.

பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறு புன் மாலை - முல்.4-6

இங்கே கோடு என்பது மேற்குமலைத் தொடர்ச்சி மலைகளின் உச்சி.

ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jun 25, 2016, 1:50:11 PM6/25/16
to மின்தமிழ், vallamai
On Saturday, June 25, 2016 at 10:37:06 AM UTC-7, Pandiyaraja wrote:
கோடு என்பதற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. அரபிக்கடலில் உருவாகி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியைத் தாண்டித் தமிழ்நாட்டுக்கு வரும் தென்கிழக்குப் பருவக்காற்றை முல்லைப்பாட்டு வருணிக்கிறது.

அரபிக் கடலில் உருவாகிவருவது தென்மேற்குப் பருவக்காற்று. கோடைகாலத்தில் பெயவதால் கோடை மழை என்போம் கோவை மாவட்டத்தில்.

தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது
         சாரல் இன்பச் சாரல்
     தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று சிந்துதம்மா 
          தூரல் முத்துத் தூரல்

--------------------------------------

வடகிழக்குப் பருவக்காற்று கிழக்கே இருந்து வருவது டிசம்பர் - மார்ச். கிழக்கே இருந்து (காங்கயம், கரூர், ....)) இதனைக் கொங்கமழை என்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 26, 2016, 1:58:55 AM6/26/16
to மின்தமிழ்

On Saturday, June 25, 2016 at 8:42:39 AM UTC-7, singanenjan wrote:

குமரிக்கண்டம் -? (பாகம்-11 )

2.ஈ .சிலம்பில் கடல்கோள்

குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பதறிவு”

திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன.  நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில்  முடிந்ததைக் கண்டேன்.  எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.

நீர்க்கரைக்கு கோடு என்னும் பெயரை வேறுமுறையில் எழுத 4-5 ஆம் நூற்றாண்டில் முயற்சி செய்தனர். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். வட்டெழுத்து தொடக்க காலம்.
காசரகோடு (காஞ்சிரங்கோடு) அருகே கிடைத்த கல்வெட்டு.

செங்கோடு, சேரங்கோடு, காஞ்சிரங்கோடு போல மலைக்கு -கோடு என்ற பெயரில் கொற்றிகோடு உள்ளது. கன்யாகுமரிக்கு மிக அருகே.
கொற்றவை (கன்யாகுமரி) கொற்றி என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறாள். அதன் அருகே வேளிமலை உள்ளது. பிரசித்தமான முருகன் தலம் வேளிமலை.
வேள் - வேளி எனவாகும்.  கொற்றி = குமரி (கன்யா குமரி), எனவே தன் தமிழ்தேசிய நாவலில் இளங்கோ அடிகள் கொற்றிகோடு, சற்றுமாற்றி குமரிக்கோடு என்றால்.
கோற்றிகோடு மலையே கடல் சுனாமியின் போது மூழ்கியது என்கிறார். காலப்போக்கில் இக் கதை விசுவரூபம் எடுத்து, குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம்
என வளர்ந்துவிட்டது. 

இக்கதைகளுக்கான அடிப்படையை இலக்கிய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. சமணர்களின் கொடையை மறைக்க அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார்
என்றும், முதல், இடை, கடை சங்கங்கள் என்றும் சைவர்கள் “இறையனார் அகப்பொருள்” நூலிலும், உரையிலும் கதைகள் கட்டினர். 

கொற்றிகோடு

 ‘என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .’

கொற்றிகோடு - பன்மலை அடுக்கம்:

Local News In Kotticode!

Sunday, January 30, 2011

கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்

       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .
 வேளிமலை தோற்றம் 

இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவடத்தின்  மையபகுதியில்  மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து , வானுயர மப்புடன் உயர்ந்து நின்று இளம்தென்றல் வீசி வரும் சுகம் கொடுக்கும் எழில் மிகு பசும்சோலைகளையும் கொண்டு ,முக்கனியும் ,தேங்கனியும் முதிர்ந்து , பணப்பயிரும்,மணபயிரும், குணப்யிரும் வாரிவழங்கி இம்மாவட்டத்தின் ஜீவாதாரமாக அமைந்திருப்பதும் , தமிழர்களின் தனித்தெய்வமான எழில்மிகு திருமுருகன்  தன் இதயம் கவர்ந்த கன்னி ,அன்று தினைப்புலம் காத்த வள்ளியை  தேடிவந்து திருவிளையாடல் நடத்திய இடமும் , தக்கராஜன் வேள்வி வளர்த்த இடமாகையால் இம்மலைக்கு வேளிமலை என்று வரலாறு கூறுவதுமான வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரார் வேளிமலையிலிருந்து உதித்து வரும்உதயசூரியனை காலையில் கிழக்கு திசையில் கண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் வேளிமலை முகட்டிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டத்தில்  விளைந்தோடி வளபடுத்தும் ஆறுகளில் ஒன்றான கயலைகள் துள்ளி ஓடும் வள்ளி ஆறு இவ்வூரின் தெற்கு எல்லையிலும் , இன்னொன்றான தட்சணகோதையாறு என்ற சடையாறு இதன் வடக்கு எல்லையிலும் வளைந்தோடியும், பேச்சிபாறை  பெருஞ்சாணி அணைகளின் நீரைசுமர்ந்து வரும் பத்மனபாபுரம் புத்தனாறு என்ற வெட்டாறு  இதன் தென்மேற்கு  எல்லையில் விளைந்தோடி வளபடுத்தியும், இதன் 3 திசைகளிலும் விளைந்தோடி அரண்போல் அமைந்த பத்மனபாபுரம் புத்தனாறை கடந்து செல்ல குமாரபுரம் அம்மன்கோயில் பக்கமுள்ள பாலம் மட்டும் இதன் முக்கிய கணவாய் போன்று அமைந்த ஓர் பாதுகவல் ஊர்தான் கொற்றிகோடு .

          இவ்வளவு பாதுகாவலும் செல்வசெழிப்பும்  கொண்டு குறிஞ்சியும் ,முல்லையும் , மருதமும் ,ஒருங்கே அமைந்த  இவ்வூரிலே ஒரே மொழி பேசும் ஒரே இனம்  குழுமி வாழ்ந்து கொண்டிருகிறது . இந்த இனம் தான்  நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை  மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும்  கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ  மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம்  வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர்  இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .
பழைய வரலாற்றுகளிலே . சங்க இலக்கியங்களிலே வெற்றிவேண்டி போர் தொடுத்து செல்லும் வேந்தர்கள் தங்கள் வெற்றிக்காய் கொற்றவை தெய்வத்தை(பத்திரகாளியை) வேண்டிகொண்டனர் . கொற்றவையை வெற்றிதேவதயாக வழிபட்டனர். தங்கள் நாடார் குலத்தை பனம்பால் கொடுத்து வளர்த்த கொற்றவையை இவ்வூர் மக்கள் தங்கள் குலதெய்வமாககொண்டு  வழிபட்டு அன்று வாழ்ந்திருந்தார்கள் . இத்தகவலை பெயர் தெரியாத ஒரு புலவர் எந்த நாளிலோ எழுதி வில்லுப்பட்டுகளில் பாடிவந்த பாடலான

                                         "கட்ட கட்ட உச்ச நேரம்"
                                           காளியம்மா வாற நேரம்
                                          பொட்டகுளத்து  இசக்கி யம்மை
                                          பொழுதடைய வாற நேரம்"

புத்தனாறு 

என்ற வரிகளால் தெரிய வருகிறது . இதிலிருந்து கூழக்கடை பக்கமுள்ள மக்கள் பொட்டைகுளக்கரையில் காளி (கொற்றவை) கோயில் இருந்ததாகவும் அங்கிருந்த மக்கள் காளியை  குல தெய்வமாக கொண்டு வழிபட்டதும்  தெரிய வருகிறது .
(இப்பாடல் மீட் நினைவு ஆலய 150 வது விழா மலரில் பக்கம் 44 ல்  இடம்பெற்றுள்ளது).

                      ஆனால் கி. பி. 1818 ல் பண்டைய வேணாட்டில் இன்றைய குமரி மாவட்டத்தில் மயிலாடியை மையமாக கொண்டு திருதொண்டாற்ற  சங். சார்லஸ் மீட் அவர்கள் வந்தார்கள் .திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் தாழ்த்தப்பட்டு அடிமைபடுத்தபட்டு கிடந்த நாடார் குலத் தமிழர்களின் விடுதலைக்காய் தோள்சீலை போராட்டத்தை நடத்தியவரும் , ஆட்சியாளர்களின் அனுமதியால் நாகர்கோயில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரும் , இன்று நாகர்கோயிலில் தன்னாட்சி கல்லூரியாக (autonomouse college )ஆக வளர்ந்திருக்கும் scott christian  college - அன்று  ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்தவரும் ,1828 ல் நெய்யூரை தலைமையிடமாககொண்டு செயல் பட்ட நெய்யூர் மருத்துவமனையை நிறுவியவருமான  மேலே குறிப்பிட்ட சார்லஸ் மீட் ஐயர்  அவர்கள் 1830 ல் கிறிஸ்தவ நற்செய்தியை தெரிவிக்கும் படி கொற்றவையை  வழிபட்ட மக்கள் வாழ்ந்த கொற்றிகோட்டிற்கு  வந்தார் . அவர் அவர்களிடம் கிறிஸ்தவத்தை போதித்து திருத்தொண்டாற்றினார் அவரது போதனையால் தங்கள் குல வழிபாட்டை விட்டு ,இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட மக்கள் , தங்கள் குல தெய்வ சிலையையும் , வஸ்திரங்களையும் ,பூததடிகளையும் , கிலுக்குமணியையும்  சார்லஸ் மீட்  அவர்களிடம் ஒப்படைத்தனர் .

                          அவைகளை பெற்று கொண்ட மீட் ஐயர் அவர்கள் , அவற்றை லண்டனில் உள்ள ஆஸ்டின் பிரேயர்ஸ் என்ற  பொருட்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு   கொற்றவை தெய்வ வழிபாட்டிற்கு ஒரு கோடு போட்டு நிறுத்திவிட்டு கொற்றிகோடு குளத்திற்கும் பொட்டைகுழி குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சீனிவிளையில் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி , கிறிஸ்தவ சமயதொண்டும், அங்கு ஓர் பாடசாலையை கட்டி கல்வியறிவு புகட்டி , சமுதயதொண்டும் ஆற்றி அச்சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றார் . அவர் வைத்த" கொற்றவைகோடு" காலபழக்கத்தில் மருவி "கொற்றிகோடு " ஆக மாறியது . இவ்வாறாக கொற்றிகோடு பெயர் பிரபலமாகி இன்று  வெற்றிகள் பல குவிக்கும் கொற்றிகோடாக மாறி வெற்றிகள் குவித்துகொண்டிருக்கிறது .மீட் ஐயர் தன்  குறிப்பில் "KOTTICODE  IS THE HEAVEN OF SOUTH TRAVANCORE "என்று குறிப்பிட்டுள்ளபடி மேன்மை பெற்று திகழ்கிறது .

எழுதியவர் : உலக தமிழ் எழுத்தாளர் கொற்றை இ . ஞானதாஸ் (+919944373580
                          கொற்றிகோடு குமாரபுரம் அஞ்சல் 

பதிவு செய்தவர் : ஜே.டி .சிபி டேவிட 

N. Ganesan

unread,
Jun 26, 2016, 2:03:07 AM6/26/16
to மின்தமிழ்

On Saturday, June 25, 2016 at 10:58:55 PM UTC-7, N. Ganesan wrote:

On Saturday, June 25, 2016 at 8:42:39 AM UTC-7, singanenjan wrote:

குமரிக்கண்டம் -? (பாகம்-11 )

2.ஈ .சிலம்பில் கடல்கோள்

குமரிக்கோடு என்பதற்கு “இமயமலை போன்ற பெரிய மலை என பாவாணர் பொருள் கொள்கிறார். இது சரியா என சிந்திக்க வேண்டும்.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பதறிவு”

திருச்செங்கோடு தவிர வேறு எந்த மலையாவது “கோடு” என்று முடிகிறதா என அண்மையில் முகநூலில் அன்பர்களைக் கேட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் கொல்லங்கோடு, விளவங்கோடு, குருந்தக்கோடு, கோழிக்கோடு என ஏகப்பட்ட பதில்களை எழுதியிருந்தார்கள். எதுவுமே மலை இல்லை. எல்லாமே நீர்க் கரையில் அமைதுள்ளன.  நண்பர் உதயன் எழுதியிருந்த சேரங்கோடு மட்டுமே, வயநாடு பகுதியில் வழித்திரிக்குக் கிழக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ளது.. மணவாளக்குறிச்சி- முட்டம் பகுதிகளில் பணியாற்றும் போது, குமரி மாவட்டத்தில் , குமரிக்கு வடமேற்கே உள்ள தமிழகப் பகுதியில் எத்தனையோ கிராமங்கள் “கோடு” எனும் பெயரில்  முடிந்ததைக் கண்டேன்.  எங்கும் மலையில்லை. நீரோடைகள் அல்லது நீர்நிலைகள் இருந்தன. நீங்களும் கூகுள் எர்த் இல் பார்க்கலாம்.

நீர்க்கரைக்கு கோடு என்னும் பெயரை வேறுமுறையில் எழுத 4-5 ஆம் நூற்றாண்டில் முயற்சி செய்தனர். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். வட்டெழுத்து தொடக்க காலம்.
காசரகோடு (காஞ்சிரங்கோடு) அருகே கிடைத்த கல்வெட்டு.

செங்கோடு, சேரங்கோடு, காஞ்சிரங்கோடு போல மலைக்கு -கோடு என்ற பெயரில் கொற்றிகோடு உள்ளது. கன்யாகுமரிக்கு மிக அருகே.
கொற்றவை (கன்யாகுமரி) கொற்றி என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறாள். அதன் அருகே வேளிமலை உள்ளது. பிரசித்தமான முருகன் தலம் வேளிமலை.
வேள் - வேளி எனவாகும்.  கொற்றி = குமரி (கன்யா குமரி), எனவே தன் தமிழ்தேசிய நாவலில் இளங்கோ அடிகள் கொற்றிகோடு, சற்றுமாற்றி குமரிக்கோடு என்றால்.
கோற்றிகோடு மலையே கடல் சுனாமியின் போது மூழ்கியது என்கிறார். காலப்போக்கில் இக் கதை விசுவரூபம் எடுத்து, குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம்
என வளர்ந்துவிட்டது. 

இக்கதைகளுக்கான அடிப்படையை இலக்கிய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. சமணர்களின் கொடையை மறைக்க அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார்
என்றும், முதல், இடை, கடை சங்கங்கள் என்றும் சைவர்கள் “இறையனார் அகப்பொருள்” நூலிலும், உரையிலும் கதைகள் கட்டினர். 

நா. கணேசன்
 
கொற்றிகோடு

 ‘என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .’

கொற்றிகோடு - பன்மலை அடுக்கம்:

Local News In Kotticode!

Sunday, January 30, 2011
கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்
       முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள்  முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடி பல இலக்கிய சுவை கூறும் குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் நாகர்கோயில் நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியிலிருந்து  பிரிந்து மார்த்தாண்டவர்மா மன்னரால் 17 ஆம் நூற்றாண்டில்  நட்டாலத்து நீலகண்டபிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையின் மேற்பார்வையில் கட்டப்பட்ட வரலாற்று புகழ் கூறும் பத்மனபாபுரம் கோட்டை வாசலை முத்தமிட்டு செல்லும் குலசேகரம் சாலையில் , குமாரபுரம்  சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலை இடத்திலிருந்து பிரிந்து சிலப்பதிகாரம் காப்பிய புகழ் கூறும் பெருஞ்சிலம்பு  செல்லும் பாதையில் இரு பக்கமும் அமைந்திருக்கும் ஊர்தான் கொற்றிகோடு. இவ்வூர் மக்கள் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி வாழ்கிறார்கள் . எனவே இவ்வூர் இன்று பெருஞ்சிலம்பு வரை பரவி விரிந்துள்ளது .

 வேளிமலை தோற்றம் 

இயற்கை அன்னை எழில் நடனமிடும் இக்குமரிமாவடத்தின்  மையபகுதியில்  மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து , வானுயர மப்புடன் உயர்ந்து நின்று இளம்தென்றல் வீசி வரும் சுகம் கொடுக்கும் எழில் மிகு பசும்சோலைகளையும் கொண்டு ,முக்கனியும் ,தேங்கனியும் முதிர்ந்து , பணப்பயிரும்,மணபயிரும், குணப்யிரும் வாரிவழங்கி இம்மாவட்டத்தின் ஜீவாதாரமாக அமைந்திருப்பதும் , தமிழர்களின் தனித்தெய்வமான எழில்மிகு திருமுருகன்  தன் இதயம் கவர்ந்த கன்னி ,அன்று தினைப்புலம் காத்த வள்ளியை  தேடிவந்து திருவிளையாடல் நடத்திய இடமும் , தக்கராஜன் வேள்வி வளர்த்த இடமாகையால் இம்மலைக்கு வேளிமலை என்று வரலாறு கூறுவதுமான வேளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இவ்வூரார் வேளிமலையிலிருந்து உதித்து வரும்உதயசூரியனை காலையில் கிழக்கு திசையில் கண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் வேளிமலை முகட்டிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டத்தில்  விளைந்தோடி வளபடுத்தும் ஆறுகளில் ஒன்றான கயலைகள் துள்ளி ஓடும் வள்ளி ஆறு இவ்வூரின் தெற்கு எல்லையிலும் , இன்னொன்றான தட்சணகோதையாறு என்ற சடையாறு இதன் வடக்கு எல்லையிலும் வளைந்தோடியும், பேச்சிபாறை  பெருஞ்சாணி அணைகளின் நீரைசுமர்ந்து வரும் பத்மனபாபுரம் புத்தனாறு என்ற வெட்டாறு  இதன் தென்மேற்கு  எல்லையில் விளைந்தோடி வளபடுத்தியும், இதன் 3 திசைகளிலும் விளைந்தோடி அரண்போல் அமைந்த பத்மனபாபுரம் புத்தனாறை கடந்து செல்ல குமாரபுரம் அம்மன்கோயில் பக்கமுள்ள பாலம் மட்டும் இதன் முக்கிய கணவாய் போன்று அமைந்த ஓர் பாதுகவல் ஊர்தான் கொற்றிகோடு .

          இவ்வளவு பாதுகாவலும் செல்வசெழிப்பும்  கொண்டு குறிஞ்சியும் ,முல்லையும் , மருதமும் ,ஒருங்கே அமைந்த  இவ்வூரிலே ஒரே மொழி பேசும் ஒரே இனம்  குழுமி வாழ்ந்து கொண்டிருகிறது . இந்த இனம் தான்  நாட்டின் தலைமக்களான நாடன் இனம். நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரன் .சேரநாட்டை  மட்டுமின்றி இமயம் வரை இந்தியாவை ஆண்டதும் இவ்வினமே என்று இளம்பிள்ளை எழுதிய " பண்டைய கேரளம் " என்னும் நூலில் 198 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உயிரே போவதாய் இருந்தாலும்  கூட போர் நெறியிலிருந்து பின்வாங்கவோ , முன் வைத்தகாலை பின் வைக்கவோ , புறமுதுகிடவோ  மாட்டார்கள் , இதற்கு சான்றாக விளங்கியதால் சான்றோர் எனப்பட்டனர் . சேரனின் போர்ப்படை வென்று(கிரேக்கம்  வென்று )" இமயத்தடக்கிய சேரன்" என்று சிலப்பதிகாரமும் , பின் நாகரீகத்தில் பிறந்தவன் நாடான் , அவன் கள்ளையும், பதநீரையும் ,பனம்பால்(அக்கானி) கொடுத்து வளர்க்கப்பட்டவன். சான்றோர்  இன நாடான் என அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது .
பழைய வரலாற்றுகளிலே . சங்க இலக்கியங்களிலே வெற்றிவேண்டி போர் தொடுத்து செல்லும் வேந்தர்கள் தங்கள் வெற்றிக்காய் கொற்றவை தெய்வத்தை(பத்திரகாளியை) வேண்டிகொண்டனர் . கொற்றவையை வெற்றிதேவதயாக வழிபட்டனர். தங்கள் நாடார் குலத்தை பனம்பால் கொடுத்து வளர்த்த கொற்றவையை இவ்வூர் மக்கள் தங்கள் குலதெய்வமாககொண்டு  வழிபட்டு அன்று வாழ்ந்திருந்தார்கள் . இத்தகவலை பெயர் தெரியாத ஒரு புலவர் எந்த நாளிலோ எழுதி வில்லுப்பட்டுகளில் பாடிவந்த பாடலான

                                         "கட்ட கட்ட உச்ச நேரம்"
                                           காளியம்மா வாற நேரம்
                                          பொட்டகுளத்து  இசக்கி யம்மை
                                          பொழுதடைய வாற நேரம்"

Singanenjam Sambandam

unread,
Jul 2, 2016, 8:20:16 AM7/2/16
to mint...@googlegroups.com

கோடு என்பதற்கு மலை  எனும் பொருளும் உண்டு என்று அன்பர்கள் எடுத்துக் கூறினர். 

சிலப்பதிகாரத்தில் காடுகாண்  காதைக்கு முன்பு, புகார் காண்டத்தில் இறுதியாக வரும் , நாடுகாண் காதையில் 35 ஆவது பாடல் இதோ.

 தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து.

‘கொழும் புனல் காவிரி  வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து”., என்பதற்கு நீர் நிறைந்த காவிரியாற்றின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து என்பதே பொருள். ஆதலின் கோடு எனும் சொல் இங்கே கரை எனும் பொருளில் வந்துள்ளது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Jul 2, 2016, 8:33:02 AM7/2/16
to mintamil

2016-07-02 17:50 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
‘கொழும் புனல் காவிரி  வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து”., என்பதற்கு நீர் நிறைந்த காவிரியாற்றின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து என்பதே பொருள். ஆதலின் கோடு எனும் சொல் இங்கே கரை எனும் பொருளில் வந்துள்ளது.

கோடு என்பதற்கு அடிப்படையில் 'வளைந்தது' என்று பொருள்.  'உள்ளமும் கோடிய கொடியான்' என்று கம்பன் கூனியைச் சொல்வான்.

வளைந்திருக்கின்ற காரணத்தால் யானைத் தந்தம், காட்டுப் பன்றிக் கொம்பு, பிறைநிலா, வளைந்திருக்கும் ஊதுகொம்பு, நீர்க்கரை என்று பல பொருள் உண்டு.  மலை என்பது அவற்றில் ஒன்று.  

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Singanenjam Sambandam

unread,
Jul 2, 2016, 8:45:12 AM7/2/16
to mint...@googlegroups.com
மிக்க நன்றிங்க....இவற்றை நான் என்  இழையிலும்   எடுத்துக் காட்டியுள்ளேன்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை, வாழ்வு இது “ எனச் சொல்லினாள் .. (மந்தரை சூழ்ச்சிப் படலம்)

--

Prakash Sugumaran

unread,
Jul 5, 2016, 3:19:25 PM7/5/16
to mintamil
கோடு - வரையறை (நேராகவோ, வளைந்து நெளிந்தோ) ; எல்லை;

லட்சுமணன் கோடு; லட்சுமணன் ரேகை; கை ரேகை; வாழ்வியல் வரையறை. 

நல்லிய கோடன், வல்லிய கோடன்; கோடியக் கரை; கோட்டான் கோட்டான் விளையாட்டு;

கோடி; இறுதியான (கடைக்கோடி, முப்பத்து முக்கோடி)

கோட்டும்; கோட்டம் - வளைந்த (நெகிழும் தன்மையுள்ள, பரந்து விரிந்த, நிரந்தர அளவீடு இல்லாத, மாறக்கூடிய)

கோட்டி - கையில் கோலுடன் வளைந்த.

கடை - சுழல விடுதல், உழைதல், உழைத்தல், உழுதல்.

கடைக்கோடி - உழன்றதில் இறுதி; கடைசி.

கடைசி - இறுதி எல்லை......................... ?

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Pandiyaraja

unread,
Jul 5, 2016, 11:23:37 PM7/5/16
to மின்தமிழ்
கோடு என்றால் இங்குக் கரைதான். ஆனால், அது ஆற்றுமட்டத்துக்குச் சற்று உயரமான சாதரணக் கரை அன்று.
இதன் உரையில் நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் என்று நாட்டாரவர்கள் கூறுகிறார்கள். எனவே இங்கே கோடு என்பது உயரமான மேடு என்றாகிறது.
ப.பாண்டியராஜா

Singanenjam Sambandam

unread,
Jul 8, 2016, 9:24:59 AM7/8/16
to mint...@googlegroups.com
அன்பின் பா.ரா. ஐயா அவர்களுக்கு வணக்கம் .

அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் என்று நாட்டாரவர்கள் கூறுகிறார்கள். எனவே இங்கே கோடு என்பது உயரமான மேடு என்றாகிறது.

அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் எனும் தொடரில் "உயரமான"  என்று பொருள் கொள்ளும்படி எந்த சொல் இருக்கிறது  என்று  என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அருள் கூர்ந்து தெளிவு  படுத்துமாறு  வேண்டுகிறேன். 

N. Ganesan

unread,
Jul 8, 2016, 9:31:37 AM7/8/16
to மின்தமிழ்

On Friday, July 8, 2016 at 6:24:59 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் பா.ரா. ஐயா அவர்களுக்கு வணக்கம் .

அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் என்று நாட்டாரவர்கள் கூறுகிறார்கள். எனவே இங்கே கோடு என்பது உயரமான மேடு என்றாகிறது.

அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் என்னலுமாம் எனும் தொடரில் "உயரமான"  என்று பொருள் கொள்ளும்படி எந்த சொல் இருக்கிறது  என்று  என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அருள் கூர்ந்து தெளிவு  படுத்துமாறு  வேண்டுகிறேன். 

"குட திசைக் கொண்டுகொழும் புனல் காவிரி
வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து." சிலம்பு

குடதிசையிலே உள்ள - குடகு Coorg - பெரும் கோடு = பெரிய மலைகளில்
பெய்த மழைநீர் அம் மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குகளில்
பாய்ந்து காவிரி நதியாகிறது என்கிறார் இளங்கோவடிகள்.

வட பெரும்கோடு = குடகு நாட்டு பெரிய மலைகள்.

Singanenjam Sambandam

unread,
Jul 8, 2016, 11:41:02 AM7/8/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு  வணக்கம்.

தங்கள் கற்பனை  நன்றாகத்தான் உள்ளது. 

இந்தப் பாடல் 'நகர் காண் காதையில் வருவது. 

கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர்  நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்.    இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு  பொருள் கொண்டால்  அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும். பாடலை முழுமையாகப் பார்த்து விட்டு,  பின் பொருள் தெளிக. நன்றி 

N. Ganesan

unread,
Jul 9, 2016, 12:11:16 AM7/9/16
to மின்தமிழ்

On Friday, July 8, 2016 at 8:41:02 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு  வணக்கம்.

தங்கள் கற்பனை  நன்றாகத்தான் உள்ளது. 

இந்தப் பாடல் 'நகர் காண் காதையில் வருவது. 

கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர்  நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்.    இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு  பொருள் கொண்டால்  அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும். பாடலை முழுமையாகப் பார்த்து விட்டு,  பின் பொருள் தெளிக. நன்றி 

நாடுகாண் காதையைப் படித்தேன். ஒரு பருந்துப் பார்வையாக  (bird's eye view) காவிரியின் பிறப்பில் இருந்து புகார் வரை கூறிச்செல்கிறார் என்றே தோன்றுகிறது.
குட மலையில் பிறப்பதை தனியாகவே சொல்கிறார். மலைவளம் பாராட்டுகிறார். உறையூர், சீரங்கம் எல்லாம் வண்ணிக்கிறார். 
கவுந்தி அடிகளின் சமணம் கர்நாடகத்திலும், கொங்கிலும் செழித்ததை அறிந்த இளங்கோ அடிகள். அவரது தலைநகர் வஞ்சி (கருவூர்)
காவிரிக் கரையில் நதிப் பிறப்பிடத்திற்கும், கடலில் கலக்கும் பூம்புகாருக்கும் நடுவே இருக்கிறது. 

கரையைக் கரை என்றே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. “ஆறைங் காதம்” என்பதும் நோக்கினால், காவிரி வடகரையில் வட பெருங்கோடு (மேற்குத் தொடர்ச்சி மலை) கண்டு
பின்னர் மதுரைக்கு நடந்தார்கள் எனக் கொள்ளலாம். புகாருக்கும், மதுரைக்கும் 30 காதம் (300 மைல்) இல்லையே.
 
அடியார்க்கு நல்லார் “தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது” என்னும் இடம் உண்டு. அதேபோல, இந்தக்
காதையிலும் வட பெருங் கோடு என்கிறார் அடிகள்.  இது காவிரி பாய்ந்து வரும் ஸஹ்யாத்ரி மலையோ என எண்ணவும் வேண்டியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட பெருங்கோடு இல்லையே.

N. Ganesan

unread,
Jul 9, 2016, 12:36:09 AM7/9/16
to மின்தமிழ்
நாடுகாண் காதையில் கரையைக் கரை என்றும், மலையைக் கோடு என்றும் குறிக்கிறாரா அடிகள்? ஆய்வுக்குரியது.

சிக்கலான தொடர்: வடபெருங்கோடு

குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)

காவிரி அருகே உள்ள செங்கோடு போன்ற ஊர்களைக் கண்டு பின் திருச்சி அடைந்தனர் என்பதர்கும் இடமுண்டு. “செந்திலும், செங்கோடும், ...” என்பார் பிறிதோர் இடத்தில்.
செங்கோடு போன்றவற்றை மலைநாட்டில் கண்டு பின் தென்கரை வழி மதுரைக்குப் புறப்பட்டனர்.

Singanenjam Sambandam

unread,
Jul 9, 2016, 2:03:01 AM7/9/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 
குட திசைக் கொண்டுகொழும் புனல் காவிரி
வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 
எனும் தொடருக்கு 
"குடதிசையிலே உள்ள - குடகு Coorg - பெரும் கோடு = பெரிய மலைகளில்
பெய்த மழைநீர் அம் மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குகளில்
பாய்ந்து காவிரி நதியாகிறது என்கிறார் இளங்கோவடிகள்.
வட பெரும்கோடு = குடகு நாட்டு பெரிய மலைகள்." என்று நீங்கள் அளித்துள்ள விளக்கம் முழுக்க முழுக்க தவறு.
இதற்கு 
'கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர்  நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்.    இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு  பொருள் கொண்டால்  அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும்.' என நான் கூறியதை ஏற்க தங்களுக்கு மனமில்லை போலும் . 
அதை விடுத்து கருவூர், மேற்குத் தொடர்ச்சி மலை என்றெல்லாம் தாங்கள் கதைத்திருப்பது , simply 'Beating Around the Bush. 
காவிரி டெல்டாவின் , கிழக்கு- மேற்கு   எல்லைகளுக்கிடையே  ஆற்றின் ஓரம் அமைந்துள்ள சோலைகள் -வயல்கள் பற்றி இளங்கோ அடிகள் வர்ணிப்பது 'நேர்முக வர்ணனை போல்  இருக்கிறது. இனிக்கிறது. மேற்கு மலை இங்கே எங்கே வந்தது ஐயா.
இங்கே வட பெருங்கோடு எந்த பொருளில் வருகிறது என்பதை அடியார்குநல்லார்  உரையால் அறிக. கோடு என்பதற்கு என்னென்ன பொருள் என்பதை அகராதியில் அறிக. நன்றி. 

எனும் தொடருக்கு,
குடதிசையிலே உள்ள - குடகு Coorg - பெரும் கோடு = பெரிய மலைகளில்
பெய்த மழைநீர் அம் மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குகளில்
பாய்ந்து காவிரி நதியாகிறது என்கிறார் இளங்கோவடிகள்.
வட பெரும்கோடு = குடகு நாட்டு பெரிய மலைகள். என்று தாங்கள் அளித்த விளக்கம் சரியல்ல,
'கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர்  நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்,என நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள தங்களுக்கு மனமில்லை  போலும். பரவாயில்லை. தவறை ஒத்துக் கொள்ள  தைரியம் வேண்டும்.

காவேரி கழிமுகத்தின் (DELTA) கிழக்கு எல்லையிலிருந்து (பூம்புகார்) மேற்கு எல்லை வரை (திருவரங்கம்) கண்ட சோலைக் காட்சிகளையும் வயல்  காட்சிகளையும் இளங்கோ அடிகள் வர்ணிக்கும் அழகு 'நேர்முக வர்ணனை' கேட்பது போல் உள்ளது.அத்தனை அழகு. இதையெல்லாம் விடுத்து தாங்கள் கருவூர், TRI

நாடுகாண் காதையைப் படித்தேன். ஒரு பருந்துப் பார்வையாக  (bird's eye view) காவிரியின் பிறப்பில் இருந்து புகார் வரை கூறிச்செல்கிறார் என்றே தோன்றுகிறது.

N. Ganesan

unread,
Jul 9, 2016, 2:16:16 AM7/9/16
to மின்தமிழ்

On Friday, July 8, 2016 at 11:03:01 PM UTC-7, singanenjan wrote:

வட பெரும்கோடு = குடகு நாட்டு பெரிய மலைகள்." என்று நீங்கள் அளித்துள்ள விளக்கம் முழுக்க முழுக்க தவறு.

தெரியவில்லை ஐயா.
 
இதற்கு 
'கோவலனும் கண்ணகியும் இல்லம் நீங்கி, புகார் நகர்  நீங்கி , ஊருக்கு வெளியே வந்து " மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்.    இடம் பொருள் நோக்காமல் அவரவர் தனக்குத் தோன்றியவாறு  பொருள் கொண்டால்  அர்த்தம் -அனர்த்தம் ஆகி விடும்.' என நான் கூறியதை ஏற்க தங்களுக்கு மனமில்லை போலும் . 

வடபெரும்கோடு, வடபெரும்கல் (=மலை) ஒரு stock phrase என்பதாக தெரிகிறது.

குட திசைக் கொண்டுகொழும் புனல் காவிரி
வட பெரும்கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 
 
உங்கள் உரை:
" மேற்கு  நோக்கி,  காவிரியின் வட கரையிலுள்ள சோலைகளில் நுழைந்து "   என்பதே இங்கு பொருள்.

இதில் வடபெரும்கோடு என்பதற்கான விளக்கமே காணோம். ஏன் வடபெருங்கோடு? இதே போன்ற
stock phrases - வடபெரும் கல், வடபெரும் கோடு இவற்றையும் நீங்கள் பார்க்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

Pandiyaraja

unread,
Jul 9, 2016, 3:07:30 AM7/9/16
to மின்தமிழ்
நன்றி.
காவிரி ஆறு - அதன் கரை - கரையை ஒட்டிச் சோலை
'சோலை தாழ்ந்திருத்தலின்' என்பதால் கரை உயர்ந்து இருக்கிறது என்றுதானே பொருள்.
குறைந்தது 10 அடி ஆழத்தில் ஓடும் ஆறு. இருபக்கங்களிலும் மணல் மேடான கரை. அதனை அடுத்துச் சரிவினில் சோலை.
இதை இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன் ஐயா!
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jul 9, 2016, 3:07:42 AM7/9/16
to மின்தமிழ்
நாடுகாண் காதையில் மூன்று இடங்களில் “கரை” என்கிறார் அடிகள்:

எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில்

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு,

தீது தீர் நியமத் தென் கரை எய்தி,

ஐயம்: ஏன் வட கரை (அ) வட பெரும் கரை எனச் சொல்லவில்லை?
வட பெரும் கோடு = வட கரை ஆனால், ஏன் தென் பெரும் கோடு = தென் கரை எனக் காணோம்?

ஆற்றுக்கு இரு கரையும் ஒன்று போலத்தானே இருக்கும்? ஏன் வட பெருங்கோடு, ஆனால் தென் கரை மட்டும்?

வடபெரும்கோடு - வடபெரும்கல் போன்ற Stock phrases பொருள் என்ன? உ-ம்: அடியார்க்கு நல்லார்,
 
குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)

வடபெருங்கோடு (சையமலை) என்பதன் மூலம் 3 நாட்டையும் (புகார் - சோழன், மதுரை - பாண்டியன், கரூர்-நாமக்கல் - சேரன்) நடந்து காண்பதாகக் குறிக்கிறாரா அடிகள்? மூன்று நாடும் நடந்து சென்றாள் என்பதன் மூலம் கண்ணகியின் படுதுயரைக் காட்டினார் என்க. வஞ்சி (கரூர்) - அடிகளின் தலைநகர்/ஊர்.

Singanenjam Sambandam

unread,
Jul 9, 2016, 3:21:02 AM7/9/16
to mint...@googlegroups.com
மிக்க நன்றி  பா.ரா. ஐயா, 

'மலை சரிவினில் சோலை'  ........எனின் கரை  செங்குத்தாக இல்லாமல் , குறைந்த கோணத்தில்  சரிவாக இருந்துள்ளது. மீண்டும்  நன்றி. 

ஓர் வேண்டுகோள் . நான் தங்களை என் ஆசிரியர்  போல்  கருதுகிறேன். ஆதலின் நீங்கள் என்னை விளிக்கையில் "ஐயா"  என்றெல்லாம்  போட வேண்டாம்.  

--

Pandiyaraja

unread,
Jul 9, 2016, 3:49:20 AM7/9/16
to மின்தமிழ்
ஐயா!
தங்களின் வயது கருதி அல்ல. தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தான் இந்த ஐயா! மிகப் பெரும் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்திருக்கும் தங்களை ஐயா என்று அழைப்பதுதானே முறை.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:02:35 AM7/9/16
to மின்தமிழ்

On Saturday, July 9, 2016 at 12:49:20 AM UTC-7, Pandiyaraja wrote:
ஐயா!
தங்களின் வயது கருதி அல்ல. தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தான் இந்த ஐயா! மிகப் பெரும் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்திருக்கும் தங்களை ஐயா என்று அழைப்பதுதானே முறை.
ப.பாண்டியராஜா

இந்தியக் கலைவரலாற்றை நிறுவிய கலாயோகி ஆனந்த குமாரசாமி முனைவர் சிங்கநெஞ்சன் போல ஒரு ஜியாலஸிஸ்ட் தான். திரு. சிங்கநெஞ்சன் போன்றோர்
தங்கள் அனுபவத்தோடு தமிழில் எழுதினால் விஞ்ஞானப் பார்வையுடன் தமிழ்வரலாறு தெரியும்.

குமரிக்கோடு என்று கொற்றிகோடு மலையைக் கற்பனையாக இளங்கோ அடிகள் குறிப்பிட்டதை வைத்து லெமூரியா என்றும், குமரிக்கண்டம் என்றும் ஆஸ்திரேலியா
வரை படம் போடுகிறார்கள்! மூன்று சங்க வரலாறுகள், அகத்தியர் தமிழ் இலக்கணம் தந்தார் போன்ற கதைகள் சைவர்கள் உருவாக்கியவை.

இப்பொழுது கொல்லன் வடிக்கும் வேல் ராக்கெட் என்பதும் பார்க்கிறேன். ராக்கெட் தொழிலில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தாச்சு.
மதுரையில் சுனாமி, கோயில் விமானம் மெட்டியோரைட், வடிவேல் என்றா ராக்கெட்ரி, .... - பெரியார் தமிழில் விஞ்ஞானம் இல்லை
என்பதன் பொருளை உணர்த்தி நிற்கிறது. சிங்கநெஞ்சன் ஐயா போன்றோர் நிறைய எழுதணும். ஏற்கெனவே, நண்பர் தியடோர் பாஸ்கரனின்
சகோதரர் ஜியாலஜிஸ்ட் குமரிக்கண்டம் வெறும் கதை என விளக்கிவிட்டார். சுமதி ராமசாமி இந்தக் கதை வளர்ந்த வரலாற்றை விளக்கிவிட்டார்.
எப்போதாவது சிங்கநெஞ்சன் ஐயா இந்த 2 நூல்களும் படித்தருள வேண்டும். அவரது பார்வையில் குமரிக்கண்டக் கதைகள் பற்றி ஒரு தனிநூல்
பிற்காலத்தில் பதிப்பாக வேணும் என்பது என் வேணவா.

நா. கணேசன்
 
Singanenjam Sambandam

unread,
Jul 9, 2016, 12:11:32 PM7/9/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு, வணக்கம். 

நீங்கள் சொல்வதை முழு மனதுடன் ஏற்கிறேன். திரு. ஜெயகரன் அவர்களின் நூலைப் பாத்துவிட்டு , அந்த நூலின் போக்கும் , தற்போது  நான்  எழுதி வரும் தொடரின் போக்கும் வேறு எனில் , முயற்சிப்போம். நல்லுரைகளுக்கு நன்றி.

Singanenjam Sambandam

unread,
Jul 9, 2016, 12:15:24 PM7/9/16
to mint...@googlegroups.com
அன்பின் பா.ரா. ஐயா அவர்களுக்கு , என் கீழ் பணி ஆற்றுவோருக்கு நான் ஐயா தான். 
உங்களைப் போன்ற சான்றோர்களுக்கு அல்ல.
 மேலும் நான் பணி ஓய்வு பெற்று பத்து மாதங்கள் ஆகப் போகின்றன.
சிங்க நெஞ்சன் என்றே அழையுங்கள் 

N. Ganesan

unread,
Jul 9, 2016, 12:45:30 PM7/9/16
to மின்தமிழ்

On Saturday, July 9, 2016 at 9:11:32 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ஐயா அவர்களுக்கு, வணக்கம். 

உங்களை விட வயதில் சிறியவன் நான். கணேசன் என்றே அழைத்தால் மகிழ்வேன்.

குழந்தைப் பருவத்தில் இருந்து தமிழ்ப் புலவர்களை, பேராசிரியர்களை பார்ப்பதும் பழகுவதும்
எனக்கு வாய்த்த பேறு. உங்கள் தமிழும், ஆய்வும் சிறப்பதாக.

அன்புடன்
நா. கணேசன்

sundararajan srinivasagam

unread,
Jul 10, 2016, 11:41:57 PM7/10/16
to mint...@googlegroups.com
dear sir
they call a mad person "kotti" in our village. may be his intelligence is not straight. it is "valaindhadhu"
kalingalrajan
Reply all
Reply to author
Forward
0 new messages