கொள்ள

82 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 8, 2016, 4:05:14 AM4/8/16
to mintamil, thiruppuvanam

கீழவளவு ஊரில்:

ஏம்மா, வீரமாகாளி கோயில் எங்கே இருக்கு?
சாமி, அது "கொள்ள தூரத்திலே" இருக்கு !

"கொள்ள" என்றால் என்ன ?

N. Ganesan

unread,
Apr 8, 2016, 4:34:17 AM4/8/16
to மின்தமிழ், kalair...@gmail.com
கொள்ளை தூரம் = வெகு தொலைவு.
கொள்ளை [ T. kolla.] Excess, abundance, copiousness, plenty; மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1, 5, 14). (MTL)

கொழி- பல பொருள்கள் உள்ளது. கொழித்தெடு/கொழித்தாய்தல் = to flush out/to garner/to glean/to winnow (grain, info, ...); கொழித்தலசு = to flush out (the toilet etc.,), .. 
குழ்-/கொழ்- வேர். கொழுகொழு, கொழுத்தல். to increase, to bubble, to circle (கொழித்தல் = குமிழ்த்தல்). 
கொழு = இரும்புக் கொழு கலப்பையில் மண்ணைக் குழைக்கும்/குழிக்கும், பின்னர் வித்திடல் காரணமாக. 

அது போல,
கொள்ளை என்பதற்கும் பல பொருள்கள். மிகுதிப் பொருளில் “கொள்ளைத்தொலையில இருக்கு”.

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Apr 8, 2016, 4:40:41 AM4/8/16
to mint...@googlegroups.com, Kalairajan Krishnan
கொள்ளை  என்பதற்கும் கொள்ள  என்பதற்கும் வெவ்வேறு பொருள் வருகிறது

ஆனாலும் கிராமத்து மக்கள்  பேச்சு வழக்காய்    கொள்ள  என்று  உபயோகிக்கிறார்கள்  கொள்ளையை

கொள்ளளவை விட  அதிகமான

தகுதிக்கு மீறிய  

அதிகமான  
விவரித்து  சொல்லவொண்ணாத  தூரம்

என்பதைக் குறிக்கவும்   பேச்ச்சு வழக்காக  கொள்ள தூரம் என்று  பேசுகிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 8, 2016, 8:02:34 AM4/8/16
to mintamil
ஐயா

கொள்ளை என்பது ஒருவகை நோயைக் குறிக்கவும் பயன்படுகிறது, கொள்ளைநோய்.

உனக்கென்ன கொள்ளையா வந்துச்சு? என்பது மக்கள் வழக்கு.

கொள்ளைநோய் என்னும் நோயினால் மக்கள் கொத்துகொத்தாக மடிந்தார்கள்.

பன்றிக்காய்ச்சல் ஒருவகைக் கொள்ளைநோயே..

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 8, 2016, 8:09:19 AM4/8/16
to mintamil
கொலை, கொள்ளை என்ற வழக்கும் மக்களிடையே உண்டு.

ஒருவரது விருப்பத்திற்கு மாறாக,

அவரது பொருளைக் கைக்கொண்டால் அது கொள்ளை.

அவரது உயிரைக் கைக்கொண்டால் அது கொலை.

N. Ganesan

unread,
Apr 8, 2016, 10:21:48 AM4/8/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai

On Friday, April 8, 2016 at 1:05:14 AM UTC-7, kalai wrote:

கீழவளவு ஊரில்:

ஏம்மா, வீரமாகாளி கோயில் எங்கே இருக்கு?
சாமி, அது "கொள்ள தூரத்திலே" இருக்கு !

"கொள்ள" என்றால் என்ன ?

கொள்ளை தூரம் = வெகு தொலைவு.
கொள்ளை [ T. kolla.] Excess, abundance, copiousness, plenty; மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1, 5, 14). (MTL)

"கொள்ளத் தொலையில இருக்கு” - கோவை மாவட்டத்தில் கேட்பது. கொள்ளைத் தொலைவில் இருக்கிறது.

தமிழ் மொழியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, ஏராளமான வட்டார வழக்குகள் உள்ளன. கொள்ளை தூரம் என்றால் நீண்ட தூரம் என்று ஒரு அர்த்தம் உள்ளது. கண்மாய் என்ற சொல்லுக்கு ஏரி என்றும் பொருள் வருகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டார வழக்குகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழில் எந்தவொரு வார்த்தைக்கும் முழுமையான அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியும்.அதற்கு வட்டார தமிழ்களுக்கு அகராதி வேண்டும் என்றார் மொழிபெயர்ப்பாளர் நா.குறிஞ்சிவேலன்.
----------------------------

இருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர்? நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள். Read more: http://www.unavuulagam.in/2011/01/blog-post_27.html

---------------------

நமக்கும் இங்கிலிபீஸ் பாட்டுக்கும் கொள்ளை தூரம்...ஆனாலும் அப்பப்ப சில பாட்டு மனசுல தச்சிரும்...அந்த வகையில இந்த பாட்டும்...

இதை நினைவுபடுத்தற மாதிரி தமிழ்பாட்டு யாராவது சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்....
இங்கிலீஸ் பாட்டு:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 8, 2016, 12:30:52 PM4/8/16
to thiruppuvanam, mintamil

கொள்ளை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 8, 2016, 12:33:44 PM4/8/16
to thiruppuvanam, mintamil

ஒன்று பத்து நூறு ஆயிரம் என்பது போல் "கொள்ளை" என்பது ஒரு அளவா?

Tthamizth Tthenee

unread,
Apr 8, 2016, 12:58:29 PM4/8/16
to mint...@googlegroups.com, thiruppuvanam
கொள்ளை  என்றாலே  அளவில்லாதது  என்பது பொருத்தமானது

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

On Fri, Apr 8, 2016 at 10:03 PM, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

ஒன்று பத்து நூறு ஆயிரம் என்பது போல் "கொள்ளை" என்பது ஒரு அளவா?

--

Oru Arizonan

unread,
Apr 8, 2016, 3:51:18 PM4/8/16
to mintamil
"கொள்ளை தூரம்" என்பதையே கொங்குநாட்டுப் பகுதியில் "எச்"சான  தூரம் என்று சொல்வார்கள்.  கொங்குநாட்டில் இந்த 'எச்'சென்ற  சொல் எப்படிவந்தது என்று தெரிவித்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஒரு அரிசோனன் 

Raju Saravanan

unread,
Apr 9, 2016, 12:46:06 AM4/9/16
to mint...@googlegroups.com
எக்கச்சக்கம் என்பது எச்சான என மருவியிருக்கும் என நினைக்கிறேன்.

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 9, 2016, 12:53:58 AM4/9/16
to mintamil
எஞ்சி இருப்பது எச்சமாம்.

உண்டதுபோக எஞ்சி இருப்பது, ஒருபைக்குள் அடைத்தது போக எஞ்சி இருப்பது, கொடுத்தது போக எஞ்சி இருப்பது என்பதைப் போல.......

இதையே ஆங்கிலத்தில் extra என்று சொல்கிறார்கள்.

அவ்வழியில், நடக்க நடக்க அடையமாட்டாமல் எஞ்சி இருப்பதைப் போன்ற தூரம் எச்சான தூரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 9, 2016, 1:01:08 AM4/9/16
to mintamil
காளைராசன் ஐயா

அது கொள்ள தூரம் அல்ல கொள்ளா தூரம்.

கொள்ளுதல் = அடைதல், பெறுதல்.

கொள்ளா தூரம் = அடைய முடியாத அளவிலான தூரம்.

கொள்ளா தூரம் என்பதையே பேச்சுவழக்கில் கொள்ள தூரம் என்று கூறுகிறார்கள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 9, 2016, 1:55:31 AM4/9/16
to mintamil

வணக்கம்.

On 09-Apr-2016 10:31 am, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
> காளைராசன் ஐயா
>
> அது கொள்ள தூரம் அல்ல கொள்ளா தூரம்.
>
> கொள்ளுதல் = அடைதல், பெறுதல்.
>
> கொள்ளா தூரம் = அடைய முடியாத அளவிலான தூரம்.
>
>

விளக்கம் அருமையாக, பொருளொடு தொடர்புடையதாக உள்ளது.
நன்றி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 9, 2016, 2:12:11 AM4/9/16
to mintamil

2016-04-09 11:25 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

விளக்கம் அருமையாக, பொருளொடு தொடர்புடையதாக உள்ளது.
நன்றி.

நன்றி காளைராசன் ஐயா.

N. Ganesan

unread,
Apr 9, 2016, 1:07:04 PM4/9/16
to மின்தமிழ்

On Friday, April 8, 2016 at 9:33:44 AM UTC-7, kalai wrote:

ஒன்று பத்து நூறு ஆயிரம் என்பது போல் "கொள்ளை" என்பது ஒரு அளவா?

இல்லை. மிகுதி, அதிகமான என்ற பொருள் கொள்ளை.
கொள்ளை தூரம்/தொலைவு = அதிகமான தூரம்.

நா. கணேசன் 

தேமொழி

unread,
May 13, 2016, 4:07:58 PM5/13/16
to மின்தமிழ்
பார்க்க:   http://sangacholai.in/Essays-5.1.html 

   1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்

9. கொள்ள மீன் பிடிச்சேன் 

	நீர் வற்றிக் கண்மாய் அழியும் நேரத்தில் சகதியை அளைந்து மீன் பிடிப்பர். அப்போது மடி கொள்ளா அளவுக்கு மீன் பிடித்தோர், 
“இன்னக்கிக் கொள்ள மீன் பிடிச்சேன்” என்பார்கள். ஒரு பொருள் மிகுதியாக இருப்பின் அதனைக் கொள்ளை என்கிறது சங்க வழக்காறு.

	கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ - நற் 175/2
	வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட். 26
	கோடு கடைந்தன்ன கொள்ளை வான்பூ – அகம் 331/2

	என்ற தொடர்களில் காணப்படும் கொள்ளை என்ற சொல் மிகுதியான, மிகுதி என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு இன்றைக்கும் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் காணப்படுவது தமிழின் இளமையைப் பறைசாற்றி நிற்கின்றதல்லவா!
 
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
May 13, 2016, 7:30:14 PM5/13/16
to மின்தமிழ், vallamai
அருமையான காட்டுகள் தந்துள்ளார் பேரா. பாண்டியராசா. MTL செவ்வைச்சூடுவார் பாகவதத்தினின்றும் காட்டுத் தந்துள்ளது. சங்க இலக்கியச் சான்றுகள் அதற்கும் பழமையானவை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 13, 2016, 8:25:36 PM5/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Friday, May 13, 2016 at 1:07:58 PM UTC-7, தேமொழி wrote:

பார்க்க:   http://sangacholai.in/Essays-5.1.html 

   1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்

9. கொள்ள மீன் பிடிச்சேன் 

	நீர் வற்றிக் கண்மாய் அழியும் நேரத்தில் சகதியை அளைந்து மீன் பிடிப்பர். அப்போது மடி கொள்ளா அளவுக்கு மீன் பிடித்தோர், 
“இன்னக்கிக் கொள்ள மீன் பிடிச்சேன்” என்பார்கள். ஒரு பொருள் மிகுதியாக இருப்பின் அதனைக் கொள்ளை என்கிறது சங்க வழக்காறு.

	கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ - நற் 175/2
	வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட். 26
	கோடு கடைந்தன்ன கொள்ளை வான்பூ – அகம் 331/2

	என்ற தொடர்களில் காணப்படும் கொள்ளை என்ற சொல் மிகுதியான, மிகுதி என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 
இந்த வழக்கு இன்றைக்கும் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் காணப்படுவது தமிழின் இளமையைப் பறைசாற்றி நிற்கின்றதல்லவா!
 
ப.பாண்டியராஜா

குருதி யாடிய புலவு 3நா றிருஞ்சிறை
10.எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து
செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்
 
இங்கே ‘பச்சூன் கொள்ளை சாற்றி’ = ’பச்சை ஊன் கறியின் மிகுதியைக் காட்டி’

ஆனால், இன்னொரு பொருளும் கொள்ளைசாற்றுதலுக்கு இருக்கிறது:
கொள்ளைசாற்றுதல் = விலைகூறல். கொள்ளை = கொள்ளும்விலை. ”கொள்வோம், கொடுப்போம்”. 

‘தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும்’

(அகம், 183 : 1-5)

(தம்நாடு - உமணருடைய நாடு. பிறநாடு - (இங்கு) நெய்தல் நிலம். கொள்ளை சாற்றி - விலை கூறி. ஒழுகை - வண்டி. அவண் - அங்கே. ஒக்கல் - சுற்றம்.)

உமணர் உப்பு வண்டிகளை ஒட்டிக் கொண்டு கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள்.

‘உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண்புலம் படரும்
ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கை’

(அகம், 390 : 1-4)

“சில்பத உணவின் கொள்ளை சாற்றி, பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி” - சிறுபாண்

“வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி 
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்” (நற்றிணை .4: 7-8)
Reply all
Reply to author
Forward
0 new messages