தமிழ் வளர்த்த சிவனடியார்கள் தொடர்ச்சி! தாயுமானவர்!

104 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Nov 16, 2011, 7:32:35 PM11/16/11
to மின்தமிழ்

தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார்.  வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்.  ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது.  அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம்.  திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார்.  கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள் எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார்.  கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும் கவனித்துக்கொண்டார்.  இத்தனை திறமை வாய்ந்த அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.

கேடிலியப்ப பிள்ளையைத் திருச்சிக்கு வந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார். கோயிலின் நிர்வாகத்தைத் தக்க நபரிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். கேடிலியப்ப பிள்ளைக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.   கோயிலைத் தக்க மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  கேடிலியப்ப பிள்ளைக்கும் அவர் மனைவியான கெஜவல்லி அம்மைக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான்.  ஆனால் கேடிலியப்ப பிள்ளையவர்களின் அண்ணாவான வேதாரண்யம் பிள்ளைக்கு மகப்பேறு வாய்க்காததால் சிவசிதம்பரம் என்னும் பெயர் கொண்ட தம் மகனைத் தம் அண்ணனுக்கே முழு மனதோடு சுவீகாரம் செய்து கொடுத்திருந்தார் கேடிலியப்ப பிள்ளை.  பின்னரே திருச்சிக்கு மனைவியோடு வந்தார்.

அங்கே மலைக்கோட்டையில் வீற்றிருந்த தாயுமானவரைத் தினம் தினம் தரிசனம் செய்து வந்தார்.  அவர் மனைவியும் அவருடன் செல்வார். ஈசன் தாயுமானவராகச் செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயும் ஆன கதையை நினைந்து நினைந்து மனம் நெகிழ்வார். ஏற்கெனவே பிறந்த பிள்ளையை அண்ணனுக்குக்கொடுத்துவிட்டதால் தனக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் முழு மனதோடு வேண்டினார்.  சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். தாயுமானவர் அருளால் பிறந்த அந்தப்பிள்ளைக்குத் தாயுமானவர் என்ற பெயரையே பெற்றோர் சூட்டினார்கள்.  குழந்தை பிறந்த உடனேயே அதன் அங்க அடையாளங்களில் நிறைநிலைகள் பல தென்பட்டன.  அதோடு குழந்தை ஒரு ஞானியாக, யோகியாக பர நாட்டத்தில் மேன்மை அடைவான் என ஜோதிடரும் கணித்துச் சொல்லவே பெற்றோர் மனம் மகிழ்ந்தனர். குழந்தைக்கு வயது ஐந்து ஆயிற்று.  பெற்றோர்கள் குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணி வைத்தார்கள்.
 
திருச்சியில் சிறப்பான பாடசாலை ஒன்றில் கல்வி கற்றார் தாயுமானவர். தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் தாயுமானவர் நிபுணராக விளங்கினார். சைவத்தில் அதிகம் ஈடுபாடுடன் தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், அருணகிரியாருடைய திருப்புகழ் போன்றவற்றையும் நன்கு கற்று வந்தார்.  தினம் மலைக்கோட்டையில் மலை ஏறித் தாயுமானவன் ஆன  சிவனைத் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் திருவானைக்கா சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதைத் தன் நித்திய கர்மமாக வைத்திருந்தார் தாயுமானவர்.  ஒருநாள் மலைக்கோட்டை தரிசனம் முடிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தவரை வழியில் ஒரு முனிவர் கண்டார்.  அவரைப் பாரத்ததுமே உடலும், உள்ளமும் அவர் பால் ஈர்த்தது தாயுமானவருக்கு.  அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார். அதிகம் பேசாமல் மெளனமாக இருந்ததால் மெளன குரு என அழைக்கப்பட்டு வந்தார் அந்த முனிவர்.  அவருடைய வாயினின்று எப்போதேனும் அபூர்வமாகவே சொற்கள் வெளிவரும்.  மேலும் அவர் திருமூலர் மரபில் வந்தவராகவும் கூறுகின்றனர்.  அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது.  தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.
 
Geetha Sambasivam

unread,
Nov 16, 2011, 7:34:31 PM11/16/11
to மின்தமிழ்
வள்ளலார் சரித்திரத்தோடு முடிந்த இந்த இழையின் கடைசிப் பகுதிப் பலமுறை குழுமத்துக்குள் சென்று தேடியும்  கிடைக்கவில்லை.  ஆகவே தனியாக இழை ஆரம்பித்துள்ளேன்.  தொந்திரவுக்கு மன்னிக்கவும்.

2011/11/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 17, 2011, 12:57:54 AM11/17/11
to mint...@googlegroups.com
தொந்திரவா! தாயுமான இழையல்லவோ! அருமையாக அமைந்துள்ளது கேடிலியப்ப பிள்ளை கீர்த்தியும், மெளனகுரு பற்றிய தகவலும்.
நன்றி,

2011/11/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>
வள்ளலார் சரித்திரத்தோடு முடிந்த இந்த இழையின் கடைசிப் பகுதிப் பலமுறை குழுமத்துக்குள் சென்று தேடியும்  கிடைக்கவில்லை.  ஆகவே தனியாக இழை ஆரம்பித்துள்ளேன்.  தொந்திரவுக்கு மன்னிக்கவும்.

2011/11/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கூறுகின்றனர்.  அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது.  தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Nov 17, 2011, 3:09:09 AM11/17/11
to மின்தமிழ்

On Nov 16, 6:34 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> வள்ளலார் சரித்திரத்தோடு முடிந்த இந்த இழையின் கடைசிப்
> பகுதிப் பலமுறை குழுமத்துக்குள் சென்று தேடியும்  கிடைக்கவில்லை.  ஆகவே தனியாக
> இழை ஆரம்பித்துள்ளேன்.  தொந்திரவுக்கு மன்னிக்கவும்.
>

இந்த மடலா? என பாருங்க:
http://groups.google.com/group/mintamil/msg/dbc7a826eaf9f4d6

உங்கள் இழை:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/aa9f56fc61c9a052?scoring=d&

------------

முத்துவாழி அம்மன் - முத்துவாளி அம்மன் என்றிருக்க வேண்டும் எனக்
கருதுகிறேன்.

தொ.மு.பா. தொண்டமான் நினைவுமலர்க் கட்டுரை முழுக்க
நேரம் கிடைக்கிறபோது தட்டச்சுகிறேன் என்றீர்கள். முழுக் கட்டுரையும்
- தொமுசி பற்றியது - கிடைக்குமா? நன்றி.

அன்புடன்
நா. கணேசன்

Geetha Sambasivam

unread,
Nov 17, 2011, 9:00:25 AM11/17/11
to mint...@googlegroups.com
தொ.மு.பா. தொண்டமான் நினைவுமலர்க் கட்டுரை முழுக்க
நேரம் கிடைக்கிறபோது தட்டச்சுகிறேன் என்றீர்கள். முழுக் கட்டுரையும்
- தொமுசி பற்றியது - கிடைக்குமா? நன்றி//
 
மன்னிக்கவேண்டும்.  சென்னையில் இருந்தப்போ வீடு விஷயமாக அலைச்சல்; பிரச்னைகள். இங்கே புத்தகம் கொண்டுவரமுடியவில்லை.  எடை கருதி பல புத்தகங்கள், பல பொருட்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது.  அதிலே இந்தப் புத்தகமும் ஒன்று. இனி இந்தியா சென்றுதான்.  நன்றி சுட்டி கொடுத்தமைக்கு.  இரண்டாவது சுட்டி என்னிடம் உள்ளது.  எனினும் மீண்டும் நன்றி.

2011/11/17 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 17, 2011, 9:07:57 AM11/17/11
to மின்தமிழ்

On Nov 17, 8:00 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> தொ.மு.பா. தொண்டமான் நினைவுமலர்க் கட்டுரை முழுக்க
> நேரம் கிடைக்கிறபோது தட்டச்சுகிறேன் என்றீர்கள். முழுக் கட்டுரையும்
> - தொமுசி பற்றியது - கிடைக்குமா? நன்றி//
>
> மன்னிக்கவேண்டும்.  சென்னையில் இருந்தப்போ வீடு விஷயமாக அலைச்சல்; பிரச்னைகள்.
> இங்கே புத்தகம் கொண்டுவரமுடியவில்லை.  எடை கருதி பல புத்தகங்கள், பல
> பொருட்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது.  அதிலே இந்தப் புத்தகமும் ஒன்று. இனி
> இந்தியா சென்றுதான்.  நன்றி சுட்டி கொடுத்தமைக்கு.  இரண்டாவது சுட்டி என்னிடம்
> உள்ளது.  எனினும் மீண்டும் நன்றி.
>

தொமுபா மலர் கட்டுரை பிடிஎப் அனுப்பமுடியும். நேரம் கிடைக்கையில்.

நன்றி,
நா. கணேசன்

Message has been deleted

Subashini Tremmel

unread,
Nov 17, 2011, 9:26:50 AM11/17/11
to mint...@googlegroups.com
https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/aa9f56fc61c9a052/227904a955529512?lnk=raot&fwc=1&hl=en
தொடர் இங்கே உள்ளது. ஆனாலும் தாயுமானவர் என்ற தலைப்பில் தொடங்கியிருப்பதும் நன்று. அப்படியே தொடருங்கள். நன்றி.

சுபா

2011/11/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>
வள்ளலார் சரித்திரத்தோடு முடிந்த இந்த இழையின் கடைசிப் பகுதிப் பலமுறை குழுமத்துக்குள் சென்று தேடியும்  கிடைக்கவில்லை.  ஆகவே தனியாக இழை ஆரம்பித்துள்ளேன்.  தொந்திரவுக்கு மன்னிக்கவும்.

2011/11/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கூறுகின்றனர்.  அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது.  தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Geetha Sambasivam

unread,
Nov 27, 2011, 9:49:28 PM11/27/11
to மின்தமிழ்

rock fort.jpgகுருவால்  ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார். குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப் பிரிய நேரிட்டது.  பிரிந்திருக்கும் காலத்தில் மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர்.  குருவோ இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச் சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி, "சும்மா இரு"  எனும் மந்திர உபதேசம் செய்துவிட்டுச் சென்றார்.  அன்றிலிருந்து அதையே பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு நன்கு விளங்கும்.

இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல் இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள்.   தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர் மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.   இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி  கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார்.   ஆனால் குழந்தை பிறந்த சில காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார்.  தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும் ஏற்றுக் கொண்டனர்.   அத்தோடு ஆத்மசாதனைக்குத் தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.

tayumana swami tapovanam inner space.jpg

இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது.  அரசர் தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின் பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார்.  தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார்.   வெகு விரைவில் இதில்  திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற ஆரம்பித்தார்.  நாளடைவில் மன்னனும் மடிய அவன் மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள்.  ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது.  ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள்.  ஒருநாள் அரசாங்க வேலைகளைப் பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர்  அதைக் கசக்கித் தூர எறிந்தார்.  இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க,  அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார்.  இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.

உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு பெரிய மஹான் என்பது புரிந்தது.  தாயுமானவருக்கும் அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி என்றும், தீர்மானித்து விட்டார்.  உடனே அரசியிடம் தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும்,  தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார்.  வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின் தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது.  அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே திருச்சியில் வசித்து வந்தார்.   அவர் இருந்த உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும் நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார்.  தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப் பதிலளித்தார்.  இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர்,   யாத்திரையாகக் கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.  இவரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.

rock fort.jpg

rajam

unread,
Nov 27, 2011, 10:24:09 PM11/27/11
to mint...@googlegroups.com
கீதா, தாயுமானவர் ஏன் அந்தப் பனை ஓலையைக் கசக்கித் தூர எறிந்தார் என்பதைப் பற்றி ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா?
என் அம்மா சொல்லிக் கேள்விப்பட்ட ஒரு கதை: காவிரி ஆற்றில் வெள்ளம் வந்ததனால் ஒரு தாய் தன் பெண்ணின் பிரசவ நேரத்தில் அக்கரைக்குப் போக முடியாமல் தவித்த போது தாயுமானவர் அந்தத் தாய் வடிவில் போய் அந்தப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவினார் என்றும் அடுத்த நாள் வெள்ளம் வடிந்து தாய் மகளைப் பார்க்க வந்த போது அந்தச் செய்தி புலன் ஆனது என்றும். 
எங்கள் அம்மா குடும்பத்தில், பிரசவ காலங்களில் தாயுமானவரை வேண்டிக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிக்கு விபூதி இடுவது வழக்கம்.

On Nov 27, 2011, at 6:49 PM, Geetha Sambasivam wrote:

<rock fort.jpg>குருவால்  ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார். குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப் பிரிய நேரிட்டது.  பிரிந்திருக்கும் காலத்தில் மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர்.  குருவோ இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச் சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி, "சும்மா இரு"  எனும் மந்திர உபதேசம் செய்துவிட்டுச் சென்றார்.  அன்றிலிருந்து அதையே பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு நன்கு விளங்கும்.

இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல் இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள்.   தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர் மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.   இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி  கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார்.   ஆனால் குழந்தை பிறந்த சில காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார்.  தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும் ஏற்றுக் கொண்டனர்.   அத்தோடு ஆத்மசாதனைக்குத் தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.

<tayumana swami tapovanam inner space.jpg>

இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது.  அரசர் தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின் பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார்.  தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார்.   வெகு விரைவில் இதில்  திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற ஆரம்பித்தார்.  நாளடைவில் மன்னனும் மடிய அவன் மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள்.  ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது.  ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள்.  ஒருநாள் அரசாங்க வேலைகளைப் பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர்  அதைக் கசக்கித் தூர எறிந்தார்.  இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க,  அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார்.  இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.

உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு பெரிய மஹான் என்பது புரிந்தது.  தாயுமானவருக்கும் அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி என்றும், தீர்மானித்து விட்டார்.  உடனே அரசியிடம் தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும்,  தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார்.  வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின் தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது.  அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே திருச்சியில் வசித்து வந்தார்.   அவர் இருந்த உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும் நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார்.  தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப் பதிலளித்தார்.  இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர்,   யாத்திரையாகக் கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.  இவரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.

Innamburan Innamburan

unread,
Nov 28, 2011, 1:53:27 AM11/28/11
to mint...@googlegroups.com
எனக்கு இது வரை அறிய விரும்பியும், அதிகம் அறிந்து கொள்ளாத செய்திகள். நன்றி. 'மட்டுவார் குழலில்' அல்ல; 'மட்டுவார் குழலி' என்று ஞாபகம்.'மீகாமான் இல்லாத கப்பல்' பொருத்தமான உவமை. அந்த பனை ஓலை விஷயம் என்ன?
நன்றி, கீதா,
இன்னம்பூரான்

2011/11/28 rajam <ra...@earthlink.net>
கீதா, தாயுமானவர் ஏன் அந்தப் பனை ஓலையைக் கசக்கித் தூர எறிந்தார் என்பதைப் பற்றி ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா?...எங்கள் அம்மா குடும்பத்தில், பிரசவ காலங்களில் தாயுமானவரை வேண்டிக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிக்கு விபூதி இடுவது வழக்கம்.

Geetha Sambasivam

unread,
Nov 28, 2011, 10:57:22 AM11/28/11
to mint...@googlegroups.com
அம்மா,  

தாயுமானவர் ஞானதிருஷ்டி உடையவர்.  ஆகையால் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தீப ஆராதனை எடுக்கையில் அர்ச்சகர் செய்த சிறு தவறால் அம்மனின் புடைவையில் தீப்பற்றிக்கொண்டது தாயுமானவர் மனக்கண்ணால் பார்த்திருக்கிறார்.  இதிலிருந்து அவர் தன் அன்றாடக் கடமையான அரசுப்பணி செய்து வந்தாலும் உள்ளம் என்னவோ இறை விஷயங்களிலேயே ஒன்றி இருந்திருக்கிறது என்பது புரிகிறது.   உலக வாழ்க்கையில் ஈடுபட்டது போல் காட்சி அளித்தாலும் உள்ளூர ஆன்ம தரிசனத்தில் ஒன்றி இருந்திருக்கிறார். 

தாயுமானவ ஸ்வாமி செட்டிப் பெண்ணைக் காக்கத் தாயாக வந்த கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன் அம்மா.  எங்க குடும்பத்திலும் தாயுமானவருக்கு நேர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு.  இதே தஞ்சை மாவட்டங்களில் திருக்கருகாவூர், கர்பரக்ஷாம்பிகையின் எண்ணெய்ப் பிரசாதம்.  

2011/11/27 rajam <ra...@earthlink.net>
கீதா, தாயுமானவர் ஏன் அந்தப் பனை ஓலையைக் கசக்கித் தூர எறிந்தார் என்பதைப் பற்றி ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா?
என் அம்மா சொல்லிக் கேள்விப்பட்ட ஒரு கதை: காவிரி ஆற்றில் வெள்ளம் வந்ததனால் ஒரு தாய் தன் பெண்ணின் பிரசவ நேரத்தில் அக்கரைக்குப் போக முடியாமல் தவித்த போது தாயுமானவர் அந்தத் தாய் வடிவில் போய் அந்தப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவினார் என்றும் அடுத்த நாள் வெள்ளம் வடிந்து தாய் மகளைப் பார்க்க வந்த போது அந்தச் செய்தி புலன் ஆனது என்றும். 
எங்கள் அம்மா குடும்பத்தில், பிரசவ காலங்களில் தாயுமானவரை வேண்டிக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிக்கு விபூதி இடுவது வழக்கம்.

360.gif

Geetha Sambasivam

unread,
Nov 28, 2011, 10:58:13 AM11/28/11
to mint...@googlegroups.com
மன்னிக்கணும் ஐயா, மட்டுவார் குழலி தான்.  குழலில் என வந்திருப்பது தட்டச்சுப் பிழை.  கவனிக்கவில்லை.  

2011/11/28 Innamburan Innamburan <innam...@gmail.com>
எனக்கு இது வரை அறிய விரும்பியும், அதிகம் அறிந்து கொள்ளாத செய்திகள். நன்றி. 'மட்டுவார் குழலில்' அல்ல; 'மட்டுவார் குழலி' என்று ஞாபகம்.'மீகாமான் இல்லாத கப்பல்' பொருத்தமான உவமை. அந்த பனை ஓலை விஷயம் என்ன?
நன்றி, கீதா,
இன்னம்பூரான்

360.gif

rajam

unread,
Nov 28, 2011, 11:46:06 AM11/28/11
to mint...@googlegroups.com
நன்றி, கீதா!  

On Nov 28, 2011, at 7:57 AM, Geetha Sambasivam wrote:

அம்மா,  

தாயுமானவர் ஞானதிருஷ்டி உடையவர்.  ஆகையால் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தீப ஆராதனை எடுக்கையில் அர்ச்சகர் செய்த சிறு தவறால் அம்மனின் புடைவையில் தீப்பற்றிக்கொண்டது தாயுமானவர் மனக்கண்ணால் பார்த்திருக்கிறார்.  இதிலிருந்து அவர் தன் அன்றாடக் கடமையான அரசுப்பணி செய்து வந்தாலும் உள்ளம் என்னவோ இறை விஷயங்களிலேயே ஒன்றி இருந்திருக்கிறது என்பது புரிகிறது.   உலக வாழ்க்கையில் ஈடுபட்டது போல் காட்சி அளித்தாலும் உள்ளூர ஆன்ம தரிசனத்தில் ஒன்றி இருந்திருக்கிறார். 

தாயுமானவ ஸ்வாமி செட்டிப் பெண்ணைக் காக்கத் தாயாக வந்த கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன் அம்மா.  எங்க குடும்பத்திலும் தாயுமானவருக்கு நேர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு.  இதே தஞ்சை மாவட்டங்களில் திருக்கருகாவூர், கர்பரக்ஷாம்பிகையின் எண்ணெய்ப் பிரசாதம்.  <360.gif><360.gif>

2011/11/27 rajam <ra...@earthlink.net>
கீதா, தாயுமானவர் ஏன் அந்தப் பனை ஓலையைக் கசக்கித் தூர எறிந்தார் என்பதைப் பற்றி ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா?
என் அம்மா சொல்லிக் கேள்விப்பட்ட ஒரு கதை: காவிரி ஆற்றில் வெள்ளம் வந்ததனால் ஒரு தாய் தன் பெண்ணின் பிரசவ நேரத்தில் அக்கரைக்குப் போக முடியாமல் தவித்த போது தாயுமானவர் அந்தத் தாய் வடிவில் போய் அந்தப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவினார் என்றும் அடுத்த நாள் வெள்ளம் வடிந்து தாய் மகளைப் பார்க்க வந்த போது அந்தச் செய்தி புலன் ஆனது என்றும். 
எங்கள் அம்மா குடும்பத்தில், பிரசவ காலங்களில் தாயுமானவரை வேண்டிக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிக்கு விபூதி இடுவது வழக்கம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Nov 29, 2011, 2:16:14 AM11/29/11
to mint...@googlegroups.com, rajam
தாயுமானவர் திருசிராப்பள்ளி மலைக்கோவில் உறையும் பெருமானின் பெயர்.

அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானவர் 
கருவுயிர்க்க வருந்திய இரத்தினாவதியின் நிறைந்த அன்பிற்கிரங்கிப் பெருமானே தாயாக எழுந்தருளிப் பணிபல புரிந்து பாதுகாத்தார். ஆதலால் தாயுமானார் ஆயினார். - இது தலபுராணமாக கோயில் வரலாறு சொல்கிறது. 

தேவாரத் திருபாடல்களில் சம்பந்தர் (10 songs) இதைப்பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் அப்பர் பாடலில் தாயுமானுவர் பெயர் வந்தாலும் வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 
பொழிப்புரை :
தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்
குறிப்புரை :
தாயுமாய் - எனக்குத் தாயாகியும்; தலத்து இறைவர் திருப்பெயர். தலைகண்ணுமாய் - மேலான பற்றுக்கோடாயும். பேயனேனையும் - பேயினது தன்மை பொருந்திய என்னையும்; உம் இழிபு குறித்தது. தேயநாதன் - பலதேசங்களுக்கும் தலைவன். நாதனார் - அடியார் தலைவர். நாசம் - கெடும்.

தாய்மானவர் எனும் பெயருக்கு தேவாரம் ஒரே ஒரு பாடலில் பதில் சொல்கிறது. ஆனால் இங்கே அப்பர் சுவாமிக்கு இறைவன் தாயுமாகி நின்றதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஆனால் அன்னை பெயரில் அப்பர் சுவாமிகள் பாடல் பாடியுள்ளார்.
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.

நன்றி: தேவாரம் தளம். http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5085

அன்புடன்
திவாகர்

2011/11/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

rajam

unread,
Nov 29, 2011, 10:40:36 AM11/29/11
to mint...@googlegroups.com, Dhivakar V
தேவாரப் பாடல், தலபுராணக் குறிப்புகளுக்கு நன்றி, திவாகர்! யாருக்காவது குழப்பம் இருந்தாலும் ... சிவனைத் "தாயும் ஆனவன்" என்று அடியார்கள் பார்ப்பதும், பிற்காலத்துச் சிவனடியார் ஒருவர் "தாயுமானவர்" என்ற பெயரில் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகப் புரியும், இது நல்லது.
 
அன்புடன்,
ராஜம்

On Nov 28, 2011, at 11:16 PM, Dhivakar wrote:

Nov 29, 2011, 10:45:59 AM11/29/11
to mint...@googlegroups.com
அவர் அருளால் பிறந்ததாலேயே பிள்ளைக்குத் தாயுமானவன் என்ற பெயரைப் பெற்றோர்கள் வைத்தார்கள் அம்மா.

2011/11/29 rajam <ra...@earthlink.net>
தேவாரப் பாடல், தலபுராணக் குறிப்புகளுக்கு நன்றி, திவாகர்! யாருக்காவது குழப்பம் இருந்தாலும் ... சிவனைத் "தாயும் ஆனவன்" என்று அடியார்கள் பார்ப்பதும், பிற்காலத்துச் சிவனடியார் ஒருவர் "தாயுமானவர்" என்ற பெயரில் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகப் புரியும், இது நல்லது.
 
அன்புடன்,
ராஜம்

கி.காளைராசன்

unread,
Nov 30, 2011, 3:12:38 AM11/30/11
to mint...@googlegroups.com
வணக்கம்.

நல்ல 
மிக நல்ல
அடியாரவர்க்கு மிகநல்ல 
மெய்யடியாரவர்க்கு மிகநல்ல பதிவுகளை வழங்கிவருவதற்கு நன்றியுடையேன்.

எனது மகள் நீண்ட நாட்களாக திருச்சி சென்று தாயுமானசுவாமி கோயிலில் வழிபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டே 

இருந்தாள். மேற்கு நோக்கிய தெய்வங்கள் நோய் நீக்கும் ஆற்றல் உடையன.  அவற்றை திங்கள் சனிக்கிழமைகளில் 

வழிபடுவது சிறப்பு. எனவே நாளை போகலாம், திருநாளில் போகலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தோம்.  

ஒருவழியாக இறையருளால் நானும், எனது மனைவியும், எனது மகளும், பேரனுமாக. கர ஆண்டு ஐப்பசி 19ஆம் நாள் 

(05/11/2011) சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி தாயுமானவர் சந்நிதிக்குச் சென்று வழிபடும் பேறு கிடைக்கப்பெற்றோம்.  இந்த இழையின் தலைப்பு வேறாக உள்ளதால் எனது தாயுமானவர் வழிபாடு தொடர்பான விபரங்களைத் தனியிழையில் கொடுத்துள்ளேன்.

நன்றியுடன்

அன்பன்
கி.காளைராசன்

2011/11/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Reply all
Reply to author
Forward
0 new messages