சேலைகட்டிய மாதரும் வேட்டிகட்டிய தமிழனும்

67 views
Skip to first unread message

ஆடு பாம்பே படம் எடுத்து

unread,
Mar 23, 2013, 11:06:31 AM3/23/13
to mint...@googlegroups.com, vallamai




சேலைகட்டிய மாதரும் வேட்டிகட்டிய தமிழனும்

ஆள் பாதி ஆடைபாதி என்ற பழமொழிக்குமுன் பிறந்தநாள் உடையில் இருந்த தமிழனும் தமிழச்சியும் சரிநிகர் சமானமாகவே இருந்துள்ளனர்.  சங்கரதாஸ் நாடக சபா ராஜமாணிக்கம் கம்பெனி ஆர்.எஸ் மனோகர் நாடகம் போன்றவையும் தமிழ்த் திரையுலகும் தமிழனுக்கு வித விதமாகக் கலர் கலராக மேடையில் ஆடைகட்டி உலவவிட்டு பண்டைத் தமிழனிம் உண்மையான ஆடை எது என்றே தெரியாத குழப்பத்தில் விட்டுவிட்டனர்

படைப்பு வித்தையை எல்லா விலங்குகளுக்கும் சரியாக அமைத்த இயற்கை மனிதவிலங்குக்குமட்டும் தோலைத் தடிப்பாக அமைக்காமல் விட்டு அவன் பூமியின் வெட்ப தட்ப நிலைகளுக்கு ஈடுகட்ட ஆடைய அணியவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டான்.  தமிழன் வாழ்ந்த இடம் இளஞ்சூடு தொடங்கி இதமான குளிர் என்ற அளவில் இருந்ததால் குறைவான அளவு ஆடையே போதும் என்ற நிலையில் இருந்ததால் ஆடை பாதி போதும் என்ற அளவில் இருந்ததை ஜாவாவைச் சார்ந்த இந்த் ஆறாம் நூற்றாண்டுச் சிற்பம தெளிவுபடுத்தும்


வேட்டி கட்டிய தமிழனின் ஆடை அணிந்த வரலாறு தேடுவதற்கு சிக்கலாக இருந்தும் கிடைத்த முடிவு எளிதானதாகவே இருந்தது.  கி.பி 1 -ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாடு மட்டுமன்றிப் பிறநாட்டு ஆண்களுக்கும் ஆடை அணிந்து நாகரிகமாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தவன் தமிழன் கம்போடியா தாய்லாந்து இலங்கை என்று பலபகுதிகலிலும் ஆடை அணியக் கற்றுக்கொடுத்தவன் தமிழன்.  கோவனம் கட்டுவது என்று சொல்லிக்கொடுத்து ஆடைஉலகில் புரட்சி செய்தவன் தமிழன்


ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை அணிவதில் சிறிய வேறுபாட் என்பதைத் தவிர 15 -ஆம் நூற்றாண்டுவரை தமிழன் அரை ஆடை அணிந்தே வாழ்ந்தான்

18-ஆம் நூற்றாண்டளவில் ஆடை வளர்ந்ந்து பருத்தி வேட்டியாக  மாறியபோதும் மேல்பகுதி ஆடையால் மறைக்காமல் இருப்பதே நனி நாகரிகமாகக் கருதப்பட்டது

படிக்கப்படிக்க எழுத எழுத எனக்கு என்ன இப்படி நம் பழந்தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தபோது எம் குழுவினரான ஆசிரியர்கள் முழு ஆடையுடன் இருந்தார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது

பெண்களின் ஆடைபற்றிய தகவல் நிறைய உள்ளது எனினும் சேலைகட்டிய மாந்தர் பற்றிய தகவல் எழுத நிறைய நேரம் பிடிக்கும் என்பதோடு அவர்கள் அரை ஆடையோடு ஆணுக்குப் பெண் சமம் என்ற சமதளத்தைத் தகர்த்து தங்களுக்கென விதவிதமான ஆடைகளை வடிவமைத்துக் கொண்டனர்.  ஆண்கள் எப்போதும்போல் ஏமாளிகளாக அவர் ஆடைகளுக்குத் தன் உழைப்பின் பெரும்பகுதியைக் கப்பமாகக் கட்டி வாழ்ந்தனர்

மேலாடை இல்லாத பெண்கள் ஏழை என்று எவரும் கருதக்கூடாது என்று அவருக்கு உடல்நிறையத் தங்க நகைகள் போட்டு ஆன்கள் தங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஓரளவுக்கு மறைத்தனர். மேலாடை அணிந்தபோதும் தான் படைப்புக் கடவுளின் நாபிக்கொடியில் இருந்து பிறந்தவள் என்பதால் தன் தொப்புளை மறைக்காத ஆடையை  அணிந்து படைப்புக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள் தமீழச்சி

நாகராசன்

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2013, 12:55:42 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


23 மார்ச், 2013 11:06 AM அன்று, ஆடு பாம்பே படம் எடுத்து <radius.co...@gmail.com> எழுதியது:


 தான் படைப்புக் கடவுளின் நாபிக்கொடியில் இருந்து பிறந்தவள் என்பதால் தன் தொப்புளை மறைக்காத ஆடையை  அணிந்து படைப்புக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள் தமீழச்சி


வெயிலின் தாக்கம் தணிப்பதற்கு இடை மறைக்காமல் இருப்பது உதவும் என்பது என் பட்டறிவு. கோடையில்  அமெரிக்கர்கள் மேலாடை குறைத்து அணிவார்கள். அங்காடி மாலைகளில் மேற்சட்டை, காலணி அணியாதோருக்கு நுழைமதி இல்லை என அறிவுப்பு எழுதி இருப்பார்கள்.

ஆடை  காலநிலையை பொறுத்து.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Mar 23, 2013, 4:56:06 PM3/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சங்க காலத்தைச் சார்த்த குகை ஓவியங்களில் இருந்து  பண்டைய தமிழர்களின் ஆடைகள்  பற்றி ஏதேனும் யூகிக்க முடிகிறதா?




ஆடை முழங்கால் அளவில் நின்றுவிடுவதாகத் தெரிகிறது...
ஆண்கள்  துண்டு போல அணிந்திருப்பதாகவும், வலது பக்கத்தில் இருக்கும் பெண்கள் அவர்களைவிட அதிகமாக (தோள் வரை) அணிந்திருப்பதாகவும் "எனக்குத்" தெரிகிறது.

இது குறிஞ்சி நில மக்களின் உடையாக மட்டும் இருக்க வாய்ப்பும் உள்ளது.

..... தேமொழி

N. Kannan

unread,
Mar 23, 2013, 10:08:48 PM3/23/13
to mint...@googlegroups.com
ஆடை குறித்த பேச்சு சோழர்கால ஓவியங்களை அலசிய இழையிலும் உண்டு.

கையைக் கோர்த்துக்கொண்டு சங்ககாலத்தமிழர்கள் ஆண்-பெண் வேறுபாடின்றி
ஆடியிருக்கும் தொன்பதிவு சொல்வது என்ன? எப்போது தமிழர்களுக்குள்
‘தொடக்கூடாது’ எனும் கருத்து தோன்றியது?

நா.கண்ணன்

2013/3/24 தேமொழி <them...@yahoo.com>
>
> சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சங்க காலத்தைச் சார்த்த குகை ஓவியங்களில்
> இருந்து பண்டைய தமிழர்களின் ஆடைகள் பற்றி ஏதேனும் யூகிக்க முடிகிறதா?
>
>
> படம்:
> http://media.newindianexpress.com/article1487092.ece/ALTERNATES/w460/Paintings.jpg
>

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2013, 11:01:38 PM3/23/13
to மின்தமிழ்
//கையைக் கோர்த்துக்கொண்டு சங்ககாலத்தமிழர்கள் ஆண்-பெண் வேறுபாடின்றி

ஆடியிருக்கும் தொன்பதிவு சொல்வது என்ன? எப்போது தமிழர்களுக்குள்
‘தொடக்கூடாது’ எனும் கருத்து தோன்றியது?//

http://www.youtube.com/watch?v=ZLtKerokcPg

பழந்தமிழர் மரபில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவு ஆணும் பெண்ணுமே தீர்மானிக்கவேண்டிய உறவு என்ற நிலை மாறிக் கற்பு என்பது பெண்ணுக்குமட்டுமே என்ற நிலை உருவானபோது

குழுவாகக் கையைபிடித்துக்கொண்டு மனம் மகிழ் ஆடிப்பாடுவது தடையற்ற ஆண்பெண் உறவுக்கு வழிவகுக்கும் அதனால் பிரிவுகள் மறைந்து வழக்கில் சட்டாங்கில் உள்ள ஆளுகை அதிகாரங்களை இழக்க நேருமோ என்று அஞ்சிய மேட்டுக்குடியினர் மேலெடுத்த தடைச் சட்டங்கள்

ஆடல் பாடல் நாடகம் அனைத்தும் இறைவனுக்கே அது கோவில்களிலும் அரங்கங்களிலும் நடக்கவேண்டும் தெருக்களிலும் சோலைகளிலும் அல்ல என்று முன்னர் நடனம் என்பது பொது மேடைகளிலும் தனிக் குழுக்களிலும் இருக்கலாம் என்ற பண்புக்கூறின் ஒரு பகுதியைத் தடை செய்தபோது

நிறைய ஆவணங்கள் சேர்ந்துள்ளது.  இழைவிரைவில் இங்கே நடனமிடும்

நாகராசன்


2013/3/24 N. Kannan <navan...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Mar 25, 2013, 1:39:28 AM3/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சரியாகச் சொன்னீர்கள் தேமொழி!
முதலில் இது மலைக் குகையில் காணப்படுவது. அது குறிஞ்சி நிலம். மேலும், இந்த ஓவியம் சங்க கால மகளிர் ஆடும் குரவைக் கூத்தைப் போல் தோன்றுகிறது. இதைப் பெரிதாக்கி நுணுக ஆராயவேண்டும். ஆடும்போது தடங்கலாக இருக்கக்கூடாது என்பதற்காக இடுப்பளவுக்கு மடித்தோ அல்லது  வரிந்தோ  கட்டப்பட்டிருக்கலாம்.
ப.பாண்டியராஜா
Reply all
Reply to author
Forward
0 new messages