
முள்ளம்பன்றி வேட்டையாடிய கானவர்
வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டுவலம் படுத்த உவகையன், காட்ட
நடுகால் குரம்பைத் தன் குடிவயின் பெயரும்! (நற். 285:3-7)
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
பொருள்:
வலிய கையையுடைய கானவன், தன் கொடிய வில்லை வளைத்து
அம்பைத் தொடுத்து ஆண் முள்ளம்பன்றியைக் கொன்றான்.
அதனை எடுத்துக்கொண்டு வேட்டையில் வெற்றியடைந்த மகிழ்ச்சியோடு
காட்டின் உள்பகுதியில் உள்ள தன் சிறிய குடிலுக்குள் சென்றான்.
மனையிலிருந்த நாய்கள் அவனைக் கண்டு சுற்றி விளையாடின.
A strong-handed forester splits the chest of a porcupine
With his dart and takes home its body,
His heart overflowing with the joy of triumph!
As he reaches his hut, all his pet-dogs
Gleefully bark and surround him.
*படத்தில் கூட முள்ளம்பன்றியைப் பார்த்திராதவர்களும்
அது எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !!!!
🦔