சேர்த்துப்பிடித்துச் செய்த செம்மையான தொடரடைவு.
அன்புடையீர்,
மிகப் பெரும்பாலான இலக்கிய / இலக்கண நூல்களுக்கெல்லாம் தொடரடைவுகள் உருவாக்கிய பின்னர், அடுத்து எதனைச் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனக்கு மனத்தில் தோன்றியது ‘நிகண்டுகள்’.
நிகண்டு என்பது அந்தக்காலத்து அகராதி. ஆனால் இன்றைய Dictionary போன்று இராமல், செய்யுள் வடிவில் இருக்கும். சொற்கள் அகரவரிசையில் இரா. மிகப் பெரும்பாலான நிகண்டுகள் சொற்களை, தெய்வப்பெயர்கள், மானுடப் பெயர்கள், மரப்பெயர்கள், இடப்பெயர்கள் என பலவகையாகப் பிரித்துப் பொருள்கூறுவன. இன்னும் வேறு பலவகைகளிலும் நிகண்டுகள் சொற்களை வகைப்படுத்திக்கொள்ளும். எனவே ஒரு சொல் நூலில் எந்தப் பிரிவில் குறிக்கப்பட்டிருக்கும் என்று தேடிப் பார்க்கவேண்டும். அந்தப் பிரிவிலும், அது எந்த நூற்பாவில் சொல்லப்பட்டிருக்கும் என்று தேடிப்பார்க்கவேண்டும். அந்த நூற்பாவிலும் அச்சொல் சில புணர்ச்சிவிதிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும். எனவே, நூற்பாக்களைச் சொற்களாகப் பிரித்து, அச்சொற்களுக்குரிய தொடரடைவை உருவாக்கினால், ஒரு சொல்லைத் தேடும் பணி மிக எளிதாகிவிடுகிறது. எனவே நிகண்டுகளுக்குரிய தொடரடைவுகள் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் நிகண்டுகளுக்கான தொடரடைவை உருவாக்கும் பணியில் இறங்கினேன்.
இணையத்தில் தேடும்போது, பல நிகண்டுகள் கிடைத்தாலும், அவற்றில் மிக முக்கியமாகப் பேசப்பட்டவை திவாகரம், பிங்கலம், சூடாமணி ஆகிய மூன்றும்தான். எனவே இவை மூன்றனுக்கும் தனித்தனியே தொடரடைவுகள் உருவாக்கப்பட்டன. அவ்வேளையில் ஐயா ச.வே.சு அவர்கள் தமிழ் நிகண்டுகள் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்ட நூல் கிடைத்தது. எனவே அந்தத் தொகுப்பில் இருந்த மற்ற நிகண்டுகளுக்கும் தொடரடைவுகள் உருவாக்கப்பட்டன. இப்படியாக 21 நிகண்டுகளுக்கான தொடரடைவுகள் உருவாக்கப்பட்டன.
இப்போது ஒரு புதிய சிக்கல். ஒரு சொல்லை அனைத்து நிகண்டுகளிலும் தேடவேண்டுமானால், அட்டவணையில் ஒவ்வொரு நிகண்டாகத் தெரிவுசெய்து 21 முறை தேடவேண்டும். அவ்வாறு தேடிக் கிடைத்தவற்றைத் தனியாகக் குறிப்பெடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். இதுவே ஆய்வாளர்களுக்குப் பெரிய உதவிதான். இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்துவதாகும். விசிறியைக் கொண்டு கைவலிக்க வீசியவர்களுக்கு மின்விசிறி முதலில் எத்துணை வரப்ரசாதம். அது பழகிப்போனபின், அதை விட்டுவிட்டு குளிரூட்டியை மக்கள் நாடுகிறார்கள் அல்லவா? அந்தக் குளிரூட்டியையும் உட்கார்ந்தவாறே இயக்க உள்ளங்கையில் ஒரு Remote !!
இந்த உள்ளங்கை Remote – ஐத்தான் நான் இப்போது உருவாக்கியிருக்கிறேன். அதாவது, ஒரு சொல்லைக் கொடுத்தால், அது வருகின்ற அனைத்து நிகண்டுகளினின்றும் தொடர்களைத் தேடிக் கொணரும் இது. ஒருவர் ஒரு சொல்லைத் தனக்குத் தேவைப்பட்ட நிகண்டில் தேடிக்கொள்ளலாம், அல்லது அனைத்து நிகண்டுகளிலும் தேடிக்கொள்ளலாம். நிகண்டுகளுக்கான பட்டியலில் இந்த வசதி இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் நிற்கட்டும். இந்தப் பாடலைப் பாருங்கள்.
# 40 குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே 5
* செம்புலப்பெயனீரார்
ஆம், பலரும் அறிந்த குறுந்தொகை 40-ஆம் பாடல் இது. இதில் வருகின்ற செம்புலம் என்பது செம்மண் நிலம் என்றுதான் பலராலும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் உடனே எவ்வாறு அம் மண்ணில் நிறத்தோடு கலந்துவிடுகிறதோ - அது போல ----- என்றுதான் பலரும் பொருள்கொள்கின்றனர். ஆனால் இங்கே பாருங்கள்:
செம்புலம் (16)களரி பறந்தலை செம்புலம் படுகளம் - 1.திவாகரம்:5 193/1செம்புலம் என்ற சொல் 16+3 = 19 இடங்களில் இந்த அனைத்து நிகண்டுகளிலும் வருகிறது. இந்த அனைத்து நிகண்டுகளும் செம்புலம் என்பதற்குப் போர்க்களம், பாலைநிலம் என்றே பொருள்தருகின்றன. அதாவது வறண்ட பாலைநிலத்தில் விழும் மழைத்துளி எவ்வாறு அந்த நிலத்தால் உறிஞ்சப்பட்டு அவை இரண்டும் ஒன்றாகின்றனவோ அது போல ---- என்றுதான் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது – இந்த நிகண்டுகளின்படி.
இந்த அனைத்து நிகண்டுகளுக்குமான தொடரடைவை உருவாக்கும் முன் நான் ஒவ்வொரு நிகண்டுக்குமான தொடரைவுயும் மீள்பார்வை செய்யவேண்டியிருந்தது. இதற்கிடையில் என் மனைவியின் உடல்நலமின்மை, இறுதியில் அவரின் இழப்பு, அதனால் எனக்கேற்பட்ட நிலைகுலைந்த நிலை போன்றவற்றையெல்லாம் சமாளித்து, நான் மீண்டும் உயிர்பெற்று இப்பணியைச் செய்து முடிக்க எனக்கு மூன்றரை மாதங்கள் ஆயின. இறுதியில் இதனைச் செய்துமுடிக்கும் அளவுக்கு உடல் வலிமையையும், மனவலிமையையும் எனக்களித்து என்னை ஒவ்வொரு நொடியும் வாழவைக்கும் என் இறைவன் இயேசுவுக்கு நன்றி ! நன்றி! நன்றி!
அடுத்த தொடரடைவுக்கான நூல் பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை. பின்னர் அதுபற்றிச் சொல்கிறேன்.
ப.பாண்டியராஜா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/a176b593-259a-4a27-9d84-6395f623d782n%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/e21d83f4-e1c9-4803-9a71-70039fcc8210n%40googlegroups.com.