கடல் உள்வாங்கும் காரணம் என்ன?

2,160 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 7, 2015, 7:56:53 PM3/7/15
to mint...@googlegroups.com


திருச்செந்தூரில் நேற்று காலை கடல் இரு முறை உள்வாங்கியது.

1 மணி நேரம் கரைவற்றிய நிலையில் கடல் பாறைகள் தெரிந்ததை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிட்டனர்.

கடலில் நிகழும் அதிசயம்

டிசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலைகள் தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி கடற்கரை கிராமங்களை சூறையாடியது நினைவிருக்கலாம்.

அந்த நாளில் திருச்செந்தூர் கடல் மட்டும் உள்வாங்கியது. கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பின் நோக்கி சென்றதால் கடலுக்குள் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. 10 ஆடி ஆழத்துக்குரிய கடல்நீர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக உள்வாங்கியபடி நின்றது. பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் அளித்தது.

இந்தோனேசிய கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் வங்கக்கடல் கொந்தளித்ததாக கூறப்பட்டபோது, இங்கு மட்டும் உள்வாங்கி இருந்தது பேரதிசயமாக பேசப்பட்டது.

மீண்டும்

இந்த 3 மாதங்களுக்கு பிறகு மார்ச் 28-ந் தேதி அன்று இரவு இந்தோனேசியா அருகில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் வங்கக்கடலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. திருச்செந்தூரில் நேற்று காலையில் இருந்து கடல் உள்வாங்கி செல்லுதல் நிகழ்ந்தது.

காலை 6-15 மணிக்கு

காலை 6-15 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முன் உள்ள கடற்கரையில் இருந்து திடீரென்று கடல் உள்வாங்கிச்சென்றது. 100 முதல் 120 மீட்டர் தூரம் வரை கடல் உள்நோக்கி சென்றதால் கரைவற்றி பாறைகள் தெரிந்தன.

15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கடல் நீர்கரைக்கு வந்து பழைய நிலையை அடைந்தது. இதைப்பார்த்ததும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் உள்ளூர் மக்களும் வியப்படைந்தனர். புதிய பூகம்பத்தின் விளைவாக இந்த அதிசயம் மீண்டும் நிகழ்வதாக செய்தி நகர் முழுவதும் பரவியது.

இதைக்கேள்விப்பட்டு ஏராளமானோர் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். சுற்று வட்டார மக்கள், கார், வேன், ஆட்டோக்களில் வந்தனர்.

8-15 மணிக்கு

மீண்டும் காலை 8-15 மணிக்கு கடல் உள்வாங்கி சென்றது. இம்முறை வள்ளி குகை பகுதியில் இருந்து தெற்கில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமலிநகர் வரை இந்த கடல் உள்வாங்கல் நடந்தது. கரையில் இருந்து 120 மீட்டர் தூரம் வரை கடல் நீர் பின் நோக்கி சென்றதால் கரையோர கடலுக்குள் மூழ்கி இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

இதைக்கண்ட மக்கள் கடலுக்குள் இறங்கி பாறைகள் மீது நடந்து பார்த்தனர்.

இந்த கடல் உள் வாங்குதல் 9-05 மணி வரை நீடித்தது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடல் கரை வற்றி இருந்ததால் ஏராளமானோர் வந்து பார்த்தார்கள். 9-05 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல கரையை நோக்கி வந்து 9-15 மணிக்கு பழைய நிலைக்கு வந்தடைந்தது.









On Saturday, March 7, 2015 at 8:02:32 AM UTC-8, singanenjan wrote:
## டிசம்பர் ஜனவரியிலும் நிகழ்ந்துள்ளது.  இதற்கான அறிவியல் விளக்கம் தெரியவில்லை. ஒரு செய்தி பூகம்பத்துடனும், மற்றொன்று  பருவகால மாற்றங்களுடனும் இணைக்கிறது. 
இத்துறை சார்ந்தவர்களுக்கு சரியான விளக்கம் தெரிந்திருக்கும். ##

புவியியல் துறையில் பணி செய்வதால் , கொஞ்சம் விளக்கம் சொல்ல விழைகிறேன். இது தலபுராண இழை. எனவே,வேறு இழையில் அளவளாவுவோம்.

2015-03-07 15:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆண்கடல் என்பது பரந்து விரிந்த கடலையும், பெருங்கடலையும், விரிகுடா போன்ற பகுதிகளையும் குறிக்கப் பட்டிருக்க வாய்ப்புண்டு.

பெண்கடல் என்பது  அருகாமையில் நிலத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள வளைகுடா, ஜலசந்தி போன்ற கடல் பகுதியைக்குறிக்கப் பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.  

குறிப்பாகஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பாக் ஜலசந்தி  (இருபுறமும் கரைகள் கொண்ட)  குறுகிய கடல் பகுதியில்  கன்னியாகுமரி முதல் இராமநாத புரம், திருச்செந்தூர்,  தூத்துக்குடி , தேவிப்பட்டினம் பகுதியில் ஆண்டிற்கு ஒருமுறையாவது கடல் உள்வாங்கிய செய்தி வருகிறது.  குறிப்பாக மே மாதம் அடிக்கடியும்;  மார்ச் ஏப்ரல் மே காலகட்டத்திலும் இது நிகழ்கிறது.  

டிசம்பர் ஜனவரியிலும் நிகழ்ந்துள்ளது.  இதற்கான அறிவியல் விளக்கம் தெரியவில்லை. ஒரு செய்தி பூகம்பத்துடனும், மற்றொன்று  பருவகால மாற்றங்களுடனும் இணைக்கிறது.

இத்துறை சார்ந்தவர்களுக்கு சரியான விளக்கம் தெரிந்திருக்கும். 

பாக் ஜலசந்தி தவிர தரங்கம்பாடி, மாமல்லை, சென்னை பகுதிகளும் கடல் உள்வாங்கிய செய்திகள் உள்ளன. 


..... தேமொழி



On Saturday, March 7, 2015 at 1:27:54 AM UTC-8, malarmangay64 wrote:

கடலில் ஆண் கடல்,பெண்கடல் என்று இரு வகை உண்டு.இராமேஸ்வரம் கடல்  பெண்கடல் எனவேதான் அங்கு அலைகள் கிடையாது என்று எனதுதாத்தாக் கூறக் கேட்டிருக்கிறேன்.எனவேதான்  தேவிபட்டினம் பகுதியும் அலைகளின்றி அமைதியாக உள்ளது.

Nagarajan Vadivel

unread,
Mar 7, 2015, 8:09:08 PM3/7/15
to மின்தமிழ்

2015-03-08 6:26 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கடலில் ஆண் கடல்,பெண்கடல் என்று இரு வகை உண்டு.இராமேஸ்வரம் கடல்  பெண்கடல்
​ஆண்கடல் சும்மா குண்டு சோடாப்புட்டிபோல் தொடக்கத்தில் வீரியமாக ஆர்ப்பாட்டம் செய்து பிறகு அடங்கிப்போய்விடும்.  பெண்கடல் அப்படி அல்ல.  ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழிப்புவேலையைக் கனகச்சிதமாகச் செய்துவிடும்​

இந்துமாக் கடல் பெண்களைப்போல் புறத்தே அமைதியாக இருந்தாலும்​ உள்ளுக்குள் அழிக்கும் சக்தியை உள்ளடக்கி அமைதியாக இருப்பது

தணுஷ்கோடி தீவு அழிந்ததுக்குப் பெண் அலைகள் காரணம் என்று அங்கிருந்த மீனவர்கள் சொல்லிக் கேள்வி

இதற்கும் விஞ்ஞான விளக்கம் இருந்தால் கூறவும்

கணினிதாசன்

தேமொழி

unread,
Mar 7, 2015, 9:14:56 PM3/7/15
to mint...@googlegroups.com


On Saturday, March 7, 2015 at 5:09:08 PM UTC-8, கணினிதாசன் wrote:

​ஆண்கடல் சும்மா குண்டு சோடாப்புட்டிபோல் தொடக்கத்தில் வீரியமாக ஆர்ப்பாட்டம் செய்து பிறகு அடங்கிப்போய்விடும்.  பெண்கடல் அப்படி அல்ல.  ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழிப்புவேலையைக் கனகச்சிதமாகச் செய்துவிடும்​
இந்துமாக் கடல் பெண்களைப்போல் புறத்தே அமைதியாக இருந்தாலும்​ உள்ளுக்குள் அழிக்கும் சக்தியை உள்ளடக்கி அமைதியாக இருப்பது


மகளிர் தின வாழ்த்துகளுக்கு நன்றி பேராசிரியரே.


..... தேமொழி
 

Singanenjam Sambandam

unread,
Mar 7, 2015, 11:24:29 PM3/7/15
to mint...@googlegroups.com
Inline image 1

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Mar 8, 2015, 1:12:05 AM3/8/15
to mint...@googlegroups.com
கடலாழம்  காண முடிந்தாலும் பெண்கள்  மனதாழம் காண முடியாது

என்று பெண்கள் மனதை கடல் ஆழத்துக்கு  ஒப்பிட்டு  தான் சொல்லி இருக்கிறார்கள்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Singanenjam Sambandam

unread,
Mar 8, 2015, 1:45:17 AM3/8/15
to mint...@googlegroups.com
ஆறு அது ஆழமில்லே...அது சேருங்கடலும் ஆழமில்லே.....ஆழமெது அய்யா, இந்த பொம்பள மனசுதான்யா...

துரை.ந.உ

unread,
Mar 8, 2015, 1:46:41 AM3/8/15
to Groups
கடல் உள்வாங்குதல் : சிறு பட விளக்கம் :
1) இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் (செந்தூர்) நோக்கி வரும் சுனாமி அலைகள் . இலங்கையால் தடுக்கப் படுகிறது ..
2. தமிழகத்தைக் கடந்து ஆப்பிரிக்கா நோக்கி செல்லும் சுனாமி அலைகள் , கடல் நீரை மன்னார் குடாக்கடலில்ன் நீரையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது ... அதனால் மன்னார்குடாவின் கடல் பகுதியில் கடல் உள்வாங்குகிறது .







2015-03-08 11:41 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Singanenjam Sambandam

unread,
Mar 8, 2015, 3:06:37 AM3/8/15
to mint...@googlegroups.com
நண்பரே,    கடல் உள்வாங்கும் நிகழ்வு இந்தப் படத்தில் தெரிய வாய்ப்பில்லை ......இது பற்றி விளக்கமாக "கடலோரக்...." எனும் இழையில் அலசுவோம்.

தேமொழி

unread,
Mar 8, 2015, 3:52:03 AM3/8/15
to mint...@googlegroups.com
இது தினமணியில் நீங்கள் எழுதிய கட்டுரையா?  உதவிகரமாக இருக்கிறது. 

எனவே ....புவியதிர்ச்சியுடன் கடள் உள்வாங்குவதையும் நிலத்தில் உட்புகுவதையும் தொடர்பு படுத்துவது  தவறு என்று தெரிகிறது.


கோள்களின் ஈர்ப்பு விசைகளினால்  இயற்கையாக நிகழும் கடலேற்றம், கடல்வற்றம் ஆகியவற்றின் காரணமாகவும், சுனாமியால் புவியமைப்பில் ஏற்பட்டுவிட்ட மாறுபாடுகளும் இதற்குக் காரணம்..

தகவலுக்கு மிக்க நன்றி.

..... தேமொழி



On Saturday, March 7, 2015 at 8:24:29 PM UTC-8, singanenjan wrote:
Inline image 1

2015-03-08 7:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, March 7, 2015 at 5:09:08 PM UTC-8, கணினிதாசன் wrote:

​ஆண்கடல் சும்மா குண்டு சோடாப்புட்டிபோல் தொடக்கத்தில் வீரியமாக ஆர்ப்பாட்டம் செய்து பிறகு அடங்கிப்போய்விடும்.  பெண்கடல் அப்படி அல்ல.  ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழிப்புவேலையைக் கனகச்சிதமாகச் செய்துவிடும்​
இந்துமாக் கடல் பெண்களைப்போல் புறத்தே அமைதியாக இருந்தாலும்​ உள்ளுக்குள் அழிக்கும் சக்தியை உள்ளடக்கி அமைதியாக இருப்பது


மகளிர் தின வாழ்த்துகளுக்கு நன்றி பேராசிரியரே.


..... தேமொழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 8, 2015, 3:56:39 AM3/8/15
to mint...@googlegroups.com
கடள் = கடல் 

தமிழில் கடள் என்ற வார்த்தை இல்லை (என்று நினைக்கிறேன்...)



..... தேமொழி

S NEELAKANTAN

unread,
Mar 8, 2015, 3:59:09 AM3/8/15
to mintamil
மேற்கு கடற்கரை பகுதிகளில் அதுவும் மும்பையை சார்ந்த பகுதிகளில் கடல் உள்வாங்குவதும் , உட்புகுவதும் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் சூர த் போன்ர பகுதிகளில் கடல்  2 முதல் 3 கிலொமீடர் வரை உள்வாங்குவதை பார்த்திருக்கிறேன் . இது சாதாரண நிகழ்வு . தமிழ் நாட்டை பொறுத்தமட்டில் இது ஒரு புதிராய் இருக்கலாம்  

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Malarvizhi Mangay

unread,
Mar 8, 2015, 5:33:52 AM3/8/15
to mint...@googlegroups.com

இந்த இந்துமாகடல் எனும் பெண்கடல் தான் அரிய பவளப்பாறைகளைத் தன்னுள் தாங்கி பல்திரள் உயிரிகளை
வாழ வைத்துக்கொண்டு. இருக்கிறது.இராம சேனையைத் தன்மீது தாங்கி சேது பந்தனம்அமைக்க விட்டுஇராமபிரானையே
கொண்டு சேர்த்தது.

Singanenjam Sambandam

unread,
Mar 9, 2015, 11:11:24 AM3/9/15
to mint...@googlegroups.com
### இது தினமணியில் நீங்கள் எழுதிய கட்டுரையா? ###

        அண்மைக் காலங்களில் அடிக்கடி நாளிதழ்களில் வரும் “கடல் உள்வாங்கும்” செய்திகளுக்கும், பூகம்பத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பருவகால மாற்றங்களுக்கும் இதற்கும் ஓரளவு தொடர்பு உண்டு.

      இந்த கடல் உள்வாங்கும் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம், பூமியின் மீது          நிலவுக்குள்ள ஈர்ப்பே ஆகும். கதிரவனுக்கும் இதில் சிறிது பங்குண்டு.

 

       கதிரும் நிலவும் கடலும் என்று தோன்றினவோ, அன்று முதல் கடல் உள்வாங்கும் நிகழ்வுகளும், கடலோரப் பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்குள் புகும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

தமிழகக் கடலோர மீனவ கிராமங்களைப் புரட்டிப்போட்ட ஆழிப்பேரலைகளின் கோரத்தாண்டவதிற் குப் பின் , வழக்கமான கடலோர நிகழ்வுகளும் அச்சத்துடன் கவனிக்கப்படுகின்றன- ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன. அவ்வளவே.

 

சற்று பின் நோக்கி செல்வோம்......

 

பொதுவாக மக்கள்  கூடும்  இடங்களில் , குறிப்பாக தமிழ்நாட்டில், சினிமா மற்றும் அரசியல் பற்றிய உரையாடல்களே அதிகமாக இருக்கும். ஆனால் பத்து  ஆண்டுகளுக்கு முன் , ஆழிப்பேரலைகளின் அட்டகாசத்திற்குப் பின் , எங்குபார்த்தாலும் மக்கள் பேசியது சுனாமி பற்றிதான்.

ஏன் வந்தது, எப்படி வந்தது , இதற்கு முன் வந்ததுண்டா , அடுத்து எப்போது வரும் இப்படி பலப்பல கேள்விகள்-பலப்பல ஐயங்கள். ஊடகங்களுக்கு இவை நல்ல தீனியாக அமைந்தன.. “சென்னையில் விவேகனந்தர் இல்லம் எதிரே  கடல் நீர் புகுந்தது ....மீண்டும் சுனாமியா” , “அண்ணா நினைவிடத்தில் கடல் நீர் மோதியது –ஆழிப்பேரலையா” என்றல்லாம் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.. எங்கள் அலுவலகத்திற்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்

.”சார், பத்து நாள் டூர் போறோம்..போவலாமா...ஒன்னும் ஆபத்திலையே”

தை கடைசியில பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் .....இருக்கலாமா...தள்ளிப் போடலான்களா?”

 இப்படி பயத்திலும் , பதபதைப்பிலும் பல்வேறு கேள்விகள். விளக்கம் சொல்லி விளக்கம் சொல்லி அலுத்துப்போன என் நண்பர் ஒருவர் ( வைணவர்), எந்த அழைப்பு வந்தாலும் “பெருமாள் மேல பாரத்தைப் போட்டுட்டு போயிண்டே இருங்கோ” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

 

நாளிதழ்களில் “கன்யாகுமரி பகுதியில் கடல் நீர் புகுந்தது, ( 09.03.05 ); திருசெந்தூரில் சுமார்  100 மீ முதல் 150 மீ  வரை கடல் உள்வாங்கியது.( 29.03.05 ); தூத்துக்குடியில்  கடல் உள்  வாங்கியது( 30.03.05 ) போன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆழிபேரலை ஓய்ந்தபின்னும் மக்களிடையே அச்சம் தீர்ந்தாற்போல் தெரியவில்லை. அதன் விளைவே இந்த “ அச்சப்பேரலை ஓயட்டும்” கட்டுரை.     தினமணி இதழில் வெளியானது. தமிழில் நான் எழுதி  வெளிவந்த முதல் அறிவியல் கட்டுரை இதுதான்.


 

சரி, கடந்த சில மாதங்களில் “கடல் உள்  வாங்கிய” நாட்கள் எவை என கவனித்தீர்களா? 


சி. ஜெயபாரதன்

unread,
Mar 9, 2015, 12:08:52 PM3/9/15
to mintamil, vallamai, tamilmantram, Jothi Themozhi, vannan vannan, Jay Jayabarathan
தேமொழி,


கடல் உள்வாங்குவதோ, கரை நீட்சி புரிவதோ கடலுக்கு அடியில் நேரும் மௌன அல்லது தீவிர எரிமலை வெடிப்போ, அடித்தட்டு எழுச்சியோதான் காரணமாக இருக்க வேண்டும்.

சுருள் கம்பி /வில் கம்பி  எவ்வுதல் போல் [Spring Oscillation Effect] தவ்வும் கடல் அடித்தட்டுகள் அசைவே, சுனாமி நேர்ச்சி உண்டாக்கி, கடல் நீட்சி, சுருக்கம் கரைகளில் ஏற்படுகின்றன.

தெரியாமல் போகும் பெரும்பான்மை மௌன எரிமலைக் கடல் அடித்தள வெடிப்புகள், அடித்தட்டு எவ்வுதலே அத்தகைய தீவிர நேர்ச்சிகளை உண்டாக்க வல்லவை. 

சி. ஜெயபாரதன்

++++++++++++++++++++++

 

தேமொழி

unread,
Mar 9, 2015, 12:33:59 PM3/9/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கடலில் எரிமலை வெடிப்பும் ஒரு காரணமோ, நன்றி ஐயா.


..... தேமொழி





 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 9, 2015, 1:31:30 PM3/9/15
to mint...@googlegroups.com


On Monday, March 9, 2015 at 8:11:24 AM UTC-7, singanenjan wrote:
### இது தினமணியில் நீங்கள் எழுதிய கட்டுரையா? ###

சரி, கடந்த சில மாதங்களில் “கடல் உள்  வாங்கிய” நாட்கள் எவை என கவனித்தீர்களா? 





சமீபத்தில் தேவிப்படினத்தில் நிகழ்ந்தது பிப்ரவரி இறுதி  நாள்..

மீனவர்கள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக, இப்பகுதியில், காலையில் கடல் திடீரென உள்வாங்குவதும், மாலையில் நீர்மட்டம் உயர்வதுமாக உள்ளது. காற்றின் வேகம் குறைவு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக, கடலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது' என்றனர்.

நான் இந்த செய்திகளைத் தேடும் பொழுது நாட்களைத்தான் கவனித்தேன், காரணம் கடலிலேயே தொழில் செய்யும் மீனவர்களே பருவகால மாறுதல்கள் என்று கூறிவிட்டதால் 

கீழுள்ள செய்திகள் படி ஆண்டுக்கொருமுறை ஜூலையில் கன்யாகுமரியில் நிகழ்கிறது போலும்...

கன்னியாகுமரியில் இன்றும் 4–வது ...
மாலை மலர்-Jul 15, 2014
இன்று 4–வது நாளாக கடல் உள் வாங்கியது. இதனால் கரையில் உள்ள பாறைகள் ...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ...
மாலை மலர்-Jul 23, 2013
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ... அதேநேரம் வங்க கடல் திடீரென உள் வாங்கியது.

இதனால் ...

solstices and equinoxes  ஆகியவற்றிற்கும்  கடல் உள்வாங்குவதற்கும்  தொடர்பு இருப்பது போலதெரிகிறது 
March equinox, June solstice, September equinox,December Solstice

Northern Hemisphere summer solstice
(North America, Central America, Europe, Asia, northern Africa)
June solstice  - June 21

Southern Hemisphere summer solstice
(Australia, New Zealand, South America, Southern Africa)
December solstice - December 22


மேலும் சில செய்திகள் கீழே...

Mar 12, 2011 - நேற்றறு பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.  --- tamil.oneindia.com

Mar 1, 2015 - தேவிபட்டினத்தில் கடல் உள்வாங்கியது ---- www.dinamalar.com

Jun 15, 2014 - கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது ---www.dailythanthi.com/

Jul 13, 2014 - கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது: படகு போக்குவரத்து ரத்து. --- www.maalaimalar.com

May 27, 2009 - திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல், திருசெந்தூரில் கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. --- tamil.oneindia.com

Jul 11, 2006 - இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது. ---tamil.oneindia.com

Jun 25, 2009 - சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்,  சென்னை கடற்கரையில் நேற்று திடீரென கடல் உள் வாங்கியது. ---tamil.oneindia.com

Aug 11, 2009 - கடல் உள்வாங்கியது:பட்டினப்பாக்க பதட்டம் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடலில் --- www.nakkheeran.i

இவற்றின் படியும் பருவகால மாறுதல் என்று சொல்லும் மீனவர்களை நம்ப விரும்புகிறேன்.
________________________________________________________________________________________

கீழுள்ளவை நிகழ்வுகளை கதை கட்டிடும் மக்களின் மனப்போக்கு என்பது என் கருத்து

சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணம்

சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்" என்று குறிப்பிடும் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்ததும் இதுதான்.

எல்லாம் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த விளக்கங்கள் என்பது என் கோணம்.


தேமொழி

unread,
Mar 9, 2015, 1:45:35 PM3/9/15
to mint...@googlegroups.com


On Saturday, March 7, 2015 at 11:59:09 PM UTC-8, Chembur Neelu wrote:
மேற்கு கடற்கரை பகுதிகளில் அதுவும் மும்பையை சார்ந்த பகுதிகளில் கடல் உள்வாங்குவதும் , உட்புகுவதும் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் சூர த் போன்ர பகுதிகளில் கடல்  2 முதல் 3 கிலொமீடர் வரை உள்வாங்குவதை பார்த்திருக்கிறேன் . இது சாதாரண நிகழ்வு . தமிழ் நாட்டை பொறுத்தமட்டில் இது ஒரு புதிராய் இருக்கலாம்  

நீங்கள் கூறுவது ....கடல் உள்வாங்குவது  வகை போலல்லாது    "ஓதம்" "Tide"  என்ற வகை போல இருக்கிறது..

Tides are the rise and fall of sea levels caused by the combined effects of gravitational forces exerted by theMoonSun, and rotation of the Earth.

Some shorelines experience two nearly equal high and low tides each day, called a semi-diurnal tide. Some locations experience only one high and low tide each day, called a diurnal tide. Some locations experience two uneven tides a day, or sometimes one high and one low each day; this is called a mixed tide. The times and amplitude of tides at a locale are influenced by the alignment of the Sun and Moon, by the pattern of tides in the deep ocean, by the amphidromic systems of the oceans, and the shape of the coastline and near-shore bathymetry (see Timing).[1][2][3]

Tides vary on timescales ranging from hours to years due to numerous influences. To make accurate records, tide gauges at fixed stations measure the water level over time. Gauges ignore variations caused by waves with periods shorter than minutes. These data are compared to the reference (or datum) level usually called mean sea level.[4]

While tides are usually the largest source of short-term sea-level fluctuations, sea levels are also subject to forces such as wind and barometric pressure changes, resulting in storm surges, especially in shallow seas and near coasts.

Tidal phenomena are not limited to the oceans, but can occur in other systems whenever a gravitational field that varies in time and space is present. For example, the solid part of the Earth is affected by tides, though this is not as easily seen as the water tidal movements.


இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் ஒரு கோவில் வழிபாடும் இதனை ஒட்டி அமைந்துள்ளது.

ref: http://www.tamilsguide.com/details.php?nid=56&catid=127544

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்
Tuesday 9th of December 2014 03:49:50 PM

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்

 

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

 

இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

 

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள் குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும். பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

- See more at: http://www.tamilsguide.com/details.php?nid=56&catid=127544#sthash.P9dYOM0E.dpuf

சி. ஜெயபாரதன்

unread,
Mar 9, 2015, 3:51:43 PM3/9/15
to mintamil, vallamai

Submarine Volcanoes

General features of the ocean basins. 
Map courtesy of NASA and the Smithsonian Institution.

The most productive volcanic systems on Earth are hidden under an average of 8,500 feet (2,600 m) of water. Beneath the oceans a global system of mid-ocean ridges produces an estimated 75% of the annual output of magma. An estimated 0.7 cubic miles (3 cubic kilometers) of lava is erupted. The magma and lava create the edges of new oceanic plates and supply heat and chemicals to some of the Earth's most unusual and rare ecosystems.

Contact between young pillow lavas erupted in mid-1980s and older lavas with light dusting of sediment.
Hand-held photo from submersible Alvin taken on Cleft segment of southern Juan de Fuca Ridge.
Photo by Bill Chadwick of NOAA and Oregon State University.

 

 If an estimate of 4,000 volcanoes per million square kilometers on the floor of the Pacific Ocean is extrapolated for all the oceans than there are more than a million submarine (underwater) volcanoes. Perhaps as many as 75,000 of these volcanoes rise over half a mile (1 kilometer) above the ocean floor. Technology and hard work by a group of tenacious explorers/geologists have allowed us our first detailed glimpses of submarine volcanoes. The following pages outline some of the basic characteristics and features of submarine volcanoes.

++++++++++++++++

Plate Tectonic Setting

Map of the Earth's tectonic plates.

Based on a map prepared by the U.S. Geological Survey.

 

Like continental volcanoes, submarine volcanoes are most common where tectonic plates move towards or away from each other. In the case of divergent plate boundaries, where plates are spreading away from each other, the rate of plate movement plays an important role in determining the type of volcano that forms and the rate of eruptive activity. 

Submarine volcanoes at convergent plate boundaries (subduction zones) are much like their subaerial ("under air" or continental) counterparts except that the weight of the overlying water modifies their eruption style. Hot spots leave linear "tracks" of sea mounts across the ocean basins and build some of Earth's largest volcanoes.

 


​++++++++++++++++++++​

Singanenjam Sambandam

unread,
Mar 10, 2015, 1:18:45 PM3/10/15
to mint...@googlegroups.com
கன்யாகுமரி : கடல்பின் வாங்கிய நாள்       14.05.14                      நிறைநிலா நாள்             13.05.14                
கன்யாகுமரி  : கடல்பின் வாங்கிய நாள்       14.06.14                      நிறைநிலா நாள்             12.06.14
கன்யாகுமரி  : கடல்பின் வாங்கிய நாள்       28.06.14                       மறைநிலா நாள்            27.06.14
கன்யாகுமாரி : கடல்பின் வாங்கிய நாள்      13.07.14                        நிறைநிலா நாள்           11.07.14
கன்யாகுமாரி  :கடல்பின் வாங்கிய நாள்     25.07.14                         மறை நிலா நாள்          26.07.14
கன்யாகுமாரி   :கடல்பின் வாங்கிய நாள்      25.08.14                       மறை நிலா நாள்          25.08.14
கன்யாகுமாரி  : கடல்பின் வாங்கிய நாள்      09.09.14                       நிறைநிலா நாள்            09.09.14
கடலூர்             : கடல்பின் வாங்கிய நாள்      10.10.14                        நிறைநிலா நாள்           10.10.14

இவை தினமலர் செய்தியின் அடிப்படையில். 

கடல் உள்  வாங்கிய நாட்கள் யாவும் நிறை நிலா மற்றும் மறை நிலாக் காலங்களை ஒட்டியே அமைந்துள்ளதால் இவையாவுமே , நிலவு-பூமி-கதிரோன் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் அமையும் போது ஏற்படும் தாழ் ஓதங்கள் எனக் கொள்ளலாம், பொதுவாக உயர் ஓதம்-தாழ் ஓதம் இவைகளுக்கிடையே சுமார் ஒரு மீ வித்தியாசம் இருக்கும்.நிறை நிலா மற்றும் மறை நிலாக்காலங்களில் ஒன்றரை முதல் இரண்டு மீ வரை இருக்கம்.
ஆக, அண்மைக்காலங்களில் வெளி வரும் "கடல் உள்  வாங்கிய" நிகழ்வுகளுக்கும் எரிமலைக்கும் எந்தத்  தொடர்பும் இல்லை என அறிக.

Submarine earthquakes, Submarine Volcanism , Submarine Landslides போன்றவை சுனாமியை உருவாக்குபவை. சென்னையில் சுனாமியின் போது கடல்மட்டம் மூன்று மீ உயர்ந்து பின் அதிலிருந்து அய்ந்து மீ குறைந்து அல்லோகலப்படுத்தியது.


சி. ஜெயபாரதன்

unread,
Mar 10, 2015, 4:45:45 PM3/10/15
to mintamil, vallamai
///அந்த நாளில் திருச்செந்தூர் கடல் மட்டும் உள்வாங்கியது. கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பின் நோக்கி சென்றதால் கடலுக்குள் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. 10 ஆடி ஆழத்துக்குரிய கடல்நீர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக உள்வாங்கியபடி நின்றது. பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் அளித்தது./// 

தேமொழி துவக்கிய இந்த இழை நாம் யாரும் அறிந்த உயர்ச்சி அலையடிப்பு, தாழ்ச்சி அலையடிப்பு [High Tide or Low Tide] பற்றியா எழுதப்பட்டது ?

சி. ஜெயபாரதன்

--
Reply all
Reply to author
Forward
0 new messages