"சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன?

770 views
Skip to first unread message

rajam

unread,
Feb 15, 2013, 9:05:13 PM2/15/13
to mint...@googlegroups.com
இதைத் தனி இழையாகத் தொடங்குகிறேன். யார் வேண்டுமானாலும் (திரு கணேசன் உட்பட) பங்கு கொண்டு உரையாடலாம். 

ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழுக்குள்ளேயே தேடவும். பிற மொழிகளுக்குப் போகவேண்டாம். 

"சொல்" என்பது பெயராகவும் வினையாகவும் புழங்குகிறது. இரண்டுக்கும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான். 

எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.

இப்படிக்கு,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Feb 15, 2013, 10:02:47 PM2/15/13
to மின்தமிழ்
முதலில் உத்திரவின்றி உள்ளே போகலாமா என்ற நிலை.  சில அறிஞர்களுக்கு மட்டுமே அழைப்பு

இப்பத் தேவலை கலகக்காரர்களுக்கும் சில்லுண்டிகளுக்கும் இடம் கிடைத்துள்ளது

முதல் கருத்து

தமிழ் மொழியியல் அறிஞர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வரலாறு சார் மொழியியலை வலியுறுத்த்தினர்

தமிழ்மொழியைப் பிறமொழிகளுடன் வரலாற்று அடிப்படையில் ஒப்புமை செய்து எழுதினர்

வரலாற்று மொழியியல் மொழி வளர்ச்சியை நான்கு படிநிலைகளில்  வைத்து தமிழ் சமஸ்கிரிதம்போல் நான்காம் நிலையை அடையாமல் இரண்டாம் நிலையில் வழங்கும் மொழி என்று குறிப்பிட்டிருந்தனர்.  ஆங்கிலத் தாக்கத்தால் உருவான மொழியியல் இந்த வரலாற்றுப் பார்வையைத் தவிர்த்த அறிவியல் பார்வையை ஏற்றுக்கொண்டது

இரண்டாவது கருத்து

இலக்கணத்திலிருந்து இலக்கியமா இலக்கியத்திலிருந்து இலக்கணமா என்ற கேள்விக்குத் தெளிவான விடை இல்லை. இலக்கண அடிப்படையில் தமிழும் சமஸ்கிரிதமும் இரு வேறு இலக்கணங்களைக் கொண்டது இல்க்கியங்கள் இருவகைப்பட்டதால் என்ற அனுமானம் முழு ஆய்வுக்குட்படுத்தப்படாமல் உள்ள நிலை இன்னும் தொடர்கிறது.

மூன்றாவது கருத்து

மொழியின் தோற்றம் முதலில் ஒலிவடிவம் என்ற அடிப்படையில் தமிழ் மொழி ஆய்வு செய்யப்படவில்லை அதனால் எழுத்து என்றால் சொல்லா எழுத்தா என்ற கேள்வி எழுகிறது. வாய்ச்சொல் வடிவம் பெறும்போது அது சொல்லாகவும் ஏதேனும் ஊடகத்தில் பதிவுறும்போது வரிவடிவாகவும் உருவாகிறது.  வரிவடிவம் இல்லாமல் ஏட்டில் இல்லாத வளங்கள் ஏராளம்.  ஒரு மொழியை ஒரே முறைப்படி பேசவேண்டும் அது தவறினால் அது செந்தமிழ் என்றும் கொடுந்தமிழ் என்றும் டிக்ள்ளொசியா என்ற அடிப்படையில் குமக வழக்கில்  நிலவும் வரிவடிவுக்கு ஆட்படும் வளங்கள் எல்லாம் குமுகத்தின் உயர்தர வெளிப்பாடுகளையே செந்தமிழ்த் தரத்தில் உள்ளவற்றையே பதிவது  இயல்பு.  எனவே வரி வடிவம் ஒரு குமுகத்தின் முழு வளங்களையும் வெளிப்படுத்துவதல்ல

நான்காவது கருத்து

எழுத்து என்ற வரிவடிவம் காலத்துக்கு ஏற்ப மாற்றம் பெறுவது ஒலிவடிவம் குமுகத்தின் மரபுவழிக் கட்டுபாட்டால் மாறாது நின்று நிலவக்கூடியது.  வேற்று மொழித் தாக்கம் அதிகம் வரிவடிவில் ஊடுருவுவதுபோல் பேச்சில் ஊடுருவது கடினம்.  ஞானப்பழம்போல் எழுதினாலும் வாலப்பளம்போல்தான் மதுரைகாரர்களால் பேச முடிகிறது.  300 அண்டுகளாகத் தமிழன் ஆங்கிலத்தில் ஒங்கி உலகளந்த்தாலும் அவன் பேச்சு தமிங்கலமாகத்தான் இருக்கிறது.  தங்கிலிஷ் பேச்சுத்தரம் போன்று நம் எழுத்துத்தரம் இருப்பதில்லை.  நமக்கு ஆங்கிலம் எழுதத் தெரிந்த அளவு ஆங்கிலம் ஆங்கிலம்போல் பேசத் தெரியவில்லை.  கருத்துவளங்கள் மொழியின் தரம் வரிவடிவங்களால் சீரழிவதைவிடப் பேச்சினால் சீரழியும் என்ற உண்மையின் அடிப்படையில் இன்றுவரை சமஸ்கிரிதம் எழுத்து வரிவடிவில் எல்லார் வாவிலும் புகுந்த அதன் ஒலிவடிவான புனிதத் தன்மையை இழக்க விரும்பவில்லை.  தமிழின் ஒலிவடிவம் தொன்மையானது மாறாதது அதன் எழுத்துவடிவம் காலத்துக்கேற்ப மாறிக்கொன்டே வந்தது.  தமிழ் எழுத்து என்ற வாய்மொழி பல வரிவடிவங்களில் மாற்றாரும் பயன்படுத்தும் வண்ணம் பலவரிவடிவங்களில் வழக்கில் இருந்தது.  வள்ளுவர் காலத்தில் தமிழ் வரிவடிவம் எப்படி இருந்தது என்று அனுமானிக்க இயலவில்லை.  தற்போது வழக்கில் உள்ள வரிவடிவம் தமிழை அச்சேற்றக் கிரந்தக் கலப்புடன் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது அது தமிழனின் உண்மை வரிவடிவம் அல்ல என்ற பூசல் பலகாலமாகத் தொடர்ந்து வருகிறது

இறுதிக் கருத்து

தமிழில் இலக்கணம் எழுத்து என்று சொல்லுவது ஒலியனை வெளிப்படுத்தும் ஒலிவடிவம்.  வரிவடிவம் என்பது எழுத்து என்று உருவானது பின்னரே.  இலக்கண விதிகள் ஒலிவடிவை உள்வாங்கி வாய்மொழியாக வழங்கிய கருத்துவளங்களை வரவிருக்கும் குமுகத்துக்கு செந்தமிழ்த் தரக்கட்டுப்பட்டுடன் வழங்க உருவாக்கிய வரிவடிவங்கள் என்று கொண்டால் எழுத்து என்பது முதலில் சொல் அதன்பின்னரே  அது வரிவடிவம் பெற்றது என்று கருத இடம் உள்ளது

தமிழனின் எழுத்து மாறாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடகிறது.  வரிவடிவம் காலத்துக்கேற்ப மாறியுள்ளது என்பதே என் கால்துட்டுக் கருத்து

நாகராசன்

2013/2/16 rajam <ra...@earthlink.net>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
seshadri sridharan

unread,
Feb 15, 2013, 10:14:25 PM2/15/13
to mint...@googlegroups.com
ஒல் என்பது ஒலிக் கருத்து. இந்த ஒல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று (prothesis) ச்+ஒல் = சொல் என்று ஆகி இருக்கலாம். சொல்லுதல் என்றால் ஒலிபட விளம்புதல், இதாவது, காதில் கேட்கும்படி கூறல் என பொருள் கொள்ளலாம்.

சேசாத்திரி   

rajam

unread,
Feb 15, 2013, 10:29:35 PM2/15/13
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
கால் துட்டுக் கொடுத்து இழையைச் சிறப்பித்துப் பல நல்ல கருத்துரைத்த பேராசிரியர் ஐயா, 

"சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன? தங்களுடைய கருத்து என்ன? 

நன்றியுடன்,
ராஜம்

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2013, 10:29:31 PM2/15/13
to mint...@googlegroups.com
மூத்தோர் சொல் வேதம் என்பார் , அமிர்தம் என்பார்

அப்படியாயின் மூத்தோர் எழுத்து வேதமில்லையா? அமிர்தமில்லையா
எழுத்து , வரிவடிவம் போன்றவைகளுக்கு சொல் உருவான பின்னர்தான் பொருளே மாறு படுகிறது
சொல்லுக்கு முக்கியம் த்வனி
எழுத்தை , வரி வடிவத்தை சொல்லாக்கும் போது
சொல்லாக்குபவர் எப்படிப்பட்ட த்வனியில் சொல்லாக்குகிறார் என்பதைப் பொறுத்தே பொருள் மாறுபடுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/2/16 seshadri sridharan <ssesh...@gmail.com>

rajam

unread,
Feb 15, 2013, 10:33:08 PM2/15/13
to mint...@googlegroups.com, seshadri sridharan
On Feb 15, 2013, at 7:14 PM, seshadri sridharan wrote:

ஒல் என்பது ஒலிக் கருத்து. இந்த ஒல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று (prothesis) ச்+ஒல் = சொல் என்று ஆகி இருக்கலாம். சொல்லுதல் என்றால் ஒலிபட விளம்புதல், இதாவது, காதில் கேட்கும்படி கூறல் என பொருள் கொள்ளலாம்.

சேசாத்திரி   

நன்றி, சேசாத்திரி ஐயா. பார்ப்போம் இன்னும் பல கருத்துரைகள் வரலாம். ;-) 

2013/2/16 rajam <ra...@earthlink.net
 
இதைத் தனி இழையாகத் தொடங்குகிறேன். யார் வேண்டுமானாலும் (திரு கணேசன் உட்பட) பங்கு கொண்டு உரையாடலாம்.  
 
ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழுக்குள்ளேயே தேடவும். பிற மொழிகளுக்குப் போகவேண்டாம்.  
 
"சொல்" என்பது பெயராகவும் வினையாகவும் புழங்குகிறது. இரண்டுக்கும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான். 
 
எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன். 
 
இப்படிக்கு, 
 
ராஜம்

rajam

unread,
Feb 15, 2013, 10:36:27 PM2/15/13
to mint...@googlegroups.com, Tthamizth Tthenee
On Feb 15, 2013, at 7:29 PM, Tthamizth Tthenee wrote:

மூத்தோர் சொல் வேதம் என்பார் , அமிர்தம் என்பார்

அப்படியாயின் மூத்தோர் எழுத்து வேதமில்லையா? அமிர்தமில்லையா
எழுத்து , வரிவடிவம் போன்றவைகளுக்கு சொல் உருவான பின்னர்தான் பொருளே மாறு படுகிறது
சொல்லுக்கு முக்கியம் த்வனி
எழுத்தை , வரி வடிவத்தை சொல்லாக்கும் போது
சொல்லாக்குபவர் எப்படிப்பட்ட த்வனியில் சொல்லாக்குகிறார் என்பதைப் பொறுத்தே பொருள் மாறுபடுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ 

உண்மை, தேனீயாரே. நன்றி. அந்தச் "சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் (root/stem meaning; semantic nuance) என்ன என்றும் சொல்லவும். 

நன்றியுடன்,
ராஜம்

nswami...@socal.rr.com

unread,
Feb 15, 2013, 10:42:14 PM2/15/13
to mint...@googlegroups.com, rajam

குகன் கம்பராமாயணத்தில் சொல்வதாய்..

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ ?

Nagarajan Vadivel

unread,
Feb 15, 2013, 10:49:46 PM2/15/13
to மின்தமிழ்
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்றால் என்ன

தவறாக எழுதினால் ஊடகம் பாழ் தவறாகப் பாடினால் பாட்டே பாழ் என்பதா பொருள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

நாகராசன்

பழமைபேசி

unread,
Feb 15, 2013, 10:57:44 PM2/15/13
to மின்தமிழ்
யாதோ ஒன்றை உணர்த்துவதே ’சொல்’; அது வினையாகிலும் பொருளாகிலும்
அதுவேயாம்!!

rajam

unread,
Feb 15, 2013, 11:01:49 PM2/15/13
to mint...@googlegroups.com
இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயரும் வாத்திச்சி போட்ட மார்க்கும்:

1. தேமொழி 

2. பேராசிரியர் நாகராசன் 

3. திரு சேசாத்திரி ஐயா

4. தமிழ்த்தேனீயார் 

5. எல்லே அண்ணா சாமிநாதன் 

6. பழமைபேசி 

வாத்திச்சி போட்ட மார்க்கு அப்புறம் வரும்! 

;-) ;-) ;-)

--

DEV RAJ

unread,
Feb 16, 2013, 2:06:40 AM2/16/13
to mint...@googlegroups.com
On Saturday, 16 February 2013 08:44:25 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> ஒல் என்பது ஒலிக் கருத்து.<<<

குறளில் ஒலிக்கருத்து எனும் பொருள்
செல்லுபடியாகவில்லை -

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

ஒல்லும் வகையான் - தமக்கியலுந் திறத்தானே [மணக்குடவர்]

முன்மிகை சேர்த்து ‘ சொல்லும் வகையான்’ என மாற்ற வழியுள்ளதா ?
‘சொல்லும் கருமம்’ என அமைந்தால் சீர்மோனை சிறப்புற அமையும்

தேவ்

துரை.ந.உ

unread,
Feb 16, 2013, 2:36:21 AM2/16/13
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel

2013/2/16 rajam <ra...@earthlink.net>

கால் துட்டுக் கொடுத்து இழையைச் சிறப்பித்துப் பல நல்ல கருத்துரைத்த பேராசிரியர் ஐயா, 

"சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன? தங்களுடைய கருத்து என்ன? 
:)

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

seshadri sridharan

unread,
Feb 16, 2013, 2:47:09 AM2/16/13
to mint...@googlegroups.com
அது சரி ஐயா! 

நான் ஒலிக்கு வேர் சொல்லி அந்த வேரைத்தான் முன்மிகையிட்டுக் காட்டினேன். ஒல் > ஓல் > ஓலம் - அலறு எனும் சொல்லைத் தோற்றுவித்தது கண்டீரோ!!  ஒல் என்பதில் பல வேர் பொருள் உண்டு. குறளில் கூறப்படும் ஒல் பொருந்துதற் கருத்து வேரைக் கொண்டது.

சேசாத்திரி       

2013/2/16 DEV RAJ <rde...@gmail.com>

Pandiyaraja

unread,
Feb 16, 2013, 3:25:42 AM2/16/13
to mint...@googlegroups.com

நமது மூஊஊஊஊத்த பாட்டனார் தொல்காப்பியரைச் சொல் என்றால் என்ன என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார். சிந்தித்தேன். எனக்குக் கிடைத்த விடை.

தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில், முதல் இயலான நூன்மரபில், முதற்சூத்திரமே

எழுத்தெனப்படுப என்று தொடங்குகிறது.

ஆனால், அடுத்த சொல்லதிகாரத்தில் முதல் இயலில் சொல்லெனப்படுப என்று சொல்லப்படவில்லை!!!

இங்கு முதல் இயல் கிளவியாக்கம் (சொல்லாக்கம் அல்ல (கிளவி vs சொல் ??)), அடுத்தது வேற்றுமையியல். அப்புறம் வேற்றுமை மயங்கியல். அதன் பின் விளி மரபு. அதற்கும் அப்புறம், மிகவும் சாவதானமாகப் பெயரியல் என்று வைத்திருக்கிறார் (காரணம் என்ன?) அங்குதான் சொல்லைப்பற்றிப் பேசுகிறார் நமது தொல்ஸ்.

1.எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே – இன்னும் சொல் என்றால் என்ன என்று சொல்லவில்லை.

2. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.

– சொல்லே தெரியாது! இதில் சொன்மை என்கிறார் தொல்ஸ்!!

3. அப்புறம் பொருண்மை பற்றிக் கூறுகிறார்.

4. அப்பாடா! சொல்லுக்கு வந்துவிட்டார் தொல்ஸ்!

சொல்லெனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டென்ப அறிந்திசினோரே

இப்போதாவது சொல் என்பதை define செய்கிறாரா? இல்லை. சொல்லின் வகையைப் பேசுகிறார்.

ஆக, சொல் என்றால் என்ன? நமக்குக் கூறப்படவில்லை. காரணம், சொல் என்றால் என்ன என்பதையே சில சொற்களின் மூலம்தானே சொல்லமுடியும்?

பவணந்தியார், எழுத்து என்றால் என்ன என்று கூறுகிறார்.

மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து

அது முதல் சார்பென இருவகைப்படுமே.

என்கிறார். அதாவது எழுத்து என்பது a collection of sound atoms. என்கிறார். How scientific? என்று சொல்லத் தோன்றுகிறதா? இல்லை. ஏனென்றால் இந்த வரையரை பல கேள்விகளை எழுப்புகிறது.

What is an atom?

Is sound in the form of atom?

Can you collect them?

Does a collection exist?

This is a question of existence.

கணிதத்தில் Take the set of all integers divisible by 3, 4 and 5. என்றால், அடுத்து வரும் கேள்வி, Does such a set exist? Then you have to prove it by showing an example.

அதனால்தான் தொல்ஸ் கூறுகிறார்:

எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்

முப்பஃதென்ப.

பின்னாஆஆஆஆஆல் கூறுகிறார்:

பொருட்குப் பொருள்தெரியின் அது வரம்பிலவே.

எழுத்து என்றால் அணுத்திரள். அணு என்றால்? திரள் என்றால்?

Define an unknown object through a known object : From known to unknown – Aristotle.

We cannot and should not define what is fundamental to a study. அது மரபு. எனவேதான் நூன்மரபு என்றும் மொழிமரபு என்றும் பெயர் கொடுத்துள்ளார் தொல்ஸ்.

அப்படிப்பட்ட அவர் ‘சொல்’ என்றால் என்ன என்று சொல்லி, பவணந்தியாரைப் போல சிக்கலில் மாட்டிக்கொள்வாரா? யார் கேட்டாலும் சொல்லமாட்டார் – அம்மையார் உட்பட!!!!

ப.பாண்டியராஜா

Prakash Sugumaran

unread,
Feb 16, 2013, 5:40:16 AM2/16/13
to mint...@googlegroups.com
ஓர் உணர்வை வெளிப்படுத்தும் ஒலி. ஒலி தனித்து நின்றோ பல ஒலிகள் தொடர்ந்து நின்றோ ஒரு அர்த்தத்தை,

நிகழ்வை புரியத் தருவது சொல். சில + ஒலிகள் => சிலொலிகல் => சொல் !?

2013/2/16 Pandiyaraja <pipi...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Hari Krishnan

unread,
Feb 16, 2013, 6:27:10 AM2/16/13
to mintamil

2013/2/16 rajam <ra...@earthlink.net>

எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்.....

இனிமே எனிமா (அதான் ‘பின்‘ஊட்டம் பத்தி கவனமா இருக்கணும்.  

வெல்லுதற்கே வாதம் விளையும் வரையினில்நான்
சொல்வதற்கும ஏதுண்டு சொல்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Prakash Sugumaran

unread,
Feb 16, 2013, 8:01:00 AM2/16/13
to mint...@googlegroups.com

சூரிய ஒளி => சிவப்பு => சிவ => சிறப்பு => சிறப்பு (சிவ) + ஒலி + உணர்தல் => சலம்புதல் !*?*! சலம்புறது பிரிந்து சொல் ( தமிழ் ) சொப்பு ( தெலுகு ) பற(மலையாளம்)

ஹரிகி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்.. 'உள்' வைத்து நினைக்கவும், துடிக்கவும், தவிக்கவும் செய்யாமல் 'பின்' ஊட்டம் தடுக்க 'முன்' வாமிட் எடுக்கவும்..

2013/2/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
361.gif

Hari Krishnan

unread,
Feb 16, 2013, 8:31:12 AM2/16/13
to mintamil

2013/2/16 Prakash Sugumaran <praka...@gmail.com>

ஹரிகி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்.. 'உள்' வைத்து நினைக்கவும், துடிக்கவும், தவிக்கவும் செய்யாமல் 'பின்' ஊட்டம் தடுக்க 'முன்' வாமிட் எடுக்கவும்..

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு 13-14 வயது இருக்கும்போது, அவரிடம் ஈற்றடி கொடுத்து வெண்பா இயற்றச் சொல்வார்கள்.  ஒருவர் இந்தச் சின்னப் பையன எப்படியானும் மடக்கணும்னு பார்த்தார்.  ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று ஈற்றடி கொடுத்து வெண்பா இயற்றச் சொன்னார்.  ‘அது ஈற்றடியாக அமைய முடியாது.  நேரொன்றாசிரியத் தளை வருகிறது.  அதனால் ‘துாயவிப்பாட் டுக்கர்த்தம் சொல்’ என்று அமைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனடியாக ஒரு வெண்பாவைச் சொன்னார்:

ஒண்கமலம் வாழ்ந்(து) அன்னமாகி உறவணைந்து
தண்கயனீர் தூங்கி தகுமேரூர்ந்து - செங்கதிரோன்
மேய முகத்தான் மூவராகும்.  தோன்றியதென்?
தூயவிப்பாட் டுக்கர்த்தம் சொல்.

அர்த்தம் புரியல இல்ல?  இது ஒரு சிலேடை.

ஒண்கமலம் வாழ்பவர் பிரமன்; அன்ன வடிவம் எடுத்து சிவனுடைய முடிதேடிச் சென்றதனால், அன்னம் ஆகி என்றார்.  உறவு அணைந்து,  தாயான உறவாலே உரலிலே கட்டப்பட்ட கண்ணன், திருமால்.  தண்கய நீர் தூங்கி - பாற்கடலில் பள்ளி கொள்வதாலும் திருமால்.  பிறகு ஏர் ஊரும்.  ஆக இப்படி, மூவராகவும் விளங்கும் எதுவோ அதுதான் இந்தப் பாட்டுக்கு அர்த்தம்.

நெல் என்ன செய்யும் என்றால், கமலம் வாழ்ந்து (கமலம் என்றால் தண்ணீர் என்று இன்னொரு பொருளுண்டு), அன்னமாகி, சோறாக மாறி, உறவுகளின் வயிற்றைச் சென்றடையும்.  தண்கயநீர் தூங்கும்.  தண்ணீர் நிறைந்த வயலில் தங்கிக் கிடக்கும்.  அறுவடையான பிறகு, எருதுகள் பூட்டிய வண்டியில் ஏறும்.  இந்தக் காரணத்தால், நெல் மும்மூர்த்திகளாக விளங்குகிறது.  ஆகவே, தூய்மை நிறைந்த இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்.  சொல் என்றால் நெல் என்றும் ஒரு பொருளுண்டு.  ‘இப்பாட்டுக் கர்த்தம் சொல்’ என்று ஏவலாகச் சொன்னதனை, ‘இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல் எனப்படும் நெல் என்று, முற்றாக முடித்தார்.

சொல்லுன்னா நெல்லு.  நெல்லுன்னா சொல் இல்ல.  கொத்துக் கொத்தா நெல் விளையும்.  கொத்த அறுவடை செய்யப் போனா, கொத்தவும் செய்யும். :)
361.gif

பழமைபேசி

unread,
Feb 16, 2013, 12:05:33 PM2/16/13
to மின்தமிழ்
இதற்கான முடிவுகள் எப்ப வரும்?

rajam

unread,
Feb 16, 2013, 12:12:27 PM2/16/13
to mint...@googlegroups.com, பழமைபேசி

On Feb 16, 2013, at 9:05 AM, பழமைபேசி wrote:

இதற்கான முடிவுகள் எப்ப வரும்?

Polls are still open, given the time difference between the Continents. இன்னும் ஓரிரண்டு நாள் கொடுத்துப் பார்க்கலாம் என்று ஆசை. அதற்கிடையில் இன்றோ நாளையோ ஒரு மேலதிகக் குறிப்பும் தருகிறேன். சரியா? 

rajam

unread,
Feb 16, 2013, 12:46:43 PM2/16/13
to mint...@googlegroups.com
இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள்.

எல்லார் பெயருக்கும் முன்னால் திரு என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொள்ளவும். நன்றி.

7. தேவ் 

8. துரை

9. பாண்டியராஜா

10. ப்ரகாஷ் சுகுமாரன்

11. ஹரிகி 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னும் ஆர்வம் குறையாது பங்கெடுக்க விரும்புவோருக்கும், பிறருக்கும் ... ஒரு சின்ன மேலதிகக் குறிப்பும் கேள்வியும்:

(i) 'சொல்' என்பது எப்போதும் ஒலியுடன் தொடர்புடையதா?

(ii) 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும் தொடர்பு உண்டா?

நன்றியுடன்,
ராஜம் 

பி.கு: இந்த இழை யாரையும் சோதிக்கவோ, மட்டப்படுத்தவோ இல்லை, நம்புங்கள். அண்மையில் ஒரு நண்பர் கேட்டதுக்கு விளக்கம் சொன்னேன் -- என் பழைய கால அறிவிலிருந்து எடுத்து. அதை இங்கே புதிய தலைமுறையிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்த இழை. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேமொழி

unread,
Feb 16, 2013, 5:40:04 PM2/16/13
to mint...@googlegroups.com

(i) 'சொல்' என்பது எப்போதும் ஒலியுடன் தொடர்புடையதா?

ஆமாம்...
சொற்கள் அசைகளால் ஆனவை...பேச்சொலியின் அடிப்படைத் துணுக்கு அசை ஆகும்
அதனால் ஒலிக்கும் சொல்லுக்கும் தொடர்புண்டு

(ii) 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும் தொடர்பு உண்டா?

முரசொலி, பேச்சொலி  என்று சொல்லும் பொழுது சு + ஒலி = சொலி என்று வருகிறது
ஒலி என்றுதான் பொருள் வருகிறது.
இந்த இடங்களில் முரசு சொல்லுவது, பேச்சு சொல்லுவது என்ற பொருள் கொள்ள முடியாது.
முரசின் ஒலி, பேச்சின் ஒலி என்றுதான் நான் பொருள் கொள்வேன்.
பொருள் தேடிய பொழுது  'சொலி' என்றால் மரப்பட்டையைக் குறிக்கிறது என்று தெரிகிறது.
அதனால், 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும்தொடர்பு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

..... தேமொழி

rajam

unread,
Feb 16, 2013, 8:17:36 PM2/16/13
to mint...@googlegroups.com
மேலும் அதிகக் குறிப்பு:

கீழ்க்காணும்  குறிப்பு "சொல்" என்பது மனிதரின் பேச்சொலியோடு மட்டும் தொடர்புடையது அன்று என்று தெரிவிக்கிறது: 

(யானைப் பெரு நிரை) வருத்தம் சொலாது (புறநானூறு 333) 

***********************************************************************

கீழ்க்காணும் குறிப்பெல்லாம்  "சொலி" என்ற அடிச்சொல்லின் பல வேறு வடிவங்களைக் காட்டுகின்றன:

சுழல் மரம் சொலித்த (வரகு) (அகநானூறு 393) 

காம்பு சொலித்தன்ன அறுவை (சிறுபாணாற்றுப்படை)

களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மரப்பூசல் (அகநானூறு 8) 

கிளையொடு
நான்முலைப் பிணவல் சொலிய, கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற
தறுகண் பன்றி  (அகநானூறு 248)

உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் (அக 338)

(சொலிய == நீக்குவதற்காக)

காம்பின் 
கழைபடு சொலியின் இழை அணிவாரா
ஒண்பூங்கலிங்கம் (புறநானூறு 383)

(சொலி == மூங்கிலின் உட்புறத்தே இருக்கும் மிக மெல்லிய வெண்மையான படர்வு [filament])

சொன்றி  (< சொல் + தி)
----------------------------------------------------------

உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி (குறுந்தொகை 233)

அடங்காச் சொன்றி (நற்றிணை 281)

மதி மருளும் வாடாச் சொன்றி (பதிற்றுப்பத்து 24)

சாறு அயர்த்தன்ன மிடாஅச் சொன்றி (குறிஞ்சிப்பாட்டு)

அழித்தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி (மதுரைக்காஞ்சி) 

சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி (பெரும்பாணாற்றுப்படை)

குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி (பெரும்பாணாற்றுப்படை)

புன்புல வரகின் சொன்றியொடு (புறநானூறு 197)

************************************************************************** 

ஆகவே ... சொல், சொலி, சொன்றி ... ஆகிய சொற்களின் மூலம் அடிப்படைப் பொருளைக் கண்டுகொள்ளலாமா என்பதுவே என் முயற்சி.  

இப்படிக்கு,
ராஜம் 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேமொழி

unread,
Feb 16, 2013, 9:20:58 PM2/16/13
to mint...@googlegroups.com

ராஜம் அம்மா அதிகத் தகவல்கள் தர தர, என் அறியாமையின் அளவும் அதிகம் எனப் புலப்படுகிறது :D

..... தேமொழி

seshadri sridharan

unread,
Feb 16, 2013, 9:37:50 PM2/16/13
to mint...@googlegroups.com
 //Polls are still open, given the time difference between the Continents. இன்னும் ஓரிரண்டு நாள் கொடுத்துப் பார்க்கலாம் என்று ஆசை. அதற்கிடையில் இன்றோ நாளையோ ஒரு மேலதிகக் குறிப்பும் தருகிறேன். சரியா? 

இன்னும் ஆர்வம் குறையாது பங்கெடுக்க விரும்புவோருக்கும், பிறருக்கும் ... ஒரு சின்ன மேலதிகக் குறிப்பும் கேள்வியும்: //

(i) 'சொல்' என்பது எப்போதும் ஒலியுடன் தொடர்புடையதா?

ஈழத்தில் சொல்லுதலை கதைத்தல் என்பர். பாவாணர் கதை என்றால் கத்திச் சொல்லுதல் என வேர் பொருள் தருகின்றார். கத்துதல் (கல்+து+தல்) - கல் இங்குஒலியை குறிக்கும் வேர்மூலமாக உள்ளது. கதறு, கனை ஆகிய ஒலித் தொடர்பு சொற்கள் 'கல்' வேர் கொண்டவை. 

(ii) 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும் தொடர்பு உண்டா?

நீங்கல் கருத்தோடு ஒலிக் கருத்து பொருந்தாது.

Hari Krishnan

unread,
Feb 16, 2013, 9:44:05 PM2/16/13
to mintamil

2013/2/17 rajam <ra...@earthlink.net>

கீழ்க்காணும்  குறிப்பு "சொல்" என்பது மனிதரின் பேச்சொலியோடு மட்டும் தொடர்புடையது அன்று என்று தெரிவிக்கிறது: 

(யானைப் பெரு நிரை) வருத்தம் சொலாது (புறநானூறு 333) 

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள்.  அட என்ன விடுங்க.  நான் பழம் பஞ்சாங்கம்.   பேராசிரியரோ டாக்டரோ இல்ல.

rajam

unread,
Feb 16, 2013, 9:53:22 PM2/16/13
to mint...@googlegroups.com
நானும் "பேராசிரியை" இல்லை! எந்த ஊர்ப் பேராசிரியை என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாதப்பா! எல்லாம் பழவினை போல. 

ஆனாலும் ... எனக்குத் தமிழ்த் திமிர் உண்டு. அதுவே போதுமப்பாஆஆஆ! ;-) ;-) ;-)

சரி, இனி "சொல்"லின் அடிப்படைப் பொருளுக்குத் திரும்புவோம். 

Nagarajan Vadivel

unread,
Feb 16, 2013, 10:07:36 PM2/16/13
to மின்தமிழ்
உங்களைச் சொன்னதா நினைச்சா அது பழவினையாக்கும்
 
குழப்பம் எழுத்தில் சொல்லில் அல்ல
 
சொல் என்பது எழுத்துக்கள் கொண்ட கூட்டு
 
அதன் அடிப்படையாக விளங்கும் ஒலியன்களான எழுத்துக்கள்
 
எழுத்து atomic-
 
சொல் Molecular
 
அவற்றின் வரிவடிவம் ideographic or pictographic அடிப்படையில் அமையும்
 
நாகராசன்

2013/2/17 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Feb 16, 2013, 10:08:55 PM2/16/13
to mintamil

2013/2/17 rajam <ra...@earthlink.net>

சரி, இனி "சொல்"லின் அடிப்படைப் பொருளுக்குத் திரும்புவோம். 

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் இருக்கிறதா?  குறுந்தொகைலயோ எதுலயோ, பல்லியின் ‘சொல்லை’ அந்தப் பெண் கேக்கறாளா?  ஆக, மனிதன் பேசுவது மட்டும்தான் சொல் இல்லை என்றாகிறதா?

அதான் நான் சொல்ல வந்தது.

rajam

unread,
Feb 16, 2013, 10:33:59 PM2/16/13
to mint...@googlegroups.com
பேராசிரியர் ஐயா,

உங்கள் விளக்கம் மொழியியலுக்குப் பொருந்தும். ஆநால், "சொல்" என்ற எழுத்துக்கூட்டின் அடைப்படைப் பொருள் காண இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போய்ப் பார்க்கணும். 

rajam

unread,
Feb 16, 2013, 10:57:24 PM2/16/13
to mint...@googlegroups.com, Hari Krishnan
On Feb 16, 2013, at 7:08 PM, Hari Krishnan wrote:

2013/2/17 rajam <ra...@earthlink.net>
சரி, இனி "சொல்"லின் அடிப்படைப் பொருளுக்குத் திரும்புவோம். 

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் இருக்கிறதா?  குறுந்தொகைலயோ எதுலயோ, பல்லியின் ‘சொல்லை’ அந்தப் பெண் கேக்கறாளா?  

குறுந்தொகைய்லெ பல்லி தன் துணையைப் "பயிரும்" என்று சொல்றாங்க. மத்த இடங்களில் பல்லியோடு சேர்த்து ...  "பட்டென" "படும்" "தேற்றும்" "தெற்றுவது" "இசை"ப்பது "ஆடிய" ... அப்படித்தான் சொல்றாங்க. எங்கேயும் "சொல்" என்ற புழக்கம் பல்லியோடு சேர்த்து இல்லையே. 

ஆக, மனிதன் பேசுவது மட்டும்தான் சொல் இல்லை என்றாகிறதா?

அதான் நான் சொல்ல வந்தது. 

ஆகா, அதான் நானும் கேட்க விழைந்தது! Right on to the point! 

seshadri sridharan

unread,
Feb 17, 2013, 12:31:27 AM2/17/13
to mint...@googlegroups.com
//ஈழத்தில் சொல்லுதலை கதைத்தல் என்பர். பாவாணர் கதை என்றால் கத்திச் சொல்லுதல் என வேர் பொருள் தருகின்றார். கத்துதல் (கல்+து+தல்) - கல் இங்குஒலியை குறிக்கும் வேர்மூலமாக உள்ளது. கதறு, கனை ஆகிய ஒலித் தொடர்பு சொற்கள் 'கல்' வேர் கொண்டவை. .....

விடுபட்டதை சொல்கிறேன்.

கல் > கால் > காள் -ஒலிக்கருத்து.

நான் பணிபுரிந்த இடத்தில் ஒரு உடனுழைக்கும் ஊழியர் யாரையோ உரக்க விளித்தர். அதற்கு  என் மேலதிகாரி என்னிடம் ஏன் அவன் 'காள் காள்'னு கத்தறான் என்று கேட்டார். 
எக்காளம் > எக்  + காள் + அம் = எக்கு - உயரே, காளம் - ஒலிப்பு. வலிந்த ஒலிப்பே எக்காளம் ஆகும்.     

Sankara RamaSamy

unread,
Feb 16, 2013, 9:48:33 PM2/16/13
to mint...@googlegroups.com

http://naalumorusol.wordpress.com/about/

தமிழ் உலகம் நாளும் ஒரு சொல்

தமிழ் உலகுடன் தமிழ்ச் சொற்களைப் பொருள் உணர்ந்து பரப்புவோம்

வணக்கம்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; – கணியன் பூங்குன்றனார், புறநானூறு (192) தமிழ் உலக மடலாடற் குழு 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் இந்த இணையக் கருத்துப்பரிமாற்றக் குழு தொடங்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்கைமுறை, அரசியல் என எல்லாவற்றையும் பண்பட்ட வகையில் அலச அமைக்கப்பட்ட குழு.

தமிழ் உலகம் அறக்கட்டளை வழி தமிழுக்குச் சேவையாற்றியவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விருதும் வழங்குகிறது. அதோடு சாத்தியமான போது தமிழறிஞர்களின் வாரீசுதாரர் குடும்பங்களில் நலிவுற்றவ‌ர்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறோம். 

பாவாணர் அவர்களின் மகன் அடியார்க்கு நல்லான் அவர்களின் முழுப் பராமரிப்புக்கும் தமிழுலகம் அறக்கட்டளை ஆவண செய்துள்ளது.மற்றும் பாவாணர் அவர்களின் உறவுகளுக்கும் தமிழ் உலகம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நல உதவிகளுக்கு ஆவண செய்தது.

தமிழ் உலகம் மடலாடற் குழுவின் உறுப்பினர்களால் பங்களிப்புச் செய்யும் படைப்புகளை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் புத்தகமாக வெளியிட 2011ம் ஆண்டின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ் உலக மடலாடற் குழுவில் சேர

 tamil-ulaga...@googlegroups.com 

எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள்.

குளோபல் தமிழ் பிறகு தமிழ் உலக மடலாடற் குழுவில் நாளும் சில சொற்கள் என்ற தொடர் தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக தொடங்கப்பட்டது. அதனை இங்கு வெளியிடுவதோடு புதிய சொற்களையும் இங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பல சொற்களுக்குப் பல பின்னூட்டல்கள் கிடைத்துள்ளன அவற்றையும் அவ்வப்போது வெளியிட உள்ளோம். இனியும் வர உள்ள பின்னூட்டல்களையும் சேர்த்துக்கொள்வோம். இந்தத் தொடரை மேலும் மேம்படுத்த உங்களின் மேலான ஆலோச‌னைகளையும் வரவேற்கிறோம்.

அன்புடன்

ஆறு.பழனியப்பன்

ஆல்பர்ட்

மணியம்

மட்டுறுத்துனர்கள்

தமிழ் உலகம்

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” – பாரதியார்​​

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” - பாரதி

2013/2/17 தேமொழி <them...@yahoo.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

Subashini Tremmel

unread,
Feb 17, 2013, 12:19:47 PM2/17/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/2/16 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆமாம்.  நீங்கள்  ஒலிப்பதிவு செய்து தந்த  நமது த.ம.அ தொகுப்பில்  இருக்கும் ஆசிரியர் நாகநந்தியின்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொற்பொழிவில் மிக அழகாக இதனைச் சொல்கின்றார். நான் கேட்டு ரசித்திருக்கின்றேன்.

சுபா

361.gif

Nagarajan Vadivel

unread,
Feb 17, 2013, 12:23:49 PM2/17/13
to மின்தமிழ்
//கொத்த அறுவடை செய்யப் போனா, கொத்தவும் செய்யும். :)//

இதையும் ரசித்தீர்களா

நாகராசன்

2013/2/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
361.gif

Prakash Sugumaran

unread,
Feb 17, 2013, 4:38:51 PM2/17/13
to mint...@googlegroups.com
 சொலவடை, ஸ்லோகம்.... ( சுலோகம், ச்லோகம் ) ??
 
Slang என்பதற்கு கீழ்கண்டவாறு விக்கியில் வரையறை தரப்பட்டு உள்ளதால்..
 Slang ; is the use of informal words and expressions that are not considered standard in the speaker's language or dialect but are considered acceptable in certain social settings. Slang expressions may act as euphemisms and may be used as a means of identifying with one's peers... (wiki)
 
நாபியிலிருந்து ( உள்ளிருந்து ) ஒன்றை உணர்த்த ( உஸ் என ) கிளம்பி வெளிப்படும் காற்று ஒரு ஓசையாக அல்லது ஒலியாக வெளியில் விழுவதால்..

உஸ் + ஒல் => சொல்.. ஆனால் ஸ் என்பது தமிழுக்கு உட்பட்டதா..

இப்படி எல்லாம் நான் யோசிச்சா.. மத்தவங்க என்னைய பத்தி வேற மாதிரி யோசிப்பாங்களோ.. என சந்தேகம் வருவதால் சீக்கிரம் சீக்கிரம் முடிவை அறிவிக்குமாறு ராஜம் அம்மாவை கேட்டுக் கொள்கிறேன். ( விடை தெரியாத சோகத்தில் நான் இருப்பதால் சிரிக்கும் ஸ்மைலியை நீங்களே போட்டுக் கொள்ளவும் )

Prakash Sugumaran

unread,
Feb 17, 2013, 4:51:28 PM2/17/13
to mint...@googlegroups.com

அடடே.. ராஜம் அம்மா பிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

சொல் என்பது ஒன்றை  பெயராக (ஒலியாக, ஓசையாக) வெளிப்படுத்த நிகழும் வினை.

பெயரை வெளிப்படுத்த நிகழும் வினை = சொல். சரிதானே ??

2013/2/18 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Feb 17, 2013, 5:31:59 PM2/17/13
to mint...@googlegroups.com

பெயரை வெளிப்படுத்த நிகழ்ந்த வினையை குறிக்கும் பெயர்.. சொல்.

சீக்கிரம் வந்து முடிவை அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ( ஒரு சொல்லுக்கு அர்த்தம் புரிய ஒரு நா தூக்கம் போச்சு.. தாய்மொழி !! தப்புன்னு மட்டும் சொல்லி பல நாள் தூக்கத்த கெடுத்துப் புடாதீங்க )

2013/2/18 Prakash Sugumaran <praka...@gmail.com>

rajam

unread,
Feb 17, 2013, 8:06:40 PM2/17/13
to mint...@googlegroups.com, Prakash Sugumaran
அடடா,  அன்பின் ப்ரகாஷ் சுகுமாரன், 

தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள வேறு எத்தனையோ (இனிய) அனுபவங்கள் இருக்கவேண்டிய இந்த இள வயதில் ... போயும் போயும் இந்த ஒரு சின்ன இலக்கண ஆய்வையா ஒரு காரணமாக எடுத்துக்கொள்வது??!!! ;-) மகா lame excuse! என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதையா! 

ப்ரகாஷ், விடையைத் தெரிந்துகொண்டு, அதை மறைத்துவைத்துக்கொண்டு இங்கே விளயாட வரவில்லை நான். பிறரைச் சோதிக்கவும் வரவில்லை. எனக்குத் தோன்றிய கருத்துச் சரிதானா என்று மற்றவரையும் கேட்டுத் தெரிந்துகொள்ளவே இந்த இழை. 

என் கருத்தை முதலிலேயே சொல்லிவிட்டால் ... பிறர் தாங்களாகச் சிந்தித்துச் சொல்லும் வாய்ப்பை அது தடைப்படுத்தும், இல்லையா? 

என் கருத்தை எல்லார் வாயிலும் மனதிலும் மண்டையிலும் திணிக்கும்படி அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல நான் என்ன அந்தச் சொல் பிறந்த காலத்தில், நண்பர் ஹரி ஒரு முறை சொன்ன மாதிரி, கோஷா ஆஸ்பத்திரியில் அந்தச் சொல்லின் தாய்க்குப் பிரசவம் பார்த்தேனா?! இல்லை. அல்லது, என் அரண்மனை வீட்டு வாசலில் வந்து காத்திருந்து இரந்த/இரக்கும் ஒரு தமிழ்ப் புலவராகத் தொல்காப்பியர் இருந்தாரா? அதுவும் இல்லை. தொல்காப்பியர் எனக்கு மட்டும் என்று எந்தத் தனிக் கருத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போகவில்லை. நான் ஒரு 'நித்ய மாணவி.'

மூன்று சொற்கள் சொல்லியிருந்தேன்: சொல், சொலி, சொன்றி 

இவை எல்லாமே பெயராகப் பயன்படும். சொல், சொலி மட்டும் வினையாகவும் பயன்படும். சொன்றி பெயராக மட்டும் பயன்படும். இந்த மாதிரி வழக்காற்றை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை அறிந்து அடிப்படைப் பொருள் காண்பது என் முயற்சி. 

இதற்கிடையில், எப்பவும்போல் X < L; B < Y; P < G ... என்று திணித்துப் போய்க்கொண்டிருந்தால் ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. 

இது போட்டியில்லை. இன்னும் ஏதாவது கருத்து வருகிறதா என்று காத்துக்கொண்டிருக்கிறேன். நல்ல விளக்கங்கள் கிடைத்தவுடன் என் கருத்தைச் சொல்கிறேன். அது ஒன்றும் பிரமாதமில்லை, ஏமாந்துபோகவேண்டாம். 

அன்புடன்,
ராஜம்

shylaja

unread,
Feb 17, 2013, 9:31:56 PM2/17/13
to mint...@googlegroups.com
கருத்துப்பரிமாற்றம்  சுவையாக உள்ளது...எனக்கு அதிகம் சொல்லத்தெரியாததால்  ரசிகையாக இங்கே நான் இருக்கப்போறேன்!

2013/2/18 rajam <ra...@earthlink.net>

--
ஷைலஜா
 
 ்

Gowri Vimalendran

unread,
Feb 18, 2013, 12:07:10 AM2/18/13
to mint...@googlegroups.com
ஓரெழுத்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ சேர்ந்து பொருள் தருமாயின் அது 'சொல்' எனப்படும் அந்த சொல்லினை பிறருக்கு சொல்வது
வினை வடிவமாகிறது. 
உ+ ம்--- நான் "சொல்"வதை போய் அவனுக்கு "சொல்" என்ற வாக்கியத்தில் சொல் என்பது பெயராகவும் வினையாகவும் வருகிறது. 

2013/2/18 shylaja <shyl...@gmail.com>

--
அன்புடன்
கெளரி விமலேந்திரன்

Pandiyaraja

unread,
Feb 18, 2013, 2:12:11 AM2/18/13
to mint...@googlegroups.com
>>
ஓரெழுத்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ சேர்ந்து பொருள் தருமாயின் அது 'சொல்' எனப்படும்
சொல் = எழுத்து + பொருள்
if x = a + b , a and b should be known.
எழுத்து? - தெரியும் (எழுத்தெனப்படுப அகர முதல்.....).
பொருள்? - அப்படியென்றால் என்ன?
'சொல்'-ஐ வரையறை செய்யப்போனால் சிக்கல் உருவாகும்.
அதனால்தான் தொல்காப்பிய்யரே சொல் என்றால் என்ன என்று சொல்லவில்லை!!
ப.பாண்டியராஜா
(This is mathematical logic - very rigorous).ஆனானப்பட்ட Euclid-ஏ இதில் மாட்டிக்கொண்டார். ஆனால் நம் தொல்காப்பியர் அந்தத் தவறைச் செய்யவில்லை. That IS the greatness of tholkAppiyar!!!

rajam

unread,
Feb 18, 2013, 3:47:34 AM2/18/13
to mint...@googlegroups.com
இப்படி எல்லாரும் அடம் பிடித்தால் என்ன செய்வது? 

'சொல்' என்பதற்கு வரையறை (definition) கேட்கவில்லை நான். அதற்குப் பொருள் (semantic nuance) என்ன என்று பார்க்கலாமே என்றுதான் சொன்னேன். 

தொல்காப்பியரின் பெருமையையும் குறை சொல்லவில்லை.

ஓர் அயல்நாட்டவருக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் "சொல்" என்பதற்குப் பொருள் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

குறிப்பாக, 'What does சொல் mean?' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

'I don't know.' என்று சொல்வீர்களா?

'Our great Tolkappiyar himself didn't explain it.' என்று சொல்வீர்களா?

' 'சொல்' என்பதை ஓர் இடுகுறியாக எடுத்துகொண்டு போங்கள்' என்று சொல்வீர்களா? 

'to say,  to tell' என்று தேமொழி நூலெடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொஞ்சம் மேலெடுத்துப் போகமுடியுமா என்று பார்க்கலாமே?

சொல், சொலி, சொன்றி ... இவற்றுக்கு இடையே தொடர்பு இருக்கா? 

எதாவது எடுத்துக்காட்டாவது தாருங்களேன். 

சரி, நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். நம்ம ஊர்லெ சோளக்கருது/சோளக்கதிர் இருக்கு, இல்லையா? அதை வைத்து, சொல், சொலி, சொன்றி ... இவற்றை விளக்க முடியுமா என்று பாருங்களேன். 

தொல்காப்பியர் பெருமையைக் கொஞ்சம் தள்ளிவைக்கவும். மிக்க நன்றி!

Pandiyaraja

unread,
Feb 18, 2013, 4:19:21 AM2/18/13
to mint...@googlegroups.com
அன்புடை அம்மையீர்,
வணக்கம். தங்களின் கேள்வியை முதலில் நான் தவறுதலாகப் புரிந்துகொண்டது என்னமோ உண்மைதான். என்னுடைய முதல் மடல் அந்தத் தவறான புரிந்துகொள்ளுதலுக்கான பதில். அப்புறம்தான் நீங்கள் என்ன 'சொல்'ல வருகிறீர்கள் எனப் புரிந்தது. சொல்லாராய்ச்சி பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. 'இந்த ஆட்டெக்கி நான் வரல்ல' என்று சொல்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால், பதில் எழுதியோர் அட்டவணையிலிருந்து என் பெயரை நீக்கிவிடச் சொல்லியும் எழுதலாம் என்று எண்ணி இருந்த வேளையில், 'சொல்' என்றால் என்ன என்ற வரையறையைப் பார்த்ததும், மீண்டும் கை துறு-துறு. அவ்வளவுதான். தங்களின் நேர வீணடிப்புக்கு மன்னிக்க. களத்திலிருந்து வெளியேறி, காம்பவுண்டு சுவரில் உட்கார்ந்துகொண்டேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

seshadri sridharan

unread,
Feb 18, 2013, 4:50:43 AM2/18/13
to mint...@googlegroups.com
ஒரு கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ இன்னொருவருக்கு புரியும்படி உரைத்தலே சொல்லுதல் ஆகும். அதை ஒருவரை உரைக்குமாறு சொல்வது ஏவல்  வினை. இந்த வரையறை போதுமா?

சேசாத்திரி 

2013/2/18 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Feb 18, 2013, 7:51:41 AM2/18/13
to மின்தமிழ்
சொல் தனியன் தன் உள்ளக் கிடக்கையை கருத்துருவாக மற்றவர் அறியத்தக்க வகையில் வாய் ஒலியாக அதையே வரிவடிவாக எழுத்தில் வெளிப்படுத்தும் திறன்

குமுகத்தில் புதிதாய்ப்பிறந்த குழந்தைக்கு ஒலிவளம் உண்டு.  அதை குமுக உறுப்பினர்கள் பயன்படுத்தும் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு சொல்வளம் உருவாகிறது

மனிதக் குரலில் எழுப்ப ஒரு குறிப்பிட்ட ஒலிவரிசைக்குள் மட்டுமே குரல் எழுப்ப முடியும்.  அந்த ஒலி வரிசையில் இடைவெளிவிட்டு ஏற்றியும் இறக்கியும் குரல் எழுப்பும்போது அதை ஒரு கருத்துருவுடன் இனைத்துப் பயின்று அதே பயிற்சி உடைய மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற அடிப்படையாக அமைந்த கருவியே சொல்

பொருளே அறியாது ஒலி எழுப்பலாம் பொருளே அறியாமல் ஒரு சொல்லை பயிற்சிமூலம் வெளிப்படுத்தலாம் கீழே உள்ளபடி
ஒலியின் வெளிப்பாடாக ஒரு கருத்துருவை பேச்சாக பாட்டாக இசைக்கருவியில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் மனிதன் வெளிப்படுத்துவது எல்லாம் சொல் தானே

http://www.youtube.com/watch?v=g1r4TY1ue0U

வாத்தியாரம்மா பிரம்பைக் கீழே போடுங்க

40 ஆண்டுகளுக்குமுன் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக செமான்டிக் டிபெரென்சியல் என்ற கருவியைப் பயன்படுத்த செமான்டிக்ஸ் படிக்கவேண்டியதாச்சு.  சைக்கோ லிங்கிஸ்டிக்ஸ் சைக்கோ ஆகிற அளவுக்கு என் வழிகாட்டி படிக்கவச்சுட்டாரு.  ஒருவழியா மறந்தேபோனதை நினைக்கச் சொல்லி பிரம்பெடுக்காதீங்க

ஒரே ஊர்க்காரவய்ங்க சமாதானமாப் போயிடலாம்  நம்ம ஊருல தருமிக்குக் கொடுத்தமாதிரி மார்க்கைக் குறைச்சுக்குங்க பிரம்படி வேணாம் சொல்லிப்புட்டேன்

நாகராசன்

2013/2/18 seshadri sridharan <ssesh...@gmail.com>

rajam

unread,
Feb 18, 2013, 11:15:14 AM2/18/13
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா,

நீங்கள் இப்படி ஒதுங்கிக்கொள்ளக் கூடாது! எனக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் அகநாநூற்றுப் பாடல்களுக்காகவாவது  விடை தேட முயலவேண்டும். குறிப்பாக, அகநானூறு 8, 248, 338 இவற்றில் வரும் 'சொலி' என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லவேண்டிய தேவை உங்களுக்கு இருக்கு! :-) நான் சோளக்கதிர் குறிப்புக் கொடுத்துவிட்டேன். உள்ளே இருக்கும் சோள முத்தை எப்படி எடுப்பீர்கள்? 

:-) :-) :-) 

rajam

unread,
Feb 18, 2013, 11:16:43 AM2/18/13
to mint...@googlegroups.com
On Feb 18, 2013, at 1:50 AM, seshadri sridharan wrote:

ஒரு கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ இன்னொருவருக்கு புரியும்படி உரைத்தலே சொல்லுதல் ஆகும். அதை ஒருவரை உரைக்குமாறு சொல்வது ஏவல்  வினை. இந்த வரையறை போதுமா?

சேசாத்திரி  

போதும். பழமைபேசியும் இதைச் சொன்னார். இன்னும் சொல்லலாம். 

Pandiyaraja

unread,
Feb 19, 2013, 12:53:13 AM2/19/13
to mint...@googlegroups.com
Excuse me Madam என்ற சொல்லி எழுந்துபோக எண்ணினால், உள்ளே போய் உட்கார் என்கிறீர்கள். உள்ளே போயும் உட்கார்ந்தால் ஏதாவது சொல் என்கிறீர்கள். என்னத்தைச் சொல்ல என்று கேட்டால்,
>>
"சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் (root/stem meaning; semantic nuance) என்ன என்றும் சொல்லவும்.
>>
அது என்ன அடைப்புக் குறிகளுக்குள்? எனக்கு வேர், தண்டு எல்லாம் தெரியாது. நான் 'நுனிப்புல்' மேய்கிறவன். ஏற்கனவே அபத்தங்களைக் கொட்ட  இதுவா இடம் என்று மட்டுறுத்துனரை உருட்டிப் பார்க்கிறார்கள். நான் என்ன நுவல, என்ன விளம்ப, என்ன பயில, என்ன கூற, என்ன பறைய, என்ன  கிளக்க? கரைய முடியவில்லை, முனகுகிறேன். பேச முடியவில்லை, முணுமுணுக்கிறேன்.
ஒரு Hint கொடுத்திருக்கிறீர்கள். சொலி. இதற்கு உரி, தோலுரி என்று பொருள்.காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ - சிறு 236.(காம்பு -மூங்கில்)
சொலி என்பது பெயரும் ஆகும். கழைபடு சொலியன் - புறம் 383. இது  the inner fibrous covering of a bamboo; என்கிறது பேரகராதி. இந்தச் சொலியைச் சொலித்தால்? பலாப் பழத் தோலை உரித்தால் பல  சுளைகள் கிடைக்கும். வாழைப்பழத்தின் தோலை உரித்தால் ஒரு சுளை (?) கிடைக்கும். A semantic object (word?!) is covered by சொல். அதைச் சொலித்தால் அதன் nuance கிடைக்கும். வாழைப்பழத்தைப் போல் ஒன்றும் கிடைக்கலாம். பலாப் பழத்தைப்போல் பலவும் கிடைக்கலாம்.
அம்மா! மண்ட காயுது! விட்டுடுங்க ப்ளீஸ்!!!
ப.பாண்டியராஜா

Prakash Sugumaran

unread,
Feb 19, 2013, 2:24:32 AM2/19/13
to mint...@googlegroups.com
//தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள வேறு எத்தனையோ (இனிய) அனுபவங்கள் இருக்கவேண்டிய இந்த இள வயதில் ... //

..இப்போதைக்கு வேற வழி இல்லாததால விரதம் :)

//நான் என்ன அந்தச் சொல் பிறந்த காலத்தில், நண்பர் ஹரி ஒரு முறை சொன்ன மாதிரி, கோஷா ஆஸ்பத்திரியில் அந்தச் சொல்லின் தாய்க்குப் பிரசவம் பார்த்தேனா?!// நான் ஒரு 'நித்ய மாணவி.'//

முதலில் ஒரு தகவல்.. மொழி என்பது என்றோ பலகாலத்துக்கு முன் பிறந்தது என கருதுவது.. பெரிய தவறு. தினம் தினம் பிறக்கும் பல லட்சம் குழந்தைகளுடன் மொழி பிறந்து கொண்டேதான் இருக்கிறது. மொழி பிறப்பையும், சொற்களின் அடிப்படைகளையும் குழந்தைகளிடம் நேரில் கண்டறியலாம். ( எழுத்து வடிவங்கள் திணிக்கப்படுவதற்கு முன்வரை ).

மாற்று கல்வி திட்டத்தில் தொடங்கப்பட்டு, மொழிப் பாடத்தில் புகழ் பெற்ற மருதம் பொர்ம் பள்ளிக்கு சென்று 3-ம் வகுப்பில் படிக்கும் குழந்தையை சொல் என்ற வார்த்தையை சொல்லும்படி கேட்டேன். இந்த பள்ளியின் மொழி அறிமுகத்துக்கு, தமிழில் விளக்க முடியாத காரணத்தால் ஆங்கிலத்தில் உதாரணம் தந்து விடுகிறேன்.

வழக்கமாக A for apple, b for boy.... இசட் for zeebra.. ena பாடம் சொல்வதை அறிவோம். ஆனால் இந்த பள்ளியில் apple என்பதில் வரும் அ, boy என்பதில் வரும் ப, cat ல் வரும் கே... இப்படி மொழி அறிமுகம் தொடங்கி இசட் என்பது zeebraavil ulla ஜி என்றே சொல்லித் தரப்படும். தமிழில் ஒரு உதாரணம் 3 புள்ளி வைக்கும் அக்கு என்ற த்வனியே அந்த பிள்ளைகளுக்கு தெரியாது. 3 புள்ளிகள் கொண்டது க்கு ( igg ).

அப்படியான மொழி அறிமுகம் கிடைத்த சிறுமியிடம் சொல் என்பதை சொல்லச் சொன்னதும், அவள் தன் சிறு கையை கழுத்துக்கு அருகில் கொண்டு சென்று குவித்து, பிறகு பூ மலர்வது போல விரல்களை விரித்து அபிநயம் செய்தபடி, ஸ் சொ ல் என்றது. உடன் பொறி தட்டி வாய் பேச முடியாதவர்களுக்கு சைகை பாஷை சொல்லித் தரும் நண்பிக்கு போன் செய்து சொல் என்பதை வாய் பேச முடியாதவர்கள் எப்படி தெரிவிப்பார்கள் என கேட்டபோது, வலது கையை நெஞ்சுக்கு சற்று மேலே குவித்து லேசாக முறுக்கியபடி விரல்களை பிரித்து கட்டை விரலை மேல்நோக்கி நிறுத்தி, சுட்டு விரலை சுடுவது போல நீட்டி, பிற விரல்களை உள்மடக்கி சொல்வார்கள் என்றார்.
 
அப்பாடி சொல் என்பதை விளக்க எப்படியெல்லாம் சொல்ல வேண்டி உள்ளது. அதாவது.. உள்ளிருக்கும் மூச்சுக் காற்று ஒலியாக மாறும் வினையால் விளைவது சொல்.
 
2013/2/19 Pandiyaraja <pipi...@gmail.com>

rajam

unread,
Feb 19, 2013, 11:06:06 PM2/19/13
to mint...@googlegroups.com
இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-) 

நீங்கள் சொன்ன எந்தக் கருத்திலும் தவறில்லை. ஆனால் ... ஒரு சிலருடைய கருத்தே குறிப்பாக (precise; to the point) அமைந்திருந்தது. 

கூடிய விரைவில் என் கருத்தை ஒரு தொகுப்பாக அமைக்கிறேன். அன்புடன் பொறுத்திருக்கவும். தனிப்பட்ட வேலை ஒன்றுக்கு நேரம் ஒதுக்கவேண்டிய நெருக்கடி. நன்றி. 

***************************************************************************************

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

On Feb 16, 2013, at 9:46 AM, rajam wrote:

இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள்.

எல்லார் பெயருக்கும் முன்னால் திரு என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொள்ளவும். நன்றி.

7. தேவ் 

8. துரை

9. பாண்டியராஜா

10. ப்ரகாஷ் சுகுமாரன்

11. ஹரிகி 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னும் ஆர்வம் குறையாது பங்கெடுக்க விரும்புவோருக்கும், பிறருக்கும் ... ஒரு சின்ன மேலதிகக் குறிப்பும் கேள்வியும்:

(i) 'சொல்' என்பது எப்போதும் ஒலியுடன் தொடர்புடையதா?

(ii) 'சொல்' என்பதுக்கும் 'சொலி' என்பதுக்கும் தொடர்பு உண்டா?

நன்றியுடன்,
ராஜம் 

பி.கு: இந்த இழை யாரையும் சோதிக்கவோ, மட்டப்படுத்தவோ இல்லை, நம்புங்கள். அண்மையில் ஒரு நண்பர் கேட்டதுக்கு விளக்கம் சொன்னேன் -- என் பழைய கால அறிவிலிருந்து எடுத்து. அதை இங்கே புதிய தலைமுறையிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்த இழை. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

On Feb 15, 2013, at 8:01 PM, rajam wrote:

இதுவரையில் இந்த இழையில் பங்கு பெற்றவர்களின் பெயரும் வாத்திச்சி போட்ட மார்க்கும்:

1. தேமொழி 

2. பேராசிரியர் நாகராசன் 

3. திரு சேசாத்திரி ஐயா

4. தமிழ்த்தேனீயார் 

5. எல்லே அண்ணா சாமிநாதன் 

6. பழமைபேசி 

வாத்திச்சி போட்ட மார்க்கு அப்புறம் வரும்! 

;-) ;-) ;-)

On Feb 15, 2013, at 6:05 PM, rajam wrote:

இதைத் தனி இழையாகத் தொடங்குகிறேன். யார் வேண்டுமானாலும் (திரு கணேசன் உட்பட) பங்கு கொண்டு உரையாடலாம். 

ஒரே ஒரு வேண்டுகோள்: தமிழுக்குள்ளேயே தேடவும். பிற மொழிகளுக்குப் போகவேண்டாம். 

"சொல்" என்பது பெயராகவும் வினையாகவும் புழங்குகிறது. இரண்டுக்கும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான். 

எங்கே ... எழவும், இருக்கவும், ஓடவும்! உங்கள் விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேஎன்.

இப்படிக்கு,
ராஜம்

--

தேமொழி

unread,
Feb 20, 2013, 12:14:28 AM2/20/13
to mint...@googlegroups.com

On Tuesday, February 19, 2013 8:06:06 PM UTC-8, rajam wrote:
இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-) 
 
ஆத்தா…. நான் பாஸாயிட்டேன் ....நான்   பாஸாயிட்டேன்...எனக்கு மார்க் 200/100 
 
..... தேமொழி

Subashini Tremmel

unread,
Feb 20, 2013, 7:53:30 AM2/20/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/2/20 தேமொழி <them...@yahoo.com>

On Tuesday, February 19, 2013 8:06:06 PM UTC-8, rajam wrote:
இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-) 
 
ஆத்தா…. நான் பாஸாயிட்டேன் ....நான்   பாஸாயிட்டேன்...எனக்கு மார்க் 200/100 

இன்றைய பெரிய ஜோக் இதுதான் . வாய்விட்டு சிரித்தேன்  :-)

சுபா

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
rajam

unread,
Feb 20, 2013, 12:37:16 PM2/20/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On Feb 20, 2013, at 4:53 AM, Subashini Tremmel wrote:

2013/2/20 தேமொழி <them...@yahoo.com>

On Tuesday, February 19, 2013 8:06:06 PM UTC-8, rajam wrote:
இதுவரை இழையில் பங்கு கொண்ட எல்லாருக்கும் அவர்களுடைய ஆர்வத்துக்காகவும் பொறுமைக்காகவும் மிக நல்ல கருத்துக்காகவும் மிக மிக நன்றி. எல்லாரும் "பாஸ்," ஒரு சின்ன சிரிப்பான் போட்ட முத்துக்குளித்துறை மகனாரையும் சேர்த்து; கவலையில்லை. ;-). ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு கூடுதல் மார்க் போட்டுக்கொள்ளலாம், தடையில்லை. இது வெளியிடைப் பல்கலைக்கழகம்! ;-) 
 
ஆத்தா…. நான் பாஸாயிட்டேன் ....நான்   பாஸாயிட்டேன்...எனக்கு மார்க் 200/100 

இன்றைய பெரிய ஜோக் இதுதான் . வாய்விட்டு சிரித்தேன்  :-)

சுபா

ஏதோ ... அறிஞர் நிறைந்த இந்தப் பெருங்குழுவில் என்னாலான ஒரு சிறு உதவி -- பலவகை ஜோக் (அசட்டு ஜோக்கிலிருந்து ... ஆழமான பொருளுணர்த்தும் ஜோக் வரை) அடிக்க எல்லாருக்கும் (என்னையும் சேர்த்துத்தான்) ஒரு வாய்ப்புக் கொடுத்து மகிழவைப்பது! ;-) ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் ... நான் அடிக்கும் ஜோக்குகள் மட்டும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன; அதுவும் என் பழவினைபோல! ;-) 

Reply all
Reply to author
Forward
0 new messages